பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் யார், நானா?

0



 பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் யார், நானா? 


(மத்தேயு 5:43-48)

மத்தேயு 5:17-20ல் இயேசு, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவே தாம் வந்ததாகக் கூறினார். மற்ற விஷயங்களுக்கு மத்தியில் இது, அவர் நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை நிறைவேற்ற வந்தார், தேவன் தமது பிள்ளைகள் எவ்வகைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று காண்பிக்க வந்தார் என்று அர்த்தப்படுத்தியது. பின்பு இயேசு, தமது சிந்தையில் கொண்டிருந்தது என்ன என்பதற்குப் பல விவரிப்புகளைக் கொடுத்தார் அந்த உதாரணங்களில் இயேசுவினால் அமைக்கப்பட்ட தர அளவையானது, உலகத்தின் தர அளவைக்கு முற்றிலும் நேர்மாறானதாக நிலைத்துள்ளது. அது பரிசேயர் மற்றும் சதுசேயர் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட தர அளவையைக் காட்டிலும் கூட, மிகவும் மேலானதாக இருந்தது (காண்க வசனம் 20) இயேசுவின் கடைசி உதாரணத்தை நாம் படிப்பதற்கு முன்னர், முந்தினவற்றை மறுகண்ணோட்டம் இடுதல் நல்லதாக இருக்கலாம். எனது சகோதரர் காய் அவர்கள் அவற்றைப் பின்வருவது போன்று தொகுத்துரைத்தார்:'


         ஆவியில் கைவிடபடுதல் 


1உலகம், "சூழ்நிலைகள் மெச்சிக்கொள்ளும் என்றால், மற்றும் அந்த விஷயத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றால் கொலை செய்யுங்கள்" என்று கூறுகிறது

பரிசேயர்கள், "கொலை செய்யாதிருங்கள்” என்று கூறினர்.

இயேசு, “கோபமே கொள்ளாதிருங்கள்" என்று கூறினார் 

2. உலகம், "விபசாரம் செய்வது தவறில்லை ” என்று கூறுகிறது 

பரிசேயர்கள், "விபசாரம் செய்யாதீர்கள்" என்று கூறினர்.

இயேசு, "ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்காதீர்கள்” என்று கூறினார்

3. உலகம், "எந்தக் காரணத்திற்காவது விவாகரத்துச் செய்வது சரியே," என்று கூறுகிறது 

பரிசேயர்கள், "நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்துச் செய்யும்போது, அவளுக்குத் தள்ளுதல் சீட்டைக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினர்.

 இயேசு, “வேசித்தனம் செய்தால் ஒழிய உங்கள் மனைவியை விவாகரத்துச் செய்யாதீர்கள்” என்று கூறினார்

4. உலகம், "பொய் கூறுதல் சரியே” என்று கூறுகிறது 

பரிசேயர்கள், "நீங்கள் ஒரு ஆணையிட்டிருக்கும் போது உண்மையைத்தான் கூற வேண்டும்” என்று கூறினர்.

இயேசு, “எல்லா வேளையிலும் உண்மையைக் கூறுங்கள்” என்று கூறினார் 

5. உலகம், "நீங்கள் முதலில் அடியுங்கள் அல்லது உங்களைப் புண்படுத்தியவர்களை அதைவிட அதிகமாகப் புண்படுத்துங்கள்” என்று கூறுகிறது

 பரிசேயர்கள், "நீங்கள் பழிவாங்க முடியும், ஆனால் உங்களை எந்த அளவுக்குத் துன்பப்படுத்தினார்களோ அந்த அளவுக்கே பழிவாங்க முடியும்” என்று கூறினர்.

இயேசு, “நீங்கள் பழிவாங்காதீர்கள்; தனிப்பட்ட வகையில் எதிர்த்துக் தாக்குதல் என்று எதுவும் இருக்கக் கூடாது” என்று கூறினார்

அது நம்மை, 43ல் இருந்து 48ம் வசனங்கள் வரையிலான பகுதிக்குக் கொண்டுவருகிறது. இவ்வசனப் பகுதியை, பின்வருமாறு தொகுத்துரைத்தார்:

6. உலகம், "உங்களுக்கு அன்பு தேவையில்லை; அன்பு என்பது பலவீனமானவர்களுக்கு உரியதாகும்" என்று கூறுகிறது 

பரிசேயர்கள், "உங்கள் அயலகத்தவர்களை அன்புகூர்ந்து, உங்கள் எதிரிகளை வெறுங்கள்” என்று கூறினார்

இயேசு, “உங்கள் விரோதிகள் மீது அன்புகூருங்கள்” என்று கூறினார்


            துருத்தியில் கண்ணீர் 



43 முதல் 48 வரையிலான வசனங்கள், முந்திய உதாரனத்திற்கு நெருங்கிய தொடர்பு கொண்டு உள்ளன. இவ்விரண்டுமே, தவறாக நடத்தப்படுதலுக்கு நாம் எவ்வாறு பதில் செயல் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியவையாக உள்ளன. 38 முதல் 42 வரையிலான வசனங்கள், நாம் செய்யக் கூடாதவை என்ன என்பதை அடிப்படையாக வலியுறுத்துகின்றன: நாம் எதிர்த்துத் தாக்கக் கூடாது. இருப்பினும் நாம், எதிர்மறையுடன் நிறுத்தத் துணியாதிருப்போமாக 43 முதல் 48 வரையிலான வசனங்கள், நாம் என்ன செய்ய வேண்டும் என்று நமக்குக் கூறுகின்றன: நம்மைத் தவறாக நடத்தியவர்களை நாம் அன்புகூர்ந்து அவர்களுக்கு உதவி செய்வதற்கான வழியொன்றைக் கண்டறிய வேண்டும். அகஸ்டீன் என்பவர், “பலர் மறுகன்னத்தைக் காட்டுவது எவ்வாறு என்று கற்றுள்ளனர், ஆனால் யாரால் அடிக்கப்பட்டார்களோ அவரை அன்புகூருவது எவ்வாறு என்பதை அறியாதிருக்கின்றனர்” என்று எழுதினார்

நமது வேதபாட வசனப் பகுதியின் முடிவில் நாம், பின்வரும் திகைக்கச் செய்யும் அறைகூவலைக் கொண்டிருக்கிறோம்: “ஆகையால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (வசனம் 48). திகைப்பின் கூட்டுப்பாடல் ஒன்றை நான் கேள்விப்படுகிறேனா? "பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்? யார், நானா?” தேவன் பூரண சற்குணராயிருப்பது போன்று நாம் எவ்வாறு பூரண சற்குணராயிருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு நாம், இப்பாடத்தை முடிப்பதற்கு முன்னர் பதில் காண நம்பிக்கையாயிருக்கிறோம்

நிபந்தனை (5:43, 44)

அவர்கள் கேள்விப்பட்டு இருந்தது என்ன? (வசனம் 43) நமது வேதபாட வசனப்பகுதி, இயேசுவினிடத்தில் இருந்து வந்த பின்வரும் வார்த்தைகளுடன் தொடங்குகிறது: "உனக்கடுத்தவனைச் சிநேகித்து உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்” (வசனம் 43). "உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக என்ற கட்டளையை நீங்கள் உணர்ந்து அறியலாம். இது லேவியராகமம் 19:18ல் இருந்து ஒரு மேற்கோளாக உள்ளது இவ்வார்த்தைகளை இயேசு, இரண்டாவது பிரதான கட்டளை என்று அழைத்தார் (மத்தேயு 22:39; காண்க வசனங்கள் 35-40).

சக யூதர்களை அன்புகூருவதற்கான அறிவுறுத்துதலே, லேவியராகமத்தில் இந்தக் கட்டளையின் உடனடி சந்தர்ப்பப் பொருளாக உள்ளது. இதற்கு முன்பு இவ்வசனம், "உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக” என்று கூறுகிறது (லேவியராகமம் 19:17அ); மற்றும் 18ம் வசனத்தின் முதல் பகுதி, “பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும் ...” என்று கூறுகிறது. இந்தக் கட்டளையை, யூதர்கள், இஸ்ரவேல் மக்களை மாத்திரம் அன்புகூர வேண்டும் என்று அர்த்தப்படுத்துவதாக யூதர்கள் எடுத்துக் கொண்டனர்.' (அதற்கு நேர்மாறாக, "அயலான்” என்ற சொற்றொடர், நாம் உதவிசெய்யக் கூடிய எவரொருவரையும் உள்ளடக்குகிறது என்பதைப் பிற்பாடு இயேசு தெளிவாக்கினார் (லூக்கா 10:29-37].)

மத்தேயு 5:43ன் இரண்டாவது பாகமான “உன் சத்துருவைப் பகைப்பாயாக என்பது பழைய ஏற்பாட்டில் காணப்படுவதில்லை. இஸ்ரவேல் மக்களின் விரோதிகளுக்குப் பயங்கரமான காரியங்களைச் செய்யும்படி தேவனை வற்புறுத்தி வேண்டிக்கொள்ளுகிற சங்கீதங்களின் அடிப்படையில் யூதர்கள் இதை நியாயப்படுத்தி இருக்கலாம் (எடுத்துக்காட்டாக, சங்கீதம் 69:22-28ஐக் காணவும்). இஸ்ரவேல் மக்கள் தங்களைச் சுற்றிலும் இருந்த மக்களினங்களில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய வசனப் பகுதிகளையும் அவர்கள் சுட்டிக்காண்பித்து இருக்கலாம் (காண்க ஏசாயா 52:10, 11). மற்ற வசனப் பகுதிகள் அவர்களின் விரோதிகளுக்கு அவர்கள் உதவி செய்ய வேண்டும்' என்று அவர்களுக்குக் கூறின என்பது உண்மையே (எடுத்துக்காட்டாக, நீதிமொழிகள் 25:21, 22 (காண்க ரோமர் 12:20]). இருந்தபோதிலும் யூதர்கள், தங்கள் விரோதிகளை வெறுத்தல் என்பது தங்களின் உரிமையாக மற்றும் தங்களின் பொறுப்பாகக் கூட இருந்தது என்று முடிவு செய்தனர். ஒழுக்கக் கட்டுப்பாடு பற்றிய கும்ரான்' கையேடு பின்வரும் அறிவுரையைக் கொடுத்தது: “... தேவன் தேர்ந்து கொண்ட ஒவ்வொருவரையும் அன்புகூருதலும், அவர் புறக்கணித்த ஒவ்வொருவரையும் வெறுத்தலும் இருளின் பிள்ளைகள் யாவரையும் வெறுத்தலும் ...


              பாராட்டை நாடுதல் 


இயேசு கூறியது என்ன? (வசனம் 44)

தொடர்ந்து இயேசு, "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள்

சத்துருக்களைச் சிநேகியுங்கள்” என்று கூறினார் (வசனம் 44அ). இயேசுவின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் பலருக்கு இவ்வார்த்தைகள் எவ்வளவு திகைப்புக்கு உரியவையான, மனதைப் புண்படுத்துபவையாகக் கூட இருந்திருக்கும் என்பதை உணர்ந்து அறிதல் நமக்குக் கடினமானதாக உள்ளது. "சத்துரு” என்ற வார்த்தையை நாம் கேள்விப்படும்போது, நம்மை விரும்பாதவர்களைப் பற்றி, ஒருவேளை நம்மைப் பற்றிச் சிறுமையான வார்த்தைகளைக் கூறியவர்களைப் பற்றிக்கூட நாம் நினைக்கலாம். "சத்துரு" என்ற வார்த்தையை ஒரு யூதர் கேள்விப்பட்டபோது அவர், தமது மக்கள் விருத்தசேதனம் போன்ற பரிசுத்த சடங்குகளைக் கைவிட மறுத்த காரணத்தினால் அவர்களைச் சித்திரவதை செய்திருந்தவர்கள் உட்பட, தமது மக்களை அடக்கி வைத்திருந்தவர்களைப்பற்றி நினைவூட்டப்பட்டார். இயேசுவின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில், ரோமர்களின் இரத்தத்தைச் சிந்தி வெறுக்கத்தக்க ஆக்கிரமிப்புப் படையைப் பலஸ்தீன நாட்டில் இருந்து துரத்தக் கூடிய நாள் வரும் என்று சந்தேகம் இன்றி நம்பிக் காத்திருந்த மக்கள் இருந்தனர் அவர்களுக்கு, இயேசுவின் கட்டளையானது எவ்வளவு "கடினமான கூற்றாக இருந்திருக்க வேண்டும்! இயேசுவின் ஆணையானது இன்றைய நாட்களிலும் இன்னமும் சிலருக்கு "கடினமான கூற்றாகவே" உள்ளது. நம்மீது அன்புகூருபவர்களை நாம் அன்புகூருதல் என்பது கடினமாக இருப்பதில்லை ஆனால் நமது விரோதிகளை அன்புகூர வேண்டும் என்ற அறைகூவல், நமது ஆவிக்குரிய தன்மையின் ஆழத்திற்குச் சோதனை ஒன்றை அளிக்கிறது. யாரோ ஒருவர் இதை, "அன்பின் அமிலச் சோதனை” என்று அழைத்துள்ளார்.

இந்தக் கட்டளை, நமது விரோதிகளைப் பின்னால் சென்று தாக்குவதற்கான ஒரு தந்திரமான வழியாக இந்தக் கட்டளை இருக்க வேண்டும் என்று இயேசு நோக்கங் கொண்டிருக்கவில்லை என்பதை நான் தெளிவாக்க வேண்டி இருக்கலாம். ஆஸ்கர் வைல்ட் என்ற எழுத்தாளர், "உங்கள் விரோதிகள் மீது அன்புகூருங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்று அறிந்துணர அவர்கள் பைத்தியக்காரத்தனமாக முயற்சி செய்வார்கள்” என்று கூறினார். இயேசு, நமது விரோதிகள் “பைத்தியமாவதற்கு” நாம் காரணமாக இருக்க வேண்டும் என்று நோக்கங் கொண்டிருக்கவில்லை. நாம் அவர்களை நெருக்கமாகவும் கர்த்தருக்கு நெருக்கமாகவும் - தரவழைக்க வேண்டும் என்றே அவர் நோக்கங் கொண்டார். ஆல்ஃபிரட் பிளம்மர் அவர்கள், “நன்மைக்குத் தீமை செய்தல் பிசாசுக்கு அடுத்ததாக உள்ளது; நன்மைக்கு நன்மை செய்தல் என்பது மனிதத்துவமாக உள்ளது; தீமைக்கு நன்மை செய்தல் என்பது தெய்வீகத்துவமாக உள்ளது” என்று எழுதினார்

அது நம்மைப் பின்வரும் கேள்வியிடம் கொண்டு வருகிறது: “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” என்று கூறியபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? "அன்பு" என்பதற்குப் பல கிரேக்க வார்த்தைகள் உள்ளன. அவற்றில், இதமான பிரியமான - நெருக்கமான நண்பர்களிடத்தில் நாம் கொண்டுள்ள வகையிலான - அன்பைக் குறிப்பிடுகிற phileo என்ற வார்த்தையும் ஒன்றாக உள்ளது. அது நமது வேதபாட வசனப் பகுதியில் பயன்படுத்தப்படவில்லை. யாரோ ஒருவர், "நாம் நமது சத்துருக்களை விரும்ப வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை, ஆனால் அவர்கள் மீது அன்புகூர வேண்டும் என்றே கட்டளையிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். மத்தேயு 5:44ல் agapao என்பதே "அன்பு" என்பதற்கான வார்த்தையாக உள்ளது. Agapa) அன்பு மனவிருப்பத்தை உள்ளடக்குகிறது. இது உணர்வெழுச்சியைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை, ஆனால் இது உணர்வெழுச்சியைச் சார்ந்து இருப்பதும் இல்லை. ஜான் R. W. ஸ்டாட் அவர்கள், "உண்மையான அன்பு என்பது ஊழியம் செய்வதை விட அதிகமாக உணர்வுவயப்படுவதாக இருப்பதில்லை என்று கருத்துத் தெரிவித்தார்.” Agapao என்பது “அன்புகூரப்படும் ஒருவருக்கு மிகச்சிறந்தவற்றை நாடுதல்” என்று விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.

ரோமர் 12ல் பவுல், விரோதி ஒருவருக்கு “மிகச்சிறந்தவற்றை நாடுதல் என்பதில் உள்ளடங்கி இருப்பது என்ன என்பதைப் பற்றி உதாரணங்கள் கொடுத்தார்: "அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு" (வசனம் 20.அ (காண்க நீதிமொழிகள் 25:21). நமது விரோதியின் தேவைகளை நாம் தீர்மானிக்க முயற்சி செய்து பின்பு அந்தத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அன்பு கூறுகிறது. சமனான இடத்தில் செய்த பிரசங்கத்தில் இயேசு, "உங்கள் விரோதிகளை அன்புகூருங்கள்” என்று கூறியபோது தாம் அர்த்தப்படுத்தியது என்ன என்று விரித்துரைத்தார்

எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள்... ஓரக்கா 6:27, 28, 35அ),

நமது விரோதிகள் நமது உதவியை மறுத்தால் என்ன செய்வது அவர்களுக்காக ஜெபித்தல் என்பது அவர்கள் மறுக்க இயலாத வகையில் நாம் அவர்களுக்காகச் செய்யும் ஒரு விஷயமாக உள்ளது. இயேசு உங்கள் விரோதிகளை அன்புகூருங்கள்" என்று கூறியபின்பு, "உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்" என்று கூறினார் (மத்தேயு 5:44ஆ). சிலுவையில் இயேசு, தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார் (லூக்கா 23:34). கிறிஸ்தவத்திற்காகத் தமது உயிரை அர்ப்பணித்தவர்களில் முதல்வரான ஸ்தேவான் தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார்: “ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்” (நடபடிகள் 7:60). அன்பும் ஜெபமும் ஒன்றாகச் செல்கின்றன. நீங்கள் யாரேனும் ஒருவர்மீது அன்புகூர்ந்தால் அவருக்காக நீங்கள் ஜெபிப்பீர்கள். பின்பு அவருக்காக நீங்கள் ஜெபித்தால், அவர் மீதுள்ள உங்கள் அன்பு வளரும். ஒரு விரோதிக்காகச் செய்யப்படும் ஊக்கமான ஜெபம் உங்கள் இருதயத்தில் இருந்து வெறுப்புணர்வை நீக்கிப்போடும்

காரணங்கள் (5:45-47)

தேவனைப் போல் இருக்க (வசனம் 45)

நாம் ஏன் நமது விரோதிகள் மீது அன்புகூர வேண்டும் என்பதற்கு இயேசு இரண்டு காரணங்களைக் கொடுத்தார். முதலாவது, தேவனைப் போல் இருப்பதற்காக என்பதாகும்: “இப்படிச் செய்வதினால் நீங்கள்

பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்” (வசனம் 45.அ) உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்" என்ற சொற்றொடர், “உங்கள் பிதாவின் இயல்பில் பங்கேற்றல்” என்று அர்த்தப்படுகிறது. நாம் தேவனுக்கு விரோதிகளாக இருந்தபோதே, அவர் நம்மீது அன்புகூர்ந்து, நமக்காக மரிக்கும்படி தமது குமாரனை அனுப்பினார் (ரோமர் 5:8, 10), இப்போது நாம் தேவனைப் போல் இருக்கவும் நமது விரோதிகள் மீது அன்புகூரவும் அறைகூவல் விடப்பட்டுள்ளோம். சில வேளைகளில் மக்கள் ஒரு இளம் பையனைப் பார்த்து அவன் தனது தந்தையைப் போல் காணப்படுகிறான்” என்று கூறுகின்றனர் மக்கள் நம்மைப் பார்க்கும்போது, அவர்கள் நமது பரலோகபிதாவின் குடும்ப ஒற்றுமைப் பண்பைக் காணுகின்றனரா?

இயேசு, தேவனுடைய விரோதிகள் உட்பட, எல்லா மனிதர்கள் மீதுமான தேவனுடைய அன்பிற்கு இரண்டு உதாரணங்களைக் கொடுத்தார்: “அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்” (மத்தேயு 5:45ஆ). சூரிய வெளிச்சமும் மழையும் எளிய விஷயங்களாகவும், வாழ்விற்கு தேவையான அன்றாட அத்தியாவசிய விஷயங்களாகவும் உள்ளன. இவற்றை “தேவனுடைய காட்சி உதவிப்பொருட்கள்” என்று டேல் ஹார்ட்மேன் அவர்கள் அழைத்தார். அவர் காலையில் சூரியன் உதிக்கும்போது, 'எனது பிதா அதைச் செய்தார்!' என்று சொல்லுங்கள். அடுத்த முறை மழை பெய்யும்போது 'எனது பிதா அதைச் செய்தார்!' என்று சொல்லுங்கள்” என்று கூறினார்.

தேவன் இந்தக் கொடைகளை நல்லவர்களுக்கும் நீதிமான்களுக்கும் மாத்திரம் அருளுவதில்லை என்பது இயேசுவின் கருத்தாக இருந்தது. இவற்றை அவர் பொல்லாதவர்களுக்கும் அநீதிமான்களுக்கும் - வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அவரது விரோதிகளுக்கும் - கூட அருளுகிறார். அவர் மக்கள் பெறத் தகுதியாயிருப்பவற்றை அல்ல, ஆனால் அவர்களுக்குத் தேவையானவற்றைத் தருகிறார். ஹார்ட்மேன் அவர்கள், “நமது நற்றன்மையினால் அல்ல, ஆனால் தேவனுடைய நற்தன்மையினால் தான் சூரியன் இன்று உதித்தது” என்று குறிப்பிட்டார்.

அஞ்ஞானிகளைப் போலிராமல் இருத்தல் (வசனங்கள் 46, 47) நாம் தேவனைப் போல் இருக்க வேண்டும் என்பதே, நமது

விரோதிகள் மீது நாம் அன்புகூர வேண்டும் என்பதற்கு முதல் காரணமாக உள்ளது. நாம் அஞ்ஞானிகளைப் போல் இருக்கக் கூடாது என்பது இரண்டாவது காரணமாக உள்ளது. இயேசு, “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும்” அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா?" என்று கேட்டார் (வசனங்கள் 46, 47)

இயேசு, யூதர்களால் இழிவாகக் கருதப்பட்ட இரு குழவினரைக் குறிப்பிட்டார்: புறஜாதியார் (யூதர் அல்லாதவர்கள்) மற்றும் ஆயக்காரர்கள் என்பவர்கள் ரோம அரசுக்காக வரிவசூல் செய்த யூதர்களாக இருந்தனர் அவர்களின் சக யூதர்கள் அவர்களைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்று

கருதினர். சட்டப்படி, அடிமட்டத்தில் உள்ள தனிநபர்களே இந்த வேலையைச் செய்ய மனவிருப்பம் கொண்டிருந்தனர். அவர்களின் தொழிலில் நேர்மையற்ற தன்மை என்பது சாதாரணமானதாக இருந்தது (காண்க லூக்கா 3:12, 13; 19:2) மக்களின் மனங்களில், ஆயக்காரர்கள் மிகமோசமான - விபசாரிகள் மற்றும் அஞ்ஞானிகளின் மட்டத்தில் இருந்த மனிதர்களாகக் கருதப்பட்டனர் (காண்க மத்தேயு 9:11; 18:17; 21:31)

ஆயக்காரர்களையும் புறஜாதியார்களையும் இயேசு குறிப்பிட்டார் என்பது, அவர்களைப் பற்றிய அவரது தனிப்பட்ட மதிப்பீட்டைப் பிரதிபலிப்பதில்லை என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். இயேசு எல்லா மக்கள் மீதும் அன்புகூர்ந்தார்; அவர் இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே வந்தார் லூக்கா 19:10). அவர் ஆயக்காரர்களின் சிகோகிதர் என்று அறியப்பட்டார் (மத்தேயு 11:19). (மத்தேயு சுவிசேஷத்தை எழுதியவர் ஒரு முன்னாள் ஆயக்காரராக இருந்தார் (காண்க மத்தேயு 9:9-13).) இயேசுவின் அன்பு, புறஜாதியாரையும் கூட உள்ளடக்கிற்று (காண்க மத்தேயு 8:5-11; 28:18 லூக்கா 2:25, 32), பின்பு ஏன் அவர் தமது விவரிப்பில் ஆயக்காரர்களையும் புறஜாதியாரையும் பயன்படுத்தினார்? ஏனென்றால் அவரது உரையைக் கேட்டவர்களைப் பொறுத்த மட்டில், ஆயக்காரர்களும் புறஜாதியார்களும் மனிதத்துவத்தின் மிகத் தாழ்ந்த வடிவங்களாக இருந்தனர். மத்தேயு 5:20ல் இயேசு தமது சீஷர்களிடத்தில், அவர்களின் நீதியானது, சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்கள் என்று அவர்களால் கருதப்படுபவர்களின் நீதியைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறினார்: வேதபாரகர் மற்றும் பரிசேயர்கள் இப்போது அவர் செயல்விளைவில், “உங்கள் நீதியானது மிகத்தாழ்ந்த நிலையில் உள்ளனர் என்று உங்களால் கருதப்படுபவர்களின் - ஆயக்காரர்கள் மற்றும் புறஜாதியார் ஆகியோரின் - நீதியைக் காட்டிலும் அதிகமாக உள்ளதா?” என்ற கேட்டார்

ஆயக்காரர்களும்கூட தங்களை நேசிப்பவர்களை நேசிக்கின்றனர் என்று இயேசு சுட்டிக் காண்பித்தார். அவர்கள் நிச்சயமாகத் தங்கள் தாய்மார்களை நேசித்தனர், விலக்கி வைக்கப்பட்ட குழு என்ற வகையில் அவர்கள் தங்கள் சக ஆயக்காரர்களுடன் நெருங்கிய உறவை உணர்ந்தனர் (காண்க மத்தேயு 9:10; மாற்கு 2:15), மற்றும், புறஜாதியாரும்கூட தாங்கள் நெருங்கிய உறவு கொண்டிருந்தவர்களை வாழ்த்தினர். வாழ்த்துதல்கள் என்பவை இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. அது ஒரு “ஹலோ" அல்லது "நன்றாக இருக்கிறீர்களா?” என்பதாக இருக்கலாம், அது ஒரு கைகுலுக்குதலாக அல்லது ஒரு தழுவுதலாக இருக்கலாம். அது மரியாதை நிறைந்த வகையில் குனிந்து வணக்கம் செலுத்துவதாக அல்லது கன்னத்தில் கண்ணியமாக முத்தமிடுதலாக இருக்கலாம். எல்லா இடங்களும் தங்கள் சமூக வழக்கங்களை, தங்களுக்கே உரிய தனிப்பட்ட வகையிலான வணக்கம் செலுத்தும் முறைகளைக் கொண்டுள்ளன. நல்லெண்ணத்தின் இந்த வெளிப்பாடுகளை நாம் எல்லாருக்கும் விரிவாக்குகிறோமா அல்லது நமது நண்பர்களின் வட்டாரத்தில் உள்ளவர்களான நமது "சகோதரர்களுக்கு மாத்திரம் இவற்றைக் கூறுகிறோமா?

47 மற்றும் 48 ஆகிய வசனங்கள் என்னைப் பதட்டம் அடையச் செய்கின்றன எனது உறவுகளில் பல, இயல்பிலேயே திருப்பிச் செய்யக்கூடியவைகளாக உள்ளன என்பதை நான் ஒப்புக்கொண்டாக வேண்டும், யாரேனும் ஒருவர் என்னை விரும்புகிறார், நான் அவரை விரும்புகிறேன். யாரேனும் ஒருவர் எனக்கு “ஹலோ” சொல்லுகிறார், நான் பதிலுக்கு “ஹலோ" சொல்லுகிறேன். யாரேனும் ஒருவர் தமது இல்லத்திற்கு என்னை அழைக்கிறார், நான் எனது இல்லத்திற்கு அவரை அழைக்கிறேன். யாரேனும் ஒருவர் எனக்கு ஒரு பரிசு கொடுக்கிறார் பதிலுக்கு நான் அவருக்கு ஒரு பரிசு கொடுக்கிறேன். இயேசுவின் மறக்க இயலாத அச்சமூட்டும் வார்த்தைகளை நான் கேட்கிறேன்: “(அஞ்ஞானிகளும்] அப்படியே செய்கிறார்கள் அல்லவா மற்றவர்களை விட ... அதிகமாக" என்பது, எனக்கு - மற்றும் உங்களுக்கு இயேசுவின் அறைகூவலாக உள்ளது. இந்த "அதிகம்” என்பது நம்மைக் கிறிஸ்தவர் அல்லாதவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. நம்மீது அன்புகூருபவர்களை நாம் நேசிக்கிறோம் என்பதல்ல, ஆனால் நம்மீது அன்புகூராதவர்களையும் நாம் நேசிக்கிறோம் என்பதே நம்மைப் பிரித்து காட்டுகிறது. நாம் இவ்வாறு செய்யும் போது, நாம் அஞ்ஞானிகளைப் போல் இருப்பது குறைந்து நமது பரலோக பிதாவைப் போல் இருப்பது அதிகரிக்கிறது

விளைவு (5:48)

அது நம்மை 48ம் வசனத்தின் திகைக்க வைக்கும் வார்த்தைகளிடம் கொண்டு வருகிறது. இவ்வசனத்தை இந்த மாபெரும் பிரசங்கத்தின் திறவுகோல் வசனப்பகுதியாகப் பல எழுத்தாளர்கள் கருதுகின்றனர்: "ஆகையால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” முதல் வாசிப்பில் இயேசுவின் அறைகூவல் சாத்தியம் இல்லாததாகக் காணப்படுகிறது. தேவன் பூரணசற்குணராயிருப்பது போன்று நாம் எவ்வாறு சாத்தியமான வகையில் பூரணசற்குணராக இருக்க முடியும்? இவ்வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?

இது எதை அர்த்தப்படுத்துவது இல்லை இயேசுவின் கூற்று, இந்த வாழ்வில் பாவமற்ற பூரணத்துவமான நிலையை அடைதல் சாத்தியம் என்று கருத்துத் தெரிவிக்கிறதா? ஆம் என்று சிலர் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக பாவமே செய்யவில்லை என்று வலியுறுத்திய மனிதர் ஒருவரை நான் ஒருமுறை சந்தித்தேன் மத்தேயு 5:48ன் இந்தக் கண்ணோக்கு வேறொரு இடத்தில் உள்ள வேதாகமத்தின் தெளிவான போதனைக்கு நேர்மாறாக உள்ளது. 1 யோவான் நிருபத்தில் அப்போஸ்தலர், “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1:8); நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரை (தேவனைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது என்று எழுதினார் (1:10). பாவமற்ற பூரணத்துவமான இந்த நிலையை நீங்கள் அடைந்து விட்டதாக நினைத்தால், நீங்கள் அதை அடையவில்லை என்பதற்கு அதுவே நிச்சயமான நிரூபணமாக உள்ளது பாவமற்ற நிலையை உரிமை கோரும் ஒருவர், பாவத்திற்கு மறுவிளக்கம் தரும்படியும், "பாவம் என்பது அதன் உண்மை நிலையைக் காட்டிலும் குறைவான தீவிரம் உள்ளதாக இருக்கிறது என்று மறுவகைப்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்.

இது எதை அர்த்தப்படுத்துகிறது

48ம் வசனம், பாவமற்ற பூரணத்துவமான நிலையை அடைதல் சாத்தியமானது என்று அர்த்தப்படுத்துவதில்லை என்றால், இது எதை அர்த்தப்படுத்துகிறது இவ்வசனத்தில், “பூரணசற்குணர்” (teleios) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுதல் இதற்கு ஒரு திறவுகோலாக உள்ளது. இவ்வார்த்தை, "பூரணத்துவமான, நிறைவான ... ஒரு முடிவை அல்லது நோக்கத்தை அடைதல்” என்று அர்த்தப்படுகிறது. 24 சந்தர்ப்பப் பொருளில், தேவனுடைய அன்பு ஒவ்வொருவர் மீதும் காண்பிக்கப்படுவதால், அது "பூரணமானதாக” அல்லது "நிறைவானதாக” உள்ளது: "தீயோர் மற்றும் நல்லோர்” “நீதியுள்ளவர்கள்” மற்றும் "அநீதியுள்ளவர்கள்” எல்லார் மேலும் நீங்களும் நானும் கூட, நமது அன்பு எல்லார் மீதும் விரிவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் “பூரணராக” இருக்கும்படி அறைகூவல் விடப்படுகிறோம். “நாம், நமது நண்பர் அல்லது விரோதி யாராக இருந்தாலும்" யாவருக்கும் “நன்மை செய்யக்கடவோம்” (கலாத்தியர் 6:10).

இது மத்தேயு 5:48ன் முதன்மை வலியுறுத்தமாக உள்ளது, ஆனால் இவ்வசனத்தின் அறைகூவலை இத்துடன் சுருக்கிவிட முடியாது.” பழைய 25 மற்றும் புதிய ஏற்பாடு இரண்டிலுமே, தேவனுடைய மக்கள் தங்கள் பிதாவைப் போல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், ... உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக, நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக" (லேவியராகமம் 11:44, 45)



Umn ministry 





Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*