ஜலப்பிரளத்திற்கு முன்பு

0

 



ஜலப்பிரளத்திற்கு முந்தின முற்பிதாக்கள் (Ancestors) ஆதி 5:6-20


ஆதி 5:6. சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான். 

சேத்துக்கு 105 வயதானபோது அவனுக்கு ஏனோஸ் என்ற மகன் பிறந்தான். - ஆதியாகமம் 5:6 


ஆதி 5:7. சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 



ஏனோஸ் பிறந்த பிறகு சேத் 807 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். - ஆதியாகமம் 5:7 



ஆதி 5:8. சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான். 

சேத் மொத்தம் 912 ஆண்டுகள் வாழ்ந்து பிறகு மரணமடைந்தான். - ஆதியாகமம் 5:8 



ஆதி 5:9. ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான். 

ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்கு கேனான் என்ற மகன் பிறந்தான். - ஆதியாகமம் 5:9 



ஆதி 5:10. ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். 

கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். - ஆதியாகமம் 5:10 



ஆதி 5:11. ஏனோசுடைய நாளெல்லாரும் தொளாயிரத்து ஐந்து வருஷம் அவன் மரித்தான். 

ஏனோஸ் 905 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் மரணமடைந்தான். - ஆதியாகமம் 5:11 



ஆதி 5:12. கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.

கேனானுக்கு 70 வயதானபோது அவனுக்கு மகலாலேயேல் என்ற மகன் பிறந்தான். - ஆதியாகமம் 5:12 



ஆதி 5:13. கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 

மகலாலேயேல் பிறந்த பிறகு கேனான் 840 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். - ஆதியாகமம் 5:13 



ஆதி 5:14. கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.

ஆகவே கேனான் 910 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். - ஆதியாகமம் 5:14 



ஆதி 5:15. மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.

மகலாலேயேல் 65 வயதானபோது அவனுக்கு யாரேத் என்ற மகன் பிறந்தான். - ஆதியாகமம் 5:15 



ஆதி 5:16. மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 

யாரேத் பிறந்த பின் மகலாலேயேல் 830 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். - ஆதியாகமம் 5:16 



ஆதி 5:17. மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

மகலாலேயேல் 895 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். - ஆதியாகமம் 5:17 



ஆதி 5:18. யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான். 

யாரேத்துக்கு 162 வயதானபோது அவனுக்கு ஏனோக் என்ற மகன் பிறந்தான். - ஆதியாகமம் 5:18 



ஆதி 5:19. யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

ஏனோக் பிறந்த பின் யாரேத் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். - ஆதியாகமம் 5:19 



ஆதி 5:20. யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான். 

யாரேத் மொத்தம் 962 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். - ஆதியாகமம் 5:20 



இந்தப் பூமியில் ஜலப்பிரளயம் உண்டாவதற்கு முன்பு ஐந்து முற்பிதாக்கள் (Ancestors) இருந்தார்கள். அவர்களைப்பற்றிய விவரம் இந்தவசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரம் வருமாறு : 1. சேத் 2. ஏனோஸ் 3. கேனான் 4. மகலாலெயேல் 5. யாரேத். 


இந்த முற்பிதாக்களைப்பற்றி (Ancestors) விசேஷமாய்ச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் அவர்கள், அவர்களுடைய காலங்களில் கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரைப்பற்றிய ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கினார்கள்.



முற்பிதாக்களைப்பற்றிச் (Ancestors) சொல்லப்படும்போது, ஏனோக்கைத் தவிர, மற்ற எல்லோரும் மரித்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தார்கள் என்னும் விவரமும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் உயிரோடிருந்து, தங்களுடைய ஜீவியகாலம் முடிந்தபின்பு மரித்தார்கள்.



ஆதாமுக்கும், அவருடைய சந்ததியில் வருகிற எல்லோருக்கும் மரணம் வருகிறது. அவர்கள் சரீரத்தில் எவ்வளவுதான் ஆரோக்கியமாகயிருந்தாலும், அவர்கள் இந்தப் பூமியில் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாலும், அவர்கள் மரிக்கவேண்டிய நாள் வரும்போது, அவர்கள் மரித்துப்போகிறார்கள். ஒரு தரம் பிறப்பதும், ஒரு தரம் மரிப்பதும் எல்லா மனுஷருக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறது. 


மனுஷன் ஞானியாகயிருக்கலாம். அவன் அரசியல் தலைவனாகயிருக்கலாம். அவன் விவேகியாகவும் ஐசுவரியவானாகவும் இருக்கலாம். அவர்களும் மரணத்திற்கு தப்பிக்க முடியாது. ஒருவன் சமுதாயத்தில் மிகவும் முக்கியமானவனாகயிருக்கலாம். அவன் அதிககாலம் உயிரோடிருக்கவேண்டுமென்று ஜனங்கள் விரும்பலாம். மனுஷன் எவ்வளவுதான் பிரயோஜனமுள்ளவனாயிருந்தாலும், அவனுக்கும் மரணம் வருகிறது.


பூர்வகாலத்திலே முற்பிதாக்கள் (Ancestors) அதிக வருஷங்களுக்கு உயிரோடிருந்தார்கள். ஆதாம் உயிரோடிருந்தது தொளாயிரத்தி முப்பது வருஷம். சேத் உயிரோடிருந்தது தொளாயிரத்து பன்னிரண்டு வருஷம். ஏனோஸ் உயிரோடிருந்தது தொளாயிரத்து ஐந்து வருஷம். கேனான் உயிரோடிருந்தது தொளாயிரத்து பத்து வருஷம். மகலாலெயேல் உயிரோடிருந்தது எண்ணூற்று தொண்ணூற்றைந்து வரும். யாரேத் உயிரோடிருந்தது தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம். 



பூர்வகாலத்து முற்பிதாக்கள் (Ancestors) இதுபோல அதிக வருஷங்களுக்கு உயிரோடிருந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவர்களாயிருந்தார்கள். 

கர்த்தர் இவர்களுடைய ஆயுசுகாலத்தை கூட்டிக்கொடுத்து, இவர்களை 

அதிகமாய் ஆசீர்வதித்தார். 



சேத்தின் வம்ச வரலாற்றிலிருந்து, முதலாவது பிறந்த ஆண் மகனைப் பற்றியே வம்ச வரலாற்றில் முதலாவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு முன்பாக பெண்பிள்ளைகள் பிறந்திருந்தாலும் ஆண் பிள்ளைகளின் பெயரே முதலாவதாகக் குறிப்பிடப்படுவது யூதவம்ச வரலாற்றின் வழக்கமாகும்.



ஆதாம், நோவா ஆகியோருக்கு இடையில் வரும் பெயர்களில் யாரேத்தின் பெயர் இரண்டாவது பாதியில் முதலாவதாக வருகிறது. யாரேத்தின் குமாரனாகிய ஏனோக்கின் நாளில் துன்மார்க்கர் மீதும், தேவபக்தியற்ற சந்ததியார் மீதும் ஜலப்பிரளயம் நியாயத்தீர்ப்பாக வரும் என்று கர்த்தர் முன்னறிவித்தார். 



யாரேத் என்னும் பெயர் தீர்க்கதரிசனப் பொருளுடையது. கீழே தள்ளுதல், தாழ்த்துதல் என்பது இதன் பொருள். ஜலப்பிரளயத்தினால் சந்ததியார் கீழே தள்ளப்படுவார்கள் அல்லது அழிக்கப்படுவார்கள் என்பது இதன் பொருளாகும்.




from வேதாகம களஞ்சியம் https://ift.tt/3yBS9xl
via IFTT Umn ministry 


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*