மகிழ்ச்சியின் அதிகாலையில் முடிவுக்கு வரும் பூமியின் பாவ இராக்காலம் Earth's night of sin ends in the dawn of joy Tamil Bible study
அத்தியாயம் - 1
மகிழ்ச்சியின் அதிகாலையில் முடிவுக்கு வரும் பூமியின் பாவ இராக்காலம்
அழுகையின் இரவும் மகிழ்ச்சியின் காலைப்பொழுதும் சத்தியத்தைத் தேடுவதற்கான இரு வழிமுறைகள் இங்கே தெரிந்துகொள்ளப்பட்ட வழி இவ்வேலையின் நோக்கம் சத்திய வேதத்தை பயபக்தியோடு படிப்பதற்கும், அதை யூகங்களின் அடிப்படையில் படிக்கும் ஆபத்தான பழக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் தீர்க்கதரிசனத்தின் நோக்கம் தற்கால உலகின் மத ரீதியான நிலைமைகளை நோக்கும் இருவித பார்வை எகிப்தின் இருள் வாக்குத்தத்தத்தின் வானவில் நீதிமான்களின் முன்னேற்றப்பாதை மாபெரும் விசுவாச துரோகத்திற்கான காரணம் சீர்திருத்தம் மீண்டும் அதே காரணத்தினால் தடைபடும் உண்மையான வளர்ச்சி அறிவின் பரிபூரணம் கடந்த காலத்திற்குரியதல்ல, மாறாக எதிர்காலத்திற்குரியது
யுகங்களைப்பற்றிய தெய்வீகத் திட்டம் என்னும் இப்புத்தகத்தின் தலைப்பு தேவனுடைய திட்டங்கள் படிப்படியாய் நிறைவேறி வருகிறதென்பதையும், அவைகள் தேவனுக்கு முன்கூட்டியே வரிசைக்கிரமமாக தெரியுமென்பதையும் சுட்டிக்காட்டுகிறதாயிருக்கிறது. இவ்விதமாய் பார்க்காவிட்டால் தேவனுடைய வெளிப்படுத்துதல்கள் ஒன்றுக்கொன்று இசைவுள்ளதாயும், ஒழுங்குள்ளதாயும் இருப்பதை நாம் புரிந்துகொள்ள முடியாது. இக்காலம், மனுக்குலத்திற்கு பாவம் அனுமதிக்கப்பட்ட இருண்ட காலமும் மறக்கக்கூடாததாயுமிருக்கிறது. தேவனுடைய ஆதரவும் நீதியுமான மகிமையான நாள், நீதியின் சூரியனான மேசியாவினால் உதயமாகி, முழுமையாக, தெளிவாக எல்லார்மேலும் பிரகாசமாகி, அனைவரையும் குணமாக்கி ஆசீர்வதிப்பதுடன், இவ்வளவு நாட்களாக பிரசவ வேதனைப்படும் மனுக்குலம் அனுபவிக்கும் பயம் நிறைந்த இரவின் அழுகையையும், சஞ்சலத்தையும், வேதனையையும், வியாதியையும், மரணத்தையும் மாற்றி சந்தோஷமும், பாக்கியமும்,
ஆசீர்வாதமும் நிறைந்த காலங்களாக மாற்றிப்போடும்.
சாயங்காலத்தில்
அழுகை தங்கும், விடியற்காலத்தில் களிப்புண்டாகும். சங். 30:5
யுகங்களைப்பற்றிய தெய்வீக திட்டம்
இவ்வுலகில் தவித்து வேதனைப்படுகிற சிருஷ்டியானது அனைத்து உயிர்களும் ஒரு பொற்காலத்துக்காக ஏங்கி, நம்பிக்கையோடு, எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் யேகோவாவின் கிருபையுள்ள நோக்கங்களைப்பற்றி அறியாதவர்களாக வெறுமனே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த பொற்காலத்தைப்பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அதிகபட்ச எதிர்பார்ப்புகள், அக்காலத்தில் நிஜமாக நடக்கப்போவதைக் காட்டிலும் மிக மிக அற்பமான எதிர்பார்ப்புகளாகும்.
மாபெரும் சிருஷ்டிகர் ஏற்படுத்தவிருக்கும் கொழுமையான பதார்த்தங்கள் அல்லது ஆசீர்வாதங்கள் அடங்கிய விருந்தானது, அவர்களை மிகுந்த ஆச்சரியத்துக்கு உட்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் நியாயமாக எதிர்நோக்குவதையும்விட, மகா மேன்மையானதும், அபரிமிதமாகவும் இருக்கும். எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் மேலான தேவனுடைய அன்பின் நீளம், அகலம், உயரம், ஆழம் இவைகளைப் பார்த்து பிரமிக்கும் தம்முடைய சிருஷ்டிகளுக்கு அவர் விளக்கிக்கூறும்போது,
என் நினைவுகள், உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல. . . பூமியைப் பாக்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது ஏசாயா 55:8,9 என்று விளக்குகிறார்.
கடந்தகால, நிகழ்கால, எதிர்கால தேவத் திட்டங்களை உள்ளடக்கிய இதை பட்சபாதமில்லாமல் வாசிக்கும் எவருக்கும், இதுவரையிலும் தேவன் செய்து வந்தவைகள் இசைவாயும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயும் இருக்கிறதென்பதை இப்புத்தகத்தின் மூலம் எவரும் காட்டாதவிதமாய் காண்பிப்போமானாலும், இது ஆசிரியரின் திறமையினாலாவது, சக்தியினாலாவது கண்டுபிடிக்கப்பட்டதாக யாரும் நினைக்க வேண்டியதில்லை.
ஆயிரவருட அதிகாலையில் உதயமாகிற நீதியின் சூரியனின் பிரகாசத்தினால் இத்தற்கால சத்தியம் ஏற்ற வேளையில் வேலைக்காரருக்குக் கொடுக்கப்பட்ட போஜனமாக, இருதயத்தில் சுத்தமுள்ள, கபடமற்ற எல்லாராலும் கண்டு உணரப்பட்டு வருகிறது.
மார்க்கத்தின் அஸ்திபாரமும் சந்தேகத்திற்கிடமாகிவிட்டது.
சத்தியத்தின் அவிசுவாசிகூட அஸ்திபாரமும் தேவனுடைய வார்த்தையின்மேல் தங்களுடைய விசுவாசத்தை உறுதியோடும், முழு நம்பிக்கையோடும் கட்டும்படி சத்தியத்தின் அஸ்திபாரத்தை முடிந்தளவு பகிரங்கப்படுத்த முயற்சித்திருக்கிறோம்.
பின்பு, வேத உபதேசங்களில் கட்டளையிடப்பட்டிருக்கும் துல்லியமான நீதி, நியாயங்களின்மேல் அஸ்திபாரம்போடும் பொருட்டு, மனிதனுடைய எந்த வகை நிதானிப்புகளினாலும் அங்கீகரிக்கப்படும் வண்ணமாக முடிந்தளவு முயற்சித்திருக்கிறோம்.
தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற,
தேவனுடைய திட்டங்கள் ஒன்றுக்கொன்று இசைவானதும், ஒற்றுமையானதுமாக உள்ளது என அறியப்படும்போது, எந்தவொரு சுத்த மனசாட்சிக்கும், தேவ வசனத்தைப் படிக்கும் ஒவ்வொரு மாணாக்கருக்கும் உதவும் என்ற நம்பிக்கையில் சில விபரங்களை இங்கு கொடுத்திருக்கிறோம்.
வேதம் தேவனுடைய திட்டத்தை வெளிப்படுத்தும் வெளிப்பாடு 6T601 அறிந்தவர்களைக் குறித்து நாம் சொல்வதென்னவென்றால், முழுமையாக அதின் உபதேசங்களை கற்றுக்கொண்டால் ஒன்றுக்கொன்று இசைவானதும், ஒத்துப்போவதுமான தெய்வீகத் திட்டத்தையும் அது தேவனுடைய குணாதிசயங்களோடு ஒத்துப்போவதையும் கண்டுகொள்வார்கள்.
சத்திய ஆவி நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தும் என்ற வாக்குத்தத்தத்திற்கேற்ப நாம் சத்தியத்தை நேசிக்கிறவர்களாக, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய தெய்வீகத் திட்டத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்வதே நம்முடைய நோக்கமும் எதிர்பார்ப்புமாய் இருக்கிறது. யோவா. 16:13
அவ்வாறு ஆராய்ச்சி செய்பவர்களாகிய நமக்கு முன்பாக இரண்டு வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்று, எல்லா கிறிஸ்தவ பிரிவுகளில் சொல்லப்படுவதெல்லாவற்றையும் ஆராய்ந்தறிந்து, அவைகளிலுள்ள சத்தியத்தை மட்டும் எடுத்துக்கொள்வது. ஆனால், இது எல்லையில்லாத முயற்சி.
இம்முயற்சியில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவெனில், அவ்விதம் முயற்சிக்குமபோது, நாம் எடுக்கும் முடிவு ஒருவேளை மாறிவிட்டால், அல்லது தவறினால் அல்லது நம் தப்பெண்ணம்
யுகங்களைப்பற்றிய தெய்வீக திட்டம்
எவ்வகையிலும் வளைந்து கொடுத்துவிட்டால் இப்பிரச்சனைகள் நம்மை சரியான தேர்ந்தெடுத்தலை தடுப்பதுடன், சத்தியத்தைத் தள்ளிவிட்டு தவறை சத்தியமென்று எடுத்துக்கொண்டுவிடுவோம்.
மேலும், இம்முறையைக் கையாளும்போது. மேலும் சில இழப்புகளை நாம் அடைவோம். எவ்வாறெனில், சத்தியத்தைத் தேடி அதின் வெளிச்சத்தில் நடக்க விரும்புவோருக்கு சத்தியத்தின் வெளிச்சமானது தற்காலத்தில் நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசித்து, வெளியாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கிறிஸ்தவ பிரிவினர்களுடைய உறுதியானதும்,
நிலையானதுமான போதகங்கள் தற்காலத்திலும் இருப்பதினால் நாம் பெரிய இழப்பை ஏற்க நேரிடும். ஒவ்வொரு பிரிவினரும் சில முக்கியமான விஷயங்களில் மற்றொரு பிரிவினர்களுடைய போதகங்களுக்கு விரோதமாய்ப் பேசுவதால், அவர்கள் எல்லாரிடத்திலும் அதிக அளவில் தவறுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆகவே, இம்முறையானது நம் மனதிலுள்ள தப்பெண்ணங்களையெல்லாம் உதறிவிட்டு, ஒருவரும் தேவனுடைய வார்த்தைகளில் தனக்கு வெளிப்படுத்தப்பட்டதற்கு அதிகமாக தேவ திட்டங்களை அறிந்துகொள்ள முடியாது என்று நினைவுகூர்ந்து, அவ்வார்த்தையானது தாழ்மையும், இருதயத்தில் எளிமையுள்ளவர்களுக்காக மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், தேவன் நமக்கு அருளியிருக்கிற பல்வேறு தெய்வீக உதவிகளை ஆதாரங்கள் உபயோகித்து, அவ்வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு ஆர்வத்தோடும் உண்மையோடும் அதிலுள்ள வழிநடத்துதல்களையும், அறிவுரைகளையும் மாத்திரம் தேடுவதே இம்முறையாகும். எபேசி. 4:11-16
இம்முறையை கையாளும் மாணவர்களுக்காகவே இப்புத்தகம் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீர்க்கதரிசன நிறைவேறுதலைக் காண்பிக்க மட்டுமே உலக சரித்திரங்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதே தவிர மற்ற எல்லா இடங்களிலும் வேத வசனங்களைக் கொண்டே விளக்கப்பட்டிருக்கிறது. தற்கால மத போதகர்களுடைய Theologians உபதேசங்களாவது அல்லது திருச்சபையின் தகப்பன்மார்களென்று தவறாக தங்களை
அழைத்துக்கொள்கிறவர்களுடைய போதனைகளாவது இப்புத்தகத்தில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
வேதபாரகரிலோ திருச்சபை பிதாக்களென்று அழைக்கப்படுகிறவர்களிலோ அநேகர் இங்கு நாம் எடுத்துரைத்திருப்பது போலவே கூறினாலும், மனிதனுடைய போதனைகளின்மேல் நம்பிக்கை வைப்பது இப்போதும் எப்போதும் பொதுவாகவே தோல்வியை ஏற்படுத்துவதால், அவர்களுடைய போதனைகளுக்கு இங்கு முக்கியத்துவம் தராமலும்,
எடுத்துரையாமலும் இருக்கிறோம். அநேக நல்ல மனிதர்களும் அறியாமையினால் இவர்களுடைய தவறுகளை விசுவாசித்தும் அதை சுத்தமான மனசாட்சியிலும் போதித்து வருவதால், அதுவே தவறுகள் வளர்ந்தோங்கக் காரணமாகிவிடுகிறது. அப்.26:9 ஆகவே, சத்தியத்தைத் தேடுபவர்கள் சேறுள்ள தண்ணீராகிய மனிதப் பாரம்பரியங்களை விட்டுவிட்டு, சத்திய நீரூற்றாகிய தேவனுடைய வசனத்தை தங்கள் பாத்திரங்களில் (மனதில்) நிரப்ப வேண்டும். இந்த நீரூற்றுக்கு வழிநடத்தாத எந்த மத போதகத்திற்கும் எந்தவித
முக்கியத்துவமுமில்லை.
சத்திய வேதத்தையும் அதிலுள்ள மேலோட்டமாகவும், அவசரமாகவும் அறிய போதகங்களையும் விரும்புகிறவர்களின் ஆராய்ச்சியைவிட, இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் முறை மிக எளிமையானது. ஏனெனில், நாம் அவசர உலகத்தில் வாழ்வதால் எந்தளவுக்கு பாடங்களின் முக்கியத்துவத்தை சுருங்கச் சொல்லி புரியவைக்க வேண்டுமோ அந்தளவுக்கு இப்புத்தகத்தில் சுலபமாக காண்பிக்க முயற்சித்திருக்கிறோம்.
ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நாம் தரும் ஆலோசனை என்னவெனில், இதில் தரப்பட்டிருக்கும் தேவ திட்டத்தையும் அதில் அடங்கியுள்ள பலனையும் அடையும்பொருட்டு, தரப்பட்டிருக்கும் வேத ஆதாரங்களை ஆழ்ந்து படித்து, அது எவ்வாறு தேவ திட்டத்துடன் இசைவாயுள்ளது எனவும் கண்டறிவது முக்கியம். மாறாக, இப்புத்தகத்தை மேலோட்டமாகப் படித்து முடிப்பதால் எவ்வித பயனும் இல்லை. இப்புத்தகத்தைப் படிக்கும் பலதரப்பட்ட வாசகர்கள், இதில் முழுவதுமாக
சொல்லப்பட்டிருக்கும் தெய்வீகத் திட்டங்களடங்கிய சத்தியங்களை
தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஏற்ற மொழி நடையிலும், ஏற்ற ஒழுங்கிலும் தர எல்லா முயற்சியும் செய்துள்ளோம்.
எந்தவொரு ஞானத்தையும் பெற்றுக்கொள்ள முழுமையான மற்றும் முறையான படிப்பு அவசியப்படுவதுபோல், தேவ வெளிப்பாடுகளைத் தெரிந்து கற்றுக்கொள்ள அதைவிட மேலான முறை அவசியமாகிறது.
இப்புத்தக விஷயத்தில் அதைப்போல இருமடங்கு அவசியமாகிறது. ஏனெனில், இப்புத்தகம் தெய்வீக சத்தியங்களை வெளிப்படுத்துவதால் மற்ற புத்தகங்கள் எழுதப்பட்டதைவிட வித்தியாசமான விதமாய் எழுதப்பட்டுள்ளது.
மற்ற கிறிஸ்தவர்களால் புறக்கணிக்கப்பட்ட கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, பழைய புதிய ஏற்பாடுகளில் தரப்பட்டுள்ள அடையாளங்கள், தீர்க்கதரிசனங்கள் போன்ற அநேக பாடங்களைப் பற்றி இங்கு எடுத்துரைப்பதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை.
சத்திய வேதத்தின் மாபெரும் போதகங்களைக் கண்டுகொள்ளாமல் நீக்கிவிட்டு தரப்படும் எந்தவொரு கடவுள் சம்பந்தமான புத்தகமும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதல்ல. இருந்தபோதிலும் நம்முடைய அறிவுக்கு ஏற்புடையதாகும் வகையில் ஏற்றுக்கொள்ளப்படும் எந்த முடிவும், நம்பத்தகுந்த சரித்திர உண்மைகளின் மூலம் ஆர்வமும், தெளிவும், பயபக்தியும் கலந்த தீர்க்கதரிசன மற்றும் வேதப் பகுதிகளின் ஆராய்ச்சிக்கும், வெறும் யூகங்களின் அடிப்படையில் தெய்வீக தீர்க்கதரிசனங்களை விளக்க முற்படும் கவர்ச்சியான போதகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.
இந்த வித்தியாசத்தை உணராமல் அபாயகரமான பழக்கத்தில் விழுந்துவிட்டால் தீர்க்கதரிசனங்களை கற்றுக்கொள்ளும் மாணவர்களாவதற்கு தீர்க்கதரிசியாக்கிக்கொள்கிறார்கள். பதிலாக, தங்களையே
தேவதூதரும் உற்றுப்பார்க்க ஆசையாயிருக்கிற 1 பேதுரு 1:12 தெய்வீகத் திட்டங்களை உணர்ந்துகொள்ள பயபக்தியான படிப்பைத் தவிர சிறப்பான, உன்னதமான முறை வேறொன்றுமில்லை. தேவனுடைய பிள்ளைகளில் சிலர் மத்தேயு 5ம் அதிகாரத்தில் உள்ளவற்றை மாத்திரம் படித்தால் ஒருவனுக்கு இரட்சிப்பு கிடைக்கும் என அறியாமையில் கூறுகிறவர்களுக்கு, தேவ ஞானமான அவர்களை சீர்பொருந்துவதற்காக,
எதிர்கால, தற்கால, கடந்த காலங்களை விளக்கும் தீர்க்கதரிசனங்களை யேகோவா தேவன் ஏற்கனவே தம்முடைய வேதத்தில் தந்துள்ளார். மாறாக, எதிர்காலம் சம்பந்தமாக நம்முடைய ஆவலை திருப்திப்படுத்தும் வகையில் தீர்க்கதரிசனங்கள் தரப்பட்டுள்ளது என்று நாம் எண்ணக்கூடாது.
மாறாக, தேவனோடு உடன்படிக்கை செய்த ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் பிதாவின் திட்டத்தோடு ஒருங்கிணையவும், அத்திட்டத்தில் தம்முடைய ஆர்வத்தையும் அனுதாபத்தையும் சேர்த்துக்கொள்வதுடன் தேவனுடைய பார்வையில் தற்கால, எதிர்கால விஷயங்களைப் பார்க்கும் நோக்கத்தில் அவைகள் தரப்பட்டுள்ளன.
இவ்விதமாக, கர்த்தருடைய வேலையில் ஆர்வமுள்ளவர்கள் வேலைக்காரனைப்போல ஊழியஞ்செய்யாமல், குமாரனைப்போலும் சுதந்தரவாளியைப்போலும் வாஞ்சையோடும் முழு அறிவின்படியும் ஊழியஞ்செய்வார்கள்.
இவ்விதமாக, கர்த்தருடைய ஊழியம் செய்ய வெளிப்படுத்தப்பட்டிருக்க, தற்கால நடைமுறை எதிர்மாறாக செயல்பட்டுவருகிறது. ஜாக்கிரதையாக தேவனுடைய வார்த்தைகளைப் படித்தல், பலத்தையும் பரிசுத்தமாகுதலையும் தருமே தவிர தீமையை விளைவிக்காது.
பாவத்திலிருந்தும் அதின் விளைவுகளிலிருந்தும் விடுபட தேவன்
வைத்திருக்கும் திட்டங்களைப் பற்றிய அறியாமையினாலும், உலகத்தை மேம்படுத்த அல்லது பாவத்திலிருந்து விடுபட தேவன் தற்கால நிலைமையிலுள்ள பெயர்கிறிஸ்தவர்களையோ அல்லது பெயர்சபையையோ தெரிந்துகொண்டார் என்ற தவறான எண்ணம் இருப்பதாலும், 19 நூற்றாண்டுகளாக சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு வந்தும், சிந்திக்கும் அநேகர் மனதில் முக்கியமான சந்தேகங்கள் எழும்போது, அவர்களும் தவறாக பதிலளிக்கப்பட்டார்கள்.
அப்படிப்பட்ட சந்தேகங்களை நிவர்த்திசெய்ய சத்தியத்துக்கு குறைவான ஏதொன்றினாலும் முடியாது. நிச்சயமாகவே கூர்ந்து சிந்திக்கும் ஒருவருக்கு இந்த இரு காரணங்களில் ஒன்றினாலேயே உலகம் மேன்மையடையவில்லை என எண்ணமுடியும்.
தற்கால நிலைமையில் இந்த யுகத்திலேயே உலகத்தை முழுவதும் மனந்திரும்பச் செய்ய வேணடிய வேலை சபையினுடையது என்ற தவறான எண்ணம் அல்லது தேவனுடைய திட்டமானது மோசமான தோல்வியை அடைந்துள்ளது என்பது. இந்த இரண்டில் எதை உண்மை என்று ஏற்றுக்கொள்ளமுடியும் ? இரண்டாம் கருத்தையே அநேகர்
8
சந்தேகமுமின்றி வெளியரங்கமாகவோ அல்லது உள்ளத்திலோ சொல்லி வருகிறார்கள். இவ்வாறு எதார்த்தமாக தவறான முறையில் விழுந்துபோகிறவர்களை திருத்தி உதவிசெய்வதே இப்புத்தகத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
லண்டன் மிஷினரி சங்கத்தாராலும் பின்பு ஐக்கிய அமெரிக்க மாகாணங்களிலுள்ள பிரஸ்பட்டேரியன் மிஷினரி மாதர் கூட்டத்தாராலும் வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விபரம் அடுத்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது. அது வெளிநாட்டு மிஷினரிகளுக்கான மௌன வேண்டுகேள் என அழைக்கப்பட்டுள்ளது. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் தரப்பட்ட ஒரே நாமத்தைப் பற்றி அறியாமல் இருளிலும், அறியாமையிலும் இருக்கிறவர்களின் எண்ணிக்கையைப் பற்றிய விபரம் (படம்) கவலையளிக்கிறதாயிருக்கிறது.
சிக்காகோ பட்டணத்தின் ஒய்.எம்.சி.ஏ ,YMCA, சங்கத்தாரின் தி வாட்ச்மேன் ,The Watchman, என்ற பத்திரிக்கை மேற்சொன்ன விபரம் பற்றி கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது.
உலக ஜனங்களின் ஆவிக்குரிய நிலைமையைப்பற்றி சிலருடைய கருத்துக்கள் தெளிவற்றதும், உறுதியற்றதுமாயிருக்கிறது. புதுப்புது மிஷினரிகளின் பல்வேறு வகையிலான முயற்சிகளின் மூலம் நமது தேசத்திலும் பிற தேசத்திலும் ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளிலும் சிறப்பான ஞான எழுச்சி ஏற்படுவதற்கும் சுவிசேஷம் பரவுவதற்கும், பெரிய அளவில் தொகை செலவிடப்பட்டு வருவதை நாம் கேள்விப்படுகிறோம்.
உலகிலுள்ள அனைத்து தேசங்களிலும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட போதுமான அளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணம் எங்களிடத்தில் இருக்கிறது.
தற்கால உலகின் ஜனத்தொகை 1,42,40,00,000 ,142 கோடியே நாற்பது இலட்சம், 6T60T கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், பாதி ஜனங்களுக்கு மேலாக ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள், முழுவதும் விக்கிரக ஆராதனைக்ககாரராகவே இருக்கிறார்கள் என்பதை இப்படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
மீதியான பேர்களில் பெரும்பான்மையான ஜனங்கள் முகமதிய மார்க்கத்தாரும் அல்லது இருளில் விழுந்த கிறிஸ்தவ
வகுப்பைச் சேர்ந்தவர்களும் ஆவார்கள்.
இவர்களுடைய கிறிஸ்தவ மார்க்கம் விக்கிரக ஆராதனை மார்க்கமானதால் இவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் இருக்கிறார்கள் என்றோ அல்லது பிரசங்கிக்கிறார்கள் என்றோ கூறமுடியாது.
இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும், அமெரிக்கா தேசத்திலுமுள்ள 11 கோடியே 60 இலட்சம் புராட்டஸ்டன்ட் மக்கள் மூட நம்பிக்கையிலும், அறியாமையிலும் மூழ்கிக்கிடக்கிற விக்கிரக ஆராதனைக்காரரைக் காட்டிலும் ஆழமான இருளில் புதைந்து கிடக்கிறார்கள். 80 இலட்சம் யூதர்கள் நசரேயனாகிய இயேசுவை நிராகரிக்கும் வேளையில், 30 கோடிபேர் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களாயிருந்தும், அவருடைய விசுவாசத்தை உடையவர்களாயிருக்கவில்லை.
17 கோடிப்பேர் முகமதியர்களாகவும், மீதமுள்ள ஒட்டுமொத்த பெரும்பான்மையான ஜனங்கள், எல்லோருக்கும் மேலான என்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்டவரை வணங்காமல், மிருகங்களையும், கல்லையும், முன்தலைமுறையினரையும், மரித்த மகான்களையும், பிசாசுகளையுமே வணங்கி வருகிறார்கள்.
சிந்திக்கும் கிறிஸ்தவர்களுக்கு அவர்களுடைய இருதயத்தை கவலையடையச் செய்வதற்கு இப்புள்ளி விபரமே போதுமானதாக இருக்காதா?
உண்மையாகவே இது கவலையளிக்கும் விபரத்தையுடைய படமே. இப்படத்தில் விக்கிரக ஆராதனைக்காரரையும், முகமதியரையும், யூதரையும் பலவகையான கோடுகள் மூலம் வித்தியாசப்படுத்தி இருந்தாலும் இவர்கள் எல்லோரும் கிறிஸ்துவைப்பற்றி முழுமையான அறியாமையில் இருக்கிறார்கள். இருளில் இருக்கும் கிறிஸ்தவர்களின் தொகை ஓரளவாய் குறைத்து காண்பிக்கப்பட்டிருப்பதாக சிலர் எண்ணலாம்.
ஆனால், அவ்வாறல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். பெயர் கிறிஸ்தவ மார்க்கத்தை எவ்வளவாக மேன்மைப்படுத்திப் பேசக்கூடுமோ அந்த அளவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 11 கோடியே 60 இலட்சம் புராட்டஸ்டன்ட் சொல்லப்பட்டது, உண்மையான தொகைக்கு அதிகமானதாகும்.
1 கோடியே 60 இலட்சம் பேர் மாத்திரமே பல சபைகளில் அங்கமாயிருக்கிற வாலிபப் பருவத்தையுடையவர்கள். மேலும், கிறிஸ்துவில் பரிசுத்தமாக்கப்பட்ட, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற, சிறுமந்தையை சார்ந்த கிறிஸ்தவர்கள் 10 இலட்சம் என்று சொல்வதற்குக்கூட நாம் அஞ்சுகிறோம்.
கிறிஸ்தவ சபையின் அங்கங்கள் என கணக்கிடப்படுவோருள் மீதியானவர்கள் சிறுவர்கள், குழந்தைகளுமென்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஐரோப்பா தேசங்களில் சிறுகுழந்தைகள்கூட சன சபையின் அங்கங்கள் கணக்கிடப்பட்டு வருகிறார்கள். என
இப்படத்தில் ஜனங்களின் மேலுள்ள இருளைக் காண்பித்தபோதிலும், இதுவே உச்சகட்ட இருள் என்று கூற முடியாது. இதைக்காட்டிலும் அதிகமான இருள் உண்டு. எவ்வாறெனில், இங்கு காண்பிக்கப்பட்ட படம் தற்கால சந்ததிகளைப்பற்றி மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6000 வருடங்களில் ஒவ்வொரு நூற்றாண்டுக்குப் பின் நூற்றாண்டுகளாக, ஏறத்தாழ எல்லா மனிதரும் அறியாமையிலும், பாவத்திலும் மூடப்பட்டிருந்ததை கருத்திற்கொள்ளும்போது, எப்படிப்பட்ட இருள் ஆட்கொண்டிருக்கிறது. பொதுவாக நோக்கினால்கூட இது உண்மையாகவே பயங்கரமாயிருக்கிறது.
இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழ் கொடுக்கப்பட்ட ஒரே நாமத்தை அறியாத கோடிக்கணக்கான ஜனங்களும், சில பரிசுத்தவான்கள் தவிர 11 கோடியே 60 இலட்சம் புராட்டஸ்டண்டுகளும் நேராக நித்திய வேதனை ஸ்தலத்துக்குப் போகும் பாதையில் செல்கிறார்கள் என இன்றைய கிறிஸ்தவர்களுடைய பல்வேறு விசுவாச கோட்பாடுகள் போதிக்கிறது.
இவ்வாறு விசுவாசிக்கிறவர்கள் இப்பயத்தினாலேயே மிஷினரி ஊழியங்களை அதிகமதிகமாக செய்ய முயற்சி எடுப்பது நமக்கு ஆச்சரியமல்ல. ஆனால், அவ்விஷயத்தில் அவர்களே அதிகமான வைராக்கியமில்லாதவர்களாய் இருப்பதும் ஆச்சரியமாக உள்ளது. இவ்விதமாய் விசுவாசிப்பது மெய்யாகவே மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை இல்லாமல் செய்வதுடன், வாழ்க்கையின் எதிர்கால பிரகாசமான நம்பிக்கையை இருளில் மூழ்கடிக்கச் செய்கிறதாயிருக்கிறது.
இவ்விஷயத்தில் அஞ்ஞானிகளின் முடிவைப்பற்றி நாம் தவறாக சொல்லவில்லையென்று வரைபடத்தின் மூலம் காண்பிக்க, அந்நிய மிஷினரிகளுக்கான மௌனவேண்டுகோள், என்னும் பிரதியிலிருந்து எடுத்துரைத்திருக்கின்றோம். உலகில் நாள் ஒன்றுக்கு 1 இலட்சம் வீதம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் மரிக்கிற வேளையில்,
மற்ற எல்லா
தேசங்களிலும் இருக்கிற மாபெரும் ஜனக்கூட்டமாகிய 100 கோடிபேர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்கிற வரியோடு முடிக்கப்பட்டிருக்கிறது.
மனிதக் கொள்கையின்படி பார்த்தால் இது கவலையளித்தாலும், தேவ வசனமானது இதுகுறித்து ஒரு பிரகாசமான கண்ணோட்டத்தைத் தருகிறதை இப்புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
தேவ வார்த்தையின்படி போதிக்கப்படும்போது, தேவனுடைய மாபெரும் இரட்சிப்பின் திட்டம் ஒருபோதும் இம்மாதிரியான தோல்வியை அடைந்துவிடும் என்று நாம் நம்ப முடியாது. குழப்பத்திலிருந்து ஒரு தேவனுடைய மனுஷன், தற்கால நிமையையைப் பற்றியும் அதிலிருந்து விடுதலைப் பற்றியும் ஏசாயா 60:2, 3ல், “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும். ஆனாலும், கர்த்தர் உன்மேல் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும் ,அஞ்ஞானிகளும்,உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு இராஜாக்களும் நடந்து வருவார்கள்” என வாசிக்கும்போது அவர் தெளிவடைந்து ஆறுதலடையக்கூடும். இத்தீர்க்கதரிசனத்தில் காரிருளுக்கு பதிலாக வாக்குத்தத்த வெளிச்சம் வைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகள் ,பூமியின் எல்லா ஜனங்களும் வருவார்கள்.
இவ்வுலகில் அறியாமை இருள் நீடிப்பதும், சத்தியம் தீவிரமாக பரவாததும் கிறிஸ்தவர்களுக்கும் ரகசியமாயிருந்ததுமல்லாமல் உலகம் அதின் தீமையை உணர்ந்து அனுபவித்து வந்தது. எகிப்தின் மேல் வந்த காரிருளைப்போன்று, இவ்வுலகமும் அதே காரிருளில் மூடியிருப்பது நன்கு உணரமுடிகிறது.
இதை நிரூபிக்க பிலதெல்பியா பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் வாக்கியங்களை கவனிக்கவும். ஒன்றுக்கொன்று விரோதமான கிறிஸ்தவ கொள்கைகளால் தீவிரப்படுத்தப்பட்ட சந்தேகம் மற்றும் குழப்பம், ஒரு எழுத்தாளரின் மனதைவிட்டு தேவனுடைய வார்த்தையிலிருந்து வரும் தெய்வீக சத்திய கதிர்களால் நீங்காததால் பின்வருமாறு எழுதுகிறார்:
ஜீவன்! மாபெரும் இரகசியம் ! யாரால் விளக்க முடியும்?
அற்பமான இக்களிமண்ணில் தேவன் எதை விரும்புகிறார்? ஆற்றலும் திறனும் வாய்ந்த தம் கரத்தின் கிரியையால் உருவாக்கினாரே? மனம், பொருள், இருதயம், உறுதியான சித்தமுங்கொண்டு பிறக்கச்செய்தாலும், ஏன் நிச்சயமான மரணத்தை அடைய நேரிடுகிறது? விரைவாய்ச் சென்ற அந்த உயிர்மூச்சு எங்கே? எண்ணிலடங்கா மனிதர்களில், வாழ்ந்து துன்பப்பட்டு மரித்தவர்களில் - ஒருவராவது திரும்பிவந்து அந்த மாபெரும் திட்டத்தைச் சொன்னதில்லை, மரணத்திற்குப் பின்பு உள்ள அந்த நம் எதிர்காலத்தை.
தேவனே! உங்களை வேண்டுகிறோம், எங்களை வழிநடத்த சில புதிய ஒளிக்கதிர்களை வீசச்செய்யும் - அது வெறும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டல்ல, மாறாக தெளிவாய்த் தெரியும்படியாக இரவின் இருள் மேகங்களை எங்களைவிட்டு அகற்றும்; சந்தேகம், திகில், பயத்தின் நடுக்கம் எங்கள் ஆசீர்வாதங்களைத் தடுக்கும் இந்த எண்ணத்தையும் இந்த அமைதியற்ற மனதை அலைக்கழிக்கும் மோதலும் சச்சரவுண்டாகும் பல்வேறு பிரிவுகளையும், பள்ளிகளையும் அதன் கொள்கைகளையும் அகற்றும், அவர்கள் கொள்கைகளை நியாயப்படுத்தி, விலங்கிடுகிறார்கள்.
ஆனால், நாங்களோ நீர் இருக்கிறவண்ணமாகவே உம்மை அறிய வாஞ்சிக்கிறோம், உம்மோடே தங்கித் தாபரிக்கவும், உம் திட்டத்திலும் முடிவில்லா சிருஷ்டிகரிடத்திலும், மனிதரிடத்திலும், எங்கள் பங்கை நிறைவேற்ற ஆசிக்கிறோம். எங்கள் கண்களை மறைக்கும் திரையை நீக்கும், வெளிச்சம் உண்டாகக்கடவது' என்று மீண்டும் கட்டளையிடும் ,அறியப்படாதிருப்பதை நாங்கள் இருளில் தேடுகிறோம்,உமது சிங்காசனத்தின் இரகசியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தும்.
இதற்கு நாம் தரும் மறுமொழி:
முத்திரையிடப்படாத ஜீவனுக்கான இரகசியம் விரைவில் வெளிப்படும் தேவன் இந்த அற்ப களிமண்ணிற்குள் என்ன மகிழ்ச்சியை வைத்திருக்கிறார்.
தம் கைவேலைப்பாட்டின் ஆற்றலால் உருவாக்கி தம் சிந்தை, சித்தத்தை சாயலாக முத்திரையிட்டாரே, மரிப்பதற்காக நாம் பிறக்கவில்லை.
பூமியிலிருந்து இதே பூமிக்கு உயிர்தெழும்போது- சாபத்தை வென்றவர்களாவோம்.
வல்லமையுள்ள சேனையிலிருந்து வந்த ஒருவர் அதிகமாய்த் துன்பப்பட்டு, ஜீவித்து மரித்தாரே, உயிர்த்தெழுந்து தேவனது மாபெரும் ஏற்பாட்டை நிரூபித்தாரே. ஆகவே, அந்த எதிர்காலம் நம்முடையதாகிறது.
அவரது வசனம் இந்தப் புதிய ஒளிக்கதிரை வெளியரங்கமாக்குகிறது. நம் பாதைக்கு வெளிச்சமாயிருந்து வழிநடத்துகிறது; தற்போது விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டாலும் நிச்சயமாய் தரிசித்தே நடக்கிறோம்.
இரவின் இருண்ட மேகங்களை அகற்றி சந்தேகம், திகில், பயத்தின் அகோரம், நம் ஆசீர்வாதங்களைத் தடுக்கும் எண்ணங்களையும், சச்சரவு உண்டாக்கும் பிரிவுகளையும், பள்ளிகளையும், அவர்களது போதகங்களை நியாயப்படுத்தும் கட்டளைகளையும் அகற்றுகிறீர்.
உம்மை இருக்கிறவண்ணமாகவே தேடவும், கற்றறியவும் செய்கிறீர்; நாங்கள் உம்மிடமே தங்கியிருக்கவும், உம் அற்புதத் திட்டத்தையும் நித்திய சிருஷ்டிகராகிய உமக்கும், மனிதருக்கும் எங்களது பங்கை ஆற்றுவோம்.
பரலோக வெளிச்சத்தில் நடப்பவர்க்கு அனைத்தையும் வெளிப்படுத்தி மூடியிருக்கும் திரையை நீக்குகிறோம்.
யுகாயுகங்களுக்கும் மறைக்கப்பட்டு, தற்போது வெளியாக்கப்பட்டு வருகிற அவருடைய சிங்காசனத்தின் மகிமையுள்ள இரகசியம் இதுவே.
தேவனுடைய வார்த்தைகளும் அவருடைய நோக்கங்களும் இப்பொழுது வெளியரங்கமாவதினால், இப்பேர்பட்ட ஆசீர்வாதங்கள் இவ்வுலகத்திற்கு வருவதுடன், இப்புத்தகம் இந்த ஆசீர்வாதங்களை வெளியரங்கமாக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது என நம்புகிறோம்.
மனிதருடைய வெறும் கற்பனைகளைவிட்டு விலகி, ஏசாயா 1:18-இல் தேவன் நம்மை அழைக்கிறபடி வேத வசனத்தை ஆரய்ச்சி செய்வதற்காக நேரத்தை செலவிட்டு, அறிவை உபயோகிக்கும்போது, தேவன் வைத்திருக்கின்ற மிகப்பெரிய பரலோகத்தின் வாகுத்தத்த ஆசீர்வாத வானவில்லை கண்டுபிடித்துவிடுவர்.
விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படாதவர்களும்கூட தேவனுடைய சத்தியத்தைப் புரிந்துகொள்ளலாம் 61601 சிலர் தவறாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக அது அல்ல. 97:11-4, நீதிமானுக்காக வெளிச்சமும் சத்தியமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
தேவனுடைய பிள்ளைகளுக்கே இருளிலிருந்து வெளிச்சத்தில் நடக்க அவருடைய விளக்கு தரப்படுகிறது. சங்.119:105-ன்படி உமது வசனம் என் கால்களுக்கு தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. மேலும், நீதி.4:18ன் படி, நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.
இங்கு சொல்லப்பட்ட நீதிமான்கள் உண்மையாகவே நீதிமான்களில்லை. ஏனெனில், ரோமர் 3:10ன்படி நீதிமான் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. மாறாக, விசுவாசத்தினால் நீதிமான்களாகும் வகுப்பாரையே இங்கு குறிக்கிறதாக இருக்கிறது. இவ்வகுப்பாரே அதிகமதிகமாய் பிரசாசிக்கும் வெளிச்சத்தின் பாதையில் நடக்க அதாவது வெளியாக்கப்பட்டிருக்கும் தெய்வீகத் திட்டத்தைப் பார்ப்பதோடு மட்டுமல்ல, வரப்போகிற காரியங்களையும் காணும் ஆசீர்வாதம் பெற்றவர்களாவர்.
ஒவ்வொரு தனித்தனி நீதிமானுடைய பாதை பிரகாசமாயிருக்கும் வேளையில், குறிப்பாக இது நீதிமான்களாக்கப்பட்ட வகுப்பாருக்கு விசேஷமாக பொருந்தி வருகிறது. முற்பிதாக்களும், தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும்
கடந்தகால மற்றும் தற்கால பரிசுத்தவான்களும் இந்த அதிகரிக்கிற
வெளிச்சத்தில் நடந்தாலும், இன்னும் வரப்போகிற காலத்தில் இப்பொழுதைவிட அது அதிகமதிகமாய் பிரகாசிக்கும், அதிகரித்து வருகிற மற்றும் தொடர்ச்சியான வெளிச்சமாகிய இப்பாதையானது, ஏற்றவேளையில் இன்னும் அதிகமாய்ப் பிரகாசிக்க வேண்டிய தேவனுடைய புத்தகமாகும் (பதிவேடு).
ஆகவே, இவ்வாக்குத்தத்தங்கள் நிறைவேற எதிர்பார்க்கும் எல்லா
நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்.
அநேகர் விவாசத்தில் குறைவுள்ளவர்களாகவும், உண்மையில்லாதவர்களாகவும், ஈடுபாடு இல்லாதவர்களாகவும் இருக்கிறபடியினால், அதிகமாய்ப் பிரகாசிக்கிற வெளிச்சத்தைக் காணமுடியாதபடி, அவ்வெளிச்சத்தினால் நடப்பதற்குப் பதிலாக, இருளிலேயே இருக்கும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சபையை சத்தியத்தில் வழிநடத்த கொடுக்கப்பட்ட தேவனுடைய பரிசுத்த ஆவியானது எழுதப்பட்டிருக்கிற தேவனுடைய வசனங்களிலிருந்து நமக்கு எடுத்துக் காண்பிக்கிறதாயிருக்கிறது. வெளிச்சம் தருவதாயிருக்கிறது.
கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால், தேவனுடைய பரிசுத்த வேத வாக்கியங்கள் இரடசிப்புக்கேற்ற ஞானத்தை தருமேயன்றி எழுதப்பட்டிருக்கிறவைகளுக்கு மேலாக நமக்கு ஒன்றும் தேவையில்லை. 2 தீமோ.3:15
இப்போது இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடிக்கொண்டிருக்கும் என்பது இன்னும் உண்மையாய் இருந்தபோதிலும், எப்போதும் பூமி இதே நிலைமையிலிருக்காது. ஏசாயா 21:12-ல், விடியற்காலம் வருகிறது என்ற உறுதிமொழி நமக்குத் தரப்பட்டிருக்கிறது. தேவன் எவ்வாறு தமது சூரியனை நல்லோர்மேலும் தீயோர்மேலும் உதிக்கச் செய்கிறாரோ, அதேபோல ஆயிரமாண்டு ஆட்சியில், இருளில் மறைந்திருக்கிறவைகளை வெளியரங்கமாக்கி இருதயங்களின் யோசனைகளை வெளிப்படுத்த 1 கொரி. 4:5, முழு உலகமும் நன்மையடையும்படிக்கு, தம்முடைய நீதியின் சூரியனை உதிக்கப்பண்ணுவார்.
அப்போது அது தீமையின் கொடிய துர்நாற்றத்தை நீக்கி, ஜீவன், உடல்நலம், சமாதானம் மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும்.
முற்காலத்தை நாம் நோக்கும்போது இவ்வெளிச்சம் மிகவும் குறைவாகப் பிரகாசித்தது. அது மட்டுமல்ல, முற்காலத்தில் வாக்குத்தத்தங்கள் மிகவும் மங்கலாகவும், மறைவானதாகவுமிருந்து, ஆபிராகமுக்கும் மற்றவர்களுக்கும் தரப்பட்ட வாக்குத்தத்தங்களும், மாம்சீக இஸ்ரயேலருக்குத் தரப்பட்ட கட்டளைகளும், சடங்குகளும் தேவனுடைய மேன்மையான ஆசீர்வாதங்களைப் பற்றின நிழலாய் மாத்திரம் இருந்தபடியினால்,
அவைகள் அப்போது மிகச்சாதாரணமாகத் தெரிந்தது. ஆனால், கிறிஸ்துவின் நாள் வந்தபோது, அவ்வெளிச்சம்பெற்ற யூதர்கள் அதிமாக எதிர்பார்த்தது என்னவெனில், இஸ்ரயேலை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து விடுவிக்க தேவன் மேசியாவை அனுப்பி பூமியின் மீதெங்குமுள்ள எல்லா இராஜ்யங்களுக்கும் மேலான இராஜ்யமாக்கி, உலகமனைத்திலுமுள்ள எல்லா குடும்பங்களையும் ஆசீர்வதிக்கும் தம்முடைய பிரதிநிதிகளாக தங்களை நியமிப்பார் என்பதே.
அவர்கள் தேவனுடைய இராஜ்யத்தின் உடன் பங்காளிகள் ஆவதற்கு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளானது, அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்ததுடன், ஆசீர்வாதங்களை அடைவது அவர்களுக்கு கூடாமற்போனதாலும், அச்செய்தி அவர்களில் அநேகருக்கு இருளாகப்போய்விட்டது. ஏற்றகாலம் வந்தபோது, தேவனுடைய திட்டமானது, இஸ்ரயேலர் அல்லாத வானத்தின் கீழெங்குமுள்ள எல்லா மனிதர்களும் விசுவாசத்தின் மூலமாக ஆபிரகாமின் சந்ததியும் வாக்குத்தத்தத்தின்படி சுதந்திரராகும்படி அவர்களுக்கும் இச்செய்தி பரவினபோது, இஸ்ரயேலருடைய குருட்டாட்டமும், பகையும் சுபாவப்படி இன்னும் அதிகரித்தது.
ஆனால், உலகத்திற்கு வரப்போகிற ஆசீர்வாதங்கள் உறுதியானதென்றும், அது நிறைவேற இஸ்ரயேலரையும் உள்ளடக்கிய ஒரு ஆவிக்குரிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட, யூதரிலும், புறஜாதியாரிலுமிருந்து தெரிந்தெடுக்கப்பட்டு, உன்னதமான ஆவிக்குரிய சுபாவத்திலும் வல்லமையிலும் உயர்த்தப்படும் ஒரு சிறுமந்தை தேர்ந்தெடுக்கப்பட்டபிறகே, அந்த ஆவிக்குரிய ராஜ்யம் வரும் என இயேசு போதித்த சுவிசேஷம் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்பே சபையாரால் அறிந்துகொள்ளப்பட்டது. இதையே, 2 தீமோ. 1:10ல்,
சுவிசேஷத்தினால் இயேசு ஜீவனையும், வெளியரங்கமாக்கினார் என வாசிக்கிறோம்.
அது அழியாமையையும் முதற்கொண்டு இன்னும் அதிகமாக இவ்வெளிச்சம் பிரகாசிக்கிறதென்று யோவா.16:12, 13-இல் கர்த்தர் கூறும்போது, இன்னும் அநேகக் காரியங்களை உங்களுக்கு சொல்ல வேண்டியதாயிருக்கிறது.
அவைகளை நீங்கள் இப்போது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திலும் உங்களை வழிநடத்துவார். வரப்போகிற காரியங்களையும் உங்களுக்கு அறிவிப்பார் என்றார்.
இருந்தபோதிலும் அப்போஸ்தலர்கள் மரித்தபின்பு, சபையின் மக்களில் அநேகர் வேத விளக்கைத் தள்ளி, தங்களை வழிநடத்த மனித போதகர்களை தங்களுக்கு நியமித்துக்கொண்டபோது, அந்த போதகர்கள் தங்களை பெருமையினால் உயர்த்தி, தேவனுடைய சபையில் தங்களுக்கு பதவிகளையும் பட்டங்களையும் சூட்டிக்கொண்டதோடுகூட, சபையை ஆளுகை செய்யத் தொடங்கினர். பின்பு இவர்கள் தேவ வார்த்தைக்கு விரோதமாக குருக்கள் என்று மற்றவர்களால் தாங்களே மேன்மைபடுத்தியதுடன், இவர்களே தங்களை சரியான விசுவாசத்தில் வழிநடத்துபவர்கள் என்று மிதமிஞ்சி மதிக்கப்பட்டனர்.
இப்படியாக, தவறே இல்லாத தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள் நிராகரிக்கப்பட்டு, தவறுகள் நிறைந்த மனித போதனைகளால் மிதமிஞ்சி மதிக்கப்பட்ட போப்பு மார்க்கம் என்னும் ஒரு மாபெரும் அமைப்பு அச்சமயத்தில் உருவெடுத்தது.
இவ்விதமாய் சத்தியம் நிராகரிக்கப்பட்டதின் விளைவாக வெகு மோசமான மற்றும் தீமையான விளைவுகள் ஏற்பட்டது. எல்லோரும் அறிந்தபடி, திருச்சபையையும், நாகரீகம் அடைந்த மக்களையும் இந்த அமைப்பானது அடிமைகளாக்கினதுடன், மனிதப் பாரம்பரியங்களையும், போதனைகளையும் ஏற்றுக்கொள்ள வழிநடத்தினது.
இந்த அடிமைத்தனத்திலிருந்து மறைக்கப்பட்டிருந்த வேதாகமும் மற்றும் சுயாதீனமும் சீர்திருத்தம் என்றழைக்கப்பட்ட (Reformation) தைரியமான மற்றும் ஆசீர்வாதமான பலமிக்க அடியின் மூலம் விடுதலை அடையப்பெற்றது. இந்த சீர்திருத்தத்திற்காக தைரியசாலிகளாகிய
லூத்தர், ஸ்விங்கிலி, மெலிங்தோன், விக்லிப், நாக்ஸ் போன்ற அநேகரை தேவன் எழுப்பினார். போப்பு மார்க்கமானது, வேதத்தைத் தள்ளி, சபைக்குத் தரப்பட்டிருந்த கட்டளைகளையும், கொள்கைகளையும் மாற்றியதுடன், இச்சபையின் மனிதக் கட்டளைகளையும், கொள்கைகளையும் உண்மை சபைக்குள் நுழைத்துவிட்டனர் என்ற உண்மையை இவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் இவ்வமைப்பானது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக எதிர்த்து நிற்பதுடன், மனிதப் பாரம்பரியத்தின்மேல் கட்டப்பட்டுள்ளது என நிரூபித்தார்கள். இந்த சீர்திருத்தவாதிகளும், அவர்களைப் பின்பற்றினவர்களும், போப்பு மார்க்கத்தை எதிர்த்ததினால், புராட்டஸ்டன்டுகள் (Protestants) என்று அழைக்கப்பட்டதுடன், இவர்கள் தேவனுடைய வார்த்தை ஒன்றே விசுவாசத்திற்கும், நடக்கைக்கும் ஏற்ற சட்டம் எனக் கூறினர்.
அநேக உண்மையான ஆத்துமாக்கள் சீர்திருத்தக்கால வெளிச்சம் இருந்தவரை அவ்வெளிச்சத்தில் நடந்தார்கள். ஆனால், ஒரு சிறிய வளர்ச்சிக்குப் பின்பு வெளிச்சத்தில் நடப்பதற்குப் பதிலாக தங்களுக்கு ஏற்ற சில தலைவர்களை ஏற்படுத்திக்கொண்டு அதற்குமேல் தேர்ச்சியடையாமல் போனார்கள். மேலும் சத்தியத்தில் வளர்வதற்கு பதிலாக தங்களுக்கு கிடைக்கப்பெற்ற குறைந்த சத்தியத்தை வைத்து தாய்ச் சபையின் தவறுகளோடு தங்களை இணைத்துக்கொண்டு தங்களுக்குத் தாங்களே வேலியடைத்துக்கொண்டார்கள்.
சீர்திருத்தவாதிகள் கண்டுபிடித்ததற்கு மேலாக இனி ஒன்றும் கண்டுபிடிக்க முடியாதென பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த மூட நம்பிக்கையில் மூழ்கி, அநேக வருடங்களுக்கு முன்பாக சொல்லப்பட்ட கோட்பாடுகளையே நம்பி வருகின்றனர்.
இது மிகவும் மோசமான தவறாகும். நிச்சயமாகவே சீர்திருத்தக் காலத்தில் ஏற்கனவே இருந்த தவறான போதனைகள் நீக்கப்பட்டு ஒரு சில விசேஷமான சத்தியங்கள் வெளியானபோதிலும், கிறிஸ்தவர்கள் அப்போதனைகளிலேயே தங்களை உட்படுத்தியிருந்தாலும், அதன்பின்பும் தொடர்ச்சியாக வெளிவரவேண்டிய விசேஷமான சத்தியங்களை ஆராயாமல், பழைய பாரம்பரிய வேலிக்குள்ளேயே இருந்துவிட்டனர்.
உதாரணமாக, ஆதாமும் மற்றவர்களும் முற்றிலும்
அறிந்திராத ஜலப்பிரளயம் வருகிறது என்பதை ஒவ்வொருவரும் விசுவாசிக்க வேண்டும் என்பது நோவா காலத்து சத்தியம். ஆனால் தற்காலத்தில் ஜலப்பிரளயம் வரப்போகிறது என்று போதித்தால் அது சத்தியமல்ல.
ஆனால், தொடர்ச்சியான யுகங்களைப்பற்றிய ஏற்றகாலத்தின் மற்ற சத்தியங்கள் வெளிப்பட வேண்டியதாய் இருக்கும்போது, அவ்வெளிச்சத்தில் நடக்காமல், பலவருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்டு நடந்துமுடிந்த எல்லா சத்திய வெளிச்சத்தை நாம் பெற்றிருந்தாலும், இன்னும் நாம் குறிப்பிடத்தக்க அளவு இருளிலேயே இருக்கிறவர்களாவோம்.
பிரகாசமான பாதையில் நடக்கும் ஒவ்வொரு பசிதாகமுள்ள பக்தர்களுக்கும் தேவனுடைய வார்த்தையானது ஒரு ஞான ஆகாரம் நிறைந்த மாபெரும் களஞ்சியமாகும். அங்கே குழந்தை போன்றவர்களுக்கு பால் ஆகாரமும் 1 பேது. 2:21, நன்கு வளர்ந்து வருபவர்களுக்கு பலமான ஆகாரமும் எபி. 5:14 இருப்பதுடன், காலங்களுக்கும் சூழ்நிலைகளுக்குமேற்ற உணவும் அங்கே உண்டு. நமது கர்த்தரின் கூற்றுப்படி, பணிவிடைக்காரருக்கு தகுதியான காலத்திலே படி கொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்? லூக். 12:42; மத். 13:52 இப்பேர்பட்ட சத்திய உணவு வகைகள் கிறிஸ்தவ மதப் பிரிவுகளாகிய களஞ்சியங்களிலிருந்து கொண்டுவர முடியாது.
இவைகளிலிருந்து பழைய, ஆனால் நன்மையான சிலவற்றை கொண்டுவரமுடியுமே தவிர, புதிதானவைகளைக் கொண்டுவர முடியாது. பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளில் இருக்கிற சத்தியமானது அதினுடைய உண்மையான அழகும், மேன்மையும் புரிந்துகொள்ளப்படாதவண்ணம், அநேக தவறுகளால் கலக்கப்பட்டும் மூடப்பட்டும் உள்ளது.
அங்குள்ள அநேகக் கோட்பாடுகள் ஒன்றுக்கொன்று விரோதமானதும், ஒத்துப்போகாததாயிருந்தாலும், வேத ஆதாரமுள்ளதாக போதிக்கப்பட்டு வருவதால், தேவனுடைய வசனம் ஒன்றுக்கொன்று இசைவானதும் ஒற்றுமையுள்ள புஸ்தகமல்ல என்ற குழப்பத்திற்குள்ளாக நேரிடுகிறது.
பைபிள் என்னும் வீணையின்மேல் எந்த ராகமும் வாசிக்கலாம் என்ற
பழமொழி இதினாலேயே உருவாகியிருக்கலாம்.
மனிதப் பாரம்பரியங்களானது தற்கால அறிவின் பெருக்கத்தோடு சேர்ந்துகொண்டு தேவனுடைய வார்த்தைகளையும், அதன் தன்மைகளையும் எப்படி தவறாக அறிவிக்கிறது.
நாம் வாழ்கிற இந்நாட்களில் இப்படி குருட்டாட்டத்திலும், சக மனிதருடைய மூட நம்பிக்கையான பயபக்திக்கும் இனி எப்போதும் வளைந்து கொடுக்காமல், நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு சரியான காரண காரியங்கள் தேவை என்ற கருத்து எவ்வளவு மேன்மையானது.
ஆகையால் உண்மையான வேதமாணவர் தனக்குள் இருக்கும் நம்பிக்கையைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் விவரிக்கத் தயாராக இருக்க வேண்டும். தேவ வசனம் ஒன்றே ஒருவனை அறிவுள்ளவனாக்க, அவைகள் உபதேசத்திற்கும் போதனைகளுக்காகவும் தரப்பட்டுள்ளது. 1 பேதுரு 3:15; 2 தீமோ. 3:15, 17 இக்களஞ்சியம் ஒன்றே விசுவாச வீட்டாருக்கு பழையதும் புதியதுமான ஏற்றகால ஆகாரத்தை ,சத்தியத்தை ,குறைவில்லாமல் தந்துகொண்டிருக்க முடியும்.
நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும் வெளிச்சமாகிய வேத வசனத்தை நம்பும் யாரும் மார்டின் லூத்தர் காலத்தில் அந்த நடுப்பகல் வந்தாயிற்று எனக் கூறமுடியாது. அந்த நாள் இன்னும் வராததால் ,பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற அவ்விளக்கைப்போன்ற தீர்க்கதரிசன வசனங்களை கவனித்திருப்பது நலமாயிருக்கும். 2 பேதுரு 1:19
அது மட்டுமல்ல, இப்போது நாம் நடக்கும் வெளிச்சப் பாதையோடு
திருப்தியடையாமல், இன்னும் அதிக வெளிச்சத்தில் நடந்து முன்னே
செல்ல வேண்டும். இல்லையெனில், அவ்வெளிச்சம் அதோடு
நின்றுவிடாமல் நம்மையும் கடந்து, நம்மை இருளில் பின்தங்க
விட்டுவிட்டு தொடர்ந்து சென்றுவிடும். மேலும், அவ்வெளிச்சப்
பாதையில் தொடர்ந்து நடக்காமல் உட்கார்ந்து விடும் பிரச்சனையும்
அநேகரிடத்தில் உள்ளது. வேத அகராதியை எடுத்து, உட்காரு, நில்,
என்ற வார்த்தைகளை ,நட, ஓடு,என்னும் வார்த்தையின் உள்
அர்த்தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெரிய வித்தியாசத்தை போன்ற
வசனங்களில், மனிதர் இருளில் உட்காருகிறார்கள், பரியாசக்காரர்
உட்காரும் இடத்தில் உட்காருகிறார்கள், பாவிகளுடைய வழியில் நிற்கிறார்கள், வெளிச்சத்தில் நடக்கிறார்கள், பரிசைப்பெற ஓடுகிறார்கள் எனப் பார்க்கிறோம். மேற்சொன்ன வார்த்தைகளான, “உட்காரு," "நில்" என்ற வார்த்தைகள், மனிதர் அறியாமை மற்றும் தீமையில் நடப்பதையும், "நட," “ஓடு” என்ற வார்த்தைகள் சத்திய வெளிச்சத்தில் பரிசைப் பெற்றுக்கெள்ள ஓடும் வாழ்க்கை முறையைக் குறிப்பால் உணர்த்தும் அறிவைத் தருகிறது என அறிந்துகொள்கிறோம்.
பூரணமான அறிவைப் பெற்றுக்கொள்வது கடந்த காலத்திற்குரியதாய் இராமல் இன்னும் வெகுசீக்கிரத்தில் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. நாம் நம்புகிறபடி இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத வரைக்கும் புதுப்புது வகைகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகிற பிதாவினுடைய தெய்வீகத் திட்டங்களை எதிர் பார்க்கவோ போற்றவோ நாம் தயாராக முடியாது. தற்கால மற்றும் வருங்கால சத்தியங்களின் அறிவைப் பெறுவதற்கு அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிசிகள் எழுதியதற்கு நாம் போக வேண்டியது உண்மைதான்.
ஆனால், அவர்கள் தேவனுடைய தெய்வீகத் திட்டங்களையும், நோக்கங்களையும் நம்மைவிட அதிகமாகப் புரிந்துகொண்டார்கள் என்பதற்காக அல்ல. கிஸ்தவ யுக முழுவதும் உள்ள சபையாகிய நமக்கு தெய்வீகத்திட்டம் சம்மந்தப்பட்ட சத்தியங்களையும், இன்னும் வெளிப்பட வேண்டிய சத்தியங்களையும், தெரிவிக்க அவர்களை உபயோகித்தார் என்பதினாலேயே அவர்கள் எழுதினவற்றிற்குச் செல்கிறோம். இந்த உண்மையையும் அப்போஸ்தலர்களே நன்கு நிரூபித்திருக்கிறார்கள்.
தேவன் தம்முடைய சித்தத்தையும், நோக்கத்தையும் சபைக்கு வெளிப்படுத்தினதை, அப்.பவுல் கூறுகிறபடி, “இக்கிறிஸ்தவ யுகத்தில்" விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டதான “பரம அழைப்பின்” இரகசியத்தைப் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர்களுடைய மனக்கண்கள் பிரகாசமாக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படியே பரலோகத்திலிருக்கிறவைகளும், பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கீழ்ப்படுத்தப்பட வேண்டுமென்று தமக்குள்ளே தீர்மானித்திருந்த தமது தயவுள்ள சித்தத்தின்
இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். (எபேசியர் 1:9,10) மேலும், எபேசியர் 3:4-6-ல் "கிறிஸ்துவின் இரகசியத்தைக் குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம். இந்த இரகசியம் இப்போது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே இருக்கிறதுபோல முற்காலங்களில் வெளிப்படுத்தப்பட்டு மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை” என அப்.பவுல் தெளிவுபடுத்துகிறார். இதன் மூலம் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களை தீர்க்கதரிசிகளாவது அல்லது தேவ தூதர்களாவது புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.
அப்பேதுரு கூறும்போது அவ்விஷயங்களைப் பற்றி தீர்க்கதரிசிகள் ஆவலாக அறியமுற்படும்போது, அது அக்காலத்திற்குரியதாயிராமல் சுவிசேஷ யுகத்தில் வாழும் நமக்காகவே என தேவன் அவர்களுக்குக் கூறியிருந்தார். மேலும், இந்த தேவ திட்டத்தைப்பற்றி அதிக வெளிச்சம் கொடுக்கப்படவேண்டுமென்று தேவனை பிரார்த்திக்கவும் அவர் ஏவியிருக்கிறார். (1 பேதுரு 1:10-13)
கர்த்தர் இயேசுவின் வாக்குத்தத்தத்தின்படி சபையானது சகல சத்தியத்திலும் வழிநடத்தப்பட வேண்டும் என்றாலும், அது படிப்படியாய் (gradual) வெளிப்படுத்தப்படும் என்பது வெளியரங்கமாயிருக்கிறது. அப்போஸ்தலர்கள் காலத்தில் இருந்த சபையானது போப்பு மார்க்கத்தின் தவறான கள்ளபோதனைகளில் கறைபடாதிருந்தாலும், இப்போது தேவ திட்டத்தை நாம் பார்க்கிறபடி மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் ஆதி சபை அறிந்திருக்கும் என நாம் அனுமானிக்க முடியாது. தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதினாற்போல அதே ஆவியினால் அப்போஸ்தலர்கள் எழுதியிருந்தாலும், அவர்களுள் தேவனுடைய தெய்வீகத் திட்டம் பற்றி அறிந்துகொள்ளும் அளவில் வித்தியாசம் இருந்தது என்பதும் வெளியரங்கமாயிருக்கிறது.
சுவிசேஷமானது புறஜாதிகளுக்கு செல்ல ஆரம்பிக்கும்போது பவுலைத் தவிர பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் அதைக் குறித்து கலக்கமுள்ளவர்களாயிருந்ததுடன் அதைப்பற்றிய அறிவில்லாதிருந்ததற்கு இது ஒரு உதாரணம். (அப். 10:28; 11:1-3; கலா.2:11-14) அப்போஸ்தலர் பவுல் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும்,
தேவனுடைய கடந்தகால வழிநடத்துதல்களையும், தனக்கே நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட வெளிப்படுத்தல்களையும் நன்கு அறிந்திருந்ததால் அப்.பேதுருவின் நிச்சயமற்ற தன்மையைவிட அப்.பவுல் இவ்விஷயத்தில் உறுதியாயிருந்தார்.
மற்றெந்த அப்போஸ்தலர்களையும்விட அப்போஸ்தலர் பவுலுக்கு அபரிமிதமான தேவனுடைய வெளிப்பாடுகள் இருந்ததென்று வெளியரங்கமாயிருக்கிறது. இந்த வெளிப்பாடுகளை சபைக்கு முழுமையாகவோ அல்லது வெளிப்படையாகவோ மற்ற அப்போஸ்தலருக்கும் (2 கொரி. 12:4; கலா. 2:2) அக்காலத்திலேயே தெரிவிக்கப்படக் கூடாதென்று அவருக்கு தேவ உத்திரவு பிறந்தது என்றாலும், அவர் அடைந்த வெளிப்பாடுகளும் தரிசனங்களும் முழு சபைக்கும் அதிக பிரயோஜனமாயிருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம். அவருக்கு தெரிவிக்கப்பட்ட “வரப்போகிற யுகங்களைப்பற்றிய தெய்வீக" இரகசியங்கள் எல்லாவற்றையும் தெரிவிக்க அனுமதிக்கப்படாவிட்டாலும், அவர் தெய்வீகத் திட்டங்களை முழுவதும் அறிந்தவரானதால் ஆழ்ந்த கருத்துள்ள வல்லமையுள்ள வார்த்தைகளையும், தீர்க்கதரிசன நிறைவேறுதல்களையும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல்களையும், ஆதிகால சபையைவிட நாம் அதிகமாக அறிந்துகொள்ள முடிகிறது.
மேற்சொன்னவைகளை உறுதிபண்ணும் பொருட்டு, கிபி 96ஆம் வருடத்தில் எழுதப்பட்டதும், வேதத்தின் கடைசிப் புத்தகமுமான வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து நாம் எடுத்துரைக்கிறோம். அதின் துவக்க உரையில் தேவனுடைய திட்டங்கள் குறிந்தபட்சம் அக்காலம் வரையில் முழுவதுமாக வெளிப்படுத்தப்படவில்லையென்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறதுடன்,
இன்று வரையிலும் வெளிப்படுத்தப்படாததாலும், அவைகள் இப்புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாலும், அதற்கு வெளிப்படுத்தின விசேஷம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
ஆதிகால சபையைப் பொருத்த வரையில் இப்புத்தகத்தின் எப்பகுதியையாவது யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதிக தரிசனங்களைக் கண்ட அப்போஸ்தலர் யோவானும் கூட அதின் உள்ளான அர்த்தங்களை அறியாதவராகவே இருந்தார். அவர் ஒரு அப்போஸ்தலராகவும், தீர்க்கதரிசியாகவும் இருந்தார். அப்போஸ்தலனாக அவர் அக்காலத்தில்
வெளியாக வேண்டிய சத்தியங்களை அறிந்தும், போதித்தும் தீர்க்கதரிசியாக வருங்கால விசுவாச வீட்டாருக்கான ஏற்றகால ஆவிக்குரிய ஆகாரத்தையும் எழுதி வைத்தார்.
கிறிஸ்தவர் யுகத்தில் பரிசுத்தவான்களில் சிலர் சபையின் எதிர்காலம் பற்றி அறிந்துகொள்வதற்காக இந்த அடையாளப் புத்தகத்தை ஆராய்ந்து பார்த்ததினால் அதிலுள்ள கொஞ்சப்பகுதியை படித்துப் புரியாதவர்கள் கூட அவைகளினால் ஆசீர்வாதமடைந்தனர். (வெளி. 1:3) உதாரணமாக, சீர்திருத்தலின் காலத்தில் மார்டின் லூத்தர் அதை வாசித்தபோது, அவர் உண்மையாய் ஊழியஞ் செய்துவந்த ரோம சபை அல்லது போப்பு மார்க்கமே அப்போஸ்தலர் காண்பித்த அந்திக்கிறிஸ்து அமைப்பு என்று கண்டறிந்தார். இப்போது அதைப்பற்றி நாம் விவரமாய் அறிவதுமல்லாமல் அப்புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகள் போப்பு மார்க்கம் பற்றிய சரித்திரத்தை உடையதென்று காண்கிறோம்.
இவ்விதமாக தேவன் தம்முடைய சத்தியமாகிய கிருபையின் மகாமேன்மையான ஐஸ்வரியத்தை படிப்படியாக வெளிப்படுத்தி வருவதுடன் சபையின் முற்காலங்களைவிட இக்காலத்தில் அறியவேண்டிய அதிக வெளிச்சத்தைத் தொடர்ந்து தந்து வருகிறார்.
இன்னும் அதிகரித்துவரும் வெளிச்சத்தையும் அதன் அழகுகளின் நேர்த்திகளையும் நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம்.
அடுத்த பக்கத்திற்கு செல்லவும்