சிலுவையின் வரலாறு பாகம்-6
சிலுவையும் கள்ளர்கள் :
இயேசுவின் சிலுவைக்கும் யூதாசுக்கும் எப்படி நெருங்கிய தொடர்புண்டோ. அதேப் போல கொல்கொதா மலைக்கும் இரண்டு கள்ளர்களுக்கும் நிறைய தொடர்புண்டு. அந்த இரண்டு காளர்களைக் குறித்து துணுக்குகளோடும். வசனங்களோடும், ஆழ்ந்து சிந்தித்து தியானப்போம்.
வலதுபுறத்துக் கள்ளன்:
வலதுபுறத்துக் கள்ளனின் பெயர் - திஸ்மாஸ்
1. லூக் 23:40 ஆக்கினையை அறிந்தவன்
செப் 3:15 ஆக்கினையை அகற்றுவார்
2. லூக் 23:40 தேவனுக்குப் பயப்படுகிறவன்
அப் 10:22 கொர்நேலிலியு தேவனுக்குப் பயந்தவன்
3. லூக் 23:41 தக்கப் பலனைக் குறித்து அறிந்தவன்
வெளி 22:12 பலன் என்னோடே கூட வருகிறது
4.லூக் 23:41 இயேசு தகாததை நடப்பிக்கவில்லை (இயேசுவை குறித்துச் சாட்சி சொன்னான்)
மத் 3:11 என்னிலும் வல்லமையுள்ளவர்
5. லூக் 23:41 கடிந்துக்கொண்டான் (எச்சரித்தான்)
யோவா 8:11 நீ போ இனிப்பாவம் செய்யாதே
6. லூக் 23:42 ராஜ்யத்தில் நினைத்தருளும் (பரலோகத்துக்காக ஜெபித்தான்)
மத் 10:32,33 இயேசுவை அறிக்கைச் செய்தான் பரலோகம் கிடைத்தது
இடதுபுறத்துக் கள்ளன்:
இடதுபுறத்துக் கள்ளனின் பெயர் - ஹெஸ்பாஸ்
1. லூக் 23:39 இயேசுவை நீ என்றான் [இயேசுவை தன்னுடைய அடிமையைப் போல நினைத்தான்)
மத் 26:62 பிரதான ஆசாரியனும் இயேசுவை நீ என்றான்
2. லூக் 23:39 கிறிஸ்துவானால் (இயேசுவோ என்று சந்தேகப்பட்டான்)
மத் 14:31 ஏன் சந்தேகப்பட்டாய்
3. லூக் 23:39 உன்னையும் [இயேசுவை அவமரியாதை செய்தான்)
மத் 26:61 இவன் சொன்னான் என்றார்கள் (இயேசுவை)
4. லூக் 23:39 இரட்சித்துக்கொள் (இரட்சிப்பைக்குறித்தும் கிண்டல் செய்தான்)
அப் 16:17 குறிசொல்லுகிற பெண் பவுலையும் கிண்டல் பண்ணினாள்
5. லூக் 23:39 இகழ்ந்தான் (இயேசுவைத் திட்டினான்)
மத் 26:74 பேதுருவும் இயேசுவைத் திட்டினான்
சிலுவையைச் சூழ்ந்த அதிசயங்கள்:
1. ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. [மத் 27:45 மாற் 15:33; லூக் 23:44,45)
2. தேவலாயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. (மத் 27:51; மாற் 15:38; லூக் 24:45).
3. பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
(மத் 27:51)
4. கல்லறைகளும் திறந்தன. (மத். 27:52)
5. நித்திரையடைந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தன. (மத் 27: 52)
6. சிலுவைக்கள்ளரில் ஒருவன் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும் என்றான். (லூக் 23:42,43)
7. நூற்றுக்கதிபதி சம்பவித்ததைக் கண்டு; மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி தேவனை மகிமைப்படுத்தினான். (லூக் 23:47, மாற் 15:39 மத் 27:54)
இயேசு கிறிஸ்துவை யூதர்கள் கொல்ல பத்துக் காரணங்கள்:
1. தம்மை இராஜா என்று சொன்னதினால். (மத் 2:2,3,16;
யோவா 18:33-40; 19:12-22)
2. சத்தியத்தைச் சொன்னதினால். (லூக் 4:21-30; யோவா 8:40,45,46]
3. ஓய்வு நாளில் வியாதியஸ்தரைச் சுகமாக்கினதினால்.
(மத் 12:9-14; மாற் 3:1-6; யோவா 5:16; 9:16)
4. பொறாமையினால். (மத் 26:3,4; 27:18; மாற் 14:1 15:9,10; லூக் 22:2; யோவா 11:48)
5. தேவனுடைய குமாரன் என்று சொன்னதினால். [மத் 26:63-66; மாற் 14:61-64)
6. தீர்க்கதரிசனம் நிறைவேறும்படியாக. (யோவா 12:38-40 18:31,32; 19:11,28,36,37; அப் 2:22:36; 3:18]
7. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று சொன்னதினால். [யோவா 5:18; 10:24-30; 19:7)
8. அவரை விசுவாசியாதபடியினால். (யோவா 5:38-47; 6:36; 9:39-41; 12:36-38)
9. ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று செகன்னதினால். (யோவா 8:51-59; 10:33 மத் 22:41-56)
10.தங்கள் சுயகவுரவமாகிய அந்தஸ்து அழித்துப்போடப்படும் என்று பயந்து. [யோவா 11:46-53; 12:10,11,19)
இயேசுவை நிந்தித்து, பரியாசம்பண்ணி தாஷித்த ஏழுபேர்:
1. போர்ச்சேவகர்கள். மத் 27:27-31
2. வழிப்போக்கர். மத் 27:39,40
3. பிரதான ஆசாரியர். மத் 27:41
4. வேதபாரகர். மத் 27:41,42
5. மூப்பர்கள். மத் 27:41-43
6. வலது பக்கத்துக் கள்ளன். மத் 27:44
7. இடது பக்கத்துக் கள்ளன். மத் 27:44
இயேசு கிறிஸ்து மற்றவர்களால் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்கள்:
1. யூதர்கள் செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். (லூக் 4:29)
2. முதலாவது அன்னா என்பவனிடத்தில் கொண்டு போனார்கள். யோவா 18:13
3. பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.(மத் 26:57; மாற் 14:53; லூக் 22:54; யோவா 18:24)
4. பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவை கொலை செய்யும்படி, அவருக்க விரோதமாக ஆலோசணைபண்ணி, அவரைக் கட்டி தேசாதிபதியாகிய பொந்தியு
பிலாத்துவினிடத்தில் கொண்டுபோனார்கள். (மத் 27:1,2 லூக் 23:1)
5. பிலாத்துவினால் இயேசு ஏரோதினிடத்தில் அனுப்பப்பட்டார். (லூக் 23:7-11)
6. போர்ச்சேவகர் மறுபடியும் பிலாத்துவினிடத்தில் கொண்டுபோனார்கள். (லூக் 23:11-25)
7. போர்ச்சேவகர் கூட்டத்தில் கொண்டுபோகப்பட்டார். (மாற் 15:16,19)
8. போர்ச்சேவகர் அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். (மத் 27:31, மாற் 15:20; லூக் 23:26,32; யோவா 19:16)
இயேசு கிறிஸ்துவைக் குறித்து பத்து குற்றச்சாட்டுகள்:
1. பிரதான ஆசாரியன்: இவன் தேவ தூஷணம் சொன் னான். (மத் 26:64,65; மாற் 14:62-64; லூக் 22:69-71)
2. வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக் கொண்டிருக் -கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான். (மாற் 3:22)
3. பரிசேயர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல் -செபூவினாலே பிசாசுகளைத் துரத்துகிறான். (மத் 12:24; லூக் 11:15)
4. பரிசேயர்: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும்
போஜனம்பண்ணுகிறார். மத் 9:11
5. நியாய சாஸ்திரிகள்: போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன். (லூக் 7:30-34; மத் 11:19)
6. ஜனங்கள்: நீ பிசாசு பிடித்தவன். யோவா 7:20
7. அவருடைய இனத்தார்: அவர் மதிமயங்கியிருக்கிறார். மாற் 3:20,21
8. ஆலோசனை சங்கத்தாராகிய கூட்டத்தார்: இவன் தன்னைக்
கிறிஸ்து என்னப்பட்ட இராஜாவென்றும், இராயனுக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம். (லூக் 23:1,2)
9. பரிசேயரில் சிலர் அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளா -ததினால், அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல. (யோவா 9:16)
10. யூதர்கள்: இவன் தன்னை இராஜாவென்று சொன்னான், ஆகவே இவன் இராயனுக்கு விரோதி. (யோவா 19:21)
A) இயேசு கிறிஸ்துவின் இரத்தம் (பாகம்-2):
1. நன்மையானவைகளைப் பேசுகிறது. (எபி 12:24,25) 2. தூரமானவர்களைச் சமீபமாக்குகிறது. (எபே 2:13-20)
3. பாவமன்னிப்பாகிய மீட்பை அளிக்கிறது. (கொலோ 1:12-15; எபே 1:7; 1பேது 1:19)
4. சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது.
(1யோவா 1:7)
5. பாவங்களற நம்மைக் கழுவுகிறது. (வெளி 1:6)
6. ஜனத்தைப் பரிசுத்தம் செய்கிறது. (எபி 13:12; 10:10,14)
7. மனச்சாட்சியைச் செத்த கிரியைகளற சுத்திகரிக்கிறது. (எபி 9:14)
8. தேவனோடு ஒப்புரவாக்குகிறது. (கொலோ 1:20)
9. இயேசுவோடு நிலைத்திருக்கச் செய்கிறது. (யோவா 6:56)
10. பிசாசின்மேல் ஜெயத்தைத் தருகிறது. (வெளி 12:11)
11. சமாதானத்தை அளிக்கிறது. (கொலோ 1:20)
12. தைரியத்தை உண்டுபண்ணுகிறது. (எபி 10:19,20)
13. பாவிகள்மேல் தெளிக்கப்படுகிறது. (எபி 12:24; 1பேது 1:2 யாத் 24:7,8; லேவி 14:4-7,49,50)
14. நித்திய மீட்பை உண்டாக்குகிறது. (எபி 9:12)
15. நித்திய ஜீவனைக் கொடுக்கிறது. (யோவா 6:54)
16. நித்திய உடன்படிக்கை செய்கிறது. (எபி 13:20: 10:29)
17. பாவிகளை நீதிமான்களாக்குகிறது. (ரோம 5:8,9)
18. நம்மைக் குணமாக்குகிறது [1பேது 2:24)
19. அங்கிகளைத் தோய்த்து வெளுக்கிறது. (வெளி 7:14)
20. சபையைச் சம்பாதிக்கிறது. (அப் 20:28)
21. நம்மை இராஜாக்களும், ஆசாரியர்களுமாக்குகிறது. (வெளி 1:6; 5:9,10)
தொடரும்..
God bless you