கொரோனாவும் காரணங்களும்

0






  ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்         இனிய நாமத்தில் வாழ்த்துதலை                 தெரிவித்து கொள்கிறேன்

இன்றைய கடைசி காலகட்டத்தில்
வாழ்ந்து கொண்டிருக்ககூடிய நாம் பல வியப்பான சம்பவங்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம் அதில்

மிகவும் முக்கியமாக இன்றைக்கு உலகத்தையே கலங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவின் கோரதாண்டவம், 

ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு கொடிய நோய்கள் வந்து கொண்டியிருக்கிறது நமக்கு தெரிந்தவரையில் காலரா, டெங்கு, மஞ்சகாமாளை, அம்மை, எயிட்ஸ்,இன்னும் எத்தனையோ நோய்கள் பெரிய நோய்கள் என்று 36க்கும்,மேற்ப்பட்ட நோய்களை வல்லுனர்கள் கூறுகிறார்கள்,




கொரோனா உட்பட பல நோய்களுக்கு மருந்தை கண்டுபிடிக்க போராடிவருகிறார்கள் அவர்கள் பாராட்டுகுறியவர்கள்,


வாசித்துக்கொண்டிருக்கும் அருமையான சகோதர சகோதரிகளே,
நாம் தெரிந்துகொள்ளவேண்டியது இப்படிப்பட்ட கொடிய நோய்கள் எப்படி வருகிறது,ஏன் வருகிறது, எங்கிருந்துவருகிறது,




         (பார்க்கலாம் வாருங்கள்)



  பலாயிரம் வருடங்களுக்கு முன்பு      வாழ்ந்த ஆபிரகாமுடைய வாழ்க்கையிலே நடக்கும் ஒரு        சம்பவத்தை காண்போம் ஆபிரகாம் கடவுள் பெயரால் அழைக்கப்பட்டார்,

பிறகு அவர் பிரயாணம் தொடங்கியது, ஒரு சமயம் தெற்கே பிரயாணம் பண்ணிகொண்டு போனார்,

அந்த தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று பஞ்சம் கொடியதாய் இருந்தபடியால் எகிப்து தேசத்திலே தங்கும் படி புறப்பட்டு போனார்,

 இங்கேதான் ஒரு சம்பவம் நடக்கிறது, ஆபிரகாமுடைய மனைவி சாராள் மிகவும் அழகுடையவள் எகிப்தின் மன்னன் பார்வோனிடத்தில் அவளை அழைத்துசென்றார்கள் ஆபிரகாமுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டது,


               நடந்தது என்ன ?





       பார்வோன் மன்னன் ஆபிரகாமின் மனைவி சாராளை நெருங்கினான் சாராளின் அழகிள் மயங்கினான் ஆனால் பரிதாபம் நடக்கபோவதை அறியாத மன்னன்,

 ஆபிரகாமை அழைத்த கடவுள்     சும்மாயிருப்பாரோ?

கொடிய வாதைகளால் பார்வோன் மன்னன் குடும்பத்தையே வாதித்தார், இதை அறிந்து கொண்ட மன்னன் உடனே சாராளை தொடாமல் ஆபிரகாமிடத்தில் ஒப்படைத்து அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டான்,


இதை வாசித்துக்கொண்டிருக்கும் அருமையானவர்களே,


நீங்கள் சற்று யோசித்து பாருங்கள் இல்லாத வாதையை யார் கொண்டுவந்தது?

பார்வோனின் கண்களின் இச்சைதான் கொண்டுவந்தது,

 அருமையானவர்களே வேண்டாத இச்சைகளை தவிர்ப்போம் நம்மையும் நமது குடும்பத்தையும் நோயின்றி பாதுகாப்போம்


மனிதன் எப்பொதெல்லாம் தடுமாறுகிறானோ அப்பொதெல்லாம் விழுகிறான், எப்பொதெல்லாம் விழுகிறானோ அப்பொதெல்லாம் விழித்துக்கொள்கிறான், (தொடரும்)



            ஆகவே  அருமையானவர்களே
ஒவ்வொரு சம்பவங்களுக்கும் பின்பதாக ஒரு காரணம் உண்டு இதற்க்கு சான்றாக,

மோசே என்ற தேவ மனிதர் வாழ்ந்த காலத்தில் ஒரு சம்பவத்தை நாம் இங்கு சுருக்கமாக பார்ப்போம்

       மோசே கடவுளால் அழைக்கப்பட்டு
அவராளே நடத்தப்பட்டார் ஆகவே இஸ்ரேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாய் இருந்த காலத்தில் கடவுள் மோசே என்ற மனிதனிடத்தில் இவ்வாறு கூறினார்,


       நீ போய் பார்வோனிடத்தில் சொல்ல வேண்டியது என்னவென்றால் எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விடு,

     நீ அனுப்பாமல் இருந்தால், பூமியெங்கும் என்னை போல வேறொருவரும் இல்லை என்பதை
நீ அறியும்படிக்கு ,இந்த முறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும் உன் வேளை ஆட்கள் மேலும் உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன் ,


நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்,

    என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும் படியாகவும்,
என் நாமம் பூமியிலெயெங்கும் பிரஸ்தாபமாகும் படியாகவும் உன்னை
நிலைநிறுத்தினேன்,





       நீ என் ஜனங்களை போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா?


   இவைகளையெல்லாம் மோசேவினிடத்தில் கடவுள் கூறினார் அப்படியே மோசேவும் செய்தார்,

  மேலும் தம்முடைய மக்களுக்கு வாதை அனுகாதபடி பல ஆலோசனைகளை மோசேவினிடத்தில் கடவுள் கூறி இருந்தார்,


       எனக்கு அருமையானவர்களே
இந்த சம்பவம் நமக்கு எதை காண்பிக்கிறது கடவுளுக்கு விரோதமாக ராஜ்யங்களும் ராஜாக்களும் எழும்பும் போது கொரோனா போன்ற பல வாதைகள் வரும்,


    இது ஒன்றுதான் காரணம் என்று சொல்லவில்லை இதுவும் ஒரு காரணம்

    கடைசி நாட்களில் கொள்ளை நோய், பஞ்சம், யுத்தங்கள், பூமி அதிர்ச்சி, இவைகள் எல்லாம் சம்பவிக்கும் என்று இயேசுகிறிஸ்து கூறி இருக்கிறார்,


 
     எனக்கு அருமையான சகோதர சகோதரிகளே,

   கடவுளுக்கு ஆராதனை செய்யுங்கள்
கடவுள் உங்களுக்கு கேடகமாக இருப்பார்,


      இன்றைக்கும் நம் மக்கள் கொரோனா போன்ற நோய்களிள் அநேகர் பாதிக்கப்பட்டு பலாயிரம் மக்கள் இறந்தும் போய்விட்டார்கள் மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேண்டுதல் செய்யுங்கள்,

    மேலும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அரசாங்கம் சொல்லும் அறிவுரைகளை கேளுங்கள்,

  மேலும் இந்த வாதைகள் வர காரணம் என்ன?


      தெரிந்தொ தெரியாமலோ நாம் செய்யும் பாவங்களை கடவுள் மண்ணிக்கிறார், ஆனால் கடவுளுக்கு செவி கொடுக்க மனமில்லாமல் போனால்


    கடவுள் சொல்லுகிறார் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழுத்தனையாக வாதையை உங்கள் மேல் வரப்பண்ணுவேன் என்று,

  இன்னும் பல காரணங்களுக்காக கடவுளுடைய வார்த்தைகளை மீறியதர்க்காக கடவுளுக்கு விரோதமாய் பேசியதர்க்காக, கீழ்படியாமல் போனதர்க்காக, தங்கள்இச்சித்த காரியங்களுக்காக இப்படி பல காரணங்கள் உள்ளன.


    எனக்கு அருமையானவர்களே மோசே கடவுளுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தார்,

    ஆகவே அவர் மரிக்கும் காலத்தில் கூட அவர் கண்கள் இருள் அடையவில்லை கடவுளுக்கு உண்மையாய் இருங்கள்,
உங்களை பிரகாசிக்க செய்வார்,

   எனக்கு மிகவும் அருமையானவர்களே நடக்கும் காரியங்களை கண்டு அஞ்சவேண்டாம், அவைகள் எல்லாம் நடக்க வேண்டியவைகள் அவைகளை நம்மால் தடுத்திட முடியாது ஆனால் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்,

 
      நடந்து கொண்டுயிருக்கும் காரியங்கள் எதுவும் புதிதல்ல

       உதாரணமாக நாம் தொடர்ந்து கொரோனா சம்மந்தமான காரியங்களை பார்த்து வருகிறோம், இந்த வருடத்தின் துவக்கத்திலே மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று கூறினார்கள் அதை பயன்பாட்டிர்க்கும் கொண்டுவர திட்டமிட்டார்கள்,

     ஆனால் நடந்தது என்ன!

   பலரும் அதை எதிர்த்து போராடினார்கள் இந்த கணக்கெடுப்பக்கும் கொரோனாவின் கோரதாண்டவத்துக்கும் என்ன சம்மந்தம்,

           (வாருங்கள் பார்க்கலாம் )

   நான் முன்பே குறிப்பிட்டது போல மோசேவின் காலகட்டத்தில் மக்களை கணக்கெடுக்கும் போது கடவுள் சில விதிமுறைகளை சொல்லிருந்தார் அவைகளை பின்பற்றி வந்தார்கள் சில காலங்கள் சென்றது.

    தாவீதின் கால கட்டத்திலே தன்னோடிருக்கிற சேனாதிபதிகளுக்கு கட்டளையிட்டார் குறிப்பிட்ட எல்லை தொடங்கி குறிப்பிட்ட எல்லை வரை குறிப்பிட்ட கோத்திரத்தை கணக்கெடுக்க சொன்னார்.

             
                 நடந்தது என்ன?


     தாவீது கடவுளின் கோபத்துக்கு ஆளானார், காத் என்ற தீர்க்கதரிசிக்கு கடவுளுடைய வார்த்தை வந்தது அந்த வார்த்தையை தாவீன் இடத்தில் சொல்லும்படி கடவுள் காத் என்ற மனிதனுக்கு கட்டளையிட்டார், அந்த மனிதர் புறப்பட்டு தாவீதின் இடத்தில் சொன்னார், என்ன சொன்னார் என்று தெரியுமா கவனியுங்கள், தாவீது செய்த இந்த தவறுக்காக மூன்று விதமான தண்டனையை சொன்னார்,

      ஒன்று, உம்முடைய தேசத்திலே ஏழு வருடம் பஞ்சம்
      இரண்டாவது, மூன்று மாதம் உம்முடைய சத்ருகள் உன்னை பின் தொடருவார்
      மூன்றாவது, உம்முடைய தேசத்திலே மூன்று நாள் கொள்ளை நோய் உண்டாகும்,

      இதில் ஒன்றை தேர்வு செய்யும்படி சொன்னார் என்று தாவீதினிடத்தில் கூறினார் அப்பொழுது தாவீது கடவுளிடத்தில் இரக்கத்தை நாடினார் கடவுள் அதினிமித்தம் கொள்ளை நோயை அனுப்பினார்,
       எந்த எல்லை தொடங்கி எந்த எல்லை வரை தாவீது கணக்கெடுக்க சொன்னாரோ அது வரைக்கும் கொள்ளை நோய் மக்களை கொன்றது எழுபதனாயிரம் பேர் மரித்தார்கள்,


        எனக்கு அருமையானவர்களே
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்
நம் நாட்டின் கணக்கெடுப்புக்கும்
இதற்கும் உள்ள தொடர்பு நீங்கள் இப்படி யோசிக்கலாம் கணக்கெடுப்பு என்பது குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை எடுப்பது சரிதானே என்று,

நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எப்போதும் எடுக்கப்படும் இந்த கணக்கெடுப்புக்கு வித்யாசம் உண்டு ஆகவே இது வரை கணக்கெடுப்புக்கு போராடாத மக்கள் இப்போது போராடினார்கள், என்பதை நீங்கள் உணரவேண்டும்,ஆகவே நான் சொல்லவிரும்புவது கொரோனா வந்ததற்கு இதுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்,



   



     ஆகவே அருமையானவர்களே
நீங்கள் கவனிக்க வேண்டும் தாவீது கடவுளுக்கு மிகவும் பிடித்த ஒருவர் ஆனாலும் கடவுளுக்கு விரோதமாக யார் எழும்பினாலும், கடவுள் சும்மாயிருக்கமாட்டார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்,

        இவைகள் அனைத்தும் மற்றவரை எதிர்பதற்கொ அல்லது பகையை உருவாக்குவதற்கொ அல்ல நம்மை நாம் நிதானித்து ஆண்டவருடைய வருகைக்கு ஆயத்தமாயிப்போம்.


               மீண்டும் சந்திப்போம்


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக


 
    

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*