பவுல் வரலாறு History of Paul

0







பவுல் தமிழில் முழு திரைப்படம் free download ⬇️⬇️⬇️
பவுல்

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துதளை தெரிவித்து கொள்கிறேன் 

அப்போஸ்தலனாகிய பவுலை பற்றிய சிலவற்றை இங்கே நாம் அறியலாம் 




 அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் இயேசுவான சீடராக இல்லாதிருந்தபோதிலும் அப்போஸ்தலர் களிடையே பெருமதிப்பைப் பெற்றவராக விளங்குகிறார். மிஷனெரிப் பயணங்கள் மூலம் பல்வேறு பகுதிகளிலும் நற்செய்தியை அறிவித்த பவுல், இன்றும் தனது நிருபங்களின் மூலம் அரிய போதனைகளைத் தந்து வருகிறார்.

"அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமு முள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே" (2 கொரி. 10:10) என்று பவுல் அப்போஸ்தலன் தன்னைப் பற்றி மற்றவர்கள் கூறுவதை எடுத்துக் கூறுகிறார்.

“பாதி வழுக்கை விழுந்த தலை, வளைந்த கால்கள், குறுகிய கண்கள், வனைந்த மூக்கு இவற்றை உடையவராகக் காணப்பட்டாலும் சில வேளைகளில் பார்ப்பதற்கு தேவ தூதரைப்போலத் தென்படுவார்" என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பவுல் அப்போஸ்தலன் தான் பெற்ற அடிகளா லும், கல்லெறிகளினாலும் காயங்களினாலும் (2 கொரி, 1:23-27) பிற துன்பங்களினாலும் இவ்வாறு சிதைந்துபோன ரீரத்தைப் பெற்றிருக்கிறார் என்று கருத இடமிருக்கிறது.





இளமைப்பருவம்

சிலிசியா நாட்டின் தலைநகரான தர்சு பட்டணத்தில் பிறந்தவர் சவுல். யூதனாக இருந்தாலும் பிறக்கும்போதே ரோமப் பிரஜையாகும் சிலாக்கியத்தைப் பெற்றவர் இவர். அக்காலத்தில் அவர்கள் ரோமப் பேரரசின் கீழிருந்தபடியால் ரோமப் பிரஜையாக இருப்பதால் பல சலுகைகள் கிடைத்தன.

சவுல் பென்யமீள் கோத்திரத்தைச் சேர்ந்தவர் (பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த முதல் இஸ்ரவேல் அரசன் சவுலின் பெயரையே இவருக்கும் சூட்டியிருந்தார்கள்); நியாயப் பிரமாணத்தின்படி பரிசேயனாக இருந்தவர் (பிலி. 3:5). பரிசேயர்கள் மரித்தோர் உயிர்த்தெழுதல் உண்டென்று நம்புபவர்கள். வேதத்தைப் படிப்பதிலும், போதிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார்கள்.

தர்க பட்டணம் ஒரு பெரிய வாணிப தலமாகவும், கடல் துறைமுகமாகவும் கீர்த்தி பெற்று விளங்கியது. மரமும், மரச் சாமான்களும் இவர்களது பொருள்கள். முக்கியமான வாணியப்

பற்றிய சவுல் தனது ஐந்தாவது வயதிலிருந்தே வேதாகமத்தைப் பயிற்சி பெற்று வந்தார். வாலிபனானபோது எருசலேமுக்குச் சென்று வேத அறிவில் தேர்ச்சி பெற்ற வல்லுநரான கமாலியேலின் மாணாக்கராகச் சேர்ந்தார் (அப். 22:3).

ஒரு போதகத் தொழிலில் பயிற்சி பெறும் மாணாக்கர்கள் வருவாய் தேடுவற்காக ஏதேனும் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆட்டு மயிரினால் பின்னப்பட்ட துணியைக் கொண்டு கூடாரங்களை அமைப்பதில் சவுல் தேர்ச்சி பெற்றிருந்தது பின்னர் அவரது மிஷனெரி ஊழிய காலத்தில் அவருக்கு வருவாய் ஈட்டித் தந்தது. தனது சொந்தச் செலவுகளுக்காக சபையினரிடம் கேட்க வேண்டியிருக்கவில்லை. அவர்





வேதப் பயிற்சிக்குப் பிறகு தர்சுக்குத் திரும்பின சவுல் வேத வைராக்கியம் பெற்றவராக விளங்கினார். கிறிஸ்த வர்கள் யூதக் கொள்கைகளுக்கு விரோதமானவர்கள் என்று இவர் எண்ணியதால் கிறிஸ்தவர்களை அழித்துவிடுவதாகச் சபதம் செய்தார் (யிலி, 35.

எருசலேமில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகு வதை அறிந்து மீண்டும் எருசலேம் திரும்பினார். யூதர்கள் ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்லும்போது, சாட்சிக் காரர்கள் தங்களது ஆடைகளைக் கழற்றி சவுலின் பாதத்தி னருகே வைத்தார்கள் (அப். 7:58-8:3). ஸ்தேவானைக் கொல்லுவதற்குச் சவுலும் சம்மதித்திருந்தார். அதுமட்டுமின்றி “சவுல் வீடுகள்தோறும் நுழைந்து பருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து சபையைப் பாழாக்கிக் கொண்டிருந் தான்" (அப். 8:3),

தமஸ்குவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகு வதைக் கேள்விப்பட்ட சவுல் அவர்களைக் கைதுபண்ணி எருசலேமுக்கு இழுத்துவர பிரதான ஆசாரியரிடம் அனுமதிச் சீட்டு பெற்று, தமஸ்குவுக்குப் பயணமாளார்.

ஆனால் தமஸ்குவுக்குள் நுழையுமுன்பே வழியில் ஆண்ட வராகிய இயேசு பிரகாசமான ஒளியின் நடுவே தரிசனமானார். "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்" என்று கூறினார்; சவுலைத் தமது வார்த்தைகளாலும், தரிசனத்தாலும் மனம் மாற்றினார். கிறிஸ்தவர்களை அழிப்பதற்கு வைராக்கியம் கொண்டிருந்த சவுலை, கிறிஸ்துவுக்காகத் தனது உயிரையே கொடுப்பதற்குத் துணிந்த பவுலாக மாற்றினார்!

திடீரென்று கண்பார்வையற்றுப் போன சவுல் மூன்று நாள்கள் சாப்பிடாமலும் குடியாமலும் ஆண்டவரைப் பற்றிய



தியானத்திலிருந்தார். தேவன் அனனியா என்ற சீடனின் மூலம் அவரது பார்வையைக் குணமாக்கி அனனியாவின் மூலம் ஞானஸ்நானமும் பெறும்படி செய்தார்.

முதல் ஊழியம்

கிறிஸ்துவுக்காகப் பக்தி வைராக்கியம் கொண்ட பவுல் மேலும் தாமதியாமல் "கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தார்” (அப். 9:20). இதற்கிடையே எதிர்ப்புகள் கிளம்பவே, பவுல் அரபி தேசத்து பெட்ரோ என்ற நகரிற்குச் சென்று பாலைவன வாசம் செய்தார் (கலா. 1:17).

மீண்டும் கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்யவேண்டு மென்று தூண்டுதல் பெற்ற பவுல் தமஸ்கு திரும்பினார். முன்னிலும் அதிக உற்சாகத்துடன் பணிபுரியத் துவங்கினார். பவுல் தங்களுக்கு விரோதமாக கிறிஸ்துவுக்காகப் பணி புரிவதைக் கண்ட யூதர்கள் கடும் கோபம் கொண்டார்கள். பவுலைக் கொல்ல வகை தேடினார்கள். தமஸ்கு கோட்டையைவிட்டு வெளியேறாதபடி கோட்டை வாசலில் காவல் நின்றார்கள்!

இதைக் கேள்விப்பட்ட கிறிஸ்தவ சகோதரர்கள் பவுலை ஒரு கூடையில் வைத்து, கோட்டைச் சுவற்றின் மறுபக்கம் இறக்கி விட்டுவிட்டார்கள்! எருசலேமுக்குச் சென்ற பவுல் கிரேக்கர்களுடன் கிறிஸ்துவைப்பற்றிப் பேசினார். அவர்களோ அவரைக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள். பவுல் மீண்டும் தர்சுவுக்குத் திரும்பினார் (அப். 9:28-30).

சில ஆண்டுகள் தர்கவிலேயே தங்கினார் பவுல். தனிமையும் வேத ஆராய்ச்சியும் தியானமும் பவுலின் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருந்தன!



இதற்கிடையே பர்னபாஸ் பவுலைத் தேடி வந்து அவரை அந்தியோகியாவிற்கு அழைத்து வந்தார் (அப். 11:25), மீண்டும் பவுலின் ஊழியம் துவங்கியது!

மிஷனெரிப் பயணங்கள் அந்தியோகியா சபையின் சார்பாக பவுலும், பர்னபாவும் மிஷனெரிகளாக அனுப்பப்பட்டனர். யோவான் (மாற்கு அவர்களுக்கு உதவியாளனாக இருந்தார்.

பர்னபாவின் ஊரான சாலமியில் ஊழியத்தைத் துவக்கி ஆசியா மைனரிலுள்ள பெர்கே வரை வந்தார்கள். பிரீதியா நாட்டிலுள்ள அந்தியோகியா செல்ல விரும்பினார்கள். ஆனால் யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து சொந்த ஊரான எருசலேமுக்குத் திரும்பிவிட்டான். அந்தியோகி யாவில் விரோதமான மதத்தினரிடையே பவுல் தைரியமாகப் பிரசங்கித்தார். தேவன் அநேக ஆத்துமாக்களை ஆதாய மாகக் கொடுத்தார். ஆனால் யூதர்களோ அவர்களை தூரத்தியடித்தார்கள் விஸ்திராவில் பவுல் ஒரு சப்பாணியைக் ாமாக்கினார்! அந்தியோகியாவிலுள்ள யூதர்கள் இங்கும் வந்து விட்டார்கள்! ஜனங்களைத் தூண்டிவிட்டு பவுலைக் கல்லெறிந்து அவர் மரித்துப் போனாரென்று என அவரைப் பட்டணத்துக்கு வெளியே இழுத்துக்கொண்டு போட்டுவிட்டார்கள் (அப், 14:19).

ஆனால் ஆண்டவர் பவுலைக் குணமாக்கினார்! அவர் மனத்துணிவோடு தாம் வந்த வழியே திரும்பி, வழியிலுள்ள சபைகளைத் திடப்படுத்தினார்!

இரண்டாவது பயணம்

யோவானின் காரணமாக பவுலுக்கும், பர்னபாவுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டபடியால் பவுல் சீலாவை அழைத்துக்கொண்டு தனது இரண்டாவது பயணத்தைத் தொடர்ந்தார் (அப். 15:40,419). வழியில் லீஸ்திராவின் தீமோத்தேயு அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.


தரிசனத்தின் மூலம் தேவ வழிநடத்துதலைப் பெற்ற பவுல் ஐரோப்பாவில் மக்கெதோனியாவில் தனது பணியைத் தொடர்ந்தார். பிரியமான வைத்தியன் லூக்கா இவர்களுக்கு உதவி செய்தார். அத்தேனே, கொரிந்து பட்டணங்களில் ஊழியம் செய்த பிறகு மூன்றாண்டுகள் கழித்து அந்தியோகி யாவுக்குத் திரும்பினர்.

மூன்றாவது பயணம்

கி.பி. 52இல் கலாத்தியா, பிரிகியா நாடுகளில் தனது மூன்றாவது மிஷனெரி பயணத்தைத் துவங்கினார் பவுல் அப்போஸ்தலன். ஆசியப் பகுதியிலுள்ள ரோமப் பகுதியின் தலைநகரான எபேசு பட்டணத்தில் இரண்டாண்டுகள் தங்கி வீடுவீடாக நற்செய்தி அறிவித்தார். தேவன் பவுலின்மூலம் பல அதிசயங்களைச் செய்தார். மாயவித்தைக்காரர்கள் மனம் திரும்பி தங்கள் புஸ்தகங்களைச் சுட்டெரித்தார்கள். "கர்த்த ராகிய கிறிஸ்துவின் நாமம் மகிமைப்பட்டது" (அப். 19:17),

எருசலேம், அந்தியோகியாவுக்கு அடுத்தபடியாக எபேசு மூன்றாவது பெரிய கிறிஸ்தவ நகரமாயிற்று!

பவுல் கைது செய்யப்படுதல்

எருசலேமுக்குச் சென்ற பவுல், அவர் புறஜாதியார்களை அழைத்து வந்து எருசலேம் ஆலயத்தைத் தீட்டுப்படுத்திய தாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் ரோமப் பிரஜையானபடியால் அவரைப் பிணைத்திருந்த சங்கிலி அகற்றப்பட்டது. ஆலோசனைச் சங்கத்தில் பவுல் பரிசேயன் என்பதால் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையே பவுலைக் கொலைசெய்ய யூதர்கள் சதிசெய்தபடியால் பவுல் இரவோடு இரவாக செசரியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே ஏரோதுவின் அரண் மனைச் சிறையில் விசாரணைக்காக இரண்டாண்டுகள்


தங்கியிருந்தார். அவ்வேளையில் பவுல் அகிரிப்பா அரசனுக்கு நற்செய்நிலை எடுத்துச் சொன்னார் அப். 26 அதி.).

ல் ரோமப் பிரஜையானடியால் அவரது இறுதி விசாரணைக்காக ரோம பேரரசரிடம் முறையிட முடியும்! எனவே அவர் மற்ற கைதிகளோடு கப்பல் பயணமாக ரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வழியில் புயலினால் கப்பற்சேதம் ஏற்பட்டு பெலித்தா தீவில் கரைசேர்ந்து, பின்னர் மற்றொரு கப்பல் மூலம் ரோமாபுரி சென்றனர். அவர் வருவதைக் கேள்விப்பட்ட கிறிஸ்தவர்கள் வாவேற்றனர் (அப். 28:15). எதிர்கொண்டு

வரை இரண்டாண்டுகள் வாடகை வீட்டில் காவல் வைக்கப்பட்டார். அங்கியிருந்தபடியே நற்செய்தியை அறிவித்து வந்தார்! பவுலின் மரணம்

கி.பி. 61இல் ரோமப் பேரரசன் நீரோ பவுலை விடுதலை செய்தான், தான் ஏற்கெனவே செல்ல விரும்பியிருந்த (ரோமர் 15:28) ஸ்பானிய தேசத்துக்குச் (ஸ்பெயின்) சென்று அங்குள்ள யூதக் குடியிருப்புகளில் நற்செய்தியை அறிவித் தார். இரண்டாண்டுகள் தங்கிய பின்னர் தமது மிஷனெரிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

இதற்கிடையே நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை

வெறுக்கத் துவங்கினான்.

துரோவாவில் பணியாற்றிக் கொண்டிருந்த பவுல் 'திடீரென்று கைதுசெய்யப்பட்டு, கி.பி. 64இல் ரோமாபுரிக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டார்.

மிகவும் கொடுமையான மாமர்டன் சிறையில் சங்கிலி களால் பிணைக்கப்பட்டார் (2 தீமோ. 1:16). சங்கிலியால்



பிணைக்கப்பட்ட நிலையில் அவர் சொல்லச் சொல்லத்தான்

தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்டது!

எழுதப்பட்ட

இரண்டாம் நிருபம்

"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" (2 தீமோ. 4:7) என்று பவுல் அப்போஸ்தலன் தனது வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறார்,

நீரோ மன்னனின் பதினான்காவது ஆண்டில் பவுல் அப்போஸ்தலன் ரோமாபுரிக்கு 3 மைல்கள் வெளியேயுள்ள அக்வா சால்வே என்ற இடத்தில் வைத்துச் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

ஆட்சியின்

லூசினா என்ற கிறிஸ்தவப் பெண்மணி இரவோடிரவாக பவுலின் உடலை எடுத்து ஆஸ்தியன் பாதையிலிருந்த தனது தோட்டத்தில் அடக்கம் செய்தாள்! பின்னர் கான்ஸ்டன்டைன் பேரரசர் பவுல் அப்போஸ்தலனின் சரீரத்தை எடுத்து கல்லாலான ஒரு பெட்டியில் வைத்து அதன்மீது ஓர் ஆலயத்தைக் கட்டினார். இந்த ஆலயம் அழிந்து போகவே மற்றொரு ஆலயம் கட்டப்பட்டது. 1823-இல் இந்த ஆலயம் தீக்கிரையாகிவிட்டது.

மீண்டும் கட்டப்பட்டுள்ள ஆலயத்தினுள்ளே பவுல் அப்போஸ்தலனின் கல்லறையை இன்றும் காணலாம்.

தான் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செய்த கொடுமை களை பவுல் அப்போஸ்தலன் என்றுமே மறந்துவிடவில்லை! மிகவும் மனத்தாழ்மையுடன்தான் தனது பணியைச் செய்து வந்தார். அடக்கத்தோடு தனது கருத்துக்களைக் கூறினார் (1 கொரி.7:40).

அவரது ஊழியத்தினால் கிடைத்த அபரிமிதமான பலனைப் போன்று, இதுவரை வேறு எவருக்குமே

கிடைக்கவில்லை எனலாம்.


எனது அருமை நண்பர்களே 

அப்போஸ்தலனாகிய பவுல் உங்களுக்கு முன் மாதிரியாக இருக்க விரும்புகிறேன். 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன். 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*