Andrea's blood witness அந்திரேயாவின் ரத்த சாட்சி

0

அந்திரேயாவின் ரத்த சாட்சி



ஆந்திரேயா: வரலாறு.


கலிலேயாவை சேர்ந்த பெத்சாய்தாவில் பிறந்த அந்திரேயா அப்போஸ்தலனாகிய பேதுருவின் உடன் பிறந்த தம்பி .

இவர்கள் கப்பர் நகூமில் மீன்பிடிக்கும் தொழிலை செய்து வந்தார்கள் . இவர்களது தகப்பனாரின் பெயர் யோவான். தாயின் பெயர் யோஹன்னா.

ஆவிக்குரிய காரியங்களில் ஆர்வமுள்ளவராக இருந்தார் யோவான்ஸ்நானனின் பேச்சாள் கவரப்பட்டு அவரது சீடர்களில் ஒருவரானர் அவரது பேச்சில் சொல்லப்பட்ட மேசியாவுக்காக காத்திருந்தார்.

 உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற
தேவ ஆட்டுக்குட்டி யோவான் 1:29
என்று யோவான் ஸ்நானன் இயேசுவானவரை குறித்து சாட்சி கொடுத்தார் யோவான் ஸ்நானனின் சீடர்களில் இருவர் இயேசுவுக்கு பின் சென்றனர் இவர்களில் ஒருவர் யோவான் 1: 40

இவரே கிறிஸ்துவின் முதல் சீடர் யோவான் ஸ்நானனின் சாட்சியை கேட்ட பின்னர் இயேசுவோடு உறவாடிய அந்திரேயா அவர்தான் மேசியா என்பதை திட்டவட்டமாக அறிந்து கொண்டார்.

மேசியாவை கண்டோம் என்று கூறி தனது சகோதரன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார் யோவான் 1: 41 42

அந்திரயாவை மீண்டும் வேதாகமத்தில் சந்திக்கும் போது அவர் ஒரு பையனை இயேசுவிடம் அழைத்து வருகிறார் அந்தப் பையனிடம் இருந்து ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு இயேசுவானவர் 5000 பேருக்கு உணவளித்தார் யோவான் .6:5. 14

பின்னர் அவர் சில கிரேக்கர்களை இயேசுவானவரிடம் அழைத்து வருவதை காண்கிறோம் அப்போது இயேசு மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேலை வந்தது என்கிறார் யோவான். 12:20. 23
அந்திரேயா இயேசுவே மேசியா என்பதை அறிந்து கொண்டவுடன் முதலில் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார் சிறு பையனை இயேசுவிடம் அழைத்து வந்தார் யாக கிரேக்கர் சிலரை இயேசுவிடம் அழைத்து வந்தார்.

அந்திரயா அப்போஸ்தலனாகிய பேதுரு பவுல் இவர்களைப் போல தன் பேச்சினால் ஆயிரக்கணக்கானவர்களை இயேசுவண்டை அழைத்து வரும் வல்லமையை பெற்றிருக்கவில்லை.
என்றாலும் ஒவ்வொருவராக அவரிடம் அழைத்து வரும் வல்லமையை பெற்றிருந்தார். ஊழிய வாஞ்சையுடைய 
ஆனால் பேச்சு திறமையற்ற பலருக்கு அந்திரேயா முன்மாதிரியாக இருக்கிறார்.


இரத்தச்சாட்சியாக  மரித்த அந்திரேயா!


அந்திரேயா காக்கசீய மலை அடிவாரத்தில் ஊழியம் செய்ய சென்றார் தற்போது இந்தப் பகுதி ரஷ்யாவில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ளது.
அங்குள்ள சைத்திய மக்களுக்கு கிறிஸ்துவை பற்றி பிரசிங்கித்தார். இதன் பின்னர் அவர் பைசாண்டியும் (தற்போதைய இஸ்தான்புல்) பகுதியில் சபைகளை நிறுவினார் ஸ்டாகிஸ் என்னும் ஊழியரை பேராயராக அபிஷேகம் செய்தார் இந்த ஊழியத்தின் போது அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார் கல்லால் எரிந்து விரட்டப்பட்டார்!

இதன் பின்னர் கிரீஸ் நாட்டில் திரேஷ், மாசிடோனியா பகுதிகளில் ஊழியம் செய்தார் இறுதியாக பட் ரோஸ் என்ற பட்டணத்துக்கு வந்து சேர்ந்தார்.
அங்கே அதிபராக இருந்த ஏஜியேடிஸ் என்பவரின் மனைவி மெக்சிமில்லா அந்திரயாவின் பேச்சைக் கேட்டு மனம் திரும்பினால். இதைக் கண்ட அதிபர் ஆத்திரமடைந்தார் அந்திரேயா தனது ஊழியத்தை கைவிடாவிட்டால் அவரை சித்திரவதை செய்யப் போவதாக கூறி பயமுறுத்தினா ஆனால் அந்திரயாவோ அவரையும் மனமாற்ற முயற்சி செய்தார்.

கடும் கோபம் கொண்ட ஏஜியேடிஸ் அந்திரேயாவை சிலுவையில் அரைந்து
கொள்ளும்படி கட்டளையிட்டார்.
அந்திரேயாவை பெருக்கல் வடிவ சிலுவையில் அறைந்தனர். இரண்டு நாட்கள் சிலுவையில் தொங்கி வேதனையை அனுபவித்த போதிலும் அங்கு வந்தவர்களிடம் கிறிஸ்துவை பற்றி சாட்சி பகர்ந்தார். 

என்னை ஏற்றுக் கொள்ளும் கிறிஸ்து இயேசுவே உம்மை நான் பார்த்தேன் உம்மை நான் நேசித்தேன் உம்மில் நான் இருக்கிறேன்.

உமது நித்திய ஆளுகையின் சமாதானத்தில் என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஜெபித்து தனது ஆவியை விட்டார் ஆந்திரேயா.


கி.பி. 69 ஆம் ஆண்டு நவம்பர் இறுதி நாள் ரத்த சாட்சியாக மறைத்தார் அந்திரயா.

மேக்சிமில்லா அந்திரேயாவின் உடலை எடுத்து,பட்ரோசில் அடக்கம் செய்தாள்,பேரரசர் கான்ஸ்டன்டைனின்
மகன் கான்ஸ்டன்டியஸ் பேரரசரானபோது, கி.பி. 356இல் அந்திரேயாவின் உடல் எலும்புகளை மட்டும் எடுத்துச் சென்று பைசாண்டியத்திலுள்ள தூய அப்போஸ்தலர் ஆலயத்தின் பீடத்தில் வைத்தார்.கபால எலும்பு பட்ரோசிலேயே
இருந்தது.


கி.பி.  1460ஆம்  ஆண்டு துருக்கியர் பைசாண்டியத்தைக் கைப்பற்றிய பின்பு,அந்திரேயவின் கபால எலும்பு பாதுகாப்புக்காக ரோம் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு புனித பேதுரு ஆலயத்தில் வைக்கப்பட்டது.
1964ஆம் ஆண்டு போப்பாண்டவர் ஆறாம் பால் , புனித அந்திரேயாவின் கபால எலும்பை பட்ரோசிலுள்ள கிரேக்க ஆர்தோடக்ஸ் திருச்சபைக்குத் திரும்ப அளித்தார்.

தற்போது புனித அந்திரேயாவின் கபால எலும்பு வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு பேராலயம் கட்டப்பட்டுள்ளது.

புனித அந்திரேயா இறந்து பல நூற்றாண்டுகளுக்கு பிறகு அவரது வேறு சில நினைவுச் சின்னங்கள் ஒரு கப்பலில் ஸ்காட்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப் பட்டன . 
கரையை நெருங்கும் முன்னர் அந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகியது.
உயிர் தப்பிய மாலுமிகள் நீந்திக் கரை சேர்ந்து கிறிஸ்துவை பற்றிப் பிரசங்கித்தனர் .

அந்தக் கடற்பகுதி புனித அந்திரேயா வளைகுடா என்று அழைக்கபடுகிறது.
புனித அந்திரேயா ஸ்காட்லாந்தின் புனித பிதாவாகப் போற்றப்படுகிறார்!
இங்கிலாந்து நாட்டுக் கொடியில் புனித அந்திரேயாவின் சிலுவை என்றழைக்கப்படும் × வடிவ சிலுவைக்குறி காணப்படுகிறது!  .


 

Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*