தோமாவை இந்தியாவுக்கு அனுப்பியது யார்?
சீடர்கள் அனைவரும் கூடி புனித தோமாவை, இந்தியாவுக்கு அனுப்ப ஏகமனதாக தீர்மானம் கொடுத்த பிறகு 10 சீடர்களும் தங்களுக்குள்ளாக சில ஆலோசனைகளை ஏற்படுத்தி கொண்டு அவர்களுக்குள் ஒரு குழுத் தலைவராக புனித ஏரோன் என்பவரை வரவழைத்து புனித தோமாவை கொண்டு இந்திய தேசம் முழுவதும் இரட்சிப்புக்குள் வர வேண்டும் என்று சொல்லி சுமார் 20 ஜெபகுழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
புனித தோமா குறைவாக வைத்திருந்த அவருடைய உள்ளூர் பணியை செய்து கொண்டிருக்கும் போது இந்த ஜெப குழுக்களில் தலைவராயிருந்த புனிதாய் கயவர்களால் கல்லெரிந்து கொல்லப்பட்டார். இச்சமயத்தில் புனித தோமா இந்த செய்தியை கேட்டு மிக அதிர்ச்சியடைந்தார்.
கிபி.37ம் ஆண்டு ஒரு ஜெபக்குழுவை சந்திக்க புனித தோமா புறப்பட்டு கொண்டிருந்த போது அவர் அதில் கலந்து கொள்ள கூடாதபடிக்கு தூர்ஸ் நகர் கூட்டாளிகள் தடுத்து நிறுத்தினர். அன்றைக்கு அந்த ஜெபக்குழுவில் இந்தியாவில் தாம் மேற்கொள்ளும் ஊழியத்தை பற்றி பகிர்ந்து கொள்ள திட்டம் வைத்திருந்தார். ஆனால் இறுதியில் அந்த ஜெபகுழுவை புனித பேதுரு நடத்தினார். புனித தோமா இந்தியாவுக்கு பிரயாணப்படாததுக்கு முன் சுமார் 70 நாட்களுக்கு முன்னதாக சீடர்களின் மனதில் ஒரு விரக்தி காணப்பட்டது.
சத்துருவானவன் அவர்களுக்குள் இடைப்பட்டு புனித தோமா இந்தியாவுக்கு செல்வதை ரத்து செய்ய வேண்டும் என்று ஆலோசனை பிறப்பித்தான். ஏகமனதாக பத்து சீடர்களும் ஓரே யோசனையில் இருக்க வேண்டிய சூழ் நிலை காணப்பட்டது.10 சீடர்களும் தாங்கள் தீர்மானித்த தவறான யோசனையை புனித தோமாவினிடத்தில் சொல்ல முடியாமல், அவரை கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நாள் திகைத்தனர். இருப்பினிம் தோமாவுக்கு இந்த யோசனை எட்டப்படவில்லை.
அவருடைய ஜெபக்குழு நாளுக்கு நாள் ஸ்திரப்பட்ட உடன் சுமார் 11 நாட்களுக்குள் தேவனுடைய திட்டத்தையும் திட்டவட்டமாக உணர்ந்தனர். இதற்கு பிறகுதான் சீடர்கள் கூடி புனித தோமா இந்தியாவுக்கு உடனடியாக புறப்பட வேண்டும் என்று ஊரெங்கும் அறிவிப்பு கொடுத்தனர்.