Philip's bloodline பிலிப்புவின் ரத்த சரித்திரம்

0

 



பிலிப்பு:ரத்த சரித்திரம் 

அப்போஸ்தலனாகிய பிலிப்பு பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவர்.

 பிலிப்பு என்ற கிரேக்கச் சொல்லுக்கு'குதிரைப் பிரியன்' என்பது பொருளாகும். யூதனாகிய

இவருக்கு கிரேக்கப் பெயர் வைக்கப்பட்டிருப்பது இவரது

குடும்பத்தினருக்கு கிரேக்கரோடு தொடர்புண்டு என்று நிரூபிக்கிறது.

பிலிப்பு ஆவிக்குரிய காரியங்களில் அதிகமாக ஆர்வம்காட்டவில்லை.

 அவராகக் கிறிஸ்துவைத் தேடிப் போகவுமில்லை. கிறிஸ்துவே அவரை அழைத்தார். “பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்" (யோவான்.1:43).

பிலிப்பு ஒவ்வொரு விஷயத்தையும் நன்றாக ஆராய்ந்து அறிகிறவராக இருந்தார். இயேசுவைப் பின்பற்றியவுடன்அவரைப்பற்றி வேத நூல்களில் கூறப்பட்டிருக்கிற செய்திகளை ஆராய்ந்தார். இவர் தனது நண்பனாகிய நாத்தான்வேலை கிறிஸ்துவண்டை அழைத்துவரக் கூறிய வாக்கியத்தில் இவரது ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுகின்றன.

“நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே" (யோவான் 1:45),

 ஒரே வாக்கியத்தில் எத்தனை கேள்விகளுக்குப் பதில்கள்!

அவரது நண்பர்:

நாத்தான்வேலும் வேதத்தை அறிந்தவர்.நாசரேத்திலிருந்து

 யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா' என்று கேட்டார். 


வாக்கியத்தில் எத்தனை கேள்விகளுக்குப் பதில்கள்!

எதையுமே கண்டு

ஆராய்ந்து அறிந்து பழகிய பிலிப்பு அவரை "வந்து பார்"

என்று அழைக்கிறார்.

அவரைச்

பிலிப்பு கண்டு ஆராய்ந்து, விசுவாசிப்பவர் என்றறிந்த

இயேசு சோதிக்கிறார். யோவான் 6ஆம்

அதிகாரத்தில் திரளான ஜனங்கள் கூடியிருப்பதைக் கண்டு பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார். 

அவர் செய்த எத்தனையோ அற்புதங்களைக் கண்டிருந்த பிலிப்பு

இந்த அற்புதத்தையும் அவர்

செய்யக் கூடியவர் என்று நினைக்கவில்லை. உடனே

கணக்குப் பார்க்கத் துவங்கி

விடுகிறார்! கண்டு ஆராய்ந்து அறிபவரல்லவா அவர்?

அடுத்து யோவான் 12:20-22 வசனங்களில் பிலிப்புவை

மீண்டும் சந்திக்கிறோம். சில கிரேக்கர்கள் கிரேக்கப்

பெயருடைய பிலிப்புவிடம் வந்து இயேசுவைக் காண விரும்புவதைத் தெரிவிக்கிறார்கள். இயேசு கிரேக்கர்களைச் சந்திக்க

விரும்புவாரா என்று பிலிப்பு முதலில் அந்திரேயாவிடம் கேட்ட

பிறகு இருவருமாக இயேசுவிடம் அறிவிக்கிறார்கள்!

வேண்டுகோள்.

கண்டு ஆராயும் தன்மையுள்ள பிலிப்பு கடைசி இராப்போஜனத்தின்போது

இயேசுவிடம் ஒரு வேண்டுகோள் விடுவிக்கிறார் பிலிப்பு அவரை நோக்கி, ஆண்டவரே பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது

போதும் என்றான்" (யோவான்:14:8 பிலிப்புவின் இந்த 

கேள்விக்கு இயேசு அளித்த பதில் வேதாகமத்தின் மிகவும்

முக்கியமான வசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

 

“என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று கூறும்

இயேசு பிதாவுக்கும் தமக்குமுள்ள ஐக்கியத்தை உறுதிப்படுத்துகிறார்.

பிலிப்புவைப் பற்றிய செய்திகள் அனைத்துமே

யோவான் எழுதிய சுவிசேஷத்தில் உள்ளன. யோவான் பிலிப்புவின் நண்பராதலால் பிலிப்புவைப் பற்றிய செய்தியை ஒன்றுவிடாமல் கொடுத்துள்ளார்.

(அப். 8:27-40 வசனங்களில் காணப்படும் பிலிப்பு

வேறொரு தேவ ஊழியர். இவர், டீக்கனாக அபிஷேகம்

பண்ணப்பட்டவர் (அப். 6:5) )

இரத்தச்சாட்சியாக மரித்த பிலிப்பு

கிறிஸ்து பரமேறிய பின்பு பிலிப்பு சைத்தியாவுக்குச்

சென்று இருபது ஆண்டுகள் ஊழியம் செய்தார். இந்தப் பகுதி

ரஷ்யாவின் தென் பகுதியில் உள்ளது. இதன் பின்னர் இவர்

ஆசியா மைனரிலுள்ள ஏராப்போலி என்ற பட்டணத்தில் வந்து

தங்கி ஊழியம் செய்தார். இந்தப் பட்டணத்தின் பெயர்

வேதாகமத்தில் காணப்படுகிறது (கொலோ. 4:13).

பிலிப்புவின் இரண்டு பெண்கள் திருமணமாகாமல்

கன்னியராகவே வாழ்ந்தார்கள். இவர்கள் தீர்க்கதரிசன வரம்

பெற்றிருந்தார்கள். இவர்களது கல்லறை இன்னும் ஏராப்போலி

யில் காணப்படுகிறது என்று புராக்லஸ் குறிப்பிடுகிறார்.

ஏராப்போலி பட்டணம் கொலோசே பட்டணத்திலிருந்து

16 மைல் தொலைவிலிருந்த ஒரு சுக வாசஸ்தலம். வேதாகம

நாட்களில் இங்குள்ள வெதுவெதுப்பான நீர்வீழ்ச்சி

சுகமளிக்கும் மூலிகைகளின் சாறு கலந்தது என்று நம்பப்பட்ட

தால் அநேக பயணிகள் இங்கு வந்து கூடினர். இன்றும் இந்த

நீர்வீழ்ச்சி இருக்கிறது.




இங்குள்ள மக்கள் ஒரு பெரிய சர்ப்பத்தைக் கடவுளின்

அவதாரமாக எண்ணி வழிபட்டு வந்தார்கள். இதைக் கண்ட

பிலிப்பு தன் கையிலிருந்த சிலுவையை நீட்டி அந்தப் பாம்பு மறைந்து

போகும்படி கட்டளையிட்டார். பலிபீடத்தின்

அடியேயிருந்து வெளியே வந்த பாம்பு தனது விஷத்தைக்

கூடியிருந்தவர்கள்மீது

அநேகர் இறந்துபோனார்கள்.

விழுந்தான்.

கக்கிவிட்டுச் செத்தது. விஷம்பட்ட

ராஜாவின் மகனும் மடிந்து

அப்போஸ்தலனாகிய பிலிப்பு கிறிஸ்துவின்

நாமத்தில் அவனை மீண்டும் உயிரோடு எழுப்பினார். இதைக்

கண்ட சர்ப்பத்தின் மடாதிபதிகள் பிலிப்புவைப் பிடித்துச்

சிலுவையில் கட்டினார்கள். அவர் சிலுவையில் தொங்கும்

போதே கல்லால் அடித்துக் கொன்றார்கள். அவர்களைப் பிதா

மன்னிக்க வேண்டும் என்ற ஜெபத்தோடு பிலிப்பு உயிர்

நீத்தார். அப்போது அவருக்கு வயது 87.

பிலிப்பு பிரான்சு தேசத்திலிருந்த கால் (Gaul)

இனத்தினருக்குக் கிறிஸ்துவை அறிவித்தார் என்று சில

செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதற்குப் போதிய

ஆதாரமில்லை.

பிலிப்புவின் கல்லறை இன்றும் ஏராப்போலியில்

காணப்படுகிறது. ஆனால் கி.பி. 560 முதல் 572 வரை

போப்பாண்டவராக இருந்த புனித மூன்றாம் ஜாண் இவரது

எலும்புகளை ரோமுக்கு எடுத்துச் சென்று ஆலயமொன்றில்

வைத்தார். இந்த ஆலயம்

துவக்கத்தில் ‘பரிசுத்த

அப்போஸ்தலர்களான பிலிப்பு, யாக்கோபுவின் ஆலயம்'

என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம் ‘பரிசுத்த

அப்போஸ்தலர்களின் ஆலயம்' என்று அழைக்கப்படுகிறது.

இங்கு பிலிப்புவின் எலும்புகள் பளிங்குப் பீடமொன்றில்

பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.


அந்திரேயாவின் ரத்த சரித்திரம் 



Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*