சிலுவையின் வரலாறு பாகம் 3

0



சிலுவையின் வரலாறு பாகம் 3



சிலுவையும் வாரநாட்களும் :

சிறலுவையில் மரித்த இயேசுவின் கடைசி ஒரு வாரமாகிய ஞாயறு முதல் சனி வரை என்ன நடந்தது என்பதை மருத்துவராகிய லூக்கா தனது சுவிசேலு நூல் 19ம் அதிகாரம் முதல் 24ம் அதிகாரம் வரையினான வேதப்பகுதியில் மிக விபரமாக கூறியுள்ளார். அதனை கிழமையின் வரிசைபடி நியாணிப்பது மிக நல்லது.

1. ஞாயிறு எருசஸேம் பலனி (லூக் 19:25–44)

2. திங்கள்: தேலாலயம் தூய்மையாக்குதல் (லூக்: 19:45-48)

3. செவ்வாய்: பொதுமக்கள் நடுவில் (லூக். 20:1-21)

i) அவரது அதிகாரத்தை கேள்வி கேட்டல் (ஹக் 20:1-8)

ii) அவரது அதிகாரம் உவமையின் மூலம் வெளிப்படுத்தப்படல் (லூக். 20:11-18)

iii) அதிகாரத்தைக் கொடுத்தல் (லூக். 20:18-40)

iv) அதிகாரம் நிரும்பவும் உரைக்கப்படுதல் (லூக். 20:41 - 21:4)

v) மறைபொருளில் உரையாடஸ் (லூக். 21:8-38) 

4. புதன் யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்க ஆயத்தம் (லூக் 22:1-5)

5. வியாழன்: பஸ்காவும் இயேசுவின் கைதும் (லூக்., 22:7-53)

1) கர்த்தரின் பத்தி (இராபோஜனம்) (லூக். 22:7-30)

II) கெத்செமேனே தோட்டம் செல்லுதல் (லூக். 22:39-46)

III) இயேசு கைது செய்யப்படுதஸ் (லூக். 22:47-53)

6. வெள்ளி: விசாரணையும் சிலுவையிலறைதலும் (லூக் 22:54 - 23:55)

I) பேதுருவின் மறுப்பு லூக். 22:54-62)

ii) அடிக்கப்படும் கிறிஸ்து (லூக். 22:63-63)

III) ஆலோசனைச் சங்கம் முன் கிறிஸ்து (லூக். 22:66-71)

 iv) ஆளுநர் பிலாத்துவின் முன் கிறிஸ்து லூக் 23:1-8)

v) ஏரோது ராஜாவின் முன் கிறிஸ்து (லூக். 220-12}

vi) ஆளுநர் முன் மீண்டும் கிறிஸ்து (லூக்- 23:13-20)

vii) சிலுவையில் கிறிஸ்து அறையப்படுதல் (லூக். 23:25-49)

vili) கிறிஸ்து அடக்கம் பண்ணப்படுதல் (லூக். 23:50-59)

7. சனி: கல்லறையில் கிறிஸ்து இலேசு (லூக். 23:06)

8. உயிர்த்த இயேசு மணிதருக்குக் தரிசனமாகுதல் (லூல். 24:1-53)

1) மரணாத்தை வென்ற கிறிஸ்து (லூக். 24:1-12}

ii) தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிய கிறிஸ்து (லூக் 24:13-35)

II) உவிர்த்த உடலில் உணவு உண்ட கிறிஸ்து [லூக். 24:36-43)

iv) சபையில் தலைவர் (லூக் 24:44-48]

v) மரிசுத்த ஆவியானவரை அருளுபவர் (ஜாக். 24:40)

vi) பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட

கிறிஸ்து (லூக் 2450-53)


சிலுவையின் வரலாறு பாகம் 1



சிலுவையின் வரலாறு பாகம் 2


சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள்:

அவரை இருவகை குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தினர். ஒன்று மதசம்பந்தமானது. இன்னொன்று அரசு சட்ட சம்பந்தமானது. மதத்தின் தொடர்பில் மூன்று விசாரணைகள். 

1. அன்னா, காய்பா, ஆகியோர் முன், சனகெரிப் சங்கம் முன்,

2. சட்ட சம்பந்தமான விசாரணைக்காக பிலாத்து, ஏரோது, மீண்டும் பிலாத்து ஆகியோர் முன்.

அன்னாவும், காய்பாவும், பிரதான ஆசாரியர்களாகக் கூறப்படுகின்றனர். இஸ்ரவேலில் ஒருதடவை ஒரு பிராதன ஆசாரியர்தான் இருக்க முடியும். ஆனால் கால ஒட்டத்தில் ஆண்டவரைவிட்டு அரசியல் கலந்த மதமாக அது மாறியதால் இத்தகைய நிலை ஏற்பட்டது. (மத் 26:57-68; மாற் 14:53-65; லூக் 22:54,63-65: யோவா 18:13-24)

இருவர் முன்பும் விசாரிக்கப்பட்ட பின்பு யூதர்களின் நீதிமன்றமாக கருத -ப்பட்ட 70 பேர் அடங்கிய ஆலோசனைச் சங்கத்திற்குக் கொண்டு செல்ல -ப்படுகிறார். அங்கும் விசாரனை நடக்கிறது (மத் 27:1; மாற் 15:1; லூக் 22:66-71)

அதன்பின்பு சட்ட முறையிலான விசாரணைக்காக பிலாத்துவின் முன்பு கொண்டு செல்லப்படுகிறார். ஆலோசனைச் சங்கத்தில் மரண தண்டனையை தீர்ப்பளித்தாலும் ரோம அரசாங்க ஆளுநரான பிலாத்துவின் அனுமதியிருந்தால் தான் நிறைவேற்றமுடியுமென்பதால் அவரிடம் கொண்டு செல்கின்றனர். அரசதுரோக குற்றமும், சமூக சமாதானத்தைக் குலைத்தார் என்ற குற்றமும் சாட்டப்பட்டன. அவர் முன் கிறிஸ்து தமது இராஜ்யத்தின் இருப்பிடத்தை விளக்கினார். ரோம சட்டப்படி இயேசு குற்றவாளியல்ல என்று தீர்ப்பிட்டார் பிலாத்து (மத் 27:2, 11-14; மாற் 15:1-5; லூக் 23:1-5; யோவா 18:28-38).

அதன் பின்பு தேவையின்றி அவர் ஏரோதின் முன்பு அனுப்பப்பட்டார். இந்த ஏரோதுதான் தமது சகோதரனின் மனைவியான ஏரோதியாளை மனைவியாக்கியபோது யோவானால் குற்றஞ்சாட்டப்பட்டவரும் யோவானின் தலையைப் பரிசாக்கியவரும் ஆவார்.

பிலாத்து இயேசுவை கலிலேயன் என்று கூறப்பட்டதால் ஏரோதிடம் அனுப்பி, தம்மை அந்த பழியிலிருந்து விலக்க நினைத்திருக்கலாம் (லூக் 23:7-12). மேலும் அந்த செய்கையால் முன்பு தாம் செய்த ஒரு குற்றத்துக்கு ஏரோது தம்மிடம் கொண்டிருந்த பகையை நீக்கிக் கொண்டார்.




மீண்டும் பிலாத்துவின் முன்பு விசாரணை, சூழ்நிலைக்கு முன் குற்றமற்றவரை குற்றவாளியாக்கினார் பிலாத்து. தற்பாதுகாப்பை எண்ணிப்பயந்து நீதிமானை சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பளித்தார். (மத் 27:15-26; மாற் 15:6-15: லூக் 23:13-25; யோவா 18:39-19:6)

நியாயமற்ற விசாரணைகள்:

கிறிஸ்துவின் குற்ற விசராணைகள் பலநிலையிலும் நியாயமற்றவையாக இருந்தன.

1. குற்றம் செய்தவரைப் பிடித்து விசாரிப்பதே நியாயம். ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டு குற்றம் தேடுவது அநியாயம் (யோவா 11:50; மாற் 14:1; 14:55)

2. பொய்சாட்சிகளை ஏற்படுத்தினர் (மத் 26:61)

3. குற்றவாளியின் சொற்கள் கவனிக்கப்படவில்லை (லூக் 22:67-71)

4. ஆலோசனைச் சங்கம் இரவில் கூடியதே அவர்களது சட்டப்படிதவறு (மத் 26:63-66)

5. பிரதான ஆசாரியனை ஆணையிட வைத்து, அந்த ஆணையைக் கொண்டு தீர்பிட்டது அநியாயம் (மத் 26:63-66)

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 

Umn ministry 




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*