2024 Parama Darshan 2024பரம தரிசனம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இன்றைய செய்தியை பார்ப்போம்
கண் பார்வை” என்பது தெளிவான, கூரிய பார்வையைக் குறிக்கும் சொற்களாகும்.
தரமானதொரு பரிசோதனை இதனையே குறைவற்ற பார்வை எனக் காட்டும். மூக்குக் கண்ணாடி
தேவையில்லாத நல்ல பார்வையையே இது குறிக்கும். வாசிப்பவருக்கும் வாசிப்புப் பலகைக்கும்
இடையிலுள்ள 20 அடி தூரத்தையே ““20”” எனும் எண் குறிப்பிடுகிறது.
நாளுக்கு நாள் இருளாகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், கிறிஸ்துவின் வருகைக்கு முன்னுள்ள
இவ்வாண்டிலும், இனி வரும் ஆண்டுகளிலும், 2024ஆம் ஆண்டிற்குள் நுழையவிருக்கும் கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவரின் அதிமுக்கிய தேவை இதுவே என்பதே எனது கணிப்பு. அப்போஸ்தலர் 20,20ஐத் தழுவிய செய்தி இது. தனது வாழ்விலும் பணியிலும் நெடுகவே
பவுலடியார் தனதாக்கிக்கொண்ட தெளிவான தரிசனத்தை இவ்வேதப் பகுதி விளக்குகிறது.
தமஸ்கு சாலையில் அவருக்குக் கிடைத்த ““பரம தரிசனம்” அவரது ஆன்மீகப் பயணத்தின்
துவக்கமாய் அமைந்தது (அப்போஸ்தலர்
9,1,6). பரம் செல்லும்வரை இந்தப் பரம தரிசனத்திற்கு அவர் நெடுகவே கீழ்ப்படிந்து வாழ்ந்தார்
(26,19). எபேசு சபைத் தலைவர்களுக்கு அவர் அளித்த பிரிவுரையில்தான் அப்போஸ்தலர் 20,20
எனும் நமது தலைப்பு வசனம் வருகிறது (20,17-35). இத்தரிசனத்தைப் பெற்றுக்கொள்ள இப்பகுதி
முழுவதையும் கவனமாய் வாசியுங்கள்.
அனைத்து மக்களுக்கும் நற்செய்தியைப் ““பிரசங்கிக்கவும்,'” நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்குத் திருமறையை ““உபதேசிக்கவும்'' வேண்டும் என்பதே கிறிஸ்துவின் சீடர் யாவருக்கும் அவர் கொடுத்துள்ள பேராணை. இதைத்தான் அப்போஸ்தலர் 20,20இல் பவுலடியார் சாட்சி
பகருகிறார்: ““பிரசங்கித்தேன் ... உபதேசித்தேன்.'” இதை வீதிகளிலும் வீடுகளிலும்” செய்தார்.
பொதுவிடங்களில் பிரசங்கிக்கும் வாய்ப்பும் வாய்மையும் எல்லாருக்கும் கிட்டுவதில்லை. எல்லா நாடுகளிலும் திறந்தவெளிப் பிரசங்கம் செய்வது சாத்தியமுமில்லை. ஆனால் தனி நபர்களைச்சந்தித்துப் பணியாற்றுவது எவருக்கும், எங்கும், எப்பொழுதும் சாத்தியம். ஆதிச்சபையின் அமோகப்பெருக்கத்திற்குத் தனியாள் ஆத்துமாதாயப்பணிதான் காரணம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைச் சந்தித்தனர்! (ach one reached one!) சுவிசேஷத்தைப் பரப்பும் பணி முழுநேர ஊழியருக்கு
மட்டும்தான் என்ற நிலை இல்லாதிருந்தது.
இத்தரிசனத்துடன் நாம்
செயல்பட்டால், பெயர்க் கிறிஸ்தவரைக் குறிக்கும் ““யூதருக்கும்,””
கிறிஸ்தவரல்லாதோரைக் குறிக்கும் ““கிரேக்கருக்கும்'' நாம் நன்மை விளைவிப்போம் (அப்போஸ்தலர் 20,21).
வேறு வார்த்தைகளில் சொன்னால், இவ்விதம் ஒவ்வொரு விசுவாசியின் ஈடுபாட்டினால் திருச்சபைக்கு உள்ளிருப்போரும்வெளியிருப்போரும் ஆசி பெறுவர். சபையில் எழுப்புதல், சபை மூலம்
நற்செய்திப்பணி என்பது நிறைவேறும். இந்த “20-24தரிசனம்'' செயல் வடிவம் பெற வேண்டுமானால் குறைந்தது ஏழு தத்துவங்கள் கையாளப்படவேண்டும்.
பவுலின் மேற்குறிப்பிட்ட
உரையில் இவை
வரையறுக்கப்படுகின்றன -- 2ம்
பகம்
1. Transparency / ஒளிவுமறைவின்மை
வசனம்18, “நான் ஆசியா நாட்டில் வந்த நாள் முதல் எல்லா வேளைகளிலும்
உங்களுடன் எவ்விதம் இருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஒளிவுமறைவின்றி உண்மையாய் வாழ்வதிலிருந்துதான் நாம் துவங்கவேண்டும். இல்லையேல்
நமது வாழ்விற்கும் வார்த்தைக்கும் முரண்பாடு தீராது. வாயினால் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து,
ஆனால் வாழ்வில் அவருக்குச் சான்றாயிராதவனைப் பிசாசுக்கு அதிகம் பிடிக்கும்.
வெறுமனே வாழ்வில் காட்டினால் மட்டும் போதாது; அப்படியே வார்த்தையினால் மட்டும் கொட்டினாலும் போதாது. விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்கும் வல்லமையுடையது சுவிசேஷந்தான் என்றாலும், நாம்
எப்படி வாழ்கிறோம் என்பதே அதற்கு நிரூபணமாய் அமையும். கூந்தல் தைல விளம்பரத்திற்கு
வழுக்கைத் தலையனா? நாம் பிரசங்கிப்பது ““ஜீவ'' வசனம் என்பதால் நமது
ஜீவியத்திலிருந்து
அதனைப் பிரிக்க முடியாது (1 யோவான் 1,1). அவருக்குச் சான்றுகளாய் இருப்பதற்காகவே கிறிஸ்து நமக்குப் பரிசுத்த ஆவியை அருளியுள்ளார் (அப்போஸ்தலர் 1,8).
ஆவிக்குரிய தலைவர்களுக்குமுன் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதையே ஒளிவுமறைவற்ற தனது வாழ்க்கையை
முன்மாதிரியாக எபேசு சபை மூப்பர்களுக்கு அவர் கூறியது
வலியுறுத்துகிறது. மேய்ப்பர்களின் அளவுக்குமீறிய கட்டுப்பாடு (௦ver-shepherding) திருமறைக்கு
ஏற்புடையதல்ல எனினும் தலைவர்களின் ஆரோக்கியமான மேற்பார்வை நமக்குத்தான் பாதுகாப்பு.
சபைக்கு உள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் வந்து மந்தையைக் குதறிப் பீறும் ஓநாய்களைக் குறித்து
மேய்ப்பர்கள் எவ்வளவு விழிப்பாயிருக்கவேண்டுமென அப்போஸ்தலன் அறிவுறுத்துகிறார் (அப்போஸ்தலர்
20,29,30). இறைவார்த்தையின் ஆரோக்கியமான உபதேசத்தில் வேரூன்றி வழிவிலகலிலிருந்து
தங்களை விசுவாசிகள் காத்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்டவரது உரிமைக்காய்ப் போராடும் காலமிது. அடங்கியிருத்தலும் பிறரது மேற்பார்வைக்கு அடிபணிதலும் பொதுவாக இன்று
விரும்பப்படுவதில்லை. ஒவ்வொருவனும் ““தன் தன் வழியே'' போக விரும்புகிறான். பாவத்தில்
வாழ்வதற்கு அதனை மூடலாய்ப் பயன்படுத்தாதவரை தனி நபர் உரிமைக்குப் பைபிள் எதிரல்ல.
மகிபனோடும் மனிதரோடும் ஒளியில் வெளிப்படையாய் மாய்மாலமின்றி வாழ்ந்தால் இயேசுவின் ரத்தம் நம்மைக் கழுவிக்கொண்டேயிருக்கும் என்பது இறைவாக்கு (1 யோவான் 1,7).
2. Tenderness / மென்மை
வசனம் 19, “மிகுந்த மனத்தாழ்மையுடன் கர்த்தரைச் சேவித்தேன். ””
பவுலுக்குக் கிடைத்த பரம தரிசனம் அவரது அகம்பாவத்தைத் தகர்த்தது. மேலிருந்து வந்த ஒளியும்
ஒலியும் குதிரை மீதிருந்து அவரைக் கீழே தள்ளின (அப்போஸ்தலர் 9,8; 22:7; 26:14). இனம், குடியுரிமை, கல்வி,
மார்க்கபக்தி போன்றவற்றைக் குறித்த அவரது செருக்கு செருப்பெனத் தூக்கியெறியப்பட்டது (அப்போஸ்தலர்
22,3; பிலிப்பியர் 3,4-7). முன்னர் அவர் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த யாவும் தவிடுபொடியானது (பிலிப்பியர்
3,8). தாழ்மை என்பது எவருக்கும் இயல்பாக வந்துவிடுவதில்லை. தாழ்மையாயிருப்பதும்
நொறுங்கியிருப்பதும் ““நமது'” பொறுப்பு (யாக்கோபு 4,10).
அகங்காரமும் அளவுக்குமீறிய சுதந்திரமும் நிறைந்த நாளிது. இப்படித்தானிருக்குமென
ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டுள்ளது (2 தீமோத்தேயு 3,1-4). மார்க்கவுலகும் இதற்கு விதிவிலக்கல்ல.
சொல்லப்போனால், சபைக்குள் வராதோரைவிடச் சபையினருக்குத்தான் அகந்தையும் அகம்பாவமும்
அதிகம். மலைப்பிரசங்கத்தின் எட்டு பாக்கிய வசனங்களில் முதல் வசனமே கூறுவது: ““ஆவியில் எளிமையுள்ளோர் பாக்கியவான்கள்; பரலோகம் அவர்களுடையது”' (மத்தேயு 5,3). மூன்றாம் பாக்கிய வசனம்: ““சாந்தகுணமுள்ளோர் பாக்கியவான்கள்; அவர்கள் பூவுலகைச் சுதந்தரிப்பர்'” (வசனம் 5
ஆவியில் எளிமை வாக்களிப்பது '“பரலோகம்'' (வசனம் 3). சாந்தகுணம்தான் விண்ணக ஆட்சியை
“பூவுலகிற்குக்'' கொண்டுவரும் வழி (வசனம் 5). சாந்தம், எளிமை, கனிவு போன்றவற்றைத்தான்
பிரதானமாய் நமதரசர் இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் (மத்தேயு 11,29; 21:4).
2024ஆம் ஆண்டில் நுழையும் இவ்வேளையில் கடவுளுக்கு முன்பாகவும் மனிதருக்கு முன்னரும்
தாழ்மையாய் நடப்போம் எனத் தீர்மானம் எடுப்போம் (மீகா 6,8). மேட்டிமையான பார்வையைக்கர்த்தர் அருவருக்கிறார் (நீதிமொழிகள் 6,17; 21,4).
மக்களோடுள்ள இடைபாடுகளில் நாம் மென்மையாய் நடந்துகொள்வோம். தேவையான இடத்தில் கண்டிப்பு அவசியம், ஆனால் முரட்டுத்தனம் கூடாது. எல்லாரும் புண்பட்டுத்தானிருக்கின்றனர்.
நெறிந்த நாணலை நாம் முறிக்கக்கூடாது ; மங்கியெரியும் திரியை அணைக்கக்கூடாது (ஏசாயா 42,3).
புத்தாண்டைத் துவங்கும் நாம் மக்களைச் சொல்லாலும் செயலாலும் கட்டுவோம், தகர்க்கமாட்டோம்
என அர்ப்பணிப்போம். எவரையும் தீர்த்துக்கட்டாதீர்கள் (மத்தேயு 7,1; 1 கொரிந்தியர் 4,5).
3. Tearfulness / கண்ணீர் ததும்பல்
வசனம் 19, “மிகுந்த கண்ணீருடன் கர்த்தரைச் சேவித்தேன், '”
வசனம் 31, “மூன்று ஆண்டுகள் இரவும் பகலும் கண்ணிருடன் இடைவிடாதுஒவ்வொருவருக்கும் புத்திசொல்லி வந்தேன்.
இறைவனுக்கும் இறைமக்களுக்கும் கண்ணீருடன் பணியாற்றியதைப் பவுலடியார் இங்கு குறிப்பிடுகிறார். பிரார்த்திக்கும்போதும் பிரசங்கிக்கும்போதும் கண்ணீர்! அவரவரது தலைமுறையில்
கர்த்தரால் குறிப்பிடத்தகு வகையில் பயன்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர்
நொறுங்குதலின் அனுபவமுள்ளவர்களே என்பதுதான் சபைச் சரித்திரத்திலும் உலகச் சரித்திரத்திலும்
நாம் நெடுகவே காண்பது. நமது பார்வையும் தரிசனமும் தெளிவாயிருக்கும்படி நமது கண்களைக்
கழுவுவது கண்ணீர்தான். மன்னன் எசேக்கியாவின் கண்ணீர் தேவனை அசைத்தது (2 இராஜாக்கள் 20,5).
சீர்திருத்தவாதி நெகேமியா கண்ணீர் நிறைந்தவர் (நெகேமியா 1,4). யோபுவின் கண்ணீர் அவரது கசப்பானவாழ்விலும் கர்த்தர் நல்லவர் என்ற விசுவாசத்தைத் தக்க வைத்தது (யோபு 16,20). தனது கண்ணீர் தேவனது தோற்பையில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது என்ற நிச்சயம் தாவீதுக்கு இருந்தது (சங்கிதம் 56,8).
பின்வாங்கிப்போன இறைமக்களுக்காய் எரேமியா மறைவிடங்களில் கண்ணீர் வடித்தார் (எரேமியா 9,1).
தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டதற்காகவே கண்ணீரை மரியாள் நன்றிக் காணிக்கையாக்கினாள் என்றார் இயேசு (லூக்கா 7,38,47). பொருளாதாரக் கண்ணோட்டத்திலேயே செயலாற்றியபிரசங்கிமாருக்காய்ப் பவுல் கண்ணீர் வடித்தார் (பிலிப்பியர் 3,18). கண்ணீருக்குப் பெயர்பெற்ற தீமோத்தேயுவின் விசுவாசத்தைப் பவுல் பாராட்டினார் (2 தீமோத்தேயு 1,4,5). இயேசுவின் மன்றாட்டுவாழ்வில் கண்ணீர் சாதாரணம் (எபிரேயர் 5,7). ““புலம்புவோர் பேறுபெற்றோர்'' என்று அவர் சும்மாவாசொன்னார்? (மத்தேயு 5,4).
புலம்பல் எழுப்புதல் வராதா? அங்கலாய்ப்புக் கண்ணீருமுண்டு, ஆனந்தக் கண்ணீருமுண்டு.
ஆழ்ந்த உணர்வுகளின் வெளிப்பாடே கண்ணீர். இறைவார்த்தையைத் தியானிக்கையிலும்,இறைவேண்டல் செய்கையிலும், இறைச்செய்தி அறிவிக்கையிலும் நமது கண்கள் குளமாகத் தேவன்அருள்புரிவாராக! கல்லான இதயமும் வணங்காக் கழுத்துமுள்ள இச்சமுதாயம் வேறெப்படித்தான்
அசையுமோ? மன்றாட்டு ஜெபவீரரான ஒரு பிரசங்கியார் தனது சபையாரைப் பார்த்து, “நீங்கள் உங்களுக்காய் அழாவிடில் நானே உங்களுக்காய் அழுவேன்'' என்றார்! திருச்சபையை அது இருக்குமிடத்திலிருந்து இருக்கவேண்டிய இடத்திற்குக் கொண்டுவரப் புலம்பல் தீர்க்கர்கள் எழும்பியேஆகவேண்டும் (எசேக்கியல் 21,6). பாடுவது பரவசமாயிருக்கலாம்; பெருமூச்சு விடுவதோ இடுப்பு வலி
உண்டாக்கும். எம்பெருமான் வாழ்வில் பெருமூச்சு நிறைய இருந்தது (மாற்கு 7,34; 8,12).
4. Toughness / திட மனது
வசனம் 19, “யூதரது குழ்ச்சிகளால் எனக்கு நிகழ்ந்த சோதனைகளுடன் கர்த்தரைச் சேவித்தேன். ””
வசனம் 22-24, “தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேம் செல்கிறேன்.
அங்கு எனக்கு என்ன நேரிடும் என்பது தெரியாது. சிறைவாழ்வும் சித்திரவதைகளும்
எனக்காய்க் காத்திருக்கின்றன என்று தூயாவியானவர் நகர்தோறும் எனக்குத் தெரிவிக்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை.
இறையருளைப்புற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்வின் ஓட்டத்தை முடிப்பதே எனது ஒரே நோக்கு. ””
மலர்ப்படுக்கை நாடுவோர்க்குக் கிறிஸ்தவ வாழ்க்கை பொருந்தாது. சீடத்துவத்திற்கான பிரதான நிபந்தனையே சிலுவை சுமத்தல்தான். “அநேக உபத்திரவங்கள்” வாயிலாகத்தான்இறையரசுக்குள் நுழைகிறோம் (அப்போஸ்தலர் 14,22). இறைப்பற்றுடன் வாழ :'விருப்பம்'' இருந்தாலே துன்பங்கள் துணையாகிவிடும் (2 தீமோத்தேயு 3,12). ஒன்றுமே செய்ய வேண்டாம், ஆனால் எல்லாமே கிடைத்துவிடும்
என்று பறைசாற்றும் இன்றையப் பிரசங்கப்பீடங்கள் ஒலிப்பது சுத்த சுவிசேஷம் அல்ல.
அது வேறு சுவிசேஷம். அது வேறு இயேசு. அது வேறு ஆவி. கிறிஸ்துவின் வருகைக்கும் உலக முடிவுக்கும்
ஓராண்டு நெருக்கமாய் 2024ஆம் ஆண்டு நம்மைக் கொண்டுவருகிறது. தனக்குச் சிறிது காலமே
மிஞ்சியுள்ளது என்றறிந்த பிசாசு கொதித்தெழுந்துகொண்டிருக்கிறான் (வெளிப்படுத்தல் 12,12). வரும் ஆண்டுகளில் துன்புறுத்தப்படல் கூடிக்கொண்டேயிருக்கும். சிறையடைப்பும் சிரச்சேதமும்
ஆபூர்வமாயிராது. ஆனாலும் நமக்குத் தேவன் தந்துள்ளது பயம் அல்ல, பலம் (2 தீமோத்தேயு 1,7).
அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஏற்பட்டுள்ள ஏற்றங்கள் நம்மை அச்சுறுத்தி எளிய சுவிசேஷத்தை அறிவிக்க முடியாதபடி நம்மை முடமாக்கிவிடக்கூடாது. மார்க்கவாதியாயிருக்கட்டும்,
தத்துவ ஞானியாயிருக்கட்டும், தொழில் வல்லுனராயிருக்கட்டும், அவர்களை ரட்சிக்க ஆற்றலுள்ளது கிறிஸ்துவின் சுவிசேஷம் மட்டுமே (ரோமர் 1,16; 1 கொரிந்தியர் 1,18-25).
5. Totality/ Thoroughness / முழுப் போதனை
வசனம் 20, “பயனுள்ளவற்றில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்கவில்லை. ”
வசனம் 26, “தேவனது ஆலோசனையில் ஒன்றையும் மறைத்து வைக்காது
எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். ””
கிறிஸ்துவின் பேராணையின் முதல் பகுதி வலியுறுத்தப்படுமளவு அடுத்த பகுதி பேசப்படுவதில்லை (மத்தேயு 28,19,20). முதல் பகுதி: சீடரைச் “சேர்ப்பது.” அடுத்த பகுதி: நமக்குக்
கிறிஸ்து கட்டளையிட்ட அனைத்தையும் அவர்களுக்கு “உபதேசிப்பது.”' கிறிஸ்தவத்தில் சுவிசேஷப் பிரசங்கங்களுக்குப் பஞ்சமில்லை; பக்திவிருத்திச் செய்திகள் கிடைப்பதோ அரிதாகிவிட்டது.
அவிசுவாசிகளுக்குரியது சுவிசேஷப் பிரசங்கங்கள்; விசுவாசிகளுக்குத்தேவையானதோ பக்திவிருத்திச் செய்திகள். கிறிஸ்து இயேசுவும் அப்போஸ்தலன் பவுலும் இவ்விரண்டையும் சமநிலைப்படுத்தினர் (மத்தேயு 9,35; 1 தீமோத்தேயு 2,7). இத்தலைமுறைக்காய் ஆண்டவர் எழுப்பியுள்ள
சுவிசேஷகர்களுக்காய் அவரைத் துதிப்போம். ஆனால் போதுமான திருமறைப் போதகர்கள்இல்லையேல் திருச்சபையினரின் வளர்ச்சி குன்றும். விசுவாசிகள் நிறைந்த சபைகளிலும் பக்திவிருத்திச் செய்திகளைவிடச் சுவிசேஷப் பிரசங்கங்களே ஞாயிறுஆராதனைகளிலும்
கேட்கப்படுகின்றன என்பது வருந்தற்குரியது. இதனால் கூட்டம் பெருகலாம்; ஆனால் இறைமக்கள் பக்தியடையார், பக்குவமடையார், பயிற்சியடையார். “இயேசுவிடம் வாருங்கள்’ என்பதல்ல,
“இயேசுவைப் பின்பற்றுங்கள்'' என்பதே ஞாயிறு ஆராதனைப் பிரசங்கங்களின் அறைகூவலா யிருக்கவேண்டும். இயேசுவின் வல்லமை மற்றும் அற்புதங்களைவிட அவரது வாழ்க்கை மற்றும் போதனைகளைத் தியானிப்பதிலேயே கூடுதல் நேரம் செலவழிக்கப்படவேண்டும். இல்லையேல், சபை மக்கள் நெடுகவே குழந்தைகளாய்த்தானிருப்பர் (எபேசியர்4,12-15). ஆதாயத்திற்காகவே ஆண்டவருடன் உறவு என்றாகிவிடும்.
வேத வாக்கியங்கள் ““எல்லாம்”' பயனுள்ளவை (2 தீமோத்தேயு 3,16,17). தேவனது முழுஆலோசனையைத் தேவ மக்களுக்குப் பவுலைப்போல அறிவிக்கும்படிச் சபை மேய்ப்பர்களும் பிரசங்கிமாரும் முழு வேதாகமத்தையும் போதிக்கவேண்டும் (அப்போஸ்தலர் 20,20,26). இப்படித்தான் இறைமக்கள் முதிர்ச்சியடைந்து அனைத்து நற்செயல்களைச் செய்யப் பக்குவமடைய முடியும் (2 தீமோத்தேயு 3,16). சபையினருக்குப் பிரசங்கிமார் சத்தான போதனை கொடுக்கவேண்டுமானால் அவர்கள் பைபிளைத் தியானிக்கவும் படிக்கவும் தரமான நேரம் செலவழிக்கவேண்டும். நியாயமான சில காரியங்களுக்கும் அவர்கள் மறுப்பு தெரிவிக்காது இது சாத்தியமாகாது. ““இறைவார்த்தைப்பணியிலும்
இறை வேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருப்பதற்காக'' விதவைகளுக்கு உணவளிக்கும் பொறுப்பைக்கூட ஏற்க அப்போஸ்தலர் மறுத்துவிட்டனர் அல்லவா? (அப்போஸ்தலர் 6,2-4). இந்த அப்போஸ்தலத் தத்துவம் இன்று மீறப்பட்டதாலேயே ஆயர் கொழுத்துவிட்டனர், ஆடுகள் மெலிந்துவிட்டன (எசேக்கியல் 34,2, 3).
வேத வாசிப்பு அட்டவணை ஒன்றை வைத்துக்கொண்டு ஓராண்டு அல்லது ஈராண்டு காலத்தில் பைபிளை முழுமையாய் வாசித்து முடிக்கக் கிறிஸ்தவ நண்பர்கள் யாவரையும் வற்புறுத்துகிறேன். நான் வெளியிட்டுள்ள ஓர் அட்டவணையின்படி நீங்கள் பழைய ஏற்பாட்டை ஒரு முறையும், புதிய ஏற்பாடு
மற்றும் சங்கீதங்களை இரு முறையும் ஈராண்டுகளில் வாசித்து முடிக்கலாம். இலவசப் பிரதி கேட்டு
வாங்கிக்கொள்ளுங்கள். வசனத் தியானத்திற்கு ஆராய்ச்சி வேதாகமம் ஒன்று வைத்துக்கொள்ளுங்கள்.
Unless someone guides me என்ற எனது 36-பக்க ஆங்கிலக் குறுநூல் நம்பகமான ஆராய்ச்சி
நூல்களைத் தெரிந்தெடுக்க உங்களுக்குதவும். இதுவும் இலவசம்தான். 2024ஆம் ஆண்டில்
திருவசனத்தின் மூலம் உயிர்மீட்சி அடைவோம் (சங்கிதம் 119,25;,107;154).
வசனம் 31, “நான் மூன்று ஆண்டுகள் இரவும் பகலும் கண்ணிருடன் இடையறாது ஒவ்வொருவருக்கும்
அறிவுறுத்தி வந்ததை நினைத்து விழிப்புணர்வுடனிருங்கள். ”
நமது உக்கிராணத்துவப் பொறுப்பு மூன்று காரியங்களில் உண்டு: தருணம், தாலந்து, தனம். (Time,
Talent, Treasure). அறிவாளிகளிலும் திறமைசாலிகளிலும் பலர் அதிகம் சாதிக்காதிருப்பதற்கு முக்கிய காரணம் நேரத்தைக் கையாளத் தெரியாததே. படித்தவனோ படியாதவனோ, தரித்திரனோ தனவானோ,
ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதும் என்பதே தேவனது ஞானம். சரியான காரியங்களைச் சரியான நேரத்தில் சரியான முறையில் நாம் செய்யவேண்டும். இதுதான் ““காலம் பொன்னானது” என்பதின் பொருள் (எபேசியர் 5,15-17). இவ்வித ஒழுங்கு இல்லையேல் நம்மைக் குறித்த இறைச்சித்தம் நமக்குப் புலப்படாது. எல்லாரும் எல்லாவற்றையும் செய்யவேண்டிய அவசியமில்லை.
பரசியடிக்கக்கூடாது. அவரவரது அழைப்பில் நிற்கவேண்டும் (1 கொரிந்தியர் 7,20,24). புத்தாண்டு
2024இல் நுழையும் இவ்வேளையில் தினசரிக் கால அட்டவணை (aly timetable) ஒன்று தயாரித்துக்கொள்ளுங்கள் ; அசாதாரணச் சூழல் தவிர்த்து மற்ற நாட்களில் இந்த ஒழுங்கைக் கடைப்பிடியுங்கள். பழுத்துக் கொட்டும் மரங்களாவீர்கள்!
உங்களது அனுதினக் கால அட்டவணையில் கடவுளுடன் நேரம் செலவழிப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். வசனமில்லா நாள் சுத்த வேஸ்ட்! துயிலெழுவோரது தியான வாழ்வு பிறரைவிட ஆழ்ந்ததாயிருக்கும். அதற்குப் பிந்தினால் உலகம் சந்தடியாகிவிடும். தேவனுடன் நேரம் செலவழிக்கையில் கைபேசியை (mobilephone) அணைப்பதின் மூலம் அவரை மதியுங்கள் (மத்தேயு 6,6).
குடியரசுத் தலைவரையோ பிரதம மந்திரியையோ பார்க்கச் செல்லும்போது கைபேசியை அணைக்கமாட்டீர்களோ? நமது நேரத்தைக் களவாடும் நவீனத் திருடன் கைபேசிதான் ! அது உங்கள் தலைவனாய் அல்ல, உதவியாளனாய் இருக்கட்டும். தொலைக்காட்சியும் தொல்லையாகிவிடாதபடிப் பார்த்துக்கொள்ளுங்கள். ““சீக்கிரம் தூங்கு ; சீக்கிரம் எழுந்திரு” என்பது இன்னும் பொன்மொழிதான்
(Early to bed, Early to rise!). நாட்குறிப்பேடு (க) எழுதுவது பயன்நிறை பழக்கம். வேலை வேலை என்று குடும்பத்தை மறந்துவிடாதீர். களைத்து இளைத்துப்போனதால் அல்ல, நமக்கு ஒரு தத்துவத்தைப் படிப்பிக்கவே கடவுள் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 2,23; யாத்ராகமம் 20:,8-11; ஏசாயா 40,28).
“தேவனோடு” தினமும் நேரம் செலவழிப்பதுடன், வாரமொருமுறையாவது ““தேவனுக்காய்”” நேரம் செலவழிக்க உங்களுக்குப் பிரியமானதொரு திருப்பணி முயற்சியில் ஈடுபடுங்கள். அவரது தோட்டத்தில் எப்பொழுதுமே வேலையாள் பற்றாக்குறைதான் (மத்தேயு 9,37). அவரது வேலையில் சேர எந்த நேரமும் பிந்தியதல்ல (20,1-7). அவருக்கான பணி எதுவும் குறைந்ததல்ல (1 கொரிந்தியர் 12,18-22).
நற்செய்திப்பிரதிகள் விநியோகித்தல், சிறுவர் சிறுமியர் ஊழியம், கிராமப்புற நற்செய்திப்பணி,
சந்திப்பு ஊழியங்கள், நலிந்தோருக்குத் தானதர்மம் மற்றும் நிவாரணப்பணிகள் போன்றவை
எப்பொழுதும் திறந்திருக்கும் கதவுகள். ““எனக்குத் தொண்டாற்றுபவனை என் தந்தை உயர்த்துவார்”
என்பது இயேசுவின் வாக்கு (யோவான் 12,26).
7. Treasures / செல்வம்
வசனம் 55-55, “எவரது பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை.
எனது தேவைகளுக்காகவும் என்னோடிருந்தோரின் தேவைகளுக்காகவும்
எனது இந்தக் கைகளே உழைத்தன என்பது உங்களுக்குத் தெரியும்.
இவ்விதம் பாடுபட்டு உழைத்து நலிவுற்றோருக்குத் துணை நிற்கவேண்டு மென
அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன்.
அத்துடன், 'பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்துவிடுதலே பேறுடைமை”
என்ற இயேசுவின் கூற்றை நினைவில் வையுங்கள் என்றும் கூறினேன். '”
“கொடிய காலங்கள்'' என்று பவுல் குறிப்பிட்ட கடைசி நாட்களில் தலையோங்கி நிற்பது “பண ஆசை'' என்பதை எவரும் மறுக்க முடியாது (2 தீமோத்தேயு 3,1,2). செல்வச் செழிப்பு எனும் கானல் நீரைத் துரத்திச் செல்லாத நாடே கிடையாது. பொதுவுலகில் மட்டுமல்ல, மார்க்கவுலகிலும் இந்நோய் பரவியுள்ளது. தீர்க்கன் எரேமியாவின் நாட்களிலேயே இந்நிலைதான். இதோ அவரது புலம்பல்
“சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை லாபம் தேடுகின்றனர்; இறைவாக்கினர் முதல் குருக்கள் வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்'' (எரேமியா 6,13).
வணிக நோக்கிலேயே மூழ்கிக்கிடக்கும் இவ்வுலகம் நமக்கு நோவாவின் நாட்களை நினைப்பூட்டுகிறது (மத்தேயு 24,37). தொலைக்காட்சி விளம்பரங்கள் நம்மை அடிமைப்படுத்திவிட்டன.
பிரிய நண்பரே, எச்சூழலிலும் பண ஆசை உங்களில் வேர் கொள்ள இடமளிக்க மாட்டீர்கள் என்று புத்தாண்டு 2024 துவக்கத்திலேயே திட்டமாய்த் தீர்மானித்துவிடுங்கள். ஏற்கனவே பொருளாசை உங்கள் உள்ளிலும் மனதிலும் இடம் பிடித்திருந்தால் எப்படியாவது அதனை உங்கள் இரத்த நாளங்களிலிருந்து கழிவுநீர் போல் அகற்றிவிடுங்கள். “காசேதான் கடவுளடா” எனும் வாசனை வீசும் இடங்களிலிருந்து ஓடோடிவிடுங்கள் (1 தீமோத்தேயு 6,10). “நீதி, தேவபக்தி, விசுவாசம், அன்பு, பொறுமை,
சாந்தகுணம்'' ஆகியவையே பண ஆசைக்கு மாற்று மருந்து (வசனம் 11). ஆன்மீகப்பயிற்சிகளைத் தவறாது மேற்கொண்டு தூயாவியானவரின் இக்கனிகளை உங்கள் வாழ்வில் விளைவியுங்கள்.
பணப் பித்தர்களின் கண்கள் கெட்டுவிடும் என்பதே இயேசுவின் போதனை. அது உங்கள் உடல் (வாழ்வு)
முழுவதையும் இருளில் தள்ளிவிடும் (மத்தேயு 6,19-24).
ஊழியக்காரருக்கு ஒரு வார்த்தை: ஊழியத்திற்காகத்தான் பணமே தவிர, பணத்திற்காய் ஊழியம் அல்ல. ஊழியத் தேவைகளென்றாலும் வணிக முறைகளைக் கையாளாது கர்த்தரை நம்பியிருக்கப் பழகுங்கள். மக்கள்மீது ஆன்மீக ஆசிகளை அள்ளி வீசுவதிலேயே கவனம் செலுத்துங்கள்.
உங்களுக்கான பொருளாதார நலன்களை அறுவடை செய்வது இயல்பாகத் தொடரும் (1 கொரிந்தியர் 9,11).
நீங்கள் சபை மேய்ப்பராயிருந்தால், ““புல்லுள்ள இடங்கள்'” மற்றும் “அமர்ந்த தண்ணீர்கள்'' அருகே உங்கள் மந்தையைத் தொடர்ந்து நடத்திச் செல்லுங்கள் (சங்கிதம் 23,1,2). உங்களது பொருளாதாரத் தேவைகளையும் உடலுக்கடுத்தவைகளையும் பிரதான மேய்ப்பராம் இயேசு பொறுப்பெடுப்பார்.
போதுமான நேரமும் சிரமமும் எடுக்காது நீங்கள் பிரசங்கப்பீடம் ஏறினால் உங்கள் சபையாருக்குமுன் வைக்கோலைத்தான் வீசியெறிவீர்கள். அது குருடருக்குக் குருடர் வழிகாட்டும் நிலைக்குத்தான் கொண்டுபோகும்!
இயேசுவின் கண்கள் இரக்கம் நிறைந்தவையாக, அதிலும் குறிப்பாக எளியோர் பக்கம் திரும்பியவையாக, இருந்தன. '“பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்துவிடுவதே பேராசீர்வாதம்”'
எனும் அவரது கூற்று நற்செய்தி நூல்களில் இல்லை (அப்போஸ்தலர் 20,35). ஆனால் அவரது செயல்பாடுகளில்
இத்தத்துவத்தைச் சீடர்கள் நெடுகவே கண்டிருந்தனர். தனது மற்றும் தனது குழுவினரது தேவைகளுக்காய்ச் சம்பாதித்தது தவிர்த்து, எளியவரைத் தாங்குவதற்காகவும் அவர் கடினமாய் “உழைத்தார்.” 2024 எனும் இவ்வாண்டு துவங்கி, தானதர்மத்திற்காய் நீங்கள் வழங்குவது 50-50 என்ற நிலையை (அதாவது, பாதி எமக்கு, பாதி எளியவர்க்கு என்ற விகிதத்தை) எட்டும்வரை கூடிக்கொண்டேயிருக்கட்டும் (லூக்கா 3,11; 19,8). இதுவே பூரணத்திற்குச் செல்லும் பாதை (லூக்கா 18,22). உபதேசம் மூலமாகவும் உதாரணம் வாயிலாகவும் ““சமத்துவம்'' என்பதைப் பைபிள் போதிக்கிறது என்றே நான் புரிந்துகொள்கிறேன் (2 கொரிந்தியர் 8,13,14; அப்போஸ்தலர் 2,44,45; 4,34,35).
எளியோரை நல்லவர் கெட்டவர் எனப் பிரிக்காதீர்கள் (மத்தேயு 5,45,48). பயனாளிகளைத் தெரிந்தெடுப்பதில் அளவுக்குமீறிக் கவனம் செலுத்துதல் தானதர்மத்தின் வாசனையைக் கெடுத்துவிடும்.
முடிவுரையாக
2024ஆம் ஆண்டில் நுழைகையில் தேவனது அறுவை சிகிச்சை மேசைமீது படுத்துக் கொள்ளுங்கள்; அவர் உங்கள் கண்களிலுள்ள புரையை நீக்கிவிடுவார். உங்கள் பார்வை இனி மங்கலாயிராதபடி கண் மருத்துவராகிய அவர் உங்கள் கண்களில் சொட்டு மருந்து போடுவார்
(வெளிபடுத்தின விஷேசம் 3,18). தேவைப்படுமானால் ““இரண்டாம்'” அல்லது மூன்றாம் தடவையும் அவர் உங்கள் கண்களைத் தொட்டுப் பார்வையை முழுவதும் தெளிவாக்குவார் (மாற்கு 8,22-25). ““பிரகாசமான”' புத்தாண்டு வாழ்த்துக்கள் ! “Bright” New Year!
இச்செய்தியைத் தாராளமாய் உங்கள் கிறிஸ்தவநண்பர்களுக்குப்
புத்தாண்டு வாழ்த்துதலாய் அனுப்பிவையுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்