ரூத் 3ஆம் அதிகாரம் விளக்கம்

0



ரூத் 3ஆம் அதிகாரம் விளக்கம்

ரூத் போவாசுக்கு மனைவியாக  வேண்டும். இதற்காக ரூத் என்னென்ன செய்யவேண்டுமென்று  நகோமி அவளுக்கு ஆலோசனை சொல்லுகிறாள் (ரூத் 3:1-5). ரூத் நகோமியின் ஆலோசனை பிரகாரம்  ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறாள் (ரூத் 3:6,9). போவாஸ் ரூத்தை அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்துகிறார் (ரூத் 3:8-15). ரூத் நகோமியிடம் திரும்பி வருகிறாள் (ரூத் 3:16-18). 

நகோமியும் ரூத்தும்  ரூத் 3:1-5 

ரூத் 3:1. பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி                 நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ? 

ரூத் 3:2. நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின்முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று  இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.

ரூத் 3:3. நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாம-ரு.

ரூத் 3:4. அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.

ரூத் 3:5. அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.

நகோமி தன் மருமகள் ரூத்திற்கு  ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லுகிறாள்.  நகோமியிடம் நல்ல சுபாவங்கள் காணப்படுகிறது.  தன் மருமகள் ரூத் சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நகோமி அவளுக்கு  சவுக்கியத்தைத் தேடுகிறாள். ரூத்திற்கு நல்ல முறையில் எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்னும் எண்ணமே நகோமியின் இருதயத்தில் நிரம்பியிருக்கிறது. 

நகோமி அதிக ஞானமுள்ளவள். தன்  மருமகள் ரூத்தின் திருமண காரியங்களை ஞானத்தோடு சிந்தித்துப் பார்க்கிறாள்.  இந்த திருமணம் நல்லமுறையில் நடைபெறுவதற்கு என்னென்ன காரியங்களை செய்யவேண்டுமென்று நகோமி யோசித்துப் பார்க்கிறாள்.   தன்னுடைய ஆலோசனைகளை நகோமி ரூத்திற்கு சொல்லுகிறாள். 

நகோமியின் புருஷன் எலிமெலேக்கு ஏற்கெனவே செத்துப்போனார்.  நகோமியின் இரண்டு குமாரர்களும் செத்துப்போனார்கள். நகோமியின் இரண்டு மருக்களில் ஒருத்தி  மோவாப் தேசத்திலேயே இருந்துவிட்டாள். மற்றொரு மருமகளாகிய ரூத் மாத்திரமே இப்போது நகோமியோடுகூட  கானான் தேசத்திலே இருக்கிறாள்.

நகோமியின் சந்ததி நிலைத்திருக்க வேண்டுமென்றால்,  அவளுடைய குடும்பத்திலே புத்திர பாக்கியங்கள் இருக்கவேண்டும்.  ஆனால் நகோமியின் புருஷனும், இரண்டு குமாரர்களும் செத்துப்போனபடியினால்,  அவளுடைய குடும்பத்தில் சந்ததி உண்டாவதற்கு வாய்ப்பு இல்லை. ரூத்திற்கு திருமணம் செய்து வைத்தால்,  அவள் மூலமாக தன்னுடைய குடும்பத்திற்கு வம்ச வாரிசு உண்டாகும் என்று நகோமி எதிர்பார்க்கிறாள். 

நகோமி  ரூத்தைப்பற்றி  தன்னுடைய இருதயத்தில் நினைத்துப் பார்க்கும்போது,  அவளை தன்னுடைய மருமகளாக நினைக்காமல், தன் சொந்த மகளாகவே  நினைக்கிறாள். நகோமி ரூத்திடம் பேசும்போது, ""என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?'' (ரூத் 3:1) என்று சொல்லுகிறாள். 

ரூத்தை போவாசிற்கு விவாகம் செய்து வைக்க வேண்டும். இது நகோமியின் திட்டம். உறவின்முறை மீட்புப் பிரமாணத்தின் பிரகாரம் இந்த விவாகத்தை நடத்தி வைக்க வேண்டுமென்று நகோமி விரும்புகிறாள். இந்தப் பிரமாணத்தின்படி ஒரு சுதந்தரத்தை மீட்கிறவன் மரித்துப்போன சகோதரனுடைய மனைவியையும் விவாகம் செய்ய வேண்டும். அந்தக் குடும்பத்தின் பெயர் நிலைத்திருப்பதற்காக அவளுக்கு பிள்ளைகளையும் வளர்த்துத் தரவேண்டும். நகோமி தன் திட்டத்தை ரூத்திற்கு அறிவிக்கிறாள். 









நகோமி தன் மருமகள்மீது மெய்யாகவே அன்பாயிருக்கிறாள். அவள் ரூத்தின் நலத்தையும் சுகத்தையும் நாடுகிறாள். ரூத்திற்கு செய்யவேண்டிய நன்மையான காரியங்களை நகோமி பொறுப்போடு செய்கிறாள். ஒரு தாய் தன் மகளுக்கு செய்யவேண்டிய கடமைகளை  நிறைவேற்றுவதுபோல, நகோமி ரூத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுகிறாள்.

திருமணம் வாலிபர்களுடைய வாழ்க்கையில் நடைபெறும்  முக்கியமான சம்பவம். திருமணமாகும் வரையிலும் வாலிபரின்  மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அவர்கள் பல காரியங்களை சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். திருமணமான பின்பு அவர்களுடைய மனது அலைபாயாமல், குடும்ப வாழ்க்கையில் நிலைத்திருக்கும்.  மனைவிமார்கள் தங்களுக்கு வாய்க்கும் புருஷருடைய வீட்டிலே சுகமாய்த் தங்கியிருப்பார்கள். 

""கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்-, அவர்களை முத்தமிட்டாள்''  (ரூத் 1:9,10).

நகோமி  தன் மருமகளின் திருமணம் நடப்பதற்கு  ஒரு சில ஆலோசனைகளைச் சொல்லுகிறாள். நகோமியின் ஆலோசனைகள் விநோதமாயிருக்கிறது. அதை மேலோட்டமாகப் பார்க்கும்போது,  நகோமியின் ஆலோசனைகள் பரிசுத்தமானதுபோல இல்லை. ஆனாலும் நகோமியின் மனது சுத்தமாயிருக்கிறது.  

நகோமி தன் மருமகள்  ரூத்தின் நன்மையை நாடுகிறவள்.  ரூத் சுகமாய் வாழ்ந்திருக்கும்படி விரும்புகிறவள். நகோமி ரூத்தின்  சவுக்கியத்தைத் தேடுகிறவள். நகோமி தன்னுடைய மருமகள் ரூத்திற்கு ஒருபோதும் தீங்கு செய்யமாட்டாள்.  நகோமியின் ஆலோசனையில் சுத்தம் இருக்கும். அந்த ஆலோசனைக்கு கீழ்ப்படியும்போது ரூத்திற்கு நன்மை உண்டாகும். நகோமிக்கு இஸ்ரவேல் புத்திரரின் பிரமாணங்களைப்பற்றி நன்றாய்த் தெரியும். 

ரூத் மோவாப் தேசத்து ஸ்திரீ.  அவள் இப்போதுதான் கானான் தேசத்திற்கு வந்திருக்கிறாள். அவளுக்கு  இஸ்ரவேல் தேசத்தின் நியாயப்பிரமாணத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. நகோமி  இஸ்ரவேலின் நியாயப்பிரமாணங்களை நன்றாய் அறிந்திருக்கிறாள். யூதர்களுடைய பாரம்பரிய வழக்கத்தின் பிரகாரமும், அவர்களுடைய  நியாயப்பிரமாணத்தின் பிரகாரமும், ரூத்திற்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்பதை யோசித்து, நகோமி ஒரு சில காரியங்களை  தீர்மானம்பண்ணுகிறாள்.

நகோமி ரூத்திடம் போவாசைப்பற்றிச் சொல்லுகிறாள்.  ""போவாஸ் நம்முடைய உறவின் முறையான் அல்லவா'' என்று  நகோமி ரூத்திடம் சொல்லுகிறாள் (ரூத் 3:2). நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு மரித்துப்போனார். போவாஸ் எலிமெலேக்கின் நெருங்கிய உறவின் முறையிலிருக்கிறார். 

வாற்கோதுமையை இரவு வேளையில் தூற்றுவது வழக்கம். அப்போது குளிர்ச்சியாகவும் இருக்கும். காற்று பலமாகவும் வீசும். இதுபோன்ற சீதோஷ்ண நிலையில் வேலைக்காரர்களால் நன்றாக வேலைபார்க்க முடியும்.

தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி எலிமெலேக்கின் மூத்த குமாரனாகிய  கிலியோனின் விதவை மனைவியை, போவாஸ் திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஆனால் கிலியோனின் மனைவியாகிய ஒர்பாள் கானான் தேசத்திற்கு வராமல், மோவாப் தேசத்திலே தன் பெற்றோரோடு தங்கிவிட்டாள். 

இப்போது  நகோமியோடு,  அவளுடைய இளைய குமாரனாகிய மக்லோனின்  விதவை மனைவியாகிய ரூத் இருக்கிறாள். யூதருடைய வழக்கத்தின் பிரகாரம்,  போவாஸ் ரூத்தை திருமணம் செய்து, அவளுக்கு சந்ததியை ஏற்படுத்தி தரவேண்டும்.  போவாசுக்கும் தன்னுடைய கடமை தெரியும். ஆனாலும் போவாசின் கடமையை அவருக்கு நினைவுபடுத்துவது நல்லது என்று  நகோமி நினைக்கிறாள்.

தன்னுடைய  யோசனையையும்,  திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு,  நகோமி தன் மருமகள் ரூத்தை பயன்படுத்துகிறாள்.  தன் மருமகள் மூலமாக, போவாசுக்கு, அவருடைய உறவின் முறை கடமையை  ஞாபகப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாள்.

ரூத்  இத்தனை நாட்களாக போவாசின் வயல்வெளியிலே  கதிர்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தாள். போவாசுக்கும் ரூத்திற்கும் அந்நியோன்னிய பழக்கமுண்டாயிற்று.  ரூத் போவாசின் நிலத்திலே, வாற்கோதுமை அறுப்புக்காலத்திலும், கோதுமை அறுப்புக்காலத்திலும் கதிர் பொறுக்கினாள்.   இப்போது அறுப்பு காலம் முடிந்து, அறுத்த கதிர்களை தூற்றும் காலம் வந்திருக்கிறது. 

அறுப்புக்காலத்திலே போவாசுக்கும் ரூத்திற்கும் ஏற்பட்ட  அந்நியோன்னிய ஐக்கியத்தை, தூற்றும் காலத்திலே திருமண ஐக்கியமாக மாற்றவேண்டுமென்று நகோமி திட்டமிடுகிறாள். நகோமி  தன் மருமகள் ரூத்திடம், ""நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின்முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்'' (ரூத் 3:2) என்று சொல்லுகிறாள். 

ரூத் போவாசிடம் போய், தன்னைத் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்று  கேட்கலாம். இவ்வாறு கேட்பதற்கு நியாயப்பிரமாணத்தின்படி ரூத்திற்கு உரிமை இருக்கிறது. 






""அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாச-ல் கூடிய மூப்பரிடத்துக்குப் போய் என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவே-ல் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.  அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடே பேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால், அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் கா--ருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள். (உபா 25:7-9). 

  ரூத்திற்கு  நியாயப்பிரமாணத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நகோமி  இதை நன்றாய் அறிந்து வைத்திருக்கிறாள். ரூத் போவாசிடம் எப்படி போகவேண்டும் என்றும்,  எப்போது போகவேண்டும் என்றும், அவள் என்ன செய்யவேண்டும் என்றும் நகோமி தன் மருமகள் ரூத்திற்கு ஆலோசனை சொல்லுகிறாள்.

""நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாம-ரு. அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய்,  அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான்'' (ரூத் 3:3,4) என்று நகோமி ரூத்திற்கு சொல்லுகிறாள். 

ரூத் சரியான சந்தர்ப்பத்தில் போவாசுக்கு முன்பாக தன்னை வெளிப்படுத்த வேண்டும். போவாஸ் தன் வேலையாட்களோடு கூடயிருக்கும்போது, ரூத் அங்கே போகக்கூடாது. அவர் தனியாக இருக்கும்போது மாத்திரமே ரூத் அவருக்கு முன்பாகப் போகவேண்டும் என்று நகோமி ஆலோசனை சொல்லுகிறாள்.

போவாஸ் தனிமையிலிருக்கும்போது,  ரூத் என்ன செய்யவேண்டும் என்றும் நகோமி அவளுக்கு ஆலோசனை சொல்லுகிறாள். ""போவாஸ் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்''  (ரூத் 2:4) என்று நகோமி ரூத்திற்கு சொல்லுகிறாள். 

போவாஸ் படுத்திருக்கும்போது, அவருடைய கால்களின்மேல் மூடியிருக்கிற  போர்வையை ஒதுக்கி, ரூத் அங்கே படுத்துக்கொள்வது என்பது, வெளிப்பார்வைக்கு  கண்ணியமான செயலாயிருக்காது. ஆனாலும் நகோமி ரூத்திற்கு இந்த ஆலோசனையை சொல்லுகிறாள். 

இந்த சம்பவத்தை நியாயப்படுத்துவதற்கு,  வேதபண்டிதர்கள் சில விளக்கம் கொடுக்கிறார்கள்.  போவாஸ் ரூத்திற்கு நெருங்கிய உறவின் முறையிலிருக்கிறார்.  கர்த்தருடைய பார்வையில் போவாசும் ரூத்தும் விவாகம் பண்ணின தம்பதிகளாகவே இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இன்னும் முறைப்படி விவாகம் நடைபெறவில்லை.  ஆனாலும் இவர்கள் கர்த்தருடைய பார்வையில் விவாகம்பண்ணின தம்பதிகள் போல இருப்பதினால், ரூத் போவாசின் காலடியில் படுத்திருப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள்.

ரூத் போவாசை போய்ப்பார்க்கும்போது, அவள் தன்னை  போவாசின் மனைவியாகவே வெளிப்படுத்தவேண்டும் என்பது  நகோமியின் திட்டம். நகோமியின் மனதில் வேறு வஞ்சகமான எண்ணம் எதுவுமில்லை. போவாஸ்  ஒரு நீதிமான் என்றும், அவர் கண்ணியமானவர் என்றும், அவர் கர்த்தருக்கு பயந்து நடக்கிறவர் என்றும், ரூத்திடம்  முறைதவறி நடக்கமாட்டார் என்றும் நகோமி நம்புகிறாள். 

நகோமிக்கு ரூத்தைப்பற்றியும் நன்றாய்த் தெரியும். ரூத் கர்ப்புள்ள ஸ்திரீ. அவள் ஒருபோதும் தன்னுடைய குடும்பத்தின்  பெயரைக் கெடுப்பதற்கு மோசமான காரியங்களை செய்யமாட்டாள். ரூத் தன்னுடைய குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றுவாள் என்பதும் நகோமிக்குத்  தெரியும். 

""தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பா-ய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு'' (தீத் 2:4,5).

நகோமியின் ஆலோசனையில் கற்பும், கண்ணியமும்,  ஒழுக்கமும் இருக்கிறது. நகோமி ரூத்திற்கு மோசமான ஆலோசனைகளைச் சொல்லி, அவளை தவறான பாதையில் வழிநடத்தவில்லை. நகோமியினிடத்தில் ஞானம் இருக்கிறது. நகோமி ரூத்திற்கு இந்த ஆலோசனைகளைச் சொல்லும்போது,  அவள் ரூத்தை தன் மருமகளாகப் பாவிக்காமல், தன் மகளாகவே பாவித்து இந்த ஆலோசனைகளைச் சொல்லுகிறாள்.

நகோமியின் ஆலோசனை இப்போது  விநோதமாகயிருந்தாலும், அதன் முடிவு நன்றாயிருக்கும். போவாஸ் தன்னுடைய உறவின் முறையின் கடமையை செய்யவேண்டும்.  போவாசைப்பற்றி நகோமிக்கு தெரிந்திருக்கிறது. அவர் தன்னுடைய கடமையில் தவறமாட்டார் என்று நகோமி எதிர்பார்க்கிறாள். 

ரூத்தும் ஞானமுள்ள ஸ்திரீ. அவள் தன் மாமியாரின் ஆலோசனைகளைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை.  அது மிகவும் மோசமான ஆலோசனை என்று சொல்லி, அதை ஏற்றுக்கொள்ள மறுக்கவில்லை. ரூத்தின் மனதிற்கு நகோமியின் ஆலோசனை சரியானது என்று படுகிறது. ஆகையினால்  ரூத் நகோமியிடம், ""நீர் எனக்கு சொன்னபடியெல்லாம் செய்வேன்'' (ரூத் 3:5) என்று சொல்லுகிறாள். 

போவாசும் ரூத்தும் ரூத் 3:6-13

ரூத் 3:6. அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.

ரூத் 3:7. போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின் மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக் கொண்டாள்.






ரூத் 3:8. பாதிராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு, திரும்பி ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு,

ரூத் 3:9. நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.

ரூத் 3:10. அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியான்களுமான வா-பர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.

ரூத் 3:11. இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசா- என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.

ரூத் 3:12. நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.

ரூத் 3:13. இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம் பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம் பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம் பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக் கொண்டிரு என்றான்.

போவாசின் வயல்வெளியிலே வாற்கோதுமையைத் தூற்றுகிறார்கள்.  போவாஸ் தன்னுடைய வேலையில் கருத்தாயிருக்கிறவர். வேலைக்காரர்கள்  வாற்கோதுமையைத் தூற்றும்போது, அவர்கள் அதை கவனக்குறைவாகத் தூற்றக்கூடாது.  அவர்களுடைய வேலையை மேற்பார்வையிடுவதற்காக போவாஸ் வாற்கோதுமையைத் தூற்றுகிற களத்திலே இருக்கிறார்.

தன்னுடைய களத்திலே வேலை செய்கிறவர்களுக்கு, போவாஸ்  நியமிக்கப்பட்ட சம்பளத்தைக் கொடுப்பதோடு, அவர்களுக்கு  அதிகப்படியான வெகுமதிகளையும் கொடுக்கிறார். போவாஸ் தன்னுடைய வேலைக்காரரை நல்லமுறையில் கவனித்து,  அவர்களுக்கு போஜனமும் கொடுக்கிறார். போவாஸ் களத்திலே தன்னுடைய வேலைக்காரரோடு புசித்துக் குடிக்கிறார்.

போவாஸ்  தன்னுடைய வேலைக்காரரோடு புசித்து குடித்து சந்தோஷமாயிருந்தாலும்,  குறிப்பிட்ட நேரத்திலே அவர் தன்னுடைய படுக்கைக்குப் போய்விடுகிறார்.  பாதிராத்திரியில் போவாஸ் அயர்ந்த நித்திரையிலிருக்கிறார் (ரூத் 3:8). சரியான நேரத்திலே படுக்கையில் படுத்து உறங்கினால்தான், அதிகாலையில் குறிப்பிட்ட வேளையிலே எழும்ப முடியும்.

போவாஸ் புசித்து குடித்து  மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து  படுத்துக்கொள்கிறார் (ரூத் 3:7). போவாசுக்கு களத்திலே படுக்க  மெத்தை எதுவுமில்லை. போவாஸ் ஆடம்பரமில்லாத சாதாரண மனுஷராயிருக்கிறார். மெத்தை இல்லாவிட்டாலும், தானியத்தின் அம்பாரத்தையே  படுக்கைபோல ஆக்கி அதிலே படுக்கிறார். போவாசிடத்தில் போதுமென்கிற திருப்தியிருக்கிறது. கதிர்களின் வைக்கோல்மேல் படுத்தாலும் போவாசுக்கு நல்ல நித்திரை வருகிறது.

வாற்கோதுமையை போரடிக்கும் களத்தில் சில சமயங்களில் கள்ளர்கள் வந்து தானியங்களைத் திருடிச் செல்வார்கள். ஆகையினால் வாற்கோதுமையையும், கோதுமையையும் களத்தில் ஒரு குவியலாகக் குவித்து வைப்பார்கள். அதற்கு அம்பாரம் என்று பெயர். அதற்குக் காவலாக வேலையாட்கள் அவற்றின் அருகில் படுத்துக் கொள்வது வழக்கம்.  (மத் 3:12).

நகோமி ரூத்திடம், களத்திற்குப்போய் என்னென்ன செய்யவேண்டுமென்று தெளிவாகச் சொல்லுகிறாள்.  ரூத் நகோமியிடம், ""நீர் எனக்கு சொன்னபடியெல்லாம் செய்வேன்'' என்று சொல்லுகிறாள். அதன் பிரகாரம் ரூத் களத்திற்குப்போய், தன் மாமி தனக்கு  கற்பித்தபடியெல்லாம் செய்கிறாள் (ரூத் 3:5,6). 

நகோமி தனக்கு சொன்ன பிரகாரம்,  ரூத் களத்திற்குப்போய், போவாஸ் படுத்திருக்கிற இடத்திற்கு வருகிறாள். அவள் போவாசின் அருகே  மெல்லப்போய், அவருடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி, அங்கே படுத்துக்கொள்கிறாள்.  பாதிராத்திரியிலே, போவாஸ் அருண்டு திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையில் படுத்திருக்கிறதைக் காண்கிறார் (ரூத் 3:7,8).

ரூத் தன்னுடைய தாழ்மையை வெளிப்படுத்துகிறாள். ரூத் போவாசின் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக் கொள்ள வேண்டும். அவள் தன் அருகில் படுத்திருப்பது போவாசிற்குத் தெரிய வரும். போவாசைப் பற்றி நகோமி நன்றாக அறிந்திருக்கிறாள். ஆகையினால் ரூத்திற்கு போவாசால் எந்த ஒரு தீங்கும் வராது என்பதில் நம்பிக்கையாய் இருக்கிறாள். போவாஸ் உறவின்முறை மீட்பைப் பயன்படுத்தி ரூத்தை மீட்டுக் கொள்ள வேண்டும். இதற்காக நகோமி ஒவ்வொரு காரியமாகத் திட்டமிட்டுச் செய்கிறாள்.

ஒரு ஸ்தீரி தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு போவாஸ் பயப்படுகிறார். அவள் யார் என்பதும், ஏன் அங்கு படுத்திருக்கிறாள் என்பதும் அவருக்குத் தெரியவில்லை (ரூத் 3:9).

தன்னுடைய பாதத்தண்டையில் யாரோ படுத்திருக்கிறார்கள் என்பது  போவாசுக்குத் தெரிகிறது. ஆனால் அது யார் என்பது தெரியவில்லை. போவாஸ் புசித்து குடித்து  மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே, அவர் மாத்திரம் தனியாக வந்து படுத்துக்கொண்டார். இப்போதோ அவர் தன்னுடைய  பாதத்தண்டையிலே வேறொருவர் படுத்திருக்கிறதைக் காண்கிறார். 

தன்னுடைய  பாதத்தண்டையிலே படுத்திருக்கிறவர் யார் என்பதை  கண்டுபிடிக்கவேண்டும் என்று நினைத்து, போவாஸ் ""நீர் யார்'' என்று கேட்கிறார்.  ரூத் போவாசுக்கு பிரதியுத்தரமாக ""நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி'' (ரூத் 3:9) என்று சொல்லுகிறாள். 

ரூத் தன்னைப் பற்றி வெளிப்படுத்துகிறாள். போவாஸ் ரூத்தின் சுதந்தரவாளி. அவருக்குத் தன் சுதந்தரவாளிக்குரிய கடமையை நிறைவேற்றுவதற்கு உரிமை இருந்தும், அவர் அதை இதுவரையிலும் நிறைவேற்றவில்லை. (உபா 25:5-10).

ரூத்தைப் போவாஸ் தன்னுடைய பாதுகாப்பில் எடுத்துக்கொண்டு அவளை விவாகம் செய்ய வேண்டுமென்பதற்கு இது அடையாளம். யூதமார்க்கத்து விவாகச் சடங்குகளின்படி புருஷன் தன்னுடைய வஸ்திரத்தைத் தன் மனைவியின்மீது விரித்து அவளுடைய தலையை அந்த வஸ்திரத்தினால் மூடுவான்.  

ரூத் போவாசின் பாதுகாப்பைத் தேடி வந்திருக்கிறாள். தேவனுடைய தெய்வீக பிரமாணத்தின்படி, போவாஸ் ரூத்தின் சுதந்தரவாளியாயிருக்கிறார்.  அவர் ரூத்தைப் பாதுகாக்கவேண்டும். ரூத்தும் அவளுடைய நிலமும் அழிந்துபோகக்கூடாது. ரூத்தை மீட்கும் உரிமை போவாசுக்கு இருக்கிறது.  அந்த அழிவு போவாசின் பாதபடியில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.  

போவாஸ் தன்னுடைய  கையினால், ரூத்தையும்,  அவளுடைய நிலத்தையும் மீட்டுக்கொள்ளவேண்டும். இதற்கு அடையாளமாக  போவாஸ் ரூத்தின்மேல் தன்னுடைய போர்வையை விரிக்கவேண்டும். ரூத் போவாசைப்பற்றிச் சொல்லும்போது,  ""நீர் சுதந்தரவாளி'' என்று சொல்லுகிறாள். 

ரூத் தன்னோடு சொல்லுவதை போவாஸ்  மிகுந்த கரிசனையோடு கேட்கிறார். ரூத்தின் விண்ணப்பம் நியாயமானது.  அவள் கேட்பது கண்ணியமானது. போவாஸ் ரூத்தின் சுதந்தரவாளி. ரூத்தையும் அவளுடைய நிலத்தையும் மீட்கும் பொறுப்பு போவாசுக்கு இருக்கிறது. ரூத் தன்னுடைய  பாதபடியிலே தப்பான எண்ணத்தோடு படுத்திருக்கவில்லை என்பதை போவாஸ் அறிந்திருக்கிறார். போவாசும் பெத்லெகேம் ஊரிலே கண்ணியமான மனுஷன். ரூத்தும் நற்குணமுள்ள ஸ்திரீ. 

போவாஸ் ரூத்திடம், ""மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியான்களுமான            வா-பர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது'' (ரூத் 3:10) என்று சொல்லுகிறார்.

போவாஸ் ரூத்தை ஆசீர்வதிக்கிறார். தன்னுடைய சுதந்தரவாளியின் உரிமையைப் புரிந்து கொள்கிறார். உறவின்முறை மீட்பின் பிரகாரம் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முன் வருகிறார். 

போவாஸ் வயதானவர். ரூத் வாலிபரின் பின்னே போகாமல், வயதான போவாசை விரும்பி வருகிறாள். இதன் மூலமாக ரூத்தின் நற்குணம் போவாசின் பார்வைக்கு உத்தமமாய் இருக்கிறது (ரூத் 3:11-18).

போவாஸ் ரூத்தை அழைக்கும்போது,  அவளை ""மகளே'' என்று அழைக்கிறார்.  போவாசுக்கு ரூத்தின்மீது அன்பும் மரியாதையும் இருக்கிறது. ரூத்  ஒரு கற்புள்ள ஸ்திரீ. அவள் தன்னுடைய சொந்த தேசத்தை விட்டு, தன் மாமியாரோடு கானான் தேசத்திற்கு வந்திருக்கிறாள். ரூத்திற்கு ஆதரவாகயிருக்க வேண்டுமென்று போவாசும்  தீர்மானம்பண்ணுகிறார். 

இதற்கு முன்பு போவாஸ்  ரூத்தை ஆசீர்வதிக்கும்போது, ""உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக'' (ரூத் 2:12)  என்று சொன்னார். 

இப்போது போவாஸ் ரூத்தை ஆசீர்வதிப்பதற்கு ஏற்ற சமயம் வந்திருக்கிறது. போவாஸ் ரூத்தைப்பார்த்து, ""உன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும், உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது'' என்று சொல்லுகிறார். 

ரூத் போவாசை  தன்னுடைய அழகினால்  மயக்கவேண்டும் என்றோ, அவருக்கு  ஆசை வார்த்தைகளைச் சொல்லி, அவரை வஞ்சித்து,  தனக்கும் அவருக்கும் திருமணம் நடக்கவேண்டும் என்றோ ரூத் நினைக்கவில்லை.  ரூத் போவாசிடம், ""நீர் சுதந்தரவாளி'' என்று சொல்லுகிறாள். இந்த சுதந்தரம் ரூத்தின் மாமனாராகிய எலிமெலேக்கின் மூலமாகவும், ரூத்தின் மரித்துப்போன புருஷன் மூலமாயும் போவாசுக்கு வந்திருக்கிறது. தன்னுடைய குடும்பத்திற்கு போவாஸ் சுதந்தரவாளியாயிருப்பதினால், அவர் தன்னை  திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ரூத் எதிர்பார்க்கிறாள். 

போவாஸ் ரூத்தை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். போவாஸ் ரூத்திடம், ""மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசா- என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்'' (ரூத் 3:11) என்று சொல்லுகிறார்.  நியாயப்பிரமாணத்தின்படி நெருங்கிய உறவினருக்கு தான் என்ன செய்யவேண்டுமோ அதை தான் ரூத்திற்கு செய்வதாக போவாஸ் வாக்குப்பண்ணுகிறார். 

போவாஸ் தன்னுடைய உறவின் முறை மீட்பின் கடமையை நிறைவேற்றுவதாக வாக்குப்பண்ணுகிறார். இந்தக் கடமையை ஏற்கெனவே போவாஸ் நிறைவேற்றாதே போனதினால் அவருக்குள் குற்ற உணர்வு உண்டாகிறது. (உபா 25:5-10).

பெத்லகேமிலுள்ள எல்லா ஜனங்களும் ரூத் ஒரு குணசாலி என்பதை அறிந்திருக்கிறார்கள். யூதர்கள் மத்தியில் ஒரு ஸ்திரீ தன் இளவயதில் விதவையாக நிலைத்திருப்பதே அவள் ஒரு குணசாலி என்பதற்கு அடையாளமாகும். வாலிபர்களும், ஐசுவரியவான்களும் அவளை விவாகம் செய்ய விரும்பியிருப்பார்கள் (ரூத் 3:10). ஆனால் ரூத் அவர்களை விவாகம் பண்ண விரும்பவில்லை. சுதந்தரவாளியான போவாஸ் தன்னை விவாகம் செய்ய வேண்டுமென்றுவிரும்புகிறாள். 

ஆனால் ரூத்திற்கு போவாசைவிட கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான். ரூத்தை விவாகம் செய்யும் முன்னுரிமை அவனுக்கு மட்டுமே இருக்கிறது. அவன் திருமணம் செய்யாமற் போனால் மட்டுமே, போவாசிற்கு ரூத்தைத் திருமணம் செய்யும் முறை வரும்.  (ரூத் 3:12-18).

போவாஸ் ரூத்தின் விண்ணப்பத்தை மறுக்கவில்லை.  அவர் ரூத்திற்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லுகிறார். தன்னுடைய நிலமை என்ன ஆகுமோ என்றும், போவாசின் வாயிலிருந்து  எப்படிப்பட்ட பிரதியுத்தரம் பிறக்குமோ என்றும், ரூத் ஒருவேளை கலங்கி தவித்துக்கொண்டிருக்கலாம். போவாஸ் ரூத்திடம்,  தன்னுடைய சாதகமான முடிவை சொல்லுவதற்கு முன்பாகவே, ""மகளே, நீ பயப்படாதே'' என்று சொல்லுகிறார். மேலும், ""நீ குணசாலி என்பதை  என் ஜனமாகிய ஊரார் எல்லாரும் அறிவார்கள்'' என்றும் சொல்லி போவாஸ் ரூத்தை உற்சாகப்படுத்துகிறார். 

போவாஸ் ரூத்திடம், ""உனக்கு வேண்டியதையெல்லாம் செய்வேன்'' என்று வாக்குப்பண்ணினாலும், தன்னுடைய வார்த்தையில் ஒரு நிபந்தனையையும் சொல்லுகிறார். போவாஸ் ரூத்திடம் ""நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்'' (ரூத் 3:12) என்று சொல்லுகிறார். 

சுதந்தரவாளி என்பவன் ஒருவனுடைய நெருங்கிய உறவினன். ஒருவன் மரித்துப் போகும்போது, அவனுடைய சுதந்தரங்களைக் கிரயத்திற்கு வாங்க உரிமையுள்ளவன். அந்த சுதந்தரவாளி இறந்தவனுடைய விதவையையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மரித்துப்போன உறவினனுக்காக பழிவாங்கும் பொறுப்பையும் சுதந்தரவாளி ஏற்றுக் கொள்ள வேண்டும்.  

தங்களுடைய வறுமையின்நிமித்தம் எபிரெயர்கள் தங்களுடைய சுதந்தரத்தை விற்றுப்போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவனுடைய சுதந்தரவாளி அதை அவனுக்காக மீட்க வேண்டும். அவனுக்கு உறவின்முறை மீட்பன் என்று பெயர் (லேவி 25:25). 

மரித்துப்போனவன் புத்திர சந்தானம் அற்றவனாக மரித்துப் போனால், அவனுடைய விதவை மனைவியையும் சுதந்தரவாளி விவாகம் பண்ணி, அவனுடைய குடும்பத்திற்கு வாரிசும் உண்டாக்கித் தரவேண்டும். 


Umn ministry Chennai 




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*