நியாயாதிபதிகள் அறிமுகம்

0



நியாயாதிபதிகள் அறிமுகம்

எபிரெய பாஷையிலே, நியாயாதிபதிகளின் புஸ்தகத்திற்கு "சேப்பேர் ஷோப்டிம்" என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. சீரிய மொழியிலும், அரபிய மொழியிலும் இந்தப் புஸ்தகம்"இஸ்ரவேல் புத்திரருடைய நியாயாதிபதிகளின் புஸ்தகம்" என்று அழைக்கப்படுகிறது. சாமுவேல் தீர்க்கதரிசியே இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர்

பாலஸ்தீன தேசத்தில் கி.மு. 1126 ம் வருஷத்தில் நியாயாதிபதிகளின் புஸ்தகம் எழுதப்பட்டது

யூதருடைய பாரம்பரிய வரலாற்றின் பிரகாரம் இந்தப் புஸ்தகத்தை எழுதியவர் சாமுவேல். ஏசாயா இந்தப் புஸ்தகத்தை எழுதியிருக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள். (2நாளா 32:32).

இஸ்ரவேல் தேசத்தில் ராஜாக்களின் காலம் வந்த பின்பு நியாயாதிபதிகளின் புஸ்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரவேலில் ராஜாக்களின் காலங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிகள் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் இரண்டு இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் (நியா 19:1 நியா 21:25)

இந்தப் புஸ்தகம் தாவீதின் காலத்திற்கு முன்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆசரிப்புக் கூடாரம் சீலோவில் இருந்தது. யோசுவாவின் காலத்தில் சீலோவில் ஆசரிப்புக் கூடாரம் ஸ்தாபிக்கப்பட்டது (நியா 18:31; நியா 21:12,19#21). ஏலியின் 40 ஆவது வருஷம் வரையிலும் ஆசரிப்புக் கூடாரம் சீலோவில் இருந்தது. அதன் பின்பு அது அழிக்கப்பட்டது. (1சாமு அதற்குப் பின்பு, தாவீதின் காலம் வரையிலும் ஆசரிப்புக்கூடாரத்தைப் பற்றி ஒரு செய்தியும் தெரியவில்லை


         எண்ணாகமம் அறிமுகம் 

                 பிரதான பாவி நான் 



தாவீது ராஜாவானபோது, அவர் ஆசரிப்புக் கூடாரத்தை எருசலேமிற்குக் கொண்டு வந்தார். (2சாமு 6; 1 நாளா 21:29; 2நாளா 1:3). இந்தக் கருத்துக்களையெல்லாம் ஆதாரமாகப் பார்க்கும் பொழுது சாமுவேல் இந்தச் செய்திகளையெல்லாம் சேகரித்து நியாயாதிபதிகளின் புஸ்தகத்தை எழுதியிருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது

நியாயாதிபதிகளின் காலத்தில், இஸ்ரவேலுடைய காணியாட்சியின் சரித்திரத்தை இந்தப் புஸ்தகம் விவரிக்கிறது. நியாயாதிபதிகளாகிய ஒத்னியேலின் காலத்திலிருந்து, சிம்சோனின் காலம் வரையிலும் இந்தப் புஸ்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது

இஸ்ரவேல் புத்திரரை ஆட்சி புரிந்த

நியாயாதிபதிகளைப்பற்றியும், அவர்களுடைய கோத்திரத்தைப்பற்றியும், அவர்கள் ஆளுகை செய்த வருஷங்களைப்பற்றியும் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நியாயாதிபதிகள் இஸ்ரவேல் புத்திரரை 299 வருஷங்களாக ஆட்சி செய்திருக்கிறார்கள்

1. ஒத்னியேல் - யூதா - 40 வருஷம்

2. ஏகோத் - பென்யமீன் - 8 வருஷம்

3. பாராக் - நப்தலி -40 வருஷம்

4. கிதியோன் - மனாசே - 40 வருஷம்

5. அபிமலெக்கின் குமாரர் - 3 வருஷம்

6. தோலா - இசக்கார் - 23 வருஷம்

7. யாயீர் - மனாசே - 22 வருஷம்

8. எப்தா - மனாசே - 6 வருஷம்

9. இப்சாம் - யூதா -7 வருஷம்

10. ஏலோன் - செபுலோன் -10 வருஷம்

11. அப்தோன் - எப்பிராயீம் -8 வருஷம்

12. சிம்சோன் - தாண் - 20 வருஷம்

மேலே சொல்லப்பட்டிருக்கிற நியாயாதிபதிகளைத் தவிர, ஏலி, சாமுவேல் ஆகியோரும் இஸ்ரவேலை நியாயம் விசாரித்திருக்கிறார்கள். இவர்கள் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைப்பற்றிய சரித்திரம் நியாயாதிபதிகளின் புஸ்தகத்தில் எழுதப்படவில்லை. ரூபன் அல்லது சிமியோன், காத் அல்லது ஆசேர் கோத்திரத்தில் ஒரு நியாயாதிபதியும் எழும்பவில்லை

நியாயாதிபதிகள் 16 ஆவது அதிகாரத்தின் முடிவில் இந்த நியாயாதிபதிகளைப்பற்றிய சரித்திரம் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் பின்பு ரூத்தின் சரித்திரத்தைப்போல, நியாயாதிபதிகளின் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள், நியாயாதிபதிகள் 17#21 ஆகிய அதிகாரங்களில் விரிவாகச்

சொல்லப்பட்டிருக்கிறது



         லேவியராகமம் அறிமுகம் 



நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில்" (ரூத் 1:1) என்னும் வாக்கியத்தோடு ரூத்தின் சரித்திரம் ஆரம்பமாகிறது. ஆனால் நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளைப்பற்றிய விவரம் இங்கே சொல்லப்படவில்லை

நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேலின் காணியாட்சி எந்த நிலமையிலிருந்தது என்பது பற்றிய விவரம் நியாயாதிபதிகளின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தருக்கு மிகவும் விசேஷமானவர்கள். கர்த்தர் தம்முடைய நியாயப்பிரமாணத்தையும், வாக்குத்தத்தங்களையும் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு அநேக நன்மைகளை செய்திருக்கிறார் ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ, கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாய் ஜீவிக்கவில்லை. இஸ்ரவேல் ஜனத்தாரிடம் துன்மார்க்கமும் விக்கிரகாராதனையும் காணப்பட்டது. இஸ்ரவேல் புத்திரை, சுற்றிலுமிருந்த அந்நிய ஜாதியார், அதிகமாய் ஒடுக்கினார்கள்

நியாயாதிபதிகளின் புஸ்தகத்தில் இஸ்ரவேல் ஜனத்தார் அனுபவித்த பாடுகளைப்பற்றியும்,

வேதனைகளைப்பற்றியும், அவர்கள் தங்கள் வேதனைகளைக் குறித்து கர்த்தரிடத்தில் முறையிட்டது பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், இக்காலத்தில், கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாய் ஜீவித்த ஜனங்களும் இருக்கிறார்கள். அவர்கள்

கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்

நியாயாதிபதிகளின் காலத்தில், இஸ்ரவேல் புத்திரரில் அநேகர் கர்த்தரை விட்டுவிட்டு, விக்கிரகங்களைப் பின்பற்றிப்போய்விடுகிறார்கள். ஆனாலும் இக்காலத்திலும், கர்த்தரை உண்மையான இருதயத்தோடு பின்பற்றுகிற இஸ்ரவேல் புத்திரரும் தேசத்திலே இருக்கிறார்கள்


       யோசுவா ஒரு அறிமுகம் 



இஸ்ரவேல் ஜனத்தாரில் ஒரு கூட்டம் ஜனம் விக்கிரகங்களை ஆராதனை செய்தாலும், கானான் தேசத்திலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனைகள் நடைபெறுகிறது. இஸ்ரவேல் புத்திரர் மோசேயின் பிரமாணத்தை கைக்கொள்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரில் சிலர் விக்கிரகங்களையும், சிலர் கர்த்தரையும் ஆராதிக்கிறார்கள். வேறு சிலரோ விக்கிரகங்களையும் கர்த்தரையும் சேர்ந்து ஆராதிக்கிறார்கள்

நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேல் ஜனத்தாருடைய கோத்திரங்களெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து, சமஸ்த இஸ்ரவேல் தேசம் ஏற்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களை தனித்தனியாக ஆளுகை செய்து கொள்கிறார்கள்

இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, இஸ்ரவேலின் காணியாட்சிக்கு ஆதரவாக தீர்மானம்பண்ணாமல், ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களுடைய இஷ்டபிரகாரம், தனிப்பட்ட முறையில் தீர்மானம்பண்ணிக்கொள்கிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் எல்லோருக்கும் பொதுவான ஒரு தலைவர் என்று யாருமில்லை. இஸ்ரவேலின் காணியாட்சிக்கு ஆலோசனைச்சங்கம் எதுவுமில்லை பல சமயங்களில் இஸ்ரவேலின் கோத்திரத்தார் மத்தியிலே, கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் சண்டை சச்சரவுகளும் உண்டாயிற்று. அவர்களால் ஏகோபித்து, ஒருமனப்பட்டு, எந்தக் காரியத்தையும் செய்ய முடியவில்லை

நியாயாதிபதிகளின் ஆளுகையும் நிலைத்திருக்கவில்லை. நியாயாதிபதிகள் சில வருஷங்களுக்கு இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரிக்கிறார்கள். அதன் பின்பு அவர்களை நியாயம் விசாரிப்பதற்கு ஒரு நியாயாதிபதியுமில்லை . மறுபடியும் யாராவது ஒரு நியாயாதிபதி எழும்புகிறார்.

ஏகூத் சத்துருக்களை ஜெயித்த பின்பு, தேசம் எண்பது வருஷம் அமைதியாயிருந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. அத்தனை வருஷங்களும் ஏகூத் உயிரோடிருந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. இஸ்ரவேல் ஜனத்தாருக்கு உதவி தேவைப்பட்டபோது, கர்த்தருடைய ஆவியானவர் அவ்வப்போது நியாயாதிபதிகளை எழுப்புகிறார். அவர்கள் தங்களுடைய காலங்களில் இஸ்ரவேல் ஜனத்தாரை நியாயம் விசாரிக்கிறார்கள்

நியாயாதிபதிகள் இஸ்ரவேலின் சத்துருக்களை முறியடித்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் மத்தியில் காணப்பட்ட விக்கிரகாராதனைகளை

அகற்றிப்போட்டார்கள். இதுவே நியாயாதிபதிகளின் பிரதான ஊழியங்கள் இருந்தது

தெபோராள் ஒரு தீர்க்கதரிசினி. இவள் இஸ்ரவேல் புத்திரர் எல்லோரையும் நியாயம் விசாரித்தாள். இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ண, தெபோராள் கர்த்தருடைய ஜனத்தை வழிநடத்தினாள்"அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்' (நியா 4:4).

நியாயாதிபதிகள் இஸ்ரவேல் ஜனத்தாரை நியாயம் விசாரித்த காலத்தில், தேவனாகிய கர்த்தரே, இஸ்ரவேல் ஜனத்தாருக்கு ராஜாவாயிருந்து அவர்களை ஆளுகை செய்தார். நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேல் தேசத்திலே, கர்த்தருடைய ஆளுகை நடைபெற்றது இந்த சத்தியத்தை சாமுவேல் இஸ்ரவேல் புத்திரருக்கு பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

"அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்" (1சாமு 12:12).

நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேலின் தோல்விகள் இந்தப் புஸ்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் புஸ்தகத்தில் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை விட்டு விலகிப்போன 9 சம்பவங்கள், இஸ்ரவேல் ஜனத்தார் ஏழு தடவை புறஜாதிகளின் கைகளில் அடிமைகளானது, 14 நியாயாதிபதிகள், நியாயாதிபதிகளின் தவறுகள், 5 உள்நாட்டுக் கலகங்கள் ஆகியவையும் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் இஸ்ரவேலின் 15 ஆவது, 16ஆவது நியாயாதிபதிகளான ஏலி, சாமுவேல் ஆகியோரின் ஊழியங்களும் விளக்கப் பட்டிருக்கிறது. நியாயாதிபதிகளின் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் சுமார் 440 வருஷக்காலத்தில் நடைபெற்றவையாகும்.

பொருளடக்கம்

 யோசுவாவிற்குப் பின்பு இஸ்ரவேலரின் வெற்றிகளும் தோல்விகளும்

1. பேசேக்கிலே யூதாவின் வெற்றி (1:1-8)

2. எபிரோனிலே யூதாவின் வெற்றி (1:9-10)

3. தெபீரிலே யூதாவின் வெற்றி (1:11-15)

4. ஓர்மாவிலும் பெலிஸ்தியாவிலும் யூதாவின் வெற்றி (1:16-18)

5. யூதாவின் தோல்வி (1:19)

6. எபிரோனிலே வெற்றி (1:20)

7. பென்யமீன் புத்திரரின் தோல்வி (1:21)

8யோசேப்பின் குடும்பத்தாரின் வெற்றி (1:22-26)

9. மனாசே கோத்திரத்தாரின் தோல்வி (1:27-28)

10. எப்பிராயீம் கோத்திரத்தாரின் தோல்வி (1:29)

11. செபுலோன் கோத்திரத்தாரின் தோல்வி (1:30)

12. ஆசேர் கோத்திரத்தாரின் தோல்வி (1:31-32)

13. நப்த- கோத்திரத்தாரின் தோல்வி (1:33)

14. தாண் புத்திரரின் தோல்வி (1:34)

15. யோசேப்பின் குடும்பத்தாரின் தோல்வி (1:35-36)

16. கர்த்தருடைய தூதனானவருடைய தரிசனம் (2:1-2)

17. கர்த்தருடைய பரீட்சை - நோக்கம் (2:3-5)

18. யோசுவா, மூப்பர் ஆகியோரின் கீழ் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு தற்கா-கமாகக் கீழ்ப்படிந்தார்கள் (2:6-10)

19. இஸ்ரவே-ன் ஆறு பாவங்கள் (2:11-13)

20. தேவனுடைய நியாயத்தீர்ப்பு (2:14-15)

21. நியாயாதிபதிகள் நியமனமும், தற்காலிக மீட்பும் (2:16-19)

22. கர்த்தருடைய பரீட்சை # நோக்கம் (2:20-23)

23. தேவனுடைய பரீட்சையில் பயன்படுத்தப்

பட்டோர் (3:1-4)

தேவனுடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளாமல் அவற்றி-ருந்து விலகி, முரண்பட்டு ஜீவித்தல், அடிமைத்தனம், நியாயாதிபதிகள்

1. முதலாவது முரண்பாடு (3:5-7)

2. முதலாவது அடிமைத்தனம் - பாபிலோனியரிடம் எட்டு வருஷங்கள் (3:8)

3. ஒத்னியேல் - முதலாவது நியாயாதிபதி # பாபிலோன்மீது வெற்றி - நாற்பது வருஷங்கள் அமைதி (3:9-11)

4. இரண்டாவது முரண்பாடும், அடிமைத்தனமும் - மோவாபியரிடம் பதினெட்டு வருஷங்கள் (3:12-14)

5. ஏகூத் - இரண்டாவது நியாயாதிபதி # மோவாபியர்மீது வெற்றி - எண்பது வருஷங்கள் அமைதி (3:15-30)

6. மூன்றாவது முரண்பாடும், அடிமைத்தனமும் சம்கார் - மூன்றாவது நியாயாதிபதி - பெ-ஸ்தரின்மீது வெற்றி (3:31)

7. நான்காவது முரண்பாடும், அடிமைத்தனமும் - கானானியரிடம் இருபது வருஷங்கள் (4:1-3)

8. தெபொராளும், பாராக்கும் - நான்காவது ஐந்தாவது நியாயாதிபதிகள் - நாற்பது வருஷங்கள்

(1) தெபொராளின் தீர்க்கதரிசனம் (4:4-9)

(2) சேனையைத் திரட்டுதல் (4:10-13)

(3) கானானியர்மீது வெற்றி (4:14-16)

(4) சிசெராவின் மரணம் (4:17-24)

(5) தெபொராள், பாராக் ஆகியோரின் பாடல்

(அ) ஜெயம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் (5:1-5)

(ஆ) இஸ்ரவேலர் அடிமைப்பட்டிருந்த போது தெபொராள், பாராக் ஆகியோரின் வழிநடத்துதல் (5:6-13)

(இ) கானானியர்மீது நடந்த யுத்தத்தில் மற்ற கோத்திரத்தாரின் நடபடிகள் (5:14-17)

(ஈ) தாபோர் பர்வதத்தில் யுத்தம் (5:18-23)

(உ) சிசெராவைக் கொன்றதற்காக யாகே-ன்மீது ஆசீர்வாதம் (5:24-27)

(ஊ) சிசெராவின் தாயாரும், நாயகிகளும் (5:28-30)

(எ) தேவனுடைய விரோதிகளின்மீது சாபமும், நண்பர்கள் மீது ஆசீர்வாதமும் (5:31)

9. ஐந்தாவது முரண்பாடும், அடிமைத்தனமும் - மீதியானியரிடம் ஏழு வருஷங்கள் (6:1-6)

10. யோசுவாவிற்கு பின்பு இஸ்ரவே-ன் பெயர் குறிப்பிடப்படாத முதலாவது தீர்க்கதரிசி (6:7-10)

11. கிதியோன் - ஆறாவது நியாயாதிபதி - நாற்பது வருஷங்கள்

(1) கர்த்தருடைய தூதனானவரின் தரிசனமும், கிதியோனின் ஊழிய அழைப்பும் (6:11-16)

(2) கர்த்தருடைய தரிசனத்தை கிதியோன் அங்கீகரித்தான் (6:17-21)

(3) கிதியோன் கர்த்தருடைய தூதனைக் கண்டும் சாவாமல் இருந்தான் (6:22-24)

(4) கிதியோன் தேவனுக்கு கீழ்ப்படிந்து, பாகா-ன் ப-பீடத்தைத் தகர்த்து, கர்த்தருக்கு ஒரு ப-பீடத்தைக் கட்டினான் (6:25-27)

(5) பாகாலை வழிபடுவோரிடமிருந்து கிதியோனின் தந்தை அவனை பாதுகாத்தார்(6:28-32)

(6) இஸ்ரவேலரை ஒன்று சேர்த்தான் (6:33-35)

(7) தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதி பண்ணிய இரண்டு அற்புத அடையாளங்கள் (6:36-40)

(8) முன்னூறு பேர்களைக் கொண்ட கிதியோனின் சேனை (7:1-8)

(9) வெற்றியின் அடையாளம் (7:9-15)

(10) அற்புத வெற்றி (7:16-25)

(11) உள்நாட்டு குழப்பம் (7:1-3)

(12) முழுமையான வெற்றி - சுக்கோத்தின்மீது நியாயத்தீர்ப்பு (7:4-21)

(13) கிதியோனின் ஆளுகையும், அழிவும்

(7:22-31)

(14). ஆறாவது முரண்பாடு (7:32-35)

13. அபிமெலேக்கு - ஏழாவது நியாயாதிபதி - மூன்று வருஷங்கள்

(1) அபிமெலேக்கின் சதியாலோசனை # மூன்றாவது உள்நாட்டு குழப்பம் (9:1-6)

(2) யோதோமின் உவமையுடன்கூடிய தீர்க்கதரிசனம் (9:7-15)

(3) யோதோம்தான் கூறிய உவமைையை சீகேமி ருக்கிற ஜனங்களுக்குப் பயன்படுத்தினார் (9:16-21)

(4) நான்காவது உள்நாட்டு குழப்பம்

(அ) சீகேம் அபிமெலேக்குக்கு எதிராக செய்த சதி (9:22-29)

(ஆ) அபிமெலேக்கு சீகேமிற்கு எதிராக செய்த சதி (9:30-35)

(இ) அபிமெலேக்கின் வெற்றி (9:36-41)

(ஈ) சீகேமின் அழிவு (9:42-49)

(உ) அபிமெலேக்கின் மரணம் (9:50-57)

14. தோலா - எட்டாவது நியாயாதிபதி - இருபத்தி மூன்று வருஷங்கள் (10:1-2)

15. யாவீர் - ஒன்பதாவது நியாயாதிபதி - இருபத்திரண்டு வருஷங்கள் (10:3-5)

16. ஏழாவது முரண்பாடும், ஆறாவது அடிமைத்தனமும் - பெ-ஸ்தர், அம்மோன் புத்திரர் ஆகியோரின் கீழ் பதினெட்டு வருஷங்கள் (10:6-9)

17. இஸ்ரவேலர் மனந்திரும்பினார்கள் - இஸ்ரவேலரின் வார்த்தைகளை தேவன் ஏற்றுக்கொள்ளவில்லை (10:10-14)

18.தங்கள் பாவங்களை விலக்கி, உண்மையான மனந்திரும்புதலை இஸ்ரவேலர்கள் உறுதிபண்ணினார்கள் (10:15-16)

19. யுத்தத்திற்கு ஆயத்தம் (10:17-18)

20. யெப்தா - பத்தாவது நியாயாதிபதி - ஆறு வருஷங்கள்

(1) யெப்தாவிற்கு தன் தகப்பன் வீட்டில் சுதந்திரம் இல்லை (11:1-3)

(2) அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ணுவதற்கு சேனாதிபதியாக இருக்குமாறு யெப்தாவை அழைத்தார்கள் (11:4-6)

(3) யெப்தாவின் நிபந்தனை (11:7-9)

(4) நிபந்தனையை இஸ்ரவேலர்கள் ஏற்றுக் கொண்டார்கள் & இஸ்ரவேலரின் சேனைக்கு யெப்தா சேனாதிபதியாக இருந்தான் (11:10-11)

(5) அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கு யெப்தாவின் முதல் செய்தி (11:12)

(6) அம்மோன் புத்திரரின் தேசத்தை கட்டிக்கொண்டதாக இஸ்ரவேலர் மீது தவறான குற்றச்சாட்டு (11:13)

(7) முந்நூறு வருஷ சரித்திரத்தை விளக்கிக் கூறி யெப்தா குற்றச்சாட்டை மறுத்தார் (11:14-28)

(8) யெப்தாவின் பயங்கரமான பொருத்தனை (11:29-31)

(9) அம்மோன் புத்திரரின்மீது வெற்றி (11:32-33)

(10) யெப்தாவின் பொருத்தனை நிறைவேறிற்று (11:34-40)

(11) ஐந்தாவது உள்நாட்டு குழப்பம் (12:1#7)

21. இப்சான் - பதினொறாவது நியாயாதிபதி - ஏழு வருஷங்கள் (12:8-10)

22. ஏலோன் - பன்னிரெண்டாவது நியாயாதிபதி - பத்து வருஷங்கள் (12:11-12)

23. அப்தோன் - பதின்மூன்றாவது நியாயாதிபதி - எட்டு வருஷங்கள் (12:13-15)

24. எட்டாவது முரண்பாடும், ஏழாவது அடிமைத்தனமும் - பெ-ஸ்தரின்கீழ் நாற்பது வருஷங்கள் (13:1)

சிம்சோன் - பதினான்காவது நியாயாதிபதி - இருபது வருஷங்கள்

(1) கர்த்தருடைய தூதனானவரின் அறிவிப்பு (13:2-5)

(2) வழிநடத்துமாறு கர்த்தரிடம் ஜெபம் (13:6-8)

(3) இரண்டாம் முறை தேவ தூதனானவரின் தரிசனம் (13:9-20)

(4) தேவ தூதனானவரை தரிசித்தும், மதிக்கவில்லை (13:21-23)

(5) சிம்சோனின் பிறப்பு (13:24-25)

(6) சிம்சோனின் முதலாவது காத- (14:1-4)

(7) சிம்சோனும், சிங்கமும் (14:5-9)

(8) சிம்சோனின் திருமணமும், விடுதலையும் (14:10-14)

(9) விடுகதையை விடுவித்தார்கள் (14:15-18)

(10) சிம்சோன் முப்பது பேரைக் கொன்று பழிதீர்த்தான் (14:19-20)

(11) இரண்டாம் முறையாக பழிதீர்க்கும் எண்ணம் (15:1-2)

(12) முந்நூறு நரிகளால் பெ-ஸ்தரின் வெள்ளாண்மையை சுட்டெரித்தான் (15:2-5)

(13) மூன்றாம் முறையாக பழிதீர்க்கும் எண்ணம் (15:6)

(14) சிம்சோன் பெ-ஸ்தரை சின்னாபின்னமாக்கினான் (15:7-10)

(15) நான்காம் பழிதீர்க்கும் எண்ணம் (15:11-13)

(16) கழுதையின் தாடை எலும்பினால் ஆயிரம் பேரைக் கொன்றான் (15:14-17)

(17) அற்புதம் # சிம்சோனுக்குத் தண்ணீர் கிடைத்தது (15:18-20)

(18) ஐந்தாம் பழிதீர்க்கும் எண்ணம் (16:1-2)


God bless you 


Umn ministry Chennai 




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*