ரூத் 4ஆம் அதிகாரம் விளக்கம்

0



ரூத் 4ஆம் அதிகாரம் விளக்கம்

போவாசுக்கும், அவரைவிட கிட்டின சுதந்தரவாளிக்கும் சம்பாஷணை நடைபெறுகிறது. அந்த சுதந்தரவாளி போவாசுக்கு, ரூத்தின் சுதந்தரத்தை  மீட்டுக்கொள்ளும் உரிமையை விட்டுக்கொடுக்கிறார் (ரூத் 4:1-8). போவாசுக்கும் ரூத்திற்கும் விவாகம் நடைபெறுகிறது. மூப்பரும் சகல ஜனங்களும் அவர்களை வாழ்த்துகிறார்கள் (ரூத் 4:9-12).  

போவாசுக்கும் ரூத்திற்கு  ஒரு ஆண்பிள்ளை பிறக்கிறது. அந்தப் பிள்ளைக்கு  ஓபேத் என்று பேரிடுகிறார்கள். இவர் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன் (ரூத் 4:13-17). ரூத்தின் சரித்திர புஸ்தகத்தின் முடிவிலே தாவீதின் முன்னோர்களைப்பற்றிய  வம்சவரலாறு சொல்லப்பட்டிருக்கிறது (ரூத் 4:18-22).

இரண்டு சுதந்தரவாளிகள் ரூத் 4:1-8

ரூத் 4:1. போவாஸ் பட்டணவாச-ல் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்-யிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர்  சொல்-க் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.

ரூத்  4:2. அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.

ரூத்  4:3. அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எ-மெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்தி-ருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.

ரூத்  4:4. ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

ரூத்  4:5. அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.

ரூத்  4:6. அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக் கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.









ரூத்  4:7. மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவே-லே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவே-லே வழங்கின உறுதிப்பாடு.

ரூத்  4:8. அப்படியே அந்தச்  சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று      சொல்-, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.

போவாஸ் பட்டணத்து வாசலில் உட்கார்ந்திருக்கிறார். அவரோடுகூட பட்டணத்து மூப்பர்கள் பத்து பேரும் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருவேளை பெத்லெகேம் பட்டணத்து மூப்பர்களில் போவாசும் ஒருவராயிருக்கலாம்.  போவாஸ் சிறிதும் காலதாமதம்பண்ணாமல், ரூத்தின் காரியங்களை விரைவாக கவனிக்கிறார். 

ரூத் ஒரு ஐசுவரியமுள்ள ஸ்திரீயல்ல. அவள் அந்நிய தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு வந்திருக்கிற ஒரு ஏழை பெண்.  ஆனால் போவாஸ் ரூத்தின்மேல் மிகவும் பிரியமாயிருக்கிறார். அவளை விவாகம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். தன்னால் ரூத்தை விவாகம் செய்துகொள்ள முடியாவிட்டாலும், ரூத்திற்கு சீக்கிரத்தில் விவாகம் நடைபெறவேண்டும் என்றும், அவளுடைய துன்பங்கள் நீங்கவேண்டும் என்றும் போவாஸ்  விரும்புகிறார். 

பெத்லெகேம் ஊரிலுள்ள ஜனங்களுக்கு ரூத்தைப்பற்றி நன்றாய்த் தெரியும்.  ரூத் ஒரு குணசாலியான ஸ்திரீ. பெத்லெகேம் ஊரிலே ஜனங்களின் வழக்கை பட்டண வாசலில்  விசாரிப்பது வழக்கம். பட்டணத்து மூப்பர்கள் அங்கே உட்கார்ந்து வழக்குகளை விசாரித்து  தீர்ப்பு சொல்லுவார்கள். அந்த இடத்திலே போவாஸ் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். பட்டணத்து வாசலில் பொருட்களை விற்கிறவர்களும், வாங்குகிறவர்களும் கூட்டமாயிருப்பார்கள்.

போவாஸ் பட்டணவாச-ல் போய், உட்கார்ந்துகொண்டிருக்கிறார்; அப்பொழுது போவாஸ் சொல்-யிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வருகிறான்; போவாஸ் அவனை நோக்கி: ""ஓய்'', என்று பேர் சொல்-க் கூப்பிட்டு, ""இங்கே வந்து சற்று உட்காரும்'' என்று சொல்லுகிறார்; அவன் வந்து உட்காருகிறான் (ரூத் 4:1).

பட்டண வாசலில் மூப்பர்கள் கூடிவந்து, அங்கு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது வழக்கம். அந்த இடத்தில் தன்னைவிட கிட்டின சுதந்தரவாளி அங்கு வரும் வரையிலும் போவாஸ் அமர்ந்திருக்கிறார். 

போவாசின் வழக்கை விசாரிக்கவேண்டுமென்றால்,  பட்டணத்தின் மூப்பர்களும் அங்கே இருக்கவேண்டும். இப்போது  பட்டணத்து வாசலிலே போவாசும், மற்றொரு சுதந்தரவாளியும் மாத்திரம் உட்கார்ந்திருக்கிறார்கள். அப்பொழுது போவாஸ் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, ""இங்கே உட்காருங்கள்'' என்று சொல்லுகிறார்; அவர்களும்  பட்டணத்து வாசலிலே உட்காருகிறார்கள்.

இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இருந்தால் போதுமானது.    இயேசு கிறிஸ்துவின் உபதேசத்திற்கும், அவருடைய மரணத்திற்கும், உயிர்த்தெழுதலுக்கும் பன்னிரண்டுபேர் சாட்சிகளாக இருந்தார்கள்.  வரப்போகிற உபத்திரவக்காலத்தில் இரண்டு சாட்சிகள் மட்டுமே அனுப்பப்படுவார்கள். (வெளி 11:1-11).

வழக்கு விசாரணை ஆரம்பமாகிறது.  போவாஸ் முதலாவதாக இந்த வழக்கின் விவரத்தை சொல்லுகிறார். போவாஸ் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: ""எ-மெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்தி-ருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்'' (ரூத் 4:3) என்று  இந்த வழக்கின் சாரத்தை சொல்லுகிறார்.

நகோமி தன்னுடைய வயல் நிலத்தின் பங்கை விற்கும்போது, அதை சுதந்தர முறையாக,  சுதந்தரவாளி மீட்டுக்கொள்ளவேண்டும். போவாஸ் ஒரு சுதந்தரவாளியாகயிருந்தாலும்,  இந்த நபர் அவரைவிட கிட்டின சுதந்தரவாளியாயிருக்கிறார். ஆகையினால் நகோமியின் நிலத்தை மீட்டுக்கொள்வது பற்றி, போவாஸ் மற்ற சுதந்தரவாளிக்கு சொல்லுகிறார். 

""ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்''  (ரூத் 4:4) என்று போவாஸ் அந்த சுதந்தரவாளிக்கு சொல்லுகிறார். 

போவாசைவிட கிட்டின சுதந்தரவாளி சுதந்தர முறையை மீட்டுக் கொள்ள விரும்புகிறான். ஆனால் இதை மீட்டுக் கொள்கிறவன் ரூத்தையும் விவாகம் செய்து கொள்ள வேண்டும். அதில் அவனுக்கு சம்மதமில்லை. (ரூத் 4:4-6) ஆகையினால் இந்தச் சுதந்தர முறையை  மீட்டுக்கொள்ளும் உரிமை அடுத்த சுதந்தரவாளியாகிய போவாசிற்குக் கிடைக்கிறது.

வழக்கின் விவரம் சுதந்தரவாளிக்கு சொல்லப்படுகிறது. அந்த சுதந்தரவாளி,  நகோமியின் நிலத்தை, சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால் மீட்டுக்கொள்ளலாம். அதை அவர்  மீட்டுக்கொள்ளவேண்டும் என்னும் கட்டாயமில்லை. அந்த சுதந்தரவாளி, அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால்,  போவாஸ் அதை மீட்டுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறார். 







போவாஸ் அந்த சுதந்தரவாளியிடம், ""அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச்  சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை'' என்கிறார். அதற்கு அவன்: ""நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன்'' (ரூத் 4:4) என்று சொல்லுகிறான்.

அந்த சுதந்தரவாளி நகோமியின்  வயல்நிலத்தை மீட்டுக்கொள்ள விரும்புகிறார். அதனால் தன்னுடைய ஆஸ்திபெருகும் என்று ஆசைப்படுகிறார்.  அந்த சுதந்தரவாளி போவாசிடம், ""நான் அதை மீட்டுக்கொள்கிறேன்'' என்று சொல்லுகிறார்.

நகோமியின் வயல்நிலத்தை மீட்டுக்கொள்ளவேண்டுமென்றால், அந்த சுதந்தரவாளி செய்யவேண்டிய மற்ற கடமைகளையும் போவாஸ் அவருக்கு சொல்லுகிறார். ""நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது'' (ரூத் 4:5) என்று  போவாஸ் அந்த சுதந்தரவாளியிடம் சொல்லுகிறார்.

அந்த சுதந்தரவாளி நகோமியின்  நிலத்தை மீட்டுக்கொண்டால், விதவையான ரூத்தையும் விவாகம்பண்ண வேண்டும்.  ஆனால் அந்த சுதந்தரவாளியோ நகோமியின் நிலத்தை மாத்திரமே வாங்கிக்கொள்ள விரும்புகிறார்.  ரூத்தை விவாகம் செய்ய விரும்பவில்லை. ஒருவேளை அந்த சுதந்தரவாளிக்கு ஏற்கெனவே விவாகம் நடைபெற்று, வீட்டிலே மனைவி இருக்கலாம். ரூத்தும் தன்னுடைய வீட்டிற்கு வந்துவிட்டால்,  தன்னுடைய குடும்பத்திலே குழப்பம் வந்துவிடும் என்று அந்த சுதந்தரவாளி பயந்திருக்கலாம்.

அந்த சுதந்தரவாளி, தன்னுடைய குடும்ப சூழ்நிலையை யோசித்துப் பார்த்து, போவாசிடம், ""நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக் கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்'' (ரூத் 4:6) என்று சொல்லுகிறார். அந்த சுதந்தரவாளி  நிலத்தையும் ரூத்தையும் சேர்த்து மீட்டுக்கொள்ள விரும்பவில்லை.

ரூத்தின் சுதந்தரத்தை மீட்டுக் கொண்டால், போவாசைவிட கிட்டின சுதந்தரவாளியின் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகும். அவன் ரூத்தை விவாகம் செய்ய வேண்டும். அவனுடைய மனைவி இந்த விவாகத்தை ஏற்றுக் கொள்ளமாட்டாள். ஆகையினால் சுதந்தரத்தை மீட்டுக் கொள்ளும் உரிமையை அந்த சுதந்தரவாளி போவாசிற்குத் தருகிறான். போவாசும், அந்த சுதந்தரவாளியும் ஒரு ஒப்பந்தம் பண்ணிக் கொள்கிறார்கள். இதன் அடிப்படையில் போவாஸ் சுதந்தரத்தை மீட்டுக் கொண்டு, ரூத்தையும், திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு அந்தப் பட்டணத்து மூப்பர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள். (ரூத் 4:6-7). 

அந்த சுந்தரவாளிக்கு அடுத்தபடியாக, போவாஸ் நகோமியின்  வயல்நிலத்தை மீட்கத்தக்க சுதந்தரவாளியாயிருக்கிறார். பெத்லெகேம் ஊரிலுள்ள  மூப்பர்களுக்கு முன்னால், அந்த சுதந்தரவாளி, ""நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்'' என்று  சொல்லிவிடுகிறார். இப்போது அந்த நிலத்தையும், ரூத்தையும் மீட்டுக்கொள்ளும் உரிமை போவாசுக்கு வருகிறது. 

அந்த சுதந்தரவாளி தன்னுடைய வாயால், ""நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்'' என்று சொன்னாலும், அவன் அக்காலத்து  வழக்கத்தின் பிரகாரம், தன்னுடைய வார்த்தைகளை உறுதிபண்ணவேண்டுமென்று போவாஸ் விரும்புகிறார். ""மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவே-லே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவே-லே வழங்கின உறுதிப்பாடு'' (ரூத் 4:7).

ஒருவன் தன்னுடைய சுதந்தரத்தை மற்றவனுக்கு விட்டுக் கொடுக்கும்போது, அவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுக்க வேண்டும். இனிமேல் அந்தச் சுதந்தரம் அவனுக்கே உரியது என்பதற்கு இது அடையாளம். பாதரட்சை ஒருவனிடமிருந்து மற்றவனுக்கு மாறுவது அவனுடைய சொத்து அவனிடமிருந்து மற்றவனுக்கு         மாறுவதற்கு அடையாளமாகும். இது இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் (சங் 60:8; சங் 108:9).

சுதந்தரவாளி மீட்பு செய்ய வேண்டிய முறையைப்பற்றிய விவரம்  வருமாறு : 

    1. சுதந்தரவாளிகளுக்குள் நடைபெறும் பேச்சுகளுக்குச் சாட்சியாக ஊரின் மூப்பர்களை அங்கு வரவழைக்க வேண்டும்.

    2. யார் சுதந்தரவாளி என்பதை உறுதி பண்ணிக் கொள்ள வேண்டும்           (ரூத் 4:3-6).

    3. தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்கும் சுதந்தரவாளி தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுக்க வேண்டும். இது சுதந்தரத்தை மீட்கிறதற்கும், மாற்றுகிறதற்கும் உறுதிப்படுத்தும் அடையாளமாகும்.   (ரூத் 4:7-8).

    4. சுதந்தரத்தை மீட்பது.  (ரூத் 4:9).

    5. சுதந்தரவாளிக்கும்,  மரித்துப் போனவனுடைய விதவைக்கும் விவாகம் நடைபெற வேண்டும். இதன் மூலமாக மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேர் அற்றுப்போகாமல், நிலைநிறுத்த வேண்டும்.  (ரூத் 4:10).

    6. இதற்கு சாட்சியாக இருக்கும் மூப்பர்கள் தாங்கள் இதற்கு சாட்சிகள் என்று அறிக்கையிட வேண்டும். (ரூத் 4:11).

    7. விவாகம் செய்து கொள்ளும் சுதந்தரவாளியையும் அவனுடைய மனைவியையும் வாழ்த்தவேண்டும்.







அக்காலத்திலே வயல்நிலங்களை வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் பத்திரங்கள் எழுதும் வழக்கமில்லை. இதன் பின்பு எரேமியாவின் காலத்தில், விற்பனை பத்திரம்  எழுதப்பட்டதாக வசனம் சொல்லுகிறது. 

""நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்த பின்பு, நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து, என்பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்தேன்''  (எரே 32:10-12).

அப்படியே அந்தச் சுதந்தரவாளி  போவாசை நோக்கி: ""நீர் அதை வாங்கிக்கொள்ளும்'' என்று சொல்-, தன் பாதரட்சையைக் கழற்றிப் போடுகிறான் (ரூத் 4:8). நகோமியின் சுதந்தரத்தை மீட்டுக்கொள்ளும் சம்பவம் மிகவும் எளிமையாக நடைபெறுகிறது.  அது பூர்வகாலத்து வழக்கத்தின் பிரகாரம் உறுதிபண்ணப்படுகிறது. போவாஸ் நகோமியின் வயல்நிலத்தின் பங்கையும், ரூத்தையும் மீட்டுக்கொள்கிறார். 

அவர்களுடைய வழக்கு இதோடு முடிவு பெறுகிறது. அவன் தன் பாதரட்சையைக் கழற்றிப்போட்டதற்கு அந்த ஊரின் மூப்பர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள். அவர்கள் போவாசையும், ரூத்தையும் ஆசீர்வதிக்கிறார்கள்.  (ரூத் 4:9-12).

போவாசின் மனைவி ரூத் ரூத்  4:9-12

ரூத்  4:9. அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எ-மெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கி-யோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக் கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.

ரூத் 4:10. இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை            எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.

ரூத்  4:11. அப்பொழுது ஒ-முகவாச-ல் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக, நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக் கடவாய்.

ரூத்  4:12. இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப் போல ஆகக்கடவது என்றார்கள்.

போவாஸ் ரூத்துக்கு கொடுத்த தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறார். போவாஸ் பெத்லெகேமின் பட்டண வாசலில்  உட்கார்ந்திருந்து, நெருங்கிய உறவின் முறையிலுள்ளவர் செய்யவேண்டிய தன்னுடைய கடமையை நிறைவேற்றுகிறார். பட்டண வாசலிலே மூப்பர்களும், அதன் ஒலிமுகவாசலிலே சகல ஜனங்களும் இருக்கிறார்கள். 

அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: ""எ-மெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கி-யோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக் கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி'' (ரூத் 4:9) என்று சொல்லுகிறார். 

எ-மெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கி-யோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் போவாஸ் நகோமியின் கையிலே வாங்கிக் கொள்கிறார். எலிமெலேக்கு பெத்லெகேமை விட்டு மோவாப் தேசத்திற்குப் போவதற்கு முன்பாக இவையனைத்தும் எலிமெலேக்கு பெத்லெகேமிலே வாங்கியவையாகும். (ரூத் 1:1). இப்பொழுது அவர்களுடைய நிலத்தைப் போவாஸ் மீட்டுக் கொள்கிறார். மோவாபிய ஸ்திரீயாகிய ரூத் போவாசின் மனைவியாகிறாள். தாவீதின் வம்சவரலாற்றிலும், மேசியாவின் வம்சவரலாற்றிலும் ரூத் இடம் பெற்றிருக்கிறாள்.  (ரூத் 4:9-10).

எலிமெலேக்கின் குடும்பத்தாருக்கு சொந்தமான  வயல்நிலத்தின் பங்கை போவாஸ் நகோமியின் கையில் வாங்கிக்கொள்கிறார்.  போவாஸ் ரூத்திடம் ஏற்கெனவே சொன்ன பிரகாரமாக, அவளை மூப்பருக்கு முன்பாகவும், சகல ஜனங்களுக்கு முன்பாகவும், தனக்கு மனைவியாக்கிக்கொள்கிறார். 

போவாஸ் மூப்பரையும், சகல ஜனங்களையும் நோக்கி, ""மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி'' (ரூத் 4:10) என்று சொல்லுகிறார்.

போவாஸ் எலிமெலேக்கின் குடும்பத்திற்கு சொந்தமான  வயல்நிலத்தின் பங்கை வாங்கிக்கொள்ளும்போது, அந்த நிலத்தை அடகு வைத்து,  அவர்கள் ஏதாவது கடன் வாங்கியிருந்தால் அதையும் போவாஸ் திரும்பச்செலுத்தவேண்டும். எலிமெலேக்கின் குடும்பத்தாருக்கு கடன்கொடுத்தவர்கள் யாராகயிருந்தாலும்,  அவர்கள் இனிமேல் அந்த கடன் தொகையை போவாசிடம் திரும்பிப் பெற்றுக்கொள்ளவேண்டும். 

போவாஸ் எலிமெலேக்கினுடைய குடும்பத்தின் நிலத்தை மீட்டுக்கொள்ளும்போது,  விதவையாகிய ரூத்தையும் தனக்கு மனைவியாக மீட்டுக்கொள்கிறார். ரூத்திடம் அவளுக்கென்று சொந்தமாக பங்குவீதம் எதுவுமில்லை. ஆகையினால்  போவாஸ் ரூத்தை தனக்கு மனைவியாக்கிக்கொள்கிறார்.

எலிமெலேக்கின் குமாரனாகிய மக்லோனுக்கும், ரூத்திற்கும் ஏற்கெனவே  விவாகம் நடைபெற்றது. அவர்களுக்கு பிள்ளைபேறு இல்லை. மக்லோனும் இறந்து போனார். விதவையாயிருக்கிற ரூத்தை  போவாஸ் தனக்கு மனைவியாக்கிக்கொள்கிறார். மக்லோனின் குடும்ப பெயர் அற்றுப்போகக்கூடாது. மரித்தோருடைய சுதந்தரத்திலே,  மக்லோனின் பெயரை நிலை நிறுத்த வேண்டும். இதற்காக போவாஸ் ரூத்தை தனக்கு மனைவியாகக் கொள்கிறார். 

போவாஸ் மரித்துப்போனவருக்கும், உயிரோடிருக்கிறவருக்கும் நன்மை செய்கிறார். போவாசின் சந்ததியிலே மேசியாவை பிறக்கவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமாயிற்று. இஸ்ரவேலிலுள்ள எல்லா குடும்பத்தாரிலும் போவாசின் குடும்பம் விசேஷமாயிருக்கிறது.  போவாஸ் ரூத்தை விவாகம் செய்வது ஒரு தியாகமான காரியம். நகோமியின் நெருங்கிய உறவினர் யாரும், அவளுடைய வயல்நிலத்தின் பங்கையோ, ரூத்தையோ மீட்டுக்கொள்ள ஆயத்தமாயில்லை.  

போவாசோ ஒரு விதவையை திருமணம் செய்து, தன்னுடைய  சுதந்தரத்தை மாசுபடுத்துகிறார். அவருடைய பெயருக்கும்,  குடும்பத்திற்கும், அவருடைய சுதந்தரத்திற்கும் இந்த திருமணத்தின் மூலமாய்  கெட்ட பெயர் வரும். ரூத் கானான் தேசத்து ஸ்திரீயல்ல. அவள் மோவாப் தேசத்து ஸ்திரீ.  அவள் திருமணமாகாத கன்னிப்பெண்ணல்ல. அவள் ஏற்கெனவே திருமணமாகி, இப்போது விதவையாயிருக்கிறவள். ஆனாலும்  எலிமெலேக்கின் குடும்பத்தையும், ரூத்தையும் மீட்கவேண்டும் என்பதற்காக, போவாஸ் எந்த தியாகத்தையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறார். 

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்முடைய ஆத்துமாவை மீட்கிற மீட்பராயிருக்கிறார். அவரே நம்முடைய நித்திய மீட்பர்.  போவாஸ் ரூத்தை மனதுருக்கத்தோடு பார்த்தார். அவளுடைய பரிதாபமான நிலமையைப் பார்த்து, அவளுக்கு உதவி செய்யவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார். நம்முடைய மீட்பராகிய இயேசுகிறிஸ்துவும்,  விழுந்துபோன மனுக்குலத்தை மீட்பதற்காக, தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார்.

கிறிஸ்துவானவர் நமக்காக பரலோகத்தின் ஆசீர்வாதங்களை  சுதந்தரித்தார். நம்முடைய மீட்பர் இதற்காக தம்முடைய சொந்த இரத்தத்தையே மீட்பின் கிரயமாகச் செலுத்தினார். நம்முடைய பாவங்களினால், நம்முடைய பரலோக ஆசீர்வாதங்களெல்லாம் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டது. நாம் அனுபவிக்கவேண்டிய தெய்வீக ஆசீர்வாதங்கள் தெய்வீக நியாயத்தீர்ப்பின் கரங்களிலே அடகு வைக்கப்பட்ட பொருள் போல இருக்கிறது. 

நம்முடைய சுயமுயற்சியினால் தெய்வீக நியாயத்தீர்ப்பிலிருந்து, நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது. நமக்கு ஒரு மீட்பர் தேவைப்படுகிறார். கிறிஸ்துவானவர் தம்முடைய சுயஇரத்தத்தையே  மீட்பின் கிரயமாகச் செலுத்தி, தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார். கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டிருக்கிறோம்.  

போவாஸ் மோவாபிய ஸ்திரீயான ரூத்தை மூப்பர்களுக்கு முன்பாகவும், சகல ஜனங்களுக்கு முன்பாகவும் தனக்கு  மனைவியாகக் கொள்கிறார். அவர்கள் இந்த விவாகத்திற்கு சாட்சியாகயிருக்கிறார்கள். போவாசையும் ரூத்தையும்  அவர்கள் ஆசீர்வதிக்கிறார்கள்.

""நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி'' (ரூத் 4:10) என்று போவாஸ் மூப்பரையும்  சகல ஜனங்களையும் நோக்கி சொல்லுகிறார். அப்பொழுது ஒ-முகவாச-ல் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் போவாசை நோக்கி: ""நாங்கள் சாட்சிதான்'' (ரூத் 4:11) என்று போவாசுக்கு பிரதியுத்தரம் சொல்லுகிறார்கள். 

மேலும் அவர்கள் போவாசை கர்த்தருடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கிறார்கள். ""உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக, நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக் கடவாய்''   (ரூத் 4:11) என்று அவர்கள் போவாசை ஆசீர்வதிக்கிறார்கள்.

ஒலிமுக வாசலில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைக்கு ஊர் ஜனங்களும், மூப்பர்களும் வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே போவாஸ் இந்தச் சுதந்தரத்தை மீட்டுக் கொண்டதற்கும், ரூத்தை திருமணம் செய்து கொண்டதற்கும் சாட்சிகளாக இருக்கிறார்கள்.

இந்த விவாகம் கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரம் நடைபெறுகிறது. இவர்கள் பெத்லெகேமிலே புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் மூலமாக வரும் சந்ததி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். பாரேசின் குடும்பத்தைப்போல ரூத்தின் குடும்பமும் புகழ் பெற்று விளங்கும்.     (ரூத் 4:11-12).

 ரூத் 4:11-12 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் ""பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக் கடவாய்'' என்னும் இந்த ஆசீர்வாதம்   பிற்காலத்தில் நிறைவேறுகிறது. தாவீதும், மேசியாவும் இவர்களுடைய சந்ததியில் வருகிறார்கள். (ஏசா 9:6-7; எரே 30:9; எசே 34:23-33;  வெளி 11:15). இயேசு கிறிஸ்து பெத்லகேம் ஊரில் பிறந்ததினால் பெத்லெகேம் புகழ் பெற்றது. (மீகா 5:1-2; மத் 2; லூக்கா 2).

இஸ்ரவேலின் மூப்பர் ஆசீர்வாதமான இந்த வார்த்தைகளை ஜெபத்தோடு சொல்லுகிறார்கள். மூப்பர்களின் ஆசீர்வாதமான வார்த்தைகளை, ஒலிமுக வாசலிலிருக்கிற சகல ஜனங்களும்    அங்கீரித்து ""ஆமென்'' என்று சொல்லுகிறார்கள். விவாகம் ஆசீர்வதிக்கப்படவேண்டும் விவாக வைபத்தில் ஜெபம் இருக்கவேண்டும். விவாகத்தில் இணைக்கப்படுகிற புருஷனும் மனைவியும் சுகமாய் வாழ்ந்திருக்கவேண்டுமென்று,  அவர்களை கர்த்தருடைய நாமத்தினால் ஆசீர்வதிக்கவேண்டும். 

மூப்பரும்  சகல ஜனங்களும், ""இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப் போல ஆகக்கடவது'' (ரூத் 4:12) என்றும் போவாசிடம் சொல்லுகிறார்கள்.

பெத்லெகேம் புத்திரரும், எலிமெலேக்கும் பேரேசின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.   (ரூத் 4:18-22; ஆதி 38:28-30).

அவர்கள் ரூத்திற்காக ஜெபம்பண்ணும்போது,  ""கர்த்தர் அவளை ராகேலைப்போலவும், லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக'' என்று ஜெபத்தோடு வாழ்த்துகிறார்கள். இந்த ஆசீர்வாதமான வாக்கியத்திற்கு, ""கர்த்தர் ரூத்தை நல்ல மனைவியாகவும், பிள்ளைகளைப் பெற்றெடுக்கிற தாயாகவும் ஆசீர்வதிப்பாராக'' என்று பொருள்.

பெத்லெகேமின் மூப்பரும், ஒலிமுகவாசலிலிருக்கிற சகல ஜனங்களும்  போவாசுக்காகவும் ஜெபம்பண்ணுகிறார்கள். போவாசின் மனைவி வீட்டிலே  ஆசீர்வாதமாயிருப்பாள். போவாசோ பட்டணத்திலும், அவருடைய தொழிலிலும் ஆசீர்வாதமாயிருப்பார்.  அவர்கள் போவாசை ""நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக் கடவாய்''  என்று சொல்லி ஆசீர்வதிக்கிறார்கள். 

ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரும்  போவாசுக்காகவும், ரூத்திற்காகவும் ஜெபம்பண்ணுகிறார்கள்.  ""உன் வீடு தாமார் யூதாவுக்கு பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது'' என்று சொல்லி  அவர்கள் ஜெபிக்கிறார்கள். பேரேசின் வீட்டிலே ஏராளமான பிள்ளைகள் இருக்கிறார்கள். ""போவாசின் வீடு, பேரேசின் வீட்டைப்போல ஏராளமான பிள்ளைகளினால் நிரம்பியிருப்பதாக''  என்பது அவர்களுடைய ஜெபமாயிருக்கிறது.  

பெத்லெகேம் பட்டணத்தார் பேரேசின் வீட்டைச் சேர்ந்தவர்கள்.  போவாசின் குடும்பத்தார் பேரேசின் சந்ததியில் வந்தவர்கள். போவாசின் குடும்பம் பேரேசின் குடும்பத்தைப்போல பலுகிப்பெருகி  ஆசீர்வாதமாயிருக்கவேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமாயும், ஜெபமாயும், ஆசீர்வாதமாயும் இருக்கிறது.

ஓபேத்  ரூத் 4:13-22

ரூத்  4:13. போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம் பண்ணினார்.

ரூத்  4:14. அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்திரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவே-லே பிரபலமாகக் கடவது.

ரூத்  4:15. அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக் கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.

ரூத்  4:16. நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.

ரூத்  4:17. அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.

ரூத்  4:18. பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.

ரூத்  4:19. எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினாதாபைப் பெற்றான். 

ரூத்  4:20. அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.

ரூத்  4:21. சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேத்தைப் பெற்றான்.

ரூத்  4:22. ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.  

போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணுகிறார். ரூத் போவாசுக்கு மனைவியாகிறாள். ரூத்  இஸ்ரவேலின் தேவனை நம்பி, அவருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்தவள். கர்த்தர் அவளை அதிகமாய் ஆசீர்வதிக்கவேண்டும் என்பது போவாசின் விருப்பம்.  

ரூத் மோவாப் தேசத்து  ஸ்திரீயாகயிருந்தாலும்,  தன் மாமியாரோடுகூட பெத்லெகேம் ஊருக்கு வந்து, கானான் தேசத்திலே  தங்கியிருக்கிறாள். அவளுடைய அன்புக்கும், நற்குணத்திற்கும், தைரியத்திற்கும்   ஏற்ற வெகுமதிகளை அவள் சம்பூரணமாய்ப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று போவாஸ் விரும்புகிறார்.

ரூத் புறஜாதி தேசத்து பெண். அவள் இப்போது  கர்த்தரை நம்பி கானான் தேசத்திலே குடியிருக்கிறாள். கர்த்தரை அடைக்கலமாகப் பற்றிக்கொண்டிருக்கிறாள். அவள் தன் மாமியாருக்கு ஆதரவாயிருக்கிறாள். அவளிடத்தில் விசேஷித்த நற்குணங்கள் காணப்படுகிறது. கர்த்தர் ரூத்தை தமது கிருபையினாலே ஆசீர்வதிக்கிறார். போவாஸ் ரூத்தினிடத்தில் பிரவேசித்தபோது,             அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம் பண்ணுகிறார் (ரூத் 4:13). ரூத் 4:11-12 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் ஆசீர்வாதம் நிறைவேற ஆரம்பிக்கிறது.


Umn ministry Chennai 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*