தானியேல் விளக்கவுரை
அதிகாரம் 10
தானியேலின் உபவாசம்(தானி.10:1-3)
பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே தானியேல் மூன்றாவது தரிசனத்தை காண்கிறாhன். 'கோரேஸ் ராஜ்யபாரம் பண்ணின முதலாம் வருஷம் மட்டும் தானியேல் பிரதானியாக காணப்படுகிறார் .
(தானி.1:21)." தானியேல் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் மூன்று ராஜாக்களாகிய நேபுகாத்நேச்சார், அவன் குமாரனாகிய ஏவில் மெரொதாக், அவன் குமாரனாகிய பெல்ஷாத்சார் நாட்களிலும், அதன்பின்பு மேதியனாகிய தரியுவின் ஆட்சியிலும், பின்பு பெர்சியனாகிய கோரேஸ் ராஜ்யபாரம் பண்ணின முதலாம் வருஷம் மட்டும் பிரதானியாக காணப்பட்டார்.
இப்போது வயோதிய நாட்கள் ஒய்வில் காணப்பட்டிருக்ககூடும். அந்த வேளையில் கோரேசின் மூன்றாம் வருஷ ஆட்சியில் மூன்றாம் தரிசனத்தை காண்கிறார். 'பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணினான் (2 நாளா. 36:22,23)." கோரேஸ் ராஜாவின் நாட்களில் தான் ஆலயத்தை கட்ட செருபாபேலின் தலைமையில் யூதர்கள் எருசலேமுக்கு வந்தார்கள்.
அந்நாட்களில் தானியேல் 21 நாட்கள் பகுதி உபவாசத்தோடு ஜெபத்திலே துக்கித்துகொண்டிருக்கிறார். ருசிகரமான அப்பத்தை அவர் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சைரசமும் உட்கொள்ளவில்லை, பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை. அப்போது ஒரு காரியம் அவருக்கு தரிசனத்தில் வெளியாக்கப்பட்டது. அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருந்தது. அந்தக் காரியத்தை அவர் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டார்
முதலாம் மாதம் இருபத்துநாலந்தேதியிலே தானியேல் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருக்கிறார். இதக்கெல் ஆறு ஏதேனில் இருந்து பாய்ந்த மூன்றாம் ஆறு(ஆதி.2:14). இப்பொழுது ஈராக் நாட்டில் காணப்படுகிற டைகிரிஸ் நதியாகும்.
தானியேல் தன் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் காண்கிறார். அவர் இயேசு கிறிஸ்து. அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.
இயேசுவின் மகிமையின் ரூபத்தை பற்றிய காட்சியை எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்தின விஷேசத்தில் பார்க்கலாம். 'அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன், அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது, இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது, அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன், அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்(எசே.1:27,28).
அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவihயும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது, அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தது, அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது, அவருடைய சத்தம்பெருவெள்ளத்து இihச்சலைப்போலிருந்தது.
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார், அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய முகம்வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. நான் அவihக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில்விழுந்தேன், அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து,
என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும்,
உயிருள்ளவருமாயிருக்கிறேன், மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்(வெளி.1:13-18)."
தானியேலின் புஸ்தகம் முழுவதிலும் இயேசுகிறிஸ்துவை பற்றிய தரிசனம் அதிகமாக வருகிறது. கைகளால் பெயர்க்கப்படாத கல்(தானி.2:34), மனுஷகைவிரல்கள் தோன்றிசுவரில் எழுதினது(தானி.5:5), மனுஷகுமாரன் ஆளுகையுள்ளவர்(தானி.7:13,14), அதிபதிகளுக்கு அதிபதி(தானி.8:25), சங்கரிக்கப்படும் படி வந்த மேசியா(தானி.9:26), மகிமையின் ஆண்டவர்(தானி.10:4-7).
தானியேல் மாத்திரம் தான் தரிசனத்தை கண்டான்.
அவனோடே இருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை. பவுல் இயேசுவால் சந்திக்கப்பட்டவேளையில் அவனோடு சென்றவர்கள் சத்தத்தை கண்டும் தரிசனத்தை காணவில்லை(அப்.9:7). அதுபோல தானியேலோடு சென்றவர்கள் மிகவும் நடுங்கி, ஓடி, ஒளித்துக்கொண்டார்களே அன்றி இயேசுவை காணவில்லை. யோவான் பத்மு தீவில் தேவனுடைய ரூபத்தை பார்த்த போது செத்தவனை போல விழுகிறான்.
இங்கும் தானியேல் தரிசனத்தை கண்டபோது அவருடைய பெலனெல்லாம் போயிற்று. உருவம் மாறி வாடிப்போயிற்று. திடனற்றுப்போகிறான். அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டபோது, முகங்கவிழ்ந்து, நித்திரைக்கு போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
முகங்குப்புற விழுந்த தானியேலை தேவதூதனின் கை தொட்டது.
முழங்கால்களும் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க தூக்கிவைத்தது. அவன் தானியேலை நோக்கி பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன். தேவதூதர்கள் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு உதவிசெய்யும்படி அனுப்பப்படுகிற பணிவிடை ஆவிகள் (எபி.1:14). 'நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான். இந்த வார்த்தையை அவன் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றான். தூதன் தானியேலை நோக்கி பயப்படாதே. நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவங்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது. உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்."
தானியேல் உபவாசித்து ஜெபித்த முதல் நாளிலே ஜெபம் கேட்கப்பட்டது.
ஆண்டவர் ஜெபத்தை கேட்டு பதிலை தூதன் மூலம் அனுப்பின போது பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் எதிர்த்து நிற்கிறான். ஆதலால் தூதன் அங்கே தரித்திருந்தான். ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் அவனுக்கு உதவியாக வந்தான்.
விழுந்து போன தூதர்கள் வானமண்டலங்களின் காணப்படுகிறார்கள். ஒவ்வொரு தேசங்களுக்கு எதிராகவும் பிசாசின் வல்லமைகள் கிரியைசெய்கின்றன. ஒவ்வொரு தேசத்திற்கும் அதிபதிகளை சாத்தான் வைத்திருக்கிறான்.
பெர்சிய தேசத்தின் அதிபதி தானியேலின் ஜெபத்திற்கு பதில் வராதபடி தடை செய்கிறான். அவனை மேற்கொள்ள மிகாவேல் தூதன் வரவேண்டியிருக்கிறது.
தேவ பிள்ளைகள் ஜெபிக்கும் போது,
தேவன் பதில் அனுப்பியும் சுதந்தரிக்ககூடாதபடி, வானமண்டலத்தின் பொல்லாத ஆவிகள் தடைசெய்கின்றன. தடைசெய்கிற பலவானை முந்தி இயேசுவின் நாமத்தில் கட்டி ஜெபிக்கும் போது பதிலை பெற்றுகொள்ளமுடியும்.
தூதன் தானியேலை நோக்கி, இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாட்கள் செல்லும். இவைகள் கடைசிநாட்களுக்குரியவைகள் என்று கூறுகிறான். கடைசிகால சம்பவங்களைப் பார்த்த தானியேல் தலைகவிழ்ந்து, பேச்சற்றுப்போகிறார். உடனே தேவதூதன் ஒருவன் அவர் உதடுகளைத் தொடுகிறான். உடனே தானியேல் வாயைத் திறந்து பேசி, எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன். அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்று அங்கலாய்கிறான்.
தானியேல் பெலனற்று போன போது,
மீண்டும் மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப அவரை தொட்டு, திடப்படுத்தி, பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்று தேற்றுகிறான். தூதன் தானியேலோடு பேசுகையில் தானியேல் திடங்கொண்டு ஆண்டவன் பேசுவாராக, என்னைத் திடப்படுத்தினீரே என்று கூறுகிறார்.
ஆ அப்போது நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப் போகிறேன். நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.
பெர்சிய தேசத்தின் சாத்தானின் அதிபதியை போல கிரேக்க தேசத்திற்கும் அதிபதி காணப்படுகிறான். சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன். உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.
தரிசனத்தின் தொடர்ச்சியை 11-ஆம் அதிகாரத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
Umn ministry