ஆதியாகமம் அறிமுகம்

0




ஆதியாகமம் அறிமுகம்

இந்த உலகத்தில் ஏராளமான புஸ்தகங்கள் இருந்தாலும் பரிசுத்த வேதாகமமே, அந்தப் புஸ்தகங்கள் எல்லாவற்றிற்கும் பிரதான புஸ்தகமாக விளங்குகிறது இதை புஸ்தங்களுக்கெல்லாம் சிறப்பான புஸ்தகம் என்று சொல்லலாம்


வேதாகமம்

 "பரிசுத்த வேதாகமம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்தப் புஸ்தகத்தை பரிசுத்தவான்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, பரிசுத்த வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் எழுதியிருக்கிறார்கள்

பரிசுத்தவேதாகமத்தில் தேவனுடைய பிரமாணமும், இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷமும் நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. பரிசுத்த வேதாகமத்திலுள்ள புஸ்தகங்கள் பல்வேறு இடங்க வம், பல்வேறு காலங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது



வேத வினா விடை 


"அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனம் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்" (2பேது 1:19)

இந்தப் பூமியிலே எந்த தேசத்தில் பரிசுத்த வேதாகமம் இல்லையோ, அந்த தேசம் இருண்ட தேசமாகவே இருக்கும்

பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது ஏற்பாடு என்னும் வார்த்தைக்கு உடன்படிக்கை என்று பொருள். பரிசுத்த வேதாகமத்தில் மனுஷனைக் குறித்த தேவனுடைய சித்தம் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது


"உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட

ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்" (வெளி 13:8).

பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு என்றும், புதிய ஏற்பாடு என்றும் இரண்டாகப் பகுக்கப்பட்டபோதிலும், பழைய ஏற்பாட்டை பழைய புஸ்தகம் என்று ஒதுக்கி வைத்துவிடமுடியாது. புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டை பூரணப்படுத்துகிறது.


     ஆமோஸ் தீர்க்கதரிசியின் புத்தகம் 


பழைய ஏற்பாட்டிலுள்ள முதல் ஐந்து ஆகமங்கள் பஞ்சாகமம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆகமங்களின் ஆசிரியர் மோசே. பஞ்சாகமத்தின் முதலாவது ஆகமம் "ஆதியாகமம்" ஆகும்

மோசே ஆதியாகமத்தை எப்பொழுது எழுதினார் என்பது தெளிவாக தெரியவில்லை. அவர் மீதியான் தேசத்தில் இருந்தபோது இந்த ஆகமத்தை எழுதினார் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். எகிப்து தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தின் பாடுகளை அனுபவித்துக்கொண்டிருந்த அவர்களுக்கு ஆறுதலையும், ஆலோசனையையும் கொடுக்கும் வண்ணமாக மோசே ஆதியாகமத்தை எழுதினார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியபோது, மோசே ஆதியாகமத்தை எழுதினார் என்றும் வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். மோசே சீனாய் மலையில் கர்த்தரோடு இருந்துவிட்டு கர்த்தருடைய வார்த்தைகளை பூரணமாகப் பெற்றுக்கொண்ட பின்பு, அவர் ஆதியாமத்தை எழுதினார் என்பது இவர்களுடைய கருத்து

ஆதியாகமம் என்னும் பெயருக்கு "ஆரம்பம்' என்று பொருள். எல்லா ஆரம்பங்களின் சரித்திரமும் இந்த ஆகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த உலகம் சிருஷ்டிக்கப்பட்டது, உலகத்திலே பாவமும் மரணமும் பிரவேசித்தது. தேசங்கள் எழும்பினது, கர்த்தருடைய சபை ஸ்தாபிக்கப்பட்டது ஆகியவற்றின் ஆரம்பமெல்லாம் ஆதியாகமம் புஸ்தகத்தில் சரித்திரமாக எழுதப்பட்டிருக்கிறது

ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் இந்த உலகம் சிருஷ்டிக்கப்பட்ட சம்பவம் தெளிவாக

எழுதப்பட்டிருக்கிறது. மனுபுத்திரரில் அநேகர் என்னை சிருஷ்டித்தவர் எங்கே இருக்கிறார்" என்னும் கேள்வியைக் கேட்கிறார்கள். இந்தக்

கேள்விக்கு தத்துவ ஞானிகளால் சரியான பதிலை சொல்ல முடியாது



God bless you 


Umn ministry Chennai 




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*