7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

0


இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்




7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்



7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

அந்தகாரமுண்டாயிற்று

அப்பொழுது ஏறக்குறைய ஆறாம் மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.  

சூரியன் இருளடைந்து, தேவாலயத்தில் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது (லூக் 23:44,45). 

இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்துக்கொண்டிருக்கிறார். ஏறக்குறைய ஆறாம்மணி நேரம் என்பது பகல் பன்னிரண்டு மணியாகும். 

ஒன்பதாம் மணி நேரம் என்பது மாலை மூன்று மணியாகும். இந்த மதியவேளையில் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. 

மதியம் பன்னிரண்டு மணி முதல்  மாலை மூன்றுமணி வரையிலும் பூமியெங்கும் இந்த அந்தகாரம் தொடருகிறது. 

இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் போது இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறுகிறது. சூரியன் இருளடைந்தது. அத்துடன் தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாக கிழிகிறது. 

முதலாவது அடையாளம் வானத்திலும், இரண்டாவது அடையாளம் தேவாலயத்திலும் நடைபெறுகிறது. வானமும் தேவாலயமும் தேவனுடைய வாசஸ்தலங்களாகும்.

 தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாக கிழிந்ததினால் யூதருடைய மார்க்கப்பிரமாணங்கள் அதமாயிற்று. இத்துடன்  தேவனை நாம் அணுகுவதற்கு தடையாயிருந்த எல்லா தடைகளும் நீங்கிற்று.

 இதனால் இப்போது தேவனுடைய கிருபாசனத்தண்டையில் நாம் தைரியமாக கிட்டிச் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். 

""ஆறாம் மணி நேரம்''  என்பது மதியம் 12 மணியாகும். ""ஒன்பதாம் மணிநேரம்''  என்பது மாலை 3 மணியாகும்.

பிதாவே உம்முடைய கைகளில்

 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்-, ஜீவனை விட்டார்  (லூக் 23:46).  

இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனைவிடுகிறார். இயேசுகிறிஸ்துவின் மரணத்தை விவரிக்கும்போது அவர் தம்முடைய  ஆத்துமாவின் சுவாசத்தை விட்டுவிடுவதாக எழுதப்பட்டிருக்கிறது.






 ""பிதாவே, ஏன் என்னை கைவிட்டீர்'' என்று கூப்பிடுகிறபோது அவர் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிடுகிறார். மத்தேயு, மாற்கு ஆகிய இரண்டு சுவிசேஷங்களிலும் இயேசுகிறிஸ்து ""மகா சத்தமாய் கூப்பிட்டு'' தம்முடைய ஆவியை விட்டதாக எழுதப்பட்டிருக்கிறது.

 இதே வார்த்தையே  லூக்கா எழுதின சுவிசேஷத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று இயேசுகிறிஸ்து மகா சத்தமாய் கூப்பிட்டு தம்முடைய ஜீவனை விடுகிறார்.

இயேசுகிறிஸ்து இங்கு பயன்படுத்துகிற வார்த்தையை தாவீது ராஜா ஏற்கெனவே சங்கீதத்தில் பயன்படுத்தியிருக்கிறார் (சங் 31:5).  தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் இந்த வார்த்தையை பயன்படுத்துவது மிகவும் விசேஷமானதாகும்.





 இயேசுகிறிஸ்து மரிக்கும்போது அவருடைய வாயில் சத்திய வசனம் நிறைந்திருக்கிறது.  

தேவனை அழைக்கும்போது, அவரை ""பிதாவே'' என்று அழைக்கிறார். தேவன் தம்மை கைவிட்டுவிட்டதாக ஜெபம்பண்ணியபோது ""என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்'' என்று தேவனை அழைக்கிறார். 

இயேசுகிறிஸ்துவின் ஆத்தும வியாகுலம் இப்போது முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆகையினால் தேவனை ""பிதாவே'' என்று அழைக்கிறார். 

இயேசுகிறிஸ்து தம்மை மத்தியஸ்தராக காண்பிக்கும் விதத்தில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.

 இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா நமக்கு குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது (ஏசா 53:10). இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் அநேகரை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கிறார் (மத் 20:28). 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை   யாராலும் கொல்லமுடியாது. அவர் தேவனாகயிருக்கிறபடியினால் அவருக்கு மரணமில்லை.

 ஆகையினால் இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார். தம்முடைய ஜீவனையே பாவநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கிறார். 

இயேசுகிறிஸ்து தம்முடைய கரங்களை, தமது தலையில் வைத்து, அதை தமது பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். 

தம்முடைய பிதாவின் கரங்களில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து பாவிகளுக்காக கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார். 






பாவிகளின் ஜீவன்களுக்கும் ஆத்துமாக்களுக்கும் பதிலாக, தம்முடைய ஜீவனையும் ஆத்துமாவையும் ஏற்றுக்கொள்ளுமாறு பிதாவிடம் விண்ணப்பம் பண்ணுகிறார். 

ஒருவர் ஒரு காணிக்கையை செலுத்தும்போது அதை அவர் மனப்பூர்வமாக செலுத்த வேண்டும். அப்போதுதான் அந்தக் காணிக்கை அங்கீகரிக்கப்படும். 

இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனை பாவநிவாரண காணிக்கையாக செலுத்தும்போது, அதை பிதாவிடத்தில் மனப்பூர்வமாக செலுத்துகிறார். பிதா இயேசுகிறிஸ்துவின் பாவநிவாரண காணிக்கையை அங்கீகரிக்கிறார். 

 இயேசுகிறிஸ்து தம்முடைய ஆவியை பிதாவின் கைகளில் ஒப்புவிக்கிறார். பிதா தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை தமது பரதீசில் ஏற்றுக்கொண்டு, மூன்றாம் நாளில் அவரை மறுபடியுமாக பூமிக்கு அனுப்புகிறார். 

அந்த மூன்றாம் நாளில்தான் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுகிறார். 


God bless you 


Umn ministry Chennai 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*