புளித்தமா, தேன், உப்பு

0

 



புளித்தமா, தேன், உப்பு 

(லேவி 2:11-16)

காணிக்கை 


தமக்கு காணிக்கையாக செலுத்தப்படும் போஜன பலி யில் புளித்தமாவும் தேனும்சேர்க்கப்படக்கூடாது என்று கர்த்தர் தடை பண்ணுகிறார்.

 "நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்த மாவில் செய்யப்படாதிருப்பதாக.;

புளித்தமாவுள்ளதொன்றையும் -தேனுள்ள தொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்" (லேவி 2:11) என்று கர்த்தர் சொல்லுகிறார்

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டு வந்தபோது அவர்கள் புளிப்பில்லாத

அப்பத்தை புசித்தார்கள் அதை நினைவுகூரும் வண்ணமாக அவர்கள் கர்த்தருக்கு போஜன பலியை காணிக்கையாக செலுத்தும்போது, புளிப்பில்லாத மாவையே செலுத்துகிறார்கள்.


கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம். ஆனாலும் தேன் உள்ளது எதையும் தமக்கு தகனபலியாக தகணிக்க வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


 கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்தப்படும் போஜனபலியில் புளித்தமாவும் தேனும் ஏன்

தடை பண்ண பட்டிருக்கிறது என்பதற்கான காரணங்களை வேதபண்டிதர்கள் விளக்கமாக சொல்லுகிறார்கள்.


புறஜாதியார் மத்தியிலே அவர்களுடைய

விக்கிரகங்களுக்கு புளித்த மாவையும்

தேனையும் காணிக்கையாக செலுத்துவது

வழக்கம். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு

போஜனபலியாக காணிக்கை செலுத்தும்போது

அதிலே புளித்த மாவையும் தேனையும் சேர்த்தால், அவர்கள் விக்கிரகாராதனையை கற்றுக்கொள்வதற்கு வாய்ப்புண்டாகும்

கர்த்தர் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரரை புறஜாதியார் மத்தியிலிருந்து மொத்தமாக வேறுபிரிக்க விரும்புகிறார். இதற்காகவே, கர்த்தருக்கு செலுத்தப்படும் போஜன பலியில் புளித்தமாவும் தேனும் தடைபண்ணப்பட்டிருக்கிறது என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.


புளித்த மாவான து ஆவியின் வியாகுலத்திற்கும்

துக்கத்திற்கும் அடையாளம் இப்படியாக

என் மனம் கசந்தது என் உள்ளிந்திரியங்களில்

குத்துண்டேன்" (சங் 73:21). தேனானது

மாம்சத்தின் சந்தோஷத்திற்கு அடையாளம்.

கர்த்தருக்கு காணிக்கை செலுத்துகிறவர்களை,

தங்கள் மாம்சத்தில் சந்தோஷப்படாமல்

தங்கள் ஆவியிலே சந்தோஷப்பட வேண்டும்.

தேன் மனுஷருடைய மாம்சத்தை உற்சாகப்படுத்தும்.


கர்த்தரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும்

உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும்.

மாம்சத்தின் சந்தோஷத்தோடு, மாம்சத்தின்

உற்சாகத்தோடும் கர்த்தரை ஆராதிக்கக்

கூடாது ஆகையினால் மாம்சத்தின்

சந்தோஷத்திற்கு உதவியாயிருக்கும் தேனை,

கர்த்தருக்கு தகனபலியாக தகனிப்பது

தடைபண்ண பட்டிருக்கிறது.

  Bible study 

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு

படைக்கிற போஜன பலியானது உப்பினால்

சாரமாக்கப்பட வேண்டும் என்று கர்த்தர்

சொல்லுகிறார் "நீ- படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக

உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை

உன் போஜனபலியிலே குறைய விடாமல் நீ

படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும்

படைப்பாயாக" (லேவி 2:13) என்று கர்த்தர்

சொல்லுகிறார்.


கர்த்தருடைய பலிபீடம் அவருடைய

பந்தியின் மேஜையாயிருக்கிறது நாம்

போஜனம் பண்ணும் நம்முடைய மேஜையில்

எப்போதும் உப்பு வைத்திருப்பது போல

கர்த்தருடைய பலிபீடத்திலே காணிக்கையாக

செலுத்தப்படும்போது, உப்பும்

காணிக்கையாக செலுத்தப்பட வேண்டும்.


கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரோடு

செய்துகொள்ளும் உடன்படிக்கை, "உப்பின்

உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பிரபஞ்சத்து மனுஷர் தங்கள்

மத்தியிலே உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்போது அவர்கள்

ஒன்றாய்ப் புசித்து குடித்து, தங்களுடைய

உடன்படிக்கையை உறுதிபண்ணிக் கொள்கிறார்கள். மனுஷருடைய எல்லா

போஜனங்களிலும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.



தமக்கு காணிக்கையாக செலுத்தப்படும் போஜனபலி கர்த்தர் அங்கீகரிக்கிறார் என்பதற்கு அடையாளமாக, போஜனபலியோடு,

உப்பையும் படைக்கப்படுகிறது கர்த்தர்

தம்முடைய ஜனத்தாரோடு போஜனம் பண்ணுகிறார். கர்த்தருடைய ஜனமும்

அவரோடேகூட அவருடைய பந்தியிலே

போஜனம் பண்ணுகிறார்களே. இதன் மூலம்

கர்த்தர் தம்முடைய ஜனத்தோடு

பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை

உறுதி பண்ணுகிறார்.


இதோ வாசற்படியில் நின்று

தட்டுகிறேன் ; ஒருவன் என் சத்தத்தைக்

கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில்

நான் பிரவேசித்து, அவனோடே

போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே

போஜனம் பண்ணுவேன்" (வெளி 3:20).


கடைசி காலத்தின் 23 அடையாளங்கள் 


பூர்வ காலத்தில், மனுஷரின் மத்தியில்

உப்பானது நட்புக்கு அடையாளம் இருந்தது.

கர்த்தருக்கு போஜனபலியை காணிக்கையாக

செலுத்துகிறவரை, அந்தப் போஜனபலியோடு

உப்பைக் கொண்டு வரவேண்டிய அவசியமில்லை

கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்தில் உப்பானது

ஏற்கெனவே சேகரிக்கப்பட்டு சேமித்து

வைக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருக்கு

காணிக்கைகளைக் கொண்டு வருகிறார்கள்,

விறகு, உப்பு போன்றவற்றை பொதுவான

காணிக்கையாக கொண்டு வருகிறார்கள்

இஸ்ரவேல் புத்திரர் படைக்கும்

போஜனபலியில், கர்த்தருடைய சமுகத்தில்

ஏற்கெனவே சேமிக்கப்பட்டிருக்கும்

உப்பு பயன்படுத்தப்படுகிறது.


"பின்னும் உன் தேவனுடைய

ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்க

வேண்டி இருப்பதை, நீ ராஜாவின்

கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக

நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா

கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும்

ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை

என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய

நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும்

வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன்

நூறு தாலந்து வெள்ளி, நூற்றுக்கலக்

கோதுமை, நூற்றுக்கலத் திராட்சரசம்,

நூற்றுக்கல எண்ணெய் மட்டும் உங்களை

கேட்பவை எல்லாவற்றையும், வேண்டிய

உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,

பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்

படியே எது தேவையாயிருக்குமோ

அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய

ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச்

செலுத்தப்படவும்வேண்டும்" (எஸ்றா 7:20-23)


கர்த்தருடைய ஆலயம் கட்டப்பட்டபோது,

வெளிப்பிரகாரத்தின் சுற்றுச் சுவரிலே பல

அறைகள் கட்டப்பட்டன. அந்த அறைகளில்

ஒரு அறை உப்பை சேமித்து வைப்பதற்கு

பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட்டது. புதிய

ஏற்பாட்டுக் காலத்தின் விசுவாசிகளாகிய நாம்

இந்த உலகத்திற்கு உப்பாயிருக்கிறோம்.


தமக்கு முதற்கனிகளை காணிக்கையாக கொண்டு வருவது பற்றியும் கர்த்தர் தம்முடைய

பிரமாணத்தில் சொல்லுகிறார் இஸ்ரவேல்

புத்திரர் தங்களுடைய அறுவடை நாளின் அறுக்கிற

முதற்பலன்களை கர்த்தருக்கு

காணிக்கையாக செலுத்தவேண்டும். இதுபற்றி

உபாகமம் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


"உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்

கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும்

நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை

எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன்

தேவனாகிய கர்த்தர் தமது நாமம்

விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும்

ஸ்தானத்திற்கு போய் அந்நாட்களில்

இருக்கும் ஆசாரியரிடத்திலே

சென்று அவளை நோக்கி: கர்த்தர் எங்களுக்குத்

கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு

ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன்

என்று இன்று உம்முடைய தேவனாகிய

கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன்

என்பாயாக" (உப 26:2,3).


"முதற்கனிகளைக் காணிக்கையாகக்

கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச்

செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல்

அவைகள் சுகந்த வாசனையாகத்

தகனிக்கப்படலாகாது" (லேவி 2:12) என்றும்,


"முதற்பலன்கள் போஜன பலி யாக நீ

கர்த்தருக்குச் செலுத்த வந்தால், நிறைந்த

பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி

உதிர்த்து அதை உன் முதற்பலன்

போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய்"

(லேவி 2:14) என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.


இஸ்ரவேல் புத்திரர் முதற்கனிகளை

காணிக்கையாகக் கொண்டு வரும்போது

அவைகளை கர்த்தருக்கு செலுத்த வேண்டும்.

அந்த முதற்கனிகளை கர்த்தருடைய

பலிபீடத்திலே சுகந்த வாசனையாக

தகனிக்கக்கூடாது (லேவி 2:12)

முதற்கனிகளை ஆசாரியர்களிடத்தில்

கொடுக்கவேண்டும்.


இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு மெல்லிய

வேண்டிய செலுத்த மாவு எண்ணெய்

தூபவர்க்கம் போன்ற போஜன பலி நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் முதற்கனிகளை போஜனபலியாக செலுத்த வேண்டும் என்று நியமனம் செய்யப்படவில்லை. முதற்கனிகளின்

காணிக்கையை அவர்கள்

மனவிருப்பத்தின்படி யும், மனை உற்சாகமாகவும்,

சுயாதீன மாகவும் செலுத்த வேண்டும்.



இஸ்ரவேல் புத்திரர் முதற்பலன்களை

தமக்கு போஜனபலியாக செலுத்த வந்தால்,

அதை எவ்வாறு செலுத்த வேண்டும் என்று,

கர்த்தர் தம்முடைய பிரமாணத்தை இந்த

வசனப்பகுதியில் சொல்லுகிறார்.


முதற்பலன்கள் போஜன பலி யாக நீ

கர்த்தருக்குச் செலுத்த வந்தால் நிறைந்த

பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி

உதிர்த்து அதை உன் முதற்பலன்

போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய்.

அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல்

தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு

போஜனபலி" (லேவி 2:14,15) என்றும்


"பின்பு ஆசாரியன், உதிர்த்த

தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து,

ஞாபகக்குறியான பங்கை அதின் தூபவர்க்கம்

எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்;

இது கர்த்தருக்கு இடும் தகனபலி

(லேவி 2:16) என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.


முதற்பலன்களை கர்த்தருக்கு போஜனபலியாக செலுத்துகிறவர்களை, நிறைந்த பச்சையான

கதிர்களை செலுத்த வேண்டும். கதிர்கள்

நிறைவானது இருக்க வேண்டும். அந்தக்

கதிர் முழுவதும் தானியம் நிரம்பியது இருக்க வேண்டும். கர்த்தருக்கு முதற்பலன்களை

காணிக்கையாக செலுத்தும்போது சிறிய

கதிர்களை யோ தானியம் உதிர்ந்த கதிர்களையோ

செலுத்தக்கூடாது அவை நிறைந்த

பச்சையான கதிர்கள் இருக்க வேண்டும்.


கர்த்தருக்கு முதற்பலன்களை போஜன பலி யாக செலுத்தும் போது, அந்தக் கதிர்களை பச்சையாக செலுத்தக்கூடாது. பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி, அதை உதிர்த்து அதை

அதன் முதற்பலனின் போஜனபலியாக

செலுத்தவேண்டும். பச்சையான கதிர்களை

நெருப்பில் வாட்டிய பின்பு, அதை

முழுவதுமாக உதிர்த்து விடலாம். வாட்டிய

கதிர்களை போரடித்து உதிர்க்காலம்.

அப்போது கர்த்தருக்கு கதிர்களாக

செலுத்தாமல், தானியமாக செலுத்த முடியும்,


நெருப்பிலே வாட்டி உதிர்த்த தானியத்தின்மேல்

எண்ணெய் பார்க்க வேண்டும். அதன்மேல்

தூபவர்க்கம் போடவேண்டும் இது

கர்த்தருக்கு செலுத்தப்படும் போஜனபலி

முதற்பலன்களின் தானியத்தின் மேல் எண்ணெய்

வார்த்து தூபம் போடுவது மனுஷருடைய

தாழ்மைக்கும் அவர்களுடைய ஞானத்திற்கும் அடையாளம். நம்முடைய ஞானமும் மனத்தாழ்மையும், நம்முடைய ஆவியை

மென்மையாக்க வேண்டும். கடினமான

தானியம் மென்மையாவது போல, நம்முடைய

கல்லான இருதயம் மென்மையான

இருதயம் மாறவேண்டும்.


நெருப்பிலே வாட்டி உதிர்த்த தானியத்தின் மேல்

எண்ணெய் வார்த்து தூபவர்க்கம் போடும்போது

அது நறுமணம் உள்ளதாக இருக்கும். அதுபோலவே நம்முடைய ஊழியமும்

நம்முடைய மனத்தாழ்மை யாலும், ஞானத்தினாலும், நறுமணமுள்ளதாகயிருக்க வேண்டும். நம்முடைய ஊழியம் கர்த்தருக்கு

பிரியமானதாகவும், அவருடைய பரிசுத்தவான்களுக்கு பிரயோஜனம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.


இஸ்ரவேல் புத்திரர் போஜனபலியாகிய

காணிக்கையை கர்த்தருக்கு செலுத்தும் போது,

அந்தப் போஜனபலியிலிருந்து

ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை

எடுத்துப் பலிபீடத்தின் மேல் தகனிப்பார்

(லேவி 2:9). இது கர்த்தருக்குச் சுகந்த

வாசனையான தகனபலி


இதுபோலவே, இஸ்ரவேல் புத்திரர்

முதற்பலன்களை கர்த்தருக்கு போஜனபலியாக

செலுத்தும்போது, ஆசாரியன், உதிர்த்த

தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து,

ஞாபகக்குறியான பங்கை அதின்

தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத்

தகனிக்கக்கவேண்டும்; இது கர்த்தருக்கு

இடும் தகன பலி (லேவி 2:16).


நாம் கர்த்தருக்காக செலுத்துகிற

காணிக்கைகளெல்லாம் அக்கினியினால்

கனிக்கப்படுகிறது நாம் கர்த்தர் மீது

வைத்திருக்கும் பரிசுத்தமான அன்பே

அக்கினிக்கு அடையாளமாயிருக்கிறது. நாம்

கர்த்தருக்கு பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தும்போது, கர்த்தர் மீது உண்மையான

அன்புகூர்ந்து நம்முடைய பலிகளை

செலுத்த வேண்டும் அன்பில்லாமல் செலுத்தப்படும் பலியும் காணிக்கையும்

கர்த்தருக்கு பிரியமான பலியாக இருக்காது.


நாம் கர்த்தருக்கு போஜன பலி செலுத்தும்போது அதின் மேல் தூபவர்க்கம் போடப்படுகிறது.

தூபவர்க்கம் து இயேசுகிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்திற்கு அடையாளம். கிறிஸ்துவானவர், பிதாவின் சமூகத்திலே நமக்காக எப்போதும்

பரிந்துபேசிக் கொண்டிருக்கிறார். கிறிஸ்துவின்

மத்தியஸ்த ஊழியத்தின் மூலம், கர்த்தர் தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தாலும்,

நம்மையும், நம்முடைய காணிக்கைகளையும்

பலிகளையும், ஊழியங்களையும் அங்கீகரிக்கிறான்.


இரண்டு எபிரெய வார்த்தைகள்

சேர்ந்து போஜனபலி என்னும்

வாக்கியமாகிறது. அவையாவன: ஒன்று

"மின்ஹாஹ்" மற்றொன்று "கொர்பான்"

என்பதாகும். மின்ஹாஹ் என்பதற்கு

பலி அல்லது காணிக்கை என்று பொருள்

கொர்பான் என்பதற்கு பலிபீடத்திற்கும்

கொண்டுவரப்படும் பொருள், தியாகம்

காணிக்கை என்று பொருள்.


போஜன பலி யில் இரத்தம் எதுவும்

சிந்தப்படவில்லை. ஆகையினால் இது

கிறிஸ்துவின் பாவநிவாரண பலிக்கு

அடையாளம் அல்ல. தேவன் நம்முடைய

பாவத்தை மன்னித்தற்காக இது நாம்

செலுத்தும் ஸ்தோத்திரக் காணிக்கையாகவே

கருதப்படுகிறது. போஜன பலியில் புளிப்பையோ

அல்லது தேனையோ சேர்க்கக்கூடாது. புளிப்பு

அழிவைக் குறிக்கும் (லேவி 2:11 ;2கொரி 5:8)

இதில் உப்பு சேர்க்கப்படவேண்டும். உப்பு சுத்தத்தையும், ஜீவன் பாதுகாக்கப்படுவதையும் குறிக்கும். உடன்படிக்கைகளைச் செய்யும்போது உப்பைப் பயன்படுத்துவது வழக்கம்


தமக்கு செலுத்தப்படும் போஜன பலியாகிய காணிக்கை குறித்து கர்த்தர் கொடுத்திருக்கும் கட்டளைகளின் விவரம் வருமாறு :


1.  போஜனபலியாகிய காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக. அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின் மேல் தூபவர்க்கம் போடவேண்டும் (லேவி 2:1)


2.  அதை ஆசாரியர்களிடத்தில் கொண்டு

வருவான்; ஆசாரியன் அதைப் பலிபீடத்தின் மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன் (லேவி 2:2)


3.  அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது

ஆசாரியரை சேரும். இது மகா பரிசுத்தமானது. ஆசாரியர்கள் இதைப் புசிக்கலாம். (லேவி 2:3)


4.  போஜனபலி அடுப்பில் பாகம்பண்ணப்

பட்டதானால், அது எண்ணெயிலே

பிசைந்த மெல்லிய மாவில் செய்த

புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய்

பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது

இருப்பதாக. (லேவி 2:4)


5.  போஜனபலி - தட்டையான சட்டியில்

பாகம்பண்ணப்பட்டதானால், அது

எண்ணெயில் பிசைந்த புளிப்பில்லா

மெல்லிய மாவில் செய்யப்

பட்டதாயிருப்பதாக. (லேவி 2:5)


6.  போஜனபலியைத் துண்டு துண்டாகப்

போட்டு அதன் மேல் எண்ணெய்

வார்ப்பாயாக. (லேவி 2:6)


7.  போஜனபலி பொரிக்குஞ் சட்டியில்

பாகம்பண்ணப்பட்டதானால், அது

எண்ணெயில் பிசைந்த மெல்லிய

மாவில் செய்யப்படுவதாக. (லேவி 2:7)


8.  இப்படிச் செய்யப்பட்ட போஜனபலியைக்

கர்த்தருக்குச் செலுத்துவாயாக. (லேவி 2:8)


9.  ஆசாரியன் அதைப் பலி

பீடத்தண்டையில் கொண்டு வந்து, அந்தப் போஜனபலியிலிருந்து ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக் கடவன் (லேவி 2:8-9)


10.  இந்தப் போஜனபலியில் மீதியானது

ஆசாரியரை சேரும். இது

ஆசாரியருடைய பங்கு. அவர்கள்

இதைப் போஜனம் பண்ணலாம். (லேவி 2:10)


11.  நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த

போஜனபலியும் புளித்தமாவினால்

செய்யப்படாதிருப்பதாக. (லேவி 2:11)


12.  முதற்கனிகளைக் காணிக்கையாகக்

கொண்டு வந்து, அவைகளை கர்த்தருக்குச்

செலுத்தலாம். ஆனாலும், பலிபீடத்தின் மேல்

அவைகள் சுகந்த வாசனையாக

தகனிக்கப்படலாகாது. (லேவி 2:12)


13. படைக்கிற எந்த போஜனபலியும்

உப்பினால் சாரமாக்கப்படுவதாக


14. நீ படைப்பது எல்லாவற்றோடும்

உப்பையும் படைப்பாயாக. (லேவி 2:13)


15.  முதற்பலன்களை போஜன பலி யாக

கொண்டுவரக்கடவாய். (லேவி 2:14)


16. போஜனபலியின் மேல் எண்ணெய்

வார்த்து, அதன் மேல் தூபவர்க்கத்தைப்

போடுவாயாக; (லேவி 2:15)


17.  ஆசாரியன் போஜனபலியில் ஞாபகக்

குறியான பங்கை அதின் தூபவர்க்கம்

எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்

கடவன். (லேவி 2:16)


சர்வாங்க தகனபலிகளும் பாவநிவாரண பலிகளும்

என்பது வேறு போஜனபலி என்பது வேறு. போஜனபலி கர்த்தருக்குச் செலுத்தப்படும்

ஸ்தோத்திரபலியாகும். கர்த்தரை இரட்சகராக

அங்கீகரித்து, அவர் தன்னை மன்னித்ததற்காகக்

கர்த்தரை ஸ்தோத்தரிப்பதும் தேவனுக்கு

எல்லாமே பெரியது என்று அங்கிகரித்து அவருக்கு நன்றி செலுத்துவது தேவனுடைய

ஆசீர்வாதங்களுக்காக அவரைத் துதித்து

தங்களுடைய பாவங்களை மன்னித்தற்காக

அவரை ஸ்தோத்தரிப்பது போஜனபலியின்

அடையாளம். பாவநிவாரண பலியும், சர்வாங்க

தகனபலியும் பாவ நிவாரணத்திற்கு அடையாளம்.


Umn ministry Chennai 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*