1 பேதுரு 1:3-12 Study

0



1 Peter 1:3-12 Study



ஜீவனுள்ள நம்பிக்கையில் சந்தோஷமாயிருத்தல் 1 பேதுரு 1:3-12)

பகுத்தறிவு வாதம் நம்பிக்கையாயிருக்கும்படி கூறுவதால் ஞானமுள்ள ஒரு மனிதர் நம்பிக்கையாயிருக்கிறார். 

எதிர்காலம் மிகச்சிறந்ததாக இருக்கும் என்று நம்புவதற்குக் காரணங்களை நாம் கொண்டுள்ள போது, நம்மால் சிரமங்களைச் சகித்துக்கொள்ள முடியும். ஞானமுள்ள ஒரு மனிதரின் நம்பிக்கையையே பேதுரு தமது வாசகர்களுக்கு முன்பாக நிறுத்திக்காண்பித்தார்.

இயேசு ஜீவிக்கிறார் என்பதால் நம்பிக்கை ஜீவிக்கிறது (1:3-5)

சமீபத்தில் கிறிஸ்துவுக்குள் இணைந்து அவரது நாமத்திற்காக ஏற்கனவே ஒரு சுமையைச் சுமக்க அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, ஆவிக்குரிய ஒரு நடத்துனர் கூற வேண்டியிருந்தது என்ன? 

அவர்கள் ஒரு புதிய வாழ்வைத் தொடங்கியிருந்தனர், ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையை சந்தோஷத்துடன் கண்ணோக்கிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் அயலகத்தவர்களால் புறக்கணிக்கப்படுதல், அலுவர்களால் வேட்டையாடப்படுதல், 

மற்றும் வாழ்வின் தேவைகள் மறுக்கப்படுதல் ஆகியவற்றை எண்ணியிருக்கவில்லை. பேதுரு நம்பிக்கை வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் இந்த வார்த்தையை இவ்வதிகாரத்தில் மூன்று முறை (வசனங்கள் 3, 13, 21) மற்றும் 3ம் அதிகாரத்தில் இன்னும் இரண்டு முறை (வசனங்கள் 5, 15) பயன்படுத்தினார். பேதுரு எழுதிய முதல் நிருபம் “நம்பிக்கையின் நிருபம்” என்று அழைக்கப்பட்டுள்ளது 

மற்றும் பேதுரு "நம்பிக்கையின் அப்போஸ்தலர்” என்று அழைக்கப்பட்டுள்ளார். புதிய ஏற்பாட்டின் மற்ற எழுத்தாளர்களைக் காட்டிலும், பேதுரு மிகவும் அடிக்கடி நம்பிக்கைக்காக வேண்டுகோள் விடுத்தார் என்று கருத்துக் கொள்வது கடினமாயிருக்கும்.

 உதாரணமாக, ரோமருக்கு எழுதிய நிருபத்தின் மூன்று அதிகாரங்களில் (5, 8 மற்றும் 12) பவுல் இவ்வார்த்தையைப் பதினைந்து முறை பயன்படுத்தினார். 1 பேதுரு நிருபத்தை "நம்பிக்கையின் நிருபம் என்று அழைத்தல் ஒரு மிகைக்கூற்றாக இருந்தாலும், 1ம் அதிகாரத்தின் செய்தியின் கீழே நம்பிக்கை உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. 

கிறிஸ்தவ நம்பிக்கையானது முடிவுக் காலம், கர்த்தரின் தரிசனம் மற்றும் எல்லாப் பொருள்களும் பட்சிக்கப்படுதல் ஆகியவற்றுடன் வலுவாகக் கட்டப்பட்டுள்ளது (1:5, 7, 9, 13). இயேசு கிறிஸ்து மரித்தோரில் இருந்து உயிர்த்திருந்தார் என்பதைப் பேதுருவின் வாசகர்கள் அறிந்திருந்தனர். 

அவர்கள் ஒரு ஜீவனுள்ள நம்பிக்கையினுள் புதிதாகப் பிறந்திருந்தனர் - ஜீவனுள்ள கர்த்தர் என்ற வகையில் கிறிஸ்து ஆளுகை செய்வதால் இந்த நம்பிக்கை ஜீவனுள்ளதாக இருக்கிறது (1:3, 21).


     1பேதுரு அறிமுகம்   🙏🙏     ‣⸲‣ 


    1பேதுரு:2:1.10 விளக்கம்    🙏🙏 



இந்த ஜீவனுள்ள நம்பிக்கையில் யாரெல்லாம் பங்கேற்கலாம்? "மறுபடியும் ஜெநிப்பிக்கப்” பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று பேதுரு கூறினார் (1:4) தேவன் "நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” என்று (KJV) வேதாகமம் கூறுகையில் NIVவேதாகமம், "அவர் நமக்குப் புதுப்பிறப்பைக் கொடுத்திருக்கிறார்” என்று கூறுகிறது. ஏறக்குறைய முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இயேசு, நிக்கொதேமுவிடம் கூறியிருந்ததைக் காட்டிலும் அதிகமாக எதுவும் பேதுரு கூறவில்லை. ஜீவனுள்ள நம்பிக்கையானது, தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறந்திருத்தல் மூலமாக வருகிறது (யோவான் 3:5), “தண்ணீ ரினாலும் ஆவியினாலும் பிறந்திருத்தல்" என்ற சொற்றொடர், 

ஞானஸ்நானத்தைக் குறிப்பதாக உள்ளது. ஞானஸ்நானத்தில் ஒருவர் கர்த்தருடன் இணைதலில் இருந்து எழுகிறபோது, ஜீவனுள்ள நம்பிக்கையில் பங்கேற்பதற்காகப் புதிதாகப் பிறக்கிறார். ஞானஸ்நானத் தண்ணீரில், கிறிஸ்துவின் இரத்தத்தை அவர் சந்திக்கிறபோது, அவர் “என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனத்தினாலே மறுபடியும் பிறக்கிறார் (1:23)


    1பேதுரு 1:13.25 விளக்கம்   🙏🙏 


கிறிஸ்தவர்கள் தங்கள் கண்களை நிலையாக வைத்திருக்கும் இந்த ஜீவனுள்ள நம்பிக்கை எதுவாக உள்ளது? இது, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய ஒரு பரலோக சுதந்தரமாக உள்ளது என்று பேதுரு கூறினார் (1:4), "சுதந்தரம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது, 

ஒருவரின் பங்கு அல்லது பாகத்தை ஏற்றுக்கொள்ளுதல் பற்றியதாக உள்ளது. கிறிஸ்தவருக்கான பங்கு என்பது ஒரு சுதந்தரவாளியாக உள்ளது. 

கலாத்தியர் 4:1-7ல் பவுல், ஒரு வேலைக்காரரின் பாகத்தை ஒரு மகனின் பாகத்துடன் வேறுபடுத்தி ஒப்பிட்டார். தேவன் மாத்திரமே தமது மகன்கள் மற்றும் மகள்களுக்கு நியமிக்கக்கூடிய சுதந்தரத்தின் முழுப்பங்கை, கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒருவர், மகிழ்வுடன் அனுபவிக்கிறார்


Umn ministry Chennai 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*