“நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.” (சங்கீதம் 64:10)

இந்த உலகத்தில் பொதுவாக மகிழ்ச்சியை தேடுகிற மனநிலை என்பது எல்லோருக்குமே உரிய காரியம். இந்த உலக மக்கள் மகிழ்ச்சியை தேடுகிறார்கள், ஆனால் அவர்கள் உலக வழிகளில் தேடுகிறார். ஆனால் தேவனுடைய பிள்ளை என்பவன் எப்பொழுதும் கர்த்தருக்காக மாத்திரமே மகிழ்ச்சியை தேடுகிறவன். அவருக்குள் மட்டுமே நிலையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை அறிந்து இருக்கிறவன். நம் வாழ்க்கையில் தேவனோடு கொண்டிருக்கிற உறவிலும், அவரைப்பற்றுகிற விசுவாசத்திலும் மாத்திரமே உண்டு. இந்த மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு கிடைக்கக்கூடிய ஒன்று. உயர்வு, தாழ்வு என எதுவாக  இருந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது கர்த்தருக்குள் மாத்திரமே உண்டு. ஏன் என்று கேட்டால் நீதிமான் கர்த்தரை நம்புகிறவன். இந்த இடத்தில் கர்த்தருக்குள் என்று சொல்லுகிறார். அதாவது தேவனின் உண்மையான தன்மைகள், வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற அவருடைய குண நலன்கள் பற்றி பார்க்கும் பொழுது கர்த்தர் நல்லவர், அவர் கிருபை உள்ளவர். அவருடைய கரம் என்னை வழிநடத்தும். வேதத்தில் தேவனுக்கும் நமக்கும் இடையில் உள்ள எந்த ஒரு தடையாக இருந்தாலும், பாவமாக இருந்தாலும் அதை நாம் நீக்கி போட நம்முடைய வாழ்க்கையில் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.  வாழ்க்கையில் தேவனை துக்கப்படுத்தும் படியான காரியங்கள் இருக்குமானால், அவைகளை விலக்கி போட்டு, தேவனோடு கொண்டிருக்கிற உறவை எப்பொழுதும் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். நாம் ஜாக்கிரதையாக இருக்கும்பொழுது நிச்சயமாக நீதிமானாக நமக்குள் மகிழ்ச்சி விதைக்கப பட்டிருக்கிறது என்பதை நாமும் கூட ஆக சொல்ல முடியும். அப்பொழுது அவரை நம்புகிற நம்பிக்கை என்பது உண்மையானதும் உயிருள்ளதுமாய் காணப்படுகிற ஒன்றாக இருக்கும்.