1 peter 1:13-25 Study
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் (1 பேதுரு 1:13-25)
வேதாகமத்தைப் படிக்கும் மாணவருக்கு, விரிவான கற்பனையொன்று மதிப்புமிக்க ஆதார மூலமாக உள்ளது. இதனுடன் அவர், வேறுவகையில் தாம் இழந்தவராக
இருக்கக் கூடிய உலகங்களில் பிரவேசித்து அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். முதல் நூற்றாண்டு ஆசிய மைனர் பகுதியில் சிமிர்னா, எபேசு அல்லது
பெர்கமு போன்ற மாபெரும் நகரங்கள் ஒன்றில், 1 பேதுரு நிருபத்தின் முதல் வாசகர்களாக இருத்தல் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள் முதல் நூற்றாண்டின் ஆசியா மைனர் பகுதியில் மாத்திரமே, 1 பேதுரு நிருபத்தில் உள்ள வார்த்தைகளின் வலிவை நாம் புரிந்து கொள்ள முடியும்
நீங்கள் பிரவேசித்துள்ள உலகத்தில் சபை புதியதாக உள்ளது. கிறிஸ்துவின் சிலுவை மரணம், நினைவுகூரக்கூடிய காலத்திற்குள் நடைபெற்றுள்ளது.
உங்கள் நகருக்கு வந்த முதல் பிரசங்கியாரை நீங்கள் நினைவில் வைத்திருக் கிறீர்கள்.
முதலில் அவர் ஆர்வத்தைத் தூண்டுபவராக மாத்திரமே இருந்தார், ஆனால் நீங்கள் திகைப்படையும்படி, அவரது சற்குணமும் செய்தியும் மனதை ஈர்ப்பவையாக உள்ளன.
அவர், ஒரே தேவன்தாம் இருக்கிறார் என்றும் எல்லா மனிதர்களும் அவருக்கு எதிராகப் பாவம் செய்து அவருக்கு விரோதிகள் ஆனோம் என்றும் கூறினார். மேலும் அவர், ஆண்டவராகிய கிறிஸ்து என்ற மீட்பரைத் தேவன் அனுப்பினார் என்றும் கூறினார்.
நம்பிக்கை, அன்பு, ஆகியவற்றின் அந்தச் செய்தியைக் கேட்டு, நீங்கள் கிறிஸ்தவரானீர்கள்
பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கடந்துள்ளன. நீங்களும் மற்றவர்களும் உங்கள் சமூகத்தின் மதப் பாரம்பரியங்களைக் கைவிட்டுள்ளதால், உங்கள் நண்பர்களில் சிலர் உங்கள்மீது கசப்புணர்வு கொண்டவர்கள் ஆகியுள்ளனர்.
உறவினர்களும் அயலகத்தவர்களும் உங்களை ஒரு மதி யீனர் என்று அழைக்கின்றனர்;
நீங்கள் சேவிக்கும் தேவனைப் பற்றி நகர அலுவலர்கள் உங்களைக் கேள்விக் கேட்கின்றனர். உங்கள் சக கிறிஸ்தவர்களில் சிலர், கிறிஸ்துவைத் துறந்துவிட்டு, விசுவாசம் உள்ளவர்களின் வாழ்வைப் பரிதவிப்பிற்கு உள்ளாக்குவது காண்பதற்கு வேதனை நிறைந்ததாக உள்ளது
இந்த உலகத்தில் கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்படுதலுக்குப் பெரும் விருப்பம் கொண்டுள்ளனர்; 1 பேதுரு போன்ற நிருபம் ஆவிக்குரிய வகையிலான வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றிற்கு இடையில் வேறுபாட்டை அர்த்தப்படுத்த முடிந்தது. பேதுருவின் செய்தி எளிமையாக உள்ளது நீங்களும் உங்கள் சக கிறிஸ்தவர்களும் வைராக்கியத்தில் இளைப்படைந்து விடக்கூடாது. "நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த
புத்தியுள்ளவர்களாயிருந்து” என்று நிருபம் கூறுகிறது (1:13), தேவன் தமது மக்களிடத்தில் இருந்து பரிசுத்தத்தைக் காட்டிலும் குறைவற்றதை விரும்புகிறார் மற்றும் எதிர்பார்க்கிறார்.
இதற்குப் பேதுரு 1:16ல் லேவியராகமத்தைச் சுட்டிக்காண்பித்தல் மூலம் மறுவலிவூட்டுகிறார்: “நான் பரிசுத்தர்; ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” (லேவியராகமம் 11:44; 19:2; 20:7).
பரிசுத்த தன்மை! நேர்மையாகக் கூறுவதென்றால் இது, இந்தக் கிறிஸ்தவர்கள்
தங்களுடன் தொடர்புபடுத்தக் கடினமான வார்த்தையாக உள்ளது.