சங்கீதம் 1விளக்கவுரை

0

Watch video on YouTube here: https://youtu.be/yAjsQp1cPVo




சங்கீதம் 1 தியானம்

 [11/10 9:52 am] Elango:
🎼🎸
*இன்றைய (11/10/2017)  வேத தியானம் –  சங்கீதம் 1*
🎼🎸1⃣
*சங்கீதம் 1 யாரால், எந்த சூழ்நிலையில் எதற்க்காக எழுதப்பட்டது
❓
*

2⃣
சங்கீதம் 1 லிருந்து நீங்கள் கற்றது என்ன
❓3⃣
*துன்மார்க்கருடைய ஆலோசனை, பாவிகளுடைய வழி, பரியாசக்காரர் உட்காரும் இடம்* என்பது என்ன
❓4⃣
பாக்கியவானாக மாறுவது எப்படி
❓
பாக்கியவான் எப்படிபட்டவனாகயிருப்பான்
❓5⃣
வேதத்தை தியானிக்கிற மனுஷனை, நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்திற்க்கு ஏன் ஒப்பிடப்பட்டுள்ளது
❓6⃣
சங்கீதம் 1:2 ல் சொல்லப்பட்ட *இரவும், பகலும்* என்பதன் உண்மையான அர்த்தம் என்ன
❓7⃣
நாம் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் ஆலோசனைகளை கேட்கத்தான் செய்ய வேண்டும்…. ஒரு வேளை அவர்கள் துன்மார்க்கராய் இருந்தால் என்ன செய்ய
❓8⃣
நம்மோடு கூட வேலை செய்யும் சக வேலைக்காரர்கள் பாவிகளாகவும் பரியாசக்காரர்களாகவும் இருக்கும் போது நாம் எப்படி ஒதுங்கி இருப்பது
❓

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[11/10 10:04 am] Elango: 1 நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 1:1
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 1:2
3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 1:3
4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 1:4
5 பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்; பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 1:5
6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 1:6

*சங்கீதம் 1 வேறொரு மொழிப்பெயப்பு எளிதாக புரியும்படி பகிரப்படுகிறது*

🙏☝

[11/10 10:16 am] Elango: *சங்கீதம் 1 விளக்கவுரை*

🎼🎸📌📖

வச. 1-6 அறிமுகம்:-

1.  *முதலாம் சங்கீதத்தை சங்கீத நூலின் முகவுரையாக கொள்ளலாம்.*

2. ஆசீர்வாதங்களை பெறும் வழியை போதித்து பாவிகளின் இறுதி அழிவையும் கூறி எச்சரிப்பதே இச்சங்கீதத்தின் நோக்கம் ஆகும்.

📌👈✨

3. *சங்கீத நூலின் முழுமையின் கருப்பொருளாக இச்சங்கீதம் அமைகிறது.*

💯👍✅

4. இச்சங்கீதத்தில் இருவகை மனிதர்களை படம் பிடித்து காடுகிறது.

5. சாதி, இனம், மதம், மொழி, பால், நிறம் போன்றவற்றை கொண்டு மனிதனை நியாயம் தீர்க்காமல் அவனது மனபாங்கின்படியும் செயல்களின்படியும் கர்த்தர் நியாயம்தீர்க்கிறார்.

*தலைப்பு:-*

“இரு மனிதர்கள்”,
“இரு வழிகள்”,
“இரு முடிவுகள்”.

*உட்பிரிவுகள்:-*

வச.1-3 நீதிமானின் வழியும் ஆசீர்வாதமும்

வச.4-5 துன்மார்கரின் வழியும் நிலையும்

வச.6 இருவரின் முடிவுகள்.

*வசன விளக்கம்:-*

1.துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

அ). *எவைகளை செய்ய கூடாது?* இவைகளுக்கு எதிரானவற்றை கண்டுபிடிப்பதன் மூலம் எவைகளை செய்ய வேண்டும் என்பதை கண்டுகொள்ளலாம்.

*எதில் நடக்க வேண்டும்?*

கர்த்தருடைய ஆலோசனையில் நடக்க வேண்டும். இந்த ஆலோசனையை வேத தியானம், ஜெபம், தேவ செய்திகளை கவனமாய் கேட்டல், ஆவிக்குரிய மூபர்களிடம் கேட்டு அறிதல் போன்ற வழிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

*எங்கு நிற்க்க வேண்டும்?*

கர்த்தருடைய மக்கள் நீதிக்காக உண்மைக்காக நற்ச்செய்தி பணிக்காக நிற்க்கும்பொழுது சேர்ந்து நிற்க்க வேண்டும்.

*எங்கு உட்க்கார வேண்டும்?*

துதிக்கிறவர்களோடு
உட்க்கார வேண்டும்.

ஆ). திருடுகிற அநேகர் கொலை செய்வதில்லை. கொலை செய்கிற சிலர் திருடுவதில்லை. ஆக, எல்லா பாவமும் செய்கிறவன் தான் பாவியல்ல ஒரு பாவத்தில் நிலைத்திருப்பவனும் பாவிதான் என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

2.கர்த்தருடையவேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

*தியானம் என்றால் என்ன?*

“வாசித்து, மீண்டும் மீண்டும் வாசிப்பதோடு சொல்லி பார்த்து, பல கோணங்களில் சிந்தித்து, கேள்விகள் கேட்பதின் மூலம் ஆராய்ந்து அறிவது தியானம் ஆகும்.”

*நீர் இவ்விதம் தியானிக்கிறீரா? தியானிக்காவிடில் எவ்வாறு அதன்படி நடக்க முடியும்?*

*வசனம் 3-4*

நீதிமான்:-

*நீர்கால்கள் ஓரம் நடப்பட்ட மரம்:*

எல்லா நலமும் பெற்று, நிலைத்திருத்தல்.

*இலையுதிராதிருத்தல்:*

தாழ்ச்சி அடையாமல் இருந்து (23:1), மனிதருக்கு மகிழ்சியும், சமாதானமும் தருதல்.

*கனிதந்து:*

மற்றவருக்கு நற்செயல் செய்து பயனுள்ளவராக வாழ்தல்.

*துன்மார்கன்:-*

காற்று பறக்கடிக்கும் பதர்:

ஈரமில்லாமல் (நண்மைகளை அனுபவியாமல்), நிலைத்து நிற்க்காமல், மற்றவருக்கு எவ்வித பயனுமில்லாமல் வாழ்வான்.

3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

*நீதிமான்களின் ஆசீர்வாதங்கள்:*

அவன் நீர்கால்களின் (ஆசீர்வாதங்களின்) ஓரமாய் நடப்படுவான்.

கனிக்கொடுப்பான் (மற்றவர்க்கு பயனுள்ளவனாய் இருப்பான்.

நிழல் தருவான் செழிப்பாய் இருப்பான்.

அவன் தானாக வாழ்ந்த காட்டுமரம் போலிராமல் நடப்பட்ட மரத்தை போன்றவன். அதாவது ஒரு மரத்தை நடுகிறவர்கள் இடம் பார்த்து நட்டு அதை கண்ணும் கருத்துமாய் வளர்பதை போன்று கர்த்தர் அவனை பராமரிப்பார்.

ஒரு ஆசீர்வாதமல்ல பல ஆசீர்வாதங்கள் (நீர்கால்கள்) இருக்கும் இடத்தில் வைக்கபடுவான்.

அவன் செய்வதெல்லாம் வாய்கும் என்பதே மாபெரும் ஆசீர்வாதம். அதாவது குடும்பத்திலும், சமுதாயத்திலும், தொழிலிலும், ஊழியத்திலும் செய்வதெல்லாம் வாய்கும்.

4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

நெல் போன்ற தானியங்களின் அறுவடையில் தானியங்களுடன் அரிசி இல்லாமல் வெறும் உமி மட்டும் இருக்கும் அதுவே பதர் ஆகும். இது எதற்குமே பயனற்றது அது போலவே துன்மார்கர் எதற்கும் பயன்படமாட்டார்கள்.

5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

இன்றைய அனைத்து சபைகளிலும் தேவ பிள்ளைகளுடன் பதர் போன்றவர்கள் உள்ளனர். காலம் வரும்போது அவைகள் பிரிக்கபடும் (மத் 3:12).

6.கர்த்தர்நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

தன்மார்கர் மட்டுமின்றி
அவர்களின் வழியும் அழிக்கப்படும். அல்லேலூயா.

 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் *அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன்* பாக்கியவான்.

  அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
சங்கீதம் 1:2‭-‬3

[11/10 12:26 pm] Benjamin Prasad 2 VDM: வேதத்தை தியானிப்பது நமக்கு *நன்மை* அளிக்க கூடியதாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

*ஒவ்வொருவரும் வேதத்தை தியானிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.*

 *வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்*; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

யோவான் 5:39

(அப்போஸ்தலர் 17 : 11 – அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, *காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்*, தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.)

[11/10 1:25 pm] Jeyakumar Toothukudi VTT: Praise the Lord
பரியாசக்கார்ர் உட்காரும இடத்தில்   உட்கார்ந்தால் அதன் பின்விளைவுகள்  எப்படியிருக்கும்?
உட்காரும் இடத்தின் அடையாளம்?
பரியாசக்கார்ரின் முடிவு  எப்படியிருக்கும்?
            _இவைகளை  வேத ஆதாரங்களோடும் இக்கால நடைமுறைகளின்படி  சுட்டிக்காட்டும் கதையோடும்  புரிய  வைகக முடியுமா?
அப்ப தான்  பரியாசக்கார்ரின் பயங்கரம்  நமக்கு தோல் உரித்து காட்டப்படும்.
      BRO. R.jeyakumar

[11/10 2:07 pm] Elango: *பரியாசக்காரன்*

“பரியாசம் செய்தல்” என்ற வார்த்தை “கேலி கிண்டல்செய்தல்” என்ற வார்த்தைக்கு ஒத்ததாய் வேதத்தில் அனேக இடங்களில் வருவதை காண முடிகிறது. தற்காலங்களில் நடைபெறும் ஈவ் டீசிங் போன்ற கொடும் செய்கைகளும் அதனால் அடிக்கடி சிலர் தற்கொலை செய்துகொள்வதாக நாம் கேள்விப்படுவதும் அதனுடன் சேர்ந்த ஒன்றே.

வேத புத்தகத்தை ஆராய்ந்தால் முதல் முதலில் பரியாசம் பண்ணியவன்
இஸ்மாவேல்தான் என்பதை அறிய முடியும்.

ஆதியாகமம் 21:9 பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு
இந்த இஸ்மவேல் யாரை பணியாசம் பண்ணினான்  என்றுபார்த்தால் வாக்குத்தத்தம்
பண்ணப்பட்ட  சந்ததியை! அதாவது  இந்த அழிவுக்கு நேரான  மாமிசசந்ததி தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியை பரியாசம் பண்ணியிருபதை அறிய முடியும். 

ஆதியில் இருந்து இன்றுவரை இந்த உலகில் அதுதான் நடந்து வருகிறது அதாவது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட்வர்களை பிசாசின் கூட்டங்கள் பரியாசம் பண்ணுவதும் கேலி கிண்டல் செய்வது இந்த உலகில் வாடிக்கையான ஓன்று.

தாழ்மையான உள்ளம் கொண்ட  எந்த ஒரு மனிதனும் தன்னைபோன்ற சக மனிதனை எவ்விதத்திலும் பரியாசம் பண்ண துணிய  மாட்டான். ஒருவேளை அவன் ஒரு கள்ள மனிதனாக இருந்தாலும் கூட அவனை பரியாசம் செய்வது என்பது ஒரு ஒரு சரியான செயலே அல்ல!

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மனுஷர்கள் கையில் சிலுவை மரணத்துக்கு ஒப்பு கொடுக்கப்பட்டபோது அந்த பிசாசின் ஆவிபிடித்த மனிதர்கள் செய்த முக்கிய வேலை அவரை பரியாசம் பண்ணி குட்டி துப்பியதுதான் 

மத்தேயு 27:41 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:

மத்தேயு 27:29 முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,

இவ்வாறு ஆரம்பித்த யூதர்கள் அவரின் கடைசி மூச்சுவரை அவரை பரியாசம் பண்ணிக்கொண்டே இருந்ததை அறியமுடிகிறது.

லூக்கா 23:37 நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப்பரியாசம்பண்னினார்கள்

இவ்வாறு பரியாசம் கேலி கிண்டல்  பண்ணி பிசாசானது தனது இச்சையையும் தேவன்மேலுள்ள கோபத்தையும் தீர்த்துகொண்டது என்றே சொல்லலாம்.

நீதிமொழிகள் 19:29 பரியாசக்காரருக்குத் தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.

என்று வேதம் எச்சரிப்பதோடு  இதுபோன்ற  பரியாசக்காரன் உட்காரும் இடங்களில் உட்காரக்கூட கூடாது என்று நமக்கு போதிப்பதால்  இந்த “பரியாசம் செய்தல்” என்ற மிக மோசமான பிரறரை  மனமடிவாக்கும் குணம் மனிதனுக்கு எதன் அடிப்படையில் வருகிறது என்பதை நாம் ஆராய்வது அவசியமாகியது  அதன் மூலம்  அது பிசாசின் அடிப்படை குணம் என்ப்னத்தை கண்கூடாக அறிந்துகொள்ள முடியும்

[11/10 2:12 pm] Elango: நம்மூரில் தெருசந்தியில், திண்டில், மடையில்,  டைம்பாஸுக்காக உட்காருவார்களே அவர்களோடு சேர்ந்து நாமும் உட்கார்ந்து போறவர்ற ஆட்களை நோட்டமிட்டு கிண்டலடித்துக்கொண்டு உட்கார கூடாது. அவர்கள்  பரியாசக்கார்கள்.

நாம் வேதத்தை இரவும் பகலும் தியானித்து அதன்படி வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம்

[11/10 2:13 pm] Benjamin Prasad 2 VDM: Correct bro.

☑

[11/10 2:26 pm] Elango: நான்கு நண்பர்கள் சேர்ந்து விட்டாலே அங்கு ஐந்தாவது நபரை குறித்தோ அல்லது அங்கிருப்பவரை குறித்து பரியாசம், கிண்டல், கேலி செய்வது வழக்கமாகிவிட்டது. நீங்களே உங்கள் நட்பு வட்டாரத்தில் பார்க்கலாம்.

இப்படி பிறரை பற்றி கூட்டாமாக இருந்து மற்றவரை  பரியாசம் செய்யும் பழக்கம் சபையிலும் இருந்து வந்தது. அதில் ஒருவர் என்ன தெரியுமா… பரியாசம் எல்லாம் பேசி முடித்ததும் அமைதியாக இருந்த இன்னொரு சொன்னார்… நாம் இப்போது யாரை பரியாசம் செய்தோமோ அவருக்காக ஜெபிக்க வேண்டும் மற்றும் நம் பாவத்தை ஆண்டவரிடம் அறிக்கையிட வேண்டும் என்று சொன்னதும் அல்லோருடைய முகமும் சுருங்கி விட்டது… இப்போது அந்த கூட்டத்தினர் பரியாசம் செய்வதை விட முடிவதில்லையென்றாலும் அவர் முன்பாக செய்வதில்லை…

நீதிமொழிகள் 14:21
[21] *பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்;* தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

[11/10 2:31 pm] Elango: *உத்தமனாக நடக்க முடியாத ஒருவன் அவ்வாறு நல்லவனாகவும் உத்தமனாகவும் நடப்பவனை பார்த்து “ஏமாளி” “இளிச்சவாயன்” “வாழ தெரியாதவன்” “பிழைக்க தெரியாதவன்” அவன் இவன் என்று என்னென்னே அடை மொழியிலோ அவனை பரியாசம் பண்ணி, தங்கள் இயலாமையை மறைத்து தாங்கள் நிலைக்கு நியாயம்கற்ப்பித்து தங்களுக்குள் ஒரு திருப்தியடைந்து கொள்வது ஒரு இயல்பு.*

😜😜🤠🤠🤡🤡😎😎🤗🤗🤗😛😛😝😝😜😜

இதே சம்பவம் ஆண்டவராகிய இயேசுவின் விஷயத்திலும் நடந்தது.

உண்மை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றும் பணத்தின் மீதும் உலக பொருட்களின் மீதும் பற்றிருக்க கூடாது என்பதை நமது ஆண்டவர் திட்டமாக போதித்தார்:

லூக்கா 16: 10. கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
11. அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்
13. எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது,…… தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

இதை கேட்ட உலக போருட்களுகாகவே ஆண்டவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்திகொண்டிருந்த பரிசேயருக்கு பற்றிக்கொண்டு வந்தது எனவே அவரை பரியாசம் பண்ணினார்கள் என்று வேதம் சொல்கிறது

லூக்கா 16:14  *இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.*

ஒருவர் பேசுவதிலும் எழுதுவதிலும் என்னஉண்மை இருக்கிறது என்பதை மட்டுமே ஆராய்து பாருங்கள். உங்கள் மனசாட்சிக்கு தவறுபோல் நிச்சயமாக தெரியும் பட்ச்சத்தில் உங்களுக்கு தெரிந்த உண்மையை சரியான முறையில் எடுத்து சொல்லலாம்! கேட்கவில்லை என்றால் விட்டு விடுங்கள். உங்கள் நிலைக்கு மேலான கருத்துகளாகவோ அல்லது உங்களால் செய்யமுடியாத போதனைகளாகவோ இருந்து அதை கேட்க விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் தவறில்லை.

*ஆனால் யாரையும் பரியாசம் செய்வது எவ்விதத்திலும் தகாது!*

எபேசியர் 5:4,10
[4] *அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும்

😜😜😝😝😛😛🤡🤡🤡🤠🤠🤠

தகாதவைகள்;* ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
[10]கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.

[11/10 2:34 pm] Elango:

2⃣

சங்கீதம் 1 லிருந்து நீங்கள் கற்றது என்ன

❓

[11/10 2:40 pm] Benjamin Prasad 2 VDM: வேதத்தை தியானிக்க வேண்டும். வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்க்கனும்.

பரியாசக்காரர்களாக நாம் இருக்ககூடாது.

பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்கார கூடாது.

யாரையும் கேலி, கிண்டல், பரியாசம் செய்யக்கூடாது.

[11/10 2:42 pm] Benjamin Prasad 2 VDM: அப்படியே *வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும்* தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
எபேசியர் 5:4 TOV-BSI

[11/10 3:23 pm] Elango:

4⃣

பாக்கியவானாக மாறுவது எப்படி

❓

பாக்கியவான் எப்படிபட்டவனாகயிருப்பான்

❓

[11/10 4:27 pm] Elango: பாபிலோனின் சிறையிருப்பில் நல்ல ஒரு உத்தியோகத்தில் இருந்த நெகேமியா தேவனின்  நகரமாகிய எருசலேமின் அலங்கத்தை கட்டும்படிக்கு அனேக பிரயாசங்களை எடுத்து முயற்சிக்கிறான்.

அதில் எரிச்சலடைந்த புறஜாதிக்காரனாகிய *சன்பல்லாத்து, கேஷேம் தொபியா, அரபியரும், அம்மோனியர்* போன்றவர்கள் தேவனின் இந்த வேலையை எப்படியாது தடுத்துவிட வேண்டும் என்று முயற்ச்சிக்கின்றனர். அம்முயர்ச்சியில் ஒன்றுதான் நெகேமியாவின் பிரயாசங்களை பரியாசம் செய்தது!

😜😜😜

நெகே 2  19. ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி,

😜😜😝😝

எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.

அத்தோடு

நெகேமியா 4:3 அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: *அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும் என்றான்.*

😂😂🤣🤣😜😜😝😝

அதாவது ஒருவர் பிரயாசபட்டு ஆண்டவருக்காக செய்யும் செயலை”இதெல்லாம் ஒரு வேலையா? நீ செய்வதெல்லாம் ஒன்றுக்கும் உதவாது, அதில் அங்கே குறை இங்கே குறை இது தவறு அது தவறு என்பதுபோன்று வார்த்தைகளை உபயோகித்து நானும் செய்யமாட்டேன் உன்னையும் செய்ய விடமாட்டேன் என்பதுபோன்ற காரியங்களை செய்வதன் நோக்கம் தேவனின்திட்டம் நிறைவேற விடாமல் தடுப்பதே

கடைசியில் நமக்கு தெரியும் தேவ திட்டம் நிறைவேறியது. அலங்கத்தை நெகேமியா & சேர்ந்தவர்களும் கட்டிமுடித்தனர்

😎👍💪

நெகேமியா 4:23
[23] *நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றி காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம்; அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது.*

[11/10 4:43 pm] Elango:

6⃣

சங்கீதம் 1:2 ல் சொல்லப்பட்ட *இரவும், பகலும்* என்பதன் உண்மையான அர்த்தம் என்ன

❓

யோசுவா 1:8
[8]இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் *நீ செய்யக் கவனமாயிருக்கும்படி,*

😇😇

இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக;

📌📌📌

*அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்,* அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.

தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்த மிகவும் அருமையான விஷயங்களில் முக்கியமான ஒன்று…

நீ இதை கைக்கொண்டிருந்தால், நீ விரும்பியது தானாகவே நடக்கும்.

எதை கைக்கொண்டிருந்தால்?

🤔🤔

தேவ வார்த்தையை தியானித்து, அதன்படி நடந்தால் நீ செய்வதெல்லாம்

📌📌📌📌

*வாய்க்கும்*

📌📌📌📌

உபாகமம் 29:9
[9]இப்பொழுதும்

👉👉👉

*நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு,

👈👈

இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.*

சங்கீதம் 1:3
[3]அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்.   

👉👉

*அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.*

👈👈

இதற்கு ஒத்தவசனம்

👇🏻👇🏻👇🏻

மத்தேயு 6:33
[33]முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,

👉👉👇🏻👇🏻👇🏻

*அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.*

👈👈

நீதிமொழிகள் 10:24
[24]துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; *நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.*

இதுபோல ஆசீர்வாதம் எல்லோருக்கும் வேண்டும்தானே? அப்படியென்றால் நாம் முதலாவது என்ன செய்ய வேண்டும்?

😀

[11/10 4:46 pm] Elango: சங்கீதம் 145:19.
[19] *அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு,*

👂👂👂👂

அவர்களை இரட்சிக்கிறார்.

[11/10 5:00 pm] Elango: சிலர் சொல்லுவதுண்டு பழைய ஏற்பாட்டு கற்பனைகளை கைக்கொள்ள தேவையில்லை என்று, கிருபை மட்டும் நமக்கு விசுவாசிகளுக்கு போதுமென்று…

உண்மையான கிருபை தேவ வார்த்தைக்குள் கீழ்ப்படிய செய்யும். தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிய அவசியமில்லை என்பது வஞ்சகம்.

📌📌📌

[11/10 5:11 pm] Kishore VDM: இரவு என்பது நமது வாழ்க்கையின் கஷ்டமான,மிகவும் வேதனையான காலங்கள்,
பகல் என்பது நமது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நேரங்கள்..

கஷ்டம் வந்தவுடன் வேதத்தை மறப்பதும்
உயர்வான மகிழ்ச்சியான நேரங்களில் தேவனுடைய வார்த்தையை தியானியாமல் இருப்பது தவறு இரவும் பகலும் வேதத்தை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான்

[11/10 5:21 pm] Elango:

5⃣

வேதத்தை தியானிக்கிற மனுஷனை, நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்திற்க்கு ஏன் ஒப்பிடப்பட்டுள்ளது

❓

[11/10 5:35 pm] Jeyanti Pastor VDM: Yes.  வேதத்தை தியானிக்கிற மனுஷன்,  சாரம் உறிஞ்சிக் கொள்ள,  நீர்க்கால்களாகிய பரிசுத்த ஆவியானவரின்,  துணை,  வழி நடத்துதல்,  அவசியம்.

[11/10 5:36 pm] Jeyanti Pastor VDM: ஆகவே,  நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு,  தன் காலத்தில் தன் கனியற்ற தந்து,  இலை உதிராதிருக்கிற மரம் போல் இருப்பான்

[11/10 5:36 pm] Jeyanti Pastor VDM: கனியைத் தந்து

[11/10 5:49 pm] Kamal VTT: இந்த கருத்து உண்மையில் உங்கள் கூற்றா இல்லை எதன் அடிப்படையில் சொல்லுகிறீர்கள்?? தற்போதைய காலத்தில் மனிதன் இரவு நேரத்தில் தான் சந்தோஷமாக அதாவது பகலில் கடினப்பட்டு இரவில் மகிழ்ச்சியாக கண்யறுகிறான்! நீங்கள் சொல்வது எனக்கு ஒரு சரியான தெளிவை தரவில்லை!! எனக்கு ஒரு தெளிவை தர அன்புடன் கேட்கிறேன்!!

[11/10 6:05 pm] Kamal VTT: மன்னிக்கவும் இந்த ஆடியோவில் சொல்லபடுகிற வெளிச்சத்தின் பதம் வேறு அர்த்தம் உள்ளதாக தெரிகிறது (வெளிச்சத்தின் பிள்ளை -இங்கு ஆண்டவரை குறிக்கிறது)
இரவும் பகலும் (சங்கீதத்தில் இங்கு வேறே அர்த்தம் உள்ளதாக புலப்படுகிறது)
இரண்டுக்கும் வேற்றுமை அதிகம்!
மீண்டும் மன்னியுங்கள் இன்னும் தெளிவு தென்படவில்லை! அன்புடன் தெளிவு பெற செய்யுங்கள்!

[11/10 6:13 pm] Kamal VTT: அருமை

💥💥

சரியான விளக்கம் அருமை இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துகள்!

[11/10 6:19 pm] Benjamin Prasad 2 VDM: நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் எப்பொழுதும் செழிப்பாக இருக்கும். உலர்ந்து போகாது.
அதுபோல அதனிடம் எப்பொழுதும் கனி இருக்கும்.

என்னுடைய கணிப்பு

[11/10 6:50 pm] Elango: ஆமென்

👏👏👏


எரேமியா 17:7-8
[7] *கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன்*

👇🏻👇🏻👇🏻👇🏻

பாக்கியவான்.

[8]அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும்,

கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும்,

 உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும்,

 *மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.*

🌳🌳🌵🌵🍀🍀🍀🍀🌿🌿☘☘☘☘☘☘

[11/10 7:02 pm] Edwin Devadoss VDM: மொபைல் போன் மூலம் விளையாடுபவர், ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்….பரியாசக் கூட்டத்தில் பட்டவர்கள் தான்.

[11/10 7:02 pm] Sankar Sir Madurai VDM: Yes

[11/10 7:04 pm] Edwin Devadoss VDM: 9 சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும், இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும், இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.
எசேக்கியேல் 47:9

10 அப்பொழுது என்கேதிதுவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள், அதெல்லாம் வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருக்கும், அதின் மச்சங்கள் பெரிய சமுத்திரத்தின் மச்சங்களைப்போலப் பல ஜாதியும் மகா ஏராளமுமாயிருக்கும்.
எசேக்கியேல் 47:10

11 ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.
எசேக்கியேல் 47:11

12 நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும், அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை, அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.
எசேக்கியேல் 47:12

[11/10 7:24 pm] Elango: அந்த *நதி* ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை தானே உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது ஐயா? சரியா

[11/10 7:34 pm] Edwin Devadoss VDM: ஆமாம் ஐயா. நமக்குள் இருக்கும் இயேசு தாமே.

[11/10 7:36 pm] Elango:

🙏🙏🙏👍

சங்கீதம் 46:4-5
[4] *ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.*
[5]தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.

[11/10 7:41 pm] Elango:

7⃣

நாம் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் ஆலோசனைகளை கேட்கத்தான் செய்ய வேண்டும்…. ஒரு வேளை அவர்கள் துன்மார்க்கராய் இருந்தால் என்ன செய்ய

❓

[11/10 7:52 pm] Elango: *துன்மார்க்கன் என்பவன் யார்*

❓

1. துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்;

 2. அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.

[3] *துன்மார்க்கன் தன் உள்ளத்தின் இச்சையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் கர்த்தரைச் சபித்து அசட்டைபண்ணுகிறான்.*

[4] *துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.*

[5]அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்;

👿😈😈😈😈

உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கின்றன; தன் எதிராளிகள் எல்லார்மேலும் சீறுகிறான்.

[6]”நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை” என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

[7] *அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.*

[8]கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.
[9]தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, அவனைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

[10] திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
[11]” *தேவன் அதை மறந்தார் என்று, அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார்” என்றும், தன் இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்*

சங்கீதம் 10:2-11

[11/10 7:53 pm] Elango: ஆதியாகமம் 49:6
[6]என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.

*நீதிமான்கள் துன்மார்க்கரின் ஆலோசனைக்கு உடன்பட மாட்டார்கள்*

[11/10 9:04 pm] Jeyanti Pastor VDM: தேவ சித்தத்திற்கு விரோதமாக செயல்படுபவன் துன்மார்க்கன்

[11/10 10:05 pm] Elango: *

2⃣

சங்கீதம் 1 லிருந்து நீங்கள் கற்றது என்ன

❓

*

சங்கீதம் 1 ல் இரு பிரிவினரை காட்டுகிறதாக இருக்கிறது.

ஒவ்வொரு பிரிவினரும் வெவ்வேறு வாழ்க்கை முறையோடு பிரிக்கப்பட்டு வித்தியாசப்படுகிறார்கள்.

1. தேவ பக்தியுள்ளவர்கள், நீதி, அன்பு, தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிதல் மற்றும் உலக சிநேகத்தினின்றும் பிரிக்கப்பட்டவர் போன்ற குணாதியங்களை கொண்டவர்கள் ஒரு பிரிவினர்.

2. அவப்பக்தியுள்ளவர்கள், உலகத்தின் வழிகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கிறவர்கள் அதன் வழியில் நடக்கிறவர்கள். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திராதவர்கள்B அதன் விளைவாக தேவனுடைய சபையில் பங்கில்லாதவர்கள்.

தேவ பக்தியுள்ளவன் தேவனால் அறியப்பட்டும், ஆசீர்வதிக்கப்பட்டும் இருக்கிறான்.

1 கொரிந்தியர் 8:3
[3] *தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.*

ஆனால் அவபக்தியுள்ளவன் எவனோ தேவனுடைய இராஜ்யத்திலே பங்கடைவதில்லை… 1 கொரிந்தியர் 6:9

[11/10 10:17 pm] Elango:

1⃣

*சங்கீதம் 1 யாரால், எந்த சூழ்நிலையில் எதற்க்காக எழுதப்பட்டது

❓

*

சங்கீதம் – 1 தாவீதினால் எழுதப்பட்டது என சொல்லப்படுகிறது.

நீதிமானுக்கும், துன்மார்க்கனுக்கும் இடையே உள்ள நிலையையும், விளைவுகளையும் அழுத்தமாக கூறுகிறது.

[11/10 10:25 pm] Elango: *வேதத்தில் பிரியமாயிருத்தல்*

தேவனால் ஆசீர்வதிப்பட்டவர்கள் பொல்லாப்பிலிருந்து திரும்புவது மாத்திரமல்ல, கர்த்தருடைய வார்த்தைகளை மையமாக கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். தேவனுடைய வழிகளிலும், கற்பனைகளிலும் இன்பம் காணும் இருதயங்களோடு மனப்பூர்வமாக தேவனுடைய சித்தத்திற்க்கு கீழ்ப்படிய ஆர்வமாயிருக்கிறார்கள். நீதிமானின் மீட்கப்பட்ட ஆவியும் உணர்வுகளும் வேத வசனத்தில் காணப்படும் சத்தியத்தினால் கவரப்பட்டு அவர்களை கிரியை செய்ய வைக்கின்றன.

சங்கீதம் 37:31
[31] *அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.*

[11/10 10:35 pm] Elango:

6⃣

சங்கீதம் 1:2 ல் சொல்லப்பட்ட *இரவும், பகலும்* என்பதன் உண்மையான அர்த்தம் என்ன

❓

தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்று வாழ விரும்புகிறவர்கள், தங்கள் சிந்தனைகளையும், மனப்பான்மையையும், கிரியைகளையும் ஒழுங்குபடுத்தும்படியாக தேவனுடைய வார்த்தையில் தியானமாகயிருக்கிறார்கள்.

அவர்கள் எப்பொழுதும் வேத வசனத்தை வாசித்து, தியானித்து, ஒப்பிட்டுப்பார்த்து, அதை கைக்கொள்கிறார்கள்.

சங்கீதம் 119:131
[131]உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.

தேவனுடைய வார்த்தையை நாம் தியானிக்கும் பலவாறு நாம் யோசிக்க வேண்டும் –

– நான் எப்படி தேவனுக்கு பிரியமாக வாழ வேண்டும்.
– எனக்கான வாக்குத்தத்த வசனங்கள் உள்ளதா
– என் பாவத்தை சுட்டுக்காட்டும் வசனத்தின் மூலம் நான் உடனே பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்புகிறேனா
– ‎தேவன் எனக்கு என்ன சொல்ல விரும்புகிறார் இந்த நாளில் இந்த நேரத்தில்..

எஸ்றா 7:10
[10] *கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.*

அப்போஸ்தலர் 17:11
[11]அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் *வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.*

[11/10 10:44 pm] Elango:

5⃣

வேதத்தை தியானிக்கிற மனுஷனை, நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்திற்க்கு ஏன் ஒப்பிடப்பட்டுள்ளது

❓

உண்மையாக தேவனையும், அவருடைய வார்த்தையையும் தேடுகிறவர்களின் பலன் ஆவியின் ஜீவனாகும். *தண்ணீர்  தேவனுடைய ஆவிக்கு அடையாளமாக யோவான் 7:38-39 இருக்கிறபடியினால் தேவனால் போதிக்கப்பட்டு அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்பவர்கள், ஆவியானவரிடமிருந்து ஒரு மெய்யன ஜீவ ஊற்றை பெறுவார்கள்*

*அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் என்று சொல்லப்பட்டிருப்பதால், பிரச்சனைகளோ, தோல்விகளோ ஒரு போதும் நிகழாது என்று அர்த்தமில்லை, மாறாக தேவபக்தியுள்ள ஒருவன் தேவனுடைய சித்தத்தை அறிவதோடு அதற்கு கீழ்ப்படிந்து ஆசீர்வாதத்தை பெறுவான்*

[11/10 10:49 pm] Kishore VDM: சங்கீதம் 1 தியானம் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது praise the LORD

🙏👏👏👏

[11/10 10:50 pm] Elango: *

8⃣

நம்மோடு கூட வேலை செய்யும் சக வேலைக்காரர்கள் பாவிகளாகவும் பரியாசக்காரர்களாகவும் இருக்கும் போது நாம் எப்படி ஒதுங்கி இருப்பது

❓

*

[11/10 10:54 pm] Evangeline VDM: இரவும் பகலும் என்பதன் அர்த்தம் என்ன?

[11/10 10:59 pm] Elango: *

8⃣

நம்மோடு கூட வேலை செய்யும் சக வேலைக்காரர்கள் பாவிகளாகவும் பரியாசக்காரர்களாகவும் இருக்கும் போது நாம் எப்படி ஒதுங்கி இருப்பது

❓

*

அப்படி பேசுபவர்களிடம் நாம் சொல்லிப்பார்க்க லேண்டும். அவர்களுக்காக ஜெபிக்கலாம். ஆனால் அவர்களின் போஜனத்தை தொட்டுப்பார்க்கவே கூடாது.

வேறுவழியில்லாத சூழ்நிலையில் காது இருந்தும் கேளாதன் போல் எப்படி சவுல் இருந்தாரோ அப்படி இருந்து வேண்டியதுதான்.

👂❌🤐🤐😷😷

சங்கீதம் 141:3-4,10
[3] *கர்த்தாவே, என் வாய்க்குக் காவல்வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.*

😷😷😷😷

[4]அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு *இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.*

❌❌❌❌❌

[10]துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; *நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.*

[11/10 11:06 pm] Elango: 1 சாமுவேல் 10:27
[27]ஆனாலும் பேலியாளின் மக்கள்: *இவனா நம்மை இரட்சிக்கப்போகிறவன்*

😜😜😝😛

என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கைகொண்டுவராமல் அவனை அசட்டைப்பண்ணினார்கள்;

🤔🤔😝😜😜😜

*அவனோ காது கேளாதவன்போல இருந்தான்.*

😐😐😑😑

[11/10 11:08 pm] Elango: *

7⃣

நாம் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் ஆலோசனைகளை கேட்கத்தான் செய்ய வேண்டும்…. ஒரு வேளை அவர்கள் துன்மார்க்கராய் இருந்தால் என்ன செய்ய

❓

*

[11/10 11:47 pm] Levi Bensam Pastor VDM: யோவான் 9:4-5
[4] *பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்;

👇👇👇👇👇👇👇👇👇

ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.*
[5]நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

[11/10 11:48 pm] Levi Bensam Pastor VDM: வெளிப்ப 22:3-5
[3]இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
[4]அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
[5] *அங்கே இராக்காலமிராது;*

👍

விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

[11/10 11:50 pm] Levi Bensam Pastor VDM: சங்கீதம் 134:1
[1] *இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே,*

👍

நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

[11/10 11:51 pm] Levi Bensam Pastor VDM: உபாகமம் 33:14-15
[14]சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், *சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,*
[15]ஆதிபர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும், நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருள்களினாலும்,

[11/10 11:52 pm] Levi Bensam Pastor VDM: சங்கீதம் 121:6
[6] *பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.*

[11/10 11:53 pm] Levi Bensam Pastor VDM: சங்கீதம் 42:8
[8]ஆகிலும் கர்த்தர் *பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது;* என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்.

[11/10 11:57 pm] Levi Bensam Pastor VDM: உன்னதப்பாட்டு 5:2
[2] *நான் நித்திரைபண்ணினேன், என்

❤❤❤❤

இதயமோ விழித்திருந்தது*; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.

[12/10 8:16 am] Elango: *சங்கீதம் 1 – மோசேயினால் எழுதப்பட்டது என்ற கருத்தும் இருக்கிறது.*

🙏

Share thes: Umn ministry 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*