யூதா நிருபம் ஒரு அறிமுகம்
பாகம் 01
யூதா எழுதின நிருபமானது 2 பேதுரு நிருபத்துடன் தெளிவான ஒப்புமைகளைக் கொண்டுள்ளது. உண்மையில் யூதா எழுதின நிருபமும் 2 பேதுரு 2ம் அதிகாரமும், அவ்வப்போது ஒரேமாதிரியான வார்த்தைகளையும் விளக்கங்களையும்பயன்படுத்துகின்றன. ஆகவே யூதாவின் சிறிய நிருபத்தைப் பேதுருவின்இரண்டாம் நிருபத்துடன் சேர்த்துப் படித்தல் ஏற்புடையதாக உள்ளது.
யூதாமற்றும் 2 பேதுரு நிருபங்களின் பாடக்கருத்து, 1 பேதுரு நிருபத்தின் பாடக்கருத்தில் இருந்து கணிசமான அளவு மாறுபடுகிறது, ஆனால் அவைகள்கிறிஸ்துவின் சரீரத்தினுடைய நலம் மற்றும் வலிவு ஆகியவற்றிற்குக்
குறைவானவலிவூட்டுபவையாக இருப்பதில்லை.
எழுத்தாளர்
யூதா தம்மை, "இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா” என்று குறிப்பிட்டார் (வசனம் 1). அவர்குறிப்பிட்ட அந்த யாக்கோபை நாம் அடையாளங் காணக்கூடுமென்றால், அந்தஅளவுக்கு நாம் யூதாவை அடையாளம் கண்டு கொண்டிருப்போம்.
தொடக்ககாலசபையில் இந்தப் பெயரில் பிரபலமாக இருந்த மனிதர், கர்த்தரின் சகோதரரானயாக்கோபு என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை (நடபடிகள் 15:13; 21:18;கலாத்தியர் 1:19). இவர்தாம் யாக்கோபு நிருபத்தை எழுதிய அதே மனிதராகவும்உயிர்த்தெழுதலுக்குப் பின்பு கர்த்தரின் தரிசனம் கிடைக்கப் பெற்றவருமாக இருந்தார்
(1 கொரிந்தியர் 15:7). யாக்கோபு யார் என்பதற்கு யூதா வேறுஎந்த விளக்கமும் அளிக்கவில்லை, ஏனென்றால் வேறு ஒன்றும் தேவையில்லாதிருந்தது. தொடக்க கால சபையில் பெயரைக் குறிப்பிடுதலே போதுமானதுஎன்ற அளவுக்கு ஒரே ஒரு யாக்கோபு மாத்திரமே இருந்தார்.
சாத்தியமானஇன்னொரு நபர் செபதேயுவின் குமாரனான யாக்கோபு மாத்திரமே, அவர்யூதா தமது நிருபத்தை எழுதுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கொலைசெய்யப்பட்டார் (நடபடிகள் 12:1, 2).
கர்த்தருக்கு யாக்கோபு, யோசேப்பு (அல்லது யோசே), சீமோன் மற்றும் யூதா(அல்லது யூதாஸ்) என்ற பெயர்களைக் கொண்ட சகோதரர்கள் இருந்தனர் என்றுநமக்குக் கூறப்பட்டுள்ளது (மத்தேயு 13:55; மாற்கு 6:3). இயேவின் வாழ்நாள்காலத்தின்போது, அவர் கிறிஸ்து என்று அவரது சகோதரர்கள் விசுவாசிக்காமல்மற்றவர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்திருந்தனர்
(யோவான் 7:1-5).யாக்கோபுவே முதலில் விசுவாசி ஆகியிருக்கச் சாத்தியம் உள்ளது, மற்றும் அவர்தமது பிறசகோதரர்களுக்குப் போதித்து இருக்கலாம். பவுல் 1 கொரிந்தியர்நிருபத்தை எழுதிய வேளையில், கர்த்தரின் சகோதரர்கள், நன்கு அறியப்பட்டபிரசங்கியார்களாகவும் போதகர்களாகவும் இருந்தனர்
(1 கொரிந்தியர் 9:5).யாக்கோபுவோ அல்லது யூதாவோ தாங்கள் எழுதிய நிருபங்களின் தொடக்கவசனங்களில், தங்களைக் கர்த்தரின் சகோதரர் என்று அடையாளப்படுத்த வன்மையாக முயற்சிக்கவில்லை. அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள்என்பதைக் காட்டிலும் உயர்ந்த கனத்தைக் கேட்கவில்லை
எழுதிய வேளை
யூதா எழுதிய நிருபத்தில் உள்ள கள்ளப் போதகர்களைப் பற்றிய விவரிப்பு2 பேதுரு 2ம் அதிகாரத்தில் உள்ளதைப் போன்றதாக இருக்கிறது.
பேதுருவின்வார்த்தைகளில் பலவற்றை யூதா கடனாகப் பெற்றிருப்பார் என்பது உறுதிஎன்னுமளவிற்குச் சூழ்நிலைகள் ஒன்றுபோல் இருந்தன. பேதுரு, "...அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்” என்று எதிர்கால வினைச்சொல்லில் எச்சரிக்கை செய்திருக்கையில்
(2 பேதுரு 2:1)கள்ளப்போதகர்கள் சபைகளில் பக்கவழியாய் நுழைந்திருந்தனர் என்றுகடந்த கால வினைச்சொல்லில் யூதா சுட்டிக்காண்பித்திருந்தார்.
யூதா தமதுநண்பர்களுக்கு, அவர்களின் பொதுவான இரட்சிப்பைக் குறித்து அதிகம்மேலே உயர்த்தும் ஒரு நிருபத்தை எழுத நம்பிக்கை கொண்டிருந்தார், ஆனால்கள்ளப் போதகர்கள் சபைக்கு முன்னிறுத்திய அச்சுறுத்துதல், அதைப்பற்றிஎழுதும்படியும் அவர்கள் விசுவாசத்திற்காகப் போராடும்படி வேண்டிக்கேட்டுக்கொள்ளும்படியும் அவரை வற்புறுத்திற்று (யூதா 3).
யூதாவின் நிருபம், நம்மால் பதில் அளிக்க இயலாததும், நியாயமான யூகங்களை மாத்திரமே ஏற்படுத்தக் கூடியதுமான பல கேள்விகளைஎழுப்புகிறது. யூதா மற்றும் பேதுரு ஆகியோரின் வார்த்தைகள் ஒன்றுக்கொன்றுமறுவலிவூட்டுகின்றன என்று நாம் அறிந்திருக்கிறோம். சிறந்த தகவல் எதுவும்இல்லாத நிலையில், யூதா தமது நிருபத்தை, பேதுரு யாருக்கு எழுதினாரோ அதேபொதுவான பகுதிக்கே எழுதினார் என்று நாம் யூகிக்கிறோம்.
யூதா சில சபைக்குழுமங்களில் அதிகம் செல்வாக்கு உடையவராக இருந்திருக்க பேதுரு மற்றசில சபைக்குழுமங்களில் அதிகம் செல்வாக்கு உடையவராக இருந்திருக்கலாம்.தங்கள் கள்ளப்போதனைகளைக் கொண்டு சபைகளில் இடர்ப்பாடு ஏற்படுத்திக்கொண்டிருந்த போதகர்களுக்கு எதிராக, யூதா தாமும் பேதுரு அப்போஸ்தலரும்,ஒன்றாக நின்றதைத் தெளிவுபடுத்துவதற்காகப் பேதுருவின் வார்த்தைகளைத்தெரிந்தே பயன்படுத்தி இருக்கலாம்.
அநேகமாக 2 பேதுரு நிருபம் எழுதிஒருசில ஆண்டுகளுக்குப் பின்பு யூதா தமது நிருபத்தை எழுதி இருக்கலாம்,அது இந்த நிருபம் எழுதப்பட்ட காலத்தை 60களின் பிற்பகுதி அல்லது70களின் முற்பகுதி என்பதாகக் குறிப்பிடும். இந்த நிருபத்தை எழுதியபோதுஇதன் ஆசிரியர் எங்கிருந்தார் என்பதற்கோ அல்லது அவரது வாசகர்களுடன்அவர் கொண்டிருந்த உறவுபற்றிய வரலாற்றிற்கோ இந்த நிருபம் குறிப்புஎதையும் தருவதில்லை .
God bless you.. Umn ministry