ஜெபிக்கும்போது நாம் கவனிக்க வேண்டிய காரியங்கள்
1. ஜெபத்தின் விதிமுறைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி ஜெபிக்க வேண்டும்.
2. தேவனிடத்தில் ஒரு நண்பரிடம் பேசுவது போலத் தைரியமாகப் பேசவேண்டும்.
3. நமது ஜெபத்திற்குத் தேவன் பதில் கொடுப்பார் என்னும் விசுவாசமும், நிச்சயமும் நமக்குள் காணப்படவேண்டும்.
4. ஜெபிக்கும்போது தேவனுடைய கர்த்தத்துவத்தையும், அவருடைய சர்வவல்லமையையும், விசுவாசிக்க வேண்டும். அவருடைய சித்தப்படி ஜெபிக்கும்போது நமது ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும் என்று விசுவாசிக்க வேண்டும்.
5. நமது தேவையைச் சந்திப்பது தேவனுடைய சித்தம் என்று விசுவாசிக்க வேண்டும்.
6. பரிசுத்த ஆவியானவரையும் பரிசுத்த ஆவியானவரின் வரங்களையும் நாம் தேவனிடம் கேட்க வேண்டும்.
7. தேவனிடம் யார் ஜெபித்தாலும் பதில் தருவார் என்னும் எண்ணம் நமக்குள் வரவேண்டும். பெரிய ஊழியக்காரர்கள் ஜெபித்தால்தான் தேவன் பதில் கொடுப்பார். நாம் ஜெபித்தால் தேவன் செவிகொடுக்கமாட்டார் என்று சோர்ந்து போகக்கூடாது.
from வேதாகம களஞ்சியம் https://ift.tt/3jTw0X3
via IFTTT Umn ministry