யாத்திராகமம் ஒரு பயணம்

0




யாத்திராகமம் ஒரு பயணம் 



ஆதியாகமம் புஸ்தகத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய சபையின் வரலாறு தனிப்பட்ட குடும்பங்களில் ஆரம்பமாயிற்று. யாத்திராகமம் புஸ்தகத்தில் இஸ்ரவேல் புத்திரருடைய சபையார், ஒரு தேசமாக வளர்ச்சி பெறுகிறார்கள்

ஆதியாகமம் புஸ்தகத்திலே, தேவன் இந்த பூமியை தமக்காக எவ்வாறு உருவாக்கினார் என்பது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. யாத்திராகமம் புஸ்தகத்திலே, தேவன் இஸ்ரவேலை தமக்காக எவ்வாறு உருவாக்கினார் என்பது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது

தேவன் நடப்பிக்கிற ஒவ்வொரு கிரியையும், அவருக்கு துதியையும் மகிமையையும் கொடுக்கிறது. "இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்-வருவார்கள் (ஏசா 43:21).

ஆதியாகமம் புஸ்தகத்தில் இந்த உலகமானது சரித்திரத்திலே சிருஷ்டிக்கப்படுகிறது. யாத்திராகமம் புஸ்தகத்தில் இந்த உலகம் அடையாளத்தில் இரட்சிக்கப்படுகிறது

யாத்திராகமம் என்னும் பெயருக்கு வெளியே புறப்பட்டுப்போதல், பிரயாணம்பண்ணுதல் என்று பொருள் சொல்லலாம். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டுப்போன சம்பவங்கள் யாத்திராகமம் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது இஸ்ரவேல் ஜனத்தார் ஒரு புது சிருஷ்டியாக உருவாக்கப்படுகிறார்கள்







கர்த்தர் ஆபிரகாமுக்கு தம்முடைய வாக்குத்தத்தங்களை ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறுகிறது (யாத் 1-19 ஆகிய அதிகாரங்கள்)

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு தம்முடைய பிரமாணங்களைக் கொடுக்கிறார். இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தருடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படிகிறார்கள் (யாத் 20-40 ஆகிய அதிகாரங்கள்)

மோசே யாத்திராகமம் புஸ்தகத்தின் ஆசிரியர். இந்த புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும், மோசே கண்ணாரக்கண்ட சாட்சியாகவும், காதார கேட்ட சாட்சியாகவும் இருக்கிறார்

யாத்திராகமம் புஸ்தகத்தில் கிறிஸ்துவுக்கு அடையாளங்களாக ஒரு சிலரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டின் மற்ற ஆகமங்களில், கிறிஸ்துவுக்கு அடையாளமாக சொல்லப்பட்டிருப்பதைவிட, யாத்திராகமம் புஸ்தகத்தில் அவருக்கு அடையாளமாக அதிகமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது

மோசே இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் எழுதியிருக்கிறார். "நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள் அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே" (யோவா 5:46)




மனுஷன் தேவனோடு ஒப்புரவாவதற்கும், மனுஷன் தேவனோடு உடன்படிக்கைக்குள் வருவதற்கும், அவரோடு ஐக்கியமாகயிருப்பதற்கும் மத்தியஸ்தர் ஒருவர் தேவைப்படுகிறார். ஆதியாகமம் புஸ்தகத்தில் அந்த மத்தியஸ்தரைப்பற்றி அதிகமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்கள் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற சத்தியங்களை விளக்குவதற்கு, நமக்கு அதிகமாய் உதவி செய்கிறது.

கி.மு. 1688 ஆவது வருஷத்தில் இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டது. நியாயப்பிரமாணத்திற்கு முன்னுரையாக சீனாய் மலையிலிருந்த 11 மாத காலத்தில் இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கலாம்

மோசே இஸ்ரவேலருக்கு நியாயப் பிரமாணத்தைக் கொடுத்தவர். எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் தேசத்தாரை விடுவித்து, வனாந்தரத்தில் வழிநடத்திச் சென்றவர்

பூர்வகாலத்தில் பஞ்சாகமம் முழுவதும் ஒரே புஸ்தகமாக இருந்தது. இதை ஒரே சுருளில் எழுதிவைத்திருந்தார்கள் இந்தப் புத்தகம் "ஹா#தோரா என்று அழைக்கப்பட்டது. இதற்கு நியாயப்பிரமாணம் என்று பொருள். கேபேர் என்னும் எபிரெய வார்த்தைக்கு புஸ்தகம் என்று பொருள். ""கேபேர் ஹா#தோரா" என்பது இந்தப் புஸ்தகத்தின் பெயர் இதற்கு "நியாயப்பிரமாணப் புஸ்தகம்" என்று பொருள்

காலப்போக்கில் ஐந்தாகமப் புஸ்தகம் ஐந்து பிரிவாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு புஸ்தகத்திற்கும் அந்தப் புஸ்தகத்தின் முதல் வார்த்தையே பெயராயிற்று

யாத்திராகமம் புஸ்தகத்தின் பெயர் "எல்லே-ஷேமோவ்த்" "பெயர்களாவன" என்பது இதன் பொருள். சிலர் யாத்திராகமம் புஸ்தகத்தை ஷேமோவ்த்" "பெயர்கள்" என்று அழைக்கிறார்கள்

யாத்திராகமம் புஸ்தகத்தின் முதல் வசனத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுது அது ஆதியாகமம் புஸ்தகத்தின் தொடர்ச்சி என்பது தெரியவருகிறது இஸ்ரவேலரின் வரலாற்றில் மற்றுமொரு முக்கியமான நிகழ்ச்சியை இந்தப் புஸ்தகம் விவரிக்கிறது

ஆதியாகமம் புஸ்தகத்தில் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்டிருக்கிற காரியங்கள் யாத்திராகமம் புஸ்தகத்தில் வரலாற்று நிகழ்ச்சிகளாக நிறைவேறுகின்றன


God bless you 





Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*