யூதா எழுதின பொதுவான நிருபம் விளக்கவுரை Commentary on the Common Epistle of Jude
யூதா நிருபம் யூதா என்பவரால் எழுதப்பட்டது அவர் தன்னை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஊழியர் மற்றும் யாக்கோபின் சகோதரர் என்று அடையாளம் காட்டுகிறார். புதிய ஏற்பாட்டில் யூதாஸ் அல்லது யூதா என்று குறைந்தது ஆறு பேர் உள்ளனர். யூதா நிருபத்தின் ஆசிரியரை மத்தேயு மற்றும் மாற்குவின் நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள யூதா என பெரும்பாலான அறிஞர்கள் அடையாளம் காட்டுகின்றனர். ( மத்தேயு 13:55; மாற்கு 6: 3) உயிர்த்தெழுதல் வரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவரின் சகோதரர்கள் யூதாவும் கூட அவரை நம்பவில்லை. ( யோவான் 7: 5; அப்போஸ்தலர் 1: 14) யூதா ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுடன் இரத்த உறவைக் கோரலாம் என்றாலும் அவருடைய பணிவு மற்றும் பயனற்ற தன்மையைக் குறிக்க "ஊழியக்காரன்" என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்தார். இரத்த உறவு யூதாவை இரட்சிக்கவில்லை ஆனால் இறைவன் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்தப்படுத்தப்பட்டதன் மூலம் இரட்சிக்கப்பட்டார்.
தேவ ஜனம் (யூதா 1: 12)
யூதா வாசகர்களை மூன்று வெவ்வேறு சொற்களால் அடையாளம் காட்டுகிறார். முதலில் 'அழைக்கப்பட்டவர்கள்' கடவுள் அவர்களை இருளிலிருந்து அற்புதமான ஒளிக்கு அழைத்தார்.
இரண்டாவதாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் அவர்கள் சுத்திகரிக்கப்பட்டதால் புனிதப்படுத்தப்பட்ட 'பரிசுத்தவான்கள்' என்று அழைக்கிறார்.
மூன்றாவதாக 'காக்கப்பட்டவர்கள்' விசுவாசிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் கவனமாக காக்கப்பட்டு வழி நடத்தப்பட்டு மற்றும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பெருக்கத்தின் ஆசீர்வாதம்
யூதா மூன்று வார்த்தைகளால் வாசகர்களை வரவேற்கின்றது: இரக்கம் சமாதானம் மற்றும் அன்பு. பவுலைப் போலவே இவரும் தேவ பிள்ளைகளை வாழ்த்துகிறார். மக்கள் பல்வேறு வகையான துன்பங்களைச் சகிக்கும்போது தேவன் இரக்கமுள்ளவர் மற்றும் உதவ ஆர்வமாக இருக்கிறார். கிருபை என்பது தகுதியற்ற நரகத்திற்கு தகுதியான மற்றும் எதற்க்கும் தகுதியற்ற பாவிகளுக்கு காட்டப்படும் கருணை. யூதா இந்த ஆசீர்வாதங்களை பெற மட்டுமல்ல பன்மடங்கு பெருகவும் வேண்டும் என விரும்புகிறார்.
விசுவாசப் போராட்டம் (யூதா 1: 3)
பிதாவாகிய தேவன் நம்மை பரிசுத்தமாக்கியுள்ளார் நம்மை காக்கிறார் நம்மை நேசித்து அழைத்துள்ளார் என்ற ஆழ்ந்த அறிக்கையுடன் யூதா தனது கடிதத்தைத் தொடங்குகிறார் (யூதா 1: 2). விசுவாசம் என்பது தேவனுடைய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது போதகர்கள் பேராயர் மற்றும் பிற தலைவர்கள் மட்டுமின்றி அனைத்து விசுவாசிகளையும் உள்ளடக்கிய சபைக்கும் விசுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது 'ஒரே தரம் அனைவருக்கும்' அளிக்கப்பட்டது. கள்ள போதகர்கள் சொல்வது போல் அவ்வபோது புதுப்பிக்கப்படவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கற்பித்தபடி சத்தியத்தின் முழு செய்தியும் கொடுக்கப்பட்டுள்ளது (யோவான் 14:26; 16: 12-13). கள்ளப் போதகர்களால் "வேறொரு சுவிசேஷம்" மற்றும் 'வேறொரு கிறிஸ்து' என்று போதிப்பவர்களை பவுல் எச்சரிக்கிறார் (கலாத்தியர் 1: 6-9).
அதே நேரத்தில் இரண்டு தவறான போதனைகள் பிரதானமாக இருந்தன: கிருபையை ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்கான உரிமமாக பயன்படுத்துவதையும் கர்த்தராகிய இயேசுவை இறையான்மையின் தேவன் என்று மறுக்கும் விபரீத போதனைகள். அபரிதமான அல்லது மிஞ்சின கிருபையை பற்றி போதிப்பவர்கள் சொல்வது என்னவென்றால் " தேவன் எனது கடந்த கால நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்களையும் மன்னித்துவிட்டார். எனவே நான் விரும்பியபடி வாழ முடியும்" என எந்தவொரு பாவத்தையும் செய்ய அவர்கள் "கிருபையை' 'உரிமமாக' மாற்றியுள்ளனர். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் பரிசுத்தமாயிருக்கும்படி தேவன் நம்மை அழைத்துள்ளார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பரிசுத்தமும் நீதியும் கலந்த வாழ்க்கை (லேவியராகமம் 20: 7; 1 பேதுரு 1:16; ரோமர் 6: 1-14; 12: 1).
விசுவாசத்தின் சில குணங்கள் இங்கே:
1) விசுவாசம் தேவனின் வெளிப்பாடு:
இது தேவனால் பரிசுத்தவான்களுக்கு வழங்கப்பட்ட நம்பிக்கை. ஆகவே இந்த தெய்வீக வெளிப்பாடு தேவனிடமிருந்து தோன்றியது.
2) விசுவாசம் முழுமையானது:
வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கை முழுமையானது அதில் கூட்டல் கழித்தல் தேவையில்லை. இந்த நம்பிக்கை பூர்த்தியானது சிறந்தது மற்றும் குறைபாடற்றது.
3) விசுவாசம் பரிசுத்தமானது:
மதிப்புள்ளது விலைமதிப்பற்றது மற்றும் பரிசுத்தமானது. அதுமட்டுமன்றி இது இயற்கையிலே பரிசுத்த தன்மையுள்ளது. மற்ற மதங்களின் நம்பிக்கையைப் போலல்லாமல் இது தனித்துவமானது.
4) விசுவாசத்திற்கு தாக்கம்:
இந்த நம்பிக்கை கள்ள போதகர்களாலும் மற்றும் தவறான தீர்க்கதரிசிகளாலும் தவறாக சித்தரிக்கப்படுகிறது அதிலும் வருத்தம் என்னவெனில் சபைகளுக்குள்ளேதான் இவை தோன்றுகிறது. மேலும் இது வெளியில் இருந்தும் தாக்கப்படுகிறது.
5) விசுவாச போராட்டம்:
ஆகவே ஒவ்வொரு விசுவாசியும் விழிப்புடன் இருக்கவும் விசுவாசத்திற்காகப் போராடவும் அழைக்கப்படுகிறார்கள். யூதா அதை 'ஆர்வத்துடன்' செய்ய எழுதுகிறார் அதாவது முழு செறிவுடனும் வலிமையுடனும் தொடர்ச்சியாகவும் மற்றும் நிலையாகவும் போராட வேண்டும்.
மிகவும் பரிசுத்த விசுவாசம்
யூதா அனைத்து விசுவாசிகளையும் விசுவாசத்திற்காகப் போராட அழைக்கிறார். யூதா புத்தகம் சத்தியத்தை உறுதியாய் கொண்ட வெளிப்படுப்படுத்தப்பட்ட நல்ல தொகுப்பு.
1) பிதாவாகிய தேவன் (யூதா 1: 1):
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் 'நித்திய ஜீவன்' உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பிதாவாகிய தேவன் படைப்பாளராகவும் வாழ்வின் ஆதாரமாகவும் இருக்கிறார்.
2) கிறிஸ்துவே ஆண்டவர் (யூதா 1: 4):
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் உண்டு அனைவருக்கும் எஜமானரும் புகழப்பட வேண்டிய மகிமையின் தேவனவர்.
3) கிருபை (யூதா 1: 4):
பாவம் செய்பவர்கள் மனந்திரும்பவும் ஆண்டவரோடு ஒப்புரவாகவும் தேவனுடைய கிருபை ஈவாக வழங்கப்படுகிறது. பாவங்களில் ஈடுபடுவதற்க்கு 'உரிமம்' அல்ல என்று யூதா எச்சரிக்கிறார்.
4) மனிதனின் சீரழிவு (யூதா 1: 4):
ஏதேன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சி முழு மனுக்குலத்திற்கும் இப்பிரபஞ்சத்திற்கும் பாவத்தையும் சாபத்தையும் கொண்டு வந்தது. அனைவரும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்து விட்டார்கள். (ரோமர் 3:23)
5) பரிசுத்த ஆவியின் ஆளுமை (யூதா 1: 1920):
திரித்துவத்தின் மூன்றாவது நபர் பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளில் வாழ்கிறார்.
6) சாத்தான் என்பவன் உண்மையே (யூதா 1: 9):
சாத்தான் என்பவன் வீழ்ந்துபோன தேவதூதன் அவன் தேவனை எதிர்ப்பதில் தீவிரமாக இருக்கிறான் இந்த உலகில் அதுவே அவனுடைய விருப்பமும் நோக்கமுமாக இருக்கின்றது.
7) நியாயத்தீர்ப்பும் நரகமும் (யூதா 1: 6713):
பிதாவாகிய தேவன் நீதியுள்ள நியாயதிபதி எல்லா மனிதர்களையும் நியாயம் தீர்ப்பதற்கான அனைத்து அதிகாரமும் அவருக்கு உண்டு. நரகம் என்பது உண்மையானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரிக்கும் அனைவருக்கும் நித்திய தண்டனை காத்திருக்கிறது.
8) விசுவாசத்தினால் இரட்சிப்பு (யூதா 1:11):
இரட்சிப்பு என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தால் மட்டுமே பெறப்படுகின்ற ஒரு இலவச பரிசு என்று யூதா வலியுறுத்துகிறார்.
9) இரண்டாம் வருகை (யூதா 1:14):
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பரிசுத்தவான்களுடன் முழு மனிதகுலத்திற்குமான நீதியுள்ள நியாயதிபதியாக வருவார்.
10) நித்திய ஜீவனைப் பாதுகாக்க (யூதா 1:24):
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும். தேவன் நம்மை வீழ்ந்து விடாமல் பாதுகாப்பார்.
11) இறையாண்மை தேவன் (யூதா 1:25):
வேதாகமத்தில் தேவன் என்பவர் ஒரு உள்ளூர் தெய்வம் அல்லது ஒரு குலத்தின் கடவுள் அல்லது ஒரு பருவத்திற்கான கடவுள் என்று குறிப்பிடவில்லை. பிதாவாகிய தேவன் இறையாண்மை கொண்டவர் அவர் காணப்பட்ட உலகம் பிரபஞ்சம் அனைத்தையும் ஆளுகின்றவர் மனுக்குலம் மற்றும் வரலாறு ஆகிய எல்லாவற்றின் மீது முழுமையாக ஆட்சி செய்கிறார்.
12) புனித நூல்கள் (யூதா 1: 15-19):
வேதாகமம் சத்தியமே; வரலாற்று ரீதியாகவும் துல்லியமானது தீர்க்கதரிசன ரீதியாகவும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் உண்மையானது.
கள்ள போதகர்கள் (யூதா 1: 8)
கள்ள போதகர்கள் எதிராக யூதா எச்சரிக்கிறார்.
1) கனவுகளை ஃ சொப்பனங்களை நம்புதல்: கள்ள போதகர்கள் கனவுகள் மற்றும் சொப்பனங்களை நம்புகின்றனர். பெரும்பாலும் அவை மாயைகள் அல்லது கற்பனைகள் அல்லது தூக்க ஆசைகள். இவை தேவனிடமிருந்து வந்தவை அல்ல. அவர்கள் கனவுகளைப் பகிரும்போது மக்கள் ஈர்க்கப்பட்டு அவர்களின் தீவிரப் பின்தொடர்பாளர்களாக மாறுகிறார்கள்.
2) மாம்சத்தை அசுசிப்படுத்துதல்: அவர்கள் ஒரு புனிதமான வாழ்க்கையை நடத்துவதில்லை மேலும் மக்களை அசுத்தமான விபச்சார உறவுகளுக்கு தவறாக வழிநடத்துகிறார்கள். ஒரு கிறிஸ்தவத் தலைவர் பெண்களிடம் தன்னுடன் உடலுறவு கொள்வது என்பது தெய்வ வழிபாடாகவும் கடவுளுக்கு செய்யும் சேவை எனவும் நம்பவைத்தார். தேவனின் வார்த்தையை அறியாத முட்டாள் பெண்கள் இத்தகைய தவறான போதகர்களுக்கு இரையாகிறார்கள்.
3) கர்த்தத்துவத்தை நிராகரித்தல்: அவர்கள் தேவன் அல்லது திருச்சபை அல்லது தெய்வீகத் தலைவர்களின் அதிகாரத்தின் கீழ் வேலை செய்வதில்லை. அவர்கள் தேவனிடமிருந்து வல்லமை மற்றும் அதிகாரத்தை நேரடியாகப் பெறுவதாகவும் நேரடியாக அவருக்கு மட்டும் பதிலளிப்பதாகவும் கூறுகிறார்கள். பெரியவர்கள் அல்லது வழிகாட்டிகளுக்கு அவர்களிடம் மதிப்பும் மரியாதையும் இல்லை.
4) தூஷணம்: அவர்கள் பெருமையினால் அவர்கள் எளிதில் தூஷிக்க முடியும். தேவனின் நாமத்தை வீணாக வழங்குவது தூஷணம். அவர்கள் பேசும் அனைத்து வார்த்தைகளையும் பரிசுத்தஆவியானவர் அருளினது என்று கூறுவதும் தூஷணம் ஆகும்.
பிரதான தேவதூதர் மிகாவேல் (யூதா 9)
மிகாவேல் பிரதான தூதராக குறிப்பிடப்படுகிறார் மேலும் எப்போதும் எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளவராக நான்கு சந்தர்ப்பங்களிலும் குறிப்பிடப்படுகிறார். ( தானியேல் 10; 12; வெளிப்படுத்தல் 12 மற்றும் யூதா) பிசாசு மோசேயின் உடலைக் கைப்பற்ற முயற்ச்சித்ததாக யூதா சில தகவல்களை அல்லது வெளிப்பாட்டைக் கொண்டிருந்தார். மோசேயின் கல்லறை யாருக்கும் தெரியவில்லை. ( உபாகமம் 34: 5-6) மிகாவேல் பிசாசுடன் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பற்றி யூதா எழுதுகிறார் ஏன் அவர் பிசாசுடன் தகராறு செய்தார் என்று காரணம் தெளிவாக இல்லை. மிகாவேல் ஆவிக்குறிய போராட்டத்திற்கான நுண்விளக்கங்களை வழங்குகிறார். பிசாசை கிண்டல் செய்யவோ கேலி செய்யவோ அல்லது தீர்ப்பளிக்கவோ தேவையில்லை. மிகாவேல் தேவனின் அதிகாரத்தின் கீழ் போரிட்டார். தங்களுக்குப் புரியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைப் பேசுபவர்களை புத்தியில்லாத மிருகங்கள் போன்றவர்கள் என்று யூதா அழைக்கிறார். ( யூதா 10)
காயீன் பிலேயாம் மற்றும் கோரா (யூதா 11)
யூதா கள்ள போதகர்களை கடுமையாக சாடுகிறார். அவர்களை பழைய ஏற்பாட்டின் மூன்று நபர்களுடன் ஒப்பிடுகிறார். இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப்போனார்கள் (யூதா 1:11). இம்மூவரும் தேவனை வணங்குவதில் தவறிழைத்தவர்கள்.
1) காயீனின் பாதை:
தேவனை வணங்குவதில் காயீன் கொஞ்சமும் விசுவாசமின்றி தனக்கென்று ஒரு பாணியை கையாண்டான். ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்பதில் காயீனுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே தான் இரத்தமின்றி ஒரு பலியைக் கொண்டு வந்தான் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதுபோல தான் இந்த கள்ள போதகர்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம் அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை புரிந்து கொள்ளவில்லை. காயீனின் இதயம் பொறாமையும் வெறுப்பும் நிறைந்ததாயிருந்தது. உண்மையில் சொல்லப்போனால் அவன் தேவனுக்கு உண்மையாக இல்லை ஆகவே தான் ஆபேலைக் கொன்று விட்டு தேவன் கேட்டபோது தைரியமாக பொய்யைக் கூறினான் (ஆதியாகமம் 4: 9).
2) பிலேயாமின் பிழை:
இஸ்ரவேலரை பலவீனப்படுத்த பாலாக் வழங்கிய செல்வத்தை அதிகரிப்பதில் பிலேயாம் ஆர்வம் காட்டினான். பிலேயாமை சுயலாப தீர்க்கத்தரிசி என்று அழைக்கலாம். இஸ்ரவேலரை சபிக்க முடியாமல் பிலேயாம் இஸ்ரவேல் ஆண்களை மோவாபிய பெண்களால் கவர்ந்திழுக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தான் அப்பெண்கள் தங்கள் கடவுள்களை வணங்க இஸ்ரவேலரை இழுத்தார்கள். யோவான் யூதா மற்றும் பேதுரு ஆகியோர் புதிய ஏற்பாட்டில் பிலேயாமைக் கண்டிக்கிறார்கள். " செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள். அவன் அநீதத்தின் கூலியை விரும்பினான்" (2 பேதுரு 2:15) என்று எழுதியிருப்பதை காண்கிறோம். பிலேயாம் இஸ்ரவேல் ஆண்களை பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட தூண்டினான் (வெளிப்படுத்துதல் 2:14). இன்றும் இந்த கள்ளப் போதகர்கள் சீஷர்களை பாவத்திற்கு ஒத்துப் போவதிலும் பாவம் செய்ய உரிமமாக கிருபை அளிக்கப்பட்டதாகவும் கூறுவதுமல்லாமல் பேராசைக்கு ஊக்கமும் அளிக்கிறார்கள்.
3) கோராவின் கலகம்:
கோராகு தேவன் அபிஷேகித்த தலைவர்களான மோசே ஆரோன் மேல் பொறாமைக் கொண்டு மோசேவுக்கும் ஆரோனுக்கும் எதிராகவும் ஆண்டவருக்கு விரோதமாகவும் கலகம் செய்தான். கர்த்தரின் சந்நிதியில் அவருடைய விருப்பத்திற்கு மாறாக ஆராதிக்கும் முறையை தேர்ந்தெடுப்பதின் மூலமும் ஆரோனின் அதிகாரத்தை மீறுவதற்கும் மற்றவர்களைத் தூண்டினான். தேவனை வணங்குவதில் புதுமை என்பதெல்லாம் எப்போதும் ஆபத்தானதே.
விசுவாசமின்றி ஆராதிப்பது பாவத்துடன் ஆராதிப்பது மற்றும் சமரசம் தேவனின் நடைமுறை ஒழுங்கு மற்றும் நெறிமுறையை மீறும் ஆராதனை ஆகியவை நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆபத்தானவையே.
சிலரின் சீரழிவு (யூதா 12-13)
மனிதர்களின் சீரழிவை வெளிப்படுத்தும் சிலர் இருக்கிறார்கள்.
1) அன்பின் விருந்துகளில் கறைகள்: இது கரும்புள்ளி போன்றது அல்லது கருப்பு செம்மறி ஆடு போன்றது. இது சுய சேவை செய்யும் மேய்ப்பர்கள் என்றும் விளக்கப்படுகிறது.
2) தண்ணீர் இல்லாத மேகங்கள்: நம்பிக்கையைத் தரும் மேகங்கள் ஆனால் உயிர் கொடுக்கும் மழையைத் தருவதில்லை. உண்மையில் அவை சூரியனையும் தடுக்கின்றன. இந்த மேகங்கள் காற்றால் கொண்டு செல்லப்படுகின்றன.
3) பழங்கள் இல்லாத மரங்கள்: இலையுதிர்காலத்தில் மரங்கள் பழம்ங்கள் கொடுக்க வேண்டும். இருப்பினும் இவர்கள் கனிகள் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் வளங்களை உட்கொள்கிறார்கள் ஆனால் எந்தப் பலனையும் தருவதில்லை.
4) பொங்கி எழும் அலைகள்: வேதாகமத்தில் கடல் சமாளிக்க முடியாத பயங்கரமான ஒன்றாக கருதப்பட்டது. துன்மார்க்கர்கள் கலங்கிய அல்லது பொங்கி எழும் கடல் போன்றவர்கள் என்று தீர்க்கதரிசி ஏசாயா எழுதுகிறார். ( ஏசாயா 57:20) நிச்சயமாக அவர்கள் நிற்க்கநேரமில்லாமல் அல்லது அதிரடியாகவே இருக்கிறார்கள் ஆனால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் என்ன செய்தாலும் தங்கள் அவமானத்தை ஃ அழுக்கை வெளியேற்றுவார்கள்.
5) அலைந்து திரியும் நட்சத்திரங்கள்: இந்த நட்சத்திரங்கள் கணிக்க முடியாதவை மற்றும் வழியை ஃ திசையை அறியப் பயனடாதவை. அதேபோல இவர்கள் நம்பகமானவர்கள் அல்ல.
தேவனின் நிச்சயமான நியாயத்தீர்ப்பு (யூதா 14-16)
நிச்சயம் கர்த்தர் பரிசுத்தர்; அதனால் அவன் துன்மார்க்கரைத் தண்டிப்பார். அவர் தனது தீர்ப்புகளில் பக்கச்சார்பற்றவர் இது தேவ நீதியின் நிரூபணம்.
1) இஸ்ரேலின் தேசம்: யூதா உதாரணத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறார். ( எண்ணாகமம் 14) வேதாகமத்தில் இது மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இது மீண்டும் மீண்டும் மறக்கப்படுவதால் இது மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது.
2) தேவதூதர்கள் தீர்ப்பளிக்கப்படுகிறார்கள்: தங்கள் ஸ்தானத்தில் நில்லாத தேவதூதர்கள் பாவம் செய்தவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர் மற்றும் இறுதியாக தீர்ப்பளிக்கப்படுவார்கள். ( யூதா 6) ஏசாயாவில் குறிப்பிடப்பட்ட தேவதூதர்களின் அடையாளம் நோவாவின் காலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ( ஏசாயா 14: 12-14; வெளிப்படுத்துதல் 12: 4; ஆதியாகமம் 6: 1-2)
3) சோதோம் மற்றும் கொமோரா: இரட்டை நகரங்கள் பாவத்திற்காக தீர்ப்பளிக்கப்பட்டது. நகரங்கள் செழிப்பாக இருந்தன ஆனால் அவற்றின் பாவத்தின் காரணமாக அவைகள் அழிக்கப்பட்டன. " இதோ கெர்வமும் ஆகாரத் திரட்சியும் நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை." ( எசேக்கியேல் 16:49)
ஏனோக்கின் தீர்க்கதரிசனம் (யூதா 1415)
ஏனோக்கு ஆதியாகமத்திலும் எபிரெயரிலும் குறிப்பிடப் பட்டுள்ளார். ( ஆதியாகமம் 5 மற்றும் எபிரெயர் 11) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைக் கொண்ட ஏனோக்கின் ஒரு பழங்கால புத்தகம் இருந்திருப்பதாக வேதஅறிஞர்கள் நம்புகின்றனர். அந்த புத்தகம் யூதர்கள் மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவர்களிடையே பிரபலமாக இருந்தது. இந்தப் புத்தகம் பேழைக்குள் நோவாவால் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் அவர் அதை பல முறை வாசித்தார் எனவும் சிலர் கூறுகிறார்கள். மூன்று வெவ்வேறு சூழல்களில் வேதாகமத்தில் இல்லாத ஆதாரங்களையும் பவுல் மேற்கோள் காட்டினார். ( அப்போஸ்தலர் 17:28; ஐ கொரிந்தியர் 15:33; தீத்து 1:12) தேவன் அனைத்து தேவபக்தியற்றவர்களையும் நியாயம்தீர்ப்பார். அவர் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார் அனைத்து மனிதர்களும் அவருக்கு பதிலளிக்க வேண்டும்.
பழக்கமான முட்டாள்தனமான பாவங்கள் (யூதா 16-18)
இந்த பொல்லாத மக்கள் வார்த்தைகளால் பாவம் செய்கிறார்கள்: முறுமுறுத்து புகார் செய்கிறார்கள் மேலும் முகஸ்துதி செய்கிறார்கள். அவர்கள் ஏமாற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். நன்றி கெட்டவர்கள் தெய்வமற்ற மக்கள் மற்றும் தேவனுடன் சரியான உறவில் இல்லாதவர்கள் முறுமுறுப்பார்கள். முறுமுறுக்கும் அல்லது முறையிடும் மக்கள் அதிருப்தியடைந்தவர்கள் அவர்கள் கர்த்தரை அவமதிக்கிறார்கள். அவர்கள் வார்த்தைகளைப் பயன்படுத்தி பொருட்கள் அல்லது செல்வாக்கு உள்ள மக்களை முகஸ்துதி செய்து பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
இருப்பினும் தேவ ஜனங்கள் வேறுபட்டவர்கள் மற்றும் அப்போஸ்தலர்களே அவர்களுக்கு மாதிரி. கடைசி நாட்களில் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் இருப்பார்கள்.
சில பிரச்சனைகளை உருவாக்குபவர்கள் (யூதா 19)
இந்த மக்கள் ஆவிக்குறியவர்கள் அல்ல. அவர்கள் மாம்ச ஃ ஜென்ம இயல்புடையவர்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின் கீழ் நடப்பதில்லை. உணர்ச்சிவசப்படும் மக்கள் ஆசைகள் அல்லது உணர்ச்சிகளின் மோகங்களால் உந்தப்படுவார்கள். அவர்கள் சகக்திவாய்ந்த-மனிதர்களைப் போல நடந்துகொள்வதன் மூலம் பிளவுகளை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் தங்களை மேன்மையாக சித்தரிக்கிறார்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களை தாழ்ந்தவர்களாக உணரச் செய்கிறார்கள்.
கட்டமைத்தல் மற்றும் அடைதல் (யூதா 20-23)
விசுவாசிகள் மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை வைத்திருக்க வேண்டும். அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். தேவ ஆவியால் வழிநடத்தப்பட்டு ஜெபம்பண்ணுவது அவசியம். ( ரோமர் 8:26) இரக்கமுள்ளவர்களாய் விசுவாசிகள் மற்றவர்களை நரக நெருப்பிலிருந்து இழுத்து காப்பாற்ற வேண்டும். விசுவாசிகள் தங்கள் நீதியின் ஆடையைக் கறைபடுத்தும் பாவத்தை வெறுக்க வேண்டும்.
துதி ஃ டாக்ஸாலஜி (யூதா 24-25)
இது தேவ மகத்துவத்தின் பிரகடனமாகும் அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார் நம் வாழ்வில் அவருடைய திட்டத்தை நிறைவேற்றுகிறார் மேலும் பாவம் சாத்தான் உலகம் மற்றும் கள்ள போதகர்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்க அவரால் முடியும். நித்திய ஜீவனை அனுபவித்து அவருடைய மகிமையான பிரசன்னத்தில் இருப்போம். தேவனின் ஞானம் மகிமை கம்பீரம் வல்லமை மகத்துவம் என்றென்றும் நிலைத்திருக்கும்.