கேரளாவில் என்ன செய்தார் தோமா

0



கேரளாவில் என்ன செய்தார் தோமா 


இயேசுவின் சீடர்களாகிய பன்னிருவரில் ஒருவராகிய புனித தோமா, கி.பி.38 ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். அவர் கப்பலில் பயணம் மேற்கொண்டு கேரளாவின் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். அவ்விடங்களில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தார். 

கேரளாவின் அரசர் கொண்டாபாரஸ் அவருக்கு மிகவும் அதிகமாக உதவிகள் செய்தார். எனவே புனித தோமா அவர்கள் ஏழு கிறிஸ்தவ ஆலயங்களை கேரளாவில் உருவாக்கினார். அவை கொடுங்கலூர், பாளையூர், கோட்டக்காவு, கொக்கமங்கலம், நிராணம், கொய்லான், நிலைக்கால் என்பவை ஆகும்.
அதன் பிறகு புனித தோமா அவர்கள் சென்னை பட்டணத்திற்கு வந்து, மயிலாப்பூரில் தங்கி நற்செய்தியை அறிவித்தார். 

அவருடைய பிரசங்கங்களால் அனேகர் இழுக்கப்பட்டனர். ஆனார் சிலர் அவருக்கு விரோதிகளாகி, அவரை கொல்ல திட்டமிட்டனர். ஆகையால் புனித தோமா அவர்கள் அவ்விடத்தை விட்டு, சின்ன மலைக்கு சென்றார். அவருடைய பிரசங்களால் தொடப்பட்டு, அவரை பின்பற்றின அனைவரும் சேர்ந்து, மயிலாப்பூரில் அழகிய ஆலயம் ஒன்றை கட்டினர்.

 அவ்வாலயம் சாந்தோம் கத்திட்டரல் என்று இப்போது அழைக்கப்படுகிறது.
புனித தோமா கிபி. 52 லிருந்து 56 வ‌ரை சின்ன‌ ம‌லையில் வாழ்ந்தார். மீண்டும் இம்ம‌லையில் அவருடைய‌‌ உயிருக்கு ஆப‌த்து இருந்த்த‌து. ஆக‌வே அவ‌ர் ஒரு குகையில் வாழ்ந்தார். தானே ஒரு க‌ல்லில் சிலுவை ஒன்றை செய்து வைத்து வ‌ழிப‌ட்டு வ‌ந்தார்.அவ்விட‌த்தில் அற்புத‌மாக‌ ஒரு பாறையிலிருந்து அவ‌ருக்கு த‌ண்ணீர் கிடைத்த‌து. இப்போதும் இது புனித‌ நீருற்றாக‌ அழைக்க‌ப்ப‌டுகிற‌து.


ஒரு முறை அவ‌ருடைய‌ விரோதிக‌ள் அவ‌ரை சூழ்ந்து கொண்ட‌பொழுது அற்புத‌மாக‌ பாறை ஒன்று உடைந்த‌து. அவ‌ர் த‌ப்பி செல்வ‌த‌ற்கு வ‌ழி கிடைத்த‌து. பின்பு அவ‌ர் அந்நாட்க‌ளில் பெரிய‌ ம‌லை என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌ சின்ன‌ ம‌லைக்கு வ‌ந்து சேர்ந்தார். இம்ம‌லை உச்சியை சென்று அடைய‌ 134 ப‌டிக‌ள் இருக்கின்ற‌ன‌.

 இம்ம‌லை க‌ட‌லிலிருந்து 300 அடிக‌ளுக்கு மேல் இருக்கிற‌து. மேலும் சாந்தோம் ஆல‌ய‌த்திலிருந்து 9 கி.மீட்ட‌ர் த‌ள்ளியும் விமான‌ நிலைய‌ம் அருகாமையிலும் இருக்கிற‌து. அவ‌ர் ஜெப‌ம் ப‌ண்ணிக்கொண்டு இருக்கும்பொழுது ஒரு நாள் அவ‌ருடைய‌ எதிரிக‌ள் அவ‌ரை கல்லெறிந்தும் அவ‌ருட‌ய‌ முதுகில் ஒரு க‌ல் க‌த்தியால் குத்தியும், அவ‌ரை கொலை செய்தார்க‌ள். ம‌காதேவ‌ன் என்ற‌ அர‌ச‌ர் இந்த‌ செய்தியை கோள்விப்ப‌ட்டு, அவ்விட‌த்திற்கு வ‌ந்து, ஒரு ராஜ‌ரீக‌மான் பெரிய‌ ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்வ‌த்ற்கு ஏற்பாடு செய்தார். விழாய‌ன் என்ற‌ இள‌வ‌ர‌ச‌ரும் அவ‌ருட‌ன் வ‌ந்தார். புனித‌ தோமாவுடைய‌ உட‌ல் பொன்ம‌ய‌மான‌ ஆடைக‌ளால் மூட‌ப்ப‌ட்டு, சான்தோம் ஆல‌ய‌த்தின் அருகே ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து. 

இந்நாட்க‌ளில் ஒவ்வொரு நாளும் நூற்றுக‌ண‌க்கான‌ ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து, த‌ரிசிக்கும் இட‌மாய் உள்ள‌து. ஒரு சிறிய‌ அவ‌ருடைய‌ எலும்பு துண்டு கூட‌ அவ‌ருடைய‌ நினைவாக‌ பாதுகாத்து வைக்க‌ப்ப‌ட்டு இருக்கிற‌து.
இயேசு கிறிஸ்துவின் 12 சீட‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌ இருந்து, இந்தியாவுக்கு வ‌ருகை த‌ந்து, ந‌ம்மோடு வாழ்ந்து, இயேசுவின் ந‌ற்செய்தியை ப‌ர‌ப்பி, கிறிஸ்துவின் வீர‌ராக‌ இற‌ந்தார். புனித‌ தோமா என்றால் மிகையாகாது…



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*