மல்கியா 4ஆம் அதிகாரம் விளக்கம்

0



மல்கியா 4ஆம் அதிகாரம் விளக்கம்

தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்புகிற யூதர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் (மல் 4:1-3). மல்கியா தீர்க்கதரிசி எருசலேமின்  அழிவைப்பற்றி முன்னறிவிக்கிறார். யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தை ஆசரிக்கவேண்டும் (மல் 4:4). எலியா தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தர்  அவர்களோடு பேசுவார். எலியா தீர்க்கதரிசி யோவான்ஸ்நானனுக்கு அடையாளமாயிருக்கிறார் (மல் 4:5,6).

சூளையைப்போல எரிகிற நாள் வரும் சக 4:1-3

மல் 4:1. இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 



மல் 4:2. ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். 

மல் 4:3. துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும். அந்த நாள் அக்கினி ஸ்தம்பம்போலவும், மேகஸ்தம்பம் போலவும் இருக்கும். இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திலே பிரயாணம் செய்தபோது, கர்த்தருடைய பிரசன்னம் அவர்களுக்கு அக்கினி  ஸ்தம்பமாயும் மேகஸ்தம்பமாயும் இருந்தது. மேகஸ்தம்பத்தின் இருண்ட பகுதி எகிப்தியருக்கு நேராக திரும்பியிருந்தது. எகிப்தியர்கள் கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்.

அக்கினி ஸ்தம்பத்தின் பிரகாசமான பகுதி  இஸ்ரவேல் புத்திரருக்கு நேராக திரும்பியிருந்தது. அவர்கள் கர்த்தரை விசுவாசத்தோடு பின்பற்றினார்கள். அக்கினி ஸ்தம்பம் அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்தது.

""இதோ, சூளையைப்போல  எரிகிற நாள் வரும்'' (மல் 4:1) என்று மல்கியா  தீர்க்கதரிசி சொல்லுகிறார். இந்த வாக்கியம் இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையையும்,  இரண்டாம் வருகையையும் குறிக்கிறது. 

இயேசுகிறிஸ்துவின் இரண்டு வருகைகளிலும், அவர் தமக்கு விரோதமாக கலகம்பண்ணுகிறவர்களை பட்சிக்கிற அக்கினியாகயிருப்பார். கர்த்தருடைய நாள் வரப்போகிறது. அந்த நாள் சூளையைப்போல எரியும். அந்த நாள் அவர்களை சுட்டெரிக்கும்.  கர்த்தருடைய நாள் அவருடைய கோபத்தின் நாளாகயிருக்கும்.  

கர்த்தர் ஒவ்வொரு மனுஷனுடைய சுபாவத்தையும் அறிந்து வைத்திருக்கிறார். மனுஷர் மத்தியிலே யாரெல்லாம்  அகங்காரிகளாகயிருக்கிறார்கள் என்றும், யாரெல்லாம் அக்கிரமம் செய்கிறார்கள் என்றும் கர்த்தர் அறிந்து வைத்திருக்கிறார். கர்த்தர் ஒவ்வொரு மனுஷனுடைய இருதயத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார்.

அகங்காரிகள் யாவரும், அக்கிரமம் செய்கிற யாவரும் கர்த்தருடைய அக்கினியினால்  துரும்பாயிருப்பார்கள். வரப்போகிற கர்த்தருடைய நாள் அவர்களை சுட்டெரிக்கும்.  கர்த்தருடைய அக்கினியினால் அவர்கள் பட்சிக்கப்படுவார்கள். அக்கிரமக்காரருடைய அழிவுக்கு அவர்களே காரணம். அவர்கள்  தங்களுடைய அகங்காரத்தினாலும், அக்கிரமத்தினாலும் கர்த்தருடைய அக்கினியினால் பட்சிக்கப்பட்டுப்போனார்கள். 

அகங்காரிகளும் அக்கிரமக்காரர்களும் எரிகிற அக்கினிக்கு துரும்பைப்போல இருப்பார்கள். காய்ந்த விறகுகளைப்போலவும்,  காய்ந்து போன சருகுகளைப்போலவும் அவர்கள் அக்கினியிலே முற்றிலுமாய் எரிந்துபோவார்கள். 





இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காதவர்கள்,  அவருக்கு விரோதமாக எதிர்த்து நின்று கலகம்பண்ணுகிறார்கள் ஆகியோர் அக்கினிக்கு முன்பாக எரிகிற முட்செடிகளைப்போலவும்,  காய்ஞ்செறிகளைப் போலவும் இருப்பார்கள்.

""உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்'' (ஏசா 27:4). 

""வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும்'' (மல் 4:1) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

கர்த்தர் இந்த உலகத்தில் ஊழியம் செய்த நாட்களிலே            பரிசேயருடைய அக்கிரமத்தினிமித்தமாகவும், அகங்காரத்தினிமித்தமாகவும் அவர்களைக் கடிந்துகொண்டார்.  யூதர்களில் அநேகர் அக்கிரமக்காரராயிருந்தார்கள். கிறிஸ்துவானவர் அவர்களையும் கடிந்துகொண்டார்.  

பரிசேயரும் அக்கிரமக்காரரும் அக்கினியிலே அழிந்துபோவார்கள். அந்த அக்கினி கர்த்தரால் அனுப்பப்பட்ட அக்கினி. அவர்கள் அக்கினியிலே பதரைப்போல எரிந்துபோவார்கள். பரிசேயரும்,  வேதபாரகரும் கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படியவில்லை.  

அவர்கள்  முன்னோர்களுடைய பாரம்பரியத்தையும், தங்களுடைய சொந்த கற்பனைகளையும் கர்த்தருடைய பிரமாணத்தோடு கலந்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள். இதனால் கர்த்தருடைய கோபம் அவர்கள்மீது வருகிறது. நீதியைச் சரிக்கட்டும் நாட்களில் அவர்கள் அழிந்துபோவார்கள். 

""அப்பொழுது யூதேயாவி-ருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும்,       எருசலேமி-ருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களி-ருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாம-ருக்கவும் கடவர்கள். எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி  நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே'' (லூக் 21:21,22). 

கர்த்தருடைய நாளில் அகங்காரிகளும்,  அக்கிரமம் செய்கிறவர்களும் அழிந்துபோவார்கள். ஆனாலும்  கர்த்தருடைய நாமத்திற்கு பயந்திருக்கிறவர்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும் (மல் 4:2). கர்த்தருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்கள்மீதும்,  கர்த்தருடைய நாமத்திற்கு பயந்திருக்கிறவர்கள்மீதும் அவருடைய கிருபையும், இரக்கமும், ஆறுதலும், ஆசீர்வாதமும் வந்து தங்கும்.

""என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்'' (மல் 4:2) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

கர்த்தருடைய நாமத்திற்கு  பயந்தவர்களுக்கு, கர்த்தருடைய நாள்   பிரகாசமான நாளாகவும், ஆரோக்கியமான நாளாகவும் இருக்கும். பூமியின்மீது சூரியன் உதிக்கும்போது, பூமியிலே மறுபடியும் வெளிச்சமுண்டாகும். இருள் நீங்கும்.  

அதுபோலவே, கர்த்தருடைய நாமத்திற்கு பயந்திருக்கிறவர்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அவர்களுடைய ஜீவியத்தில் காணப்படுகிற இருள் அவர்களை விட்டு நீங்கும். அவர்களுக்கு சகலமும் பிரகாசமாயிருக்கும். 

""அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன். தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்:  நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது. லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது''  (ஆதி 19:21-23).

லோத்தின் காலத்திலே  சோவார் என்னும் ஊர் விசேஷித்த பட்டணமாயிருந்தது.  கர்த்தருடைய கிருபை சோவார் ஊரின்மீது தங்கியது. லோத்து சோவாருக்குள் வரும்போது  பூமியின்மேல் சூரியன் உதித்தது. 

கர்த்தருடைய நாள் வரும்போது, இந்தப் பூமியிலுள்ள அகங்காரிகளும், அக்கிரமக்காரரும் தங்கள் ஆவியிலே  முறிந்துபோவார்கள். அவர்களுடைய இருதயம் பயத்தினால் நடுங்கும். ஆனால் கர்த்தருக்கு பயந்தவர்களோ, வெளியே புறப்பட்டுப்போய்,  கொழுத்த கன்றுகளைப்போல வளருவார்கள். 

""இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்'' (லூக் 21:28). 

நீதியின் சூரியன் என்னும் வாக்கியம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் குறிக்கிறது.  இந்த வாக்கியம் இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையையும் குறிக்கும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய முதலாம்  வருகையில் காணாமல் போனவர்களைத் தேடி கண்டுபிடித்து இரட்சிப்பதற்காக, இந்தப் பூமிக்கு வந்தார். கிறிஸ்துவானவரே இந்த உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறார். அவர் மனுஷருக்கு ஒளியாகயிருக்கிறார்.

""அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது'' (யோவா 1:4). 

இந்தப் பூமிக்கு  சூரியன் வெளிச்சத்தைக் கொடுக்கிறது. மனுஷருடைய ஆத்துமாக்களுக்கு, நீதியின் சூரியனாகிய இயேசுகிறிஸ்து வெளிச்சத்தைக் கொடுக்கிறார். கிறிஸ்துவானவர் மனுஷருக்கு ஒளியாகயிருக்கிறார்.  சூரியனுடைய வெளிச்சம் இல்லையென்றால், இந்தப் பூமி காரிருளில் மூழ்கிப்போயிருக்கும். அது வெளிச்சமில்லாமல் இருளாகயிருக்கும்.

நீதியின் சூரியனாகிய இயேசுகிறிஸ்து கொடுக்கும் வெளிச்சம் மனுக்குலத்திற்கு கிடைக்கவில்லையென்றால்,  மனுஷருடைய ஜீவியம் இருளில் மூழ்கிப்போயிருக்கும். கிறிஸ்துவின் மகிமைப்பிரகாசத்தினால் மனுக்குலத்திற்கு வெளிச்சம் உண்டாயிருக்கிறது. 

கிறிஸ்துவானவர்  நீதியின் சூரியனாகயிருக்கிறார். அவர்  நீதியுள்ள இரட்சகராகவும் இருக்கிறார். நீதி என்னும் வார்த்தைக்கு  கிருபை, இரக்கம் என்றும் பொருள் சொல்லலாம். கிறிஸ்துவானவர் தம்முடைய நீதியோடு  நம் மத்தியில் வந்திருக்கிறார். அதாவது அவர் தம்முடைய கிருபையோடு நம் மத்தியிலே வந்திருக்கிறார்.  நீதியின் சூரியன், கிருபையின் சூரியனாகவும் மனுக்குலத்திலே உதிக்கிறார். 





கர்த்தருடைய நாமத்திற்கு பயந்தவர்களை,  அவருடைய கிருபையும் அன்பும் ஆளுகை செய்யும்.  அவர்களுடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுவார்.  இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை, அவருடைய நாமத்திற்கு பயந்தவர்கள் எல்லோருக்கும்,  சூரிய உதயம்போல மகிமையுள்ளதாகயிருக்கும்.  

கிறிஸ்துவானவர் சூரியனைப்போல இந்த உலகத்திலே வந்து உதிப்பார்.  இருளாகயிருக்கும் இந்த உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுப்பார். வெளிச்சத்தோடு  மனுக்குலத்திற்கு ஆரோக்கியத்தையும் கொடுப்பார். கிறிஸ்துவாகிய சூரியன் இந்தப் பூமியில் உதிக்கும்போது, இங்கே  பரவியிருக்கும் வியாதிகளெல்லாம் நீங்கிப்போகும். நீதியின் சூரியனாகிய இயேசுகிறிஸ்துவினுடைய செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். 

""சூரியன் உதிக்கும்போது,  வியாதிகளெல்லாம் நீங்கிப்போகும்'' என்று  யூதர்கள் மத்தியில் ஒரு பழமொழி சொல்லப்படுகிறது. கிறிஸ்துவானவர் இந்த உலகத்திற்கு பரமவைத்தியராக வந்திருக்கிறார்.  அவர் வைத்தியர் மாத்திரமல்ல, கிறிஸ்துவானவர் வியாதிகளைக் குணமாக்குகிற பிரதான ஒளஷதமாகவும் இருக்கிறார். கிறிஸ்துவே கீலேயாத்தின் தைலமும், காயத்திற்கு மருந்து கட்டுகிற வைத்தியருமாயிருக்கிறார். 

சூரியன் பூமியில் உதிக்கும்போது,   அது பூமியைச் சுற்றி வருகிறது. அதுபோலவே,  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, இந்தப் பூமியிலிருந்த நாட்களிலெல்லாம், அவர்      நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். அவர் மனுஷருடைய எல்லா வியாதிகளையும் குணப்படுத்தினார்.  அவர்களுடைய பலவீனங்களையெல்லாம் நீக்கினார்.

இயேசுகிறிஸ்து மனுஷருடைய சரீரங்களில்   காணப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தினார். சரீரத்தின் வியாதிகளை மாத்திரமல்ல,  கிறிஸ்துவானவர் மனுஷருடைய ஆத்துமாவின் வியாதிகளையும் குணப்படுத்துகிறார். ""நீங்கள்  வெளியே புறப்பட்டுப்போவீர்கள்'' (மல் 4:2) என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த வாக்கியத்திற்கு, வியாதிப்பட்டிருக்கிறவர்கள் குணமடைந்து,  தங்களுடைய அன்றாட வேலைகளைக் கவனிப்பதற்காக, வெளியே புறப்பட்டுப்போவார்கள் என்று பொருள்.  

நாம் மரிக்கும்போது, நம்முடைய சரீரங்களிலிருந்து, நம்முடைய ஆத்துமா வெளியே புறப்பட்டுப்போகிறது. நாம் உயிர்த்தெழும்போது, நம்முடைய சரீரங்கள், கல்லறைகளிலிருந்து உயிர்த்தெழுந்து வெளியேறுகிறது.  கைதிகள் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே புறப்பட்டு போவதுபோல, வியாதியஸ்தர்கள் குணமடைந்து, வெளியே புறப்பட்டுப்போவார்கள். கைதிகள் சிறைச்சாலையிலே இருளிலிருந்தார்கள். அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள்.  விடுவிக்கப்பட்டவர்கள் இனிமேல் வெளிஉலகத்தின் வெளிச்சத்தைப் பார்ப்பார்கள். அவர்களுக்கு பூரண விடுதலை உண்டாயிருக்கும். 

வெளியே புறப்பட்டுப்போகிறவர்கள்,  ""வளருவார்கள்''. அவர்கள் தங்களுடைய பழைய ஆரோக்கியத்தையும், பழைய விடுதலையையும் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள்  கிருபையிலும் அறிவிலும் வளர்ச்சி பெறுவார்கள். ஆவிக்குரிய ரீதியாக பெலப்படுவார்கள்.

கர்த்தருடைய கிருபையே நமக்கு  ஞானத்தையும், பெலத்தையும், நன்மையையும் கொடுக்கிறது.  அதே கிருபையினாலேயே, நாம் கர்த்தரைப்பற்றிய ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.  நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெறுகிறோம். மல்கியா தீர்க்கதரிசி, இந்த வளர்ச்சியைப்பற்றிச் சொல்லும்போது, ""நீங்கள் கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்'' (மல் 4:2) என்று சொல்லுகிறார். கன்றுக்குட்டி சீக்கிரத்தில் வளரும். அது பெலமுள்ளதாக வளரும். அதன் வளர்ச்சி பிரயோஜனமுள்ளதாகயிருக்கும்.

""நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய்,  கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்'' என்னும் வாக்கியத்திற்கு, ""நீங்கள் கன்றுக்குட்டிகளைப்போல, தொழுவத்திலிருந்து  புறப்பட்டு, சந்தோஷத்தினால் குதித்து விளையாடுவீர்கள்'' என்று வேதபண்டிதர்கள் பொருள் சொல்லுகிறார்கள். கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட்டால்,  அது துள்ளிக்குதித்து விளையாடும். அதுபோலவே, நம்முடைய ஆத்துமா சாத்தானுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படும்போது, அது சந்தோஷப்பட்டு களிகூரும். 

""நீங்கள் துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள்  உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள்'' (மல் 4:3) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். விசுவாசிகள்  உலகத்தைக் கலக்குகிறவர்கள். அவர்கள் ஜெயம் கொள்ளுகிறவர்கள்.

மனுஷருடைய  பாவசுபாவங்களையும்,  பாவமான இச்சைகளையும், சமாதானத்தின் தேவன் தம்முடைய பாதபடியிலே மிதித்துப்போட்டார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சாத்தானை தம்முடைய குதிங்காலினாலே நசுக்கிப்போட்டார். சாத்தானுடைய தோல்வியைப் பார்த்து, கர்த்தருடைய பரிசுத்தவான்கள்  மிகுந்த சந்தோஷமடைகிறார்கள். இந்த ஜெயம் கர்த்தரால் உண்டாயிற்று.

மனுஷர் தங்களுடைய சுயமுயற்சிகளினால், தங்களுடைய பாவங்களிலிருந்து விடுதலை பெறமுடியாது.  மனுஷரால் தங்களைத் தாங்களே இரட்சித்துக்கொள்ள முடியாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே மனுஷரை இரட்சிக்கிறவர்.  அவரே இரட்சகர். நம்முடைய ஆத்துமாவுக்கு கிடைத்த வெற்றி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் நமக்கு கிடைத்த வெற்றியாகும்.  

கர்த்தர்  தம்முடைய விசுவாசிகளுக்கு  கொடுக்கும் பலத்தினால், அவர்கள் துன்மார்க்கரை மிதிப்பார்கள். கர்த்தரே சாத்தானை மிதிக்கிறார். சாத்தான்  கர்த்தருடைய உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பான். கர்த்தர் சாத்தானை ஜெயிக்கும்போது, அவர் மூலமாய் நமக்கும் சாத்தான்மீது ஜெயமுண்டாகும். நாமும் துன்மார்க்கரை மிதிப்போம். 

துன்மார்க்கர் நம்முடைய உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள்.  இது விசுவாசிகளாகிய நமக்கு கிடைத்திருக்கிற சிலாக்கியம். இது கர்த்தருடைய நாமத்திற்கு  பயந்திருக்கிறவர்கள்மேல், நீதியின் சூரியன் உதிப்பதினால் கிடைக்கும் ஆசீர்வாதம்.





சூளையைப்போல எரிகிற நாள் வரும் (மல் 4:1). இது கர்த்தருடைய நாளாகும். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நாள் ""கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்'' என்று அழைக்கப்படுகிறது. (மல் 4:5).

இந்த நாள் சூளையைப்போல எரியும். அகங்காரிகளையும், அக்கிரமம் செய்கிற யாவரையும் இந்த அக்கினி சுட்டெரிக்கும். அவருடைய சரீரம் முழுவதுமாக எரிந்துபோகும்.  எசே 38:17-23 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிற பிரகாரம் அக்கினியும், கந்தகமும் வருஷிக்கப்படும். கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடு வரும்போது ஜுவாலித்து எரிகிற அக்கினியோடு வருவார்.  (2தெச 1:7-10) இந்த அக்கினி அதைப்போன்று ஜுவாலித்து எரியும். இது நரகத்தின் அக்கினியைக் குறிக்கவில்லை. இது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அர்மெகதோனில் யுத்தம் நடைபெறும் நாளைக் குறிக்கிறது. இந்த அக்கினி சோதோமையும், கொமோராவையும் பட்சித்த அக்கினியைப் போன்றது.  (ஆதி 19:24) இது இஸ்ரவேல் புத்திரரில் பலரைப் பட்சித்த அக்கினியைப் போன்றது. (எண் 11:1). 

துன்மார்க்கர் அனைவரும் ஒரே நாளில் அக்கினியில் தள்ளப்படமாட்டார்கள். இங்கு அவர்கள் எல்லோரும் சுட்டெரிக்கப்படுகிறார்கள். நரகத்திற்குத் துன்மார்க்கர் ஒவ்வொருவராக அனுப்பப்படுவார்கள். இரண்டாம் உயிர்த்தெழுதலுக்குப் பின்பே துன்மார்க்கர் நரகத்திற்குப் போவார்கள். அங்கு அவர்கள் எரிகிற அக்கினியில் தள்ளப்படுவார்கள். அங்கு அவர்கள் வேகமாட்டார்கள். இரவும், பகலும் நரகத்தின் அக்கினி அவர்களை வாதிக்கும்.                 

இந்த வசனப்பகுதியில் கூறப்பட்டிருக்கும் அக்கினி சரீர மரணத்தை உண்டாக்கும் அக்கினியாகும். இரண்டாம் உயிர்த்தெழுதல் நடைபெறும் வரையிலும் ஆவியும், ஆத்துமாவும் மட்டுமே பாதாளத்திற்கு அனுப்பப்படும்.  (லூக்கா 16:19-21).

 இயேசு கிறிஸ்துவே நீதியின் சூரியனாக இருக்கிறவர் (மல் 4:2). தம்முடைய இரண்டாம் வருகையின்போது இயேசு கிறிஸ்து பூமியிலுள்ள அனைவருக்கும் ஆரோக்கியத்தைத் தருவார். அவர் ஆளுகை செய்யும்போது யாரும் வியாதியில் இருக்கமாட்டார்கள். (ஏசா 33:24; ஏசா 35:5-7; எசே 47:12).

""செட்டைகள்''  (மல் 4:2) என்பதற்கான எபிரெய வார்த்தை ""கனாப்''   என்பதாகும். இந்த வார்த்தைக்கு சுற்றி மூடியிருப்பது என்று பொருள். இயேசு கிறிஸ்துவிடமிருந்து சுகமாக்கும் ஒளிக்கதிர்கள் புறப்பட்டுப்போகும். இவை மனுஷரைச் சுற்றி மூடும். இந்தக் கதிர்கள் பூமியிலுள்ள மனுஷர் அனைவரையும் குணமாக்கும்.

   அர்மெகதோன் யுத்தத்தில் இஸ்ரவேல் புத்திரர் துன்மார்க்கரை மிதிப்பார்கள் (மல் 4:3). வானத்திலிருந்து கந்தகமும், அக்கினியும் பூமியில் விழும். இதனால் துன்மார்க்கர் சாம்பலாவார்கள் (எசே 38:17-22; 2தெச 1:7-10).

கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் மல் 4:4-6

மல் 4:4. ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான்   கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும், நியாயங்களையும் நினையுங்கள். 

மல் 4:5. இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு  முன்னே நான் உங்களிடத்திற்கு எ-யா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். 

மல் 4:6. நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.  

மல்கியா தன்னுடைய தீர்க்கதரிசன புஸ்தகத்திற்கு முடிவுரை எழுதுகிறார். பழைய ஏற்பாட்டுக்காலத்து ஜனங்களுக்கு,  போதுமான அளவு தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருக்கிறது. தீர்க்கதரிசனத்தின் ஆவியானவர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு, தம்முடைய வார்த்தைகளையெல்லாம்,  தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய், ஏராளமாய்ச் சொல்லியிருக்கிறார். 

கர்த்தர் இனிமேல்,  புதியஏற்பாட்டுக்காலத்திலே தம்முடைய சுவிசேஷத்தின் மூலமாய்ப் பேசுவார். அதுவரையிலும் பழைய ஏற்பாட்டுக்காலத்து தீர்க்கதரிசனங்கள், இஸ்ரவேல் புத்திரருக்கு போதுமானதாயிருக்கும்.

புதிய ஏற்பாட்டுக்காலத்தில்,  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய சுவிசேஷத்தின் மூலமாய்ப் பேசுவதற்கு  முன்பாக, இஸ்ரவேல் வம்சத்தார் இரண்டு காரியங்களைக் கைக்கொள்ளவேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவையாவன: 1. மோசேயின் நியாயப்பிரமாணத்தை மறந்துவிடாமல் நினைவுகூரவேண்டும்.              2. இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக விசுவாசத்தோடு காத்திருக்கவேண்டும். 

 ""ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும், நியாயங்களையும் நினையுங்கள்'' (மல் 4:4) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

கர்த்தர் மோசேயைக் குறித்து நல்ல வார்த்தைகளைச் சொல்லுகிறார். கர்த்தர் மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாய், மோசேயை, ""என் தாசன்'' என்று அழைக்கிறார்.  கர்த்தர் நீதிமான்களை நித்திய காலத்திற்கும் நினைத்துப் பார்ப்பார்.  

கர்த்தர் மோசேயைக் கனம்பண்ணுவதுபோலவே,  மோசேயின் நியாயப்பிரமாணத்தையும் கனம்பண்ணுகிறார். கர்த்தரே தம்முடைய தாசனாகிய மோசேக்கு,  நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும், நியாயங்களையும் கற்பித்தார்.  

நாம்  மோசேயின் நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இது கர்த்தருடைய கட்டளை. கர்த்தர் இந்தப் பிரமாணங்களை நமக்காகவே கொடுத்திருக்கிறார். அவர் இஸ்ரவேலர் எல்லாருக்காகவும்   நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும், நியாயங்களையும் கொடுத்திருக்கிறார். விசுவாசிகளாகிய நாமே ஆவிக்குரிய இஸ்ரவேலாயிருக்கிறோம்.  

கர்த்தர் இஸ்ரவேலோடு உடன்படிக்கை பண்ணியிருக்கிறார்.  கர்த்தர் இஸ்ரவேலுக்கு வாக்குப்பண்ணியிருக்கிற ஆசீர்வாதங்கள்,  நமக்கும் கிடைக்கவேண்டுமென்றால், நாமும், இஸ்ரவேலுக்கு கர்த்தர் கொடுத்திருக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவேண்டும். 

""அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்'' (எபி 8:10). 

""என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும், நியாயங்களையும் நினையுங்கள்'' (மல் 4:4) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நம்முடைய மனச்சாட்சி  கர்த்தர் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும், நியாயங்களையும் நினைக்கவேண்டும். 

நமக்கு  நியாயப்பிரமாணத்தைப்பற்றிய அறிவு  அதிகமாயிருந்தாலும், நாம் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்.  நம்முடைய அன்றாட ஜீவியத்தில் நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினைவுகூரவும் வேண்டும், அவற்றிற்கு கீழ்ப்படியவும் வேண்டும். 

நாம் தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்களை வாசிக்கிறோம். அவர்கள்  இனிமேல் வரப்போகிற சம்பவங்களை தீர்க்கதரிசனமாய்ச் சொல்லியிருக்கிறார்கள். தீர்க்கதரிசன ஆகமங்களை  தியானிக்கிறவர்கள், மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், நான்கு சுவிசேஷங்களையும் நினைவுகூருவார்கள்.

மல்கியா தீர்க்கதரிசியின் காலத்திற்கு பின்பு,  யூதமார்க்கத்தின் சரித்திரத்திலே, சிறிதுகாலத்திற்கு தீர்க்கதரிசனம் நிறுத்தப்பட்டது.  கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தார் மத்தியிலே, ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும், தம்முடைய தீர்க்கதரிசிகளில் யாரையும் அனுப்பவில்லை. சுவிசேஷத்தின்  காலம் ஆரம்பமாகும் வரையிலும், தீர்க்கதரிசனத்தின் ஆவியானவர், ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.  

தீர்க்கதரிசனம் வெளிப்படுத்தப்படாத இந்தக் காலத்தில், ஜனங்கள் மோசேயின் நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினைவுகூரவேண்டும். நியாயப்பிரமாணத்தில் கூறியிருக்கிற  கட்டளைகளுக்கு கீழ்ப்படியவேண்டும். அதன் நியாயங்களைக் கைக்கொள்ளவேண்டும். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கிற வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கவேண்டும். 

நம்முடைய கைகளில் பரிசுத்த   வேதாகமம் இருக்கிறது. இதில் கர்த்தருடைய வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கிறது. நாம்  கர்த்தருடைய வேதவாக்கியத்தைத் தியானித்து, கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கவேண்டும். கர்த்தருடைய வழியிலே நடக்கவேண்டும்.  திசைமாறிப்போய்விடக்கூடாது.  

பழைய ஏற்பாட்டுக்காலத்து பரிசுத்தவான்கள், மேசியாவின் வருகையை,  விசுவாசத்தோடு எதிர்பார்க்கவேண்டும். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதையும், இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதையும்   பழைய ஏற்பாட்டுக்காலத்து பரிசுத்தவான்கள் விசுவாசிக்கவேண்டும். இந்த விசுவாசம் அவர்களுக்குள் வளர்ச்சி பெறவேண்டுமென்றால், அவர்கள்  மோசேயின் நியாயப்பிரமாணத்தை நினைவுகூரவேண்டும். அதை தியானிக்கவேண்டும். அதைக் கைக்கொள்ளவேண்டும். 

பழைய ஏற்பாட்டுக்காலத்து பரிசுத்தவான்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்போது, இயேசுகிறிஸ்துவினுடைய  சுவிசேஷத்தின் மூலமாய் உண்டாகும் ஆசீர்வாதங்களை விசுவாசத்தோடு எதிர்பார்ப்பார்கள். உள்ளவன் எவனோ அவனுக்கு இன்னும் அதிகமாய்க் கொடுக்கப்படும்.  அவன் பரிபூரணமடைவான். மோசேயின் நியாயப்பிரமாணத்தை உடையவனுக்கு, கிறிஸ்துவின் சுவிசேஷம் பூரணமான ஆசீர்வாதத்தைக் கொடுக்கும்.

""இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எ-யா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்'' (மல் 4:5) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

பழைய ஏற்பாட்டுக்காலத்து பரிசுத்தவான்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசத்தோடு எதிர்பார்க்கவேண்டும்.  தீர்க்கதரிசியாகிய எலியா தங்கள் மத்தியிலே வரும்போது, இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் ஆரம்பமாகும் என்று அவர்கள்          விசுவாசிக்கவேண்டும். எலியா தீர்க்கதரிசி, யோவான்ஸ்நானனுக்கு அடையாளமாயிருக்கிறார். 

""நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய  ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்'' (லூக் 16:16). 

ஜனங்கள் மத்தியிலே அருணோதயம் உதிக்கும் வரையிலும், நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் ஜனங்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்தது. அவர்களுக்கும் இந்த வெளிச்சத்தைத் தவிர வேறு எந்த வெளிச்சமும் கிடைக்கவில்லை.  

""நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்'' (மல் 4:5) என்று கர்த்தர் சொல்லுகிறார்.  எலியா என்பவர் ஆகாபின் நாட்களிலே, இஸ்ரவேல் தேசத்தில் தீர்க்கதரிசனம் சொன்ன எலியாவைக் குறிக்கும் என்று யூதமார்க்கத்து ரபீமார்கள் சொல்லுகிறார்கள். மேசியா வருவதற்கு முன்பாக, எலியா அவருக்கு பாதைகளை  ஆயத்தம்பண்ண வருவார் என்பது அவர்களுடைய விசுவாசம். 

""எலியா'' என்னும் பெயருக்கு  வேதபண்டிதர்கள் மற்றொரு விதமாக  விளக்கம் சொல்லுகிறார்கள். எலியா என்பது  ஆகாபின் காலத்தில் தீர்க்கதரிசனம் சொன்ன எலியா என்னும் தீர்க்கதரிசியல்ல என்றும்,  இவர் வேறொருவர் என்றும், இவரிடத்தில் எலியாவின் ஆவி இருக்கிறது என்றும் விளக்கம் சொல்லுகிறார்கள். 

இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு  வருவதற்கு முன்பாக, யோவான்ஸ்நானனே அவருக்கு வழியை ஆயத்தம்பண்ணினார்.   யோவான்ஸ்நானனே வரவேண்டிய எலியா என்று சுவிசேஷங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. 

""அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எ-யா முந்தி வரவேண்டும் என்று                வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்றுகேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எ-யா முந்திவந்து எல்லாவற்றைம் சீர்படுத்துவது மெய்தான். ஆனாலும், எ-யா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்'' (மத் 17:10-13). 

""அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக  அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.  யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எ-யா இவன்தான்'' (மத் 11:10-14). 

கர்த்தர் மல்கியா தீர்க்கதரிசியின்  மூலமாக, ""இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்''  (மல் 3:1) என்று சொல்லுகிறார். இந்த வாக்கியத்தில் ""என் தூதன்'' என்று சொல்லப்பட்டிருப்பது, யோவான்ஸ்நானனையே குறிக்கும்.


Umn ministry Chennai 





Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*