கிறிஸ்தவம் எங்கே போகிறது?

0









கிறிஸ்தவம் எங்கே போகிறது! 



கிறிஸ்த்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துதளை தெரிவித்து கொள்கிறேன், 

இந்த கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்த்துவ சமுதாயத்தினர் விழிப்புடன் இருப்பது அவசியம் ஏனேன்றால் இன்றைக்கு இருக்க கூடிய கிறிஸ்த்தவர்கள் வஞ்சிக்க படுகிறார்கள்,

யாராலே வஞ்சிக்க படுகிறார்கள்? 

என்ற கேள்வி எழுகிறது, நீங்கள் கவனிக்க, லூக்கா. 21:8.ஐ  பாருங்கள், அந்த வசனம் என்ன சொல்லுகிறது (அதற்கு அவர் நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு காலம் சமிபித்தது என்றும் சொல்லுவார்கள், அவர்களைப் பின்பற்றாதிருங்கள்,) 


என்று இந்த வசனம் சொல்லுகிறது நான் மேலே குறிப்பிட்டது போல யாராலே வஞ்சிக்கபடுவார்கள் என்ற கேள்வியை வைத்தேன், அப்படியானால் இந்த வசனம் யாரை காண்பிக்கிறது, என் நாமத்தை தரித்துக்கொண்டு, என்று சொல்லபடுகிறது, 

நம்மை வஞ்சிக்கக்கூடியவர்கள் வெளியாட்கள் வேண்டியதல்லவே, நமக்கு போதித்து நம்மை வழிநடத்த கூடியவர்களே, 

இந்த செய்தியை வாசித்துகொண்டிருக்கும் அருமையானவர்களே, நீங்கள் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்வது அவசியம் உங்களை நடத்துகிறவர் யார் என்பதை நீங்கள் நன்றாய் தெரிந்து கொள்வது நல்லது, நல் வழியில் நடத்துகிற நல்ல போதகர்கள் உண்டு, அதே சமயம் தன் சுய லாபத்திற்காக ஜனங்களை தெளிவு பெறாமல் வைத்திருக்கிற ஊழியர்கள் உண்டு, இப்படிப்பட்டவர்களை கண்டறிய வேண்டும், 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து,லூக்கா.6ம்.அதிகாரத்தில்.43.44.45.46.ஆகிய வசனங்களை கவனித்து பாருங்கள் 43.ல்.நல்லமரமானது கேட்ட கனி கொடாது என்றும் 44ல்.அந்த மரம் கனியினால் அறியப்படும் என்றும் 45.ல்.நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்து காட்டுகிறான் என்றும், 

இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது, 
அருமையானவர்களே நமக்கு நல்ல பொக்கிஷத்தை எடுத்து கொடுக்கிற நல்ல ஊழியர்கள் உண்டு, அதே சமயம் தன் சுய லாபத்திற்காக தன் சுயத்திலிருந்து எடுத்து நம்மை வஞ்சிக்கிறவர்கலும் உண்டு, 


கிறிஸ்தவனே விழித்துக்கொள்!

இவர்கள் எப்படி வஞ்சிக்கிறார்கள் சற்று கவனியுங்கள், ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் என்றும், அவர்கள் சொல்வதை கேட்டால் ஆசிர்வாத மழை பெய்யும் என்றும், நீங்கள் எதை கேட்டாலும் இயேசு கிறிஸ்து கொடுத்துவிடுவார் என்றும், மேலும் ஆசீர்வாதம் என்றால் வெறும் பொருளாதார ரீதியாகவே போதிக்ககூடிய ஊழியர்கள் பெருகிவிட்டார்கள், 

இதற்கு அவர்கள் மாத்திரம் தான் காரணம் என்று நான் சொல்லவில்லை விசுவாசிகலும் இதில் பங்கு வகிக்கிறார்கள், எப்படி என்றால் ஒரு திருச்சபைக்கு போககூடிய விசுவாசி அந்த சபை போதகருக்கு கீழ்படிந்து இருக்க வேண்டும், மேலும் ஆவிக்குறிய வளர்ச்சியை நாட வேண்டும், ஆனால் இன்றைய விசுவாசிகள் நிலமை என்ன? 

ஒரிடத்திலே ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார் என்றால் அவரைதேடி போவது, 

புதிதாக யாரவது ஒரு ஜெப கூட்டம் ஆரம்பித்தால் அங்கே போவது, 

நீங்கள் போவது தவறு என்று சொல்லவில்லை நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் என்று தான் நாம் சொல்லுகிறோம், ஒரு வேளை நீங்கள் கேள்வி கேட்கலாம் இப்படி பட்ட இடங்களுக்கு நாங்கள் போவதினாலே எப்படி வஞ்சிக்கபடுகிறோம் என்று, 

என்னுடைய கேள்வி நீங்கள் யாரை கான போகிறிர்கள்? 
இயேசுவையா ?
அல்லது அந்த ஊழியரையா? 

இல்லை எங்களுக்குள்ளே விசுவாசம் பெறுகும் என்று சொல்லுகிறாயா? 
எச்சரிக்கையாயிரு,
உன் சபை போதகருக்கு கீழ்படி நீ கற்றுக்கொள் பல ஆசை வார்த்தைகளை நம்பி மோசம் போகாதிருங்கள், 

சில ஊழியர்கள் சொல்லுகிறார்கள் ஆண்டவர் தரிசனமானார் என்னுடனே பல மணிநேரம் பேசினார் என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள் 
என்னுடைய கேள்வி என்னவென்றால் ஆண்டவர் பேசினார் என்று சொல்லுகிறிர்கள் சரி ஏற்று கொள்கிறோம், ஆண்டவர் என்ன சொன்னார் என்று பார்த்தால் அவரை குறித்தும் அவருடைய மனைவியை குறித்தும் குடும்பத்தையும் அவர்கள் செய்யும் ஊழியத்தையும் அவர்களுக்கு சொந்தமான காரியத்தை குறித்து போசுவதற்காகவா ஆண்டவர் தரிசனமானார், 

என் அருமை சகோதர சகோதரிகளே, 
இப்படி பட்ட வார்த்தைகளை ஒருநாளும் நம்ப வேண்டாம், 
சற்று நம் ஆண்டவர் யார் என்பதை நீங்கள் நன்றாய் அறிந்துகொள்ளவேண்டும், இப்படி பட்ட ஊழியர்கள் சொல்வது போல் ஆண்டவர் பேசினால் உலகத்திலே ஒரு கிறிஸ்தவருக்கும் எந்த கவலையும் இருக்காது, 
நம் ஆண்டவர் பேசுவார் எப்படி பேசுவார் வேதத்தின் வழியாக, பேசுவார் ஆவியானவர் பல காரியங்களை உனர்த்துவார் ,
இன்னும் சில சூழ்நிலைகளில் ஏற்றவாறு நம்மை நடத்துவார், 

ஆகவே அருமையானவர்களே 
என்னோடு பல மணி நேரம் பேசினார் என்று சொல்லும் ஊழியர்களை பார்த்து நான் சில கேள்விகள் கேட்க்கிறேன்,

நான் கேட்பது என்னவென்றால் இந்த உலகத்தை குறித்து பேசவில்லையா, நம்முடைய நாட்டை குறித்து பேசவில்லையா, நம்முடைய அரசியல் தலைவர்களை குறித்து பேசவில்லையா கிறிஸ்தவ சமுதாயம் இன்றைக்கு சீரழிந்து கொண்டுயிருகிறதே இதை பேசவில்லையா 

கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லியும் ஜாதியை பார்த்து கொண்டு இருக்கிறார்களே பரிசுத்த ஜாதி ஒன்றுதான் என்று ஆண்டவர் பேசவில்லையா, அல்லது உங்களுக்கு கிழே இருக்க கூடிய ஊழியர்கள் வாஞ்சையோடும் வைரக்கியத்தோடும் ஆண்டவர்காக ஏதாகிலும் செய்ய வாய்ப்பை தேடுகிறார்களே, அதை ஆண்டவர் பேசவில்லையா, 

எத்தனை கிறிஸ்தவ குடும்பங்கள் வீடு இல்லாமல் உடுத்த உடையில்லாமல் பட்னி பசி வறுமை என்று வாடுகிறார்கள், ஆண்டவர் அதை பேசவில்லையா இன்னும் எத்தனை எத்தனை காரியங்கள் உண்டு நீங்களே யோசியுங்கள்,

இன்னும் சொல்லபோனால் இன்றைக்கு உலகத்தையே கலங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவின் கோரதாண்டவம் இதை குறித்து பேசவில்லையா? 

தேவ ஜனமே ஒன்றை யோசியுங்கள் இந்த வாருட துவக்கத்திலே இவர்கள் கொடுத்த தீர்க்கதரிசனங்களை பாருங்கள்! 

நடந்தது என்ன இவர்கள் முகதிரைகளை கொரோனா கிழித்தெரிந்தது 
ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் கெடுக்கும் தீர்க்கதரிசனங்களையும் வாக்குதத்தங்களையும் கவனித்து பாருங்கள் நிரைவேறினதா அப்படி நடந்திருந்தால் இன்றைக்கு மக்கள் வறுமையில் வாடும் நீலை எப்படி வரும் 

இவர்கள் கொடுக்கும் தீர்க்கதரிசனங்கள்
என்ன? 

இந்த விஞ்ஞான உலகம் முன்கூட்டியே பல ஆய்வுகளை நடத்து கிறது அந்த ஆய்வு செய்திகளை அவர்களுடைய வலைதளங்களில் வெளியிடுகிறது இப்படி பல தலங்கள் உள்ளன. 

சில ஊழியர்கள் இப்படிப்பட்ட செய்திகளை நிஜமாக்க இவர்கள் பங்கையும் சேர்த்து தீர்க்கதரிசனமாக சொல்லுகிறார்கள் 
நான் சொல்வதை யோசித்து பாருங்கள் எத்தனை பேர் உலக செய்திகளை பார்க்கிறிர்கள் இல்லை காரணம் நமக்கு தேவையில்லை 
ஆகவேதான் தேவையுள்ளவர்கள் பயன்படுத்திகொள்கிறார்கள் ஆகவே 
எல்லா தீர்க்கதரிசனங்களும் ஏற்கனவே வேதத்தில் உள்ளது 
இதற்கு மேலாக ஒரு தீர்க்கதரிசனத்தை யாரால் கொடுக்க முடியும் 

அப்படி உங்களால் முடியும் என்றால் செய்யுங்கள், 

இல்லை என்றால் வேதத்துக்கு செவிகொடுத்து அதற்கு கீழ்படியுங்கள், 


எனக்கு அருமையானவர்களே இப்படிதான் ஒரு சில ஊழியர்கள் ஜனங்களை வஞ்சிக்கிறார்கள், நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்,


சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,ஆகவேதான் நீங்கள் உங்கள் சொந்த போதகருக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், மாயை வார்த்தைகளை நம்பி மோசம் போக வேண்டாம் அதே சமயம் போதகர்கள் விழிப்பாக, தன் மந்தையை நடத்த வேண்டும் சபைகளில் பாகுபாடுகள் கலைய வேண்டும் சத்தியத்தை சத்தியமாக போதிக்க வேண்டும் சத்தியத்தை தனக்காக வலைக்கக்கூடாது விசுவாசிகள் தன் போதகரை நம்பியிருந்தால் அவர்களை அடிமைகளாக்கி விடகூடாது அவர்களுக்கு சத்தியத்தை தெளிவாக போதிக்கவேண்டும் ஆவிகுறிய வளர்ச்சியை அவர்கள் அடைந்திருக்கவேண்டும் இது ஒரு போதகருடைய கடமை, இப்படி நீங்கள் செய்யும் போது அவர்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு பாதுகாக்கபடுவார்கள் போதகர்களாகிய
நீங்களும் பரலோகராஜ்யத்தின் மேன்மையை அடைவிர்கள், 
உங்கள் நிமித்தமாக கிறிஸ்தவ சமுதாயம் சீர்பெற்றுஇருக்கும்,


மேலும் நீங்கள் கவனிக்க, 

ரோமர் :16அதிகாரம் 17,18.வசனத்தை பாருங்கள் நான் அந்த வசனத்தை வாசிக்கிறேன் கவனியுங்கள் (அன்றியும் சகோதரரே நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்கு புத்தி சொல்கிறேன் )


18ல்,அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள
வயிற்றக்கே  ஊழியம் செய்து நயவசனிப்பினாலும், இச்சகப்பேச்சினாலும். கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்? 

தேவ ஜனமே நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசம் அல்லது வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கின்ற உபதேசம் வேதத்தில் உள்ள உபதேசத்திற்கு விரோதமாய் சிலர் எழும்பி தங்கள் சுய லாபத்திற்காக பிரிவினைகளை உண்டாக்குவார்கள். 


அப்படி பட்டவர்களை விட்டு விலகவேண்டுமென்று புத்தி சொல்லுகிறார். அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் தேவ பிள்ளைகளே நீங்கள் எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் நீங்களும் வஞ்சிக்கப்பட்டு போவீர்கள். 
ரோமர் -18ல்,அப்படிப் பட்டவர்கள் யாருக்காக ஊழியம் செய்கிறார்கள் என்று வசனம் சொல்லுகிறது. 


தங்கள் வயிற்றுக்காக நயவசனிப்பான பேச்சினாலே அநேகரை வஞ்சிக்கிறார்கள் பிரிவினைசெய்கிறார், அப்படிப்பட்ட ஊழியர்களை பார்த்து நான் கேட்கிறேன், தேவன் தானே உங்களை தெரிந்து கொண்டார் ,தேவன் தானே உங்களை அழைத்தார் பின் எதற்கு இப்படிப்பட்ட வேளை எத்தனை எத்தனை ஊழியர்கள் தங்களை பாறாமல் தங்களது குடும்பத்தை பார்க்காமல் தங்கள் ஜீவனையும் பொருட்படுத்தாமல் இயேசுவுக்காக வாழ்ந்தார்கள் என்பதை மறந்து விட்டார்களா? 

இயேசுவுக்காக எத்தனை ரத்தசாட்ச்சிகள் இந்த மன்னில் விதைக்கப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்தி பாருங்கள் நீங்கள் செய்வது சரி என்றும்சில காரணங்களை சொல்லலாம் ஆனாலும் உங்கள் காரணங்கள் எதுவாயிருந்தாலும்,இப்படி ஜனங்களை வஞ்சிப்பதை தேவன் பார்த்து கொண்டு சும்மா இருப்பார் என்று எண்ணாதே, தேவன் உன்னை நியாயத்தீர்ப்பிலே நிருத்துவார்,


அருமையான ஊழியர்களே மனம்திரும்புங்கள் கர்த்தர்கென்றே ஊழியம் செய்யுங்கள் கர்த்தர் நிச்சயம் ஒரு நாள் உங்களை உயர்த்துவார், தவறான வழிகளை பின்பற்ற வேண்டாம், தனகென்று ஒரு கூட்டத்தை ஏற்ப்படுத்தவேண்டாம் தனகென்று வாழாமல் பிறருக்காகவும் இயேசுவுக்காகவும் வாழ உங்களை அற்பணியுங்கள், 


எனக்கு தெரிந்தவரை எத்தனையோ வெளிநாட்டு மிஷ்னரிகள் நம் நாட்டிற்கு வந்து இயேசுவை பற்றிய சுவிசேஷத்தை அறிவித்து, தங்கள் பணத்தை, சொத்துகளையெல்லாம் மக்களுக்காகவும் ஊழியத்துக்காகவும் செலவலித்தார்கள். 


ஆனால், இன்றைய நிலை என்ன? நம் நாட்டில் இருக்க கூடிய எத்தனையோ ஊழியர்கள் பணத்தை வைத்து கொண்டு தங்களுக்கான பெயர் விளம்பரத்தை தேடி, வீண் ஆடம்பர செலவுகள் எத்தனை. தங்கள் குடும்பத்திர்கான எத்தனை சொகுசானவாழ்க்கை எத்தனை எத்தனை மாடி கட்டிடங்கள்! கேட்டால் ஆண்டவர் எங்களை ஆசீர்வதித்தார். 


நீங்கள் ஆண்டவரிடத்தில் கேளுங்கள் உங்களுக்கு கொடுப்பார் என்று சொல்லுகிறார்கள் இன்றைய ஊழியர்கள் இப்படி செய்தால் இதில் தேவ நாமம் எப்படி மகிமைப்படும் தேவ ராஜ்யம் எப்படி கட்டப்படும் இப்படி சேர்த்து வைத்து இருக்கிற ஊழியர்களுக்கு என்ன வசனம் என்று தெரியாதா? 


தெரியும், தெரிந்தே துணிகரமாய் தங்கள் ஆஸ்திகளை சேர்த்துக் கொண்டேப் போகிறார்கள் அப்படி பட்டவர்களை பார்த்து நான் கேட்கிறேன் இன்றைக்கு உன் ஆத்துமா எடுத்து கொள்ளபடுமேயானால் உன் நிலைமை என்ன? 


இந்த நாட்டில் இருக்கிற அரசியல்வாதிகள் தான் இப்படி செய்கிறார்கள் என்றால் நீங்களுமா? தேவ நாமத்துக்கு இலச்சயை உண்டாக்குகிறிர்கள், 
தேவன் உங்களை ஏன் ஆசிர்வதித்து இருக்கிறார்! 


நீதி. 11:10.சொல்லுகிறது,நீதிமான்கள்
நன்றாய்யிருந்தால் பட்டணம் களிகூரும், 11:12ல்.நீதிமான்கள் களிகூரும்போது
மாக கொண்டாட்டம் உண்டாகும், ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான், என்று இப்படி எத்தனையோ, எத்தனை எத்தனை வசனங்கள் உண்டு சொல்லி கொண்டே போகலாம், நம்முடைய ஊழியர்கள் இதையெல்லாம் மறந்து விடுவார்கள் மறக்காமல் இருப்பது, 

மல்கியா, 3:8,9,10, மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? 
என்று சொல்லி காணிக்கை கேட்கிறிர்கள், இதை நான் தவறு என்று சொல்லவில்லை, சரிதான் நானும் ஏற்றுகொள்கிறேன் கீழ்படிகிறேன், ஆனால் தேவன் வாங்குவதற்கு மாத்திரம் தான் சொன்னார்? 

இயேசு சொன்ன நல்லசமாரியன் உவமையை மறந்து விட்டார்களா? 
எப்படி இவர்கள் ஜனங்களுடைய காயங்களை கட்டுகிறாகிறார்கள் இவர்கள் என்னை வார்த்து பாதுகாக்கிறார்கள் செலவு செய்கிறார்கள், 

வெறும் வார்த்தை ஜாலத்தினாளா? 

இயேசுகிறிஸ்து வார்த்தையினால் பேசினார் அதன்படி செயல்ப்பட்டார், அருமையான தேவ ஜனமே இப்படி பட்டவர்களை குறித்துத்தான் எச்சரிக்கையாயிருந்து இவர்களை விட்டுவிலகவேண்டும் என்று ,
பவுல் ,ரோமர். 16:17,18,ல்,கூறுகிறார்?

அருமையானவர்களே, 
நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்பது நலம், 
தேவ ஜனமே தேவனை நேசியுங்கள் வேதத்தை வாசியுங்கள் நிதானித்து யோசியுங்கள், 

தேவன் உங்களை நித்தமும் நடத்துவார், 
சங்:78.72ல்,இவன் அவர்களை தன் இருதயத்தின் உண்மையின் படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான், என்று வாசிக்கிறோம், 

மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தார், 
எனக்கு அருமையான தேவ ஊழியர்களே 
விசுவாசிகளே, அன்பு சகோதர சகோதரிகளே, 

நீங்களும் உண்மையுள்ளவர்களாய் இருங்கள் தேவன் உங்களை எடுத்து பயன்படுத்துவார்,
உங்கள் மூலமாய் தேவ ராஜ்யம் கட்டப்படும் தேவ நாமம் மகிமைப்படும் .

அல்லேலூயா அல்லேலூயா 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 

ஆமேன் ஆமேன் ஆமேன். 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*