எண்ணாகமம் அறிமுகம்
எண்ணாகமம் புஸ்தகத்தின் ஆசிரியர் மோசே பஞ்சாகமத்தில், எண்ணாகமம் புஸ்தகம் மூன்றாவது புஸ்தகமாக கோர்க்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரவேல் புத்திரர் எண்ணித்தொகையேற்றப்பட்ட சம்பவம் இந்தப் புஸ்தகத்தில் பல வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதினால், இந்தப் புஸ்தகத்திற்கு எண்ணாகமம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது
வாக்குத்தத்தம்
கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் திரளாக பலுகிப் பெருகச் செய்வதாக வாக்குப்பண்ணினார்.
கர்த்தர் சொன்ன பிரகாரமாக, ஆபிரகாமின் சந்ததியார் திரளாய்ப் பலுகிப் பெருகியிருக்கிறார்கள் என்பதற்கு, இந்தப் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற இஸ்ரவேல் புத்திரரின் எண்ணிக்கை ஓர் அடையாளமாகயிருக்கிறது.
இஸ்ரவேல் புத்திரரை எண்ணித்தொகையேற்றும் சம்பவம் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. ஒன்று சீனாய் மலையில் (எண்ணாகமம் 1-ஆவது அதிகாரம்).
இந்த சம்பவம் நடைபெற்ற முப்பத்தொன்பது வருஷங்களுக்கு பின்பு மோவாபின் சமவெளியில், இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் எண்ணித் தொகையேற்றப்படுகிறார்கள் (எண்ணாகமம் 26-ஆவது அதிகாரம்).
எண்ணாகமம் புஸ்தகத்தில் இஸ்ரவேல் புத்திரருடைய சரித்திர சம்பவங்களும், கர்த்தர் அவர்களுக்கு சொன்ன பிரமாணங்களும் சொல்லப்பட்டிருக்கிறது
இஸ்ரவேல் புத்திரர்
எண்ணித்தொகையேற்றப்படுகிற சரித்திரமும், அவர்கள் வனாந்தரத்திலே பாளயமிறங்கியிருக்கிற விதமும் (எண் 1-4 ஆகிய அதிகாரங்கள்). பலிபீடமும், லேவியரும் பிரதிஷ்டைபண்ணப்படுகிற சம்பவம் (எண் 7,8 ஆகிய அதிகாரங்கள்).
இஸ்ரவேல் புத்திரர் வரிசையாக அணிவகுத்து செல்லும் விதம் (எண் 9,10 ஆகிய அதிகாரங்கள்)
இஸ்ரவேல் புத்திரரின் அவிசுவாசமும், அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுப்பதும். இஸ்ரவேல் ஜனத்தார் தங்களுடைய பாவங்களினிமித்தமாக வனாந்தரத்திலே நாற்பது வருஷங்களாக சுற்றி அலைகிறார்கள் (எண் 11-14 ஆகிய அதிகாரங்கள்) கோராகுடைய புத்திரரின் கலகம் (எண் 16,17 ஆகிய அதிகாரங்கள்)
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திலே சுற்றி அலைந்த நாற்பது வருஷங்களில், கடைசி வருஷத்தில் நடைபெற்ற சரித்திர சம்பவங்கள் (எண் 20-26 ஆகிய அதிகாரங்கள்) மீதியானியர் மீது ஜெயமும், இஸ்ரவேலின் இரண்டரைக்கோத்தித்தார் யோர்தானுக்கு அப்புறத்திலே குடியேறின சம்பவம் (எண் 31,32 ஆகிய அதிகாரங்கள்). இஸ்ரவேல் புத்திரரின் பிரயாணம்
நசரேய சம்பந்தமான பிரமாணங்கள் (எண் 5,6 ஆகிய அதிகாரங்கள்). ஆசாரியரின் படைவிடைகள் (எண் 18,19 ஆகிய அதிகாரங்கள்). பண்டிகைகள் (எண் 28,29 ஆகிய அதிகாரங்கள்).
பொருத்தனைகள்
பொருத்தனைகள் (எண் 30-ஆவது அதிகாரம்). இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்தில் குடியேறிய சம்பவம் (எண் 27,34-36 ஆகிய அதிகாரங்கள்) எண்ணாகமம் புஸ்தகம் முழுவதிலும் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்கள் சங்கீதம் 95:10-ஆவது வசனத்தில், சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது
நாற்பது வருஷம் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல், என்னுடைய இளைப்பாறுத-ல் அவர்கள்
பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்" (சங் 95:10,11)
விசேஷமானவர்களாகயிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய சுதந்தரமாக இருக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய பிள்ளைகளாக இருப்பதினால், அவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தில் அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது
எழுதப்பட்ட இடம்
எரிகோவிற்கு அருகிலுள்ள யோர்தான் நதிக்கரையில் அமைந்திருந்த மோவாபின் சமவெளிகளில் எண்ணாகமம் புஸ்தகம் எழுதப்பட்டது (எண் 36:13) கானான் தேசத்திற்குள் இஸ்ரவேல் புத்திரர்கள் பிரவேசிப்பதற்கு முன்பதாக இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது. யோர்தானுக்கு கிழக்குப் பகுதியிலுள்ள ஓக், சீகோன் ஆகிய ராஜ்யங்களை இஸ்ரவேல் புத்திரர் முறியடித்த நிகழ்ச்சிகள் இந்தப் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது (எண் 21:1-35)
இஸ்ரவேலைச் சபிப்பதற்காகக் கிழக்கிலிருந்து வந்த பிலேயாமின் அனுபவமும் எண்ணாகமம் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது (எண் 22:1-24:25) இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்ட சமயத்தில் இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
இஸ்ரவேல் புத்திரர்கள் இரண்டு முறை எண்ணித்தொகையேற்றப்படுகிறார்கள். எகிப்து தேசத்திலிருந்து வெளியேறி வந்த இரண்டாம் வருஷத்தில் முதல் முறையாகவும் (எண் 1:1-10:36), வனாந்தரத்தில் அலைந்து திரிந்து முடிந்து, கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக இரண்டாம் முறையாகவும் (எண் 26:1-65) இஸ்ரவேல் புத்திரர்கள் எண்ணித்தொகையேற்றப் படுகிறார்கள் இவ்விரண்டு எண்ணிக்கைக்கும் இடையில் 38 வருஷம் கால இடைவெளி இருந்தது
யாத்திராகமம் புஸ்தகத்தில், இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்து தேசத்திலிருந்து வெளியேறி, வனாந்தரத்திற்கு வந்த வரலாறு கூறப்பட்டிருக்கிறது எண்ணாகமம் புஸ்தகம் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரின் வரலாற்றைத் தொடர்ந்து கூறுகிறது.
God bless you