The bloody history of Peter who was beaten upside down தலைகீழாக அடிக்கப்பட்ட பேதுருவின் ரத்த சரித்திரம்

0

  


தலைகீழாக அடிக்கப்பட்ட பேதுருவின் ரத்த சரித்திரம்

சீமோன் போதுரு 


இயேசுவின்‌ பன்னிரு சீடர்களின்‌ வரிசையில்‌ முதலாவதாக குறிக்கப்படுபவரா்‌ சீமோன்‌ பேதுரு. சீடர்களில்‌ இவரைப்‌, டற்றியே வேதாகமத்தில்‌ அதிகமாகக்‌ கூறப்பட்டுள்ளது 8 


முன்னுக்குப்பின்‌ முரணான குணத்னகையுடையவா்‌ சீமோன்‌ பேருது 1 பிலிப்புச்‌ செசரியாவில்‌ கிறிஸ்து சீடர்களிடம்‌ “தங்கள்‌ என்னை யார்‌ என்று சொல்லுகிறீர்கள்‌?” என்று கேட்டார்‌. உடனே பேதுரு “நீர்‌ ஜீவனுள்ள தேவணுடைய குமாரணாகிய கிறிஸ்து” என்று அறிக்கையிட்டு இயேசுவின்‌ பாராட்டுதலையும்‌ ஆசீர்வாதத்தையும்‌ பெறுகிறார்‌. இரண்டு மூண்று வசனங்கள்‌ கழித்துப்‌ பார்ப்போம்‌ 1॥

 இயேசுவானவா்‌ தனது மரணத்தைப்பற்றியும்‌ உயிர்த்தெழுதலைப்‌ பற்றியும்‌ பேசுவதைக்‌ கேட்ட பேதுரு அவரைத்‌ தனியே அழைத்துக்‌ கொண்டுபோய்‌ அவருக்கு இவ்வாறு நடக்கக்‌ கூடாது என்று கடிந்துகொள்ளத்‌ தொடங்குகிறார்‌. “எனக்குப்‌ பின்னாகப்‌ போ, சாத்தானே” என்று இயேசுவின்‌ கடுமையான வசனத்தை உரித்தவராகிறார்‌ (மத்‌. 16:15—23)! முண்னுக்குப்‌ பின்‌ முரணானவர்தான்‌ சீமோன்‌ பேதுரு 1 



இயேசு நீரின்மீது நடப்பதைக்‌ கண்டு தானும்‌ நடக்க விரும்புவதாகக்‌ கூறினார்‌. இயேசுவின்‌ கட்டளைப்படியே நடந்தார்‌ பேதுரு. ஆனால்‌ திடீரென்று அனளிசுவாசத்தால்‌

பயந்து நீரில்‌ மூழ்கத்‌ துவங்கினார்‌ 1 இயேசுவால்‌ காப்பாற்றப்‌ படுகிறார்‌ 

மத்‌. 14:28-31) 1 


இயேசு சீடர்களின்‌ கால்களைக்‌ கழுவி வந்தபோது பேதுரு தனது காலைக்‌ கழுவுவதைத்‌ தடுக்கிறார்‌. ஆணால்‌ காலைக்‌ கழுவினால்தான்‌ தன்னிடம்‌ அவருக்குப்‌ பங்குண்டு என்று இயேசு கூற, காலை மட்டுமல்ல கைகளையும்‌, தலையையும்கூட கழுவ வேண்டும்‌ என்று வேண்டுகிறார்‌ பேதுரு (யோவான்‌ 13:5—9). 


கடைசி இரவன்று இயேசுவிடம்‌ “உமதுநிமித்தம்‌ எல்லாரும்‌ இடறலடைந்தாலும்‌, நான்‌ இடறலடையேன்‌”” என்று கூறும்‌ (மாற்கு 14:29) பேதுரு சில மணிநேரங்களுக்குள்ளாக இயேசுவை மறுதலிக்கவும்‌ சபிக்கவும்‌ துவங்கிவிட்டார்‌ மோற்கு 14:71)! 


என்றாலும்‌ தனது தவறுகளையும்‌, குறைகளையும்‌ உணர்ந்து ஒப்புக்கொள்ளும்‌ தாழ்மை அவரிடம்‌ இருந்ததாலேயே மேன்மையைப்‌ பெற்றார்‌? தான்‌ கிறிஸ்துவை ஏமறுதலித்ததை உணர்ந்தவுடன்‌ மனங்‌ கசந்து மானந்திரும்புகிறார்‌ பேதுரு லூக்கா 22:62). 

அவர்‌ மூன்று முறை மறுதலித்ததற்குப்‌ பதிலாக மூன்று முறை கிறிஸ்துவை நேசிப்பதை அறிக்கையிடும்‌ வாய்ப்பு அவருக்குக்‌ கொடுக்கப்‌ படுகிறது (யோவான்‌ 21:15—17). 



தண்ணீரைப்‌ போன்று நிலையற்ற மானநிலையில்‌ இருந்த பேதுருவை ஒரு பாறையைப்‌ போன்ற உறுதியான திடம்‌ வாய்ந்த செயல்வீரராக மாற்றுகிறார்‌ கிறிஸ்து! பயந்துபோய்‌ கிறிஸ்துவை மறுதலித்த அவர்‌ பின்னர்‌ ஆயிரக்‌ கணக்கானோரின்‌ முன்னிலையில்‌ திடமாகக்‌ கிறிஸ்துவைப்‌ பற்றிப்‌ பேசுகிறார்‌ (அப்‌. 2:14-36. கிறிஸ்தவ சபை வரலாற்றில்‌ செய்யப்பட்ட முதல்‌ பிரசங்கம்‌ இதுவே! 




அறிக்கையிடப்‌ பயந்த அவர்‌ தைரியமாக தேசாதிபதிகளோடு பேசுகிறார்‌? சிறைச்சாலைக்குச்‌ செல்கிறார்‌) இறுதியில்‌ இரத்தச்சாட்சியாக மரிக்கிறார்‌! 

வரலாற்றில்‌ பார்க்கும்போது உலகிலேயே மிகவும்‌ கொடூரமான மேமா்‌ டைன்‌ சிறைசசாலையில்‌ உணவோ, நீரோ, வெளிச்சமோ இன்றி, கைகளும், கால்களும்‌ கட்டப்பட்ட நிலையில்‌ ஒன்பது மாதங்கள்‌ அவதியுற்றபோதும்‌ மனம்‌ தளராமல்‌ கிறிஸ்துவைத்‌ துதித்தபடியே இருந்தவர்‌ பேதுரு? அது மட்டுமின்றி இவ்வேதணையிலும்கூட புரோசெஸ்ஸஸ்‌, மார்டினியானஸ்‌ என்ற இரு சிறைச்சாலை அதிகாரிகளையும்‌ மேலும்‌ 47 பேரையும்‌ கிறிஸ்துவுக்குள்‌ வழிநடத்தியிருக்கிறார்‌ பேதுரு. 


ஒருவருடைய வாழ்வில்‌ இத்தகைய வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவார கிறிஸ்து ஒருவரே! சீமோன்‌ பேதுருவே இதற்குச்‌ சிறந்த எடுத்துக்காட்டு 1 | 



சீமோன் பேதுரு 


கலிலேயாக கடலின்‌ மீனவர்களில்‌ இவரும்‌ ஒருவர். யோனாவின்‌ குமாரர் மாத்‌. 76:17). இவரது சகோதரனாகிய அந்திரேயா இவரைக்‌ கிறிஸ்துவிடம்‌ அழைத்து வந்தார்‌ பபயோவான்‌ *:41,42). இஷது ஸீடு கப்பர்நகூமில்‌ இருந்தது. 

கிறிஸ்து கப்பர்நகூமில் இருந்தபோது இங்குதான்‌ தங்கினார்‌. பேதுருவின்‌ மாமியைக்‌ குணமாக்குதல்‌ போன்ற பல அதிசயங்‌ களைச்‌ செய்தார்‌. பல போதனைகளைக்‌ கொடுத்தார்‌ மாற்கு .7:17 மாற்கு 9:33-37). எனவேதான்‌ இந்த வீடு புனிதச்‌ | சின்னமாகப்‌ பாதுகாக்கப்பட்டு வந்தது. கான்ஸ்டன்டைண்‌ பேசரசரின்‌ அனுமதியின்‌ பேரில்‌ கி.பி. 352இல்‌ திபேரியாவிண்‌ ஆளுநராக இருந்த ஜோசப்‌ பிரபு என்ற கிறிஸ்தவ விசுவாசி பேதுருவின வீட்டை உள்ளடக்கி ஒர்‌ ஆலயத்தைக்‌ கட்டினார்‌. 





தற்போது இந்த ஆலயத்தின்‌ இடிபாடுகளிடையே பேதுருவின்‌ இல்லத்தைக்‌ கண்டுபிடித்துள்ளார்கள்‌ 1॥ இடிபாடுகளிடையே முதல்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த இரு தூண்டில்களையும்‌, சிறிய கோடரி ஒன்றையும்‌ கண்டெடுத்திருப்பதாக தந்‌தை விர்ஜில்‌ கோர்பே அறிவித்துள்ளார்‌ ! 


பேதுரு மணமானவர்‌, இவரது மாமியும்‌ இவருடன்‌ வசித்து வந்தார்‌. பிற்காலத்தில்‌ இவரது மனைவியும்‌ இவருடன்‌ பல பகுதிகளுக்கு ஊழியம்‌ செய்யச்‌ சென்றார்‌ (1 கொரி. 9:5). , 


டார்மென்‌ நியூமென்‌ என்ற பதினேழாம்‌ நூற்றாண்டு வரலாற்றாசிரியர்‌ (1685) பேதுருவின்‌ உடலமைப்பை இவ்வாறு வர்ணித்துள்ளார்‌: “சற்று நடுத்தரமான தடிமனும்‌, உயரமும்‌ கொண்டவர்‌. வெளிறிய நிறத்தவர்‌. கட்டையான, சுருண்ட ஆடர்த்தியான தாடியையுடையவர்‌. கறுப்பு நிறக்‌ கண்கள்‌. ஆனால்‌ அடிக்கடி அழுது ஜெபிப்பதால்‌ சிவந்து போயிருக்கும்‌. மிகவும்‌ மெல்லிய புருவத்தையுடையவர்‌”. 


வேதாகமத்தில்‌ பேதுரு 


வேதாகமத்தில்‌ பேதுரு நான்குவிதப்‌ பெயர்களில்‌ குறிப்பிடப்படுகிறார்‌. சிமியோன்‌ என்பது சீமோன்‌ என்ற கிரேக்கச்‌ சொல்லின்‌ எபிரெயப்‌ பதமாகும்‌ (அப்‌. 15:14). கேபா என்பது பாறை என்று பொருள்படும்‌ (யோவான்‌ 1:42) அராமைக்‌ மொழிச்‌ சொல்‌. பேதுரு என்பது இதன்‌ கிரேக்கப்‌ பதமாகும்‌ 1 


அப்போஸ்தலருடைய நடபடிகளில்‌ முதல்‌ பகுதி பெரும்பாலும்‌ பேதுருவின்‌ ஊழியத்தைப்‌ பற்றியும்‌ மறுபகுதி பவுலின்‌ ஊழியத்தைப்‌ பற்றியும்‌ கூறுகிறது. 


பெந்தெகொஸ்தே நாளில்‌ முதல்‌ பிரசங்கத்தைச்‌ செய்தவர்‌ பேதுருவே! சப்பாணியைக்‌ குணமாக்கியதின்‌ 

மூலம்‌ முதல்‌ அதிசயத்தைச்‌ செய்த சீடரும்‌ (அப்‌. 3:2--ஐ இவரே! தபீத்தாள்‌ என்ற மரித்த பெண்ணை உயிரோடு எழுப்பினவரும்‌ இவரே (அப்‌. 9:32,40). தரிசனத்தின்‌ மூலம்‌ ஆண்டவரின்‌ சித்தத்தை அறிந்து புறஜாதியாரான கொர்நேலியுவுக்கு நற்செய்தியை அறிவித்தவர்‌ இவர்‌ (அப்‌. 10:1--48). கிறிஸ்தவ சமயம்‌ புறஜாதியருக்கும்‌ பொதுவானது என்பது இதன்மூலமே உறுதியாக்கப்பட்டது. சிறைப்பட்டு தேவதூதனால்‌ விடுவிக்கப்பட்டார்‌ (அப்‌. 12:1-17). 


தனது இரு நிருபங்களின்‌ மூலம்‌ சபைக்கு வழி காட்டினார்‌. ரோமாபுரியில்‌ இவருக்கு மொழுிபெயர்ப்‌பாளராகப்‌ பணியாற்றிய மாற்கு இவர்‌ கூறிய செய்திகளை மனதில்‌ கொண்டுதான்‌ தனது சுவிசேஷத்தை எழுதினார்‌. 



பேதுருவின்‌ ஊழியம்‌ 



பவுல்‌ அப்போஸ்தலன்‌ கொரிந்துவில்‌ சபையை உருவாக்கிய பிறகு அங்கே பேதுரு ஊழியம்‌ செய்திருக்கிறார்‌ 

1கொரி. 9-5). பின்னா்‌ கி.பி. 33 முதல்‌ 40 வரை அந்தியோகியா டட்டணத்தில்‌ ஊழியம்‌ செய்தார்‌ பேதுரு. 

7 ஆண்டுகள்‌ அவர்‌ அந்தியோகியா சபையின்‌ பேராயராகப்‌ பணிபுரிந்தார்‌ என்று கிரகரி கூறுகின்றார்‌. வரலாற்றாசிரியர்‌ யூசிபியசும்‌ அதை உறுதிப்படுத்துகிறார்‌. 


இதன்‌ பிறகு தனது இடத்தில்‌ இயோடியஸ்‌ என்ற ஊழியரைப்‌ பேராயராக அபிஷேகம்‌ செய்துவிட்டு பாபிலோனிலுள்ள சிதறடிக்கப்பட்ட யூதர்களிடையே ஊழியம்‌ செய்யச்‌ சென்றார்‌. 1பேதுரு 5:13 வசனம்‌ 

இதை உறுதிப்படுத்துகிறது (அப்‌. 12:17 பார்க்க). பேதுரு பிரிட்டனிலும்‌, பிரான்‌சிலுன்ன கால்‌ (gaul) 


பகுதியிலும் ஊழியம்‌ செய்தார்‌ என்பதற்க்குப்‌ பல ஆதாரங்கள்‌ உள்ளன, கால்‌ பகுதியிலுள்ள சார்ட்ரஸ"சபையின்‌ புனித பிதாவாக பேதுரு போற்றப்படுகிறார்‌. 


இங்குதான்‌ பிரான்சிலேயே மிகப்‌ பழமையான பேராலயம்‌ உள்ளது. பிரிட்டனில்‌ பல யூதர்களும்‌, ரோமர்களும்‌ குடியேறியிருந்த வேளை அது. அவர்களுக்கும்‌, பிரிட்டனின்பூர்வீக இனத்தாருக்கும்‌ நற்‌ செய்தியை அறிவித்தார்‌ பேதுரு, பிரிட்டனில்‌ ஒயிட்ஹார்ன்‌ என்னுமிடத்தில்‌ 4 அடி உயரமும்‌, 15 அங்குல அகலமும்‌ உள்ள கல்வெட்டு ஒன்று அகழ்ந்‌ தெடுக்கப்பட்டுள்ளது. அதில்‌ (அப்போஸ்தலனாகிய பரி. பேதுருவின்‌ தலம்‌) என்று பொறிக்கப்பட்டுள்ளது ! 


கார்ன்ஹில்‌ என்னுமிடத்தில்‌ லூசியஸ்‌ என்ற பிரிட்டிஷ்‌ அரசனால்‌ கட்டப்பட்ட ஆலயம்‌ (கி.பி. 179) பரி. பேதுருவுக்கு அர்ப்பணம்‌ செய்யப்பட்டது. கி.பி. 156இல்‌ கிறிஸ்தவம்‌ பிரிட்டனின்‌ தேசிய சமயம்‌ என்று அரசு அங்கீகாரமளித்தவர்‌ இந்த அரசரே! 


இரத்தச்சாட்சியாக மரித்த பேதுரு 


பேதுரு எவ்வண்ணமாக மரிப்பார்‌ என்பதை யோவான்‌ 21:18 வசனத்தில்‌ இயேசு முன்னறிவித்திருக்கிறார்‌. “வேறொருவன்‌ உன்‌ அரையைக்‌ கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக்‌ கொண்டுபோவான்‌” என்று இயேசு கூறியதுபோல கி.பி, 67இல்‌ ரோமாபுரியில்‌ கைதுசெய்யப்பட்ட பேதுரு மேமர்டைன்‌ என்ற சிறையில்‌ 9 மாத காலம்‌ கொடுமையை அனுபவிக்க வேண்டியிருந்தது. ஒரு கம்பத்தில்‌ கை, கால்கள்‌ கட்டப்பட்ட நிலையில்‌ சிறையில்‌ மரித்தவர்களின்‌ பிணங்களிடையே உணவோ, நீரோ இன்றி இருளில்‌ தவிக்க நேரிட்ட போதிலும்‌ ஆண்டவர்‌ அவருக்குத்‌ , துணையாக இருந்தார்‌. சிறைச்சாலை அதிகாரிகள்‌ உட்பட அநேகரைக்‌ கிறிஸ்துவுக்குள்‌ வழிநடத்தினார்‌ பேதுரு! நீரோ என்ற ரோமப்‌ பேரரசன்‌ கிறிஸ்தவர்களைக்‌ கொன்று குவித்த காலம்‌ அது! 




கி.பி. 68இல்‌ பேதுரு சிலுவையில்‌ அறைந்து கொல்லப்‌ பட்டார்‌ என்று யூசிபியஸ்‌ என்ற வரலாற்றாசிரியர்‌ கூறுகிறார்‌. 


மீட்பர்‌ இயேசுவைப்போல நேராகச்‌ சிலுவையில்‌ தொங்க தனக்குத்‌ தகுதியில்லை என்று கூறி, தலைகீழாகத்‌ தன்னைச்‌ சிலுவையிலறையும்படி வேண்டிக்கொண்டாராம்‌ பேதுரு. 


டைபர்‌ நதியின்‌ கரையில்‌ வாடிகன்‌ மலைமீது சிலுவையில்‌ அறைந்து கொல்லப்பட்டார்‌ பேதுரு. மார்செல்லினஸ்‌ என்ற தேவ ஊழியர்‌ இவரது உடலைப்‌ பதப்படுத்தி வாடிகனில்‌ அடக்கம்‌ செய்தார்‌. அந்த இடத்தில்‌ ஒரூ சிறு ஆலயத்தையும்‌ கட்டினார்‌. ஆனால்‌ பின்னார்‌ ஹெலியோகலாசிஸ்‌ இந்த ஆலயத்தை அழித்துவிட்டார்‌ 1 


பேதுருவின்‌ உடல்‌ ரோமாபுரிக்கு இரண்டு மைல்‌ தொலைவிலுள்ள அப்பிய பாதை கல்லறையில்‌ வைக்கப்‌ பட்டது. _ 


கி.பி. 325இல்‌ மன்னர்‌ கான்ஸ்டன்டைனால்‌ வாடிகனில்‌ பெரிய ஆலயம்‌ ஒன்று கட்டப்பட்டபோது பேதுருவின்‌ உடல்‌ மீண்டும்‌ நகர்த்தப்பட்டது1॥ இந்த ஆலயத்தின்‌ அழிவின்மீது தான்‌ தற்போதுள்ள புனித பேதுரு பேராலயம்‌ 16ஆம்‌ நூற்றாண்டில்‌ கட்டப்பட்டது! 


இப்போது வாடிகன்‌ பகுதி முழுமையும்‌ போப்பாண்டவரின்‌: தலமாக உள்ளது! பேதுருவின்‌ எலும்புகளைக்‌ கண்டுபிடிக்கும்‌ பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. 1968 ஜுன்‌ 26ஆம்‌ நாளன்று போப்பாண்டவர்‌ ஆறாம்‌ பால்‌ பேதுருவின்‌ எலும்புகள்‌ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்று அறிவித்துள்ளார்‌ 1! தற்போது இந்த எலும்புகள்‌ புனித பேதுரு வளாகத்திலுள்ள புதிய கல்லறையில்‌ வைக்கப்பட்டுள்ளன ! 


“ஒருவன்‌ கிறிஸ்தவனாயிருப்பதினால்‌ பாடுபட்டால்‌ வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம்‌ தேவனை மகிமைப்‌ படுத்தக்கடவன்‌” (1 பேதுரு 4:16). 


நாத்தான்வேலின் ரத்த சரித்திரம்.






Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*