நெகேமியாவின் புத்தகம்
எழுத்தாளர்: நெகேமியா புத்தகம் அதன் எழுத்தாளரை யாரென்று குறிப்பாக குறிப்பிடவில்லை, ஆனால் யூத மற்றும் கிறிஸ்தவ மரபுகள் எஸ்றாவை எழுத்தாளராக அங்கீகரிக்கின்றன. இது எஸ்றா மற்றும் நெகேமியாவின் புத்தகங்கள் முதலில் ஒரே புத்தகமாக இருந்தன என்கிற உண்மையை அடிப்படையாகக் கொண்டதாகும். எழுதப்பட்ட காலம்: நெகேமியா புத்தகம் கி.மு. 445 முதல் கி.மு. 420 வரையிலுள்ள காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.
எழுதப்பட்ட நோக்கம்: வேதாகமத்தின் வரலாற்று புத்தகங்களில் ஒன்றான நெகேமியா புத்தகம், பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலர்கள் திரும்பிய கதையையும், எருசலேமில் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பிய கதையையும் தொடர்கிறது.
திறவுகோல் வசனங்கள்: நெகேமியா 1:3, “அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.”
நெகேமியா 1:11, “ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.”
நெகேமியா 6:15-16, “அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது. எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும், எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோதும், மிகவும் முனையற்றுப்போய், இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.”
சுருக்கமான திரட்டு: எருசலேமில் உள்ள ஆலயம் புனரமைக்கப்படுவதாக செய்தி வந்தபோது நெகேமியா பெர்சியாவில் ஒரு எபிரேயராக இருந்தார். நகரத்தைப் பாதுகாக்க சுவர் இல்லை என்பதை அறிந்து அவர் அதைக் கட்டுவதற்கு ஆர்வத்துடன் எழுந்தார். நகரத்தை காப்பாற்ற தன்னைப் பயன்படுத்தும்படி நெகேமியா தேவனை அழைத்தார். பெர்சிய மன்னரான அர்தசஷ்டாவின் இதயத்தை மென்மையாக்குவதன் மூலம் தேவன் நெகேமியாவின் ஜெபத்திற்கு பதிலளித்தார், ராஜா தனது அனுமதியோடு மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் பயன்படுத்த வேண்டிய பொருட்களையும் வழங்கினார். இறுதியில் நெகேமியா எருசலேமுக்குத் திரும்புவதற்கு ராஜா அனுமதி அளிக்கிறார், அங்கு அவர் ஆளுநராக்கப்படுகிறார்.
எதிர்ப்புகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் அலங்கம் கட்டப்பட்டது மற்றும் எதிரிகள் அமைதியாக்கப்பட்டனர். நெகேமியாவால் ஈர்க்கப்பட்ட ஜனங்கள், அதிக எதிர்ப்பையும் மீறி, குறிப்பிடத்தக்க 52 நாட்களில் அலங்கத்தை முடிக்க அதிக பணம், பொருட்கள் மற்றும் மனிதவளத்தின் தசமபாகம் கொடுத்தார்கள். எவ்வாறாயினும், இந்த ஒன்றுபட்ட முயற்சி குறுகிய காலமே ஆகும், ஏனென்றால் நெகேமியா சிறிது நேரம் இடைவேளை விட்டு வெளியேறும்போது எருசலேம் மீண்டும் விசுவாசதுரோகத்திற்குள் விழுகிறது. அவர் எருசலேமுக்குத் திரும்பியபோது, நெகேமியா சுவர்கள் வலுவாக இருப்பதைக் கண்டார், ஆனால் மக்கள் பலவீனமாக இருந்தனர். மக்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் பணியை அவர் அமைத்தார், அவர் வார்த்தைகளை குறைவாக்கவில்லை. "அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து" (13:25). ஜெபத்தின் மூலமாகவும், தேவனுடைய வார்த்தையைப் படித்து பின்பற்றுவதன் மூலமும் புத்துயிர் பெற மக்களை ஊக்குவிப்பதன் மூலமும் அவர் உண்மையான வழிபாட்டை மீண்டும் நிலைநிறுத்தினார்.
முன்னிழல்கள்: நெகேமியா ஒரு ஜெபிக்கிற மனிதராக இருந்தார், அவர் தனது மக்களுக்காக உணர்ச்சிவசமாக ஜெபித்தார் (நெகேமியா 1). தேவனுடைய ஜனங்களுக்காக அவர் காட்டிய வைராக்கியமான பரிந்துரையானது, நம்முடைய பெரிய மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்துவை முன்னறிவிக்கிறது, அவர் யோவான் 17-ல் அவருடைய பிரதான ஆசாரிய ஜெபத்தில் தம் மக்களுக்காக ஆவலுடன் ஜெபித்தார். நெகேமியா மற்றும் இயேசு இருவரும் தேவனுடைய மக்கள் மீது எரியும் அன்பைக் கொண்டிருந்தார்கள், அவர்கள் தேவனிடம் ஜெபத்தில் தங்களையே ஊற்றினார்கள், அவர்களுக்காக சிங்காசனத்திற்கு முன்பாக பரிந்துரை செய்தனர்.
நடைமுறை பயன்பாடு: நெகேமியா இஸ்ரவேலர்களை வேதத்தின் எழுத்துக்களுக்குள்ள கனம் மற்றும் அன்பிற்கு இட்டுச் சென்றார். நெகேமியா, தேவன்மீது வைத்திருந்த அன்பு மற்றும் தேவனை மதிக்கப்படுவதையும் மகிமைப்படுத்துவதையும் காண விரும்பியதன் காரணமாக, இஸ்ரவேலரை இவ்வளவு காலமாக தேவன் விரும்பிய விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் நோக்கி இட்டுச் சென்றார். அதேபோல், கிறிஸ்தவர்கள் வேதத்தின் சத்தியங்களை நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும், அவற்றை நினைவாற்றலுக்கு அர்ப்பணிக்கவும், இரவும் பகலும் தியானிக்கவும், ஒவ்வொரு ஆவிக்குரிய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக அவர்களிடம் திரும்பவும் வேண்டும். 2 தீமோத்தேயு 3:16-17 நமக்கு சொல்லுகிறது “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது." இஸ்ரவேலரின் ஆவிக்குரிய மறுமலர்ச்சியை/எழுப்புதலை நாம் அனுபவிக்க எதிர்பார்க்கிறோம் என்றால் (நெகேமியா 8: 1-8), நாம் தேவனுடைய வார்த்தையிலிருந்து தொடங்க வேண்டும்.
ஆவிக்குரிய அல்லது சரீரப்பிரகாரமான துன்பங்களைக் கொண்ட மற்றவர்களிடம் நாம் ஒவ்வொருவரும் உண்மையான இரக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். இரக்கத்தை உணர, இன்னும், உதவ எதுவும் செய்யாதது, வேதாகம அடிப்படையில் ஆதாரமற்றது. சில சமயங்களில் மற்றவர்களுக்கு முறையாக ஊழியம் செய்வதற்காக நம் சொந்த வசதியை நாம் விட்டுவிட வேண்டியிருக்கும். சரியான நேரத்தோடு நம் நேரத்தையும் பணத்தையும் கொடுப்பதற்கு முன்பு நாம் ஒரு காரணத்தை முழுமையாக நம்ப வேண்டும். தேவனை நம் மூலமாக ஊழியம் செய்ய நாம் அனுமதிக்கும்போது, அவிசுவாசிகள் கூட இது தேவனுடைய வேலை என்பதை அறிந்து கொள்வார்கள்.