The Divine Plan on the Ages of Tamil Bible Research தமிழ் பைபிள் ஆராய்ச்சி யுகங்களின் தெய்வீகத் திட்டம்

Donate

Thank you! Your donation has been received.

The Divine Plan on the Ages of Tamil Bible Research தமிழ் பைபிள் ஆராய்ச்சி யுகங்களின் தெய்வீகத் திட்டம்

0

The Divine Plan on the Ages of Tamil Bible Research தமிழ் பைபிள் ஆராய்ச்சி யுகங்களின் தெய்வீகத் திட்டம்


வேதாகமப் பாடங்கள்

 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.


பாகம்.1

யுகங்களைப்பற்றிய தெய்வீகத் திட்டம்

 The Divine Plan of the Ages


தெய்வீக குணாதிசயத்தையும் மற்றும் தெய்வீக அரசாங்கத்தையும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக விளக்கும் விளக்கவுரை:

 வேத வசனப் பகுதிகளை உணர்ந்தறிந்து, இசைவாக்கி, கடந்தகால மற்றும் தற்கால தீமையின் அனுமதியானது தீர்க்கதரிசனங்களில் காண்பிக்கப்பட்ட பொற்கால யுகத்திற்குள் மனுக்குலம் நுழைவதற்கான ஆயத்த வேலையும், படிப்பினையுமே எனக் காணபித்தல்.

மேலும் அப்பொற்கால யுகத்தில், மீட்பரும் ஜீவனை அளிக்கிறவரும், சீர்பொருந்தச் செய்கிறவருமான இயேசு கிறிஸ்துவின் மூலம், பூமியின் முழுக் குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்பட்டு, கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்து, தது. நித்திய ஜீவனை அடையும் முழு வாய்ப்பைப் பெற்றுக்கொள்வர் எனவும் காண்பித்தல். அப் 3:19-21


...ii...

வெளியீட்டாளரின் முன்னுரை


யுகங்களைப் பற்றிய தெய்வீக திட்டம் என்கிற இந்த புத்தகம் ஒரு நவீன சிறந்த தரமான மத புத்தகமாக இருக்கிறது. இது புது சிந்தனைகளையும், கருத்துக்களையும் கொண்டிருக்கிறது.

 இது அநேக வேதாகம ஆதாரங்களுடன் தேவனுடைய மகா திட்டத்தை விரிவாக எடுத்துரைக்கிறது. வேதாகமத்தின் யுகங்களின் பிரிவுகளை வாசகர் சுலபமாக வேறுபடுத்தி காணும்படி செய்கிறது.

 அநேகர் வேதாகமத்தை புரிந்துகொள்ள உதவியிருப்பதால், உற்சாகமுள்ள வாசகர்களால் இது வேதாகமத்தின் திறவுகோல் என்று அறியப்பட்டிருக்கிறது.

இது 1886ல் எழுதப்பட்ட புத்தகம். இதன் கருத்து தற்கால போதகத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது. 

சாட்சி பகரவும் உலகை ஜெயங்கொள்ளவும் தயாராயிருக்கிற சபைகள், வேதாகமம் மற்றும் மதத்தைப் பற்றி குறைகூறப்படுவதின் மூலம் ஒரு பயங்கர தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றன.

 இந்த தாக்குதலுக்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்க இயலாதிருக்கிறார்கள்.

 இதன் மூலம் அநேகர் வேதாகமத்தின் மீதிருக்கிற நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள்.

 ஆனால், யுகங்களைப் பற்றிய தெய்வீக திட்டம் ஊக்கமுள்ள கிறிஸ்தவர்களை மத நம்பிக்கையின்மையிலிருந்து திருப்புவதற்கும், அவிசுவாசிகளை ஒரு அடிப்படையான விசுவாசத்திற்குள் கொண்டு வருவதற்கும் உதவியிருக்கிறது.

இதன் ஆசிரியர், உலகளாவிய 'ஆபத்தின் நாட்களைப் பற்றி குறிப்பிடத்தகுந்த தெளிவுடன் விளக்கியிருக்கிறார். மற்றவர்கள் சமாதானத்தைப் பற்றி பேசும்போது இதன் ஆசிரியர் போர், புரட்சி மற்றும் அராஜகம் அரசாங்கங்களின் ஆகியவற்றின் உச்சகட்டத்தில் உலக அழிவைக்குறித்து தைரியமாக முன் அறிவித்திருக்கிறார்.

 ஆபத்தானது மிகவும் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டிருப்பது போல, தற்கால மற்றும் வருங்கால நிகழ்வுகள், ஆபத்தின் இருண்ட தருணங்களைத் தாண்டி தேவனுடைய

இராஜ்யத்தின் வருகையின் மகிமையை அடையாளம் காண்கிறது.

இந்தப் புத்தகத்தை
விலையேறப்பெற்ற பொக்கிஷமாக, 19,20மற்றும்
4 15:48

...iii...

21ம் நூற்றாண்டின் நம்பத்தகுந்த மற்றும் குறிப்பிடத் தகுந்த மத வேலையாக நாங்கள் கருதுகிறோம்.

ஆகவே வாசகர்கள் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும்படியாக ஜெபத்துடன் வழங்குகிறோம்.

 இந்த திருத்திய மொழிபெயர்ப்பை அன்புடன்

வெளியீட்டாளர்: umn ministry 

...iv...


யுகங்களைப் பற்றிய தெய்வீகத்திட்டம் ஆக்கியோனின் முன்னுரை

இப்புத்தகத்தை ஆக்கியோனும், வெளியிடுபவர்களும் இப்புத்தகமானது தேவனுடைய தெய்வீக திட்டங்களின் மேல் பசிதாகமும் கலக்கமுங்கொண்ட ஏராளமான ஜனங்களுக்குக் கிடைக்கவும் அதின் பலனாக அவர்கள் வெளிச்சம், சந்தோஷம், சமாதானம் மற்றும் தேவனோடு ஐக்கியமடைதல் ஆகியவை சர்வவல்ல தேவனுடைய தயவினால் அனுமதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் எல்லோருக்கும் முன்பாக அறிக்கையிட விரும்புகிறார்கள். இப்புத்தகத்தின் ஆங்கில முதற்பதிப்பானது இப்போதிருக்கிற வண்ணமாய் 1886-ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதுமுதல் ஒன்றன்பின் ஒன்றாக அநேக பதிப்புகள் 20 வேற்று மொழிகளில் வெகுவிரைவாக உலகம் முழுவதிலும் சுமார் 50 இலட்சம் ஜனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகமானது அனைவராலும் வாசிக்கப்பட்டிருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், தொடர்ந்து பெறப்படும் தபால்கள் மூலம் எங்குமுள்ள ஜனங்களின் இருதயங்களிலும், மனதிலும் அது பலமான கிரியை செய்துவருகிறது என்பதை உறுதியாக அறிய முடிகிறது. வேதம் மனுக்குலத்திற்கான தெய்வீக வெளிப்பாடு 6T60T விசுவாசியாத ஆயிரக்கணக்கானோரும்கூட இப்புத்தகம் தங்களில் நற்கிரியை செய்கிறதென தெரிவிக்கிறார்கள், வேறு சிலர் தாங்கள் முன்பே மெய்தேவனையும் அவருடைய தெய்வீகத் திட்டங்களையும் அறியாதிருந்த காரணத்தினாலும், தங்களுக்கு முன்பே காட்டப்பட்ட மனிதக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதினாலும், அக்கடவுளை மகிமைப்படுத்தவும் ஆராதனை செய்யவும் அறியாமல் நாத்திகராக அல்லது அவிசுவாசிகளாக இருந்து வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.

இப்புத்தகத்தின் முதற்பதிப்பு வெளியாவதற்கு ஐந்து வருடத்திற்கு முன்பு ஏறக்குறைய இதில் அடங்கியுள்ள அதே காரியங்களை சிந்திக்கும் கிறிஸ்தவர்களுக்கான ஆவிக்குரிய ஆகாரம் என்ற வேறு பெயரில் அச்சிட்டு வெளியிட்டோம். முதலாவதாக அது தவறை எதிர்த்துத் தாக்கி, அதை அழித்துவிட்டு, அவ்விடத்தில் சத்தியத்தை நிலை

...v....


நிறுத்தும்பொருட்டு வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டது. முடிவில் இது ஒரு சிறந்த முறையல்ல என்று உணர்ந்துகொண்டோம்.

எவ்வாறெனில், இதைப் படிக்க முற்படும்போதே, அநேகர் தங்களுடைய தவறுகள் வீழ்வதைக் கண்டதும் எச்சரிக்கையாகி, இன்னும் வெகுதொலைவில் உள்ள மேன்மையான சத்திய அழகின் வெளிச்சத்தைக் காணக்கூடாதபடி, அப்புத்தகத்தை வாசிக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனால், தற்போதைய தொகுப்போ மாறுபட்ட கோணத்திலிருந்து எழுதப்பட்டுள்ளது. எப்படியெனில், முதலாவது சத்தியத்தையும் அதின் வல்லமையையும் அழகையும் வெளிப்படுத்தி, பின்பு தவறை நீக்கவும், அத்தவறுகள் தேவையற்றது மாத்திரமல்ல, பிரயோஜனமற்றதும், தீமை விளைவிக்கக்கூடியதென்றும் எடுத்துரைக்கின்றது. இவ்விதமாக யுகங்களைப் பற்றிய தேவனுடைய தெய்வீகத் திட்டங்களை வாசிக்கும் ஒவ்வொருவரும் படிப்படியாக தங்களுடைய விசுவாசம் பெலப்படுவதையும், தேவனை தாங்கள் அதிகமதிகமாய் கிட்டிச் சேர்வதையும் அறிவதுடன், தாங்கள் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்பதில் பெலப்படுகிறார்கள்.

 சத்தியத்தை அறிந்து உணர்ந்த பின்பு, தவறான உபதேசங்கள் அனைத்தும் குழப்பத்தை ஏற்படுத்துகிறதும், உபயோகமற்றதும் தீங்கு விளைவிக்கக்கூடியதும், முற்றிலும் மனப்பூர்வமாக வெறுக்கப்பட்டு வேண்டியவைகளுமாயிருப்பது தெரிகிறது. தள்ளப்பட

தேவனுடைய ஜனங்களின் கண்களைத் திறக்கிறதும், தேவனுடைய வேதத்தின்மேல் அவர்களுடைய பயபக்தியை அதிகரிக்கச் செய்கிறதும், மனிதக் கோட்பாடுகள்மேல் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்து ஒழித்துவிடுகிறதுமான எந்த விஷயத்தையும் காண, பெரிய எதிராளியானவன் உண்மையிலேயே விரும்புகிறதில்லை. 

ஆகவே, நாம் எதிர்பார்க்கிற வண்ணமாக பெரிய எதிராளியானவன் இப்புத்தகத்தை மிகவும் வன்மையாக எதிர்ப்பவனாயிருக்கிறான்.
 சாத்தானுடைய வல்லமையும் தந்திரங்களையும் வெகுசிலரே நன்கு புரிந்துள்ளனர். அப்போஸ்தலர் கூற்றுப்படி சத்தியத்தை எதிர்த்து அதை அழிக்கும் முயற்சியாக இந்த இருளின் அதிபதி, ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்துக்கொள்வான் எனவும், சத்திய வெளிச்சத்தினால் ஜனங்கள் பிரகாசிக்கக்கூடாதபடி தடுத்து, அவர்கள் தேவனுடைய தெய்வீக

...vi...

திட்டத்தை அறிந்துகொள்ளாதபடி செய்வதற்காக பிள்ளைகளுக்குள்ளே உள்ள மிகச் தேவனுடைய சிறந்தவர்களையும், செல்வாக்குள்ளவர்களையுமே உபயோகிக்கும்படி தந்திரமும் கபடமுமுள்ள எதிராளியானவன் முயலுகிறான் என்பதையும் வெகு சிலரே நன்கு அறிந்துள்ளனர். 

அநேகருக்கு இதைப்பற்றிப் புரிவதில்லை.

மனிதக் கோட்பாடுகள் ஆரம்பமான கிபி 325 முதல் அதன்பின்பு 1260 வருடங்கள் வேத ஆராய்ச்சியே நடைறெவில்லை என்பதையும் அக்காலங்களில்தானே லட்சக்கணக்கான ஜனங்களுடைய மனதில் மனிதக் கோட்பாடுகள் ஆழமாகப் பதியப்பட்டு, அவைகளினால் ஜனங்கள் பயங்கரமான தவறான உபதேசங்களுக்குள்ளாகி,

 மாபெரும் தேவனுடைய குணநலன்களாகிய ஞானம், நீதி, அன்பு, வல்லமை முதலியவற்றை அறியக்கூடாமல் குருடராகிப்போயினர் என்பதையும் வெகுசிலரே அறிந்துள்ளனர். 

சீர்திருத்தலின் காலம் துவக்கி, அதாவது வேதம் மீண்டும் இலட்சக்கணக்கான ஜனங்களுடைய கைகளில் திரும்பக் கிடைத்தபோது, நல்லெண்ணமுள்ள, ஆனால் வஞ்சிக்கப்பட்ட சீர்திருத்தவாதிகள் கடந்தகால தவறான கோட்பாடுகளினால் மீணடும் அந்தகாரத்தில் சிக்குண்டு பிடிபட்டு அவர்களும் ஜனங்கள் இருளில் இருக்கவே உதவினார்கள் என்பதையும் வெகுசிலரே அறிந்துள்ளனர். 

ஆதிகால சபையில் அப்போஸ்தலரின் நாட்களில் கடைபிடிக்கப்பட்ட எதார்த்தமான வேத ஆராய்ச்சி தற்போது வேதமாணவருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறதென்பதையும் ஒருசிலரே அறிந்துவைத்துள்ளனர்.

இப்புத்தகத்தின் முதல்கட்ட பதிப்புகளுக்கு ஆயிரவருட அருணோதயம் என்ற தலைப்பு உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால், அப்பெயரினால் அநேகர் அது ஒரு கதைப் புத்தகம் என நினைத்து வஞ்சிக்கப்பட்டதையும் அறிவோம். 

ஆக அவ்வகையில் எவரும் வஞ்சிக்கப்பட்டு அதை வாங்காதபடிக்கும், ஒருவரும் தவறாகப் புரிந்துகொள்ளாதபடிக்கும், வேதாகம ஆராய்ச்சிப் பாடங்கள் Studies in the Scriptures என்னும் பெயரை நாம் எழுதியிருக்கும் ஆறு புத்தகங்களுக்கும் பொதுவான பெயராகத் தந்துள்ளோம். இப்புத்தகம் ஏன் புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை 61601 அநேகர் நம்மிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு நாம் தரும் பதில் என்னவெனில், இப்புத்தகத்தை வெளியிடுபவர்களுக்காக
ஜெபியுங்கள்

...vii...


விருப்பமிருந்தாலும், மதவெறிகொண்ட சிலர் இப்புத்தகத்தை வைத்து விற்கும் கடைகளை அவர்கள் நொறுக்கிவிடுவதாக பயமுறுத்துவதால், அவைகளை அங்கு வைத்து விற்க முடிவதில்லை என்பதே. 

ஆரம்பத்தில் இதுவும் சத்தியம் பரவாதாடிக்கு தடுக்க எதிராளியால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு பெரிய நாசவேலை போல் தோன்றியது. ஆனால், பின்பு தேவ கிருபையினால் இந்தப் புத்தகம் போல், அந்தளவுக்கு வேறெந்த புத்தகமும் அதிகளவிலும் நிலையாகவும் விற்கப்படவுமில்லை, விற்கப்படுகிறதுமில்லை.

 பொய்களையும் தவறுகளையும் நம்பினவர்களே தவறான எண்ணங்கொண்டு இப்புத்தகத்தை வாசிக்க மறுத்து அதற்கு விரோதமாக போராடினவர்கள் ஆவர். இப்புத்தகத்தில் அநேகம், இதை வாசிக்காத ஜனங்களாலேயே தீயிட்டுக்கொளுத்தப்பட்டது.

 இவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, வழிநடத்தப்பட்டதாலேயே இவ்வாறு நடந்தது. இருண்ட யுகங்களின்போதும் இயேசுவின் பின்னடியார்கள் இரத்த சாட்சியாக மரித்ததும் இப்படிப்பட்டவர்களாலேயே.

'ஆம் சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும்

அறியாமையினாலே இதைச் செய்தீர்கள் என்று பரிசுத்த பேதுரு

சொல்கிறபடியே (அப் 3:17) இயேசுவும், அவரையாவது அவருடைய

உபதேசங்களையாவது

அறிந்துகொள்ளாதவர்களாலேயே

துன்புறுத்தப்பட்டு மரணத்துக்குள்ளாயினர். அறிந்தார்களானால்

மகிமையின் கர்த்தரை சிலுவையில் அறையமாட்டார்களே.1கொரி.2:8

ஆனால், இப்புத்தகத்திற்கு எதிரான அதின்

எவ்வளவுக்கெவ்வளவு

அதின்மேல்

உண்மையில்லாதவர்களாயிருந்தார்களோ,

அநீதியும்,

அவ்வளவுக்கு

அதின் நண்பர்கள் அதின்மேல் பற்றுதலும்,

வைராக்கியமுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.

விரோதிகள்

கசப்பும்,

அதிகமாய்

அன்பும்,

சத்தியத்தின் மேலுள்ள அன்பினால் ஏவப்பட்டு, தங்களுடைய நேரத்தையும் முயற்சியையும் இப்புத்தகத்தை அதிக அளவில் பரவச் செய்வதில் செலவிட்டிருக்கிற அதின் நண்பர்கள் மூலமாய் இலட்சக்கணக்கான இப்புத்தகங்கள் ஜனங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இம்முன்னுரையை நாம் எழுதும்போதுகூட, இச்சிறிய புத்தகத்தை சத்தியத்தின்மேல் பசிதாகமுள்ள தேவனுடைய பரிசுத்தவான்களுக்கு கிடைக்கச் செய்வதின் மூலமாக அவர்கள்

...viii...


ஆசீர்வாதம் அடையவும், கர்த்தரை மகிமைப்படுத்தவுந்தக்கதாக, பலவிதமான தொழில்களில் ஈடுபட்டிருந்த சுமார் 600 கிறிஸ்தவர்கள், உலகத்திற்குரிய தங்கள் தொழில்கள், ஆசைகள் முதலிய எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள் என்று அறிகிறோம். இவர்களில் சிலர் மருத்துவர்களாகவும், நாவிதர்களாகவும்  Barbers, இயந்திரத் தொழில் புரிபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் தேவனுடைய அன்பினால் ஏவப்பட்டு, தங்கள் அடைந்த ஆசீர்வாதத்தை மற்றவர்களும் அடைந்துகொள்ளும்படி அறிவிக்க ஆவலுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

இப்புத்தகமானது குறைந்த விலைக்கே விற்கப்படுகிறது. அப்படியிருந்தும் பொது ஜனங்களுக்கு விற்கும்படி எடுத்துச்செல்லும் ஊழியர்களுக்கு கிடைக்கும் பணம் அவர்களுடைய செலவுகளுக்குக்கூட போதாததாயிருக்கிறது என்றாலும் சில சமயங்களில் நஷ்டமடையும்போது கர்த்தருக்காகவும், சத்தியத்திற்காகவும், சகோதருக்காகவும் சில அசௌகரியங்களையும் கஷ்டநஷ்டங்களையும் அடையப் பாத்திரவான்களாக இருப்பதினால் அவர்கள் அதிக மன மகிழ்ச்சியடைகிறார்கள். 

கிறிஸ்துவுக்குள் ஜீவனை அடையலாம் என்னும் நற்செய்தி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு செல்லும் இந்த நல்ல வேலை தொடர்கிறது. கடந்தகாலத்தில் அது மிகுதியாய் ஆசீர்வாதத்தை அளித்ததுபோலவே, வருங்காலத்திலும் அதினால் உண்டாகும் ஆசீர்வாதம் மிகுதியாய் இருப்பதாக. 

ஆசிரியரும் வெளியிடுபவர்களும் இதையே எதிர்பார்க்கிறார்கள்.

இந்த செய்தியை வாசிக்கும் யாவருக்கும் எனது மனமார்ந்த

வாழ்த்துக்கள்!

அத்தியாத்தை தொடருங்கள்.


உள்ளடக்கம்


மகிழ்ச்சியின் அதிகாலையில் முடிவுக்கு வரும் பூமியின் பாவ இராக்காலம்


அழுகையின் இரவும் மகிழ்ச்சியின் காலைப்பொழுதும் சத்தியத்தைத் தேடுவதற்கான இரு வழிமுறைகள் இங்கே தெரிந்துகொள்ளப்பட்ட வழி இவ்வேலையின் நோக்கம் சத்திய வேதத்தை பயபக்தியோடு படிப்பதற்கும், அதை யூகங்களின் அடிப்படையில் படிக்கும் ஆபத்தான பழக்கத்திற்கும் உள்ள வித்தியாசம்  தீர்க்கதரிசனத்தின் நோக்கம் தற்கால உலகின் மத ரீதியான நிலைமைகளை நோக்கும் இருவித பார்வை எகிப்தின் இருள் வாக்குத்தத்தத்தின் வானவில் நீதிமான்களின் முன்னேற்றப்பாதை மாபெரும் விசுவாச துரோகத்திற்கான காரணம் சீர்திருத்தம்  மீண்டும் அதே காரணத்தினால் தடைபடும் உண்மையான வளர்ச்சி அறிவின் பரிபூரணம் கடந்த காலத்திற்குரியதல்ல, மாறாக எதிர்காலத்திற்குரியது.. 

அத்தியாயம் - 2

எல்லாவற்றிற்கும் மேலாக சர்வஞானமுள்ள சிருஷ்டிகர் ஒருவர் உண்டென்று நிரூபித்தல்


வேதாகமத்தை சற்று அப்புறப்படுத்தி புத்தியினால் நிரூபித்தல் ஒரு அடிப்படை ஆதாரமற்ற ஒரு கொள்கை  அறிவுப்பூர்வமான கொள்கை  கடவுளுடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துதல் நியாயமான அணுகுமுறைகள் தேவையில்லாதவைகளை சரியான காரணத்தோடு தள்ளிவிடுதல். .

அத்தியாயம் - 3

சத்திய வேதம் தெய்வீக வெளிப்பாடு என புத்தியறிவின் வெளிச்சத்தின்படி நிரூபித்தல்


வேதத்தை நம்புவதற்கு வெளியரங்கமான ஆதாரங்கள் அதின் பழைமையும் அது பாதுகாக்கப்பட்ட விதமும் நன்னடக்கைக்கு ஏவும் அதின் வல்லமை  அதின் எழுத்தாளர்களின் நோக்கம் அதிலுள்ள புத்தகங்களின் பொதுவான குணாதிசயங்கள் மோசேயின் புத்தகங்கள், மோசேயின் பிரமாணங்கள்

மோசேயினால் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்க விசேஷங்கள் அது ஆசாரிய சுயநல அமைப்பல்ல மக்களை ஆளுகிறவர்களின் சட்டதிட்டங்கள் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் ஒரேவித சட்டம் ஜனங்களுடைய உரிமைகளைப் பறிக்காதபடிக்கு ஏற்பட்ட பாதுகாப்புச் சட்டம் ஆசாரியர் விசேஷ வகுப்பாரல்ல அவர்களுடைய வாழ்க்கைக்கான உதவிகள் அந்நியர், விதவைகள், அநாதைகள், அடிமைகள், வேலையாட்கள் கொடுமையாய் நடத்தப்படாதபடிக்கு ஏற்பட்ட சட்டம் தீர்க்கதரிசிகள் வேதத்தின் தீர்க்கதரிசனம் மற்றும் புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்களை இணைத்துக்காட்டும் நியாயப்பிரமாணம்  அற்புதங்கள் புத்திக்கெட்டாதவைகளல்ல  ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவுரை... .
...xi...

அத்தியாயம் - 4

தேவதிட்டத்தின் வளர்ச்சியை குறிப்பிட்டு விளக்கும் காலப்பகுதிகளும் யுகங்களும்


முறையான தெளிவான தேவ திட்டம் உலக சரித்திரத்தை விளக்கும் மூன்று பெரிய காலப்பகுதிகள் அவைகளின் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சங்கள் பூமி என்றென்றைக்கும் நிலைநிற்கும் இனிவரும் உலகம், புதிய வானங்களும் புதிய பூமியும்  மூன்று பெரிய காலப்பகுதிகளின் உட்பிரிவுகள்  முக்கிய அம்சங்கள் கொண்ட தேவ திட்டம் அதன் மூலம் வெளியாக்கப்படுதல் வெளியாக்கப்பட்டு அறியப்படும் தேவ திட்டம் இசைவும் இணக்கமுள்ளது - சத்திய வசனத்தை நிதானமாக பகுத்தறிதல். ...69

அத்தியாயம்-5

யுகங்களுக்கும் தலைமுறை தலைமுறைக்கும் மறைக்கப்பட்டு இப்போது பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியம்-கொலோ. 1:25


முதலாம் வாக்குத்தத்தத்தின் மங்கலான வெளிச்சம் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறாத நம்பிக்கை பெந்தெகொஸ்தே நாளில் வெளிப்பட தொடங்கிய இரகசியம் அந்த இரகசியம் என்ன ? ஏன் அதிக வருடம் இரகசியமாயிருந்தது? உலகத்திற்கு இன்னும் அது இரகசியமாகவே உள்ளது  ஏற்ற காலத்தில் எல்லாருக்கும் வெளிப்படுத்தப்பட வேண்டியது - எப்போது அந்த இரகசியம் முடிவுபெறும்? 

...xii...

அத்தியாயம் - 6

நமது கர்த்தரின் இரண்டாம் வருகை அதின் நோக்கம், இழந்துபோன எல்லாவற்றையும் திரும்பக்கொடுத்தல்


நம் கர்த்தரின் இரண்டாம் வருகையும், ஆயிர வருட யுகத்தின் ஆரம்பமும்  முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் உள்ள சம்பந்தம் சபையின் தெரிந்துகொள்ளுதலும் உலகின் மனமாற்றமும் தேர்ந்தெடுத்தலும், இலவசமான கிருபையும் நம்பிக்கையுடைய சிறைக் கைதிகள்  திரும்பக் கொடுத்தலைக் குறிக்கும் தீர்க்கதரிசன ஆதாரங்கள் நமது கர்த்தரின் இரண்டாம் வருகையே சபைக்கும் உலகத்துக்குமுரிய நம்பிக்கையின் வெளிப்பாடு..


அத்தியாயம் – 7

தீமையின் அனுமதியும் தேவனுடைய திட்டத்தோடு அதற்குள்ள தொடர்பும்


ஏன் தீமை அனுமதிக்கப்பட்டது ? சரி மற்றும் தவறு எனும் கொள்கைகள் பகுத்தறிதல்  தேவன் தீமையை அனுமதித்தாலும் அதைக் கட்டுப்படுத்தி நன்மையை நிலைநாட்டுதலும் தேவன் பாவத்திற்கு காரணரல்ல  ஆதாமின் சோதனை ஒரு பரிகாச செயல் அல்ல -கடுமையான அவருடைய சோதனை அவருடைய மனப்பூர்வமான பாவம் பாவத்திற்கான தண்டனை அநீதியானதும் கடுமையானதும் அல்ல ஆதாமுக்குள் அனைவரும் குற்றவாளிகளானதால் விளங்கும் தேவனுடைய நீதியும், ஞானமும், அன்பும் முழு உலகத்திற்குமான தேவப்பிரமாணம்... ..139

அத்தியாயம் - 8

நியாயத்தீர்ப்பின் நாள்


நியாயத்தீர்ப்பின் நாளைப் பற்றிய பொதுவான கருத்து - இது வேதாகமத்திற்கு


இசைவானதா? நியாயத்தீர்ப்பு, நாள் என்னும் பதங்களின் பொருள் விளக்கம் அநேக நியாயத்தீர்ப்பின் நாட்கள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது முதலாவது நியாயத்தீர்ப்பின் நாளும் அதன் முடிவுகளும் -நியாயாதிபதி இன்னும் ஒரு நியாயத்தீர்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது வரவிருக்கின்ற

நியாயத்தீர்ப்பின் லட்சணங்கள் முதலாம் நியாயத்தீர்ப்பிற்கும் இரண்டாம்
நியாயத்தீர்ப்பிற்கும் இடையேயுள்ள ஒற்றுமையும் வேற்றுமையும் உலகத்தின் தற்போதைய பொறுப்பு  இந்த இரண்டு நியாயத்தீர்ப்பின் நாட்களுக்கும் நடுவே ஏற்படும் வேறு இரண்டு நியாயத்தீர்ப்புகளும், அவற்றின் நோக்கமும்  வரவிருக்கிற நியாயத்தீர்ப்பைப் பற்றிய வேறுபட்ட மதிப்பீடுகள் இதை எப்படி தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் நோக்கினார்கள் .
...xiii...

அத்தியாயம் - 9

மீட்கும்பொருளும் திரும்பக் கொடுத்தலும்


மீட்கும்பொருளால் உறுதியாக்கப்பட்ட திரும்பக்கொடுத்தல்  நித்திய ஜீவனல்ல, ஆனால் அதற்கான பரீட்சையே, மீட்கும் பொருளால் உத்திரவாதமளிக்கப்பட்டது பரீட்சையின்நிபந்தனைகளும்ஆதாயங்களும் கிறிஸ்துவின்பலிஅவசியமானது ஒருவரது மரணத்தால் மனுக்குல சந்ததி எவ்வாறு மீட்கப்பட முடிந்தது? விசுவாசமும் கிரியைகளும் இன்னும் அவசியம்  மனப்பூர்வமாக செய்யும் பாவத்திற்கு தண்டனை நிச்சயம் உயிர்த்தெழுப்பப்பட்ட இலட்சக்கணக்கான நபர்களுக்கு இப்பூமியில் இடம் இருக்குமா? திரும்பக்கொடுத்தலும். பரிணாமமும் .

அத்தியாயம் - 10

ஆவிக்குரிய மற்றும் மானிட சுபாவங்கள் வெவ்வேறானதும் வித்தியாசமானதும்


பொதுவான தவறான புரிந்துகொள்ளுதல்  பூமிக்குரிய அல்லது மனித சுபாவமும் பரத்திற்குரிய அல்லது ஆவிக்குரிய சுபாவமும் பூமிக்குரிய மகிமையும் பரத்திற்குரிய மகிமையும் ஆவிக்குரிய ஜீவிகளைக்குறித்த வேதாகம சாட்சியம்  அழிவிற்குரியதும் அழியாமைக்குரியதும்  அழிவுக்குரிய ஜீவிகள் நித்திய ஜீவனை சுதந்தரிக்க முடியுமா ? தயை காண்பித்தலில் உள்ள நீதி யூகத்தின் அடிப்படையில் உள்ள கொள்கையை ஆராய்தல்  பரிபூரணத்தில் பல்வேறுவிதம் தேவனது மேலாண்மை மிக்க உரிமைகள் மனிதனது நிறைவான தேவைகளுக்காக தேவனுடைய ஏற்பாடுகள் கிறிஸ்துவின் சரீர அங்கங்களை தேர்ந்தெடுத்தல் மாறுதலடையும்? அவர்களது சுபாவம் எவ்விதம் .

...xiv...

அத்தியாயம் - 11

மூன்று வழிகள் - விசாலமான வழி, நெருக்கமான வழி, பெரும்பாதையான வழி


கேட்டுக்குப் போகிற விசாலமான வழி  ஜீவனுக்குப்போகிற நெருக்கமான வழி ஜீவன் என்றால் என்ன ? தெய்வீக சுபாவம் தெய்வீக சுபாவத்திற்கும் மனித சுபாவத்திற்கும் உள்ள சம்பந்தம் நெருக்கமான வழியின் முடிவில் வைக்கப்பட்டிருக்கும் பரிசு சுவிசேஷ யுகத்திற்கு மட்டுமே உரிய பரம அழைப்பு நெருக்கமான வழியின் கடினமும், அபாயங்களும்  பெரும் பாதையாகிய பரிசுத்த வழி. 

அத்தியாயம் 12

யுகங்களின் திட்டத்தைக் காண்பிக்கும் வரைபடத்தின் விளக்கம்


யுகங்கள் அறுவடைகள் நீதிமானுக்குரிய உண்மையான நிலைமையும், நீதிமானாகக் கருதப்படும் நிலைமையும்  நம் கர்த்தராகிய இயேசுவின் ஜீவியம் அவரது பின்னடியார்களின் ஜீவியம்  பெயர் சபைகளின் மூன்று வகுப்பார்  அறுவடையின்போது பிரித்தெடுக்கப்படுதல் அபிஷேகம் பண்ணப்பட்ட வகுப்பார் மகிமை அடைதல்  மகா உபத்திரக் காலத்து வகுப்பார் பதர் சுட்டெரிக்கப்படுதல்  உலகம் ஆசீர்வதிக்கப்படுதல்  மகிமையான பலன்......

அத்தியாயம் 13

இவ்வுலக இராஜ்யங்கள்


முதலாவது ஆளுகை அதனை இழந்துபோகுதல் அதன் மீட்பும், திரும்பக்கொடுத்தலும்  நிழலான தேவ இராஜ்யம்  அபகரிப்பவன் தற்கால ஆளுகையின் இரு நிலைமைகள் தேவனால் நியமிக்கப்பட்ட அதிகாரங்கள்  அவைகளைப்பற்றிய நேபுகாத்நேச்சாரின் பார்வை  தானியேலின் தரிசனமும் அதன் விளக்கமும் இவ்வுலக இராஜ்யங்களை வேறு நிலைப்பாட்டிலிருந்து காணுதல் தற்கால அரசாங்கங்களுக்கும், திருச்சபைக்குமுள்ள முறையான உறவு  இராஜாக்களின் தெய்வீக உரிமையை சுருக்கமாக ஆராய்தல் போலி கிறிஸ்தவ மண்டலத்தின் தவறான உரிமைக்கோரல் ஐந்தாம்

உலகப்பேரரசின் மேலான நம்பிக்கை.

...xv....

அத்தியாயம் - 14

தேவனுடைய இராஜ்யம்


இப்பாடத்தின் உன்னத மேன்மை ராஜ்ஜியத்தின் பண்புகள் சுவிசேஷ யுகத்தின்போது ராஜ்ஜியத்தின் நிலை பவுலால் திருத்தப்பட்ட தவறான சிந்தனைகள் ராஜ்யத்தைக் குறித்த தவறான கருத்துக்களின் விளைவுகள்  தேவ ராஜ்ஜியத்தின் இரு பாகங்கள் ஆவிக்குரிய பாகமும் அதன் செயல்பாடுகளும் பூமிக்குரிய பாகமும் அதன் செயல்பாடுகளும் இவைகளின் இணக்கமான செயல்பாடுகள் பூமிக்குரிய பாகத்தின் மகிமை  பரலோகத்திற்குரிய பாகத்தின் மகிமை உடன்படிக்கை என்ற வேரிலிருந்து வளரும் இந்தக் கிளைகள் பூமிக்குரிய ராஜ்ஜியத்தின் பாகம் இஸ்ரயேலருடையது இழந்த கோத்திரங்கள் பரலோக எருசலேம் நிழலான ஜனங்களாகிய இஸ்ரயேலர்  இஸ்ரயேலர் இழந்துபோனதும் திரும்பப் பெறுவதும்  தெரிந்தெடுக்கப்பட்ட வகுப்பார்கள் இராஜ்ஜியத்தின் சுதந்திரர்கள் இருப்புக்கோல் ஆட்சி ஆயிரவருட அரசாட்சியின் நோக்கத்தின் உதாரண விளக்கம் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ராஜ்ஜியம் தேவனுடைய பூர்வீகத் திட்டம் முழுமையாக நிறைவேறித் தீருதல் .

அத்தியாயம் -15

கர்த்தருடைய நாள்

கர்த்தருடைய நாள்  பழிவாங்கும் நாள்  'கோபத்தின் நாள் மகா உபத்திரவக்காலம் அதன் காரணம் வேதாகமத்தில் அதைக்குறித்த சாட்சியம்  அதன் அக்கினியும் புயலும், அது அசைக்கப்பட்டு உருகுதல், அடையாளங்கள் என்று காண்பித்தல்  தாவீதின் சாட்சி - வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய ஆசிரியரின் சாட்சி தற்கால சூழ்நிலை மற்றும் எதிர்கால தோற்றம் பற்றிய எதிரான வகுப்பாராகிய முதலாளி மற்றும் தொழிலாளியின் பார்வை தோல்வியில் முடியும் ஒரு தீர்வு ஏற்றவேளையில் திரை நீக்கப்பட்டு வெளிச்சம் அருளப்பட்டது இதற்கான ஆதாரங்கள் ஆபத்துக் காலத்தில் பரிசுத்தவான்களின் நிலைமையும் அது குறித்த அவர்களது சரியான அணுகுமுறையும். .

அத்தியாயம் - 16

முடிவுரை

சத்தியத்தின் பேரில் நமது கடமை - அதன் விலையும், மதிப்பும், பலனும்


......

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*