Witness Nathanael, who was flayed alive உயிரோடு தோலுரிக்கப்பட்ட நாத்தான்வேல்‌ சாட்சி

0

உயிரோடு தோலுரிக்கப்பட்ட நாத்தான்வேல்‌ சாட்சி





நாத்தான்வேல்‌ 


மத்தேயு, மாற்கு, லூக்கா சுவிசேஷங்களில்‌ பற்தொலொமேயு என்றும்‌ (மத்‌. 10:3; மாற்கு 3:16: லூக்கா 6:14), யோவான்‌ எழுதிய சுவிசேஷத்தில்‌ நாத்தான்வேல்‌ என்றும்‌ (யோவான்‌ 1:45) இவர்‌ குறிப்பிடப்படுகிறார்‌. பற்தொலொமேயு என்பதற்கு 'தோல்மாயின்‌ மகன்‌” என்பதே பொருளாகும்‌. 

நாத்தான்வேல்‌ வேதத்தைப்‌ படித்தவர்‌. 


எப்போதுமே ஆண்டவரைப்‌ பற்றியும்‌ அவரது ராஜ்ஜியத்தைப்‌ பற்றியும்‌ தியானித்துக்‌ கொண்டும்‌, கற்பனை செய்துகொண்டும்‌ இருப்பார்‌. கிறிஸ்து முதன்முதலில்‌ இவரைப்‌ பார்த்தபோது, அவர்‌ அத்திமரத்தின்‌ கீழிருந்தார்‌ (யோவான்‌ 1:48). இயேசு இவரைப்‌ பார்த்ததைக்கூட அறியாமல்‌ கற்பனை உலகில்‌ இருந்தார்‌ ! ட. இவரது நண்பராகிய பிலிப்பு இவரிடம்‌ வந்து, நியாயப்பிரமாணத்திலே மோசேயும்‌ தீர்க்கதரிசிகளும்‌ எழுதி பிருக்கிறவரைக்‌ கண்டோம்‌; அவர்‌ யோசேப்பின்‌ குமாரனும்‌ நாசரேத்துரானுமாகிய இயேசுவே” யோவான்‌ 1:45) என்று சாட்சி பகர்ந்தார்‌. 




வேதவசணங்களை அறிந்த நாத்தான்‌வேல்‌ உடனே ““நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்‌ கூடுமா?” என்று ஐயம்‌ கிளப்புகிறார்‌. 

“வந்து பார்‌” என்றார்‌ பிலிப்பு. 

ஆர்வம்‌ தூண்டப்பெற்று தாத்தான்வேல்‌ இயேசுவிடம்‌ வந்தார்‌. அவரைக்‌ கண்டவுடன்‌, 

“இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்‌”” யோவான்‌ 1:47) என்றார்‌ இயேசு. எவ்வளவு அருமையான நற்சான்றிதழ்‌ t வேறு எவரையும்‌ பற்றி கிறிஸ்து இவ்வாறு குறிப்பிடவில்லை என்பதையும்‌ நினைவில்‌ கொள்ள வேண்டும்‌. 

தன்னைப்பற்றி இயேசு பேசுவதைக்‌ கேட்டு நாத்தான்‌ வேலுக்கு ஒரே வியப்பு! 

“நீர்‌ என்னை எப்படி அறிவீர்‌?” என்று கேட்டார்‌. 

அவர்‌ அத்திமரத்தடியில்‌ கனவுலகில்‌ இருக்கும்போது தான்‌ கண்டகுை இயேசு எடுத்துக்‌ கூறுகிறார்‌. பிலிப்புதான்‌ நாத்தான்வேல்‌ இங்கு வருவதற்குக்‌ காரணம்‌ என்பதையும்‌ ௬ட்டிக்காட்டுகிறார்‌ (யோவான்‌ 1:48). ஏற்கெனவே ஆண்ட வரைப்பற்றிய தியானங்களில்‌ ஈடுபட்டிருந்த நாத்தான்வேல்‌ உடனடியாக கிறிஸ்துவின்‌ வல்லமையை அறிந்துகொண்டார்‌. வேதநூல்களில்‌ கூறப்பட்டுள்ள மேசியாவும்‌ இவர்தான்‌ என்றும்‌ விசுவசித்தார்‌. 

“ரபீ, நீர்‌ தேவனுடைய சுமாரன்‌, நீர்‌ இஸ்ரவேலின்‌ ராஜா” என்று சாட்சி பகர்ந்தார்‌ (யோவான்‌ 1:49). 

கிறிஸ்துவைப்‌ பற்றி இவ்வாறு சாட்சிபகர்ந்த முதல்‌ Four இவர்தான்‌ ! 


நாத்தான்‌வேல்‌ கனவுலகில்‌ சஞ்சரிப்பதை அறிந்த கிறிஸ்து அவர்‌ மேலும்‌ வல்லமையான திருக்காட்சிகளைக்‌ காண்பார்‌ என்று ஆசீர்வதித்தார்‌ (ue. 51). 




நாத்தான்வேலைப்பற்றிய வேறு நிகழ்ச்சிகள்‌ வேதாகமத்தில் கூறப்படவில்லை. 

என்றாலும்‌ அவா்‌ எந்த விதப்‌ பிரச்சினையிலும்‌ அகப்படாமல்‌ கிறிஸ்துவை உண்மையாகப்‌ பின்பற்றினார்‌ என்று அறிகிறோம்‌. 

நாத்தான்வேலைப்‌ போல நாமும்‌ “இதே கபடற்ற, உத்தம கிறிஸ்தவன்‌” என்று கிறிஸ்துவிடம்‌ நற்சான்றிதழ்‌ பெறுவதற்கு அவர்‌ வழிகாட்டியாக இருக்கிறார் 1 


இரத்தச்சாட்சியாக மரித்த என்னப்பட்ட பற்தொலொமேயு 


அப்போஸ்தலனாகிய பற்தொலொமேயு இந்தியாவின்‌ வடமேற்குப்‌ பகுதி வரை வந்து ஊழியம்‌ செய்தார்‌ என்று சொல்லப்படுகிறது. அப்போது அவர்‌ எபிரெய மொழியில்‌ எழுதப்பட்ட யோவான்‌ சுவிசேஷம்‌ ஒன்றை அங்கு விட்டுச்‌ சென்றார்‌. 

இதன்‌ பின்னர்‌ ஆப்பிரிக்காவின்‌ வடபகுதியில்‌ ஊழியம்‌ செய்தபிறகு, ஆசியா மைனரில்‌ ஏராப்போலி பட்டணத்தில்‌ ஊழியம்‌ செய்துவந்த தனது நண்பர்‌ அப்போஸ்தலணாகிய பிலிப்புவேடு சேர்ந்து சில காலம்‌ ஊழியம்‌ செய்தார்‌. பிலிப்புவோடுகூட தண்டிக்கப்பட்டாலும்‌ என்ன காரணத்துக்‌காகவோ கடைசி நிமிடத்தில்‌ விடுதலை செய்யப்பட்டார்‌. பிலிப்பு இரத்தச்சாட்சியாக மரித்தார்‌. 

கிழக்குத்‌ திசையில்‌ சென்ற பற்தொலொமேயு கி.பி. 60இல்‌ அர்மீனியாவில்‌ தனது பணியைத்‌ துவங்கினார்‌. இங்கு ஏற்கெனவே அப்போஸ்தலனாகிய ததேயு கி.பி. 43 முதல்‌ ஊழியம்‌ செய்து சபையை நிறுவியிருந்தார்‌. இவர்கள்‌ இருவருமே ஆர்மீனிய சபையின்‌ பிதாக்கள்‌ என்றழைக்கப்‌ படுகின்றனர்‌. 

கி.பி. 66இல்‌ ததேயுவும்‌ ஆயிரக்கணக்கான கிறிஸ்த வா்களும்‌ இரத்தச்சாட்சிகளாக மரித்தனர்‌. 


நாத்தான்வேல்‌ .


பற்தொலொமேயு தனது ஊழியத்தைத்‌ தொடர்ந்தார்‌. அவர்‌ அப்பகுதியின்‌ அரசரருடைய மூளைக்‌ கோளாறுள்ள 

பெண்ணைக்‌ குணமாக்கினார்‌. அரசன்‌ வணங்கிய சிலையிலுள்ள பிசாசை விரட்டினார்‌. அரசரும்‌ வேறு பலரும்‌ ஞானஸ்நானம்‌ பெற்றார்கள்‌. ஆனால்‌ பூசாரிகள்‌ 

வெகுண்டெழுந்து அரசரின்‌ சகோதரன்‌ அஸ்டியேஜசிடம்‌ முறையிட்டார்கள்‌. அவன்‌ பற்தொலொமேயுவின்‌ தோலை உயிரோடு உரித்து அவரைத்‌ தலைகீழாகச்‌ சிலுவையில்‌ அறையும்படி கட்டளையிட்டான்‌. இவ்வாறு கி.பி. 68இல்‌ மிகவும்‌ கொடூரமான, வேதனையான முறையில்‌ இரத்தச்சாட்சியாக மரித்தார்‌ பற்தொலொமேயு. , 

பற்தொலெொமேயுவின்‌ கல்லறை ஆராமினியாவில்‌ உள்ளது. ஆனால்‌ கி.பி. 508இல்‌ பேரரசர்‌ அனாஸ்டேசியஸ்‌ மெசபடோமியாவில்‌ டுராஸ்‌ என்ற பட்டணத்தைக்‌ கட்டி அங்கு இவரது எலும்புகளைக்‌ கொண்டு சென்றார்‌. ஆறாம்‌ நூற்றாண்டின்‌ இறுதியில்‌ இவை சிசிலிக்கருகிலுள்ள லிபாரி தீவுக்களுக்குக்‌ கொண்டு செல்லப்பட்டன. கி.பி. 809இல்‌ இவை பெனிவென்டோவுக்கும்‌ பின்னர்‌ கி.பி. 983இல்‌ ரோமுக்கும்‌ கொண்டு செல்லப்பட்டன. 

தற்போது இவரது எலும்புகள்‌ டைபர்‌ நதிக்கரையிலுள்ள புனித பற்தொலொமேயு ஆலயத்தில்‌ உள்ளன. இவரது கை எலும்புகளில்‌ ஒன்று பிரிட்டனில்‌ கேன்டர்பரி பேராலயத்தில்‌ உள்ளது .








Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*