Glory
மகிமை மேல் மகிமை
நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது” (சங்கீதம் 85:9).
நம்முடைய வாழ்க்கையிலும் தேவனுடைய மகிமை வெளிப்பட முடியும். அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இருக்கின்றதோ, அந்த மனிதனுடைய வாழ்க்கையில் தேவனுடைய இரட்சிப்பு சமீபமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் எங்கே? இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையில் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் காணப்படுவதில்லை. தேவனைக் குறித்த உயர்வான எண்ணம் இல்லை.
தேவனை வேதம் போதிக்கின்ற தேவனாகப் பார்ப்பதில்லை. ஆகவேதான் அவர்களுடைய வாழ்க்கையில் அநேக சமயங்களில் உண்மையான தேவனுடைய இரட்சிப்பை, மீட்பைப் பார்க்க முடிவதில்லை. அநேகருடைய மனதில் தனக்கு விடுதலை வேண்டும் என்ற வாஞ்சை இருக்கின்றது,
நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது” (சங்கீதம் 85:9).
நம்முடைய வாழ்க்கையிலும் தேவனுடைய மகிமை வெளிப்பட முடியும். அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இருக்கின்றதோ, அந்த மனிதனுடைய வாழ்க்கையில் தேவனுடைய இரட்சிப்பு சமீபமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் எங்கே?
இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையில் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் காணப்படுவதில்லை. தேவனைக் குறித்த உயர்வான எண்ணம் இல்லை. தேவனை வேதம் போதிக்கின்ற தேவனாகப் பார்ப்பதில்லை. ஆகவேதான் அவர்களுடைய வாழ்க்கையில் அநேக சமயங்களில் உண்மையான தேவனுடைய இரட்சிப்பை, மீட்பைப் பார்க்க முடிவதில்லை.
அநேகருடைய மனதில் தனக்கு விடுதலை வேண்டும் என்ற வாஞ்சை இருக்கின்றது, ஆனால் அந்த விடுதலையின் மைய்யமான தேவன் எவ்விதமானவர் என்பதையும் அவர் கனத்துக்கும் மேன்மைக்கும் உரியவர், அவருக்குப் பயப்பட வேண்டியது அவசியம் என்பதைக் குறித்து அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் எண்ணாமல் போவது,
அவர்கள் இரட்சிப்பை அடையக் கூடாத நிலைக்கு கொண்டுச் செல்கிறது. இரட்சிப்பு என்பது பாவத்திலிருந்து இரட்சிப்பு மாத்திரமல்ல, அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொருக் காரியத்திலும் தேவனுடைய மீட்பு, விடுதலை கிருபை இவை எல்லாம் உள்ளடக்கியதாய் இருக்கிறது. தேவனுடைய இரட்சிப்பை நம்முடைய வாழ்க்கையில் அனுபவிக்கும்படியாக தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.
அவருடைய மகிமை நிச்சயமாக வெளிப்படும். அவரைச் சார்ந்து வாழுகிற வாழ்க்கையில் போராட்டம் உண்டு. ஆனால் அதில் தோல்வி இல்லை. கர்த்தருக்குப் பயந்து வாழுவோம்.
ஆமென்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.