துருத்தியில் கண்ணீர்

0



துருத்தியில் கண்ணீர் (மத்தேயு 5:4)

மத்தேயு 5ம் அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு பாக்கியத்திலும், "blessed என்ற வார்த்தை காணப்படுகிறது, இது “மகிழ்ச்சியானவர்கள்” என்ற வார்த்தையை இந்த உலகம் விளக்குகிறபடி நாம் விளக்கப்படுத்தாத வரையிலும், “மகிழ்ச்சியானவர்கள்" என்று மொழிபெயர்க்கப்படமுடியும். (தமிழ் வேதாகமத்தில் இது "பாக்கியவான்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) மத்தேயு 5:3-12ன் எட்டுக் கூற்றுக்களிலும், புறம்பான சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சிக்குத் தேவன் பரிந்துரைக்கும் குறிப்பை நாம் கொண்டிருக்கிறோம். "கூடுதல் மகிழ்ச்சி” என்பது இதற்கான எனது சொற்றொடராக உள்ளது

ஒவ்வொரு பாக்கியமும், இந்த உலகம் நம்பும் விஷயத்தின் எதிர்ப்பொருளாக உள்ளது என்று நாம் குறிப்பிட்டு இருக்கிறோம். பவுல், “தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது” என்று எழுதினார் (1 கொரிந்தியர் 1:25). உலகசிந்தை கொண்டவர்களுக்குப் பைத்தியமாகக் காணப்படும் - பாக்கியங்கள் போன்ற - விஷயம், உண்மையில் தெய்வீக ஞானத்தின் சுருக்கப் பொழிப்புரையாக உள்ளது. பாக்கியங்களையும் அதில் அடங்கியுள்ள யாவற்றையும் தழுவிக்கொண்டவர்கள், கூடுதல் மகிழ்ச்சி விளைவைக் கொண்டுள்ளதாகச் சாட்சியம் கூற முடியும்

இந்தப் பாடத்தில் நாம், இரண்டாவது பாக்கியத்தைப் பற்றிப் படிப்போம்: துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள் (மத்தேயு 5:4), இந்த பாக்கியம், மனித ஞானத்திற்கு எதிராகச் செல்கிறது என்பது தெளிவு. உண்மையில் நாம், "பாக்கியவான்கள்” என்ற வார்த்தைக்குப் பதிலாக "மகிழ்ச்சியானவர்கள்” என்ற வார்த்தையை இங்கு இடுவோம் என்றால், அது முரண்பாடு கொண்டதாகத் தோன்றுகிறது: "துயரப்படுகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள்” மனித ஞானமானது, துயரத்திலும் கவலையிலும் கொஞ்சம் மதிப்பையே காணுகிறது. வெகு சிலரே அழுவதை விரும்புகின்றனர். நம்மைச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கு நாம் கட்டணம் செலுத்துகிறோம். எல்லா வீலர் வில்காக்ஸ் என்பவரால் விளக்கப்படுத்தப்பட்ட பின்வரும் உணர்வுக்கருத்தைப் பெரும்பான்மையானவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்:


             ஆவியில் கைவிடபடுதல் 


சிரியுங்கள், அப்போது உலகம் உங்களுடன் சிரிக்கும்; அழுங்கள், அப்போது நீங்கள் தனிமையில் அழுவீர்கள் ஏனெனில் கவலை மிகுந்த பழமையான இந்த பூமி தனது களிப்பைக் கடன் பெறவேண்டும்,

ஆனால் அது தனக்குச் சொந்தமான துன்பங்களைப் போதுமான அளவில் கொண்டுள்ளது

இருந்தபோதிலும் இயேசு, "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என்று கூறினார். "துயரப்படுகிறவர்கள்” என்பது, "துயரமடைய, புலம்ப என்று அர்த்தப்படுகிற (pentheo) என்ற வார்த்தையில் இருந்து வந்துள்ளது. இது “பழங்காலக் கிரேக்க மொழியில், மிகத்தீவிரமான துக்கத்தின் வகையைச் சித்தரிப்பதில் புலம்புதலுக்கான மிகவும் செயல்தாக்கம் கொண்ட வார்த்தைகளில் ஒன்றாக” உள்ளது. இது, “மரணம் அடைந்தவர்களுக்காகத் துக்கித்தலுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்" பட்டது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் (the LXX), யோசேப்பு மரித்துப் போனதாக யாக்கோபு நினைத்தபோது, அவர் புலம்பியதை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டது (காண்க ஆதியாகமம் 37:34). இது தாவீதின் மகன் அப்சலோம் இறந்தபோது, தாவீதின் புலம்பலை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டது (காண்க 2 சாமுவேல் 19:2)."

வலிவார்ந்த துயரப்படுதல் என்பது உண்மையான மகிழ்ச்சியுடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டிருக்க முடியும்? இந்தப் பாடம் முடிவதற்குள் நீங்கள் இயேசுவின் கூற்றில் உள்ள பரத்துக்கோற்ற ஞானத்தையும், இதில் அடங்கியுள்ள கொள்கைகள் உங்கள் சொந்த மகிழ்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்றும் நீங்கள் காண்பீர்கள் என்று நான் நம்புகிறேன்


          பூரண சர்குணராயிருங்கள்


துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் ...”

ஆறுதல் அடையாத துயரப்படுகிறவர்கள்

முந்திய பாடத்தில் போன்று நாம், எதிர்மறையைக் கொண்டு தொடங்குவோமாக: இயேசு எதைக் கூறவில்லை? முதலாவதாக இயேசு, மக்கள் அழுவதன் காரணமாக மாத்திரம் அவர்கள்மீது ஆசீர்வாதம் உரைக்கப்படும் என்று கூற நோக்கங் கொண்டிருக்கவில்லை. அழுதல் என்ற செயலில் சிறப்பான ஒழுக்கநெறி எதுவும் இல்லை. தேவன், தமது மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக வேதாகமம் அடிக்கடி வலியுறுத்துகிறது. நீதிமொழிகள் 17:22ல் நாம், "மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்” என்று வாசிக்கிறோம். பவுல், "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” என்று எழுதினார் (பிலிப்பியர் 4:4)

மேலும் வேதாகமம், துயரப்படுகிற சிலர் ஆறுதல் பெறமாட்டார்கள் என்று திட்டவட்டமாகப் போதிக்கிறது. எடுத்துக்காட்டாக, “லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” என்று பவுல் கூறினார் (2 கொரிந்தியர் 7:10ஆ). இது ஒருவரின் செயல்பாடுகளின் விளைவின் காரணமாக ஏற்பட்ட துக்கமாகும், இதில் செயலுக்கான துக்கம் சிறிதளவோ அல்லது துக்கமற்ற நிலையோ இருக்கிறது இந்தக் கருத்து பின்வரும் விவரிப்பைக் கொண்டு விளக்கப்படலாம்: ஒரு மாணவன் தான் படிக்காததால் மோசமான மதிப்பெண்களைப் பெற்றபோது அவன் கவலையாக இருக்கிறான். சோம்பேறியாக இருந்து அதனால் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் "துயரப்படுகையில்” அவர்கள் பாக்கியவான்கள் மற்றும் அவர்கள் ஆறுதல் அடைவார்கள் என்று இயேசு வாக்குத்தத்தம் செய்யவில்லை

பாவம் குறித்து லௌகிக துக்கத்திற்கான உதாரணங்கள் ஏராளமாக உள்ளன. தனது தலைவலி மற்றும் தனது வேலை மற்றும் குடும்பத்தை இழத்தல் பற்றித் துயரம் கொண்ட குடிகாரர் ஒருவர் தனது வாழ்வு நடையை அப்போதும் மாற்றாது இருத்தல் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், அதன்பின்பு “மனஸ்தாபப்பட்டான்” (மத்தேயு ஆனால் அவன் மனந்திரும்பி கர்த்தரிடம் திரும்பி வரவில்லை . அவனைப் பற்றி இயேசு, "அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும்” என்று கூறினார் (26:24). இரண்டாம் வருகையில் மனம்திரும்பாதவர்கள், பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி நீங்கள் எங்கள் மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று கதறுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 6:16). இருப்பினும், கர்த்தர் மறுபடியும் வரும்போது, ஆறுதலை தேடுதல் என்பது மிகவும் தாமதமான செயலாக இருக்கும்

புதிய ஏற்பாட்டில் தேவனுடைய வெளிப்படுத்துதலை ஏற்றுக்கொள்ள மனவிருப்பம் இல்லாத, மார்க்கரீதியான துயரப்படுபவர்கள் என்போர் துயரப்படுபவர்களில் இன்னொரு வகையினராக உள்ளனர். "அழுகைச் சுவர் என்று அறியப்பட்டுள்ள, எருசலேம் நகரின் மேற்கு மதில் சுவர் அருகில் கூடுகிற யூதர்கள் இதற்கான உதாரணமாக உள்ளனர். விசேஷித்த நிகழ்ச்சிகளின்போது பின்வரும் பதில்பாடல் அங்கு உச்சரிக்கப்படும்

நடத்துனர்: கைவிடப்பட்டிருக்கும் அரண்மனைக்காக; பதிலுரை: நாங்கள் தனிமையில் அமர்ந்து புலம்புகிறோம்

நடத்துனர்: அழிக்கப்பட்ட அரண்மனைக்காக: பதிலுரை: நாங்கள் தனிமையில் அமர்ந்து புலம்புகிறோம்

நடத்துனர்: இடித்து நொறுக்கப்பட்ட மதில்களுக்காக: நடத்துனர்: விலகிப்போன எங்கள் மாட்சிமைக்காக நடத்துனர்: மரித்துக் கிடக்கும் எங்கள் மாபெரும் மனிதர்களுக்காக

பதிலுரை: நாங்கள் தனிமையில் அமர்ந்து புலம்புகிறோம்

பதிலுரை: நாங்கள் தனிமையில் அமர்ந்து புலம்புகிறோம்

பதிலுரை: நாங்கள் தனிமையில் அமர்ந்து புலம்புகிறோம்

நடத்துனர்: எரிக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களுக்காக பதிலுரை: நாங்கள் தனிமையில் அமர்ந்து புலம்புகிறோம்.”

யூதர்கள், இஸ்ரவேலின் இழந்து போகப்பட்ட மகிமையின் காரணமாக அழுகின்றனர், அவர்கள் மேசியாவும் அவரது இராஜ்யமும் வரவேண்டும் என்று ஜெபிக்கின்றனர், ஆனால் அவர்கள் இயேசுவை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்று ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அவர்களின் புலம்புதல் ஆசீர்வதிக்கப்படாது.


                 பாராட்டை நாடுதல் 


தேவனுடைய வழியை ஏற்றுக்கொள்ளாமலேயே துக்கப்படுபவர்கள் பற்றி, நான் எனது சிறுவயதுக் காலத்தில் இருந்த "துயரப்படுபவர்களின் நீண்ட இருக்கை”10 பற்றியும், நவீன காலத்தில் அதற்கு இணையாக உள்ள “பாவியின் ஜெபம்” பற்றியும் நினைக்கிறேன். அந்தப் பழைய நீண்ட இருக்கையில் மாபெரும் புலம்புதல்கள் நடைபெற்றன, மற்றும் திரளான கண்ணீர் சிந்தப்பட்டது; ஆனால் அது, நாம் கர்த்தரிடத்தில் வருவதற்கான வழி என்று அவர் கூறியதல்ல.

பவுல் தமது பாவங்கள் நிமித்தம் துயரப்பட்டு ஜெபித்துக் கொண்டிருந்தபோது, அவரிடத்தில் அனனியா "இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு” என்று கூறினார் (நடபடிகள் 22:16).

ஆசீர்வதிக்கப்படாத வகையில் உள்ள கடைசி வகையினராக உள்ள புலம்புபவர்களைப் பற்றி நாம் ஆழ்ந்து சிந்திப்போம், இவர்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருக்கின்றனர்: தங்கள் பாவங்களினிமித்தம் புலம்பி, ஆனால் அவற்றைக் குறித்து ஒன்றும் செய்யாது இருப்பவர்கள்

செயின்ட் லூயிஸ் என்ற இடத்திற்குத் தெற்குப்பகுதியில், வழிப்பறிக் கொள்ளைக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு வாதநோயினால் பாதிக்கப்பட்டார், அவர் திடீரென்று மிகவும் பயபக்தி உடையவரானார் அவர் ஜெபித்து வேதம் வாசித்து பிரசங்கியார்களை அழைத்தார். (அவர் தேவனுடன் சமாதானமாக வேண்டும் என்று விரும்பினால், விலையுயர்ந்த ஒரு வைரம் சபைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று அவரிடத்தில் ஒரு பிரசங்கியார் கூறினார்; அதைப் பிரசங்கியார் தம்முடன் எடுத்துச் சென்றார்.) அந்த மனிதர் சுகமானார், மற்றும் விரைவிலேயே அவர் தமது சட்டவிரோதமான தொழிலைத் திரும்பவும் தொடங்கினார்

உண்மையற்ற வகையில் துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கிடைக்காது. இயேசு, "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை" என்று கூறினார் (மத்தேயு 7:21), மீண்டுமாக இயேசு, “குமாரனுக்குத் கீழ்ப்படியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன் மேல் நிலைநிற்கும் என்று கூறினார் (யோவான் 3:36ஆ: NASB).

ஆறுதல் அடையும் துயரப்படுகிறவர்கள்

நாம் நேர்மறைக்குக் கடந்து செல்வோமாக. ஆறுதல் அடையும் துயரப்படுபவர்கள் யார்? இதை இவ்வசனப்பகுதி கூறுவதில்லை, ஆனால் ஆவிக்குரிய துயரம், ஆவிக்குரிய அக்கறை ஆகியவற்றை இயேசு தமது சிந்தையில் கொண்டிருந்தார் என்று சந்தர்ப்பப்பொருள் நமக்குச் சுட்டிக்காண்பிக்கிறது. 3ம் வசனத்தின் ஆவிக்குரிய வகையில் கைவிடப்பட்ட நிலையின் மீதான துயரப்படுதலே மத்தேயு 5:4ன் முதன்மைக் கவனக்குவிப்பாக உள்ளது

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்க நடத்துனரான ஜான் கிறிஸோஸ்தம் என்பவர், தமது எழுத்துக்களில் ஒன்றில் தங்கச் சங்கிலி ஒன்றில் உள்ள இணைவுகளைப் போன்று" ஒன்று மற்றொன்றுடன் அடுத்தடுத்து வரும் பாக்கியங்களைக் கொண்டு, இயேசு மலைப்பிரசங்கத்தைத் தொடங்கினார் என்று கூறுகிறார்... இயேசு பாக்கியங்களை ஏனோதானோ என்று வகைப்படுத்தவில்லை; அவற்றை அவர் தெய்வீகரீதியில் தர்க்கவகையிலான வரிசையில் அமைத்தார் அவர் ஒவ்வொன்றும் அதற்கு முன்னதாக உள்ளதன் மீது கட்டி எழுப்பப்படுகிறது.

ஜேம்ஸ் டோல் என்பவர் மத்தேயு 5:4ன் துயரப்படுதலை, "ஆவியில் எளிமையுள்ளவர்களின் உணர்வுப் பெருக்கத்தின் வெளிப்பாடு” என்று அழைத்தார். இந்த உணர்வுப் பெருக்கத்தின் வெளிப்பாட்டிற்கு நாம், ரோமர் 7ல் பவுலின் வார்த்தைகளின் உதாரணம் ஒன்றைக் கொண்டிருக்கிறோம்: நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார் (வசனம் 24). இவ்வகையான துயரத்திற்கும் கொரிந்தியர் 7ல் உள்ள "தேவனுக்கேற்ற துக்கம்” என்பதற்கும் இடையில் உறவு உள்ளது. KJV மற்றும் தமிழ் வேதாகமத்தில், “தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது” என்றுள்ளது (வசனம் 10), NASB வேதாகமத்தில், “தேவனுடைய சித்தத்திற்கேற்ற துக்கம் (பிற்பாடு) மனம் வருத்தம் கொள்ளத் தேவையற்ற வகையிலான மனம்திரும்புதலை உண்டாக்கி இரட்சிப்புக்கு வழிநடத்துகிறது ...” என்றுள்ளது.

நமது சொந்தப் பாவங்களைப் பற்றித் துயரப்படுதல் என்பது, நாம் பொதுவாகப் பாவத்தைக் குறித்துத் துயரப்படுவதற்கும் காரணமாக வேண்டும் உலகத்தில் பாவத்தின் செயல்விளைவின் நிமித்தம் துயரப்படுதல், மற்றவர்களின் வாழ்வில் அவர்களை நரகத்திற்கு அனுப்பும் வகையிலான பாவங்கள் இருத்தல் குறித்துத் துயரப்படுதல். “நீதிமானாகிய லோத்து” “அக்கிரமக்காரருடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டார்” (2 பேதுரு 2:7, 8). இயேசு, எருசலேம் நகரத்தைப் பார்த்து “எருசலேமே, ...! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” என்று கூறினார் (லூக்கா 13:34). எதிர்த்து நின்ற நகரத்தை அவர் கண்ணேறிட்டுப் பார்க்கையில், அவர் "அதற்காகக் கண்ணீ ர் விட்டழுதார்” (19:41). பவுல் இழந்துபோகப்பட்டிருந்த தமது யூத சகோதரர்களைப் பற்றி நினைத்தபோது, எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” என்று கூறினார் (ரோமர் 9:1, 3). இழந்துபோகப் பட்டுள்ளவர்களுக்காக நாம் இவ்வகையிலான வலிவார்ந்த துயரம் கொண்டிருக்கும் போது, அது நாம் சுவிசேஷத்தைக் கொண்டு அவர்களை அடையக் காரணமாகும் (காண்க ரோமர் 1:14, 16).

சமவெளிப்பிரசங்கத்தில் இயேசு, இந்த பாக்கியத்தின் நேர்மறையை முதலில் உரைத்தார்: “இப்போழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்” (லூக்கா 6:21ஆ). பின்பு அவர் எதிர்மறையைக் கொடுத்தார்: “இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்” (லூக்கா 6:25ஆ). 25ம் வசனத்தில் இயேசு, பொதுவாக நகைத்தல் பற்றிப் பேசவில்லை ஆனால் நம்மைப் பரவசப்படுத்துகிற, விசேஷமாக பாவம் நிறைந்ததாக உள்ள நகைத்தலைப் பற்றிப் பேசினார். பாவத்தைப் பற்றி நகைப்பிற்கிடமானது எதுவும் இல்லை !

அவர்கள் ஆறுதலடைவார்கள்

வெளிப்படையான முரண்பாடு ஆறுதல் அடைதலின் ஆசீர்வாதத்தைப் பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்கும் முன்,

இந்த பாக்கியத்தின் வெளிப்படையான முரண்பாட்டை எடுத்துரைக்கச் சற்று நேரத்தை எடுத்துக் கொள்வோம்: “"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் (மகிழ்ச்சியுள்ளவர்கள்) அவர்கள் ஆறுதலடைவார்கள்.” இதை முதல் முதலாகக் கேள்விப்படுகிறபோது, இது நமக்கு வினோதமானதாக ஒலிக்கிறது, ஆனால் மகிழ்ச்சிக்கான எந்த ஒரு சூத்திரமும், மகிழ்ச்சியற்ற நாட்கள் இருக்கும் என்ற உண்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்வு என்பது எப்போதுமே பசுமையான புல்வெளிகளில் (வளமான நிலையில்) நம்மை நடத்துவதில்லை; நாம் அடிக்கடி பள்ளத்தாக்குகளையும் நிழல்களையும் எதிர்கொள்கிறோம். இந்த சத்தியத்தை உணர்ந்தறியத் தவறுகிறபோது, மகிழ்ச்சி பற்றிய எந்தக் கலந்துரையாடலும் உண்மைக்கு மாறானதாக உள்ளது, எனவே அது கொஞ்சமே மதிப்புடையதாக உள்ளது

ஆவிக்குரிய வகையிலான துக்கம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றிற்கு இடையில் இருக்கக் கூடிய உறவு என்ன? ஒருசில முதன்மைக் கருத்துரைகள் இங்கு முறையானவைகளாக உள்ளன இந்த எண்ணப்போக்கு தன்னிலேயே மகிழ்ச்சியைப் பங்களிக்க முடியும். பாக்கியங்களின் வளர்நிலை இயல்பைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நாம் நமது ஆவிக்குரிய வகையிலான கைவிடப்பட்ட நிலையை உணர்ந்தறியும் போது (முதல் பாக்கியம்), நமது ஆவிக்குரிய தேவைகளின் மீது துயரப்படுதல் (இரண்டாவது பாக்கியம்) என்பது இயல்பான விளைவாகிறது. முதல் பாக்கியம் நாம் நம்மீதல்ல ஆனால் தேவன் மீது சார்ந்திருக்க வேண்டும் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது, அதே வேளையில் இரண்டாவது பாக்கியம் தேவனை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடிவைப்பாக உள்ளது. பாவங்களுக்காகத் துயரப்படுதல் என்பது கீழ்ப்படிதலுக்கு வழிநடத்தும் மனம் வருந்துகிற இருதயத்தையும் மன்னிப்பையும் உண்டாக்குகிறது. 2 கொரிந்தியர் 7:10ஐ மீண்டும் கவனியுங்கள்: "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது (வசனம் 10அ; என்னால் வலியுறுத்தப்படுகிறது). கர்த்தரிடத்தில் நாம் எவ்வளவுக்கு நெருக்கமாகிறோமோ, அவ்வளவுக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

(2) ஆவிக்குரிய வகையில் துயரப்படுதலுக்கு, மதிப்புகள் பற்றிய தகுதியான உணர்வறிவு தேவைப்படுகிறது. நமது முன்னுரிமைகள் சரியானவைகளாக இருந்தால், உண்மையில் முக்கியமற்ற விஷயங்கள் பற்றி நாம் அவ்வளவு மகிழ்ச்சியற்று இருக்க மாட்டோம். (3) இந்த பாக்கியத்தில் வலியுறுத்தப்படும் விஷயம் உண்மையானது மற்றும் என்றென்றைக்குமான மகிழ்ச்சி என்பது பாக்கியத்தின் வாக்குத்தத்தத்தில் இருந்து வருகிறது என்பதைச் சிந்தையில் காத்துக்கொள்ளுங்கள்: தேவன் நமக்கு ஆறுதலை வாக்குத்தத்தம் செய்திருப்பதால், நாம் துயரப்படுகிறபோது நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

நமது தேவன் ஆறுதலின் தேவனாக இருக்கிறார் என்று வேதாகமம் போதிக்கிறது: "நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும் இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” (2 கொரிந்தியர் 1:3, 4ஆ; என்னால் வலியுறுத்தப்படுகிறது). 5 ஏசாயாவின் புத்தகத்தில், மேசியா மற்றவர்களை ஆறுதல்படுத்துகிறவராக இருப்பார் என்று நாம் வாசிக்கிறோம்

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார் சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; ...

சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; (ஏசாயா 61:1-3; காண்க லூக்கா 4:16-21)

சங்கீதம் 56:8ல் நாம், நமது பாடத்தின் தலைப்பை ஏவுகிற தனிச்சிறப்பான சொற்றொடர் ஒன்றைக் காணுகிறோம். தேவனிடத்தில் தாவீது, "என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்” என்று கூறினார். புட்டிகள் அல்லது துருத்திகள் என்பவை தாவீதின் நாட்களில் சாதாரணமானவையாக இருக்கவில்லை. அவைகள் மதிப்பு மிகுந்தவையாக இருந்தன, எனவே அவற்றில் - விலையுயர்ந்த வாசனைத் தைலங்கள், அரிய வகையிலான திராட்சரசம் அல்லது வெளிநாட்டுத் தைலம் போன்ற - மதிப்பு மிக்க பொருட்கள் மாத்திரமே வைக்கப்பட்டன. தாவீது தமது கண்ணீரை, தேவன் தமது துருத்தியில் வைக்குமளவுக்கு முக்கியமானதாகக் கருதும்படி, அதை ஒருக்காலும் மறந்துவிடாதிருக்கும்படி கேட்டுக்கொண்டார் (ரோமாபுரியை ஆண்ட) இராயர் சிலவேளைகளில் தங்கள் கண்ணீரைப் பிடித்து அதைத் துருத்திகளில் வைப்பார்கள் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்தத் துருத்திகள் பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். அவைகள், ரோமக்குடிமக்களைப் பதித்த கவலைக்குரிய நிகழ்ச்சிகளைப் பற்றி ரோமப்பேரரசர்களின் பரிதவிப்புக்குச் சாட்சியங்களாக நிற்கும் நீங்களும் நானும், நமது கண்ணீர்கள் தேவனுக்கு விலையேறப் பெற்றவையாக உள்ளன என்று உறுதியாகக் கூறமுடியும், அவ்வாறே அவை அவரது நினைவு என்ற துருத்தியில்” துளித்துளியாகக் சேர்த்து வைக்கப்படுகின்றன. அவர் அவற்றை மறக்க மாட்டார். அவர் நம்மைப் பற்றிக் கவலையுள்ளவராக இருக்கிறார். அவர் நம்மை ஆறுதல்படுத்துவார்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆறுதல்

அது நம்மை, "வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆறுதல் என்ன என்று கேட்கும்படி வழிநடத்துகிறது. “ஆறுதல் அடைவார்கள்” என்பது, “ஒருவரைத் தம் அருகில் அழைத்தல்" என்பதைக் குறிக்கிற (parakaleo என்ற) வார்த்தையில் இருந்து வருகிறது (para ("உடன் பக்கமாக”) கூட்டல் kaleo ("அழைக்க)

இவ்வார்த்தை, புத்திகூற, அறிவுறுத்த அல்லது ஊக்குவிக்க என்று அர்த்தப்பட முடியும் (காண்க லூக்கா 3:18; 1 கொரிந்தியர் 1:10; எபிரெயர் 10:25). நமது வேதவசனப் பகுதியில் இது, நம்மை ஆறுதல்படுத்துவதற்காகக் கர்த்தர் நமது பக்கமாக வருதலை” குறிக்கிறது. இந்தப் பாட வரிசையின் தொடக்கப் பாடத்தில், பாக்கியங்களில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும், நிகழ்கால வாழ்வில் ஒருபகுதி நிறைவேற்றமும், எதிர்காலத்தில் பரலோகத்தில் நிறைவான நிறைவேற்றமும் கொண்டுள்ளது என்று நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் என்ற இயேசுவின் வாக்குத்தத்தம் குறித்து அதுவே உண்மையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் (1) இந்த வாழ்வில் ஆறுதல். இந்த வாழ்வில் ஆறுதல் பற்றி, ஆவிக்குரிய

வகையில் துயரப்படுகிறவர், ஆறுதலுக்குக் குறைந்தபட்சம் இரண்டு ஆதாரமூலங்களைக் கொண்டுள்ளார் முதலாவது தேவனுடைய வசனத்தில் காணப்படுகிற வாக்குத்தத்தங்களில் இருந்து வருகிற ஆறுதல் எடுத்துக்காட்டாக, ஒருவர் தமது ஆவிக்குரிய நிலை பற்றி வருத்தப்படுதல் மனந்திரும்புதலை விளைவிக்கும் என்றும், அது கர்த்தருக்குக் கீழ்ப்படிதலை விளைவிக்கும், மற்றும் அது கடந்தகாலப் பாவங்களில் இருந்து மன்னிக்கப்பட்டு இருத்தலை விளைவிக்கும் என்று ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன் கிறிஸ்தவரல்லாதவர்களுக்குப் பேதுரு, "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்று கூறினார் (நடபடிகள் 2:38; என்னால் வலியுறுத்தப்படுகிறது) பாவம் செய்கிற கிறிஸ்தவரைப் பொறுத்தமட்டில், யோவான் "அவர் ஒளியிலிக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” என்று எழுதினார் (1 யோவான் 1:7; என்னால் வலியுறுத்தப்படுகிறது). நமது பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டன என்று அறிவதில் மாபெரும் ஆறுதல் உள்ளது. எத்தி யோப்பிய மந்திரி ஞானஸ்நானம் பெற்ற பின்பு (நடபடிகள் 8:26-39), அவர் “சந்தோஷத்தோடே தன் வழியே போனார்” (வசனம் 39)

மேலும் நான், மத்தேயு 5:4ன் துயரப்படுதல் என்பது பொதுவாகப் பாவம் மற்றும் அதன் விளைவுகள் குறித்துக் துயரப்படுதலை உள்ளடக்குகிறது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளேன். அவ்வகையான துயரப்படுதல் நம்மைச் செயல்படும்படி தூண்டும். விஷயம் அப்படி இருக்கும்போது, நாம் மீண்டும் வசனத்தில் இருந்து ஆறுதலின் உறுதிப்பாட்டைப் பெறுகிறோம். சங்கீதம் 126ல் நாம், "கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்" என்று வாசிக்கிறோம் (வசனங்கள் 5, 6). இவ்வசனப்பகுதி, இஸ்ரவேல் நாட்டில் மீளக்கட்டுவிக்கப் பட்டவர்களைத் தேவன் ஆசீர்வதிப்பார் என்பதில் எழுத்தாளர் கொண்டுள்ள நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் இது இன்றைய நாட்களில், நம்மில் வசனமாகிய விதையை விதைப்பவர்களைப் பற்றியும் நமக்கு நினைவூட்டுகிறது. விசுவாசம் நிறைந்த ஆத்தும ஆதாயம் செய்பவர்கள் உணர்வுப்பூர்வமான பெற்றோர்கள், வேதாகம வகுப்பு ஆசிரியர்கள், சபை

நடத்துனர்கள் மற்றும் போதிக்கும் பிறர் ஆகியோரைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள், தாங்கள் (சுவிசேஷத்தைக் கொண்டு) அடைய முயற்சி செய்பவர்களுக்கு விதையைக் கண்ணீரைக் கொண்டு தண்ணீர் வார்த்தல் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்று புரிந்து கொண்டுள்ளனர். நீங்கள் இவர்களில் ஒருவராக இருந்து உங்கள் பணிப்பொறுப்பில் உண்மையுடன் நிலைத்திருந்தால், நிறைவாகத் தேவன் விளைச்சலைக் கொடுப்பார் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 3:6). நீங்கள் "சந்தோஷ சத்தத்துடன் அறுவடை செய்வீர்கள்”; நீங்கள் அறுவடையை உங்களுடன் கொண்டு வரும்போது, "மீண்டும் சந்தோஷத்தின் சத்தத்துடன் வருவீர்கள்

இந்த வாழ்வில் ஆறுதல் என்பது பற்றி தேவனுடைய அருளிரக்கமுள்ள பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு என்பது ஆவிக்குரிய வகையில் துயரப்படுகிறவர்களுக்குப் பலத்தின் இன்னொரு ஆதாரமூலமாக உள்ளது." பவுல், “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” என்று எழுதினார் (ரோமர் 8:28). எபிரெயர் 13ல், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை , உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே” என்று நாம் வாசிக்கிறோம் (வசனம் 5). இயேசு, "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று கூறினார் (மத்தேயு 28:20).

(2) இனி வரும் வாழ்வில் ஆறுதல். மீண்டுமாக நான், இனிவரும் வாழ்விலேயே ஆறுதலின் வாக்குத்தத்தத்தினுடைய முற்றான மற்றும் நிறைவான நிறைவேற்றம் வரும் என்று வலியுறுத்த விரும்புகிறேன் நீண்ட காலத்திற்கு முன்னர் தாவீது, “சாயங்காலத்தில் அழுகை தங்கும் விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" என்று எழுதினார் (சங்கீதம் 30:5). என்னிடத்தில் உள்ள KJV வேதாகமப் பிரதியில், “களிப்பு" என்பதற்குப் பின்வரும் குறிப்பு உள்ளது: “எபிரெயர்களின்) பாடுதல்.” அழுகை என்பது ஒரு நிரந்தரமான பார்வையாளர் அல்ல; அது ஒரு இரவு இங்கிருந்துவிட்டு, பின்பு சென்று விடுகிறது, மற்றும் பாடுதலானது தங்கியிருக்கும்படி வருகிறது இந்த வாழ்வில், அழுகை, பின்பு சந்தோஷம், பின்பு அழுகை, பின்பு பாடுதல் என்று தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும். பரலோகத்தில் மாத்திரமே அந்த சந்தோஷமானது நமது இருதயங்களில் நிரந்தரமாகக் குடி கொள்ளும்.

லூக்கா 16ல் நாம், ஐசுவரியவான் மற்றும் லாசரு ஆகியோரின் வரலாற்றைக் காணுகிறோம். லாசரு இந்த வாழ்வில் சிறிதளவே ஆறுதல் பெற்றிருந்தான் (வசனங்கள் 20, 21, 25); ஆனால் அவன் மரித்தபோது, தூதர்களால் ஆபிரகாமின் மடிக்கு எடுத்துச் செல்லப்பட்டான் (வசனம் 22), அப்போது அவனைக் குறித்து ஆபிரகாம், “இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான்” என்று கூற முடிந்தது (வசனம் 25; என்னால் வலியுறுத்தப்படுகிறது). பரலோகத்தில் தேவன் கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அறுதலுமில்லை வருத்தமுமில்லை,.. (வெளிப்படுத்தின விசேஷம் 21:4).

முடிவுரை

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்

இந்த பாக்கியத்தின் துயரப்படுதல் என்பது, முதலாவது 3ம் வசனத்தில் சித்தரிக்கப்பட்டதான, தனிப்பட்ட விதத்தில் ஆவிக்குரிய வகையில் கைவிடப்பட்டிருத்தலைக் குறித்ததாகவும், இரண்டாவது, மனிதகுலத்தின் மீது பொதுவாகப் பாவம் மற்றும் அதன் விளைவு பற்றியதாகவும் உள்ளது ஆவிக்குரிய வகையிலான இந்தத் துயரப்படுதலுக்கு நாம், இந்த வாழ்வில் ஆறுதல் அடைவோம்; ஆனால் விசேஷமாக இனிவரும் வாழ்வில் ஆறுதல் நமக்கு உண்டு என்று வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டுள்ளது

பாவம் மற்றும் அதன் விளைவு பற்றித் தேவன் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். நீங்களும் நானும் கவலைப்படுகிறோமா இல்லையா என்பதே கேள்வியாக உள்ளது. எபேசியர் 4:19ல் நாம், “உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிற" தால் சுரணையற்றுப் போயிருப்பவர்களைப் பற்றி வாசிக்கிறோம். அவர்களைப் பற்றி KJV வேதாகமம், கடந்த கால உணர்வுகளினால் அவர்கள் அதிகம் காமவெறிக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துள்ளனர்" என்று கூறுகிறது. என்ன ஒரு பரிதாபம்! நீங்கள் உங்கள் ஆவிக்குரிய தேவைகளைப் பொறுத்த மட்டில், “கடந்தகால உணர்வை கொண்டு, சுரணையற்றுப் போக உங்களை அனுமதிக்காதீர்கள் என்று நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தேவன் அக்கறை கொள்கிறார் நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்களா? நீங்கள் உங்கள் ஆவிக்குரிய தேவைகள் குறித்துப் புலம்பியிருந்தீர்கள் என்றால், நீங்கள் கர்த்தரிடம் வருவதற்கு இதுவே ஏற்ற வேளையாக உள்ளது.








Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*