ஞானஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை பாகம் – 6

0

 

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை பாகம் – 6

5.அவஸ்தை ஞானஸ்நானம் (Clincial Baptism or Death – bed Baptism)-

சில சபைகளில், மரிக்கும் தறுவாயில் உள்ள சிலர் இரட்சகராகிய இயேசுவை
விசுவாசிப்பதுண்டு அவர் அவர்கள் சபையில் போதகரை அழைத்து ஞானஸ்நானம்
பெற்றுக்கொள்ள வாய்ப்பும் சமயமும் இல்லாமல் போகிறது.

இப்படி இருக்கையில் மருத்துவமனையில் பணி புரிகிறவர்கள் அவர்களுக்கு
ஞானஸ்நானம் கொடுக்க அதிகாரம் பெற்றிருந்தனர். மேலும் ஒரு பிரசவ சமயத்தில்
குழந்தை பிறந்ததும் மரித்து விடுமானால் அல்லது மரித்து பிறந்ததனால்
கல்லறையில் அடக்கம் செய்வதற்கு ஏதுவுடண்டாக
மருத்துவச்சிகள் (Nurse or Midwife) அக் குழந்தைக்கு பெயர் சூட்டி
கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஞானஸ்நானம் கொடுத்து வந்த பழக்கம் இருந்து
வந்தது, இதுவும் வேதத்தின் முறையல்ல.

6.”இயேசுவின் நாமத்தில்” எடுக்கும் ஞனஸ்நானம்

நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் ஊழியத்திற்கு
அப்போஸ்தலரை அனுப்பும்போது கொடுத்த கட்டளை யாதெனில்

“நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்”என்பதே,

முதலில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்கிற மூன்று தேவர்கள் அல்ல. ஒரே
தேவனாக 'திரியேகத்வம்' வாய்ந்தவராய் இருப்பதனால் “நாமத்தில்” என
வாசிக்கிறோம்.

யூதர் பிதாவாகிய தேவனை விசுவாசித்திருந்தனர். பரிசுத்த ஆவியாகிய
தேவனையும் விசுவாசித்தனர். குமாரனாகிய இயேசுவும் தேவன் என்பதை அறிக்கை
செய்யும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம்
கொடுத்தனர்.

எனினும் இயேசுவின் நாமத்தில் மட்டும் ஞானஸ்நானம் கொடுப்பது நமது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு பூரணமாய்க் கீழ்ப்படிவது அல்ல.

அப்போஸ்தலர்-19:1-5
இவ்விடத்தில் எபேசுவிலே சபையின் பிறப்பைக் குறித்து வாசிக்கிறோம்.

அப்பொல்லோ என்பவன் முதலாவது வந்து தனது சாதுரியமான
பிரசங்கத்தினாலே எபேசு பட்டணத்தில்
மனந்திரும்பினவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தான்.
அந்த விசுவாசிகளைப் பார்த்து பவுல் “நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த
ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான், அற்கு அவர்கள் “பரிசுத்த ஆவி
உண்டென்று நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றனர்.

“அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்று கேட்க, அவர்கள்
யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்றார்கள்.

இவ்வேதப்பகுதியை நீங்கள் கவனித்தீர்களா? பரிசுத்த ஆவி என்ற பெயரை
கேள்விப்படுவதற்கும் அவர்கள்
இருந்தபடியினால் யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்த வந்தான்”
(யோவான்-3:23).

தண்ணீருக்கள் ஒரு விசுவாசி அடக்கம் பண்ணப்படுவதற்கு ஏதுவாய் அதிகம்
தண்ணீர் அவசியம். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு ஒருவர்
ஞானஸ்நானம் எடுக்கவோ, ஒருவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கவோ முடியாது.

B. தண்ணீருக்குள் இறங்க வேண்டும்– அப்-8:38

இவ்விடத்தில் “பிலிப்புவும், மந்திரியும் தண்ணீருக்கள் இறங்கினார்கள்.
பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்” என்று வாசிக்கிறோம்.

ஞானஸ்நானம் எடுப்பவரும், அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் தேவ ஊழியரும்
தண்ணீருக்கள் இறங்க “தேவ ஊழியர் அவரை தண்ணீருக்கள் அடக்கம் செய்ய
வேண்டும். அதற்கு ஏதுவாக இருவரும் தண்ணீரில் இறங்க போதுமான தண்ணீர்
இருக்க வேண்டும்.

C. தண்ணீருக்குள் அடக்கம் பண்ணப்பட வேண்டும்– கொலோ-2:12

“ஞானஸ்நானத்தில் அவரோடே கூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாயும்”
என்று வாசிக்கிறோம். இதன் பொருள் நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு
கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியின் வல்லமையினால்
மரணத்தை ஜெயித்து எழுந்தது போல,
பாவத்துக்குச்
செத்ததுண்டானால் கிநிஸ்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது போல நாமும்
தண்ணீருக்குள்
ஞானஸ்நானத்தின் மூலம் அடக்கம் பண்ணப்பட வேண்டும். (ரோமர்-8:11)

Shars




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*