Treasure buried in the ground

Donate

Thank you! Your donation has been received.

Treasure buried in the ground

0

 






நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷம்


அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான் (மத் 13:44).




இயேசுகிறிஸ்து இதற்கு முன்பே பரலோக ராஜ்யத்தை உவமையாக கூறி விளக்கி இருக்கிறார். அதற்கு உவமையாக அவர் பயன்படுத்திய பொருட்கள் மிகவும் சாதாரணமானவை. கடுகுவிதையையும், புளித்த மாவையும் உவமையாக பயன்படுத்தினார்.



இவை இரண்டுமே எளிய பொருட்கள். சந்தையில் விலை மலிவான பொருட்கள். பரலோக ராஜ்யம் எளிய பொருட்களினால் விளக்கப்பட்டாலும், அது விலைமதிப்பற்றது. இந்த வசனப்பகுதியில் இயேசுகிறிஸ்து பரலோக ராஜ்யத்தை விலைமதிப்பற்ற பெரிய பொருட்களை உவமையாக கூறி விளக்குகிறார்.



பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்திற்கு ஒப்பாயிருக்கிறது. நிலத்திலுள்ள பொக்கிஷத்தை நாம் விரும்பினால் அதை எடுத்து நமக்கு சொந்தமாக்கிக்கொள்ளலாம்.



இயேசுகிறிஸ்துவே மெய்யான பொக்கிஷம். அவரிடத்தில் எல்லா ஐசுவரியமும்

தாராளமாக உள்ளது. பயனுள்ள விலைமதிப்பற்ற அனைத்து பொருட்களுக்கும் அவரே

ஆதாரமாக இருக்கிறார். இயேசுகிறிஸ்துவில் நாம் விசுவாசம் வைத்து நமது உள்ளத்தில்

அவரை ஏற்றுக்கொள்ளும்போது, அவர் தம்முடைய ஐசுவரியங்களை நமக்கு தாரளமாக

தருவார்.



சுவிசேஷம் நிலத்திற்கு ஒப்பாயிருக்கிறது. இது சாதாரண நிலமல்ல. இந்த நிலத்தில்தான் பொக்கிஷம் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலம் வேலி அடைத்து பாதுகாக்கப்பட்டிருக்கும் தோட்டமல்ல. இது ஒரு திறந்த வெளி நிலம். இது நமக்கே உரியது. இந்த நிலத்தில் நாம் எதை கண்டுபிடிக்கிறோமோ அதை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ளலாம்.



நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷத்தை கண்டுபிடிப்பது மிகப்பெரிய காரியம் பொக்கிஷத்தை கண்டுபிடித்தால் அதன் மதிப்பிற்கு அளவேயில்லை. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம் நிலத்தின் வெளிப்பகுதியில் தெரியாது. பூமிக்கடியில் தங்கச்சுரங்கங்களும் வைரச்சுரங்கங்களும் தோண்டப்பட்டிருக்கின்றன. பூமிக்கடியில் தங்கம் புதைந்திருக்கிறது. ஆனால் இந்த சுரங்கங்களின் மேலே உள்ள நிலமோ சாதாரண தரிசு நிலமாகவே இருக்கும். விளைச்சல் இல்லாத காட்டுப்பகுதியாக இருக்கும். இப்படிப்பட்ட நிலத்திற்கு உள்ளேதான் தங்கச்சுரங்கம் உள்ளது.



இந்த உலகத்தில் ஏராளமான புஸ்தகங்கள் உள்ளன. வெளித்தோற்றத்திற்கு பரிசுத்த வேதாகமமும் மற்ற புஸ்தகங்களைப்போல ஒரு சாதாரண புஸ்தகம் போலவே தெரியும். ஆனால் பரிசுத்த வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தால்தான் அதிலுள்ள பொக்கிஷத்தை நாம் கண்டுபிடிக்க முடியும்.




வேதாகமத்தில் நாம் இயேசுகிறிஸ்துவையும், அவர் கொடுக்கும் நித்திய ஜீவனையும் கண்டுபிடிக்கலாம். "வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் நமக்கு நித்திய ஜீவன் உண்டு.


இயேசுவை குறித்து வேதவாக்கியங்கள் சாட்சி கொடுக்கின்றன" (யோவா 5:39). பரிசுத்த வேதாமகத்தை ஆராய்ந்து பார்த்து, வேதவாக்கியங்களில் இயேசுகிறிஸ்துவையும் நித்திய ஜீவனையும் கண்டுபிடிக்கிறவர்கள் பாக்கியவான்கள். இவர்கள் விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.



நிலத்தில் பொக்கிஷம் புதைக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தால்,

அவருக்கு அந்த நிலத்தின் மதிப்பு தெரியும். அந்த நிலத்தின் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதை கிரயத்திற்கு வாங்கிவிடுவார். விலையில் பேரம் பேசி பார்ப்பார். அதன் உண்மையான மதிப்பு என்ன என்பது அவருக்கு தெரியும்.



ஆகையினால் பேரம் சரிவர நடைபெறவில்லை யென்றாலும், அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து அதை தனக்கு சொந்தமாக வாங்கிவிடுவார்.



பொக்கிஷத்தை கண்டுபிடித்தவுடனே அந்த நிலத்தை வாங்கிவிடவேண்டும் என்னும் தீர்மானம் நமது உள்ளத்திற்குள் வந்துவிடும். அதுபோலவே சுவிசேஷத்தில் இயேசுகிறிஸ்துவையும் நித்திய ஜீவனையும் காண்கிறவர்கள், சுவிசேஷத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வார்கள்.


மற்றவர்களால் காணமுடியாத பொக்கிஷம் சுவிசேஷத்தில் புதைந்திருக்கிறது. பொக்கிஷம் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தை ஒருவர் சந்தோஷமாக வாங்குகிறார். தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அதை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளுகிறார்.




இயேசுகிறிஸ்துவை தங்களுடைய இரட்சகராகவும் ஆண்டவராகவும்

பற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்காக, மெய்யான விசுவாசிகள், தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் அற்பமாகவும், குப்பையாகவும் எண்ணி, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றுகிறார்கள்.



தங்களுடைய சரீரப்பிரகாரமான

ஜீவனைவிட இயேசுகிறிஸ்து கொடுக்கும் நித்திய ஜீவனே மேன்மையானது என்பதை புரிந்துகொண்டு அவரை பின்பற்றுகிறார்கள்.






from வேதாகம களஞ்சியம் umn ministry 




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*