Epistles to Timothy தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்

0

 



தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்


தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் குறித்த பார்வை:

I. யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்

II. யாருக்கு எழுதப்பட்டது?

III. எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்

பவுல் எழுதிய 13 கடிதங்களில் 9 கடிதங்கள் சபைகளுக்கும், மற்ற 4 கடிதங்களில், 3 கடிதங்கள் சபையை நடத்தும்படி நியமிக்கப்பட்டிருந்த தனிநபர்களுக்கும், 1 கடிதம் கொலோசேய பட்டணத்தில் சபைகூடிவந்த வீட்டின் தலைவருக்கும் எழுதப்பட்டவைகளாகும். இதுவரை சபைகளுக்கு எழுதப்பட்டவைகளைக் குறித்துப் பார்த்தோம். இனிமேல் தனிநபர்களுக்கு எழுதப்பட்டவைகளைக்குறித்துப் பார்க்கவிருக்கிறோம்.



எழுதிய ஆசிரியர்: பவுல்

•1தீமோ-1: 1 நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல் எழுதுகிறதாவது.

•2தீமோ-1: 1 கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,

நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவன்: தேவன் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நம்மை இரட்சித்தார். இப்பொழுதும் உலக மக்களை இரட்சித்துக்கொண்டிருக்கிறார். (பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும், பாதாளத்தின் தண்டனையிலிருந்தும், சாத்தானின் கட்டுப்பாட்டிலிருந்தும் நாம் காப்பாற்றப்பட்டிருக்கிறோம். இதுவே இரட்சிப்பு என்று அழைக்கப்படுகிறது.

நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்து: "நம்பிக்கை" என்பது இனிமேல் வரவிருப்பதோடு தொடர்புடையதாகும். அவர் இந்தப் பூமிக்குவந்து, ராஜாதிராஜாவாக ஆளுகைசெய்யவிருக்கிறார். நாமும் அவேராடு ஆளுகைசெய்வோம், அவரை முகமுகமாகப் பார்ப்போம். அல்லேலூயா!

தேவனும், இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டதால், பவுல் அதற்குக் கீழ்படிந்து அப்போஸ்தலனாக ஊழியம்செய்தார் என்று பார்க்கிறோம். தேவகட்டளைக்குக் கீழ்படிதல் நமக்கு மேலான பாக்கியமாக இருக்கிறது. சபையைக் கண்காணிக்கும்படி தான் நியமித்த கண்காணிகளாகிய சபைமூப்பர்களுக்கு (Pastors) கற்றுக்கொடுத்து, ஆலோசனைகொடுத்து வழிநடத்துவது பவுலின் தரிசனமாக இருந்தது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய 2 கடிதங்களும், தீத்துவுக்கு எழுதிய 1 கடிதமும் மேய்ப்பருக்கான கடிதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிலர், பிலேமோனுக்கு எழுதப்பட்ட கடிதத்தையும் மேய்ப்பருக்கான கடிதத்தோடு இணைத்தே பார்க்கிறார்கள். பிலேமோன் ஒரு மேய்ப்பனாக இல்லாதிருந்தபோதும் அதில் எழுதப்பட்டிருக்கும் ஆலோசனைகள் மேய்ப்பருக்கு உதவக்கூடியவைகளாக இருப்பதால் அவ்வாறு அழைக்கிறார்கள்.



தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட முதலாவது கடிதம் கி.பி.63ல் எழுதப்பட்டது. 

இதுவும் பவுல் சிறையிலிருந்து எழுதிய கடிதமாக இருக்கலாம். தன்னுடைய முதிர்வயதில், இளம் ஊழியனுக்கு மேய்ப்பனின் ஊழியத்தைக்குறித்த விபரங்களைப் பவுல் எழுதியிருக்கிறார். ஒரு ஆவிக்குரிய தகப்பன் தன்னுடைய ஆவிக்குரிய மகனுக்கு ஊக்கத்தையும், ஆலோசனையையும் கொடுக்கும் கடிதமாக இது இருக்கிறது.

எழுதப்பட்ட நபர்:

1தீமோ-1: 2 விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு.

2தீமோ-1: 2 பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது.

தீமோத்தேயு பவுலுடைய இளம் சீடராவார். ஒரு புறஜாதியாரான தகப்பனுக்கும் யூதப்பெண்ணாகிய தாய்க்கும் பிறந்தவர். தீமோத்தேயு என்ற பெயருக்கு தேவனைக் கனம்பண்ணுதல் அல்லது தேவனால் கனம்பண்ணப்படுதல் என்று அர்த்தமாகும்.

†அப்-16: 1 அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்தீராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான், அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.

தீமோத்தேயுவின் பாட்டியும், தாயும் தேவபக்தியும், விசுவாசமுமுள்ளவர்களாக வாழ்ந்து, தங்கள் குமாரனையும் விசுவாசத்தில் வளர்த்திருந்தார;கள்.

†2தீமோ-1: 5 அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது.

தன்னுடைய முதலாவது மிஷனரிப் பயணத்தின்போது, பவுல் தீமோத்தேயுவைப் பார்த்தார். லீஸ்திராவில் ஊழியம்செய்த நாட்களில் இவனுடைய வீட்டில்தான் பவுல் தங்கியிருந்திருக்கிறார். அந்த நாட்களில்தான் பவுல் தீமோத்தேயுவைக் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். தான் தீமோத்தேயுவை இரட்சிப்பிற்குள் வழிநடத்தியதால் அவனைத் தன்னுடைய விசுவாசத்தின் குமாரன் என்றும் அழைக்கிறார். பவுலுடைய ஊழியத்தைப் பார்த்து தீமோத்தேயு ஆச்சரியப்பட்டு அதிகமாகக் கவரப்பட்டார். எனவே, தன்னுடைய இரண்டாவது மிஷனரிப் பயணத்தின்போது பவுல் தீமோத்தேயுவைத் தன்னோடு ஊழியத்திற்கு அழைத்துச்சென்று, எபேசுவில் சபை ஆரம்பிக்கப்பட்டபோது தீமோத்தேயுவை அந்த சபைக்கு ஊழிக்காரனாக நியமித்தார்.

எழுதப்பட்டதன் நோக்கம்:

தீமோத்தேயு எபேசு பட்டணத்து சபைக்கு மேய்ப்பனாக இருந்த நாட்களில், எபேசு பட்டணத்து மக்கள் அதிகமாக மூடநம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்தார்கள். சபைக்குள்ளும் இப்படிப்பட்ட தன்மை நுழைந்தது. தீமோத்தேயு வாலிபனாக இருந்தபடியால், பலர் அவரை அசட்பைண்ணினார்கள். அத்துடன் யூதமார்க்கத்தவர்கள் நியாயப்பிரமாணத்திற்கேதுவான கள்ளஉபதேசங்களையும் பரப்பிக்கொண்டுவந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் உபதேசத்திற்குரியவற்றில் சபையை நேர்படுத்தி, தீமோத்தேயுவின் ஊழியஅழைப்பை நிலைப்படுத்துவதற்காக பவுல் இந்தக் கடிதத்தை எழுதினார்.

தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட முதல் கடிதத்தின் தொகுப்பு:

இதை இரண்டு பாகமாகப் பிரிக்கலாம்:

∗பாகம்-1: அதிகாரங்கள் 1 முதல் 3 முழு சபைக்கும் உரிய அறிவுரைகள்

∗பாகம்-2: அதிகாரங்கள் 4 முதல் 6 ஒவ்வொரு தனிநபருக்கும் உரிய அறிவுரைகள்

6 அதிகாரங்களிலும் காணப்படுகிற முக்கிய குறிப்புகள்:



I. அதிகாரம்-1: 1-2 முகவுரை

II. அதிகாரம்-1: 3-20 கள்ள உபதேசங்களைக்குறித்த எச்சரிக்கை

வேற்றுமையான உபதேசங்களைப் போதித்தல் (1: 3)

வீண் பேச்சுகளுக்கு இடம்கொடுத்தல் (1: 6)

நியாயப்பிரமாணப் போதகர்கள் (1: 7)

நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும், உடையவனாயிரு (1: 18)

III. அதிகாரங்கள் 2-3: சபையின் நடத்தை

1. தேவன் ஜெபத்தை விரும்புகிறார் (2: 1-7)

2. சபையில் ஆண்களின் செயல்பாடுகள், பெண்களின் செயல்பாடுகள் (2: 8-15)

அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன். 9. ஸ்திரிகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், 10. தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரிகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும். 11. ஸ்திரியானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். 12. உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரியானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை, அவள் அமைதலாயிருக்கவேண்டும். 13. என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். 14. மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரியானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். 15. அப்படியிருந்தும், தெளிந்தபுத்தியோடு விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

3. கண்காணிகளின் (பாஸ்டர்கள், மூப்பர்கள், Bishops) தகுதிகள்: (3: 1-7)

3:1-7 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. 2. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். 3. அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசையில்லாதவனுமாயிருந்து, 4. தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். 5. ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? 6. அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. 7. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.

4. உதவிக்காரர்களின் (Deacons) தகுதிகள் (3: 8-13)

5. கடிதத்தை எழுதுவதற்கான காரணம் (3: 14-15)

1தீமோ-3: 15 தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன், அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.

6. துதியின் கீதம் (3: 16)

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் (இயேசுவின் பிறப்பு), ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார் (இயேசுவைக்குறித்த தீர்ப்பு), தேவதூதர்களால் காணப்பட்டார் (இயேசுவின் உயிர்ப்பு), புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார் (இயேசுவைக்குறித்த சுவிசேஷ அறிவிப்பு), உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார் (இயேசுவால் வரும் இரட்சிப்பு), மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார் (ராஜாவாக இயேசுவின் 2ஆம் வருகை).

IV. அதிகாரம்-4 தீமோத்தேயுவின் பொறுப்பு: கள்ளப்போதகங்களையயும் போதகர்களையும் பகுத்தறியவேண்டும்.

அ. வேதபுரட்டுகள் வரும்-கவனமாயிரு (4: 1-5)

ஆ. சத்தியத்தைப் போதி, சீர்கேடான வீண்பேச்சுக்களைத் தவிர்த்திடு (4: 6-11)

இ. முன்மாதிரியாயிரு (4: 12-16)

1தீமோ-4: 12 உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. (6 காரியங்கள்).

V. அதிகாரம்-5 முதல் 6: 2 சபையிலே காணப்பட வேண்டிய உறவுகள்: (நடத்தைமுறைகள்)

1. முதிர்வயதுள்ள ஆண்கள், தகப்பனைப்போல (5: 1

2. வாலிபர்கள், சகோதரரைப்போல (5: 1)

3. முதிர்வயதுள்ள பெண்கள், தாயைப்போல (5: 2)

4. வாலிபப் பெண்கள், சகோதரிகளைப்போல (5: 2)

5. விதவைகள் (5: 3-16)

6. மூப்பர்கள்-மேய்ப்பர்கள் (5: 17-20)

7. புதிய நபர்கள் (5: 21-22)

8. தீமோத்தேயுவுக்கு தனிப்பட்ட ஆலோசனை (5: 22-25)

9. வேலைக்காரர்கள் (6: 1-2)

VI. அதிகாரம்-6: 3-19 பணஆசையும், தேவபக்தியும்

அ. தேவபக்தியின் தன்மை (6: 3-10)

ஆ. மாசற்ற வாழ்வு (6: 11-16)

6: 11-12 நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி நீதியையும், தேவபக்தியையும், விசுவாசத்தையும், அன்பையும், பொறுமையையும், சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. 12. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள், அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

இ. நம்முடைய ஐசுவரியங்கள் (செல்வங்கள்) நித்தியத்திற்காகப் பயன்படுத்தப்படுவதாக (6: 17-19)

VII. அதிகாரம்-6: 20-21 முடிவுரை

1தீமோ-6: 20-21 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 21. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனாh;கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.

•நம்மைத் திசைதிருப்புதவற்கு பலகாரியங்கள் வரும், ஆனால் நாம் கற்றுக்கொண்டு, பெற்றுக்கொண்டதைக் கடைசிவரையில் காத்துக்கொள்வோமாக!

1தீமோ-4: 16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக் கூடாதவருமாயிருக்கிறவர், அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட 2ஆவது 




 தீமோத்தேயுவுக்கு  எழுதப்பட்ட கடிதங்கள்


I.    தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட 2ஆவது கடிதத்தின் தொகுப்பு:

தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட 2ஆவது கடிதம், பவுலால் எழுதப்பட்ட கடைசிக் கடிதமாகும். தான் நீரோ மன்னனால் இரத்தசாட்சியாகக் கொல்லப்படுவதற்கு முன்பாக இந்தக்கடிதத்தை எழுதியிருக்கிறார். தன்னுடைய முதல் மிஷனரிப் பயணத்தின்போது நீரோ மன்னனுக்கு பவுல் சுவிசேஷத்தை அறிவித்திருந்தார். சுவிசேஷத்தை ஏற்க மறுத்தல், சாத்தானுக்குக் கதவைத் திறக்கும் என்பதற்கு இவனுடைய வாழ்வு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. நீரோ மன்னன் அடிக்கடி பைத்தியம் பிடித்தவனைப்போல நடந்துகொண்டிருந்தானாம். சிலநேரங்களில் நடுஇராத்திரியில் நிர்வாணமாக தெருவில் ஓடுவானாம். சிலநேரத்தில் பெண்களைப்போல ஆடை அணிந்துகொண்டு நடந்து செல்வானாம். யாராவது அவனைத் தடுத்தால் உடனே அவர்களைக் கொன்றுபோடும்படி கட்டளையிடுவான். அசுத்தஆவியால் அவன் பிடிக்கப்பட்டிருந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். இந்த நீரோதான் கிறிஸ்தவர்களை சிங்கங்களுக்கு இரையாகப்போடும் முறையை ஆரம்பித்துவைத்தான். சிறையிலிருந்தபோது தன்னுடைய ஆவிக்குரிய குமாரனுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறார். மரணத்தைக்குறித்து அல்ல, மாறாக ஜீவனைக்குறித்தே பவுல் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

2தீமோ-1: 1 கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப் பற்றிய வாக்குத்தத்தத்தின்படி.

ஒப்புக்கொடுத்தல் என்பது இந்தக் கடிதத்தின் தலைப்பாகும்.

†2தீமோ-1: 12 அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன். ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை, ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன். (பவுல் தன் வாழ்வைக் கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்திருந்தார்)

†2தீமோ-1: 14 உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள். (தீமோத்தேயுவுக்கு நற்பொருள் ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தது)

†2தீமோ-2: 2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.

பவுல் கடந்துசென்ற பாடுகள், மற்றும் உபத்திரவங்களால், பயத்தினிமித்தம் சோர்வடைந்தவனாக, ஊழியத்தைவிட்டுவிட்டு, எபேசுவிலிருந்து தனது சொந்த ஊராகிய லிஸ்திராவுக்குத் திரும்பிவிடலாம் என்று தீமோத்தேயு நினைத்தான். அப்படிப்பட்ட தருணத்தில், பவுல் அவனைத் திடப்படுத்தும்படி இதை எழுதி அனுப்புகிறார். தேவன் கொடுத்த ஊழியத்தை நிறைவேற்று, வரத்தை அன்லமூட்டி எழுப்பிவிடு என்று பவுல் ஊக்கப்படுத்துகிறார்.

†2தீமோ-1: 6-7 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். 7. தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும், அன்பும், தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

I. அதிகாரம்-1: 1-2 முகவுரை

II. அதிகாரம்-1: 3-18 தீமோத்தேயுவோடு பவுலின் உறவு

1. தீமோத்தேயுவைக்குறித்து பவுலின் வாஞ்சையும், பாராட்டுதலும் (1: 3-5)

2. ஊழியத்தைக்குறித்து உற்சாகப்படுத்துதல் (1: 6-18)

III. அதிகாரம்-2 முதல் 4: 5 வரை: மற்றவர்களுடனுள்ள உறவைக்குறித்த ஆலோசனைகள்

1. உண்மையுள்ள வார்த்தையை, பிறருக்குப் போதிக்கிற உண்மையுள்ள மனிதரிடம் ஒப்புவிப்பாக (2: 1-13)

2தீமோ-2: 2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.

2. ஒரு போர்வீரனாக தீங்கநுபவி (2: 3-6)

3. பாடுகளைச் சகித்தால் ஆளுகையும்செய்வோம் (2: 7-13)

4. கள்ளப்போதகர்களைக்குறித்து எச்சரிக்கையாயிரு (2: 14-21)

5. வாலிபத்திற்குரிய இச்சைக்கு விலகிஓடு (2: 22-23)

6. சாந்தமும், பொறுமையும் உடையவனாக இரு (2: 24-26)

7. கடைசிநாட்களின் தீமைகள் (3: 1-9)

மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர் களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறுசெய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 6. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, 7. எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். 8. யந்நேயும் யம்பிரேயும் (பார்வோனின் மந்திரவாதிகள்) மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள், இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். 9. ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை, அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்.

8. நீதியுள்ள வாழ்க்கை வாழ்ந்திடு (3: 10-17)

அ. உபத்திரவங்கள் வரும் (3: 10-13)

ஆ. வேதவாக்கியங்களைப் பற்றிக்கொள் (3: 14-17)

9. பிறருக்கு ஊழியம்செய்திடு (4: 1-5)

நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும், அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: 2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு, எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. 3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. 4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். 5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

IV. அதிகாரம்-4: 6-22 பவுலின் இறுதி வார்த்தைகள்

1. நான் ஓட்டத்தை முடித்துவிட்டேன் (4: 6-8) நீதியின் கிரீடம்

2. என்னிடத்திற்கு வருவாயாக (4: 9-16)

3. இறுதி வாழ்த்துக்கள் (4: 17-22)

2தீமோ-4: 22 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*