5. தாகமாயிருக்கிறேன்

0


இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்



5. தாகமாயிருக்கிறேன்



தாகமாயிருக்கிறேன் 

அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்  (யோவா 19:28).

இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு ஏற்படும் சம்பவம் ஒவ்வொன்றும், வேதவாக்கியம் நிறைவேறுவதாகவே இருக்கிறது.


 இயேசுகிறிஸ்து வேதவாக்கியத்திற்கு அதிக மதிப்பு கொடுக்கிறார். தாம் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, தம்முடைய தாயாரை யோவானிடத்தில் ஒப்புக்கொடுத்த பின்பு,  ""எல்லாம் முடிந்தது'' என்று இயேசுகிறிஸ்து அறிகிறார். 

அப்போது வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக ""தாகமாயிருக்கிறேன்'' என்று கூறுகிறார். 

இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது தாகமாயிருப்பது ஒரு விநோத சம்பவமல்ல. 

இயேசுகிறிஸ்துவின் சரீரத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது. தம்முடைய சிலுவையை அவர் சுமந்து வந்திருக்கிறார். 

பல வேதனைகளை அனுபவிக்கிறார். இந்த வேதனைகளினால் இயேசுவுக்கு தாகம் உண்டாயிற்று. 

இயேசுகிறிஸ்து இப்போது மரணத்தின் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சரீரத்திலிருந்து இரத்தம் வெளியேறுவதினாலும், அவருடைய சரீரத்தில்  மிகுந்த வேதனை உண்டாவதினாலும் அவர் மரித்துக்கொண்டிருக்கிறார். 


இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது ""தாகமாயிருக்கிறேன்'' என்று கூறியது அங்கு கூடியிருந்த சிலருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. 

இயேசு ஒருபோதும் தாம் அனுபவிக்கும் பாடுகளைக் குறித்து முறுமுறுத்ததில்லை. இப்போது ""தாகமாயிருக்கிறேன்'' என்று சொன்ன வார்த்தை மாத்திரமே அவர் தம்முடைய பாடுகளைப் பற்றி பேசுவதுபோல இருக்கிறது.  






இயேசுகிறிஸ்து ""தாகமாயிருக்கிறேன்'' என்று சொல்லி, தம்முடைய ஆத்தும தாகத்தை வெளிப்படுத்துகிறார்.

 நம்முடைய மீட்பு நிறைவேறவேண்டும் என்னும் தாகம் இயேசுகிறிஸ்துவின் இருதயத்திலிருக்கிறது. 

ஆகையினால் வேதவாக்கியம் ஒவ்வொன்றும் நிறைவேறவேண்டுமென்பதில் இயேசுகிறிஸ்து கவனம் செலுத்துகிறார்.

 இயேசுகிறிஸ்துவின் தாகத்தைப்பற்றிச் வேதவாக்கியம் முன்னறிவித்திருக்கிறது. வேதவாக்கியங்களெல்லாம் நிறைவேறும் என்பது இயேசுவுக்குத் தெரியும்.

 ஆகையினால் தம்முடைய தாகத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிற வேதவாக்கியமும் நிறைவேறவேண்டுமென்று  இயேசுகிறிஸ்து கரிசனையுள்ளவராகயிருக்கிறார்.   


God bless you 


Umn ministry Chennai 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*