வேதகமத்தில் ஏற்பாடு என்றால் என்ன

0



வேதகமத்தில் ஏற்பாடு என்றால் என்ன ?







ஏற்பாடு என்றால் என்ன‌?
அன்பானவர்களே சென்ற கட்டுரையில் பைபிள் யாரால்
எழுதப்பட்டது என அறிந்தோம், மேலும் பைபிள் என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும்.

இது இரண்டு பெரும் பகுதிகளாகப்பிரிக்கப்பட்டிருக்கிறது, அவை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகும். ஏற்பாடு என்ற‌ சொல்லுக்கு "உட‌ன்படிக்கை" என்று பொருள். உடன்படிக்கையா? யார் யாருடன் செய்துகொண்ட உடன்படிக்கை என நீங்கள் கேட்பது புரிகிறது. சரி இது பற்றி விரிவாகப் பார்ப்போமா?


பழைய உடன்படிக்கை (பழைய ஏற்பாடு)
பைபிளில் உள்ள பழைய உடன்படிக்கை கடவுளிடத்தில் விசுவாசம் வைத்திருந்த
பெரிய மனிதரான ஆபிரகாமோடும் அவருடைய சந்ததியினரோடும் செய்து கொண்டதாகும், வரலாற்றில் சுமார் 4000ம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உடன்பாடு ஏற்பட்டது, பழம் பெரும் நாகரீகமான மெசபலோமியாவில் வசித்து வந்தவர் ஆபிரகாம், அவர் பக்திமான், அவரின் பக்தியைக் கண்ட கடவுள் அவருடன் உடன்படிக்கை செய்து கொண்டார், இதுவே பழைய ஏற்பாடாகும்.

விருத்தசேதனம் (சுன்னத்)தோன்றிய வரலாறு
கடவுளுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் விவரமாவது: மெசபடோமியாவிலிருந்து ஆபிரகாம் கானான் என அழைக்கப்பட்ட பாலஸ்தீனா நாட்டிற்கு இடம் பெயரவேண்டும், (மெசபடோமியாவின் மொழி பழமையான எபிரேயு ஆகும். இந்த மொழியைப் பாலஸ்தீனா நாட்டில் ஆபிரகாமும் அவரது குடுப‌மும் பேசியதால் அவர்கள் எபிரேயர்கள் என அழைக்கப்ப்பட்டனர்,) மேலும் பாலஸ்தீனாவை கடவுள் ஆபிரகாமுக்கும் அவரது சந்ததிக்கும் கொடுப்பேன் என வாக்குப் பண்ணினார், மேலும் ஆபிரகாமை மிகப்பெரிய ஜாதிகளுக்குத் தகப்பனாக மாற்றுவேன், என்று வாக்குக் கொடுத்தார், மிக மிக முக்கியமாக இந்த உலகத்தில் பிசாசினாலும் வானவெளிகளில் உள்ள பொல்லாத ஆவிகளாலும் ஏற்பட்ட பாவங்களால் மக்கள் துன்பப்படுவதை மாற்ற ஒரு மீட்பரையும் ஆபிரகாமின் சந்ததியிலே தருவதாகவும் வாக்குறுதி அளித்தார், இந்த உடன்படிக்கையின் அடையாளமாக ஆபிரகாம் விருத்த சேதனம்பன்னிக்கொண்டார், இது முதற்கொண்டு ஆபிரகாமின் வம்சத்தினர் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு விருத்த சேதனம் பண்ணினார்கள். மோசேயின் காலத்தில் ஆபிரகாமின் சந்ததியினர்கள் நடக்கவேண்டிய சட்டங்களை தேவன் கொடுத்தார். இதில் மிகவும்முக்கியமானது "பத்துக் கற்பனைகள்" ஆகும், இந்த சட்டங்களில் கடவுளின் எதிர்பார்ப்பு இருத்தது, சில சமயம் ஆபிரகாமின் வம்சத்தினர் மீறியபோது அதற்கான தண்டனையைப்பெற்றுக்கொண்டனர்.

ஆபிரகாமின்வம்சம்
வெகு நாள் பிள்ளையில்லாமல் இருந்த ஆபிரகாமின் மனைவி தன் அடிமைப் பெண்னை ஆபிரகாமுக்கு மணமுடித்தார், அவள் எகிப்தை சேர்ந்தவள், அவளுக்கு இஸ்மவேல் என்ற மகன் பிறந்தான், அவன் முரடனாய் இருந்தான், அதன் பின் ஆபிரகாமின் நூராவது(100) வயதில் அவன் மனைவி கருவுற்று ஈசாக்கைப் பெற்றாள், ஈசாக்கு ஏசா, யாக்கோபை(இஸ்ரவேல்) பெற்றான், இவர்கள் இருவரையும் கடவுள் இரண்டு மிகப்பெரிய ஜாதிகளாக்குவதாக வாக்குக் கொடுத்தார்.

இஸ்ரவேல் வம்சம்:
இஸ்ர‌வேலுக்கு ரூப‌ன், சிமியோன், லேவி, யூதா, தான், ந‌ப்த‌லி, காத், ஆசேர்,
இச‌க்கார், செபுலோன், யோசேப்பு, பெண்யமீன், ஆகியோர் இருந்தனர், இதில் யூதா தவிர மற்ற அனைவரும் கடவுளின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் போனதால் அவர்கள் வாக்கு மாறா தேவனிடத்தில் தங்கள் ஆசீர்வாதங்களை இழந்து போனார்கள், ஆனாலும் தங்களுக்கு கடவுள் வாக்குக் கொடுத்த மேசியாவை(மீட்பர். கிறிஸ்து) அவர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்.

உடன்படிக்கை நிறைவேறுதல்
கடவுள் சொன்ன படி ஆபிரகாமின் வம்சத்தை மிகப்பெரிய ஜாதியாக்கினார்,
மேலும் கானான் (பாலஸ்தீனா)தேச‌த்தையும் கொடுத்தார், மேலும் தன்னுடைய சட்டங்களை ஒழுங்காகக் கடைபிடித்த யூத வம்சத்தில் இந்த உலகின் பாவங்களுக்காக தன்னையே பலியாகக் கொடுத்து பாடுபட்டு மரித்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் கொடுத்தார், இதுவே பழையஏற்பாடு(உடன்பாடு) ஆகும்.

புதிய ஏற்பாடு(உடன்படிக்கை) யாருடன் செய்யப்பட்டது? இந்த பைபிளில் சில புத்தகங்கள் நீக்கப்பட்டதாமே? அவைகள் எவைகள்? ஏன்அவைகள் நீக்கப்பட்டன? மற்ற உலக மொழிகளில் வேதம் மொழிபயர்க்கப் பட்டது எப்படி?அடுத்த கட்டுரைகளில் காண்போமா




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*