பாராட்டை நாடுதல்

0




 பாராட்டை நாடுதல் (மத்தேயு 6:1-4)

மத்தேயு 5ஆம் அதிகாரத்தில் இயேசு, தமது சீஷர்களை வழிநடத்த அடிப்படைக் கொள்கைகளைக் கொடுத்துப் பின்பு அவற்றை விவரித்தார் 6ம் மற்றும் 7ம் அதிகாரங்களில், அன்றாட கிறிஸ்தவ வாழ்வு தொடர்பான விஷயங்கள் மீது வலியுறுத்தம் உள்ளது. டி. மார்ட்டின் லாயிட் - ஜோன்ஸ் அவர்கள், இந்த அதிகாரங்கள் "வாழ்வு என்று அழைக்கப்படும் இந்த புனிதப் பயணத்தில், தங்கள் பிதாவுடன் பிள்ளைகள் என்ற உறவு முறையில் உள்ளவர்கள் தங்கள் வழியில் மெல்ல நடக்கும் ஒரு சித்தரிப்பை” முன்வைக்கின்றன என்று எழுதினார். இந்தப் பாடம், இயேசுவின் சீஷர் என்ற வகையில் எவ்வாறு வாழ்வது என்பதன் மீதான புதிய வலியுறுத்தத்தை அறிமுகப்படுத்தும்

இந்தப் பாடத்திலும் இதைத் தொடர்ந்து வரும் அடுத்த இரு பாடங்களிலும் நாம், 6ம் அதிகாரத்தின் முதல் பதினெட்டு வசனங்களைப் படிப்போம். இவ்வசனங்கள், மலைப்பிரசங்கத்தின் அடுத்த ஒரு புதிய பிரிவாக உள்ளன ஆனால் அவற்றை, இயேசு ஏற்கனவே கூறியுள்ளவற்றில் இருந்து பிரிக்க இயலாது முந்திய பகுதியில் அவர், தவறான செயலைப் போன்றே தவறான எண்ணமும் மோசமானதாக உள்ளது என்று வலியுறுத்தினார் (5:22அ, 28). இவ்வசனங்களில் அவர், இன்னும் ஒரு படி மேலே சென்று, தவறான சிந்தனையானது சரியான செயலைக்கூடத் தவறானதாக்க முடியும் என்று குறிப்பிட்டார். மேலும் நாம் இங்கு, பின்வரும் அறைகூவலைக் கொடுத்த முந்திய பிரிவின் முடிவுடன் ஒரு தொடர்பைக் காணலாம்: "ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் (5:48). ஒருவேளை இயேசு, நீங்கள் அந்தப் பூரணத் தன்மையை எவ்வளவு அடைந்தாலும், "மனிதர்கள் உங்களைக் கண்டு உங்களைப் பாராட்டும் வகையில் அதை (பூரணத்தன்மையை) காட்சிப்படுத்தாதீர்கள்” என்று மறைமுகமாக உணர்த்தி இருக்கலாம்.

குறிப்பாக நாம், 5:20 மற்றும் இந்தப் புதிய பிரிவு ஆகியவற்றிற்கு இடையில் ஒரு உறவைக் காணுகிறோம். 5:20ல் இயேசு, “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களூடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று கூறினார். 5ம் அதிகாரத்தின் அதிகமான பகுதியில், வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் நீதியைக் காட்டிலும் அதிகமாக நீதியுள்ளவர்களாக இருப்பதும், தவறான சிந்தனைகள் மற்றும் தவறான செயல்கள் ஆகியவற்றிற்கு எதிராகக் காத்துக் கொள்ளுதலுமே அறைகூவலாக இருந்தது. மத்தேயு 6:1-18ல், சரியான நோக்கங்களைக் கொண்டிருத்தல் என்ற விஷயத்தில், வேதபாரகர் மற்றும் பரியேர்களின் நீதியைக் காட்டிலும் அதிக நீதி உடையவர்களாகத் தம்மைப் பின்பற்றுபவர்கள் இருக்க வேண்டும் என்பதே அவரது அறைகூவலாக உள்ளது

இந்தப் பாடமானது மத்தேயு 6ன் முதல் நான்கு வசனங்களின் மீது முதன்மையாக அமையும், ஆனால் இது இந்த முழுப் பகுதிக்கும் (வசனங்கள் 1-18) ஒரு அறிமுகமாகவும் பணியாற்றும். இந்தப் பாடத்தை நான் “கும்பலின் பாராட்டை நாடுதல்” என்று அழைக்கிறேன். இந்தப் பாடம் வளருகையில் இந்தத் தலைப்பிற்கான காரணம் தெளிவாகும்


         ஆவியில் கைவிடபடுதல் 



ஒரு எச்சரிக்கை (6:1)

தகுதியற்ற ஒரு காரணம்

நமது வேதபாட வசனப்பகுதி ஒரு பொதுவான எச்சரிக்கையுடன் தொடங்குகிறது: “மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்குமுன்பாக உங்கள் தர்மத்தை (நீதியைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை (வசனம் 1). இவ்விடத்தில், “நீதி" (dikaiosune) என்பது 5:20ல் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்ட வகையிலேயே, சரியானதைச் செய்தல் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “சரியானதைச் செய்தல்" என்பதற்கான மூன்று உதாரனங்கள் தரப்படுகின்றன: ஏழைகளுக்குக் கொடுத்தல் (6:2), ஜெபித்தல் (வசனம் 5) மற்றும் உபவாசித்தல் (வசனம் 16)

இயேசு, "மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக” நீதியான செயல்களைச் செய்தலுக்கு எதிராக எச்சரித்தார். இவ்வார்த்தைகளில் சிலர் 5:16ல் அவரது அறிவுறுத்துதல்களுக்கு நேர்மாறு ஒன்றைக் காணுகின்றனர் இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” இருப்பினும் மற்றவர்கள் காணும்படி ஒரு விஷயத்தைச் செய்வதற்கும் மற்றவர்களால் காணப்படும்படி ஒரு விஷயத்தைச் செய்வதற்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. உட்கருத்தின் நோக்கம் என்பதே 5:16 மற்றும் 6:1 ஆகியவற்றிற்கு இடையில் உள்ள அடிப்படை வேறுபாடாக உள்ளது: 5:16ல் தேவனை மகிமைப்படுத்துதல் என்பது இலக்காக உள்ளது; 6:1ல் ஒருவர் தமது சுயத்தை மகிமைப்படுத்துதல் என்பது இலக்காக உள்ளது


         துருத்தியில் கண்ணீர் 


ஏற்றுக்கொள்ளப்படாத தேவபக்தி

6:1ஐத் தொடர்ந்துள்ள மூன்று உதாரணங்களில் இயேசு, மனிதர்களால் கவனிக்கப்படும் வகையில் தங்கள் நீதியை நடைமுறைப்படுத்துபவர்களை மாயக்காரர்” என்ற வார்த்தையால் பெயரிட்டு அழைத்தார் (வசனங்கள் 2, 5, 16). “மாயக்காரர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, முதல் நூற்றாண்டில், மேடையில் தமது முகத்தின் முன்பாக ஒரு முகமூடியைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஒருவர் தமது உண்மையான இயல்பை மறைப்பதற்கு ஆவிக்குரிய வகையிலான ஒரு முகமூடியைப் பயன்படுத்துவதைக் குறிப்பிட இந்தச் சொற்றொடரை இயேசு பயன்படுத்தினார்

ஆவிக்குரிய வகையிலான இந்த மேடை - நடிகர்கள், நற்செயல்கள் செய்வதாகத் தோற்றம் அளித்தார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் ஒரு

நடிப்பையே கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நாடகத்துவமான விஷயத்தில் நுட்பத்திறன் கொண்டிருந்தனர். தாரைகள் ஊதி ஒரு கும்பலை கூட்டிய பின்பு அவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்தனர் (வசனம் 2). அவர்கள் ஜெபித்தபோது, பொது இடங்களில் அவர்கள் நாடகத்துவமாக நின்று கைகளையும் முகங்களையும் மேல்நோக்கி உயர்த்தி, நீண்ட மற்றும் உரத்த குரலில் ஜெபித்தனர் (வசனங்கள் 5, 7). அவர்கள் உபவாசித்தபோது, தாங்கள் எவ்வளவு ஆழமான ஒப்புக்கொடுத்தல் உள்ளவர்களாக இருந்தனர் என்பதைக் கொண்டு பிறரின் மனங்களை ஈர்க்கும்படியாக, ஆழ்ந்த துக்கம் கொண்ட நபருக்குரிய உடைகளையும் ஒப்பனையையும் அணிந்து கொண்டனர்.

1ம் வசனத்தில் “காணவேண்டுமென்று” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, “theater" என்ற வார்த்தையை நாம் பெற்றுக்கொள்கிற theatron என்ற வார்த்தைக்கு உறவுவார்த்தையாக உள்ளது. உலகம் என்பதே மாயக்காரரின் மேடையாக இருந்தது, மற்றும் கும்பலே அவர்களின் கேட்போர் கூட்டமாக இருந்தது. நிகழ்ச்சி நடத்தும் ஒவ்வொருவராலும் நாடப்பட்டதே அவர்களின் இலக்காக இருந்தது: தங்கள் கேட்போர் கூட்டத்திடம் இருந்து மனப்பூர்வமான கைதட்டல். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டனர் என்பது உறுதி, ஆனால் இது மாத்திரமே அவர்கள் பெற்றுக்கொள்ளும் எல்லாமுமாக இருந்தது. ஒவ்வொரு உதாரணத்தின் முடிவுக்கு அண்மையிலும் இயேசு, “... அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறினார் (வசனங்கள் 2, 5, 16). "அவர்கள்... அடைந்து தீர்ந்ததென்று” என்ற வார்த்தைகள், “தொகையை முழுமையாகப் பெற்றுக்கொண்டு அதற்கு ஒரு வரவுச்சீட்டைக் கொடுத்தல்” என்று அர்த்தப்படுத்திய வர்த்தகரீதியான pecho என்ற சொற்றொடரில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர்களின் நிகழ்ச்சி முடிந்து, பூமிக்குரிய வகையில் அவர்கள் பெற்றுக்கொண்ட பாராட்டும் முடிந்து போனதும், அவர்களின் வாழ்வின் பதிவேட்டின்மீது தேவன் முற்றிலும் செலுத்தப்பட்டாயிற்று” என்று எழுதுவார். அதுவே அவர்கள் பெற்றுக்கொள்ளும் எல்லாமுமாக இருக்கும். இயேசு, "... பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை” என்று கூறினார். என்ன ஒரு கவலைமிகுந்த வார்த்தைகள்! நித்திய பலன்களுக்குப் பதிலாக பூமிக்குரிய பாராட்டுகள் பரிவர்த்தனஞ் செய்யப்பட்டன.

நாம், மனிதகுலம் என்ற காணப்படக்கூடிய கேட்போர் கூட்டத்தையும் “அந்தரங்கத்தில் பார்க்கிற நம் பிதா” என்ற காணப்படாத கேட்பவரையும் கொண்டிருக்கிறோம் (வசனங்கள் 6, 18). முடிவில் தேவனே பொருட்படுத்தப்படக் கூடிய கேட்பாளராக இருக்கிறார். 1ம் வசனத்தை NEB வேதாகமம் பின்வருமாறு தரவழைக்கிறது: "மனிதர்களுக்கு முன்பாக உங்கள் தேவபக்தியைக் காட்சிப்படுத்தாமல் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள் அப்படிச் செய்தால், பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவின் வீட்டில் உங்களுக்குப் பலன் எதுவும் காத்திருப்பதில்லை.

ஒரு உதாரணம் (6:2-4)

பொதுவான எச்சரிக்கையைக் கொடுத்த பின்பு இயேசு, முன்று உதாரணங்களைக் கொடுத்தார்: “யூதத்துவ சமயப்பற்றின் மூன்று பிரதான செயல்கள். இந்த மூன்றும், நமது தேவபக்தி தன்னைத்தானே

வெளிப்படுத்துகிற அடிப்படை வழிகளுடன் தொடர்புடையன என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது: மற்றவர்களிடத்தில் (பரிவிரக்க உதவி), தேவனிடத்தில் (ஜெபம்) மற்றும் தன்னிடத்தில் (சுய மறுப்பு). ஒவ்வொரு உதாரணமும் ஒரே வகையான மாதிரியைப் பின்பற்றுகிறது: எதைச் செய்யக்கூடாது மற்றும் அதன் பின்பு, எதைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் இயேசு, விவரிக்கப்பட்ட செயல்களுக்குப் பெற்றுக்கொள்ளக்கூடிய பலன்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டார்

இப்போது நாம், இந்த உதாரணங்களில் முதலாவதைக் காண்போமாக மற்ற இரண்டும் நமது அடுத்த பாடத்தில் எடுத்துரைக்கப்படும்.!

ஏழைகளுக்கு உதவுவதை எவ்வாறு செய்யக்கூடாது (வசனம் 2)

ஏழைகளுக்குக் கொடுத்தல் என்பது முதல் உதாரணமாக உள்ளது யூதர்களுக்கு, தர்மம் பண்ணுதல் என்பது சமயக் கடமைகள் யாவற்றிலும் மிகவும் பரிசுத்தம் வாய்ந்ததாக இருந்தது இயேசு, “ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே” என்று கூறினார் (வசனம் 2அ). KJV வேதாகமத்திலும் தமிழ் வேதாகமத்திலும் "தர்மஞ்செய்யும்போது” என்றுள்ளது, ஆனால் பிற ஆங்கில மொழிபெயர்ப்புகளில் "ஏழைகளுக்குக் கொடுக்கும்போது" என்றுள்ளது.' 2ம் வசனத்தில் உள்ள eleemosune என்ற கிரேக்க வார்த்தை “இரக்கம் காண்பித்தல்” என்று அர்த்தப்படுகிறது." இது, ஒரு பொதுவான வழிவகையில் பரிவிரக்கச் செயல்களைக் குறிப்பதற்கும், குறிப்பாக ஏழைகளுக்கு உதவுதலைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது." இந்த உதவி என்பது பணமாக அல்லது பிற உதவியாக இருக்கலாம்; தேவைப்பட்டிருந்த எந்த விஷயத்தையும் இவ்வார்த்தை குறிப்பிட்டது

பழைய ஏற்பாடு, ஏழைகளுக்கு உதவுதல் மீது மாபெரும் வலியுறுத்தத்தை வைக்கிறது. மோசேயின் மூலமாகத் தேவன், “தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்று கூறினார் (உபாகமம் 15:11), சங்கீதங்களின் புத்தகத்தில், கர்த்தருக்குப் பயன்படுகிற மனிதர் பின்வருமாறு விவரிக்கப்படுகிறார்: “வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்” (சங்கீதம் 112:9)

இதே வலியுறுத்தம் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது. செல்வந்தரான இளம் அதிகாரிக்கு இயேசு, "... போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு" என்று கூறினார் (மத்தேயு 19:21), சகேயுவின் வீட்டிற்கு இயேசு வந்தபின்பு, சகேயு, “ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்” என்று கூறினார் லூக்கா 19:8) அப்போஸ்தலர்கள், பவுல் மற்றும் பர்னபா ஆகியோரிடத்தில் “தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படி" கூறினார்கள், அதற்குப் பவுல், தாம் “அப்படிச் செய்யும்படி கருத்துள்ளவனாயிருந்தேன்” என்று கூறினார் (கலாத்தியர் 2:10). மக்கெதோனியா மற்றும் அகாயாவில் இருந்த கிறிஸ்தவர்கள், "எருசலேமிலுள்ள

பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டு” இருந்தனர் (ரோமர் 15:26), தானதர்மம் செய்தல் என்பது சபைக்குத் தேவன் தந்துள்ள ஒரு பொறுப்பாக உள்ளது (காண்க கலாத்தியர் 6:10; யாக்கோபு 1:27).

மத்தேயு 6:1-18 உள்ள உதாரணங்கள் ஒவ்வொன்றிலும் கலந்துரையாடலின் கீழ் உள்ள செயல்முறையின் தொடர்ச்சியை இயேசு முன்னெதிர் நோக்கினார். ஏழைகளுக்கு உதவுதல் பற்றி அவர், "நீங்கள் தர்மம் பண்ணினால்” என்றல்ல ஆனால் "நீ தர்மஞ்செய்யும்போது" என்று கூறினார் இருப்பினும் நாம், ஏழைகளுக்குக் கொடுத்தலில், மற்றவர்களுக்கு உதவுதலில்



    பூரண சர்குணராயிருங்கள் 


ஒரு சரியான வழியையும் ஒரு தவறான வழியையும் காணுகிறோம். அதைப்பற்றிய

ஒரு முன்கொணர்வை ஏற்படுத்துதல் - உருவகமாகப் பேசுவதென்றால், ஒரு

தாரையை ஊதுவித்தல் - என்பது தவறான வழியாக உள்ளது

தாரை பற்றிய குறிப்பு நேர்ப்பொருள் கொண்டதா அல்லது அரைச்சிரிப்பான மிகைக்கூற்றா என்பதைப் பற்றி நாம் நிச்சயமாக எதுவும் கூற இயலாது தர்மம் பண்ணுதலுக்கு முன் ஒரு தாரையை ஊதுவித்தல் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லாதிருக்கையில், இதற்கு ஒப்பீடாகக் கூறக்கூடிய வகையில், பணக்கார மனிதர்கள் ஏழைகளுக்குத் தண்ணீர்த் துருத்திகளை வாங்கும் போது செய்யும் செயல் பற்றிய சூழ்நிலையின் விபரங்களை நாம் கொண்டிருக்கிறோம். தண்ணீரை விற்பவர், ஏழைகள் வந்து பருகும்படி உரத்த குரலில் கூவுவார். தண்ணீ ருக்காகப் பணம் செலுத்தியவர், பருக வரும் ஏழைகளிடம் இருந்து நன்றி நிறைந்த வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு புறம் நின்றுகொண்டிருப்பார்."

தனிநபர்கள், ஏழைகளுக்கு உதவி செய்யும்போது, ஒரு தாரையை ஊதுவிப்பதைப் பற்றி நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் யாரைப் பற்றி நினைக்கிறீர்கள்? எனது மனமானது, தாங்கள் செய்யும் தர்மம் ஒவ்வொன்றும் அதிகமான விளம்பரத்தைப் பெறுவதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு, விளம்பரம் செய்பவர்களைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளும் செல்வந்தர்களான தனிநபர்கள் பற்றி நினைக்கச் செல்வது குறித்து நான் அச்சம் அடைகிறேன் அவர்கள் தங்கள் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வரும்படியும் தாங்கள் மனிதகுலத்திற்குப் பெரிய உபகாரிகள் என்று பாராட்டுதல் பெறும்படியும் செய்து கொள்கின்றனர். அவர்கள் எவ்வளவு பணம் கொண்டிருக்கின்றனர் என்பதைப் பற்றியும் அவர்கள் தங்களின் பெரிய நன்கொடைகளை வரிவிலக்குக்காகக் காண்பிக்க முடியும் என்பதைப் பற்றியும் நான் நினைக்கிறேன். பின்பு நான் எனது தலையைத் தொங்கப் போட்டுக் கொள்கிறேன், ஏனெனில் இயேசு, மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்கு அல்ல ஆனால் எனது சொந்த இருதயத்தைப் பரிசோதனை செய்து கொள்ளவே இந்த உதாரணத்தைக் கொடுத்தார். நான் பிறருக்கு உதவிசெய்யும் போது, அவர்களிடத்தில் இருந்து நன்றியை எதிர்பார்க்கிறேனா? அவர்களின் நன்றிகளை நான் பெறாவிட்டால், நான் ஏமாற்றம் அடைகிறேனா? நான் பூமிக்குரிய வகையிலான பாராட்டை

எதிர்பார்க்கிறேனா? 1 கொரிந்தியர் 13ல் தவறான நோக்கங்களுடன் ஏழைகளுக்குக் கொடுத்தல் பற்றிப் பவுல் பேசினார்: “எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், ... அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப்

பிரயோஜனம் ஒன்றுமில்லை” (வசனம் 3). தவறான காரணத்திற்காக மற்றவர்களுக்கு உதவுபவர்கள் பற்றி இயேசு, "அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறினார் (மத்தேயு 6:2ஆ). அவர்கள் செய்வது, உதவியைப் பெற்றுக் கொள்பவர்களுக்குப் பலன் தருகிறது, ஆனால் அது உதவியைக் கொடுப்பவர்களுக்குப் பலன் தருவதில்லை. பிலிப்ஸ் அவர்களின் வேதாகம மொழிபெயர்ப்பில் 2ம் வசனத்தின் முடிவுப் பகுதி, பின்வருவது போன்று தரவழைக்கப்பட்டுள்ளது: என்னை நம்புங்கள், அவர்கள் தாங்கள் பெறவிருந்த பலன் எல்லாவற்றையும் பெற்றாயிற்று

ஏழைகளுக்கு உதவுவதை எவ்வாறு செய்யவேண்டும் (வசனங்கள் 3, 4)

அப்படியென்றால் நாம் ஏழைகளுக்குக் கொடுத்தலை எவ்வாறு செய்ய வேண்டும்? இயேசு, "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது” என்று கூறினார் (வசனங்கள் 3, 4).

இது, எல்லாக் கொடுத்தலும் இரகசியமானதாக, வேறு எவரொருவரும் அறியக் கூடாததாக இருக்க வேண்டும் என்று அர்த்தப்படுவதாகச் சிலர் எடுத்துக் கொண்டுள்ளனர். கடந்த காலத்தில், சபைக்குழுமங்கள் காணிக்கைப் பைகளைப் பயன்படுத்துதல் என்பது சாதாரண வழக்கமாக இருந்தது. பை ஒவ்வொருவரிடத்திலும் கடந்து செல்லும்போது, உறுப்பினர்கள் தங்களின் மூடிய கைமுட்டிகளைப் பைக்குள் இடுவார்கள். அதன் மூலம், கொடுக்கப்பட்டது என்ன என்பதையோ அல்லது ஏதாவது கொடுக்கப்பட்டதா என்பதையோகூட எவரொருவரும் அறிய இயலாதிருந்தது. மற்றவர்கள், இவ்வசனப் பகுதி தங்களின் உபகாரச் செயல்கள் யாவையும் பெயரற்ற வகையில் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். தேவனுக்கு மதிப்பு அளிக்கப்படும் வரையில் அதைப் பற்றித் தவறு எதுவும் இல்லை .

இருப்பினும், புதிய ஏற்பாடு எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கொடுக்கப்பட்ட யாவும் இரகசியமானதாக இருந்ததில்லை. ஏழை விதவையின் காணிக்கை பற்றி இயேசு தமது சீஷர்களுக்குக் கூறினார் (மாற்கு 12:41-44), பர்னபாவின் பெருந்தன்மை பற்றி மற்றவர்கள் அறிந்திருந்தனர் (நடபடிகள் 4:34-37), கொரிந்தியர்களை கொடுக்கும்படி ஏவுவதற்குப் பவுல், மக்கெதோனியர்களின் தாராள குணத்தைப் பற்றிய செய்தியைப் பயன்படுத்தினார் (2 கொரிந்தியர் 8:1-5; 9:1-5). கொடையைப் பற்றிப் பிறர் அறிய அனுமதித்தல் பற்றியல்ல, ஆனால் புகழ்ச்சியை விரும்பும் நோக்கத்துடன் கெ த்தல் பற்றியே இவ்விடத்தில் கவலைக்குரிய அக்கறை உள்ளது தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய பர்னபா கொடுத்தல் மற்றும் பர்னபா பெற்ற அதே அங்கீகாரத்தைப் பெறுவதற்காக ஒரு முயற்சி என்ற வகையில் அனனியாவும் சப்பீராளும் “கொடுத்தல்" ஆகியவற்றிற்கு இடையில் வேறுபாடு உள்ளது (காண்க நடபடிகள் 4:36-5:8)

அப்படியென்றால், உங்கள் வலது கை செய்வதை உங்கள் இடது கை அறியாதிருக்கட்டும் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? இங்கு நாம் நகைச்சுவையின் தொடுதல் ஒன்றைக் கொண்டிருக்கலாம். கேலிச்சித்திரத் துண்டுப்படங்களை என்னால் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. முதல்

சட்டகத்தில், வலது கையானது ஒரு ஏழை மனிதருக்கு ஒரு நாணயத்தைக் கொடுத்து, அந்தக் கையானது “இது உதவியாயிருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறுகிறது. அடுத்த சட்டகத்தில், இடது கை, “ஏய், வலது கையே, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்கிறது. ஒரு முக்கியமான குறிப்பிற்குப் பின்வருவதை ஆழ்ந்து சிந்தியுங்கள்: வலது கை என்ன செய்கிறது என்பதை இடது கை எவ்வாறு அறிகிறது? இப்படிப்பட்ட தகவல்கள் யாவும் மூளையில் இருந்து வருகிறது இயேசு, “நீங்கள் கொடுக்கும்போது, நீங்கள் செய்துள்ள நன்மையை உங்கள் மனதில் தங்கவிடாதீர்கள்.” “நீங்கள் தாராளமாக இருந்ததற்கோ, அல்லது நல்லது செய்ததற்கோ நீங்கள் உங்களைப் பாராட்டாமலிருக்க 'உங்கள் சிந்தையிலிருந்து அந்த எண்ணங்களை உடனே அகற்றிப் போடுங்கள்' என்று கூற மிகைப்படுத்துதலைப் பயன்படுத்தினார்.

இங்கு நாம் மத்தேயு 6:1-18ன் முதன்மை ஆய்வுகருத்தின் விரிவாக்கம் ஒன்றைக் கொண்டுள்ளோம். இப்போது நாம், பிறரால் காணப்படுவதற்காக நமது நீதியான செயல்களைச் செய்யக்கூடாது என்ற கருத்தினால் மனம் கவரப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் இந்தச் செயல்களை எவரொருவரும் அறியாத வண்ணம் செய்தலும், அவை நமது சொந்த மனங்களில் தங்கியிருக்கும்படி அப்படிப்பட்ட நீதியுள்ள தனிநபர்களாக இருத்தலுக்காக, நமது மனங்களை சுயபாராட்டுதல்களினால் நிரப்பிக் கொண்டு செய்வதற்குச் சாத்தியக்கூறு உள்ளது. பை என்று சொல்லக்கூடிய மென்மையான கேக் ஒன்றினுள் விரலை விட்டு ஒரு பிளம் பழத்தை வெளியே எடுத்து, "நான் எவ்வளவு நல்ல பையன் என்று கூறிய ஒரு சிறுவனைப் பற்றி, குழந்தைகளுக்கான பாடல் ஒன்று கூறுகிறது நமது சிந்தனைகளில் நாம், “நாங்கள் எவ்வளவு நல்ல பையன்களாக மற்றும் பெண்களாக இருக்கிறோம்!” என்று கூறக் கூடாதவர்களாக இருக்கிறோம் கிறிஸ்தவ கொடுத்தல் என்பது சுய தியாகத்தினால் மாத்திரமல்ல, ஆனால் சுயத்தை மறக்கிறதினாலும் பண்புபடுத்தப்பட வேண்டியதாக உள்ளது.

நீங்கள் கொடுக்க வேண்டிய பிரகாரம் கொடுக்கும்போது, “அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்" (மத்தேயு 6:4ஆ)." தேவன் "அந்தரங்கமாகச் செய்யப்படுகிறதைக் காணுகிறார்" ஏனெனில், அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” (எபிரெயர் 4:13), "தேவன் மாத்திரமே காணுகிறபகுதியே கிறிஸ்தவரின் வாழ்வில் மிகவும் முக்கியமான பகுதியாக உள்ளது” என்று கூறப்பட்டு இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் ஏன் அதைச் செய்கிறீர்கள் என்பதையும் தேவன் அறிகிறார். நீங்கள் சரியான விஷயங்களைச் சரியான காரணங்களுக்க செய்தால், தேவன் உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்” என்று இயேசு கூறினார்

உனக்கு... பலனளிப்பார்” என்ற வார்த்தைகள் சிலரது கவலைக்குக் காரணமாகின்றன. "பலன் (மீதான) தூண்டுதல் பெற்ற நோக்கம்” என்று குறைத்து மதிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நற்செயல்கள் அல்லது குறிப்பிட்ட தொகையைத் தர்மம் கொடுத்தல் என்பது நமக்குப் பரலோகத்தில் ஒரு இல்லத்தை ஈட்டித்தரும் என்று நாம் ஒருபோதும் நினைக்கக் கூடாது, ஏனெனில் நாம் கிருபையினால் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம் (ரோமர் 6:23; எபேசியர் 2:8). இருந்தபோதிலும், தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்

தண்டிக்கப்படுகையில் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிபவர்கள் பலன் அளிக்கப்படுவார்கள் என்ற உண்மையைப் பற்றி வேதாகமம் அதிகமாய் கூறுகிறது (எடுத்துக்காட்டாக, மத்தேயு 5:12; 10:42; 25:14-46 ஆகிய வசனங்களைக் காணவும்)

மத்தேயு 6:4ன் “பலன்" என்பது என்னவாக உள்ளது மற்றும் அது எப்போது தரப்படும் என்பவை பற்றி, விளக்கவுரையாளர்கள் கருத்து வேறுபடுகின்றனர். இந்த பலனுக்கு ஒரு உடனடி அம்சம், ஒரு தொடர்ச்சியான அம்சம் மற்றும் ஒரு நிறைவான ஒரு அம்சம் உள்ள சாத்தியக்கூற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள் நமது வேதபாட வசனப்பகுதியில் உள்ள உடனடியான அம்சம் பற்றி, இந்த பலன் என்பது மனிதர்களால் அங்கீகரிக்கப்படுவதற்கு நேர்மாறானதாக உள்ளது எனவே இது தேவனால் அங்கீகரிக்கப்படுவதாக இருக்கும். (அரங்கத்தின் ஒப்புவமைக்குத் திரும்பிச் சென்று, இதைத் தேவனுடைய பாராட்டுதல் என்ற வகையில் சிந்தித்துப்பாருங்கள்.) இந்த பலனின் தொடர்ச்சியான அம்சம் என்பது நாம் தேவனிடத்தில் நெருக்கமாக மற்றும் இன்னும் நெருக்கமாகக் கிட்டிச் சேர்ந்து, அவரைப் போல் ஆகிறோம் (மத்தேயு 5:48). நாம் அவரது பலத்தின் மீது கிட்டிச்சேருகையில், நாம் அவரது அன்பைப் பற்றி அதிகமாய் அறிகிறோம் நித்திய ஜீவன் என்பது இந்த பலனின் நிறைவான அம்சமாக உள்ளது, அது பிதாவுடன் முடிவற்ற காலம் நாம் வாழும் வாழ்வாக உள்ளது. மத்தேயு 25ன் நியாயத்தீர்ப்பு காட்சியில் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம் (தேவையில் உள்ளவர்களுக்கு உதவுதல் மற்றும் அதன் விளைவு மீது வலியுறுத்தம் உள்ளதைக் கவனியுங்கள்)


Umn ministry 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*