யோசுவா அறிமுகம்

0



யோசுவா அறிமுகம்

பரிசுத்த வேதாகமத்தில், யோசுவாவின் புஸ்தகத்திலிருந்து, எஸ்தர் புஸ்தகம் வரையிலுள்ள ஆகமங்களை, சரித்திராகமம் என்று அழைக்கிறோம் இந்த ஆகமங்களில் யூதாதேசத்துடைய சரித்திரம் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் தம்முடைய பிரமாணங்களை யூதாவின் மனுஷரிடத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். யூதா தேசத்தாருடைய சரித்திரத்திலே, கர்த்தருடைய கிருபையும், பாதுகாப்பும், பராமரிப்பும், உடன்படிக்கையும் பிரத்தியட்சமாய் வெளிப்படுகிறது

கர்த்தர் சரித்திராகமத்தை யூதரிடத்தில் ஓப்புவித்தார் அந்த ஆகமங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், அவருடைய அப்போஸ்தலர்களும் ஏற்றுக்கொண்டு, அதிலுள்ள வசனங்களை தங்களுடைய ஊழியத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்

பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து ஆகமங்களை, பஞ்சாகமம் என்று அழைக்கிறோம். இவை மோசே எழுதின ஆகமங்களாகும். பழைய ஏற்பாட்டு சபையின் ஸ்தாபிதம், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவை பஞ்சாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது

கர்த்தர் ஆபிரகாமையும், அவருடைய சந்ததியையும் தெரிந்தெடுத்து, அவர்களுக்கு தம்முடைய வாக்குத்தத்தங்களைச் சொன்னார். அவர்களோடு உடன்படிக்கை பண்ணினார். அவர்களை ஒரு தேசமாக ஸ்தாபித்தார். கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து தம்முடைய வார்த்தைகளை உறுதிபண்ணினார்.


      லேவியராகமம் ஒரு அறிமுகம் 



இஸ்ரவேல் வம்சத்தாரை ஆளுகை செய்வதற்காக கர்த்தர் பிரமாணங்களையும், நியமங்களையும் கட்டளைகளையும் கொடுத்தார். இந்த உலகத்தின் சரித்திரத்தில், இஸ்ரவேல் வம்சத்தாரைப்போல கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வம்சத்தார் வேறு யாருமில்லை. இஸ்ரவேல் புத்திரரைப்போல, தேவனுடைய பிரமாணங்களையும், கட்டளைகளையும், நியாயத்தீர்ப்புகளையும் பெற்றவர்களும் ஒருவருமில்லை

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேல் வம்சத்தாரோடு நெருங்கிய ஐக்கியத்திலிருந்தார் கர்த்தர் அவர்களை தமக்கு விசேஷித்த ஜனமாகத் தெரிந்துகொண்டார். அவர்களோடு உடன்படிக்கை பண்ணி, அவர்களுக்கு தம்முடைய பிரமாணங்களையும், கட்டளைகளையும் கொடுத்தார் அவர்கள் தம்முடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் மீறியபோது, கர்த்தர் அவர்களை தம்முடைய நீதியான நியாயத்தீர்ப்புகளால் தண்டிப்பார்

இஸ்ரவேல் வம்சத்தார்மீது, கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் அவருடைய கிருபையினால் வந்தது அவர்கள் மீது கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் அவருடைய நீதியினால் வந்தது. இதனால் இஸ்ரவேல் வம்சத்தார் பரிசுத்தமாகயிருப்பார்கள் என்றும் அவர்கள் சந்தோஷமான ஜனமாகயிருப்பார்கள் என்றும் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் சரித்திரத்தில் இஸ்ரவேல் வம்சத்தாரைப்போல பாவம் செய்தவர்களும், வேதனைகளை அனுபவித்தவர்களும் வேறு யாருமில்லை



         நியாதிபதிகள் அறிமுகம் 



புதிய ஏற்பாட்டு சபையிலே இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. விசுவாசிகள் செய்ய வேண்டிய காரியங்களையும், செய்யக்கூடாத காரியங்களையும் கிறிஸ்துவானவர் தம்முடைய சுவிசேஷத்தின் மூலமாய் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறார். புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளுக்கு அப்போஸ்தலர்களுடைய

உபதேசங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது

இயேசுகிறிஸ்துவின் சபையிலே, சுவிசேஷ பிரமாணங்களும், ஆவிக்குரிய உபதேசங்களும் அதிகமாய்க் கொடுக்கப்பட்டிருப்பதினால், சபையின் விசுவாசிகள் எல்லோருமே பரிசுத்தவான்கள் என்று இந்த உலகம் எதிர்பார்க்கும். ஆனால் புதிய ஏற்பாட்டு சபையிலும் பாவங்களும் முறைகேடுகளும் நிரம்பியிருக்கிறது

எல்லோரும் பாவம் செய்து ஏகமாய்க் கெட்டுப்போயிருக்கிறார்கள். இந்தப் பூமியிலுள்ள மனுஷரில் ஒருவர்கூட பரிபூரண பரிசுத்தத்தோடு இல்லை. நாம் இந்தப் பூமியில் இருக்கும் வரையிலும், நாம் குறைவுள்ளவர்களாகவே இருப்போம். வரப்போகிற உலகத்தில், நமக்கு பரிபூரண நன்மைகள் உண்டாயிருக்கும். நாம் பரலோகத்தில் பிரவேசிக்கும்போது, அங்கே நமக்கு ஒரு குறைவும் இருக்காது. சகலமும் பரிபூரணமாயிருக்கும். விசுவாசிகளாகிய நாம் இம்மையில் ஜீவித்தாலும் வரப்போகிற மறுமைக்காக, ஆவலாய்க் காத்திருக்க வேண்டும்

இந்தப் புஸ்தகத்திற்கு, "யோசுவாவின் புஸ்தகம் என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்தப் புஸ்தகத்தை எழுதின ஆசிரியர் யார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. பினெகாஸ் இந்தப் புஸ்தகத்தை எழுதியிருக்கவேண்டும் என்றும், யோசுவா இந்தப் புஸ்தகத்தை எழுதியிருக்கவேண்டும் என்றும் வேதபண்டிதர்கள் வெவ்வேறு கருத்துக்களைச் சொல்லுகிறார்கள்.

யோசுவாவின் புஸ்தகத்தில் யோசுவாவைப்பற்றிய காரியங்களே அதிகமாய் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தை யோசுவா எழுதியிருந்தாலும் அல்லது வேறு யாராவது ஒருவர் எழுதியிருந்தாலும் அவர்கள் யோசுவாவின் நடபடிகளை ஆராய்ந்து பார்த்து, இந்தப் புஸ்தகத்தை எழுதியிருக்கவேண்டும். தன்னுடைய காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை, யோசுவா தன்னுடைய மனதிலே ஞாபகமாக வைத்திருந்து இந்தப் புஸ்தகத்தை எழுதியிருக்கவேண்டும். அல்லது, தன்னுடைய ஞாபகத்திலுள்ள சம்பவங்களை, இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியருக்கு சொல்லியிருக்கவேண்டும்.

யோசுவாவின் புஸ்தகத்தில் இஸ்ரவேலுடைய சரித்திரத்தின் ஒரு பகுதி எழுதப்பட்டிருக்கிறது இஸ்ரவேல் வம்சத்தார் யோசுவாவின் கட்டளையின் கீழும், ஆளுகையின்கீழும் இருந்த காலத்தில் அவர்களுக்கு நடைபெற்ற சம்பவங்கள் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. யோசுவா இஸ்ரவேல் புத்திரரை கானான் தேசத்திற்கு வழிநடத்தினார். சத்துருக்களோடு யுத்தம்பண்ணுவதற்காக, யோசுவா இஸ்ரமே என் சேனைக்கு தளபதியாயிருந்து, அவர்களை யுத்தத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்திச் சென்றார்

இஸ்ரவேல் வம்சத்தார் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கிறார்கள் (யோசு 1-5 ஆகிய அதிகாரங்கள்). இஸ்ரவேல் வம்சத்தார் கானான் தேசத்தார்மீது யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கிறார்கள் (யோசு 6-12 ஆகிய அதிகாரங்கள்) யோசுவா கானான் தேசத்தை இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு பங்கு பிரித்துக்கொடுக்கிறார் (யோசு ஆகிய அதிகாரங்கள்). இஸ்ரவேல் வம்சத்தார் மத்தியிலே ஆவிக்குரிய சத்தியங்கள் உபதேசிக்கப்படுகிறது (யோசு 22-24 ஆகிய அதிகாரங்கள்)

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே, இஸ்ரவேல் வம்சத்தாரை கானான் தேசத்திற்கு வழிநடத்திச் செல்லுகிறார். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாக கலகம்பண்ணுகிறார்கள். அவருக்கு கோபத்தை உண்டுபண்ணுகிறார்கள். ஆனாலும் இஸ்ரவேல் புத்திரர்மீது கர்த்தர் வைத்திருக்கிற அன்பு மாறவில்லை. யோசுவாவின் புஸ்தகத்தில்

கர்த்தருடைய வல்லமை, அவருடைய நீதி அவருடைய அன்பு, அவருடைய உண்மை ஆகியவை தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது

யோசுவாவின் புஸ்தகத்தில்

இயேசுகிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய கிருபையைப்பற்றியும் அடையாளமாய்ச்

சொல்லப்பட்டிருக்கிறது. யோசுவா

இயேசுகிறிஸ்துவுக்கு அடையாளமாயிருக்கிறார் என்று புதிய ஏற்பாட்டில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனாலும், யோசுவா இயேசுவுக்கு அடையாளமாக இருந்தார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.

நூனின் குமாரனாகிய யோசுவாவைப்போல, இதே பெயரில் மற்றும் ஒரு பிரதான ஆசாரியர் இருக்கிறார் அவர் யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா

"அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும் அவர் தம்முடைய ஸ்தானத்தி-ருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்" (சக 6:11,12)

எபிரெய பாஷையிலே யோசுவா என்னும் பெயர், கிரேக்க பாஷையிலே "இயேசு' என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு வந்து, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்" (அப் 7:45).

யோசுவா அவர்களை

இளைப் லுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல் யிருக்கமாட்டாரே" (எபி 4:8)

யோசுவா என்னும் பெயருக்கு"அவர் இரட்சிப்பார்" என்று பொருள். யோசுவா கர்த்தருடைய ஜனத்தை கானானியரிடமிருந்து இரட்சித்தார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோ, மனுபுத்திரரை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கிறார்

பழைய ஏற்பாட்டுக்காலத்தில், நூனின் குமாரனாகிய யோசுவா, இஸ்ரவேலின் சேனைக்கு படைத்தளபதியாயிருந்தார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, யோசுவாவைப்போல, நம்முடைய ஆத்தும இரட்சிப்புக்கு தளபதியாயிருக்கிறார் கிறிஸ்துவானவர் சாத்தானை தம்முடைய காலின்கீழ் நசுக்கிப்போட்டார். தம்மை விசுவாசிக்கிறவர்களை, இயேசுகிறிஸ்து பரமகானானுக்கு வழிநடத்துகிறார் அங்கே அவர்களுக்கு நித்திய இளைப்பாறுதலைக் கொடுக்கிறார்

நூனின் குமாரனாகிய யோசுவாவால் செய்ய முடியாத காரியங்களை, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, நமக்காக செய்கிறார். "யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால் பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல் யிருக்கமாட்டாரே" (எபி 4:8)

யோசுவா இந்தப் புஸ்தகத்தில் தன்னுடைய பகுதியைக் கானான் தேசத்திலுள்ள கில்காலில் எழுதினார். கி.மு 1646-1616 ஆகிய வருஷங்களுக்கு இடையில் நடைபெற்றிருக்கும் சம்பவம் இதில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தில் யோசு 24:29-33 ஆகிய வசனங்கள் ஒரு பின் இணைப்புப் பகுதியாகும். இந்தப் பகுதியை யார் எழுதியது எப்பொழுது எழுதியது என்னும் விவரம் தெரியவில்லை. யூதமார்க்கத்தின் பாரம்பரிய வரலாற்றின் பிரகாரம், யோசு 24:29-32 ஆகிய வசனங்களை எலெயாசாரும், யோசு 24:33 ஆவது வசனத்தை பினெகாசும் எழுதியதாகக் கூறுகிறார்கள்

இந்தப் புஸ்தகத்திலுள்ள பின் இணைப்புப் பகுதியையும், மேலும் ஒருசில வசனங்களையும் தவிர மற்ற வசனங்களை எழுதியவர் யோசுவா. இவர் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர். (எண் 14:8,16) மோசேக்குப் பின்பு, யோசுவா இஸ்ரவேல் புத்திரரின் தலைவரானார்

யோசுவாவின் புஸ்தகத்தில் இவருடைய பெயர் 168 இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேதாகமம் முழுவதிலும் யோசுவாவின் பெயர் 216 இடங்களில் காணப்படுகிறது. செப்துவஜிந்தில் யோசுவாவின் பெயர் "இயேசு""ஓங்ள்ன்ள்" என்று

மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கிரேக்க மொழி புதிய ஏற்பாட்டில் யோசுவாவின் பெயர் "இயேசு" என்றே உள்ளது. (அப் 7:45; எபி 4:8)

எண் 13:8,16 ஆகிய வசனங்களில் யோசுவா"ஓசேயா ஓங்ட்ர்ள்ட்ன்ஹ" ஹய்க் "ஞள்ட்ங்ஹ" என்று = அழைக்கப்பட்டிருக்கிறார். 1நாளா 7:27 ஆவது வசனத்தில் "ஓங்ட்ர்ள்ட்ன்ஹ" என்றும், இவருக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது

யோசுவா எகிப்தில் அடிமையாக இருந்தார். இவர் தன்னுடைய 110 ஆவது வயதில் மரித்தார். யோசேப்பு மரிக்கும்போது அவருடைய வயதும் 110 ஆகும் (யோசு 24:29). இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டு வெளியேறியபோது யோசுவா நாற்பது வயது நிரம்பியவராக இருந்திருக்க வேண்டும்

இஸ்ரவேல் புத்திரரின் வரலாற்றில் அவர்களுடைய தேசத்தின் வரலாற்று ஆவணங்களை வேதபாரகர்கள் பிரதியெடுத்து எழுதினார்கள். இவர்களைத் தவிர தீர்க்கதரிசிகளும் இஸ்ரவேல் புத்திரரின் வரலாற்றை எழுதினார்கள்

யோசுவாவின் புஸ்தகத்திலுள்ள பின் இணைப்புப் பகுதியைத் (யோசு 24:29-33) தவிர மற்ற அனைத்து வசனங்களையும் யோசுவா எழுதியிருக்க வேண்டும்

ஒத்னியேலின் வரலாறு யோசு 15:16-19 ஆகிய வசனங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இவர் யோசுவாவிற்குப் பின்பு இஸ்ரவேலின் முதலாவது நியாயாதிபதி ஆனவர். யுத்தத்தில் வெற்றி பெற்று இவர் தன்னுடைய மனைவியைப் பெற்றுக் கொண்டவர் (நியா 1:1,10-15). இவருடைய வரலாறு யோசுவாவின் மரணத்திற்குப் பின்பே நடைபெறுகிறது. அதுபோலவே யோசு 19:47 ஆவது வசனத்தில் தான் லாயீசை ஜெயித்த வரலாற்றைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது இந்தச் சம்பவமும், யோசுவாவின் மரணத்திற்குப் பின்பே நடைபெறுகிறது (நியா 18). தன்னுடைய மரணத்திற்குப்பின்பு நடைபெற்ற சம்பவங்களை யோசுவா இந்தப் புஸ்தகத்தில் எப்படி எழுதியிருக்க முடியும் என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள்.

யோசுவாவின் புஸ்தகத்தினுடைய ஆசிரியர் யோசுவா இந்தப் புஸ்தகத்தில் ஒருசில வசனங்களைத் தவிர எலெயாசார், பினெகாஸ், சாமுவேல் தீர்க்கதரிசி வேதபாரகர், இஸ்ரவேலில் பிரதி எழுதுகிறவர்கள் ஆகியோரும் ஒருசில வசனங்களை எழுதியிருக்கலாம் பற்றிய நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கண்ணாரக்கண்டவர்கள் எழுதியிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது (யோசு 1:10-18; யோசு 2:1;யோசு 3:1-17)

(யோசு 24:26). இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் பல சம்பவங்கள் யோசுவாவைப்

எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரர் மீட்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சி இந்தப் புஸ்தகத்தில் காணப்படுகிறது. இஸ்ரவேல் புத்திரரின் மீட்பை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம். ஒன்று எகிப்து தேசத்தை விட்டு வெளியேறுவது. மற்றொன்று கானான் தேசத்திற்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொள்வது. (உபா 6:23)

வாக்குத்தத்த தேசத்தைப் பற்றி ஆபிரகாரம், ஈசாக்கு யாக்கோபு, மோசே ஆகியோருக்குக் கூறப்பட்டிருக்கும் வாக்குத்தத்தங்கள் நிறைவேறிய சம்பவங்கள் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கானான் தேசத்தை இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்ததும், அதை இஸ்ரவேலின் கோத்திரத்தாருக்கு பங்கு பிரித்து கொடுக்கப்பட்ட சம்பவங்களும், இதில் கூறப்பட்டிருக்கிறது

யோசுவாவின் புஸ்தகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் பன்னிரண்டு அதிகாரங்கள் உள்ளன யோசு 1-12 ஆகிய அதிகாரங்களில் கானான் தேசத்தை வெற்றி பெறுவதும் யோசு 13-24 ஆகிய அதிகாரங்களில் கானான் தேசத்தை இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாருக்கும் பிரித்துக் கொடுப்பதும் விவரிக்கப்பட்டிருக்கிறது. யோசு 1:1-9 ஆகிய வசனங்கள் இந்தப் புஸ்தகத்தின் முன்னுரையாகும். யோசு 24:29-33 ஆகிய வசனங்கள் இந்தப் புஸ்தகத்தின் முடிவுரையாகும்.

யோசுவாவின் புஸ்தகம் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் எழுதப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டின் பல புஸ்தகங்களில் யோசுவாவின்

புஸ்தகத்தில் காணப்படும் வசனங்கள் மேற்கோளாகக் கூறப்பட்டிருக்கின்றன

பொருளடக்கம்

இஸ்ரவேலின் இரண்டாவது தலைவர்

1. யோசுவாவின் தலைமைத்துவ அபிஷேகம் (1:1-9)

2. யோசுவா - இஸ்ரவே-ன் தீர்க்கதரிசியும் தலைவரும் (1:10-15)

3. யோசுவாவின் தலைமைக்கு கீழ்ப்படிந்து நடப்பதாக இஸ்ரவேலர்கள் வாக்குப் பண்ணினார்கள் (1:16-18)

 வேவுகாரர்கள் இரண்டாம் முறையாக அனுப்பப்பட்டார்கள்

1. இரண்டு வேவுகாரர்கள் (2:1)

2. ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களை பாதுகாத்தாள் (2:2-7)

3. வேவுகாரர்களின் வெற்றி (2:8-11)

4. வேவுகாரர்கள் ராகாப்போடு உடன்படிக்கை பண்ணினார்கள் (2:12-20)

5. வேவுகாரர்கள் திரும்பி வந்து அறிக்கை சமர்ப்பித்தார்கள் (2:21-24)

 யோர்தான் மீது பிரயாணம்

1. யோர்தான் மட்டும் வந்தார்கள் (3:1)

2. இஸ்ரவேலருக்கு யோசுவா கொடுத்த கட்டளை (3:2-6)

3. யோசுவாவுக்கு தேவன் கூறிய தீர்க்கதரிசனம் (3:7-8)

4. இஸ்ரவேலருக்கு யோசுவா கூறிய தீர்க்கதரிசனம் (3:9-13)

5. யோர்தானின் தண்ணீர் குவியலாக நின்றது - முதலாவது அற்புதம் (3:14-16)

6. யோர்தான் வழியாக கடந்து போனார்கள் (3:17)

7. யோர்தானைக் கடந்ததற்கு இரண்டு நினைவு அடையாளங்கள் (4:1-10)

8. யோர்தானை அணி அணியாக கடந்து போனார்கள் (4:11-13)

9. கர்த்தர் யோசுவாவை மேன்மைப்படுத்தினார் (4:14)

10. யோர்தானின் தண்ணீர் மறுபடியும் திரும்பிற்று # இரண்டாவது அற்புதம் (4:15-18)

11. இஸ்ரவேலர்கள் பாளையமிறங்கியதும் கில்கா-ல் ஞாபகச் சின்னம் நாட்டினார்கள் (4:19-20)

12. ஞாபகச்சின்னத்தின் நோக்கம் (4:21-24)

13. யோர்தானில் நடைபெற்ற அற்புதத்தை கேட்டது முதல் எமோரியர், கானானியர் ஆகிய இராஜாக்களின் இருதயம் கரைந்தது (5:1)

14. விருத்தசேதனம் (5:2-9)

15. கானானில் முதலாவது பஸ்கா (5:10)

16. உணவில் மாற்றம் - மன்னா பெய்யாமல் ஒழிந்தது நாற்பது வருஷங்களாக நடைபெற்ற அற்புதம் முடிவுபெற்றது (5:11-12)

17. கர்த்தருடைய சேனையின் அதிபதி (5:13-15) ஒய. கானானை வெற்றி பெற்றார்கள்

1. எரிகோவின் வீழ்ச்சி

(1) யுத்தத்திற்கான திட்டம் (6:1-7)

(2) முற்றுகை - எரிகோவை அமைதியாக சுற்றி வந்தார்கள் (6:8-15)

(3) எரிகோவில் செய்யவேண்டியது பற்றிய கட்டளை (6:16-19)

(4) எரிகோவின் அலங்கம் இடிந்து விழுந்தது - மூன்றாவது அற்புதம் (6:20)

(5) எரிகோ அழிந்தது (6:21-24)

(6) ராகாபோடு ஏற்படுத்திய உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது (6:25)

(7) எரிகோவின்மீது சாபம் (6:26-27)

2. ஆயியில் தோல்வி

(1) காரணம் - ஆகானின் பாவம் (7:1)

(2) இஸ்ரவே-ன் இரண்டாவது தோல்வி (7:2-5)

(3) யோசுவாவின் ஜெபம் (7:6-9)

(4) தேவனுடைய பதில் (7:10-11)

(5) பாவம் நியாயந்தீர்க்கப்படவேண்டும் (7:12-15)

(6) பாவம் செய்தது ஆகான் என்று

கண்டுபிடித்தார்கள் (7:16-18)

(7) ஆகான் தன் பாவத்தை அறிக்கை பண்ணினான் (7:19-21)

(8) ஆகானின்மீது நியாயத்தீர்ப்பு (7:22-26)

3. ஆய் பட்டணத்தின் வீழ்ச்சி

(1) திட்ட மிடுதல் (8:1-8)

(2) திட்டம் செயற்படுத்தப்படுதல் (8:9-19)

(3) ஆய் பட்டணத்தின்மீது முழுமையான வெற்றி (8:20-29)

4. வெற்றியை கொண்டாடினார்கள் (8:30-31)

5. நியாயப்பிரமாணத்தில் சொல்-ய ஆசீர்வாதமும் சாபமும் (8:32-35)

6. கானானியர் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண க்கூடினார்கள் (9:1-2)

7. யோசுவாவை சூழ்ச்சியினால் வென்றார்கள்

(1) கிபியோன் குடிகளின் தந்திரம் (9:3-5)

(2) யோசுவாவிடம் கூறப்பட்ட உடன்படிக்கை (9:6-8)

(3) யோசுவாவை ஏமாற்றினார்கள் (9:9-13)

(4) யோசுவா தேவனிடம் ஜெபிக்காததினால் ஏமார்ந்தான் (9:14-15)

(5) ஏமார்ந்ததைக் கண்டுபிடித்தான் (9:16-17)

(6) யோசுவாவின்கீழ் இஸ்ரவேலர்கள் முதன்முறையாக முறுமுறுத்தார்கள் (9:18-19)

(7) ஏமாற்றியதற்கு தண்டனை (9:20-27)

8. கிபியோனில் வெற்றி

(1) கிபியோனுக்கெதிராக கூட்டணி (10:1-5)

(2) கிபியோனின் மனுஷர் யோசுவாவிடம் உதவிபுரியுமாறு கேட்டார்கள் (10:6-7)

(3) மூன்றுவிதமான வெற்றி

(அ) இஸ்ரவே-ன் பகுதி (10:8-9)

(ஆ) தேவனுடைய பகுதி # நான்காவது அற்புதம் # வானத்தி-ருந்து பெரிய கற்கள் விழுந்தன (10:10-11)

(இ) தேவனுடைய பகுதி # ஐந்தாவது அற்புதம் # சந்திரனும், சூரியனும் ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது (10:12-14)

(4) ஐந்து இராஜாக்கள்மீது வெற்றி (10:15-27)

9. மக்கெதாவில் வெற்றி (10:28)

10. -ப்னாவில் வெற்றி (10:29-30)

11. லாகீசில் வெற்றி (10:31-32)

12. கேசேரில் வெற்றி (10:33)

13. எக்லோனில் வெற்றி (10:34-35)

14. எபிரோனில் வெற்றி (10:36-37)

15. தெபீருவில் வெற்றி (10:38-39)

16. தென்தேசத்தில் வெற்றிகள் (10:40-43)

17. மேரோமில் வெற்றி (11:1-9)

18. ஆத்சோரில் வெற்றி (11:10-11)

19. யோசுவாவின் முழு வெற்றிகள் (11:12-23)

யோசுவா வெற்றி பெற்ற இராஜாக்களின் பட்டியல்

1. யோர்த்தானுக்கு கிழக்கில் இரண்டு இராஜாக்கள் (12:1-6)

2. கானானின் முப்பத்தொன்று இராஜாக்கள் (12:7&24)

கானான் தேசத்தை பங்கிடுதல்

1. தேசத்தை பங்கிடுவது பற்றி கர்த்தருடைய செய்தி 

(1) இன்னும் வெற்றி பெறாத தென்பக்கத்தின்

நிலங்கள் (13:1-4)

(2) இன்னும் வெற்றி பெறாத வடக்குபக்கத்தின் நிலங்கள் (13:5-6)

(3) யோர்த்தானுக்கு மேற்குப்பக்கத்தில் ஒன்பதரை கோத்திரத்தாருக்கு பங்குவீதம் (13:7)

(4) யோர்தானுக்கு கிழக்கில் இரண்டரை கோத்திரத்தாருக்கு பங்குவீதம் (13:8-12)

(5) இஸ்ரவேலரின் தோல்வி (13:13)

(6) லேவியரின் கோத்திரத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை (13:14)

(7) ரூபன் புத்திரருக்கு சுதந்திரம் # பாலாமின் மரணம் (13:15-23)

(8) காத் புத்திரரின் கோத்திரத்திற்குச் சுதந்திரம் (13:24-28)

(9) மனாசே புத்திரரின் கோத்திரத்திற்குச் சுதந்திரம் (13:29-33)

(10) கானான் தேசத்தைப் பங்கு பிரித்தவர்கள் (14:1)

(11) ஒன்பதரை கோத்திரங்களுக்குச் சுதந்திரம் (14:2-5)

சில குறிப்பிட்ட பங்குபாக பிரிவினைகள்

(1) காலேபின் சுதந்திரம் (14:6-15)

(2) யூதாவின் எல்லைகள் (15:1-12)

(3) காலேபு தன் சுதந்திரத்தில் குடியேறுதல் (15:13-19)

(4) யூதாவின் பட்டணங்கள் (15:20-62)

(5) யூதாவின் தோல்வி (15:63)

(6) மனாசே, எப்பிராயீம் ஆகியோரின் எல்லைகள் (16:1-4)

(7) எப்பிராயீமின் எல்லைகள் (16:5-9)

(8) எப்பிராயீமின் தோல்வி (16:10)

(9) மனாசேயின் எல்லைகள் (17:1-11)

(10) மனாசேயின் தோல்வி - யோசுவாவின்கீழ் இஸ்ரவேலர்கள் இரண்டாம் முறையாக முறுமுறுத்தார்கள் (17:12-18)

(11) சீலோவிலே ஆசரிப்புக்கூடாரத்தை நிறுவினார்கள் (18:1)

(12) இன்னும் சுதந்தரிக்க வேண்டிய தேசத்தைப் பற்றிய கணக்கெடுப்பு (18:2-9)

(13) சீட்டுப்போட்டு பங்கிடுதல் (18:10)

(14) பென்யமீன் புத்திரரின் எல்லைகள் (18:11-20)

(15) பென்யமீன் # இருபத்தாறு பட்டணங்களும், அவைகளின் கிராமங்களும் (18:21-28)

(16) சிமியோன் புத்திரரின் கோத்திரத்தின் சுதந்திரம் பதின்மூன்று பட்டணங்களும், அவைகளின் கிராமங்களும் (19:1-9)

(17) செபுலோன் புத்திரரின் சுதந்திரம் # பன்னிரெண்டு பட்டணங்களும், அவைகளின் கிராமங்களும் (19:10-16)

(18) இசக்கார் புத்திரரின் சுதந்திரம் # பதினாறு பட்டணங்களும், அவைகளின் கிராமங்களும் (19:17-23)

(19) ஆசேர் புத்திரருடைய கோத்திரத்தின் சுதந்திரம் - இருபத்திரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் (19:24-31)

(20) நப்த- புத்திரரின் சுதந்திரம் - ஒன்பது பட்டணங்களும், அவைகளின் கிராமங்களும் (19:32-39)

(21) தாண் புத்திரருடைய கோத்திரத்தின் சுதந்திரம் பதினெட்டு பட்டணங்களும், அவைகளின் கிராமங்களும் (19:40-48)

(22) யோசுவாவின் சுதந்திரம் (19:49-51)

(23) ஆறு அடைக்கலப்பட்டணங்கள் (20:1-9)

(24) லேவியரின் சுதந்திரம்

(அ) லேவியரின் விண்ண ப்பம் (21:1-3)

(ஆ) கோகாத் புத்திரர் # இருபத்திமூன்று பட்டணங்கள் (21:4-5)

(இ) கெர்சோன் புத்திரர் - பதின்மூன்று பட்டணங்கள் (21:6)

(ஈ) மெராரி புத்திரர் - பன்னிரெண்டு பட்டணங்கள் (21:7-8)

(உ) யூதா, சிமியோன், பென்யமீன் ஆகியோருடைய சுதந்திரங்களில் கோகாத் புத்திரரின் பங்குவீதம் # பதின்மூன்று பட்டணங்கள் (21:9-19)

(ஊ) எப்பிராயீம், தாண், மனாசே ஆகியோருடைய சுதந்திரங்களில் கோகாத் புத்திரரின் பங்குவீதம் - பத்து பட்டணங்கள் (21:20-26)

(எ) மனாசே, இசக்கார், ஆசேர், நப்த ஆகியோருடைய சுதந்திரங்களில் கெர்சோன் புத்திரரின் பங்குவீதம் - பதின்மூன்று பட்டணங்கள் (21:27-33)

(ஏ) செபுலோன், ரூபன், காத் ஆகியோருடைய சுதந்திரங்களில் மெராரி புத்திரரின் பங்குவீதம் - பன்னிரெண்டு பட்டணங்கள் (21:34-40)

(ஐ) இஸ்ரவேல் முழுவதிலும் லேவியரின் பங்குவீதம் - நாற்பத்தெட்டு பட்டணங்கள் (21:41-45)

 இஸ்ரவே-ல் முதலாவது உள்நாட்டு குழப்பம்

1. யோசுவா இஸ்ரவேலரை தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான் (22:1-8)

2. யோர்தானின் கிழக்கு பகுதியில் இரண்டரை கோத்திரத்தார் பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள் (22:9-10)

3. யோர்தானுக்கு மேற்கி-ருந்த ஒன்பதரை கோத்திரத்தார் அவர்களோடு யுத்தம்பண்ண விரும்பினார்கள் (22:11-12)

4. பதினொறு பிரபுக்களை பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அனுப்பினார்கள் (22:13-15)

5. இரண்டரை கோத்திரத்தார்மீது குற்றச்சாட்டு (22:16-20)

6. பீடத்தைப் பற்றிய விளக்கம் (22:21-29)

7. இஸ்ரவேலருக்குள்ளே யுத்தம் தவிர்க்கப்பட்டது (22:30-34)

யோசுவாவின் கடைசி ஆலோசனைகள்

1. தீர்க்கதரிசியாகிய யோசுவா இஸ்ரவேலருக்குக் கூறியவை (23:1-16)

2. இஸ்ரவேலர் கூடிய இடம் (24:1)

3. தீர்க்கதரிசியாகிய யோசுவா இஸ்ரவேலருக்கு இரண்டாம் முறையாக கூறியவை (24:2-20)

4. யோசுவாவின் உடன்படிக்கை (24:21-25)

5. யோசுவாவின் உடன்படிக்கை ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது (24:26-28)

6. யோசுவாவின் மரணம் (24:29-30)

7. இஸ்ரவேல் சிறிது காலம் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து ஜீவித்தார்கள் (24:31)

8. யோசேப்பின் எலும்புகளை அடக்கம் பண்ணினார்கள் (24:32)

9. எலெயாசாரின் மரணம் (24:33)


God bless you 



Umn ministry  Chennai 






Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*