யூதா நிருபம் ஒரு அறிமுகம் பாகம் 02

0





யூதா நிருபம் ஒரு அறிமுகம் பாகம் 02




யூதா நிருபத்திற்கான ஒரு வரைகுறிப்பு



1. தேவனை மறுப்பவர்கள் மீது அவரது நியாயத்தீர்ப்பு (வசனங்கள் 3-7).

II. தேவபக்தியற்றவர்களின் முரட்டுத்தனத்தின்மீது தேவனுடையகடுங்கோபம் (வசனங்கள் 8-16).

III. தேவன் தம் மக்கள்மீது கொண்ட அன்பு (வசனங்கள் 17-23).

துதி (வசனங்கள் 24, 25).

விசுவாசத்திற்காகப் போராடுங்கள் (யூதா 3-25)

ஒவ்வொரு கிறிஸ்தவரும், சபைக்குள் எழக்கூடிய, பிரிவினைகள், தவறானபுரிந்துகொள்ளுதல்கள் மற்றும் போராட்டங்கள் ஆகியவற்றைக் கையாளச் சிலவழிகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 


இது கிறிஸ்துவின் ஊழியத்திற்காகஅதிகமான நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிக்கும் பிரசங்கியார்கள் மற்றும்போதகர்களுக்கு விசேஷித்த வகையில் உண்மையானதாக உள்ளது. யூதாவின்வார்த்தைகள் நம்மை, சபைக்குள்ளாக இருக்கும் போராட்டங்களைச் சமான.நிலையில் அணுகும்படி தூண்டுகின்றன.


தேவனை மறுதலிப்பவர்கள் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு (வசனங்கள் 3-7)


யூதா தமது வாசகர்களுடன், இரட்சிப்பு பற்றிய ஒரு செய்தியைப்பகிர்ந்து கொள்ள விரும்பியதாகக் கூறினார் (வசனம் 3). கிறிஸ்தவத்தின்மாபெரும் ஒன்றிணைக்கும் கருத்துக்களைப் பற்றிப் பேசுதலும் எழுதுதலும்மன எழுச்சியூட்டுவதாகவும் விசுவாசத்தைக் கட்டி எழுப்புவதாகவும் உள்ளது.அன்பு, மீட்பு மற்றும் இரட்சிப்பு என்ற மாபெரும் ஆய்வுக்கருத்துக்களைப்பற்றிச் சிந்தித்துப் பகிர்ந்து கொள்ளக்கூடும்போது, எவரொருவரும்கள்ளப் போதகர்கள் பற்றி விவாதிக்க விரும்புவது ஏன்? யூதாவைப் பொறுத்தமட்டில் இது தேவைப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது. இந்தக் கிறிஸ்தவர்கள்,தாங்கள் மகிழ்வுடன் அனுபவித்த "பொதுவான இரட்சிப்பை இழந்துபோகும்அளவுக்கு, கிறிஸ்துவின் செய்தியானது சமரசப்படுத்தப்பட்டிருந்தது என்பதைஅவர் புரிந்து கொண்டிருந்தார்.


பேதுருவைப் போன்று யூதாவும், தமது வாசகர்கள் ஆரம்பம் முதல்கேள்விப்பட்டிருந்தது நிறைவானதாக இருந்தது என்று புரிந்துகொள்ள வேண்டும்என்று விரும்பினார், அப்போஸ்தலர்கள் மற்றும் ஏவுதல் பெற்றபிறர் ஆகியோரின்செய்தியில், அவர்கள் “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்டவிசுவாசத்தைப் பெற்றிருந்தனர்


 (வசனம் 3; இ.வ. 2 பேதுரு 1:3). அவர்களுக்குள்பக்கவழியாய் "நுழைந்துள்ள" போதகர்களிடத்தில் இருந்து அவர்களுக்குஒளியூட்டப்படுதல் தேவைப்படவில்லை (வசனம் 4; 2 பேதுரு 2:1ல் பேதுரு“தந்திரமாய் நுழையப்பண்ணி” என்ற இதேபோன்ற சொற்றொடரைப்பயன்படுத்தினார்).


 கள்ளப்போதகர்கள், தாங்கள் இப்படிப்பட்டவர்களாகஇருப்பதைத் தாங்களே அறிவித்துக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தல்அரிதாக உள்ளது. அவர்கள் அன்பின் பொறுமை மற்றும் ஆவிக்குரிய தன்மைஆகியவற்றின் தூதர்களாக முகமூடி அணிந்து கொள்கின்றனர்


கிறிஸ்தவர்கள் "நடைமுறை விஷயங்களில் இருந்து “போதனையை” பிரித்து வைக்கச் சாய்கின்றனர். கள்ளத் தீர்க்கதரிசிகளை “அவர்களுடையகனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" என்று இயேசு கூறினார் (மத்தேயு 7:16).யூதாவும் அதையே கூறினார்: கள்ள மனிதர்கள், கள்ள வாழ்வினால் தங்களைகாண்பிக்கின்றனர். 



அவர் தமது வாசகர்களின் விசுவாசத்திற்கு அச்சுறுத்தல் விடுத்திருந்த போதகர்களைப் பற்றிப் பின்வரும் விஷயங்களை உற்றுநோக்கி இருந்தார்:

(1) அவர்கள் தேவபக்தியற்ற வாழ்வை வாழ்ந்தனர் (2) அவர்கள் தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்கு ஏதுவாகப் புரட்டி இருந்தனர்; மற்றும்(3) அவர்கள், இராஜரீகமுள்ள கர்த்தர் என்ற வகையிலான இயேசு கிறிஸ்துவைமறுதலித்தனர் 

(வசனம் 4). நான்கு விவாகரத்துகளினூடே கடந்து சென்ற அந்ததிருமண ஆலோசகர் ஒருவரின் கூற்றைத் தீவிரமானதாக எடுத்துக் கொள்ளுதல்என்பது கடினமானதாக இருப்பது போலவே, தேவனைப் பற்றிப் பேசி, தேவபக்தியற்ற வாழ்வை நடத்துபவர்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுதல் என்பதும்கடினமானதாக உள்ளது. சீராக் ஆகமம் என்ற தள்ளுபடி ஆகமத்தின் ஒரு புத்தகமானது பின்வரும் ஆலோசனையை அளிக்கிறது: "ஒரு மனிதன் தனது சொந்தவாழ்வின் நடக்கையில் ஞானமாக இருந்தால், அவன் பேசும்போது அவனது நல்லுணர்வு நம்பிக்கை வைக்கப்படக் கூடியதாக இருக்கும்.


 * கிறிஸ்தவ விசுவாசத்தின்மாபெரும் போதனைகள், வாழ்வுக்குத் தொடர்பற்ற கோட்பாடுக் கட்டுமானங்களாக மாத்திரமே உள்ளன என்று ஒருக்காலும் புரிந்துகொள்ளப்படக்கூடாது. பேதுருவைப் போன்று (2 பேதுரு 2:4-6), கடந்த காலத்தில் தேவபக்திஇல்லாதவர்கள் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பை மறுகண்ணோட்டம்இட்டதன் மூலம் யூதா, கள்ளப்போதகர்களைத் தேவன் நியாயந்தீர்ப்பார்என்பதற்கு ஆதாரத்தைக் கண்டறிந்தார். 


அவரது உதாரணங்களில் இரண்டு,பேதுருவின் உதாரணங்களாகவே இருந்தன. தூதர்களை நியாயத்தீர்ப்பின்சங்கிலிகளுக்குத் தேவன் கைவிடுதல் மற்றும் அவர் சோதோமையும் கொமோராவையும் அழித்தல் (வசனங்கள் 6, 7). பெருவெள்ளத்திற்கு முந்திய உலகத்தைப்பற்றிய பேதுருவின் குறிப்பிடுதலுக்குப் பதிலாக, இஸ்ரவேல் மக்கள் எகிப்தில்இருந்து வந்தபோது அவர்களைத் தேவன் நியாயந்தீர்த்ததைப் பற்றி யூதாகுறிப்பிட்டார் (வசனம் 5).


 கருத்து ஒரேமாதிரியானதாகவே உள்ளது. "உன்தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்” என்றமோசேயின் வார்த்தைகளின்படி (உபாகமம் 4:24), தேவன் தம்மை எப்போதுமேநியாயத்தீர்ப்பின் தேவனாகக் காண்பித்துள்ளார்.



சோதோம் மற்றும் கொமோராவில் இருந்தவர்கள், அவர்களின் “முழுமையான ஒழுக்கவீனம் ., அந்நிய மாம்சத்தில் விருப்பம்" ஆகியவற்றினால் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் உதாரணங்களாகப் பயன்படுகின்றனர். "அந்நியமாம்சம்" அல்லது "நெறிபிறழ்வு" (NIV) என்பது, ஆதியாகமம் 19ம் அதிகாரத்தில்பதிவுசெய்யப்பட்டுள்ள ஓரினச் சேர்க்கையின் குறிப்பாக உள்ளது.


 இன்றையநாட்களின் உலகத்தினுடைய கட்டுப்பாடற்ற பாலுறவுப் பழக்கங்களைத்தற்காக்க அல்லது அவற்றில் ஈடுபடச் சாய்பவர்கள், சோதோம் மற்றும் கொமோராவில் இருந்தவர்கள் "நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து,திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்” (வசனம் 7) என்ற யூதாவின்எச்சரிப்பைப் பற்றிச் சிந்தித்தல் நல்லது. அந்த நகரங்களை நியாயந்தீர்த்த தேவன்நம் எல்லாரையும் நியாயந்தீர்ப்பார்.


தேவபக்தி அற்றவர்களின் அகங்காரத்தின் மீதுதேவனுடைய கடும்சினம் (வசனம் 8-16)


இயேசுவின் நாட்களில் இருந்த பரிசேயர்கள் தங்கள் மூடலான சிந்தையின்அகங்காரத்தினால் அறியப்பட்டிருந்தனர். 

பரிசேயத்துவ அகங்காரம் வழக்கமாகப் புரிந்துணரப்பட முடியும், ஆனால் அகங்காரத்தின் அதிக உள்ளானவகையானது, திறந்த மனம்கொண்ட சகிப்புத் தன்மை என்ற பெயரில்தன்னையே முன்னேற்றுகிறது. யூதா எதிர்த்து நின்ற போதகர்கள் இவ்வகைப்பட்டவர்களாக இருந்தனர் என்பது உறுதி.

 அவர்கள் "நமது தேவனுடையகிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டினர்” (வசனம் 4), "மாம்சத்தைஅசுசிப்படுத்திக்கொண்டனர்" (வசனம் 8). 

மற்றும் "தங்கள் இச்சைகளின்படிநடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்” (வசனம் 16). அவர்கள் மாம்ச இச்சைகளில்ஈடுபடுவதற்கான தங்கள் உரிமையைக் கண்டனம் பண்ணிய அல்லது கேள்விகேட்ட வானத்தில் உள்ள அல்லது பூமியின் மீதுள்ள எந்த அதிகாரத்தையும்அகங்காரத்துடன் தங்களை விட்டு நீக்கினர். 


திறந்த சிந்தனை கொண்டசகிப்புத்தன்மை என்ற பெயரில் அவர்கள், வாழ்வின் ஒழுக்கரீதியான மேன்மையான வழிக்கு உரிமை எதையும் கோரிய சபையை உரிந்து போட்டனர்.



பிரதான தூதனாகிய மிகாவேல்கூட மோசேயின் சரீரத்தைக் குறித்துப்பிசாசுடன் தர்க்கித்துப் பேசியபோது பயன்படுத்தத் துணியாத தூஷணங்களைக்கள்ளப் போதகர்கள் எடுத்துக் கொண்டனர் என்று யூதா கூறினார் (வசனம்9). 

வேதாகமத்தில் பல இடங்களில் தூதர்கள் காணப்பட்டாலும், மிகாவேல்மற்றும் காபிரியேல் ஆகிய இருவர் மாத்திரமே பெயர்களைக் கொண்டுஅறியப்பட்டுள்ளனர். மிகாவேல், தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தில்மூன்று முறைகளும் (10:13, 21; 12:1) வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில்ஒருமுறையும் (12:7) குறிப்பிடப்பட்டுள்ளார்.


கள்ளப் போதகர்களைப் பற்றி யூதா என்ன கூறினார் என்பதைப் புரிந்துகொள்வதில் நமக்குச் சிரமம் எதுவும் இருப்பதில்லை , ஆனால் அவரதுவிவரிப்பானது மாறுபட்ட விஷயமாக உள்ளது. மோசேயின் சரீரத்தைக்குறித்துப் பிசாசுடன் மிகாவேல் தர்க்கித்தல் என்பது பற்றிய வேதாகமப்பதிவு எதுவும் இல்லை .


 இருப்பினும் பழங்கால எழுத்தாளர்கள் பலர்,மோசேயின் பரத்துக்கேறுதல் என்று அழைக்கப்படும் புத்தகம் பற்றிய குறிப்பைஏற்படுத்தினர், அது இந்நிகழ்ச்சியைப் பற்றி விவரித்தது. இந்தப் பழங்காலப்புத்தகத்தின் ஒரு சிறு துணுக்கு மாத்திரமே நவீன காலத்தில் உள்ளது,ஆனால் அது யூதாவின் தகவலுக்கு ஆதார் மூலமாக இருந்தது என்பது உறுதி.பிற்பாடு 14 மற்றும் 15ம் வசனங்களில், ஏனோக்கின் புத்தகம் என்ற ஒருபுத்தகத்திலிருந்து யூதா மேற்கோள் காண்பித்தார், அது பழைய மற்றும் புதியஏற்பாடுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.


 வேதாகமத்தில்இல்லாத ஒரு புத்தகத்தை யூதா குறிப்பிடுதல் என்பது கடினமான சில கேள்விகளைஎழுப்புகிறது. அந்தப் புத்தகம் ஏவுதல் பெற்றதென்று அவர் கருதினாரா?மோசேயின் சரீரத்தைப் பற்றி மிகாவேலுக்கும் பிசாசுக்கும் இடையில் தர்க்கம்ஒன்று நடைபெற்றதா? ஆதியாகமம் 5:21-24ல் உள்ள ஏனோக்கு உண்மையிலேயே யூதா கூறும் இந்தக் கூற்றை ஏற்படுத்தினாரா?


 கிறிஸ்தவத்தின்தொடக்க நூற்றாண்டுகளில் இருந்தே வேதாகமக் கல்வியாளர்கள் இந்தக்
கேள்விகள் மீது திகைப்புக் கொண்டுள்ளனர்.


சில கல்வியாளர்கள், யூதாவும் பவுலும் ஆகிய இருவருமே (2 தீமோத்தேயு 3:8ஐக் காணவும்), புறதெய்வ வணக்கக்காரர்களான கவிஞர்களைப்பவுல் சுட்டிக்காண்பித்த அதே வழியில் (நடபடிகள் 17:28; தீத்து 1:12), யூதஎழுத்தாளர்களால் எழுதப்பட்ட, வேதாகமம் அல்லாத மற்ற எழுத்துப்பணிகளைக் குறிப்பிட்டனர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். பவுலோ அல்லதுயூதாவோ, அவர்கள் மேற்கோள் காண்பித்த எழுத்துப் பணிகளுக்கு ஒப்புதல்ஆதரவு அளித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. 


இயேசு உவமைகளைப்பயன்படுத்தியது போல அல்லது ஒரு நவீனப் பிரசங்கியார் இந்தியக் கிராமியப்பாடலைப் பயன்படுத்துவது போல, யூதா தமது வாசகர்களுக்குத் தாம் போதிக்கவிரும்பியவற்றை விளக்குவதற்கு, அவர்கள் அறிந்திருந்த பதிவேடுகளைப்பயன்படுத்தினார்.பகுத்தாராய்வு செய்தலின் இவ் வரிசையை மற்றவர்கள்மறுக்கின்றனர். 

அவர்கள், ஏனோக்கின் புத்தகம் பற்றியும், மோசேயின் சரீரம்குறித்த தர்க்கம் பற்றியும் யூதா பதிவு செய்த வார்த்தைகளை, ஏவுதல் பெற்றவேதவசனங்களில் இருந்து வார்த்தைகளையும் நிகழ்ச்சிகளையும் பதிவுசெய்தஅதே வகையில் பதிவு செய்தார் என்று சுட்டிக் காண்பிக்கின்றனர். 

யூதா எந்தப்பழங்கால எழுத்துக்களில் இருந்து தமது தகவல்களைத் தரவழைத்திருந்தாலும்,யூகிக்கப்பட்ட எந்த நிகழ்வைப் பற்றியதுமான அவரது குறிப்பானது அவர்அதைப் பதிவு செய்துள்ளபடியே நடந்தது என்று விவாதிக்கின்றனர்.


ஏவப்படாத புத்தகங்களிலிருந்து குறிப்பிடும் யூதாவின் குறிப்புரைபற்றிய இந்தப் பிரச்சனையுடன் நாம் போராடுகையில், யூதா ஏற்படுத்தியமையக் கருத்தைப் பற்றிய நமது கண்ணோக்கத்தை நாம் இழந்துவிடக்கூடாது. 

கள்ளப் போதகர்கள் (அதிகாரத்தைப் புறக்கணித்த தங்கள்செயல்பாட்டில்) தூதர்களும் யூகிக்கத் துணியாத துணிகரமான செயலைச்செயல்விளக்கப்படுத்தினர். அவர்களின் முரட்டுத்தனமானது. அவர்களுக்குஏவுதல் பெற்ற மனிதர்கள் போதிப்பதைச் சாத்தியமற்றதாக்கியது.அவர்களை யூதா, பழைய ஏற்பாட்டில் தேவனுடைய அதிகாரத்திற்குஎதிராகக் கலகம் செய்தவர்களுடன் ஒப்பிட்டார். 



காயினைப் போன்று(ஆதியாகமம் 4:1-12), அவர்கள் மாபெரும் கல்கத்துடன் தேவனுக்குப் பிரியமற்றவகையில் செயல்பட்டனர்; பாலாமைப் போன்று (எண்ணாகமம் 22), அவர்கள்வர்த்தகத்திற்கான செய்திகளைக் கொண்டிருந்த போதகர்களாக இருந்தனர்;கோராவைப் போன்று (எண்ணாகமம் 16), அவர்களுக்கு ஆக்கினை நிச்சயமானதாக இருந்தது.கள்ளப்போக்கர்கள் பற்றிய வண்ணமிகு விவரிப்புக் கூற்றுகள்பின் தொடருகின்றன. 

கிறிஸ்தவர்களின் "அன்பின் விருந்துகளில்”கள்ளப் போதகர்கள் தைரியமாகவும் அகம்பாவமாகவும் அமர்ந்து கொண்டு,மனச்சாட்சியே இல்லாமல் தங்களைப் போஷித்துக் கொள்கின்றனர்(வசனம் 12). ஒருவேளை அவர்கள், கொரிந்து நகரில் இருந்த கிறிஸ்தவர்களில்சிலரைப் போல், பொதுவான விருந்துகளை, அன்பின் விருந்துகளை, மதுபானம்பண்ணிக்கொண்டு தம்மைத்தாமே சீராட்டுதலுக்குத் திரும்பியிருக்கலாம்.


அவர்கள் நீதியின் கனிகளை உண்டாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தும்,அவற்றை ஒருபோதும் உண்டாக்கி இருக்கவில்லை. தண்ணீர் இல்லாத மேகங்கள்
போன்று, அவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படக்கூடிய உறுதியற்றவர்களாகஇருந்தனர். இலையுதிர்க் காலத்தில் கனியற்று இருக்கும் மரங்களைப் போல,அவர்கள் ஜீவனற்றவர்களாக இருதரம் இறந்தவர்களாக இருந்தனர். அவர்கள்அமளியான கடல்களின் அலைகள் போல அல்லது நட்சத்திரங்கள் மத்தியில்கோள்கள் போல பழக்கப்படுத்தப் படாதவர்களாகவும் முன்னுரைக்கப்படஇயலாதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் என்றென்றைக்குமுள்ள காரிருளுக்குமாத்திரமே தகுதியானவர்களாக இருந்தனர் (வசனங்கள் 12, 13).


ஏனோக்கின் புத்தகம் என்பது, கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர், சுமார் இருநாறுஆண்டுகள் கால அளவில் பல மனிதர்களால் எழுதப்பட்ட ஒரு நீண்ட புத்தகமாகஇருந்தது. அவற்றில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முழுமையான பிரதிகள்எத்தியோப்பிய மொழியில் மாத்திரமே உள்ளன, ஆனால் யூதா 14 மற்றும் 15ம்வசனங்களில் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள வசனம் உட்பட, மூன்றில் ஒருபங்கு புத்தகம் கிரேக்க மொழியில் இதுவரையிலும் இருக்கிறது. ஏனோக்கின்புத்தகம் யூதாவுக்கு முக்கியமானதாக இருந்தது, ஏனென்றால் அதன் வார்த்தைகள்,தேவபக்தி அற்றவர்கள் மீது கர்த்தரின் நியாயத்தீர்ப்பின் உறுதிப்பாட்டைஅறிவித்தன. 



அவைகள், 5 முதல் 7வரையில் அவர் கூறியிருந்தவற்றைமறுவலிவூட்டின. மனிதர்கள் வாழ்வதற்கென்று தேவன் கட்டளையிட்டஜீவ மார்க்கத்திற்கு எதிராகக் கலகம் செய்தவர்களை நியாயந்தீர்க்கத்தேவன் "ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட" வருவார்


16ம் வசனத்தில், இந்த நிருபத்தை எழுதியவர், கள்ளப் போதகர்களைஆர்வத்திற்குரிய மூன்று சொற்றொடர்களைக் கொண்டு விவரித்தார்:(1) அவர்கள் முறுமுறுக்கிறவர்களாகவும் முறையிடுகிறவர்களாகவும்இருந்தனர்; (2) அவர்கள் தங்கள் இச்சையின்படி நடக்கிறவர்களாகஇருந்தனர்; (3) அவர்கள் தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்தனர். 


சபைகள்எவ்வாறு அழிக்கப்படலாம் என்பதற்கு யூதா ஒரு வரைபடத்தை வரைந்திருந்தார். பரலோகத்தின் இந்தப் பகுதியில் நாம் பூரணப்பட்ட சபை ஒன்றைக்காணுதல் இயலாது என்பதால், அதைப்பற்றி முறையிடுவதற்கு எப்போதுமேஏதாவது ஒன்று இருக்கும். குற்றம்கண்டுபிடிக்கிறவர், நியாயத்தீர்ப்பில்ஒவ்வொரு தவறையும், கவனிக்கப்படாத ஒவ்வொரு விபரத்தையும்கவனிக்கிறார். அவர் சகோதரருக்கு எதிரானச் சண்டையில் சகோதரரானமற்றவர்களைப் பட்டியலிடுகிறார். 

யூதா முன்யூகம் செய்த கள்ளப் போதகர்கள்திறமை நிறைந்த குற்றம் கண்டுபிடிப்பவர்களாக இருந்தனர்.அத்துடன் கூடுதலாக அவர்கள் தாங்கள் விரும்பியவற்றை மிகச்சரியாகச்செய்வதற்கு முழுமையாகத் தங்களை ஒப்புக்கொடுத்திருந்தனர்.

 குற்றம்கண்டுபிடித்தல் மற்றும் முறையிடுதல் ஆகியவற்றினால் ஒருவர், தமது சொந்தக்குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முடியும். கள்ளப் போதகர்கள்மாம்சத்தின் இச்சைகளைத் திருப்திப் படுத்தத் தங்களை ஒப்புக்கொடுத்திருந்தனர், ஆனால் அவர்கள் பல கிறிஸ்தவர்களை ஏமாற்றும் அளவுக்கு தங்கள்வாழ்வின் வழியை மறைத்து வைத்திருந்தார்கள் என்பது உறுதி. அவர்கள்தங்களை உயர்த்திக் கொண்டு மற்றவர்களை மட்டம் தட்டினர்.

 அவர்கனின்பின்பற்றாளர்களாகும்படி பலரை வெற்றிகரமாகக் கையாண்டனர். தமதுவாசகர்கள் இந்த மனிதர்கள் எவ்வாறு இருந்தனர் என்று காணவேண்டும் என்றுயூதா விரும்பினார்,




தேவன் தம் மக்கள்மீது கொண்ட அன்பு(வசனங்கள் 17-23)


பேதுருவைப் போன்று யூதாவும், தமது வாசகர்களுக்கு, அவர்கள்தொடக்கத்தில் இருந்து கேட்டிருந்தவற்றை நினைவுபடுத்த விரும்பினார்(வசனம் 17). போதித்தலில் மறுபடி கூறுதல் என்பது மதிப்புமிக்கதாக உள்ளது.சிலவற்றை அறிந்திருத்தல் என்பது, நாம் அதை நடைமுறைப்படுத்துவோம் என்றுஉத்தரவாதம் அளிப்பதில்லை. யூதா தம்மை எண்ணிக்கையில் உள்ளடக்காம்லேயே, அப்போஸ்தலர்கள் முன்னுரைத்திருந்தவற்றை இந்தக் கிறிஸ்தவர்கள்நினைவுகூர வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். 


18ம் வசனத்தின்வார்த்தைகள் 2 பேதுரு 3:3னுடைய எதிரொலி போன்று இருக்கின்றன.மறைவான, வலியுறுத்தமான மற்றம் முரட்டுத் தனமான வழிகள் மூலமாகக்கள்ளப் போதகர்கள் கிறிஸ்தவர்களிடையில் பிரிவினை ஏற்படுத்தி இருந்தனர்.அவர்கள் கள்ளப்போதகர்களின் மிருகத்தனமான உள்ளுணர்வுகளைப்பின்பற்றினர் என்று அவர்களிடத்தில் யூதா உறுதிபடக் கூறினார், மற்றும்ஆவிக்குரியவர்கள் என்று அவர்களின் உரிமை கோருதல் இருப்பினும், அவர்கள்ஆவியில் வெறுமையானவர்களாகவே இருந்தனர் (வசனம் 19).



சபைகளினால் அனுபவிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக யூதா குறிப்பிட்டகலகத்திற்குப் பரிகாரம் என்னவாக இருந்தது? இந்தக் கேள்விக்கு யூதா,கட்டளைகளின் வரிசை ஒன்றைக் கொண்டு பதில் அளித்தார்: (1) விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (வசனம் 20). ஒவ்வொருகிறிஸ்தவரும் தமது சொந்த ஆவிக்குரிய நலனுக்குப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். தேவன் ஆதாரவளங்களை அளிக்கிறார், ஆனால் ஒவ்வொருவரும்தமக்குத் தேவன் கொடுத்துள்ளவற்றை, ஆவிக்குரிய வகையில் வளரப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (2) தேவனுடைய அன்பிலே உங்களைக்காத்துக்கொள்ளுங்கள் (வசனம் 21). ஒரு கருத்தில், எவரொருவரும் தேவன்தமது மக்கள்மீது கொண்டுள்ள அனைத்தையும் சுற்றிச்சூழும் அன்பில் இருந்துதப்பிக்க இயலாது. 

கிறிஸ்தவர்கள், மீட்பருக்குள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதேவனுடைய அன்பின் ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு,விசுவாசம் நிறைந்தவர்களாக நிலைத்திருக்க வேண்டும் என்று யூதாவற்புறுத்தினார். (3) கர்த்தருடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள் (வசனம்21). கர்த்தர் மறுபடியும் வந்து விசுவாசம் நிறைந்தவர்களை நித்திய ஜீவனுக்குவழிநடத்துவார் என்று யூதா கூறினார். (4) சந்தேகம் கொண்டவர்களிடத்தில்இரக்கம் நிறைந்தவர்களாக இருங்கள் (வசனம் 22). சிலர் விசுவாசத்தில்பலவீனம் உள்ளவர்களாகவும் ஊக்கப்படுத்துதல் தேவைப்படுபவர்களாகவும்இருப்பார்கள். பலமானவர்கள், தேவதூஷணத்துடன் நெருங்கிய சிநேகம்கொண்டுள்ள பலவீனமான ஒவ்வொரு சகோதரரையும் தாக்குவார்கள்என்றால், சபையானது விரைவில் அழந்து போய்விடும். (5) உங்களால் இயன்றவரையில் மக்களை அக்கினியில் இருந்து இழுத்து விடுங்கள் (வசனம் 22).கள்ளப் போதகர்கள் சிலரைப் புறம்பே வழிநடத்திச் செல்வார்கள். உங்களால்முடிந்த வரையில் அப்படிப்பட்டவர்களை மீட்டுக்கொண்டு வாருங்கள்.(6) பயங்கலந்த இரக்கத்தைக் காண்பியுங்கள் (வசனம் 22). பலவீனமாகவும்வழிநடத்துதல் தேவைப்படும் நிலையிலும் உள்ள ஒருவருக்கு, நியாயத்தீர்ப்பு
பற்றிய கூற்றானது அவரை விரோதியின் கூடாரத்தில் இன்னும் அதிக உறுதியாகத் தக்கவைத்துக் கொள்ளும். பாவியை வெறுக்காதீர்கள். அவரை இரட்சிக்கமுயற்சி செய்யுங்கள்.



முடிவுரை

யூதா தமது நிருபத்தை, புதிய ஏற்பாட்டின் மிக அழகுடைய துதிகள் ஒன்றைக்கொண்டு முடித்தார். அவர், தமக்குப் பழக்கமான சபைகளில் இடர்ப்பாடுகளைஏற்படுத்திக் கொண்டிருந்த கள்ளப்போதகர்களின் அபாயங்கள் மற்றும்மறைவான கெடுமதிகள் ஆகியவற்றைத் தமது வாசகர்களுக்கு முன்வைத்தார்.இந்தச் சூழ்ச்சிக்கார மனிதர்கள் போலி நடிப்பின்கீழ் சபைக்குள் பிரவேசித்திருந்தனர் மற்றும் இவர்கள், கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினையும் துன்பமும் ஏற்படக்காரணமாக இருந்தனர். இந்தக் கிறிஸ்தவர்கள், அப்போஸ்தலர்களிடமிருந்துகேட்டறிந்திருந்த மூல செய்திக்குத் தங்களை மீண்டும் ஒப்புக்கொடுத்து பலமாகஇருக்க வேண்டும் என்று யூதா வேண்டிக் கேட்டுக்கொண்டார். 

அவர் தமதுநிருபத்தைப் பின்வரும் வார்த்தைகளுடன் முடித்தார்: “வழுவாதபடி உங்களைக்காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடேஉங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரேஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும்மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும்உண்டாவதாக. ஆமென்” (வசனங்கள் 24, 25).

     God bless you.. Umn ministry 





Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*