A. W. டோசர் அவர்களின் எழுப்புதல் | A. W. Tozer on Revival

0

A. W. டோசர் அவர்களின் எழுப்புதல் | A. W. Tozer on Revival

A. W. TOZER ON REVIVAL
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

மே 9, 2021 கர்த்தருடைய நாள் பிற்பகல் வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட ஒரு பாடம்
A lesson taught at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Afternoon, May 9, 2021

பாடத்துக்கு முன்பாக பாடப்பட்ட கீர்த்தனை: “எனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும்” (ஆவிஸ் பர்கேசன் கிறிஸ்டியன்ஸன் அவர்கள் எழுதினது, 1895-1985).

யோசுவா 7:12க்கு என்னோடுகூட தயவுசெய்து திருப்பிக் கொள்ளுங்கள். நான் இதை வாசிக்கும்பொழுது தயவுசெய்து எழுந்து நில்லுங்கள்.

“ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்” (யோசுவா 7:12).

நீங்கள் அமரலாம். இஸ்ரவேலர்கள் இது வரையிலும் அவிசுவாசிகள்மீது மிகவும் அதிகமாக வெற்றி பெற்று ஜெயகரமாக இருந்தார்கள். அவர்களில் ஒரு மனிதன் வெற்றி கொண்டவைகளில் சில பொருள்களைத் திருடிக்கொண்டான். மற்றும் இப்பொழுது வனாந்திரத்திலே இருந்த சபைமீது தேவன் கோபமாக இருந்தார். கடந்த காலங்களிலே உதவி செய்ததுபோல செய்யாதபடி ஆகான் என்ற ஒரு மனிதன் தேவனை தடைசெய்து விட்டான். டாக்டர் ஸ்கோபீல்டு அவர்கள் நன்றாக சொன்னார்,

“ஒரு விசுவாசியினுடைய ஆவிக்குரிய தன்மை இல்லாமை, புறக்கணிப்பு அல்லது பாவம், கிறிஸ்து காயப்படுவதற்கு முழு காரணமாக அமைந்தது” (266ம் பக்கத்தின் அடிக்குறிப்பு).

நாம் தேவனுடைய தேவைகளைக் கண்டு கொள்ளாமல் குருட்டாட்டமாக இருந்து, அவருடைய பிரமாணங்களைத் தொடர்ந்து முறித்துக்கொண்டிருக்கும்போது தேவன் எழுப்புதலை அனுப்ப வேண்டும் என்று மணிக்கணக்காக நாம் ஜெபத்தில் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியும். தேவன் யோசுவாவிடம் சொன்னார்,

“நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்” (யோசுவா 7:12).

ஒரு கத்தோலிக்க பின்னணியில் இருந்து வந்த மனிதன் பாவத்தினால் உணர்த்தப்பட்டால், அவன் அதை அறிக்கை செய்ய விரும்புகிறான். அப்படிப்பட்ட அறிக்கை சில நேரங்களில் இரண்டு கெட்டதாக இருக்கிறது. நீதிமொழிகள் 28:13க்கு திருப்பிக்கொள்ளுங்கள். எழுந்து நின்று இதைச் சத்தமாக வாசியுங்கள்.

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதிமொழிகள் 28:13).

நீங்கள் அமரலாம். பாவத்தை விட்டுவிடாமல் அறிக்கை செய்வது என்பது அறிக்கை செய்யாமல் இருப்பதைவிட மோசமானது ஆகும். ஏன்? ஏனென்றால் ஒரு கலகமுள்ள மனிதனுக்கு அது உதவி செய்யவே முடியாது!

யோவான் 14:21க்கு திருப்பிக்கொள்ளுங்கள்,

“என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக் கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்து வேன்” (யோவான் 14:21).

இப்பொழுது யோவான் 14:15க்கு திருப்பிக்கொள்ளுங்கள்,

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.”

டாக்டர் டோசர் அவர்களின் எழுப்புதலின் படிகள்.

(1) உங்களுக்குள் திருப்தி இல்லாமல் இருங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒரு உருமாற்றத்துக்கு நேராக உங்கள் முகத்தை நோக்குங்கள்.

(2) ஆசீர்வாதத்தின் வழியிலே உங்களை வையுங்கள். எழுப்புதலை விரும்புங்கள் அதேசமயத்தில் ஒருவழியை விரும்புவது மற்றும் வேறுவழியில் நடப்பது என்ற தனிப்பட்ட ஜெபத்தைப் புறக்கணியுங்கள்.

(3) மனஸ்தாபப்பட்டு முழுமையாக மனந்திரும்பும் ஒரு வேலையைச் செய்யுங்கள். அதோடு அதிகமாக பெற்றுக்கொள்வதற்கு அவசரப்பட வேண்டாம்.

(4) தேவையான போதெல்லாம் மறுசீரமைப்புச் செய்யுங்கள்.

(5) தீவிரமான மனமுள்ளவராக இருங்கள். உங்கள் டிவியை அணைத்து வையுங்கள். உங்கள் நடத்தைகளில் ஒரு தீவிரமான மாற்றம் இருக்க வேண்டியது அவசியம் இல்லையானால் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இருக்காது.

(6) உங்கள் விருப்பங்களைக் குறுக்கிக்கொள்ளுங்கள். உனது இருதயம் பாவம் மற்றும் உலகத்துக்கு மூடப்பட்டு மற்றும் கிறிஸ்துவுக்குத் திறந்திருக்கும்பொழுது உனது இருதயம் எழுப்புதல் அடைந்ததாக மாறும்.

(7) “துருபிடித்தலை” மறுத்துவிடு. உனது போதகருக்குக் கிடைக்கும் வகையில் இரு மற்றும் உனக்குச் சொல்லப்படுவது எதுவானாலும் அதைச் செய். கீழ்ப்படிய கற்றுக்கொள்.

(8) சாட்சி சொல்ல ஆரம்பி. இந்த ஞாயிறு ஆராதனை கூட்டங்களுக்கு யாராவது ஒருவரை உன்னோடு அழைத்து வா.

(9) வேதாகமத்தை மெதுவாக வாசி. டாக்டர் சாமுவேல் ஜான்சன் என்ற பெரிய அறிஞர் இங்கிலாந்து அரசரைச் சந்தித்தபோது, அந்த இரண்டு மனிதர்களும் சிறிது நேரம் அமைதியாக அப்படியே அமர்ந்திருந்தார்கள். இறுதியாக அந்த அரசர் டாக்டர் ஜான்சனிடம் சொன்னார், “நீங்கள் பெரும் அளவு படிக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.” அதற்கு “ஆமாம், மாட்சிமை பொருந்தின ஐயா,” என்று டாக்டர் ஜான்சன் சொன்னார், “ஆனால் இன்னும் அதிக பெரும் அளவு படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”

(10) தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள். எதிர்பார்க்க ஆரம்பியுங்கள். தேவனை மேல்நோக்கி பாருங்கள். அவர் உங்கள் பக்கமாக இருக்கிறார். அவர் உங்களை ஏமாற்றமாட்டார்.

உங்கள் சபைக்கு எழுப்புதல் எவ்வளவாக அவசிய தேவையாக இருக்கிறது என்று தேவனுக்குத் தெரியும். மற்றும் அது உன்னை போன்ற எழுப்புதல் அடைந்த மக்கள் மூலமாக மட்டுமே, வரமுடியும்.

இந்தப் பாடத்தை உன்னோடு வீட்டுக்கு நீ எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எழுப்புதலைப்பற்றி டாக்டர் டோசர் என்ன சொன்னாரோ அதை நீ செய்ய வேண்டும். உனக்குள் எழுப்புதலை பெற்றுக்கொள் மற்றும் உண்மையான எழுப்புதலை அனுபவிக்க மற்றவர்களுக்கு உதவி செய்யும்படி தேவன் உன்னை உபயோகப்படுத்துவார். நமது கீர்த்தனையை எழுந்து நின்று பாடுங்கள்.

எனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்சகரே,
aநான் ஜெபிக்கிறேன், இயேசுவை மட்டும் நான் இன்று காண்பேனாக;
a பள்ளத்தாக்கின் ஊடாக நீர் என்னை நடத்தினாலும்,
a உமது மங்காத மகிமை என்னை சுற்றிக்கொள்ளுகிறது.
aஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
aஉமது மகிமையோடு என் ஆவி பிரகாசிக்கும் வரைக்கும்.
a எனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், உமது பரிசுத்த சாயல்
a எனக்குள் பிரதிபலிப்பதை அனைவரும் காணும்படியாக.

எனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், ஒவ்வொரு விருப்பமும்
aஉமது மகிமையைக் காக்க; எனது ஆத்துமா எழுச்சி அடையட்டும்,
a உமது பரிபூரணத்தோடு, உமது பரிசுத்த அன்பு, பரத்திலிருந்து வரும்
a வெளிச்சத்தால் எனது வழிபாதையை நிரப்பட்டும்.
aஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
aஉமது மகிமையோடு என் ஆவி பிரகாசிக்கும் வரைக்கும்.
a எனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், உமது பரிசுத்த சாயல்
a எனக்குள் பிரதிபலிப்பதை அனைவரும் காணும்படியாக.

எனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பயனற்ற பாவம்
aஉள்ளே பிரகாசிக்கும் வெளிச்சத்தை நிழளிடாமல்.
a உமது ஆசீர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் நான் பார்ப்பேனாக,
a உமது முடிவில்லா கிருபை என் ஆத்துமாவுக்கு விருந்தளிக்கும்.
aஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
aஉமது மகிமையோடு என் ஆவி பிரகாசிக்கும் வரைக்கும்.
a எனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், உமது பரிசுத்த சாயல்
a எனக்குள் பிரதிபலிப்பதை அனைவரும் காணும்படியாக.
a(“Fill All My Vision,” Avis Burgeson Christiansen, 1895-1985).

NextGen


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*