Jacob was stoned to death கல்லெறிந்து கொல்லப்பட்ட யாக்கோபு

0


Jacob was stoned to death கல்லெறிந்து கொல்லப்பட்ட யாக்கோபு


The Story of Jacob's Stoning to Death in the Bible


அல்பேயுவின்‌ குமாரன்‌ யாக்கோபு 


இயேசுவின்‌ பன்னிரு சீடர்களில்‌ இருவர்‌ யாக்கோபு என்ற பெயரையுடையவர்கள்‌. இவர்களின்‌ யோவானின்‌ சகோதரனான யாக்கோபு யாவராலும்‌ நன்கு அறிப்பட்டவர்‌. 

மற்றவர்‌ அதிகமாக அறியப்படாத அல்பேயுவின்‌ குமாரன்‌ யாக்கோபு. இவரது பெயர்‌ மட்டுமே வேதாகமத்தில்‌ கூறப்பட்டுள்ளது. யாக்கோபு கப்பர்நகூமைச்‌ சோந்தவர்‌. இவரது தந்தை,கிளியோபாஸ்‌ என்றழைக்கப்பட்ட அல்பேயு. தாய்‌ மரியாள்‌.. இந்த மரியாள்‌ இயேசுவின்‌ தாயாகிய மரியாளின்‌ நெருங்கிய உறவினள்‌. 

வரி வசூலிப்பவராகப்‌ பணிபுரிந்து இயேசுவால்‌ சீடராக அழைக்கப்பட்ட லேவி எனப்பட்ட மத்தேயு இவரது சகோதரன்‌. யோசேப்பு எனப்பட்ட மற்றொரு சகோதரனும்‌, சலோமி எனப்பட்ட சகோதரியும்‌ இவருக்கு இருந்தனர்‌. இவர்கள்‌ இஸ்ரவேல்‌ ஜனங்களிடையே ஆசாரியராகப்‌ பணிபுரிய அழைக்கப்பட்ட லேவி கோத்திரத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌. மத்தேயு ஆசாரியப்‌ பணியை விட்டுவிட்டு வரி வசூலிப்பவராக அரசுப்‌ பணியாற்றி வந்தார்‌. 

யாக்கோபு கானானியனாகிய சீமோனைப்போல முதலில்‌ தீவிரவாதிகளான *செலோத்தே' பிரிவில்‌ சேர்ந்திருந்தார்‌. ஆனால்‌ செலோத்தேக்கள்‌ நாட்டுக்காகப்‌ படுகொலை செய்யவும்‌ 


அஞ்சாதவர்கள்‌. இதை விரும்பாத யாக்கோபு பக்தி மார்க்கமாகிய நாசரைட்டுகளுடன்‌ சேர்ந்து துறவியைப்போல வாழ்ந்துவந்தார்‌. 

இவர்‌ தோற்றத்தில்‌ இயேசுவானவரைப்போல இருந்தார்‌ என்று கூறப்படுகிறது. இதனால்தான்‌ யூதாஸ்காரியோத்து முத்தத்தினால்‌ இயேசுவைக்‌ காட்டிக்கொடுக்க வேண்டி யிருந்தது 1 

அறியப்படாத யாக்கோபு 


திருச்சபை வரலாற்றில்‌ பவுல்‌, பேதுரு, அகஸ்டின்‌, லுத்தர்‌ போன்ற குறிப்பிட்ட சிலரையே நாம்‌ இன்றும்‌ நினைவில்‌ வைத்திருக்கிறோம்‌. ஆனால்‌ பல்லாயிரக்கணக்‌ கான பெயர்‌ அறியப்படாத ஊழியர்களாலும்‌, ஆயிரக்கணக்‌ கானோர்‌ இரத்தச்சாட்சிகளாகச்‌ சிந்திய இரத்தத்தாலுமே திருச்சபை வளாந்தது. அதிகமாக அறியப்படாத யாக்கோபு பெயர்‌ தெரியாத இவர்களுக்கு முன்னோடியாக விளங்கு கிறார்‌. 

“சிதறிப்‌ போனவர்கள்‌ எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப்‌ பிரசங்கித்தார்கள்‌” (அப்‌. 8:4), சிதறிப்‌ போனவர்கள்‌ என்றழைக்கப்படும்‌ இவர்களே பெயர்‌ அறியப்‌ ,படாத ஊழியர்கள்‌ ! 

நிக்கொதேமு, சகேயு போன்று இயேசுவோடு தொடர்‌ பூடைய பலரைப்பற்றி வேதாகமம்‌ தெளிவாக எடுத்துக்‌ கூறுகிறது, ஆனால்‌ யாக்கோபுவைப்‌ பற்றி ஒன்றுமே, கூறவில்லை. என்றாலும்‌ இயேசு நிக்கொதேமுவையோ, சகேயுவையோ தமது சீடராக வரும்படி அழைக்கவில்லை. யாக்கோபுவைத்தான்‌ சீடராகும்படி அழைத்தார்‌ ! 

எவ்வளவு பாக்கியம்‌ செய்தவர்‌ இந்த யாக்கோபு! “பின்பு தமது சீஷரிடத்தில்‌ திரும்பி, தனித்து அவர்களை 


நோக்கி: நீங்கள்‌ காண்கிறவைகளைக்‌ காணுங்‌ கண்கள்‌ பாக்கியமுள்ளவைகள்‌. அநேக தீர்க்கதரிசிகளும்‌ ராஜாக்‌ களும்‌ நீங்கள்‌ காண்கிறவைகளைக்‌ காணவும்‌, நீங்கள்‌ கேட்கிறவைகளைக்‌ கேட்கவும்‌ விரும்பியும்‌, காணாமலும்‌ கேளாமலும்‌ போனார்கள்‌ என்று உங்களுக்குச்‌ சொல்லு கிறேன்‌ என்றார்‌” (இயேசு) (லூக்கா 10:23,24. 

நாமும்‌ யாக்கோபுவைப்போல அதிகமாக அறியப்படாத வர்களாகவோ, புகழ்‌ பெறாதவர்களாகவோ இருக்கலாம்‌. என்றாலும்‌ இயேசுவை அறிந்த நாமும்‌ பாக்கியவான்கள்‌ ! அவரைப்பற்றிப்‌ பிறருக்குக்‌ கூறும்‌ வாய்கள்‌ பாக்கியம்‌ செய்தவை 1 

இயேசு நம்மை அறிந்து அழைத்திருக்கிறார்‌! இதை விடப்‌ பெரிய தகுதியோ, பதவியோ வேறென்ன வேண்டும்‌? 

நமது பெயர்‌ வரலாற்றில்‌ எழுதப்படாமல்‌ போகலாம்‌. ஆனால்‌ அது பரலோகத்தில்‌ எழுதப்பட்டிருப்பதல்லவா மேன்மையானது (லூக்கா 10:20)? 

யாக்கோபுவின்‌ ஊழியம்‌ 


துவக்ககால வரலாற்றாசிரியா்கள்‌ இந்த யாக்கோபுவும்‌, இயேசுவின்‌ சகோதர்களில்‌ ஒருவரான யாக்கோபுவும்‌ ஒருவரே என்று எண்ணிக்‌ குழப்பமடைந்திருக்கிறார்கள்‌. ஆனால்‌ இயேசுவின்‌ சகோதரான யாக்கோபு இயேசுவின்‌ சீடரல்ல; இவர்‌ இயேசு உயிர்த்தெழுந்ததைக்‌ கண்ட பின்னரே அவர்‌ பின்‌ சென்றார்‌; இந்த யாக்கோபுவைப்‌ பற்றி வேதாகமம்‌ பல செய்திகளைக்‌ கூறுகிறது. யாக்கோபு நிருபத்தை எழுதியவரும்‌ இவரே. 

இயேசுவின்‌ சீடரான யாக்கோபு சீரியத்‌ திருச்சபையில்‌ முதல்‌ பேராயராகப்‌ பணிபுரிந்தார்‌ என்று அசீஸ்‌ எஸ்‌. அடியா என்ற வரலாற்றாசிரியர்‌ கூறுகின்றார்‌. 


 கிறிஸ்துவைப்‌ பற்றிப்‌ போதனை செய்தபடியால்‌ யூதர்கள்‌ யாக்கோபுவைக்‌ கல்லெறிந்து கொன்றனர்‌. இரத்தச்‌ ( சாட்சியாக மரித்த யாக்கோபு எருசலேமில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டார்‌. ஜஸ்டினியன்‌ இவரது எலும்புகளை எடுத்து கான்ஸ்டான்டி நோபிள்‌ பட்டணத்திலுள்ள புனித அப்போஸ்‌ தலர்‌ ஆலயத்தில்‌ பத்திரப்படுத்தினார்‌. கி.பி. 572இல்‌ இவரது எலும்புகள்‌ ரோம்‌ நகருக்குக்‌ கொண்டு வரப்பட்டன. 

போப்பாண்டவர்‌ மூன்றாம்‌ ஜாண்‌ ஆலயமொன்றைக்‌ கட்டி அதில்‌ இவரது எலும்புகளை வைத்தார்‌. இந்த ஆலயம்‌ பிலிப்பு, யாக்கோபு அப்போஸ்தலர்‌ ஆலயம்‌ என்று முதலில்‌ அழைக்கப்பட்டது. பத்தாவது நூற்றாண்டிலிருந்து இந்த ஆலயம்‌ “புனித அப்போஸ்தலர்‌ ஆலயம்‌” என்றழைக்கப்‌ படுகிறது! பிலிப்பு மற்றும்‌ பிற அப்போஸ்தலர்களின்‌ எலும்புகளும்‌ இங்கு வைக்கப்பட்டுள்ளன ! 





Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*