(மத்தேயு 5:3)
ஒரு வேளை உங்கள் கையில் ஒரு துண்டுத்தாள் கொடுக்கப்பட்டு உண்மையில் இந்த வாழ்வில் நீங்கள் விரும்புவது என்ன என்று எழுதும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் எதை எழுதுவீர்கள்?
பல திரளான விஷயங்கள் பட்டியலிடப் படலாம்; ஆனால் பலருக்கு, மகிழ்ச்சி என்பதே மிகவும் விரும்பத் தக்க விஷயமாக உள்ளது உலகமானது, மகிழ்ச்சியைக் கண்டறிவதற்காக மாபெரும் கடை எல்லைகளுக்குச் சென்றுள்ளது. சாலொமோன் அரசரைக் காட்டிலும் அதிகமாக எக்காலத்திலும் வேறு எவரும் மகிழ்ச்சியாக இருக்க அதிகமான வழிகளை
முயற்சி செய்திருக்கவில்லை. அவர் உலக ஞானத்தின் மூலம் மகிழ்ச்சியாயிருக்க
நாடினார். அவரது முடிவு என்னவாக இருந்தது
இதோ, நான் பெரியவனாயிருந்து எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன். ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன். அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவு பெருத்தவன் (பிரசங்கி 1:16-18)
சாலொமோன், திராட்சரசம், பெண்கள் மற்றும் பாடல் உட்பட, கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு பொழுதுபோக்கைக் கொண்டும் பரிசோதனை செய்தார் (பிரசங்கி 2:1, 8). அவர், ".. வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை ” (1 இராஜாக்கள் 10:21) என்னுமளவுக்கு மிகவும் செல்வந்தராக இருந்தார். அவர் காளைகள், ஆடுகள், மான்கள், கலைமான்கள், வெளிமான்கள் மற்றும் கொழுக்க வைக்கப்பட்ட பறவைகள் ஆகியவற்றைக் கொண்டு சமைத்த உணவுகளை உண்ண அமர்ந்தார் (1 இராஜாக்கள் 4:22, 23). அவர் தமக்கு மகிழ்ச்சியைத் தரலாம் என்று நினைத்த எந்த விஷயத்தையும் தமக்கு மறுக்கவில்லை (பிரசங்கி 2:10). இவை எல்லாவற்றில் இருந்தும் அவர் அறிந்து கொண்டது என்ன? "இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை ” (பிரசங்கி 2:11ஆ). மகிழ்ச்சி என்பது, தவறான சாலையில் பயணம் செல்பவர்களால் கண்டறியப்பட முடியாது. விலையைச் செலுத்த மனவிருப்பம் இல்லாதவர்களுக்கு அது தலைமறைவானதாகவே நிலைத்திருக்கும் நாம், மத்தேயு 5:3-12ஐப் பற்றிய ஒரு படிப்பைத் தொடங்குகிறோம். இந்த வசனப்பகுதியில்' நாம், உண்மையான மகிழ்ச்சிக்கான தேவனுடைய இரகசியங்களைக் காணுகிறோம் - இதை ஹியூகோ மெக்கார்டு என்பவர் உத்தரவாதப்படுத்தப்பட்ட மகிழ்ச்சி” என்று அழைத்தார்: இவ்வசனங்கள், பாக்கியங்கள்" என்று அறியப்பட்டுள்ளன. "பாக்கியம் என்பது "ஆசீர்வதிக்கப்படுதல்" அல்லது “மகிழ்ச்சி" என்று அர்த்தப்படுகிற beatus என்ற இலத்தீன் வார்த்தையில் இருந்து வருகிறது. அதிகமான பொதுவான மொழிபெயர்ப்புகளில், ஒவ்வொரு வசனமும் "blessed” என்ற வார்த்தையைக் கொண்டு தொடங்குகிறது (தமிழ் வேதாகமத்தில் இது, "பாக்கியவான்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).
பாக்கியவான்கள்” என்பது “ஆசீர்வதிக்கப்படுதல், மகிழ்ச்சி” என்று அடிப்படை அர்த்தம் கொண்டுள்ள makarios என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாக உள்ளது. இங்கு பிலிப்ஸ் என்பவரின் பின்வரும் மொழிபெயர்ப்பைப்போல் "பாக்கியவான்கள் என்பதற்குப் பதில் மகிழ்ச்சியானவர்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டால், அது தவறான மொழிபெயர்ப்பாக இருக்காது
ஆவியில் எளிமையுள்ளவர்கள் மகிழ்ச்சியானவர்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது துயரப்படுகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள் அவர்கள்
ஆறுதலடைவார்கள்
சாந்தகுணமுள்ளவர்கள் மகிழ்ச்சியானவர்கள்; அவர்கள் பூமியைச்
சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்! நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் மகிழ்ச்சியானவர்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்
இரக்கமுள்ளவர்கள் மகிழ்ச்சியானவர்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள் இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மகிழ்ச்சியானவர்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்
“சமாதானம்பண்ணுகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள்; அவர்கள்
தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது
இருப்பினும் நாம், "மகிழ்ச்சி” மற்றும் “மகிழ்ச்சியாயிருத்தல்” என்ற வார்த்தைகளை இந்த உலகம் விளக்குகிற பிரகாரம் விளக்கப்படுத்தாமல் இருக்கும்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். “மகிழ்ச்சி” மற்றும் “மகிழ்ச்சியாயிருத்தல்” என்பவை, "ஒரு நிகழ்வு” என்பதைக் குறிக்கிற "hap என்ற பழைய ஆங்கில வார்த்தையில் இருந்து வருகின்றன. இவ்வகையான "மகிழ்ச்சியாயிருத்தல்" என்பது ஒருவர் தாம் இருப்பதாகக் கண்டறியும் சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுகிறது. இருப்பினும் புதிய ஏற்பாட்டில் makarios என்பது பொதுவாக "தெய்வீக இராஜ்யத்தில் பங்கேற்பதன் மூலமாக வருகிற தனிச்சிறப்பான சந்தோஷத்தை” குறிக்கிறது.* AB வேதாகமம், 3ம் வசனத்தின் முதல் பாகத்தைப் பின்வருமாறு விரிவாக்குகிறது: “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மகிழ்ச்சியானவர்கள், பிறர் பார்த்து பொறாமை கொள்ளப்படக் கூடியவர்கள் மற்றும் ஆவிக்குரிய வகையில் வளமுடையவர்கள் - தங்கள் புறத்தோற்ற நிலைகள் எவ்வாறு இருப்பினும், தேவனுடைய தயவு மற்றும் இரட்சிப்பு ஆகியவற்றினால் வாழ்வில் மகிழ்வும் திருப்தியும் பெற்றிருப்பவர்கள்)." Makarios என்பது உண்மையான மகிழ்ச்சி, ஆழமான மகிழ்ச்சி, நீடித்திருக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றை விவரிக்கும் வார்த்தையாக உள்ளது. இது புறச்சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுவதில்லை என்று நான் மீண்டும் கூறட்டும்; இது உள்ளே இருப்பதிலிருந்து வருவதாக இருக்கிறது. இதை நான் "கூடுதல் மகிழ்ச்சி” என்ற வகையில் சிந்திக்க விரும்புகிறேன்
நீங்கள் மகிழ்ச்சியை விரும்புகிறீர்களா? அப்படியென்றால், “கூடுதல் மகிழ்ச்சியை” கொண்டிருப்பதற்கு இயேசு கொடுத்த, தேவைப்படும் எட்டு விஷயங்களைப் படிக்கையில் எங்களுடன் தரித்திருங்கள். இந்தப் பாடம் அவற்றில் முதல் விஷயத்தின் மீதானதாக உள்ளது.
ஆவியில் எளிமையுள்ளவர்கள்
பாக்கியவான்கள்
நம்மில் பலர், மலைப்பிரசங்கத்தை முதலில் கேள்விப்பட்டவர்கள் மீது அது விளைவித்திருக்க வேண்டிய செயல்தாக்கத்தைப் பற்றி அறியாதவர்களாக இருக்கும் அளவுக்கு மலைப்பிரசங்கத்திற்கு மிகவும் பழக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். இயேசு, ஒவ்வொரு கூற்றிற்குப் பிறகும் தமது உரையைத் தொடருவதற்கு முன் கும்பலானது அமைதியாகும் வரையில் காத்திருக்க வேண்டியது அவசியமாக இருந்து இருக்கலாம். கிறிஸ்துவின் போதனைகளில் ஏறக்குறைய ஒவ்வொன்றுமே, உலகஞானம் மற்றும் யூதத்துவச் சிந்தனை ஆகியவற்றிற்கு நேரெதிராகச் சென்றது. முதல் பாக்கியம் இதற்கு உதாரணமாக உள்ளது: "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மகிழ்ச்சியானவர்கள்); பரலோகராஜ்யம் அவர்களுடையது உலக ஞானத்தைப் பொறுத்த மட்டில், இந்த நேர்மாறுகள், "முன்னேறியவர்களாக” மற்றும் “மதிக்கப்படக் கூடியவர்களாக” இருப்பதற்கு அவசியமானவை என்று கருதப்படுபவை பற்றியதாக இருக்கிறது. யூதத்துவச் சிந்தனையைப் பொறுத்த மட்டில், இது பாரம்பரியத்திற்கு நேர்மாறானதாக இருந்தது, யூதர்கள் பெருமை பாராட்டும் மக்களாக இருந்தனர், அவர்கள் பெருமை பாராட்டுவதாக இருத்தலைப் பற்றி(யும்) பெருமை பாராட்டினர். அவர்கள் எல்லோருக்கும் - மற்றும் நமக்கும் - இயேசு, "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று கூறினார்
ஆவியில் எளிமை" என்பது எதை அர்த்தப்படுத்துவது இல்லை ஆவியில் எளிமை என்ற சொற்றொடர்
மூலம் இயேசு அர்த்தப்படுத்தியது என்ன? இயேசு, “தங்கள் வரவுப் புத்தகத்தில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று கூறவில்லை என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும். பொருளாதார விஷயங்களில் ஏழைகளாக இருப்பவர்கள் ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருக்க அதிக சாத்தியக்கூறு உள்ளது என்பது உண்மையே (1 கொரிந்தியர் 1:26-29 மற்றும் 1 தீமோத்தேயு ஆகிய வசனங்களை ஆழ்ந்து சிந்திக்கவும்), ஆனால் வறுமை நிலையில் இருந்து கொண்டும் மேட்டிமையும் விரோதமுமான ஆவியைக் கொண்டிருக்கவும்
சாத்தியக்கூறு உள்ளது. அப்படி என்றால், நிதிநிலையில் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பவர்கள் தாழ்மையும் தேவன்மீது சார்ந்திருக்கக் கூடிய பண்பும் கொண்டிருக்கச் சாத்தியக்கூறு உள்ளது. பணம் என்பது தீர்மானிக்கும் காரணியாக இருப்பதில்லை. தேவன் தாமே வளமையைக் கண்டனம் பண்ணுவதோ அல்லது வறுமையை ஆசீர்வதிப்பதோ இல்லை
இயேசு, "எளிய ஆவியை உடையவர்கள் பாக்கியவான்கள் என்று கூறவும் இல்லை என்பதையும் நாம் கூட்டிக் கொள்ளலாம். சிலர் தாங்கள் தங்களையே நேசிக்காதபடியால், ஆவியில் எளிமை உள்ளவர்களாக இருப்பதாக நினைக்கின்றனர்; உண்மையில் அவர்கள் தங்களைப் பழித்துக் கொள்கின்றனர் அது இராஜாவின் பிள்ளையாக இருப்பவருக்குப் பொருத்தமான எண்ணப்போக்காக இருப்பதில்லை. தேவனுடைய பார்வையில் ஒவ்வொரு ஆத்துமாவும் மதிப்புள்ளதாக இருக்கிறது என்று வேதாகமம் போதிக்கிறது
காண்க மத்தேயு 16:26
ஆவியில் எளிமை" என்பது எதை அர்த்தப்படுத்துகிறது
அப்படியென்றால், “ஆவியில் எளிமை” என்ற சொற்றொடர் எதை அர்த்தப்படுத்துகிறது “எளிமை" என்பதற்கு இயேசு, ptochos என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். Photos என்பது வறுமை நிலையை மாத்திரம் அர்த்தப்படுத்துவது இல்லை; இது கைவிடப்பட்டிருத்தல், ஏழ்மையால் வருத்தப்பட்டிருத்தல் என்பதைப் பற்றியதாக உள்ளது. இது பயத்தினால் ஒருவர் தம்மை ஒடுக்குதல் அல்லது ஒளிந்து கொள்ளுதல்" என்று அர்த்தப்படும் வார்த்தையில் இருந்து தரவழைக்கப்பட்டது." இது, “மக்களைப் பிச்சையெடுக்கும் அளவுக்குக் குறைத்துப் போடும் முற்றிலுமான வறுமை நிலை" என்பதைக் குறிக்கிறது." பிச்சைக்காரரான லாசருவைக் குறிப்பதற்கு இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது: “லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்” லூக்கா 16:20, 21அ; வலியுறுத்தம் என்னுடையது.
மூன்று வகையான மக்கள் அமெரிக்க நாட்டில் நன்கு அறியப்பட்டவர்களாக உள்ளனர்:
செல்வந்தர்கள், ஏழைகள் மற்றும் பெருமளவிலான "நடுத்தரவசதி உள்ளவர்கள்” எங்களில் பலர் இவ்வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறோம். வேதாகமம் எழுதப்பட்ட காலத்தில் இருவகைப்பட்ட மக்கள் மாத்திரமே இருந்தனர்: செல்வர்கள் மற்றும் ஏழைகள் அதாவது "இருப்பவர்கள்" மற்றும் "இல்லாதவர்கள் நமது வேதவசனப்பகுதியில், ptochos என்பது கொஞ்சம் பொருள் கொண்டிருப்பவர்களைக் குறிப்பது இல்லை; இது ஒன்றும் இல்லாதவர்களையே குறிக்கிறது. இது சாலையோரத்தில் படுத்துக் கிடக்கும் ஒரு பிச்சைக்காரரின் உருவத்தை எழுப்புகிறது - இவர், மற்றவர்களின் கருணையை முற்றிலும் சார்ந்திருக்கும் பிச்சைக்காரர், ஒன்றும் இல்லாதவராக இருந்து தமக்கு எவரும் இரக்கம் காண்பிக்கவில்லை என்றால் இறந்துபோகக் கூடிய பிச்சைக்காரராக இருக்கிறார்! நீங்களும் நானும் பரலோக ராஜ்யத்தைக் காண வேண்டும் என்றால் ஆவிக்குரிய வகையில் பிச்சைக்காரர்கள் ஆக வேண்டும். நாம் ஆவிக்குரிய நிலையில் கைவிடப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தறிய வேண்டும்
செயல்விளைவில் இயேசு, "தங்கள் ஒழுக்கரிதியான மற்றும் மார்க்கரீதியான திறமைகளில் பிச்சைக்காரர்களாக இருப்பதாகத் தங்கள் சுயமதிப்பில் உணர்ந்து தங்கள் ஆவிக்குரிய நம்பிக்கையற்ற நிலையை அறிந்திருப்பவர்கள் பாக்கியவான்கள்” என்று கூறினார். குட்ஸ்பீடு என்பவரின் மொழிபெயர்ப்பில் தங்கள் ஆவிக்குரிய தேவைகளை உணர்ந்திருப்பவர்கள் பாக்கியவான்கள் என்றுள்ளது
தங்கள் ஆவிக்குரிய தேவையை உணர்ந்தவர்களைத் தேவன் எப்போதுமே விரும்பி மற்றும் பாராட்டி இருக்கிறார். தாவீது, “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” என்று எழுதினார் (சங்கீதம் 51:17). அந்த வசனத்தை நாம் வாசிக்கையில், “ஆனால் பழைய ஏற்பாட்டில் தேவன் மிருக பலிகளைக் கட்டளையிட்டிருந்தாரே” என்று கேட்கலாம். சாலொமோன் தேவாலயத்தைப் பிரதிஷ்டை செய்கையில் 120,000 ஆடுகளும் 22,000 காளைகளும் அத்துடன் கூடுதலாக "எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான" (1 இராஜாக்கள் 8:5 காண்க வசனம் 63) பிற மிருகங்களும் பலியிடப்பட்டன.
தேவன் இதற்கு, தேவாலயத்தை நிரப்பும்படி மகிமையின் மேகம் ஒன்றை அனுப்பியதன் மூலம் பதில் செய்கை செய்தார் (வசனம் 10). பின்பு ஏன் தாவீது, "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்” என்று கூறினார்? ஏனென்றால், மிருக பலிகள் நொறுங்குண்ட மற்றும் நருங்குண்ட இருதயங்களைக் கொண்ட ஆராதிப்பவர்களிடம் இருந்து வந்தால் மட்டுமே அவற்றைக் கர்த்தர் ஏற்றுக்கொள்வார்
தேவன் விரும்புகிற வகையிலான ஆவியை ஏசாயா செயல்விளக்கப் படுத்தினார். உன்னதமும் பரிசுத்தமுமானவரை அவர் (ஏசாயா) கண்டபோது, தன்னை ஒன்றுமில்லாதவனாக அவர் கண்டார். "ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்" (ஏசாயா 6:5) என்று கூறினார். பிற்பாடு அவர் எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது” என்று கூறினார் (64:6). குற்றமில்லாதவரான எனது கர்த்தருக்கு நான் எதைச் செலுத்த வேண்டியுள்ளது என்று நான் ஆழ்ந்து சிந்திக்கையில், ஏசாயாவைப் போன்றே நானும், "ஐயோ! அதமானேன்” என்றே கூற வேண்டும்.
ஆவியில் எளிமை" என்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதற்கான நல்ல உதாரணம் ஒன்று பரிசேயன் மற்றும் ஆயக்காரன் ஆகியோரைப் பற்றிய உவமையில் காணப்படுகிறது (லூக்கா 18:9-14). ஒரு புறத்தில் பரிசேயன் சுயநீதி உடையவனாக இருந்தான். அவன் தனக்குள் ஆவிக்குரிய தவறுகள் எதையும் உணர்ந்தறியவில்லை மற்றும் தெய்வீக உதவி தேவை என்று அவன் உணரவில்லை. இன்னொரு புறத்தில் ஆயக்காரன், ஆவியில் எளிமையுள்ளவனாக இருந்தான்.
அவன் தான் ஒரு பாவியாக இருப்பதையும் தேவனுடைய இரக்கம் தேவைப்பட்ட பரிதாபகரமான நிலையில் இருப்பதையும் உணர்ந்து அறிந்தான். அவன், “தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்தான் (வசனம் 13). முடிவில் இயேசு, “அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்” என்று கூறினார் (வசனம் 14அ). பரிசேயன் ஒழுக்கநெறிகள் பற்றிய தனது பட்டியலில் சரியற்றவனாக இருந்தான் என்பதற்கான எந்த வித அறிகுறியும் இல்லை, ஆனால் அவனது மேட்டிமை நிறைந்த எண்ணப்போக்கு அவனைக் கண்டனம் செய்தது ஒரு மனிதர் ஒழுக்கத்தில் சுத்தமானவராக, வியாபாரத்தில் நேர்மையானவராக மற்றும் கொடுத்தலில் பெருந்தன்மை உடையவராக இருக்க முடியும் இருப்பினும் அவர் "ஆவியில் எளிமை" உள்ளவராக இராவிட்டால், இன்னமும் அவர் தேவனால் அலட்சியப்படுத்தப்பட்டவராகவே இருப்பார்.
பரலோகராஜ்யம் அவர்களுடையது
“ஆவியில் எளிமையுள்ளவர்களாக” இருத்தல் என்பது எதை
அர்த்தப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ள நிலையில் நாம், “இவ்வகையான ஆவியானது உண்மையான மற்றும் நிலையான மகிழ்ச்சிக்கு என்ன செய்வதாக உள்ளது?” என்று கேட்கிறோம். ஆவியில் எளிமையாயிருத்தல் என்பது மாத்திரம் ஒருவர் மகிழ்ச்சியைக் கண்டடைய உதவ முடியும். பலர் தங்கள் சொந்த எதிர் பார்ப்பின்படி வாழாததால் பரிதாபமான நிலையில் உள்ளனர்.
ஆவியில் எளிமையுள்ள ஒருவர் தம்மைத் தாமே நேர்மையாகக் கண்ணோக்குகிறார் இதன் விளைவாக அவர் தமது நம்பிக்கையைத் தம்மீது வைப்பதற்குப் பதிலாகக் கர்த்தர் மீது வைக்கிறார் - அவரைக் கர்த்தர் கைவிடுவதில்லை. இருப்பினும், நமது வசனப்பகுதியின்படி, ஆவியில் எளிமையுள்ளவர்கள் விசேஷித்த வாக்குத்தத்தம் ஒன்றைக் கொண்டிருத்தல் என்பதே அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடிவதற்கு முதன்மைக் காரணமாக உள்ளது: "பரலோகராஜ்யம் அவர்களுடையது வாழ்வானது எதைக் கொண்டு வந்தாலும், இந்த வாக்குத்தத்தம் அவர்களை நிலைநிறுத்துகிறது
"பரலோகராஜ்யம்” என்றால் என்ன
அது நம்மை, “பரலோகராஜ்யம்” என்றால் என்ன மற்றும் அதைப் பெற்றுக்கொள்வதற்கு “ஆவியில் எளிமையுள்ளவர்களாக' இருத்தல் என்பது எவ்வாறு நமக்கு உதவுகிறது” என்று கேட்கும்படி வழிநடத்துகிறது. இந்தக் கேள்வியின் முதல் பாகத்துடன் நாம் தொடங்குவோமாக; “பரலோகராஜ்யம் என்றால் என்ன
பாக்கியங்களின் சில வாக்குத்தத்தங்கள் இந்த வாழ்வை மையமாகக் கொண்டிருப்பதாகத் தோன்றுகையில், மற்றவைகள் இனி வரவிருக்கும் வாழ்வைப் பற்றி முதன்மையான அக்கறை கொண்டிருப்பவையாகக் காணப்படுகின்றன.
இந்த வாக்குத்தத்தங்கள் யாவையும் இவ்வுலகில் ஒரு பகுதி நிறைவேற்றமாகவும் இனிவரும் உலகில் முழுமையான நிறைவேற்றமாகவும் உள்ளன என்று நான் முடிவு செய்திருக்கிறேன். இது பொதுவில் மகிழ்ச்சி என்பதற்கு சீர்பொருத்தமற்றதாக இருப்பதில்லை. தேவனுடைய பிள்ளையாக இருக்கிற ஒருவர், இப்போது அடிப்படை மகிழ்ச்சியை அறியமுடியும் ஆனால் இந்த வாழ்வில் மகிழ்ச்சி என்பது எப்போதுமே, பாவத்தினால் மோசம்போக்கப்பட்ட உலகத்தில் வாழுதலின் வருத்தங்களுடன் கலந்துதான் இருக்கும். இனிவரவிருக்கும் உலகத்தில்தான், கலப்படமற்ற, நீற்றப்படாத மகிழ்ச்சி நம்முடையதாக இருக்கும். "(தேவனுடைய) ராஜ்யம் அவர்களுடையது” என்ற வாக்குத்தத்தத்தைப் பொறுத்தமட்டில், இந்த நிறைவேற்றம் இங்கும்
இனிவர இருக்கும் வாழ்விலும் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் “இராஜ்யம்” என்று என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை (basileia)
“இராஜரீகம், ராஜரீக வல்லமை, ஆளுகை” என்பதைக் குறிக்கிறது. பேச்சு உருவகம் என்ற வகையில் இது, “ஒரு அரசர் ஆளுகிற எல்லை அல்லது மக்கள் என்பதைக் குறிக்கிறது” தேவனுடைய இராஜ்யம் என்பது தேவனுடைய ஆளுகையைக் குறிக்கிறது. புதிய ஏற்பாட்டில் நாம், "இராஜ்யம்" என்ற சொற்றொடரின் இரு முதன்மைப் பயன்பாட்டைக் காணுகிறோம். முதலாவது தேவனும் கிறிஸ்துவும் இந்த பூமியின்மீது ஆளுகை செய்கிற மக்கள் கூட்டம் என்பதாக உள்ளது; இவர்கள் சபை என்று அறியப்பட்டுள்ளனர்.
மத்தேயு 16:18, 19ல் இயேசு, "இராஜ்யம்” மற்றும் "சபை” என்ற சொற்றொடர்களை ஒன்றிற்குப்பதில் இன்னொன்றாகப் பயன்படுத்தினார். நாம் நமது கடந்தகாலப் பாவங்களில் இருந்து மீட்கப்பட்டு இருக்கும்போது, தேவன் தமது சபையில் நம்மைச் சேர்த்துக்கொள்கிறார் (நடபடிகள் 2:47)" - இது தேவன் நம்மை “தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு” உட்படுத்துகிறார் (கொலோசெயர் 1:13) என்று கூறுவதன் இன்னொரு வழியாக உள்ளது. ஃபிரெடரிக் நீட்சே என்பவருடைய கூற்றின்படி, அந்த வேளையில், "நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அந்த நிலையை அடைதல் - என்பதே இலக்காக உள்ளது. நாம் ஏற்கனவே தேவனுடைய இராஜ்யத்தில் குடியுரிமையை மகிழ்வுடன் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், நமது இருதயங்களில் கர்த்தர் ஆளுகை செய்வதற்கு நாம் இன்னும் அதிகம் அதிகமாக அனுமதிக்க வேண்டும்.
தேவனும் கிறிஸ்துவும் ஆளுகை செய்யும் பரலோக வட்டாரம் என்பது புதிய ஏற்பாட்டில் “இராஜ்யம்” என்ற வார்த்தையின் இரண்டாவது முதன்மைப் பயன்பாடாக உள்ளது (காண்க 2 தீமோத்தேயு 4:18) - இந்த வட்டாரத்தை நாம், பொதுவாக “பரலோகம்" என்று மட்டும் அழைக்கிறோம் “ஆவியில் எளிமையுள்ளவர்கள்” சபையின் உறுப்பினர்களாகத் தகுதியுள்ளவர்களாக இருக்கின்றனர் மற்றும் “ஆவியில் எளிமையுள்ளவர்கள்" மாத்திரமே பரலோகத்தின் நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும் என்று நமது வேதவசனப் பகுதி போதிக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.
தேவனுடைய சபையின் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களும் பரலோகத்தில் காணப்படும் ஆசீர்வாதங்களின் முன்னெதிர்பார்ப்பும், ஒருவரின் மகிழ்ச்சிக்கு நிச்சயமாகவே பங்களிப்பதாக இருக்க வேண்டும்.
ஆவியில் எளிமையுள்ளவர்களாக” இருத்தல் என்பது பரலோக இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது
இப்போது நாம், நமது கேள்வியின் இரண்டாம் பகுதிக்குக் கடந்து
செல்கிறோம்: "ஆவியில் எளிமையுள்ளவர்களாக' இருத்தல் என்பது பரலோக இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில் நமக்கு எவ்வாறு உதவுகிறது
“இராஜ்யம்” என்ற வார்த்தையின் அடிப்படை அர்த்தத்தை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்; இது தேவனுடைய ஆளுகையைப் பற்றியதாக உள்ளது. எந்த
ஒரு மனிதரும் தம்மைத் தாமே முடிதுறக்கச் செய்யாத வரையிலும் தமது
இருதயத்தில் தேவனுக்கு முடிசூட்டத் தயாராக இருப்பதில்லை.
பின்பு, புதிய ஏற்பாட்டில் “இராஜ்யம்” என்ற வார்த்தையின் இரு முதன்மைப் பயன்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: இது சபையையும் பரலோகத்தையும் குறிக்கிறது. முதலாவது நாம், ஆவியில் எளிமையுடன்
இருத்தல் என்பது சபையின் உறுப்பினர் ஆவதற்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது எவ்வாறு என்பதை நாம் காண்போம். சபை என்பது கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட மக்கள் கூட்டமாக உள்ளது (காண்க எபேசியர் 5:23, 25), இரத்தத்தினால் மீட்கப்படுவதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றிப் பிள்ளைகளுக்கு எளிமையான "ஐந்து - விரல் பயிற்சி ஒன்று போதிக்கப்படுகிறது: நாம் கேள்விப்பட்டு, விசுவாசித்து, மனந்திரும்பி அறிக்கையிட்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும்
ஒருவர், தாம் ஆவிக்குரிய வகையில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை உணர்ந்து அறியாத வரையில் அவர் சுவிசேஷத்தைக் கேள்விப்படத் தயாராக இருப்பதில்லை (காண்க ரோமர் 10:17). ஒரு நபர், தாம் ஆவிக்குரிய வகையில் நல்ல நிலையில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் வரையில், இரட்சிப்பிற்குத் தீவிரமான விருப்பம் எதுவும் அவரிடத்தில் இராது.
பின்பு அவர் தமது சொந்த நற்தன்மைகளில் நம்பிக்கை வைத்துள்ள வரையிலும் அவர் இயேசுவை விசுவாசித்து தமது நம்பிக்கை வைத்தலை அறிக்கையிட இயலாது (காண்க யோவான் 3:16; ரோமர் 10:9, 10). மனந்திரும்புதலைப் பற்றிய விஷயம் என்ன? சுயநிறைவு கொண்டுள்ளதாக உணருகிற தனிநபர், எவற்றைக் குறித்தும் மனத்திரும்ப வேண்டியது அவசியம் என்று நினைக்கச் சாத்தியம் இல்லை.
மற்றும் ஒருவர், தாம் இரட்சிக்கப்படுவதற்குத் தே னுடைய இரக்கத்தின் மீது தாம் முற்றிலுமாகச் சார்ந்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள இயலாத வரையிலும், அவர் ஞானஸ்நானம் பெறத் தயாராக இருப்பதில்லை (நடபடிகள் 2:38, 41, 47). மற்றவர்கள் பெற்றுக்கொள்கின்றனர் என்பதற்காக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் தனிநபர், அல்லது மற்றவர்கள் அவரிடமிருந்து அதை எதிர்பார்க்கிறார்கள் என்பதால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும் தனி நபர் வசனரீதியாக ஞானஸ்நானம் பெற்றவராக இருப்பதில்லை.
சில நல்ல மனிதர்களைப் பற்றி, "அவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டியது மாத்திரம் எஞ்சியிருக்கிறது” என்று அவ்வப்போது கூறப்படுவதுண்டு. இல்லை, அவர் தமது நற்தன்மை யாவும் கொண்டிருந்தாலும், தாம் ஆவிக்குரிய வகையில் ஒன்றுமில்லை என்றும் தேவனுக்கு அளிக்கத் தம்மிடத்தில் ஒன்றுமில்லை என்றும் ஆழ்ந்தறிவுள்ள கருத்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். அப்போது தான், அப்போது மாத்திரமே, அவர் தாழ்மையான கீழ்ப்படிதலில் கர்த்தரிடத்திற்கு வரத் தயாராக இருக்கிறார்
கடைசியாக நாம், புதிய ஏற்பாட்டில் "இராஜ்யம்” என்பதன் இரண்டாவது முதன்மை அர்த்தம் என்ன என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்போமாக: பரலோகம். இயேசு, “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு. அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” என்று கூறினார் (வெளிப்படுத்தின விசேஷம் 2:10இ). எவரொருவரும் ஆவியில் எளிமையுள்ளவர்கள் ஆகும் வரையிலும் விசுவாசம் நிறைந்த கிறிஸ்தவ வாழ்வை வாழத்தயாராக இருப்பதில்லை.
லவோதிக்கேயாவில் இருந்த சபையை இயேசு ஆய்வுசெய்த போது, அவர்களுக்கு அவர், “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பாரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும் குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்” என்று கூறினார் (வெளிப்படுத்தின விசேஷம் 3:17) அவர்களுக்கு உண்மையில் எல்லாம் தேவைப்பட்டிருந்த நிலையில், அவர்கள்
தங்களுக்கு எதுவும் தேவையில்லை என்று நினைத்தனர்