மத்தேயு: ரத்த சரித்திரம்
கிறிஸ்துவின் சீஷர்களிலேயே யூதர்களால் மிகவும்
வெறுக்கப்பட்ட பணியைச் செய்து வந்தவர் மத்தேயு, அதே
சீஷர்களைவிடக் கல்வியறிவிலும்,
திலும் அதிகத் தேர்ச்சி பெற்றிருந்தார்.
எபிரெயம்,கிரேக்கம்,லத்தீன்
மொழிகளை இவர்அறிந்திருந்தார்.
அவ்பேயுவின் குமாரனாகிய மத்தேயுவின் மற்றொரு
பெயர் லேவி (மாற்கு 2:14). இவர் யாக்கோபு என்ற சீடரின்
(மாற்கு 3:18) மூத்த சகோதரர். மத்தேயு என்ற சொல்லுக்கு
,தேவனுடைய ஈவு’என்பது பொருளாகும்.
ஆராய்ச்சியாளர்கள் மத்தேயுவின் இயற்பெயர் லேவி என்றும்
இவர் கிறிஸ்துவைப் பின்பற்றிய பிறகே மத்தேயு என்று பெயர்
மாற்றம் செய்யப்பட்டார் என்றும் கூறுகின்றனர்.
மத்தேயுவின் பணி
கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் ரோம அரசு யூதர்களிடமிருந்து பலவிதங்களில் வரி வசூலித்து வந்தது.
தரை மார்க்கமாகவும், கடல் வழியாகவும் கொண்டு
செல்லப்படும் பொருட்களுக்காகச் சுங்கவரி வசூலித்து வந்தனர்.
ரோம அரசுக்குத் தேவையான கட்டணத்தைச்
செலுத்திவிட்டு சுங்கவரி வசூலிக்கும் பொறுப்பைச் சிலர்
தாங்களே எடுத்துச் செய்யும் அனுமதி பெற்றிருந்தனர்.
இவர்கள் ஆங்காங்கே வரி வசூலிப்பதற்காக ஆயக்காரர்
களை நியமித்திருந்தனர், இவ்வாறு கப்பர்நகூம் பகுதியில்
வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயக்காரர்களில்
ஒருவர்தான் மத்தேயு.
இவர்கள் மக்களிடமிருந்து வசூலிக்கும்
வரிப்பணத்தில் ஒரு பகுதியைத் தங்கள் வருமானமாக
எடுத்துக்கொண்டார்கள். தமஸ்குவிலிருந்து அக்கோ
செல்லும் முக்கியமான வாணிகப் பாதையில் கப்பர்நகூம்
இருந்ததால் மத்தேயுவுக்குப் போதிய வருமானம் கிடைத்து
வந்தது.
ஆயக்காரர்கள் ரோம அரசுக்காகப் பணியாற்றி வந்த
யூதர்கள் என்பதால் மற்ற யூதர்கள். அவர்களை இனத்
துரோகிகள் என்று வெறுத்தார்கள்.
ஆலய வழிபாடுகளில்
அவர்களுக்கு இடமில்லை? அவர்களின் காணிக்கைகள்
ஏற்றுக் கொள்ளப்படமாட்டா! வரி செலுத்தும் யூதர்கள்
இவர்களிமிருந்து மீதிச் சில்லறையைப் பெறுவதைக்கூட அருவெறுப்பாக நினைத்தார்கள்! அளவுக்கு மீறி வரி
வசூலிப்பதாக எண்ணப்பட்டதால் நயவஞ்சகர்கள், பாவிகள்
என்று அழைக்கப்பட்டனர்.
வேதங்களைக் கற்றவர்
மத்தேயு வரிவசூலிப்பதைத் தனது தொழிலாகவே
நினைத்துச் செய்து வந்தார்.
மற்றபடி அவர் யூதப் பழக்க
வழக்கங்களைக் கைவிடவில்லை. அறிவுக் கூர்மை மிகுந்த
அவர் யூத வேதங்களை நன்கு கற்றிருந்தார். நான்கு
சுவிசேஷங்களிலும் இவர் எழுதிய சுவிசேஷத்திலேயே அதிக
அளவு பழைய ஏற்பாட்டு வசனங்கள் எடுத்துக் கூறப்
பட்டுள்ளன! வேதங்களை மட்டுமின்றி நடப்பு விஷயங்
களையும் நன்கு அறிந்தவர் அவர். கிறிஸ்துவைப் பற்றியும்
ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார்.
எனவேதான் இயேசு
அவரைக் கண்டு "எனக்குப் பின்சென்று வா” (மத். 9:9)
என்று அழைத்தவுடன், அவர் யாரென்பதைப் புரிந்துகொண்டு
உடனேயே எழுந்து அவருக்குப் பின்சென்றார்.
இயேசுவின் பின்னே மத்தேயு
மத்தேயு ஏற்கெனவே வசதியுள்ளவராக இருந்தபடியால்
அவர் இயேசுவுக்கும், மற்ற சீஷர்களுக்கும் தனது வீட்டில்
விருந்தளிக்கிறார். உடன் கூடியவர்கள் அவரைப் போன்ற
ஆயக்காரர்களும் பாவிகளும்தான் (மத். 9:10). வேறு யூதர்கள்
வரவில்லை!
அவர்கள் இயேசு இவ்வாறு போஜனம்பண்ணுவதைக்
கண்டு இயேசுவைக் குறைகூற அவரோ, "நீதிமான்களை
யல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க
வந்தேன்" (மத். 9:13) என்றார்.
இயேசுவோடு சீஷராகச் சென்ற மத்தேயு தனது
திறமைகளைக் கிறிஸ்துவின் நாம் மகிமைக்கென்றே
பயன்படுத்தினார். இயேசுவானவர் சொன்னவற்றையும்,
செய்தவற்றையும் இவர் குறித்து வைத்தார். அதுவே பின்னர்
சுவிசேஷமாக வடிவெடுத்தது. மத்தேயு சுவிசேஷம் மட்டுமே
மலைப்பிரசங்கத்தை முழுமையாகக் கொடுத்திருப்பதை
நாமறிவோம்!
இவர் தனது சுவிசேஷத்தில் தன்னைப் பற்றி-இயேசு
அழைத்த நிகழ்ச்சியைத் தவிர- வேறு எதையுமே குறிப்பிடாமலிருப்பது இவரது தாழ்மையையே காட்டுகிறது!
மத்தேயுவின் சுவிசேஷம்
மத்தேயு துவக்க காலத்தில் யூதர்களிடையே ஊழியம்
செய்து வந்தபடியால் தனது சுவிசேஷ நூலை எபிரெய
மொழியிலேயே எழுதினார். பின்னரே இந்நூல் கிரேக்க
மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
துவக்க காலத்தில் மற்ற மூன்று சுவிசேஷங்களைவிட மத்தேயு சுவிசேஷமே அதிகமாகப் போற்றப்பட்டது. இரண்டாவது நூற்றாண்டு கிறிஸ்தவ நூல்கள் பல அதிக அளவு இவரது வசனங்களையே மேற்கோள் காட்டுகின்றன.
மத்தேயு கிறிஸ்துவைப் பற்றிய பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதைச் சுட்டிக்காட்டி, கிறிஸ்துவே உலகை மீட்க வந்த மேசியா என்ற உண்மையை வலியுறுத்தினார். எனவேதான் திருச்சபைப் பிதாக்கள் இவர் எழுதிய சுவிசேஷத்தைப் புதிய ஏற்பாட்டின் முதல் நூலாகத் தொகுத்துள்ளார்கள் |
மத்தேயுவின் ஊழியம்
அப்போஸ்தலனாகிய மத்தேயு பதினைந்து ஆண்டுகள் பூதர்களிடையே ஊழியம் செய்தார். அதன் பின்னரே வெளிநாடுகளுக்குச் சென்றார். இவரது சுவிசேஷத்தில் பல பழைய ஏற்பாட்டு வசனங்கள் எடுத்தாளப்பட்டிருப்பது யூதா்களுக்காகவே!
கல்வியில் சிறந்த மத்தேயு அரசர்களோடும், அரசவை உறுப்பினர்களோடும் உரையாடி கிறிஸ்துவைப் பற்றிக் கூறும் வல்லமை பெற்றிருந்தார். இவர் பாரசீகத்திலும், அங்குள்ள எத்தியோப்பியா என்ற பகுதியிலும் ஊழியம் செய்தார். அங்கியிருந்தே இவர் எபிரெயத்தில் எழுதிய சுவிசேஷ நூல் முதன்முறையாக இந்தியாவுக்கு வந்தது என்று கூறப் படுகிறது!
இதன் பின்னர் இவர் எகிப்து நாட்டுக்கும், ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பியாவுக்கும் ஊழியம் செய்யச் சென்றதாகக் கூறப்படுகிறது. எத்தியோப்பியாவில் இவர் பிலிப்புவின் மூலம் ஞானஸ்நானம் பெற்ற எத்தியோப் பியன் (அப். 8:27) வீட்டில் தங்கினார். அவ்வேளையில்
எத்தியோப்பிய மக்கள் அனைவரையும் இரண்டு மந்திர வாதிகள் தங்கள் தீயசக்தியால் அடிமைப்படுத்தி வைத்திருந் தார்கள். மத்தேயு அவர்களை விரட்டி, மக்களைக் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். மத்தேயு மரித்துப் போன எகிப்து அரசனின் மகனை உயிரோடு எழுப்பியதாகவும், குஷ்டரோகியான இபிஜெனியா என்ற இளவரசியைக் குணமாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இரத்தச்சாட்சியான மத்தேயு
மத்தேயு எத்தியோப்பியாவிலும், எகிப்திலும் 23 ஆண்டுகள் ஊழியம் செய்தார். கி.பி. 90ஆம் ஆண்டில் தொமீதியனின் ஆளுகையின்கீழ் இரத்தச்சாட்சியாக மரித்தார். இவர் ஈட்டியாலோ அல்லது போர்வாளாலோ கொல்லப்பட்டிருப்பார் என்று நம்பப்படுகிறது.
அதனேஷியஸ் என்ற துறவி இவரது எலும்புகளைக் கண்டெடுத்து, இத்தாலியில் சாலர்னே என்ற இடத்தின் பிரபுவிடம் அறிவித்தார். ராபர்ட் கியஸ்கார்டோ பிரப சாலர்னோவில் பெரிய தேவாலயம் ஒன்றைக் கட்டி அதில் மத்தேயுவின் எலும்புகளைப் பாதுகாப்பாக வைத்தார். இன்றும் இந்த ஆலயத்தின் பீடத்துக்குக் கீழே
மத்தேயுவின் கல்லறையைக் காணலாம்!