சமாரியா ஸ்திரீயும் இயேசுவும் இகஙஙசபஞஞபநததநசஞமவலலைஔவழளறறனனஜஸஷைஐஏஉஊஇகஙசசஞடோஐஐதநபமடடரயறளழழநவவவப

0







துவக்கவுரை

இயேசு கிறிஸ்துவும் சமாரியா ஸ்திரியும் என்ற இந்நிகழ்வினை யோவான் நான்காம் அதிகாரத்தில் வாசிக்க முடிகின்றது. மற்ற மூன்று சுவிசேஷங்களிலும் இந்நிகழ்வு குறிப்பிடப்படவில்லை . 

இயேசுவும் சமாரியா ஸ்திரியுமான இந்நிகழ்வினை பலரும் பலவிதமாக விளக்குகின்றனர் பிரசங்கம் செய்கின்றனர் கதை கட்டுகின்றனர் கிறிஸ்தவர்களும், 

அதிலும் குறிப்பாக தங்களை ஆன்மீக வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலரும் சமாரியா எதிரியை ஒரு விபசாரியாகவே விமர்சனம் செய்கின்றனர் அன்றும், இன்றும் சமாரியா ஸ்திரீயை விபசாரியாகவே சித்தரித்து பழகிவிட்டனர்.

ஆனால் இயேசுவும் சமாரியப் பெண்ணும் சந்தித்ததிலும் அவர்கள் உரையாடல்களிலும் உள்ள பதார்த்தம் (உண்மை) என்னவென்பதை இந்த புத்தகத்தை வாசிக்கும் நீங்கள் நிச்சயம் புரிந்து கொள்வீர்கள் என கர்த்தருக்குள் நம்புகின்றேன். 


பல வருடங்களாக அதிகைவர்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்ற பாரம்பரிய அப்பிராயத்தை இந்த புத்தகம் ஒரு முடிவுக்கு கொண்டு வருமேயானால் அது தேவனுடைய வார்த்தைக்கு நாம் செய்கின்ற நீதியாகும் இந்த சம்பவத்தின் உண்மை ைேவயை உணர்த்திய கர்த்தருக்கு நன்றி செலுத்திய கொண்டு, இயேசுவின் நாமத்தில் இந்த புத்தகத்தை மார்கள் முன்பாகாமர்ப்பிக்கின்றேன்.



நோவாவின் குமாரர்களான சேம், காம், யாப்பேத் என்பவர்கள் மூலமாக ஜலப்பிரளயத்துக்குப் பின் ஜாதிகள் பிரிந்தது. இதில் காமின் வம்சத்தில் பெலிஸ்தியர், சமாரியர் கானானியர் என்ற வம்சங்களும், சேமின் வம்சத்தில் எபிரெயர்களும் (யூதர்களும்) உருவானார்கள்

 (ஆதி 10: 14 18; ஆதி 10-26).) ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்த யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களில் லேயாள் பெற்ற நான்காம் மகன் யூதா இவனுடைய பெயரில் தான் யூதா கோத்திரம் அறியப்படுகிறது. 

(ஆதி 29 35) யூதா கோத்திரத்தின் வம்சத்தில் பிறந்ததினால் இயேசுவும் யூதா கோத்திரத்துக்கு உட்படுத்தப்பட்டார் இதனால் தான் இயேசு பிறந்த பொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூ த ருக் கு ராஜாவா கப்

பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று கேட்டனர் (மத்2 2),

பின் நாட்களில் பாவம் பெருகின போது பூமியெங்கிலும் வம்சங்கள் சிதறடிக்கப்பட்டது. அப்போது சமாரியரும், எபிரெயரும் ஒன்று சேர்ந்து பிற்காலத்தில் இனப்ரவேவில் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். சமாரியர்கள் இஸ்ரவேலரின் தேவனை வணங்கினார்கள். சமாரியர் இஸ்ரவேலராகிய யூதர்களிடமிருந்து விலகி புற ஜாதியாரோடு கலந்து வாழ்ந்தனர்.



கி.மு. 175-ல் சீரியாவின் அரசன் எருசலேமுக்கு எதிராக படையெடுத்த போது, சமாரியர்கள் அவனோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்றனர். அநேகரை சிறையிலடைத்தனர், 

மட்டுமல்லாமல் யூதர்களின் தேவாலயத்தில் அவர்களுக்கு விரோதமாக பன்றியை பலியிட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆகவே இதற்கெல்லாம் துணைநின்ற சமாரியர்களோடு யூதர்களுக்குத் தீராத வெறுப்பு உண்டானது, 

இதனால் அவர்கள் தங்களுக்குள் எந்த சம்பந்தமுமில்லாத ஜென்ம விரோதிகளாக மாறினர் யூதர்கள் சமாரியாவுக்கு வருவதும், சமாரியர்கள் இஸ்ரவேல் வருவதும் தடை செய்யப்பட்டிருந்தது தங்களுக்குள் பேசுவதும், 

முகத்துக்கு முகம் பார்ப்பதும் கூட தடை செய்யப் பட்டிருந்தது இப்படிப்பட்ட சூழ்நிலையில் இஸ்ரவேலராகிய யூதர்கள் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் ஒருமுறை எருசலேமுக்குச் செல்ல சமாரியர்களிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் அனுமதி வழங்கவில்லை . 

அப்போது அவருடைய சீஷர்களான யாக்கோபும் யோவானும், ஆண்டவரே, எலியா செய்தது போல வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். 

அதற்கு இயேசு, "மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்” என்றார் (லூக் 9: 51 -56), இயேசு கிறிஸ்து யூத வம்சத்தினராயிருந்த காரணத்தினால் அவர்கள் இயேசு கிறிஸ்துவையும் ஏற்றுக் கொள்ளவில்லை.



யூதேயாவுக்கும் கலிலேயாவுக்கும் இடையிலான ஒரு சிறிய பட்டணம் தான் சமாரியா. -தேயாவிலிருந்து கலிலேயா வுக்கு செல்ல வேண்டுமென்றாலும், கலிலேயா விலிருந்து யூதேயாவுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் சமாரியாவின் எல்லை வழியாகத் தான் செல்ல வேண்டும் 


இந்த எல்லையில் தான் யாக்கோபு தன் மகனான யோசேப்புக்குக் கொடுத்த ஒரு கிணறு இருந்தது. ஆபிரகாமின் காலமுதல் இயேசு கிறிஸ்துவின் காலம் வரையிலான வருடங்கள் மொத்தம் 4200 (மத் 1-17). இந்த கிணறு ஒரு பொதுச் சொத்து என்பதால் யாருக்கு வேண்டுமானாலும் இதிலுள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


 இந்த கிணற்றினடியில் தான் இயோ இளைப்பாற வந்தமர்ந்தார். இந்த கிணறு மிகவும் ஆழமுள்ளதாக இருந்தது. தண்ணீர் தேவைப்படுபவர்கள் இறைக்க பாத்திரம் கொண்டு வர வேண்டும்,

 வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் குடமும் கொண்டு வர வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் போது இதிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்வது சிறிது கடினமான வேலையாகத் தான் தெரிகிறது

இந்த கிணற்றினருகில் இயேசுவும் சீஷர்களும் வந்தனர். சீஷர்கள் சாப்பாடு வாங்க பட்டணத்திற்கு சென்றிருந்தனர். அப்பொழுது ஒரு சமாரிய ஸ்திரீ தண்ணீர் எடுக்க வருகிறாள்.

 இயேசு அவளிடம் தாகத்திற்குக் குடிக்கத் தண்ணீர் கொடுப்பாயா (தாகத்துக்குத் தா) என்று கேட்கிறார் அவளோ, "நீர் யூதனாயிருக்க சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குத் தா என்று எப்படி கேட்கலாம் என்றாள் (யோவான் 4 : 8,9), இந்த இடத்தில் யூதர்களுக்கும் சமாரியர் களுக் குமான சட்டங்களை அவள் நினை வூட்டுகிறாள்.




2. சமாரியா ஸ்திரீயிடம் இயேசு கண்ட சிறப்பம்சங்கள்

1. அவள் புற ஜாதியாள் என்பதை வெளிப்படையாகச் சொன்னாள்

தண்ணீர் கொடுக்க மனமில்லாததினால் அல்ல சட்டத்தை மீறக்கூடாது என்பதற்காகவே அவள் அப்படி கேட்டாள். 

சட்டத்தை மீறினால் தண்ணீர் கொடுத்தவருக்கும் குடித்தவருக்கும் தண்டனை உண்டு. யூதர்கள் ஒருபோதும் விதிகளை மீறுவதில்லை. எனவே தண்ணீர் கேட்ட யூதனுக்கு தண்டனை கிடைக்கக் கூடாதென்பதற்காகவே அவள் ஜாதியை (இனத்தை) நினைவூட்டுகின்றாள்.

கோத்திர ஒற்றுமையை அறிந்திருந்தாள்

நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ” என்று அவள் கேட்பதை யோவான் 4:12ஐ வாசிக்கும் போது அறிந்து கொள்கிறோம். 

அவள் கோத்திர பிதாக்கள் மேல் விசுவாசம் வைத்திருந்தாள். அவள் கோத்திரப் பிதாக்களின் வம்ச வழியில் பிறக்கவில்லையென்றாலும், கோத்திரப் பிதாக்கள் மீது மரியாதை வைத்திருந்தாள். அன்பு வைத்திருந்தாள். '

நம்முடைய பிதாவாகிய யாக்கோபு' என்று அவள் சொல்வதினால் யாக்கோபையும், தன்னையும் இரண்டாக பிரிக்க அவளால் முடியவில்லை. சமாரியர்களும் யூதர்களும் பிறப்பினால் இரண்டுபட்டவர்களானாலும் கோத்திரத்தினால் ஒன்று பட்டவர்கள் தானென்பதை புரிந்து கொண்டாள்



தேவனை ஆராதிப்பவளாயிருந்தாள்

எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுது கொண்டு

வந்தார்கள் (யோவான் 4 : 20) என்று கூறியுள்ளாள். இவன் யாக்கோபை பிதா என்று குறிப்பிட்டுள்ளது மட்டுமன்றி அவளும், அவளுடைய பிதாக்களும் அந்த குறிப்பிட்ட மலையில் தான் தேவனைத் தொழுதார்கள் என்றும் குறிப்பிடுவதிலிருந்து அவளுக்கு தேவனை ஆராதிப்பதில் இருந்த ஆர்வம் வெளிப்படுகின்றது

கிறிஸ்து என்கிற மேசியாவை விசுவாசித்தாள்

தன்னோடு பேசுபவர் தான் மேசியா என்பதை உணராமல் 'மேசியாவை அறிவேன்' என்று கூறுகின்றாள் மோசேயின் நியாயப் பிரமாணத்திலும், தீர்க்கதரிசிகளின் புஸ் தகங் களிலும் இயேசுவின் பிறப்பைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. சமாரிய ஸ்திரீ இவ்வாறு கூறுவதன் மூலம் அவள் நியாயப்பிரமாணங்களைப் படித்தவளும், அதனை விசுவாசிப்பவளுமாய் இருந்தாள் என்பது தெளிவாகின்றது

5. அவளுடைய சாட்சியில் ஜனங்களுக்கு நம்பிக்கையிருந்தது

சமூகத்தில் தவறாக நடப்பவர்களின் சாட்சியை ஜனங்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். சமூகத்தில் நல்ல பெயருள்ள வர்களின் சாட்சியையே ஜனங்கள் அங்கீகரிப்பார்கள் பாவியான ஒரு ஸ்திரீ எவ்வளவு இனிமையான விஷயங்களைச் சொன்னாலும் ஜனங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவளுடைய சாட்சியை ஜனங்கள் விசகவாசித்தார்களென்றால் நிச்சயம் அவளுக்கு சமூகத்தில் நல்ல பெயர் இருந்திருக்க வேண்டும்


3. சிந்திக்க வேண்டிய ஐந்து


1 பாவியான ஒரு ஸ்திரீயை, "நீ தேவனுடைய ஈவு' என்று இயேசு சொல்வாரா

2. (நியாயப்பிரமாணத்தின்படி) ஒரு பாவிக்கு ஆராதனை உரிமை உண்டா

3. ஒரு பாவி மேசியா பிறப்பதற்காக காத்திருப்பாளா?

4. ஒரு விபசாரி சொல்வதைக் கேட்டு ஜனங்கள் ரட்சிக்கப்படுவார்களா?

5 ஒரு பாவியால் தலைநிமிர்ந்து நியாயப் பிரமாணத்தை விளக்க முடியுமா





சமாரியா ஸ்திரீ நாம் எண்ணுகிற தவறு செய்தவளல்ல

மோசேயின் நியாயப் பிரமாணத்தின்படி பாவியான ஒரு ஸ்திரீயைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஆனால் இந்த சமாரியா ஸ்திரீ பொதுக்கிணற்றிலிருந்து தண்ணி எடுக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறாள். இயேசுவோடு நின்று பேசதகுதியுள்ளவளாக இருக்கிறாள்.

லூக் 7:36-50 வரையுள்ள வசனங்களை வாசிக்கும் போது இயேசு பாவியான ஒரு பெண்ணுக்குப் பாவத்திலிருந்து விடுதலை கொடுப்பதை வாசிக்கிறோம் அவளை நோக்கி, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று கூறுகிறார்

மேலும் யோவான் எட்டாம் அதிகாரத்தில் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் கொண்டு வருகின்றனர் அவளைக் கல்லெறிந்து கொல்ல அவரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றுகின்றார். "இனிமேல் பாவம் செய்யாதே” என்று கூறி அவளை அனுப்புகின்றார் (யோவான் 8:11).

ஆனால் சமாரியா ஸ்தீரி பாவியென்றோ, அவளுடைய பாவங்களை இயேசு மன்னித்தாரென்றோ வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. பிறகு எதற்காக அவளுக்கு பாவி என்ற முத்திரையைக் குத்த வேண்டும்




இயேசுவுக்கும் அவளுக்குமிடையான உரையாடலில் அந்த ஸ்திரீ அவரை நோக்கி: "ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டு கோள்ளவராமலிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தர வேண்டும்" என்றாள் (யோவான் 4:15), 

இயேசு அவளிடம், "நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா" என்றார். அதற்கு அந்த ஸ்திரீ : எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். 

எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக் கிறவன் உனக்குப் புருஷனல்ல என்று கூறுகின்றார் யோவான் 4 : 16-18), "நீ சொன்னது சரிதான்" என்று இயேசு அவளைக் குறித்து ஒரு நல்ல சான்றிதழ் (Good Certificate) கொடுக்கிறார். அவள் பொய் சொல்பவளல்ல என்று இதன்மூலம் நாம் அறியலாம்

சமாரியா ஸ்திரீயும் ஐந்து புருஷர்களும்

யூதர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது புனிதமான ஒன்று கொண்டாடப்பட வேண்டியது. அவர்களுடைய திருமண வயது 20க்கு மேல் தான், இதே முறையைத் தான் சமாரியர்களும் பின்பற்றியிருந்தனர். சமாரியர்களுக்கு கணவன் மனைவியாக மாற்றப்படுவதற்கு மத ஆசார முறைமைகள் நிறைய உண்டு. 

பெற்றோர்கள் வரனை தேர்ந் தெடுப்பார் கள், திருமண நிச்சயம் நடத்துவார்கள். அதன் பின் ஊர் பெரியவர்கள் முன்னிலையிலும், வேதபாரகர்கள் முன்னிலையிலும் அவர்கள் கணவன் - மனைவியாக அறிவிக்கப்படுவார்கள் இவ்வாறு திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களுக்குள் பிரிய நினைத்தால் அவர்கள் தண்டனைக்குரியவர்கள்









ஒருமுறை பரிசேயர் அவரைச் சோதிக்க வேண்டுமென்ற அவரருகில் வந்து, புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா" என்று கேட்டார்கள், 

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும் இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான், 

அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிற படியினால் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள், 

ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக் கடவன் என்றார். அதற்கு அவர்கள் அப்படியானால் தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள் அதற்கு அவர் உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார். 

ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை . ஆதலால் எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததி னிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், 

அவன் விபசாரஞ் செய்கிறவனா யிருப்பான் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 19:3-9).

அப்படியென்றால் கணவனையிழந்த ஒரு ஸ்திரீயை வேறொருவன் மணந்து கொள்வது விபசாரமல்ல, ஒரு ஸ்திரீயின் கணவன் இறந்து போனால் அவனுடைய நெருங்கிய உறவினர் இருக்கும் போது வேறொருவன்


அவளை மணந்து கொள்ளுவது முறையல்ல, இதற்கு உதாரணமாக ரூத்தின் சரித்திரத்தை எடுத்துக் கொள்ளலாம் நகோமியின் மகன் மக்லோன் ரூத்தை விவாகம் செய்தான் மக்லோன் மோவாப் தேசத்தில் இறந்து போனான். ரூத் தன்னுடைய மாமியார் நகோமியுடன் பெத்லகேமுக்கு வந்தாள்

மாமியாருடன் வந்த ருத்தை மணந்து கொள்ள போவாஸ் என்பவன் விரும்பினான். ஆனால் போவாசை விட நெருங்கிய உறவினர் வேறு ஒருவர் இருந்திருந்தால் அவனுடைய அனுமதியில்லாமல் ருத்தை விவாகம் செய்ய போவாசால் முடியாது (ரூத் 3:12). போவாஸ் அந்த உறவினனை சந்தித்து அவனுடைய அனுமதியோடு ருத்தை விவாகம் செய்தான் 

(ரூத் 4:1-11). ருத்தை விபசாரி என்று சொல்ல முடியுமா? ஏழு கணவர்கள் இருந்த ஒரு ஸ்திரீயைப் பற்றி மத்தேயு 22ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம் சதுசேயர் இயேசுவிடம் வந்து, "எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள். 

மூத்தவன் விவாகம் பண்ணி மரித்து தன் மனைவியை சந்தானமில்லாமல் தன் சகோதரனுக்கு விட்டு விட்டுப் போனான். அப்படியே இரண்டாம், மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள் எல்லோருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்து போனாள். 

ஆகையால் உயிர்த்தெழுதலில் அவ்வோழு பேரில் அவள் யாருக்கு மனைவியாயிருப்பாள்? 

என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப் போல் இருப்பார்கள் என்றார் (மத் 22:23-30).


ஏழு கணவர்களோடு வாழ்ந்த இந்த ஸ்திரீயை விபச்சாரி என்று வேதம் சொல்லவில்லை. அவளை மணந்த புருஷர்களையும் விபசாரக்காரர்கள் என்று சொல்லவில்லை. 

ஏனென்றால் இந்த ஸ்திரீ ஏழு புருஷர்களோடு ஒரே நேரத்தில் வாழவில்லை. அப்படியென்றால் மனைவி என்ற ஸ்தானத்தை அவள் இழந்து விபசாரி என்று அழைக்கப்பட்டிருப்பான் இதைப்போல்தான் சமாரியா ஸ்திரீயும் ஐந்து கணவர்களோடு ஒரே நேரத்தில் வாழவில்லை . 

இருந்திருந்தால் உன் புருஷனை அழைத்து வா என்று இயேசு சொல்லியிருக்க மாட்டார் புருஷன் என்ற வார்த்தை மலையாள வேதாகமத்தில் பாத்தாவு எனவும்,

 ஆங்கில வேதாகமத்தில் Husband எனவும் உள்ளது. ஒருவேளை தமிழ் வேதாகமத்தில் புருஷன் என்ற வார்த்தைக்குப் பதில் 'கணவன்' என்ற வார்த்தை இருந்திருந்தால் இந்த குழப்பங்கள் வராமலிருந்திருக்கலாம்.

சமாரியா ஸ்திரீயுடன் வாழ்ந்தவர்கள் ஐந்து பேரும் அவளுடைய சட்ட ரீதியான கணவர்கள் தான். இருபது வயதில் முதல் திருமணம் நடந்திருந்தாலும் ஒரு கணவனோடு ஐந்து வருடங்கள் என்று பார்த்தால் கூட கிட்டத்தட்ட அந்த ஸ்திரீயின் வயது 45 இருக்கலாம். 

ஐந்து கணவர்களையும் இழந்ததினால் வந்த மனக்கஷ்டம், தனக்குச் சந்ததியில்லையே என்ற துக்கம், வயதானதினால் வந்த உடல் சோர்வு இவற்றின் காரணமாகத்தான் அவள் இயேசுவிடம் இவ்வாறு கூறுகிறாள்.

'ஆண்டவரே எனக்கு தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டு கொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தர வேண்டும் என்றாள்" (யோவான் 4:15), தண்ணீர் மொண்டு கொள்ள உடல் ஆரோக்கியமும்



உதவி செய்ய உறவினர்களும் இல்லாத உடைந்த பாத்திரமாகவே சமாரியா ஸ்திரீ காணப்பட்டாள். அப்படிப்பட்ட நிலையில்தான் இயேசு அவளோடு “நீ தேவனுடைய ஈவு என்று கூறுகின்றார். இந்த ஒரு வார்த்தை அவள் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது. 

ஏனென்றால் சந்ததி இல்லாதவள், ஐந்து கணவர்களை இழந்தவள் என்று அவதூறுகள் பலவற்றை அவள் கேட்டிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை .

இப்பொழுது இருக்கிறவனும் புருஷனல்ல

“இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு புருஷனல்ல" என்பது இயேசு சொன்ன வார்த்தை. ஆனால் அவன் யாரென்று இயேசு சொல்லவில்லை. 

ஆனால் அவளோடு யாரோ ஒருவர் இருந்தரென்றால் அவர் யாராக இருக்கலாம் என்று வீணாக சிந்திக்கத் தேவையில்லை ஆவியானவர் மறைத்து வைத்திருந்த இந்த விஷயத்திற்கு அவள் யாரையோ வைத்திருந்தாள்" என்று விளக்கம் கொடுப்பது தவறு. 

ஒருவேளை வேலைக்காரனாகவோ, சகோதரனாகவோ இல்லையென்றால் அவளுக்கு உதவி செய்பவனாகவோ இருக்கலாம். 

இயேசுவுக்கு அவன் யார் என்பது தெரியும், அவளுடைய உண்மை நிலையை அவர் கூறியதால் தான் “ஆண்டவரே நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்று கூறினாள் (யோவான் 4:19). நானே மேசியா என்று இயேசு அவளுக்கு அறிவிக்கின்றார் (யோவான் 426). சமாரியர் இயேசுவை விசுவாசித்தனர். அவர் அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்.






இயேசு பேசினதின் மறைபொருள்

இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் இயேசுவின் வார்த்தைகள் யாருக்கும் புரியாத மறைபொருளாகவே யிருந்தது. ஒருமுறை யூதர்கள் அவரிடம் அடையாளங்களைக் கேட்டனர். 


இயேசு அவர்களிடம், “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்” (யோவான் 2:19), அப்பொழுது யூதர்கள்:

 இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருடமாயிற்றே, நீர் இதை மூன்று நாளுக்குள் எழுப்புவிரோ என்றார்கள் அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்து பேசினார்

 (யோவான் 2:21). அவர் சொன்னதற்கான உண்மைப் பொருளை அவர்கள் அறியாமல் இயேசுவை சிலுவை சுமக்கச் செய்வதற்கு இதையே காரணம் காட்டினார்கள் (மாற் 14:58).

இயேசுவை சிலுவையில் அறைந்த பின்னரும் சிலர் இதைச் சொல்லி அவரைப் பரிகாசம் செய்ததை வேதத்தில் நாம் வாசிக்கின்றோம் (மாற் 15:29)

இயேசு சொன்னதன் உண்மைப் பொருளை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைப்போல தான் இயேசுவும் சமாரியா ஸ்திரீயும் பேசிக் கொண்டதன் உண்மைப் பொருளை உணராமல் பலரும் தவறான விதத்தில் பிரசங்கம் செய்கின்றனர். ஆனால் இயேசு அதற்குள் ஒளித்து


வைத்திருந்த ஆவிக்குரிய தத்துவங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. யாராவது சொல்வதைக் கேட்டு அதைப்போல பிரசங்கம் செய்கின்றனர். 

ஒருமுறை சீஷர்கள் பயணத்தின்போது, அப்பங்களைக் கொண்டு வர மறந்து போனார்கள். அப்போது இயேசு, "நீங்கள் பரிசேயருடைய புளித்த மாவைக்குறித்தும், 

ஏரோதின் புனித்தமாவைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்" என்று கூறினார். "நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார்” என்று சீஷர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் (மாற் 8:14-15). 

ஆனால் இயேசு அப்பத்தைப் பற்றி பேசவில்லை. பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக் குறித்தே பேசினார் (மத் 16:12)

சமாரியா ஸ்திரீயைக் குறித்த இயேசுவின் இரகசியம்

நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கரம்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல, 

ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமா கிப் போட்டார் களே என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே 31:32). 

இங்கு நியாயப்பிரமாணத்தை நாயகன் என்று குறிப்பிட்டுள்ளார். 'நாயகன்' என்ற சொல் மலையாளத்தில் பாத்தாவு' என்றும், ஆங்கிலத்தில் husband' என்றும் உள்ளது

ஒரு புருஷன் ஸ்திரீக்கு கணவனாயிருப்பது போல, கர்த்தருடைய கட்டளைகள் ஜனங்களுக்கு கணவனாயிருப்பதாக தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் நமக்கு உணர்த்துகிறார்.



சமாரியா ஸ்திரீயும் இயேசுவும் முக்கியமாக விவாதம் செய்தது நியாயப் பிரமாணத்தைக் குறித்து தான். 

எனவே தான் அந்த ஸ்திரீயானவள் எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுது கொண்டு வந்தார்கள், நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ள வேண்டும் என்கிறீர்களே" என்றாள். 

உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங் காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது என்று யோவான் 4:20-23 கூறுகிறது.

 இந்த சமயத்தில் தான் இயேசு ஓர் இரகசியத்தை அவளுக்கு வெளிப்படுத்துகின்றார் "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு ஒரு நாளும் தாகமிருக்காது" (யோவான் 4:14) என்று இயேசு சொன்னதை வேத வாக்கியத்தின் மூலம் அறிகிறோம்.




ஆவிக்குரிய விளக்கங்கள்

ஐந்து கணவர்கள் என்பது ஐந்து கட்டளைகளைக்

(சட்டம்) குறிக்கிறது.

முதல் கணவர் - முதல் கட்டளை

இது ஆதாமுக்கு கர்த்தர் கொடுத்த கட்டளை. நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் (ஆதி 2:17) என்பது, ஆதாம் அந்த கட்டளையை மீறுகிறான். இது முதல் கணவனின் மரணம் என்று குறிப்பிடப்படுகிறது. இது தான் சமாரியா ஸ்திரீ மூலம் இயேசு உணர்த்திய முதல் கணவன்.

இரண்டாவது கணவர் - இரண்டாவது கட்டளை

இது நோவாவுக்கு கர்த்தர் கொடுத்த கட்டளை “நீயும் உன்னோடே கூட உன் குமராரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசியுங்கள் (ஆதி 6:18) என்பது

ஆணும் பெண்ணுமாக சகல வித மாம்ச ஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன, அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டு கதவை அடைத்தார் (ஆதி 7:16), நோவாவும் குடும்பமும் காப்பாற்றப்பட்டதையடுத்து இரண்டாம் கட்டளை நிறைவடைந்தது, இது இரண்டாவது கணவனின் மரணம் என்று குறிப்பிடப்படுகிறது



மூன்றாவது கணவர் - மூன்றாவது கட்டளை

இது தெய்வம் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கை "நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளை இருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான் என்றார்”(ஆதி 17:14)

இந்த கட்டளை மோசேயின் மீறுதலினால் நிறைவடைந்தது. வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் மோசேயைக் கொல்லப் பார்த்தார். அப்போது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்தாள் (யாத் 4.24), மோசே எபிரெயனாக இருந்தும் எட்டாம் நாள் செய்ய வேண்டிய விருத்த சேதனத்தை அவன் செய்யவில்லை

அவர்கள் எகிப்தினின்று புறப்பட்ட பின்பு வழியில் வனாந்தரத்திலே பிறந்த சகல ஜனங்களும் விருத்தசேதனம் பண் ணப் படாதிருந் தார் கள்” என்று யோசுவா 5:5 சொல்லுகிறது

என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது (ஆதி 17:13) என்று ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்தபோதே கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். ஆனால் பிற்காலத்தில் இந்த கட்டளையும் மீறப்பட்டது. இப்படியாக தீர்க்கதரிசியின் பாஷையில் மூன்றாவது கணவனும் மரித்தான்




நான்காவது கணவர்- நான்காவது கட்டளை

கர்த்தர் மோசேயின் வழியாக இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்தது, நான் எகிப்தியருக்கு செய்ததையும் நான் உங்களை கழுகுகளின் செட்டைமேல் சுமந்து உங்களை என்னண்டையிலே சேர்த்துக் கொண்டதையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள். 

இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையை கைக்கொள்வீர் களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்கு சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் என்னுடையது (யாத் 19:5).

இதற்கு முன்பு கர்த்தர் மூன்று கட்டளைகளையும் யாரிடமும் கேட்டுக்கொண்டு கொடுக்கவில்லை. கர்த்தர் தாமாகவே கொடுத்தார். ஆனால் இந்த நான்காம் கட்டளை மட்டும் மோசேயின் வழியாக கேட்டறிந்த பின்னரே கொடுப்பதை அறிகிறோம்.

 "அந்த பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும் அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப் பட்ட எழுத்துமாயிருந்தது (யாத் 32:16), இதுவே நான்காவது கணவன் என்று குறிக்கப்பட்ட நான்காம் கட்டளை.

மோசே கர்த்தரிடமிருந்து இந்த கட்டளைகளை வாங்கி வருவதற்கு முன் ஜனங்கள் விக்கிரகங்களை செய்து வணங்கத் தொடங்கினர். விக்கிரகங்களுக்காக விழா கொண்டாடினார்கள் (யா 32 1-6),

 அப்பொழுது மோசே கோபம் கொண்டு தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்தான் (யாத் 32 19).

இப்படியாக ஜனங்களின் சம்மதத்தோடு




தயாரிக்கப்பட்ட கட்டளைக்கு ஒருநாள் கூட ஆயுள் இல்லாமல் போனது. எனவே நான்காவது கணவனும் இவ்வாறாக மரித்தான்

ஐந்தாவது கணவர் - ஐந்தாவது கட்டளை

கர்த்தர் திரும்பவும் மோசேயினிடத்தில் சொன்ன தென்னவென்றால் "முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக் கொள், நீ உடைத்துப் போட்ட முந்தினபலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்” (யாத் 34:1), 

"பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி : இந்த வார்த்தைகளை நீ எழுது. இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை பண்ணினேன் என்றார்.

 அங்கே அவன் அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் இரவும், பகலும் 40 நாள் கர்த்தரோடே இருந்தான். அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளை பலகையில் எழுதினான்" (யாத் 34:27-28).)

இயேசு கிறிஸ்துவை நியாயம் விசாரித்த பிலாத்து நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்” என்று சொன்னான் (யோவான் 18:38). 

நியாயப் பிரமாணத்தின்படி குற்றம் செய்யாத ஒருவனைத் தண்டிக்க கூடாது. ஆனால் தண்டனை கொடுக்காவிட்டால் ஜனங்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 

எனவே பிலாத்து "இவனை நீங்கள் கொண்டு போய் உங்கள் நியாயப் பிரமாணத்தின்படி நியாயந் திருங்கள் என்றான்” (யோவான் 18:31)

ஒருமுறை பவுல் ஆலோசனைச் சங்கத்தாரிடம் நிற்கும் போது அனனியா என்ற பிரதான ஆசாரியன் பவுலின்




வாயில் அடிக்க கட்டளையிட்டான். அப்பொழுது பவுல் அவனைப் பார்த்து, “தேவன் உம்மை அடிப்பார். நியாயப் பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாய பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா" என்றான் (அப்23:2-3).

இப்படியாக நியாயப் பிரமாணம் ஒரு நோயாளியாகிய மனிதனைப் போல படிப்படியாக மரித்தது. 

இயேசு சமாரியா பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த போது நியாயப்பிரமாணம் தீர்ந்தது, நியாயப் பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் காலம் யோவான் வரை தான் (லுக் 16:16).

இப்பொழுது இருக்கிறவன்

ஐந்து புருஷர்களையும் இழந்த ஸ்திரீயை நோக்கி இயேசு சொன்னார், "இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவனல்ல" ஐந்து கணவர்கள் இறந்து விட்டாலும் இன்னும் அவளோடு ஒரு கட்டளை இருக்கிறது. 

யோவான் சிரச்சேதம் செய்யப்பட்டவுடன் கட்டளைகள் யாவும் நிறைவடைந்தது. அதன்பிறகு தான் இயேசு சமாரியா ஸ்திரீயை சந்திக்கிறார். இப்பொழுதும் அவள் ஒரு கட்டளையை உள்ளத்தில் வைக்கிறாள்.

சமாரியா ஸ்திரீயோடு கணவனல்லாத ஒருவன் இருந்தது போல, தாகமெடுக்காத தண்ணீரைப் போன்ற ஒரு புதிய கட்டளையை கொடுப்பதற்காக இயேசு வந்தார். 

இதனை ஆறாவது கட்டளை என்று சொல்லலாம். "அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய்” என்று கர்த்தர் உரைப்பதாக (ஓசி 2:16) வேதம் கூறுகின்றது. 'ஈஷி' என்றால் கணவன் என்று பொருள். இனி


இயேசுவை கணவன் என்று சொல்லும் காலம் வரும் என்பதைத் தான் ஓசியா தீர்க்க தரிசனமாக இவ்வாறு கூறியுள்ளார். 

அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தரை மணவா எனாகவும் சபையை மணவாட்டியாகவும் சித்தரித்துள்ளார் (1 கொரி 12). ஆகவே இயேசுவை கணவன் என்று சொல்லுவது பொருந்தும்.

 அதாவது இயேசுவாகிய ஆறாவது கணவனை ஏற்றுக் கொண்டால், இந்த மரணமில்லை என்று அர்த்தம் கணவனுக்கு

ஐந்து கணவர் களை மோசேயின் ஐந்து புத்தகங்களாகவும் வியாக்கியானம் செய்யலாம். இந்த ஐந்து புஸ்தகங்கள் வாயிலாகத்தான் தெய்வம் மனிதனுக்கு கட்டளைகளைக் கொடுத்தார். 

மனிதன் உயிரோடு இருக்கும் காலம் வரையிலும் இனி ஒரு கட்டளையை தெய்வம் தர மாட்டார். கடவுளின் கடைசி கட்டளை தான் இயேசு கிறிஸ்து இந்த கட்டளை மரணமில்லாத,

 என்றென்றைக்கும் ஜீவிக்கின்ற நித்திய கட்டளை. அந்த தண்ணீரை எனக்குத் தர வேண்டும் (யோவான் 4 15) என்று கேட்பதன் மூலம் இயேசுவாகிய கட்டளையை அவள் ஏற்றுக் கொள்கிறாள். இப்படியாக இவள் இயேசுவின் மணவாட்டி என்று சொல்லலாம்

ஆபிரகாமிற்கு இரண்டு குமாரர்கள் உண்டு. ஒருவன் அடிமைப்பெண் பெற்ற மகன். மற்றொருவன் சுதந்திரவாளி ஏனென்றால் அடிமைப் பெண்ணின் மகன் மாம் ச பிரகாரமாகவும்,

 மற்ற மகன் வாக்குத்தத்தத்தின் பிரகாரமாகவும் பிறந்தவன். இந்த இரு ஸ்திரீகளும் இரண்டு கட்டளைகளைக் குறிக்கின்றன. இவைகள் அர்த்த முள்ளவைகள் (கலா 4: 22-26)


இதைப் போலவே 'சமாரியா ஸ்திரீயும் ஐந்து கணவர்களும்' என்பவைகளும் ஞான அர்த்தமுள்ளவைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உம்முடைய நியாயப்பிரமாணத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ள என் கண்களைத் திறந்தருளும் என்று வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். 

ஞான அர்த்தமுள்ள பலவற்றை இயேசு கூறியுள்ளார். அவற்றின் பொருளை நாம் உணர்ந்து கொள்ள வேண்டுமானால் நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும். அதற்கு கர்த்தர் நமக்கு அருள்புரிவாராக

சமாரியா ஸ்திரீ மனுக்குலம்

இயேசு கிறிஸ்து உலக ரட்சகர்

இயேசு என்னும் தண்ணீரைக் குடிக்காதவன் கணவனை இழந்த ஸ்திரீக்குச் சமமானவன். நித்திய ஜீவனாம் இயேசுவை ஏற்றுக் கொள்பவன்.


ஆசீர்வதிக்கப்படுவான். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நமக்குக் கிடைக்கும் ஜீவத் தண்ணீராகப் பருகி (ஏற்றுக் கொண்டு) ஆவி ஆத்தும சரீரத்தில் உயிர்பெற்று வாழ்வோம்

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 














Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*