கடைச் காலத்தின் 23 அடையாளங்கள்
1 சிலுவை மரணமும் சொந்த மக்களின் புறக்கணிப்பும்
மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசையில் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுகள் பட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது. (லூக்கா 17:24,25)
1. மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசையில் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.
தான் இந்த பூமிக்கு மீண்டும் வருவேனென்றும், அப்போது தன் வருகை எப்படியிருக்கும் என்பதையும் இயேசு இந்த இட்த்திலே முன்னறிவித்திருக்கிறார்.
2. அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுகள் பட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது
.
தன் முதலாம் வருகையில், தான் பல பாடுகளைப்பட வேண்டுமென்றும், தன் சொந்த இன மக்களாலேயே புறக்கணிக்கப்பட வேண்டுமென்றும் இங்கே குறிப்பிடுகிறார். இயேசு இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை முன்னறிவித்த கொஞ்சங்காலத்திலேயே, அவர் தாம் சொன்னதுபோலவே பல பாடுகளுடன் கூடிய சிலுவை மரணத்தை சந்தித்தார். அந்த மரணமும், அவரது சொந்த இன மக்களாகிய யூதர்களுடைய அன்றைய சந்த்தியினாலும், அவர்களது புறக்கணிப்புகளாலேயுமே நேர்ந்த்து குறிப்பிட்த்தக்கது.
2 சீடர்களுக்கான துன்பங்கள்
...என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து,ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகளுக்கு முன்பாகவும்உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். (லூக்கா 21:12) உங்களில் சிலரைக் கொலை செய்வார்கள். (லூக்கா 21:16)
...இயேசுவின் சீடர்கள், உலகத்தின் பாவங்களுக்காக தன்னையே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, நாற்பதாம் நாள் பரலோகத்திற்கு எழுந்தருளிப்போன இயேசுவைப் பற்றிஇஸ்ரேலிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும்அறிவித்தார்கள். இதனால் யூதர்கள் அவர்களைப் பிடித்து, தங்கள் ஜெப ஆலயங்களில் அடித்தும், ரோமர்களின் சிறைச்சாலைகளில் அடைத்தும், ராஜாக்கள் முன்பாக விசாரணைக்கு நிறுத்தியும் துன்ப்ப்படுத்தினார்கள். அதோடு, இயேசுவைப் பிடித்து ரோமர்களின் கைகளில்ஒப்புக்கொடுத்து, அவரைக் கொலை செய்த்து போலவே, அவருடைய சீடர்களையும் அவர்கள் கொலை செய்தார்கள். ஸ்தேவான் என்பவர் கல்லெறியப்பட்டு கொலை செய்யப்பட்டார். முக்கிய சீடர்களான யாக்கோபுவும் பவுலும் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். முதன்மை தலைமை சீடரான சீமோன் பேதுரு, இயேசுவைப் போலவே சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவிற்கு வந்த தோமா (செயிண்ட் தாமஸ்) என்ற சீடரோ சென்னையில் ஊழியம் செய்யும்போது, ஈட்டியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இவை எல்லாம் இயேசு வாழ்ந்த முதலாம் நூற்றாண்டிற்குள்ளாகவே நிகழ்ந்து முடிந்த சம்பவங்கள். அனைத்தும் இயேசுவின் வார்த்தைகளின் படியே நிகழ்ந்து முடிந்தன.
3 தேவாலயம் இடிக்கப்படுதல்
பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது, அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின் மேலிராத படிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார். (லூக்கா 21:5,6)
இயேசு தாம் இஸ்ரேலில் வாழ்ந்த காலத்தில்முன்னறிவித்தபடியே, எருசலேமில் இருந்த தேவாலயமானது,கி.பி. 70-இல் டைடஸ் என்ற ரோமப் படைத்தளபதியின் தலைமையில் நிகழ்ந்த முற்றுகையில் இடிக்கப்பட்டது. விலைஉயர்ந்த தேவாலயத்தின் கற்கள் ஒன்றின் மேல் ஒன்றுஇராதபடிக்கு பெயர்த்து எடுத்துச்செல்லப்பட்டு, வேறுஇடத்தில் வேறொரு மதத்தின் கோவிலுக்காகப்பயன்படுத்தப்பட்டன. ஆக, இயேசுவின் தீர்க்கதரிசனவார்த்தைகள் இந்த நிகழ்விலும் வரலாற்றில் அப்படியேநிறைவேறின. அதோடு, இந்த முற்றுகையில் இஸ்ரேல் வாழ் யூதர்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட்தோடு, லட்சக்கணக்கானோர் உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு சிதறிப்போயினர்.
இரண்டாம் கட்ட அடையாளங்கள்:
4 யூதர்கள் மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்புதல்
இஸ்ரவேல் புத்திரரே , நீங்கள் ஒவ்வொருவராய்சேர்க்கப்படுவீர்கள். (ஏசாயா 27:12) (கி.மு. 712)
என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்;அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன், (ஆமோஸ்9:14, 15) (கி.மு. 787)
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் சகல ஜாதிகளிட்த்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன். (எசேக்கியேல் 37:21,22)
பைபிள் தீர்க்கதரிசன வார்த்தைகளின்படியே உலகமெங்கும்சிதறடிக்கப்பட்டவர்களாய் வாழ்ந்து வந்த யூதமக்கள்கி.பி.1882-லிருந்து இஸ்ரேல் திரும்பத் தொடங்கினர்.முதலாம் உலகப்போரில் இஸ்ரேல், துருக்கி பேரரசிடமிருந்துபிரிட்டிஷ் ஆளுகைக்குள் வர, யூதர்கள் அந்நாட்டில் குடியேறஅதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைத்தது. அதின்படியே, 1948-ஆம் ஆண்டு உலக அரங்கில் இஸ்ரேல் என்ற நாடு 1800ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவானது. பைபிள்தீர்க்கதரிசனமும் அப்படியே நிறைவேறினது. இயேசுவின் முதலாம் வருகைக்குப் பிறகு சிதைக்கப்பட்ட இஸ்ரேல் நாடு, அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னால் மீண்டும் உருவாக வேண்டும். அப்படியே உருவானது, இயேசுவின் வருகைக்கும் உலகத்தின் முடிவுக்குமான மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்று.
5 கள்ள கிறிஸ்துக்கள்
அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு; நான் தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். (லூக்கா 21:8)
உலகமெங்கும் இதுவரைக்கும் 37-க்கும் மேற்பட்ட கள்ள கிறிஸ்துக்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களின் முழுமையான விவரங்களை விக்கிபீடியா தளமானது ஆதாரங்களோடு பதிவு செய்திருக்கிறது. அதில் சில உங்கள் பார்வைக்கு. 19-ஆம் நூற்றாண்டில் மட்டும் இயேசுவின் இரண்டாவது மறுபிறவிகள் என்ற பெயரில் 7 கள்ள கிறிஸ்துக்கள் தோன்றினார்கள். 20-ஆம் நூற்றாண்டில் அதிகபட்சமாக 22 கள்ள கிறிஸ்துக்கள் தோன்றி இருக்கிறார்கள். இவர்கள் அமெரிக்கா, தென் கொரியா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, நியு மெக்சிகோ, மலேசியா, ஜப்பான், ரஷியா போன்ற நாடுகளிலிருந்து எழும்பினார்கள்.உலகமெங்கும் இப்போது, 5-க்கும் மேற்பட்ட கள்ள அல்லது போலி கிறிஸ்துகள் இருக்கிறார்கள். இஸ்ரேல் மீண்டும் உருவானதைப் போலவே, கள்ள கிறிஸ்துகள் தோன்றுவதும் இயேசுவின் வருகைக்கும் உலகத்தின் முடிவுக்குமான மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்று.
6 யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும்
(யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்.. (மத்தேயு 24:6)
பக்கத்து நாட்டில் நடக்கிற யுத்தங்களைக்கூட அறிந்துகொள்ள இயலாதிருந்த உலகம், இன்றைக்கு அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்படுவதை அடுத்த சில நொடிகளில் நேரலையில் காண்கிறது. இப்படி யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் நாம் காணவும் கேட்கவுமாக இருப்பது, கடந்த 20-ஆம் நூற்றாண்டில் இருந்துதான். 1914-இல் துவங்கிய முதலாம் உலக மகா யுத்தத்தை உலக வரலாற்றில் முதன்முறையாக செய்தித்தாள் வழி அறிந்துகொண்ட உலகம், 1939-இல் துவங்கிய இரண்டாம் உலக மகா யுத்தத்தை முதன்முறையாக வானொலி வழியாக அறிந்துகொண்டது. இன்றைக்கு உலகம் காண்கிற யுத்தங்களை நாம் தொலைக்காட்சிகள் மற்றும் இணையத்தளங்கள் வழியாகவும் உடனுக்குடனாக அறிந்து வருகிறோம். ஆக, யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் நாம் அறிந்துகொள்ளும் இந்தக் காலம் இயேசு அறிவித்தபடியே உலகத்தின் இறுதிக்காலம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
7 கலகங்கள்
யுத்தங்களையும் கலகங்களையும் குறித்து நீங்கள்கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள் (லூக்கா 21:9)
உலகம் தோன்றியது முதல் எப்போதும் இல்லாத அளவுக்கு 20ஆம் மற்றும் 21–ஆம் நூற்றாண்டுகள் கலகங்களின் காலமாக இருப்பதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். மதத்தை, மொழியை, சாதியை, தண்ணீர் உள்ளிட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகளை, அரசாங்கங்களை, அடக்குமுறையை முன்னிட்டு என ஆயிரக்கணக்கான கலகங்கள் உலகமெங்கும் தினந்தோறும் நிகழ்ந்து வருகின்றன. அவற்றை 24 மணிநேர தொலைக்காட்சிகள் உடனடியாகநமக்கு வெளிப்படுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட அதிகப்படியான கலகங்களும் போராட்டங்களும், அவைபற்றிய அடர்த்தியான செய்திகளும் நாம் வாழும் இந்தக் காலக்கட்டத்திற்கே உரியவை என்பதை உங்களால் உணர முடிகிறதா?
8 உடனே வராத உலகத்தின் முடிவு
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; (மத்தேயு 24:6) யுத்தங்களையும் கலகங்களையும் குறித்துநீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள் (லூக்கா21:9) இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. (மத்தேயு 24:6)
யெஷூவா எனும் இயேசு கிறிஸ்து சொன்னபடியே, 1914-இல்துவங்கிய முதலாம் உலக யுத்தம் துவங்கி 2014-க்குள்ளாக, இந்த உலகம் அநேக யுத்தங்களையும் யுத்தங்களின்செய்திகளையும் கலகங்களையும் கண்டுவிட்டது.கேட்டுவிட்டது. இன்னும் கூட கண்டுகொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறது. ஆனாலும், இயேசுசொன்னபடியே உலகத்தின் முடிவு இன்னும் வரவில்லை. ஆக, உலகத்தின் முடிவு தாமதிப்பதும் கூட இயேசுவின்வார்த்தைகளின்படியே நிகழ்ந்து கொண்டிருப்பதை உங்களால் உணர முடிகிறதல்லவா?
மூன்றாம் கட்ட அடையாளங்கள்:
9 ஜனத்துக்கு விரோதமாய் ஜனம் எழும்பும்.
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்ஜியத்துக்கு விரோதமாய் ராஜ்ஜியமும் (மத்தேயு 24:7)
கொலைகள்... கொள்ளைகள்... கற்பழிப்புகள்...ஆள்கடத்தல்கள்... அச்சுறுத்தல்கள்... குண்டு வெடிப்புகள்...போராட்டங்கள்... எதிர்ப்புகள்... கண்மூடித்தனமானதாக்குதல்கள்... என ஒரு மனிதன் ஒரு தனிப்பட்ட மனிதனுக்குவிரோதமாகவோ அல்லது ஒரு மக்கள் கூட்டம் இன்னொருமக்கள் கூட்டத்துக்கு விரோதமாகவோ தினந்தோறும்எழும்பிக்கொண்டே இருக்கிறார்கள். இவற்றிற்கு மதம்,மொழி, நிறம், இனம், தனிப்பட்ட விரோதங்கள் எனஆயிரமாயிரம் காரணங்கள். எப்படியோ, 1980வருடங்களுக்கும் முன்னதாக இயேசு கிறிஸ்து முன்னறிவித்தநிகழ்வுகள் இன்றைக்கு உலகமெங்கும் பெருகியிருக்கின்றன என்பதை உங்களால் உணர முடிகிறதா?
10 ராஜ்ஜியத்துக்கு விரோதமாய் ராஜ்ஜியமும் எழும்பும்.
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்ஜியத்துக்குவிரோதமாய் ராஜ்ஜியமும் எழும்பும். (மத்தேயு 24:7)
அமெரிக்காவுக்கு விரோதமாய் ரஷ்யா, சீனா மற்றும் சில அரபு நாடுகள், இந்தியாவுக்கு விரோதமாக சீனா, பாகிஸ்தான், இஸ்ரேலுக்கு விரோதமாய் பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள், தென் கொரியாவுக்கு விரோதமாக வட கொரியா என ராஜ்ஜியங்கள் பல தங்களுக்குள்ளாக ஒன்றுக்கொன்று விரோதமாக எழுந்து நிற்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்கிற ரீதியில் போர் முரசு கொட்டுகின்றன. இஸ்ரேலும் ஈரானும் உக்கிரப் பகையோடே அடிக்கடி அறிக்கைகளில் மோதிக்கொள்கின்றன. இவற்றில் பெரும்பான்மை நாடுகள் ஆயுதங்களோடு இன்னும் யுத்தக்களம் காணாவிட்டாலும், ஏற்கெனவே மறைமுகமாகப் பலவிதப் பனிப்போர்களில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன என்பது நாமறிந்ததே!
11 பற்றிப்பரவும் பஞ்சங்கள்
பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் பூமியதிர்ச்சிகளும் பலஇடங்களில் உண்டாகும் (மத்தேயு 24:7)
1932-33. ஒன்றுபட்டசோவியத் ரஷிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உக்ரெய்ன்இருந்த காலமது. சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்காலம். உக்ரெய்னில் சுமார் 2 லட்சம் விவசாய மக்கள் கூட்டம் கொடிய பஞ்சத்தால் மடிந்துபோனது. சோவியத்தின் பல பகுதிகள் கடுமையான பஞ்சத்தால் வாடின. ஆப்ரிக்க்க் கண்ட்த்தின் சோமாலியா எனும் நாடு, இன்றைக்கும்உச்சக்கட்ட பஞ்சத்தில் வாடிக்கொண்டுதான் இருக்கிறது. அங்கு வாழும் மக்கள் எலும்பும் தோலுமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் விவசாயிகள் வறட்சியையும் பஞ்சத்தையும் காரணம் காட்டி அடிக்கடி தற்கொலை செய்துகொள்கிற கொடுமை நிகழ்கிறது. இவைபோக, யுத்தங்களாலும் அடிக்கடி ஏற்படும் உள்நாட்டுக்கலவரங்கள், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்குகளால் ஏற்படும் நெருக்கடி நிலைகள் இவற்றால், உலகின் உணவு விநியோக சதவீதம் குறைந்துகொண்டே போகிறது. வற்றாத ஆறுகள் வற்றிப்போய்க் கொண்டே இருப்பதும், வயல்கள், ஆறுகள், ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் மனைகளாக மாற்றப்படுவதும் கடுமையான உணவுப்பஞ்சத்திற்கு வருங்காலத்தில் வழிவகுக்கும் எனச் சொல்லப்படுவதை இந்த இட்த்தில் நினைவுகூருங்கள். இவைஇயேசு கிறிஸ்துவின் வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் இன்னும் அழுத்தமாகச் சான்று பகர்வதை உங்களால் உணர முடிகிறதா?
12 கொல்லவரும் கொள்ளை நோய்கள்
பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் பூமியதிர்ச்சிகளும் பலஇடங்களில் உண்டாகும் (மத்தேயு 24:7)
எய்ட்ஸ், எபோலா போன்ற மருந்தே கண்டுபிடிக்க முடியாதகொடிய நோய்கள் எல்லாம், நாம் வாழ்ந்த, நாம் வாழும் இந்த20-ஆம் மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் தான்கண்டறியப்பட்டன என்பதை எவரும் மறுக்க முடியாது.இவற்றால் இன்றைக்கும் உலகமெங்கும் லட்சக்கணக்கானமக்களுக்கு கடுமையான பாதிப்புகளும் மரணங்களும் நேர்கின்றன. இவை போக, உடலின் சதைகள் அப்படியேஉருகி பெயர்ந்து விழுவதைப் போன்ற அதிகம் அறியப்படாதகொடிய வியாதி ஒன்றும் கூட சமீபத்தில் பிலிப்பைன்ஸ்மக்களைத் தாக்கியிருக்கிறது. இவைபோக, 2007-ஆம் ஆண்டில் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் வெளியிட்ட அறிக்கை ஒன்று இப்படி கூறுகிறது. அது, உலகத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு, தொற்று நோய்கள் மிக வேகமான முறையில் வெளிப்பட்த்துவங்கி இருப்பதாகவும், அதிவேகமாகப் பரவத் துவங்கி இருப்பதாகவும், அவை சிகிச்சை செய்ய முடியாத அளவுக்கு கடினமான முறைகளில் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கிறது.
13 புரட்டிப்போடும் பூமியதிர்ச்சிகள்
பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் பூமியதிர்ச்சிகளும் பலஇடங்களில் உண்டாகும் (மத்தேயு 24:7)
சமீபத்தில் நேபாளத்தையே புரட்டிப்போட்ட பூமியதிர்ச்சியை நம் எவராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. முன்னதாக 2004, டிசம்பர் 26 அன்று இந்தியப் பெருங்கடலில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் ஆழிப்பேரலைகள் (சுனாமி) எழும்பி, 2 லட்சத்து 27 ஆயிரத்து 898 பேரைக் கொன்றுபோட்டது. பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழிடங்களை விட்டு இடம்பெயர்த்தப்பட்டனர். 2010 ஜப்பானில் 3 லட்சத்து 16 ஆயிரம் பேரும், 2008-இல் சீனாவில் 87 ஆயிரத்து 587 பேரும், 2005-இல் பாகிஸ்தானில் 87 ஆயிரத்து 361 பேரும், 2003-இல் இரானில் 31 ஆயிரம் பேரும் மகா பூமியதிச்சிகளுக்கு பலியானார்கள். இவை 21-ஆம் நூற்றாண்டின் கணக்கு மட்டும் தான். 20ஆம் நூற்றாண்டின் கணக்கை எடுத்தால் சிறிதும் பெரிதுமாக 313 பூமியதிர்ச்சிகளை உலகம் கண்டிருக்கிறது.
14 அன்பு தணிந்துபோகுதல்
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம் (மத்தேயு 24:12)
இன்றைய மனித சமூகம், தனக்காகவும் தன் சொந்த சந்தோஷங்களுக்காகவுமே வாழ்கிறது. ஏனெனில், அதற்கு சக மனிதன் மீதான அன்பு தணிந்துபோய் விட்டது. பண, பொருள் இவற்றின் மீது இருக்கும் அபிமானம் மனிதர்கள் மீது அதற்கில்லாமல் போய்விட்டது. அன்பிற்கும் சகிப்புத்தன்மைக்கும் கூடிவாழ்தலுக்கும் பெயர்பெற்ற நம் இந்தியா போன்ற கீழை நாடுகளிலும் கூட அன்பு அதிவேகமாகத் தணிந்துபோய், விவாகரத்துகளும் கொலைகளும் கொள்ளைகளும் கற்பழிப்பு சம்பவங்களும் பெருகி நிற்கின்றன. கள்ளக்காதலுக்காகவும் சொத்துகளுக்காகவும் சொந்தக்குடும்பத்தையே சூறையாடும் கொடூரர்கள், மானிட சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்துகிறார்கள். அதனால், எதையும் அன்போடு அணுகிய மானிட சமூகம், இன்று எல்லாவற்றையும் கண்டும் எதற்கு வம்பு என விலகி ஓடுகிறது. தன் தனிப்பட்ட அடையாளமான அன்பை மனிதன் இன்று இழந்து நிற்பதற்கு, அச்சுறுத்தும் இந்த உலகத்தின் அதிதீவிர அக்கிரமப்போக்கே காரணம் என்றால் அது மிகையில்லை.
15 இயேசுவின் நிமித்தம் துயரங்கள்
என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.(லூக்கா 21:17)
கிறிஸ்தவர்களுக்கு தற்போது உலகமெங்கும் துயரங்கள்உண்டாகி இருக்கிறது. இது முன்பும் இருந்தது என்றாலும், இன்றைய நிலையில் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்அவர்களை தினந்தோறும் கொடூரமாகக் கொலை செய்துவருகிறார்கள். நைஜீரியாவில் போகோ ஹராம் எனும்தீவிரவாத இயக்கம், கிறிஸ்தவர்களின் வாழிடங்களில்திடீரெனப் புகுந்து கண்டபடி சுடுவதையும்,இளம்பெண்களைக் கடத்திச்செல்வதையும் வழக்கமாகவைத்திருக்கிறது. சீனாவில் கிறிஸ்தவர்களால்வெளிப்படையாகச் செயல்பட முடியாது. இந்தியாவில் பலஇடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும் ஊழியர்கள் மீதும் திட்டமிட்ட தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதும், அவை அமெரிக்க அதிபரால் உணர்த்தப்படும்படியாகவும் இருக்கிறது. தாங்கள் அதிகமாய் வசிக்கும் அமெரிக்கதேசத்திலும் கூட கிறிஸ்தவர்கள் தற்போது புதிய சட்டங்களாலும் கெடுபிடிகளாலும் நெருக்கத்தை சந்திக்கத் துவங்கி இருக்கிறார்கள். இயேசுவைப் பின்பற்றுபவர்களும்அவர் பற்றி அறிவிப்பவர்களும் உலக அளவில் இப்படி பகைக்கப்படத் துவங்குவது, இயேசுவின் வருகைக்கும்உலகத்தின் முடிவுக்குமான மிக முக்கிய அடையாளங்களுள்ஒன்று.
16 ராஜ்ஜியத்தின் சுவிசேஷப் பரப்புரை
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். (மத்தேயு 24:14) சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும் (மாற்கு 13:10)
பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது. இயேசு அதிசீக்கிரம் வரப்போகிறார். இந்த உலகத்தின் முடிவு நெருங்கி விட்டது. அவர் இந்த உலகத்தை நியாயம் தீர்க்கப்போகிறார். இப்படி, கிறிஸ்தவ சபைகளும் ஊழியர்களும் தொலைக்காட்சிகள், துண்டுபிரசுரங்கள், திறந்தவெளிக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் எனப் பல வழிகளின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்துப் பிரசங்கித்து வருகிறதை நிச்சயமாக நீங்கள் கண்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட அவர்களுடைய அதிதீவிரமானப் பிரச்சாரமும் கூட, இயேசுவின் வருகைக்கும் உலகத்தின் முடிவுக்குமான அடையாளங்களுள் ஒன்றுதான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
17 நோவாவின் நாட்களும் மனுஷகுமாரனின் நாட்களும்
நோவாவின் நாட்களில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். (மத்தேயு 24:37,-39)
6000 வருடங்களுக்கு முன்பாக இந்த பூமியில் வாழ்ந்த மனிதன் நோவா. அவனுடைய காலத்தில் பூமியானது பல கண்டங்களாகப் பகுக்கப்படாமல், ஒரே நிலப்பரப்பாகவே இருந்து வந்தது. எங்கும் ஒரே மொழியே பேசப்பட்டு வந்த்து. அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அக்கிரமக்காரர்களாகவும், சீர்கெட்டவர்களாகவும், கொடுமை நிறைந்தவர்களாகவும் இருந்தார்கள். அதின் நிமித்தம் தேவன் அவர்களை எல்லாம் ஜலப்பிரளயத்தால் அழித்தார். நோவாவும் அவனுடைய குடும்பத்தாரும் மட்டுமே தேவனுடைய ஆலோசனைப்படி, பிரம்மாண்டமான ஒரு கப்பலைக்கட்டி எழுப்பி, அதிலேறி தப்பிப் பிழைத்தார்கள். அவர்களுடைய வழிவந்தவர்கள் மூலம் தான் இன்றைய மானிட சமூகம் விருத்தியடைந்தது என்பதை வரலாற்று அறிஞர்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். நோவாவும் அவன் வீட்டாரும் பயன்படுத்தின கப்பலின் அடித்தளமானது, துருக்கி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு அந்நாட்டின் தேசிய பொக்கிஷமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கப்பலில் ஏற்றப்படாத டைனோசர் போன்ற பிரம்மாண்ட மிருகங்கள் பிரளயத்தில் சிக்கி, உலக வரலாற்றில் இல்லாமல் போயின. இவைதவிர, அந்தப் பிரளயத்தில் பூமிக்குள் புதைந்துபோன உயிரினங்களே இன்று பெட்ரோலியம் உள்ளிட்ட தாதுப்பொருட்களாகப் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய நோவா கால மனிதர்களைப்போலவே இன்றைய மனிதர்களூம் அக்கிரமங்களும், சீர்கேடுகளும் கொடுமைகளும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அன்று உண்மையான தேவனாகிய இயேசுவை வணங்கி பயபக்தியோடு வாழ்ந்த நோவா மற்றும் அவன் வீட்டாரைப்போலவே இன்றும் பலர், இயேசுவை வணங்கி பயபக்தியோடு வாழ்ந்து வருகிறார்கள். நோவாவும் அவன் வீட்டாரும் அன்றைய உலகின் நீர்பிரளயத்தில் காக்கப்பட்டது போல இவர்களும் வரப்போகிற உலகின் அழிவிலிருந்து முன்கூட்டியே காக்கப்படுவார்கள். அன்று நோவாவும் அவன் வீட்டாரும் வரப்போகிற அழிவைக் குறித்தும், பாவங்களிலிருந்து மனந்திரும்பி தங்களுடைய கப்பலில் ஏறிக்கொண்டால் காக்கப்படுவீர்கள் என்றும் முன்னறிவித்தது போல, இன்றும் இயேசுவின் ஊழியர்கள் வரப்போகிற உலக அழிவைக் குறித்தும், பாவங்களிலிருந்து மனந்திரும்பி இயேசு எனும் கப்பலில் ஏறினால் காக்கப்படுவீர்கள் என்றும் எங்கும் முன்னறிவித்து வருகிறார்கள். நோவாவின் எச்சரிக்கைக் குரலுக்குச் செவிகொடுக்காமல் போன அன்றைய மனிதர்களைப்போலவே, இன்றைய மனிதர்களூம் கிறிஸ்தவ ஊழியர்களின் குரலுக்குச் செவிகொடுக்காதவர்களாய், உணவு, குடி, திருமணம் என உணர்வில்லாத இருதயத்தோடே வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா?
18 ஜனங்கள் புசித்தும் குடித்தும்
நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள் வரைக்கும் ஜனங்கள்புசித்துக் குடித்தார்கள் (லூக்கா 17:27)
நோவா காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தேவனைத் தேடாமல், அவருடைய நீதியை நாடாமல், உண்டும் குடித்தும் கொண்டாட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். இன்றைய நவீன உலகமும் அப்படித்தான் இருக்கிறதல்லவா? வாரம் முழுதும் வேலை, வார இறுதிநாட்களில் விதவிதமாக உண்டும் வகை வகையாகக் குடித்தும் கொண்டாட்ட வாழ்க்கை. ஹாலிடே பார்ட்டி, வீக் எண்ட் பார்ட்டி, பர்த்டே பார்ட்டி என எதற்கெடுத்தாலும் பார்ட்டி கொண்டாடும் பண்பாடு. வார இறுதியை தாங்கள் போட்டு வைத்திருக்கும் பல்வேறுபட்ட பட்ஜெட்களில் கொண்டாடி மகிழ சொகுசு விடுதிகள் மக்களைக் கூவிக்கூவி அழைக்கின்றன. விதவித உணவுகளைத் தேடித்திரியும் மனிதர்களுக்காக உலகின் பலவித உணவு வகைகளை அள்ளித்தரும் உணவு மன்றங்கள், உணவு மாளிகைகள் எங்கும் பெருக்கெடுத்து நிற்கின்றன. ஏசி பார்களில் துவங்கி திருமண வீடுகள், துக்க வீடுகள் என எங்கும் எல்லாக் காரணங்களுக்காகவும் கூடிக்குடிக்கும் கூட்டங்களை வயது வித்தியாசமில்லாமல் காண முடிகிறது.
19 திருமண தடபுடல்கள்
நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள் வரைக்கும் ஜனங்கள்புசித்துக் குடித்தார்கள் பெண்கொண்டு கொடுத்தார்கள்;(லூக்கா 17:27)
பெண்கொண்டும் பெண் கொடுக்கும் திருமணங்களைச் செய்யக்கூடாது என்கிற அர்த்தத்தில் இயேசு இந்த வார்த்தைகளைக் கூறவில்லை. மாறாக, அப்படிப்பட்ட திருமணங்களை மையம்கொண்டு நிகழும் திட்டமிடல்கள், பொருள் சேகரிப்புகள், சடங்கு முறைகள், அலைச்சல்கள், உறவுச்சண்டைகள் ஆகியவற்றிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் கொஞ்சத்தைக்கூட, இயேசு கிறிஸ்துவின் இந்த ராஜ்ஜியத்தின் சுவிசேஷச் செய்தியைக் குறித்து செவிமடுக்கவோ சிந்திக்கவோ கடைசிகால மனிதர்கள் செலவிடமாட்டார்கள் என்பதே இதன் அர்த்தம். முன்பெல்லாம் ராஜாக்கள், பண்ணையார்கள் உள்ளிட்ட பெரிய மனிதர்கள் வீட்டுத் திருமணங்கள் தான் தடபுடலின் உச்சமாய் பெரும் பொருட்செலவுகளில் நிகழும். ஆனால், இன்றோ அவை, பெரிய மனிதர்களுக்குக் கோடிகளிலும், மற்றெல்லா மனிதர்களுக்கும் லட்சங்களிலும் விதவிதமான முறைகளில் கொண்டாடப்படக்கூடிய ஓர் நிகழ்வாக மாறி இருக்கிறது என்பதே இயேசுவின் வார்த்தைகள் நிறைவேறி வருகின்றன என்பதற்கான அடையாளங்களுள் ஒன்றாகும்.
20 உணர்வில்லாத இருதயம்
ஜலப்பிரளயம் வந்து அனைவரையும்வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியேமனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். (மத்தேயு 24:39)
ஜலப்பிரளயத்தால் இந்த உலகம் அழியப்போகிறது என்கிற செய்தியை நோவாவும் அவன் குடும்பத்தாரும் எல்லோருக்கும் அறிவித்தார்கள். அப்பொழுது உலகெல்லாம் ஒரு மொழியே பேசப்பட்டு வந்தது. ஆனாலும், அவர்களின் அந்தச் செய்தியை அக்கால மக்கள், ஜலப்பிரளயம் வந்து தங்களை வாரிக்கொண்டு போகும்மட்டும் உணராமல் இருந்தார்களாம். உலகத்தின் முடிவுக்காலத்தில் வசிக்கப்போகும் கடைசிகால மனிதர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது இயேசுவின் வாக்கு. அப்படியே, இயேசுவின் வருகையைக் குறித்தும் உலகத்தின் முடிவைக் குறித்தும் ஆதாரபூர்வ அடையாளங்களோடு அறிவித்தாலும் இயேசுவை நோக்கி தங்கள் மனதைத் திருப்புபவர்கள் கொஞ்சமாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், இந்த உலகத்தின் முடிவையும் இயேசுவின் வருகையையும் தங்கள் கண்களாலேயே காணும் மட்டும் உணர்வில்லாத இருதயத்தோடே இருப்பார்கள். அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை உங்களால் உணரமுடிகிறதா?
லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும்;ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள் விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். (லூக்கா 17:28-30)
21 அதிகரிக்கும் ஓரினச்சேர்க்கை கலாச்சாரம்
லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும் (லூக்கா 17:28)
லோத் என்பவன் இன்றைய இஸ்ரேல் நாட்டின் சோதோம் பகுதியில் வாழ்ந்து வந்தவன். அந்நகரத்திலும் அதற்குஅருகிலிருந்த கொமோராவிலும் வாழ்ந்த மனிதர்கள்ஓரினச்சேர்க்கை பிரியர்களாக இருந்தார்கள். அதாவது, ஹோமோ செக்சூவல்ஸ். அப்பழக்கம் அவர்களிடையே வெகு சாதாரணமான ஒன்றாக இருந்தது. சுய பாலினப் புணர்ச்சி, சுய புணர்ச்சி ஆகியவை தேவனுக்கு மிகவும் கோபத்தைத் தரக்கூடிய பாவங்கள். ஏனெனில், தேவன் ஆணும் பெண்ணுமாகவே மனிதர்களைப் படைத்தார். பெண்ணையே அவர் ஆணுக்கேற்ற துணையாக உணர்ந்தார். அவர்கள் மூலம் மனித இனம் பூமியில் பன்மடங்காகப் பெருகி, தான் படைத்த பூமியை நிரப்ப வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அப்படியிருக்க, ஓரினச்சேர்க்கை என்பது தான் நியமித்த இயற்கை உறவுக்கு எதிரானது என்பதோடு, இயற்கை முறையிலான இனவிருத்தியை மறைமுகமாகத் தடை செய்யக்கூடியதும் கூட என்பதனால், தேவன் சொதோம், கொமோரா என்ற அந்த இரு நகரங்களையும் அதில் உள்ள எல்லா மனிதர்களையும் வானத்திலிருந்து அக்கினியையும் கந்தகத்தையும் பொழிந்து அழித்தார். அழிக்கப்பட்ட அவ்விரு நகரங்களும் இன்றைக்கும் கந்தக சாம்பல் நிறைந்து, அக்கினி சுட்டெரித்த அடையாளங்களோடு இஸ்ரேல் நாட்டில் இருக்கின்றன.
ஆதியாகமம் 19:24,25
அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமாரோவின் மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப் பண்ணி, 25 அந்தப் பட்டணங்களையும், அந்த சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப் போட்டார்.
அன்றைக்கு அவ்விரு நகரங்களின் மீதும் தேவ கோபம் இறங்குவதற்குக் காரணமாக இருந்த சுய புணர்ச்சி (ஹோமோ செக்ஸூவல்ஸ்/லெஸ்பியன்) எனும் பாவம் இன்று உலகம் எங்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தோடு அதிவேகமாகப் பரவத்துவங்கி இருக்கிறது. ஆம். இன்று உலகமெங்கும் ஆண்/பெண் புணர்ச்சிக்காரர்கள் பெருகியிருக்கிறார்கள். தங்கள் பாலுறவை அங்கீகாரம் செய்யப் போராடிவந்த அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று 21 நாடுகள் ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. 21-வது நாடாக சமீபத்தில் அமெரிக்காவும் சேர்ந்துள்ளது. இதனை அந்நாட்டின் அதிபர் ஒபாமா அகமகிழ்ந்து வரவேற்றிருக்கிறார். இதனால், ஓரினச்சேர்க்கை திருமணங்கள் ஒருபக்கம் அதிகரித்திருக்கின்றன. நெதர்லாந்த் நாட்டின் ஆண் பிரதமர், அமெரிக்க நாட்டின் ஒரு பெண் கவர்னர் உள்ளிட்ட பெரிய மனிதர்கள் தாங்கள் அப்படிப்பட்ட சேர்க்கையாளர்கள் என்பதை பெருமிதத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இயேசு தீர்க்கதரிசனமாய் முன்னறிவித்தது போலவே, லோத்தின் காலத்தில் இருந்த ஓரினச்சேர்க்கை எனும் பாவம் இயேசுவின் இந்த வருகையின் காலத்திலும் உலகத்தில் வந்துவிட்டது பார்த்தீர்களா?
லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும்;ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள் விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். (லூக்கா 17:28)
தங்கள் அக்கிரமங்களின் விளைவாக தாங்கள் வாழ்கிற சொதோம், கொமோரா நகரங்கள் அழிக்கப்படப்போகின்றன என்பதை அறியாமல், அந்நகரங்களின் மக்கள், விதவிதமானப் பொருட்களை வாங்கியும் விற்றும் பிசினஸ் அண்ட் ஷாப்பிங் கல்ச்சரில் கொண்டாட்டமாய் வாழ்ந்தார்கள். ஆனால், ஒருநாள் தேவன் வானத்தில் இருந்து அக்கினியையும் கந்தகத்தையும் பொழிந்து அவர்களை அழித்துப்போட்டார். அப்படியே தான் இன்றைய உலகமும் பிசினஸ் அண்ட் ஷாப்பிங் கல்ச்சரில் சிக்கி நிற்கிறது. பொருட்கள் மீதான நாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. வாங்கவே விருப்பமில்லை என்றாலும் இன்ஸ்டால்மெண்ட், கிரெடிட் கார்ட் என ஆசைகாட்டி எல்லோரையும் வாடிக்கையாளர்களாக மாற்றி விடுகிறது இன்றைய பன்னாட்டு வணிகம். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் பொருளாதாரமயமாக்கல் எனப் பல மயங்களால் உலகமே தொழில்மயம் ஆகிவருகிறது. இயேசுவின் வருகைக்கு முன்னதான கடைசிகால உலகம் இப்படித்தான் இருக்குமென இயேசு சொன்னது எத்துணை உண்மை பாருங்கள்!
23 கட்டிடங்களில் கரையும் உலகம்
லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும்;ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள்விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். (லூக்கா 17:28))
பெரு நகரம், சிறு நகரம், கிராமம், ஆறு, ஏரி, குளம், குட்டை என எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் பட்டா போட்டு கூவிக்கூவி விற்கும் ரியல் எஸ்டேட் வணிகர்கள்... தரமான மண்ணோ தரமில்லா மண்ணோ அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி ஆயிரக்கணக்கான மனிதர்களைக் காவு வாங்கும் கட்டிட நிறுவனங்கள்... சில சதுர அடி மனைகளுக்காகவும், வீடுகளுக்காகவும் தங்கள் வாழ்நாட்களையே அடகு வைக்கும் தனி மனிதர்கள்... உலகம் இன்று அஸ்திபாரத் தூண்கள் நாட்டுவதிலும், கட்டிடங்கள் கட்டுவதிலுமாகக் கண்ணும் கருத்துமாகப் பயணிக்கிறது. எல்லோரும் வீடுகள் கட்டும்படியாக, அவற்றிற்கான அஸ்திபாரத் தூண்களை நாட்டும்படியாக தனியார் வங்கிகள் கடன்களை அள்ளித்தருகின்றன. அரசாங்கங்கள் வீடுகட்டும் திட்டங்கள் வகுகிக்கின்றன. ஆகமொத்தம், அன்றைய அக்கினியும் கந்தகமுமான அழிவுக்கு முன்னதாக வாழ்ந்த சொதோம் கொமோராவின் மனிதர்களைப் போலவே இன்றைய மனிதர்களும் வருகிற ஆபத்தை உணர்ந்தும் உணராமலும் கட்டுவதிலுமே நாட்டுவதிலுமே கண்ணோக்கமாக இருக்கிறார்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா?
சகோதரர்களே, 23 அடையாளங்களும்நிறைவேறினவையாகவும், நிறைவேறிக்கொண்டிருக்கிறவையாகவும் இருக்கிறதை உணர்கிறீர்களா?உணர்ந்தால், உங்களது பாவங்களுக்காக, சாபங்களுக்காக,நோய்களுக்காக, ஆக்கினைகளுக்காக கொடிய சிலுவைபாடுகள் மற்றும் மரணத்தின் மூலம் பரிகாரப் பிராயச்சித்தம்செய்துவிட்ட பரம யெஷூவா எனும் பரம்பொருளாகியஇயேசு கிறிஸ்துவினிடத்தில் உங்கள் மனதைத் திருப்புங்கள்.அவரால் மாத்திரமே நம்முடைய பாவங்களிலிருந்து,சாபங்களிலிருந்து, நோய்களிலிருந்து, வேதனைகளிலிருந்துநம்மை விடுதலை செய்ய முடியும். ஏனெனில், அவரேஉங்களை விடுவிக்கவல்ல இரட்சகர். ஆமென்.